12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set C
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set C

Published on: 28/08/2020
12 ஆம் வகுப்பு வரலாறு முக்கிய 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard History Important 2 Mark Book Back Questions (New Syllabus) 2020
12ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
அட்லாண்ட்டிக் பட்டயத்தின் சிறப்புக் கூறுளைப் பட்டியலிடுக.
2.
எதனால் 1848 ஆம் ஆண்டின் ஜூன் 24 முதல் 26 வரையான காலம் 'இரத்த ஜூன் தினங்கள் ' எனக் கொள்ளப்படுகின்றன?
3.
பண்டைய ஆட்சி முறையின் மூன்று எஸ்டேட்டுகளை விவாதிக்கவும்.
4.
பனிப்போர் காலகட்டத்தைச் சேர்ந்த ‘மறை முக’ போர்களுக்கு எடுத்துக்காட்டுகள் தருக.
5.
பிரிட்டனுக்கும் பிரான்சுக்குமிடையே 1904 இல் கையெழுத்திட்ட நாடுகளுக்கிடையே நட்புறவின் (entente-cordiale) முக்கியத்துவம் யாது?
6.
டிரென்ட் சபையின் பணி என்ன என்று எடுத்துரைக்கவும்.
7.
1493ஆம் ஆண்டின் போப்பின் ஆணை பற்றி நீவிர் அறிந்ததென்ன?
8.
சமதர்ம சமூக அமைப்பு என்பதைப் பற்றி நீர் அறிந்ததென்ன?
9.
ஹைதராபாத் சமஸ்தானத்தை இந்திய யூனியனுடன் சேர்க்க எடுக்கப்பட்ட காவல் துறை நடவடிக்கையினை எது நியாயப்படுத்தியது?
10.
சிம்லா மாநாட்டின் பேச்சுவார்த்தைகள் ஏன் முறிந்தன?
11.
பி.ஆர். அம்பேத்கரால் வழிநடத்தப்பட்ட மஹத் சத்தியாகிரகம் பற்றி அறிவது என்ன?
12.
ஆகாகான் தலைமையிலான முஸ்லிம் லீக் முன்வைத்த கோரிக்கைகள் என்ன?
13.
அன்னிபெசண்ட் அம்மையாரால் வெளியிடப்பட்ட புத்தகம் மற்றும் வாராந்திரப் பத்திரிகையின் பெயர்களைக் கூறுக?
14.
இரண்டாவது லாகூர் சதி என்றறியப்படும் நிகழ்வு யாது?
15.
பிரிட்டிஷ் இந்தியாவில் தீவிர தேசியவாதிகளின் மையமாக விளங்கிய தலைவர்களைக் கண்டறிக.
16.
இல்பர்ட் மசோதாவின் முக்கியத்துவத்தை விவாதி.
1.
1.மக்களின் ஒப்புதல் இல்லாமல் பிரதேச சீரமைப்புகள் ஏற்படுத்தலாகாது.
2.அரசைத் தேர்ந்தெடுக்க முழுஉரிமை கொண்டவர்கள் குடிமக்களே.
3.அனைத்து நாடுகளுக்கும் வணிகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும்,உலகின் பிற பகுதிகளில் கிடைக்கும் மூலப்பொருட்களைப் பெறுவதிலும் சமத்துவத்தை ஏற்படுத்துதல்.
4.தடையில்லாமல் கடல் கடந்து செல்வதற்கான சுதந்திரத்தை உறுதிப்படுத்துதல்.
5.ஆக்கிரமிப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நாடுகளை ஆயுதக்குறைப்பிற்கு உட்படுத்துதல்.
2.
1. லூயி பிளாங்கின் முயற்சியால் உருவாக்கப்பட்ட பட்டறைகள் மூடப்பட்டதை எதிர்த்து தொழிலாளர்கள் போராடினர்.
2. ஜூன் 24 - 26ம் தேதிகளுக்கிடையே ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள்.
