12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 09/03/2020
12ஆம் வகுப்பு வணிகக் கணிதம் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 12th Standard Business Mathematics All Chapter Three Marks Important Questions 2020 )
12ஆம் வகுப்பு Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Business Maths and Statistics Test

1.
ஒரு குறிப்பிட்ட பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை என்பது மாநில அளவிலான தேர்வின் மூலமாக தீர்மானிக்கப்படுகிறது. தேர்வின் மதிப்பெண்கள் இயல்நிலைப் பரவலை பின்பற்றி சராசரி 500 மற்றும் மாறுபாடு 100 பெற்றுள்ளது. ராகுல் என்ற மாணவர் இப்பல்கலைக்கழகத்தில் சேர விரும்புகிறார். மேலும் மொத்த தேர்வு எழுதுபவர்களில் குறைந்தபட்சம் 70 சதவீத மாணவர்களின் மதிப்பெண்களுக்கு மேலாக அவர் பெற்றாக வேண்டும் என்பதை அறிகிறார். ராகுல் தேர்வு எழுதி அதில் 585 மதிப்பெண்களைப் பெறுகிறார் எனில், அவர் பல்கலைக்கழகத்தால் தேர்ந்தெடுக்கப்படுவாரா?
2.
பின்வரும் விவரங்களுக்கு, 2010 அடிப்படை ஆண்டை பொறுத்து 2015 ஆம் ஆண்டிற்கான வாழ்க்கைக் குறியீட்டு எண்ணை கணக்கிடுக.
| பொருள்கள் | அலகுகள் எண்ணிக்கை (2010) |
விலை (2010) |
விலை (2015) |
| அரிசி | 5 | 1500 | 1750 |
| சர்க்கரை | 3.5 | 1100 | 1200 |
| பருப்பு | 3 | 800 | 950 |
| துணி | 2 | 1200 | 1550 |
| நெய் | 0.75 | 550 | 700 |
| வாடகை | 12 | 2500 | 3000 |
| எரிபொருள் | 8 | 750 | 600 |
| இதரசெலவுகள் | 10 | 3200 | 3500 |
3.
எட்டு ஆண்டுகளுக்கான வர்த்தக சம்பந்தமான இலாபங்களுடன் தொடர்புடைய புள்ளிவிவரங்கள் கீழ்க்கண்ட அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
| ஆண்டுகள் | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 |
| இலாபம் (ரூ) | 15,420 | 15,470 | 15,520 | 21,020 | 26,500 | 31,950 | 35,600 | 34,900 |
மூன்று ஆண்டு காலத்தைக் கொண்ட நகரும் சராசரி முறையைப் பயன்படுத்தி போக்கு மதிப்புகளைக் கணக்கிடுக
4.
ஒரு மோட்டார் வண்டிச்சக்கர டயரின் (Motor cycle tyre) இறுதி அடிப்பகுதி தேய்மானத்தை எதிர்த்து தாங்கும் திறனானது ஒரு நெருக்கடியான தருவாயை அடையும் வரை கடந்த மைல்களின் எண்ணிக்கை ஒரு நிகழ்தகவு அடர்த்தி சார்பின் மூலம் குறிக்கப்படுகிறது.

எனில், வண்டிச்சக்கர டயரின் இறுதி அடிப்பகுதி தேய்மானத்தை எதிர்த்து தாங்குத் திறனானது ஒரு நெருக்கடியான தருவாயை அடையும் வரைக்கான எதிர்பார்க்கத்தக்க மைல்கள் (ஆயிரத்தில்) எண்ணிக்கையைக் கண்டுபிடிக்கவும்.
5.
வடமேற்கு மூலை முறையை பயன்படுத்தி பின்வரும் போக்குவரத்து கணக்கின் ஆரம்ப அடிப்படை சாத்தியமானத் தீர்வை காண்க.
6.
அட்டவணைப்படி பேருந்து சேவை இயக்கத்திற்கு உண்டான நிகழ்தகவு 0.8 ஆகும். அட்டவணைப்படி பத்து பேருந்து இயக்கப்படுமாயின் அதில் (அ) சரியாக ஒரு பேருந்து தாமதமாக (ஆ) குறைந்தபட்சம் ஒரு பேருந்து தாமதமாக இயக்கப்படுவதற்கான நிகழ்தகவினைக் காண்க.
7.
கீழே கொடுக்கப்பட்டுள்ள போக்குவரத்து கணக்கின் ஆரம்பத் தீர்வைக் காண்க.
8.
கீழே கொடுக்கப்பட்டுள்ள, ஒத்த பண்பற்ற 500 அளவு கொண்ட முழுமைத் தொகுதியிலிருந்து 68 கூறு அளவு கொண்ட சமவாய்ப்பு மாதிரியை தெரிவு செய்யவும் படுகைகள் கீழ்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது.
சமவாய்ப்பு மாதிரியை தேர்ந்தெடுக்கவும்
வகை (1) குறைந்த வருமான வகுப்பினர் 39%
வகை (2) நடுத்தர வருமான வகுப்பினர் 38%
வகை (3) உயர் வருமான வகுப்பினர் 23%
9.
கீழ்க்கண்ட சமவாய்ப்பு எண் அட்டவணையைப் பயன்படுத்தி,
| டிப்பெட்டின் சமவாய்ப்பு எண் அட்டவணை | |||||||
| 2952 | 6641 | 3992 | 9792 | 7969 | 5911 | 3170 | 5624 |
| 4167 | 9524 | 1545 | 1396 | 7203 | 5356 | 1300 | 2693 |
| 2670 | 7483 | 3408 | 2762 | 3563 | 1089 | 6913 | 7991 |
| 0560 | 5246 | 1112 | 6107 | 6008 | 8125 | 4233 | 8776 |
| 2754 | 9143 | 1405 | 9025 | 7002 | 6111 | 8816 | 6446 |
கீழ்க்கண்ட அட்டவணையில் வகைப்படுத்தப்பட்டுள்ள, ஒரு முழுமைத் தொகுதியில் உள்ள 8585 குழந்தைகளிலிருந்து 10 குழந்தைகளைக் கொண்ட மாதிரியை உருவாக்குக.
| உயரம் (செ.மீ) | 105 | 107 | 109 | 111 | 113 | 115 | 117 | 119 | 121 | 123 | 125 |
| குழந்தைகளின் எண்ணிக்கை | 2 | 4 | 14 | 41 | 83 | 169 | 394 | 669 | 990 | 1223 | 1329 |
| உயரம் (செ.மீ) | 127 | 129 | 131 | 133 | 135 | 137 | 139 | 141 | 143 | 145 | |
| குழந்தைகளின் எண்ணிக்கை | 1230 | 1063 | 646 | 392 | 202 | 79 | 32 | 16 | 5 | 2 |
10.
நீங்கள் ஒரு பிழையற்ற நாணயத்தை மூன்று முறை சுண்டுவதாகக் கருதுவோம். இந்த சோதனையின் வெளிப்பாடு சமவாய்ப்பு மாறியாக கருதப்பட்டு, மேலே திருப்பப்பட்ட முகங்களில் உள்ள தலைகளின் எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது. இதன் நிகழ்தகவு நிறைச் சார்பை கண்டுபிடிக்கவும். மேலும் நிகழ்தகவு நிறைச் சார்பின் பண்புகளையும் சரிபார்.
11.
பின்வரும் அணிகளின் தரம் காண்க.
\(\left( \begin{matrix} -1 & 2 & -2 \\ 4 & -3 & 4 \\ -2 & 4 & -4 \end{matrix} \right) \)
12.
E∇=Δ=∇E என நிறுவுக.
13.
U0=1,U1=11, U2=21, U3=28 மற்றும் U4=29 எனில் Δ4U0 காண்க.
14.
தீர்க்க: cosx(1+cosy)dx-siny(1+sinx)dy=0
15.
ஆதியை குவியமாகவும், x அச்சினை அச்சாகவும் கொண்ட பரவளையத் தொகுப்பின் வகைக்கெழுச் சமன்பாட்டைக் காண்க.
16.
உற்பத்தியாளரின் இறுதிநிலை வருவாய் சார்பு MR=275-x-0.3x2 எனில், உற்பத்தியின் மொத்த வருவாயை அதன் உற்பத்தி 10 அலகுகளிலிருந்து 20 அலகுகளாக அதிகரிக்கும் பொழுது காண்க.
17.
இறுதி நிலை செலவுச் சார்பு MC=2+5ex எனில்,
(i) C (0)=100 எனும் போது C யைக் காண்க.
(ii) சராசரிச் செலவு AC -ஐக் காண்க
18.
பின்வருவனவற்றை மதிப்பிடுக:
\(\int _{ 0 }^{ 1 }{ \sqrt { x(x-1) } dx } \)
19.
பின்வருவனவற்றை இரண்டாம் அடிப்படைத் தேற்றத்தை பயன்படுத்தி மதிப்பிடுக.
\(\int _{ -1 }^{ 1 }{ \frac { 2x+3 }{ { x }^{ 2 }+3x+7 } } dx\)
20.
பரிதி என்பவர் ஒவ்வொரு நாளும் சோகமாகவோ (S) அல்லது மகிழ்ச்சியாகவோ (H) உள்ளார். ஒரு நாள் மகிழ்ச்சியாக இருந்தால், அடுத்த நாள் 5-ல் 4-பங்கு சோகமாக இருப்பார். ஒரு நாள் சோகமாக இருந்தால், அடுத்த நாள் 3-ல் 2 பங்கு மகிழ்ச்சியாக இருப்பார் எனில், நீண்டகால அடிப்படையில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட நாளில் மகிழ்ச்சியாக இருப்பதற்கான நிகழ்தகவு காண்க
1.
பெறும் மதிப்பெண்களை சமவாய்ப்பு மாறி X என்க.
\(\mu=500, \sigma=100\)
\(Z=\frac{X-\mu}{\sigma}=\frac{585-500}{100}=0.85\)
\(\mathrm{P}(\mathrm{X}<585) =\mathrm{P}(\mathrm{Z}<0.85)\)
=0.5+0.3023 =0.8023>0.70
அவர் பல்கலைக்கழகத்தால் தேர்ந்தெடுக்கப்படுவார்.
2.
இங்கே, அடிப்படை ஆண்டு அளவு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே மொத்த செலவு முறையைப் பயன்படுத்தலாம்.
| பொருள்கள் | அலகுகள் எண்ணிக்கை q0 (2010) |
விலை (2010) p0 |
விலை (2015) p1 |
p0q0 | p1q0 |
| அரிசி | 5 | 1500 | 1750 | 7500 | 8750 |
| சர்க்கரை | 3.5 | 1100 | 1200 | 2850 | 4200 |
| பருப்பு | 3 | 800 | 950 | 2400 | 2850 |
| துணி | 2 | 1200 | 1500 | 2400 | 3100 |
| நெய் | 0.75 | 550 | 700 | 412.5 | 525 |
| வாடகை | 12 | 2500 | 300 | 30000 | 36000 |
| எரிபொருள் | 8 | 750 | 600 | 6000 | 4800 |
| இதர செலவுகள் | 10 | 3200 | 3500 | 32000 | 35000 |
| மொத்தம் | 84562.5 | 95225 | |||
வாழ்க்கை குறியீட்டு எண் \(=\frac { \sum { { p }_{ 1 }{ q }_{ 0 } } }{ \sum { { p }_{ 0 }{ q }_{ 0 } } } \times 100=\frac { 95225 }{ 84562.5 } \times 100=112.609\)
எனவே, 2015 ஆம் ஆண்டை, 2010 ஆண்டு உடன் ஒப்பிடுகையில், வாழ்க்கை குறியீட்டு எண் 12.609% அதிகரித்துள்ளது.
3.
மூன்று ஆண்டு காலத்தைக் கொண்ட நகரும் சராசரி
| ஆண்டு | இலாபம் | மூன்று ஆண்டு நகரும் கூடுதல் |
மூன்று ஆண்டு நகரும் சராசரி |
| 1986 | 15420 | - | - |
| 1987 | 15470 | 46410 | 15470 |
| 1988 | 15520 | 52010 | 17336.666 |
| 1989 | 21020 | 63040 | 21013.333 |
| 1990 | 26500 | 79470 | 26490 |
| 1991 | 31950 | 94050 | 31350 |
| 1992 | 35600 | 102450 | 34150 |
| 1993 | 34900 | - | - |
4.