3. பதினோராயிரம் புரட்சியாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
4. இக்காலம் இரத்தம் தோய்ந்த ஜூன் தினங்கள் என்று அழைக்கப்பட்டன.
3.
1.பிரெஞ்சு சமூகம் மூன்று முக்கியப் பிரிவுகளைக் கொண்டிருந்தது.
2.இவை எஸ்டேட்டுகள் என அழைக்கப்பட்டது.
3.மதகுருமார்கள்,நிலப்பிரபுக்கள்,உரிமைகளற்ற சாதாரண மக்கள் ஆகியனவாகும்.
4.
1.அமெரிக்கா,ரஷ்யாவிற்குமிடையே மறைமுகப் போர்கள் நடந்தன.
2.1950-1953ல் ஏற்பட்ட கொரியப்போரும்,1955-1975 ல் ஏற்பட்ட வியட்நாம் போரும் மறைமுகப் போர்களாகும்.
3.வடகொரியா,வட வியட்நாமிற்கு ரஷ்யாவும் தென்கொரியா தென் வியட்நாமிற்கு அமெரிக்காவும் துணையாக நின்றது.
5.
1.ஆங்கிலோ-ஜப்பானியக் கூட்டால் பிரான்ஸ் பிரிட்டனிடம் நட்பைக் கோரியது.
2.இது 1904ல் நாடுகளுக்குள் ஒத்துப் போகிற நட்புறவை விளைவித்தது.
3.மொராக்கோவில் பிரான்சை தன்னிச்சையாக செயல்பட பிரிட்டன் ஒத்துக் கொண்டது.
4.எகிப்தில் பிரிட்டனின் ஆக்கிரமிப்பை பிரான்ஸ் அங்கீகரித்தது.
6.
1.தேவாலய போதனைகள் மற்றும் இரட்சிப்பை அடைவதற்கான ஏழு திரு அருட்சாதனங்களை பின்பற்றுவது குறித்தும் நம்பிக்கை வெளியிட்டது.
2.போப்பாண்டவர்களின் வானளாவிய அதிகாரத்தை உறுதி செய்தது.
3.பாதிரிமாரிகளின் பிரம்மச்சர்யம் நிலை நிறுத்தப்பட்டது.
4.தேவாலயத்தில் நடந்த ஊழல்களை களைந்தது.
7.
1.1493 ஆம் ஆண்டு போப் ஆணை வெளியிட்டார்.
2.வெர்முடினை தீர்வுகளுக்கு மேற்கே 320 மைல்கள் தொலைவில் வடக்கு தெற்காக ஒரு கோட்டினை வரைய இவ்வாணைவழி வகை செய்தது.
3.கோட்டிற்கு மேற்கே ஸ்பெயினும் கிழக்கே போர்ச்சுகலும் கண்டுபிடிக்கும் நாடுகளுக்கு சொந்தம் கொண்டாட அனுமதி அளித்தது.
8.
1.ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பது.
2.சுரண்டலை ஒழிப்பது.
3.செல்வம் ஓரிடத்தில் குவிக்கப்படுவதை தடுப்பது ஆகியன சமதர்ம சமூக அமைப்பு ஆகும்.
9.
(i) ஹைதராபாத் நிஜாம் விடுதலைப் பிரகடனம் செய்த 48 மணிநேரத்திற்குள் இந்தியா அங்கு காவல்துறை நடவடிக்கைகளைத் தொடர்ந்தது.
(ii) ஹைதராபாத் நிஜாம் மற்றும் அவரது இராணுவமான இரசாக்கர்கள் மீது தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி தெலுங்கானா மக்கள் இயக்கத்தை கம்யூனிஸ்டுகள் வழிநடத்தினர்.
(iii) இதன் காரணமாக ஹைதராபாத் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பதற்குச் சட்டபூர்வமான காரணம் வாய்த்தது எனலாம்.
10.