X என்பது டயரின் இறுதி தேய்மான நிலையை அடைய கடந்த மைல்களின் எண்ணிக்கை என்க.(ஆயிரத்தில்)
\(\mathrm{E}(\mathrm{X})=\int_{-\infty}^{\infty} x f(x) d x=\frac{1}{30} \int_0^{\infty} x e^{-\frac{x}{30}} d x\)
\(\mathrm{u} =x \quad \int d v=\int e^{-\frac{x}{30}} d x \)
\(\mathrm{du} =\mathrm{d} x \quad \mathrm{v}=\frac{e^{-\frac{x}{30}}}{-\frac{1}{30}} \)
\(\int u d v =u v-\int v d u \)
\(\mathrm{E}(\mathrm{X}) =\frac{1}{30}\left[\left(\frac{x e^{-\frac{x}{30}}}{-\frac{1}{30}}\right)_0^{\infty}-\int_0^{\infty} \frac{e^{-\frac{x}{30}}}{\frac{1}{30}} d x\right] \)
\( =-\left[x e^{-\frac{x}{30}}-\frac{e^{-\frac{x}{30}}}{-\frac{1}{30}}\right]_0^x \) =-[0+30(0-1)]
= 30 (அல்லது 30,000 மைல்கள்)
5.
கொடுக்கப்பட்ட போக்குவரத்து அட்டவணை
மொத்த தேவைகள் = மொத்த இருப்புகள் = 950
எனவே கொடுக்கப்பட்ட கணக்கானது சமநிலை போக்குவரத்து கணக்காகும்.
போக்குவரத்து விவரம்
A → D,A → E, B → E, B → F,C → F, C → G
மொத்த போக்குவரத்து செலவு
=(200×11)+(50×13)+(175×18)+(125×14)+(150×13)+(250×10)
= 2200 + 650 + 3150 + 1750 + 1950 + 2500
= 12200
6.
பேருந்து தாமதமாக வருவதற்கான நிகழ்தகவு p எனக்குறிக்கப்படுகின்றது,
அதன் மதிப்பு p = 1-0.8 = 0.2
பேருந்து சரியாக இயக்கப்படுவதற்கான நிகழ்தகவு q = 0.8
n = 10
ஈருறுப்பு பரவல் p(x)=10Cx(0.2)x(0.8)10-x
(i) சரியாக ஒரு பேருந்து தாமதமாக இயக்கப்படுவதற்கான நிகழ்தகவு
P(x=1) = 10C1 pq9
= 10C1(0.2)(0.8)9
(ii) குறைந்தபட்சம் ஒரு பேருந்து தாமதமாக இயக்கப்படுவதற்கான நிகழ்தகவு
= 1 - தாமதமாக எந்த ஒரு பேருந்தும் இயக்கப்படவில்லை
= 1 - p(x=0)
= 1- (0.8)10
7.
இங்கு, மொத்த அளிப்புகள் = 5+8+7+14=34, மொத்த தேவைகள் = 7+9+18=34
அதாவது, மொத்த அளிப்புகள் = மொத்த தேவைகள் கொடுக்கப்பட்ட கணக்கானது சமநிலை போக்குவரத்து கணக்காகும்.
∴ எனவே , ஆரம்ப அடிப்படை ஏற்புடையத் தீர்வு உள்ளது.
மேலே கூறப்பட்ட அட்டவணையில் வடமேற்கு மூலையில் உள்ள சிற்றறை (1, A) யைத் தேர்ந்தெடுத்து அதிகபட்ச சாத்தியமான ஒதுக்கீடுகளைச் செய்யவும்.
அதாவது (5,7) இன் சிறும மதிப்பு 5
குறைக்கப்பட்ட போக்குவரத்து அட்டவணை,
தற்போது (2, A) என்ற சிற்றறை வடமேற்கு மூலையில் உள்ளது.
அங்கு (8,2) இன் சிறும மதிப்பான 2 அலகுகளை ஒதுக்கீடு செய்யவும்.
x12 = சிறும (2,8) = 2
குறைக்கப்பட்ட போக்குவரத்து அட்டவணை,
தற்போது (2, B) என்ற சிற்றறை வடமேற்கு மூலையில் உள்ளது.
அங்கு (6,9)ன் சிறும மதிப்பான 6 அலகுகளை ஒதுக்கீடு செய்யவும்.
x22 = சிறும (6,9) = 6
குறைக்கப்பட்ட போக்குவரத்து அட்டவணை ,
தற்போது (3,B) என்ற சிற்றறை வடமேற்கு மூலையில் உள்ளது.
அங்கு (7,3)ன் சிறும மதிப்பான 3 அலகுகளை ஒதுக்கீடு செய்யவும்.
x32 = சிறும (7,3) = 3
குறைக்கப்பட்ட போக்குவரத்து அட்டவணை ,
தற்போது (3,C) என்ற சிற்றறை வடமேற்கு மூலையில் உள்ளது.
அங்கு (4,18) -ன் சிறும மதிப்பான 4 அலகுகளை ஒதுக்கீடு செய்யவும்.
x33 = சிறும (4,18) = 4
குறைக்கப்பட்ட போக்குவரத்து அட்டவணை மற்றும் இறுதி ஒதுக்கீடு, x44 = 14
அனைத்து ஒதுக்கீடுகளைக் கொண்ட அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து விவரம் 1⟶ A, 2 ⟶ A, 2 ⟶ B, 3 ⟶ B, 3 ⟶ C, 4 ⟶ C
மொத்த போக்குவரத்து செலவு = (5×2) + (2×3) +(6×3)+(3×4)+(4×7) + (14×2) = ரூ. 102
8.
| படுகைகள் | ஒத்த தொகுதிகள் | முழுமைத் தொகுதியில் சதவிகிதம் |
ஒவ்வொரு படுகையில் உள்ள மக்கள் எண்ணிக்கை |
சமவாய்ப்பு மாதிரிகள் |
| வகை 1 | குறைந்த வருமான வகுப்பினர் | 39 | \(\frac{39}{100}\)x500=195 | 195x\(\frac{68}{500}\)=26.5~26 |
| வகை 2 | நடுத்தர வருமான வகுப்பினர் | 38 | \(\frac{38}{100}\)x500=190 | 190x\(\frac{68}{500}=26.5\)~26 190x\(\frac{68}{500}\)=26.5~26 |
| வகை 3 | உயர் வருமான வகுப்பினர் | 23 | \(\frac{23}{100}\)x500=115 | 115x\(\frac{68}{500}\)=15.6~16 |
| மொத்தம் | 100 | 500 | 68 |
9.
முதலாவதாக முழுமை தொகுதிலுள்ள 8585 குழந்தைகளுக்கும் கொடுக்கப்பட்ட அலைவெண் அட்டவணையைப் பயன்படுத்தி வரிசை எண் குறிப்பிட வேண்டும். உயரம் 105 செ.மீ இல் 2 குழந்தைகள் உள்ளதால், இவ்விரு குழந்தைகளுக்கு 1, 2 என எண்கள் குறிப்பிடவேண்டும். 107 செ.மீ. உயரமுள்ள அடுத்த நான்கு குழந்தைகளுக்கு 3, 4, 5 மற்றும் 6 ஆகிய வரிசை எண்களை குறிக்க வேண்டும். இதேபோல் மற்ற உயரங்கள் கொண்ட குழந்தைகளுக்கும் தொடர் வரிசை எண்களைக் கொண்டு குறியிட வேண்டும். கடைசியாக 145 செ .மீ.உயரமுள்ள குழுவில் இரண்டு குழந்தைகளுக்கு 8584 மற்றும் 8585 ஆகிய எண்களை குறியீடாக வழங்கலாம்.
| உயரம் (செ.மீ.) | குழந்தைகளின் எண்ணிக்கை | குவிவு நிகழ்வெண்(f) |
| 105 | 2 | 2 |
| 107 | 4 | 6 |
| 109 | 14 | 20 |
| 111 | 41 | 61 |
| 113 | 83 | 144 |
| 115 | 169 | 313 |
| 117 | 394 | 707 |
| 119 | 669 | 1376 |
| 121 | 990 | 2366 |
| 123 | 1223 | 3589 |
| 125 | 1329 | 4918 |
| 127 | 1230 | 6148 |
| 129 | 1063 | 7211 |
| 131 | 646 | 7857 |
| 133 | 392 | 8249 |
| 135 | 202 | 8451 |
| 137 | 79 | 8530 |
| 139 | 32 | 8562 |
| 141 | 16 | 8578 |
| 143 | 5 | 8583 |
| 145 | 2 | 8585 |
| Total | 8585 |
முழுமைத் தொகுதியின் அளவு நான்கிலக்க எண் ஆதலால் நமக்கு தேவையான 10மாதிரிகளை அட்டவணையிலிருந்து பெறலாம். அட்டவணையின் முதல் நிரலிருந்து தொடங்கி முழுமை தொகுதியின் அளவான 8585-க்கு மிகாமல் எண்களை தேர்வு செய்து கீழ்கண்டவாறு நிழலிடப்படுகிறது.
| டிப்பெட்டின் சமவாய்ப்பு எண் அட்டவணை | |||||||
| 2952 | 6641 | 3992 | 9792 | 7969 | 5911 | 3170 | 5624 |
| 4167 | 9524 | 1545 | 1396 | 7203 | 5356 | 1300 | 2693 |
| 2670 | 7483 | 3408 | 2762 | 3563 | 1089 | 6913 | 7991 |
| 0560 | 5246 | 1112 | 6107 | 6008 | 8125 | 4233 | 8776 |
| 2754 | 9143 | 1405 | 9025 | 7002 | 6111 | 8816 | 6446 |
2952 என்ற எண் குறியிட்டுள்ள குழந்தையின் உயரத்தை காண வேண்டுமாயின் குவிவு நிகழ்வெண் நிரலில் 2952- க்கு அடுத்த அதிககுவிவு நிகழ்வெண் 3589-க்கு உரிய உயரமான 123 செ.மீட்டரை தேர்வு செய்யவும். இதேபோல் மற்ற எண்களுக்கு உரிய குழந்தையின் உயரத்தை கண்டு தேவையான 10 குழந்தைகள் மற்றும் அவர்களின் உயரங்கள் மாதிரியை கீழ்கண்ட அட்டவணையை உள்ளவாறு காணலாம்.
| குழந்தைகளின் குறியீட்டு எண் | 2952 | 4167 | 2670 | 0560 | 2754 |
| குழந்தைகள் உயரம் (செ.மீ) | 123 | 125 | 123 | 117 | 123 |
| குழந்தைகளின் குறியீட்டு எண் | 6641 | 7483 | 5246 | 3996 | 1545 |
| குழந்தைகள் உயரம் (செ.மீ) | 129 | 131 | 127 | 125 | 121 |
10.
மேலே திருப்பப்பட்ட முகங்களில் உள்ள தலைகளின் எண்ணிக்கையைக் கணக்கிடும் சமவாய்ப்பு மாறியை X என்க. இதன் வெளிப்பாடுகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
| வெளிப்பாடுகள் | (HHH) | (HHT) | (HTH) | (THH) | (THT) | (TTH) | (HTT) | (TTT) |
|---|---|---|---|---|---|---|---|---|
| X இன் மதிப்புகள் | 3 | 2 | 2 | 2 | 1 | 1 | 1 | 0 |
இதன் மதிப்பீடுகள் பின்வரும் நிகழ்தகவு அட்டவணை -இல் தரப்பட்டுள்ளன.
| X ன் மதிப்புகள் | 0 | 1 | 2 | 3 | மொத்தம் |
|---|---|---|---|---|---|
| p(xi) | \(\cfrac { 1 }{ 8 } \) | \(\cfrac { 3 }{ 8 } \) | \(\cfrac { 3 }{ 8 } \) | \(\cfrac { 1 }{ 8 } \) | \(\sum _{ i=0 }^{ 3 }{ p\left( { x }_{ i } \right) =1 } \) |
(i) \(p\left( { x }_{ i } \right) \ge \forall i\) மற்றும் (ii) \(\sum _{ i=0 }^{ 3 }{ p\left( { x }_{ i } \right) =1 } \)
எனவே , p(xi) ஒரு நிகழ்தகவு நிறை சார்பாகும்.
11.
A =\(\left( \begin{matrix} -1 & 2 & -2 \\ 4 & -3 & 4 \\ -2 & 4 & -4 \end{matrix} \right) \)என்க
A -ன் வரிசை 3 x 3, எனவே ρ(A) ≤ 3
∼\(\left( \begin{matrix} -1 & 2 & -2 \\ 0 & 5 & -4 \\ 0 & 0 & 0 \end{matrix} \right) \)R2 ⟶ R2 + 4R1
R3 ⟶ R3 - 2R1
ஏறுபடிவ அணியில் உள்ள பூச்சியமற்ற நிரைகளின் எண்ணிக்கை 2 ஆகும். ∴ ρ(A)= 2.
12.
\( \nabla f(x)= \mathrm{f}(x)-\mathrm{f}(x-\mathrm{h}) \)
\(E^{\prime}(\nabla f(x))=\mathrm{E}[\mathrm{f}(x)-\mathrm{f}(x-\mathrm{h})] \)
\(=\mathrm{E}[