(i) வேவல் பிரபு ஜூன் 1945 இல் பேச்சுவார்த்தை நடத்த சிம்லா மாநாட்டைக் கூட்டினார்.
(ii) அரசப் பிரதிநிதியின் குழுவிற்கு முஸ்லீம் லீக் தனக்கு மட்டுமே இஸ்லாமியப் பிரதிநிதிகளை நியமிக்க உரிமை உள்ளது என்றது.
(iii) காங்கிரஸ், ஜாதி இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும் என்று வலியுறுத்தியது. இது மேலும் மக்களை இனவாரியாகப் பிரிக்கும் முயற்சி என்று வேவல் பிரபு கருதி சிம்லா பேச்சுவார்த்தையைக் கைவிட்டார்.
11.
1. ஊருணிகள் மற்றும் கிணறுகளில் தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்கு தரவேண்டிய அடிப்படை உரிமைகளை மீட்டுத்தர மஹத் சத்தியாகிரகம் என்ற அமைப்புத் தொடங்கினார்.
2. ஒடுக்கப்பட்டவர்களின் எதிர்காலம் குறித்து அம்பேத்கர் பெரிதும் கவலை அடைந்தார்.
3. அம்பேத்கரின் அறிவாற்றல் மற்றும் பொது நடவடிக்கைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.
12.
(i) ஆகாகான் தலைமையின் கீழ் சிம்லாவில் ஒன்று திரண்டு அப்போதைய அரசப் பிரதிநிதியான மிண்டோ பிரபுவிடம் முஸ்லிம் லீக் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.
(ii) அரசுப் பணிகளில் முஸ்லிம்களின் சதவீதத்தை உயர்த்துதல், உயர் நீதிமன்றங்களில் முஸ்லிம் நீதிபதிகளின் நியமனம் மற்றும் அரசுப் பிரதிநிதியின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
13.
1. 1914-இல் தி.காமன்வெல்த் என்ற வாரப்பத்திரிகையை வெளியிட்டார்.
2. 1915 ஜூலை 14-இல் நியூ இந்தியா என்ற தினசரியை அன்னி பெசண்ட் அம்மையார் தொடங்கினார்.
3. 1916 இல் தன்னாட்சி இயக்கங்கள் அன்னி பெசண்ட் அம்மையார் தொடங்கினார்.
14.
(i) ராஜகுரு, சுகதேவ் ஜதீந்திரநாத் தாஸ் ஆகியோருடன் பகத்சிங்கும் மேலும் 21 பேரும் கைது செய்யப்பட்டனர்.
(ii) சாண்டர்ஸ் கொலை தொடர்பான விசாரணைக்கு அவர்கள் ஆளாக்கப்பட்டனர். இந்த வழக்கு இரண்டாவது லாகூர் சதி வழக்கு என்று அறியப்படுகிறது.
15.
1. பாலகங்காதர திலகர், பிபின்சந்திரபால், லாலா லஜபதிராய் (Lal-Bal-Pal), அரவிந்த் கோஷ் போன்ற தலைவர்கள் பிரிட்டிஷ் இந்தியாவில் தீவிர தேசியவாதிகளின் தலைவர்களாக விளங்கினர்.
2. மகாராஷ்டிரம், வங்காளம், பஞ்சாப் ஆகிய மூன்று மாகாணங்களில் சுதேசி இயக்கக் காலப்பகுதியில் தீவிர தேசியவாதத்தின் மையப்புள்ளிகளாகத் திகழ்ந்தன.
16.
1. ரிப்பன் வைஸ்ராயாக இருந்தபோது இல்பர்ட் மசோதா கொண்டுவரப்பட்டது.
2. இந்திய நீதிபதிகள் ஐரோப்பியர்களை விசாரிக்க அதிகாரம் பெற்றனர்.
3. இதை ஐரோப்பியர்கள் கடுமையாக எதிர்த்தார்கள்.
4. பின்னர் இது திருத்தம் செய்யப்பட்டது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set C
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards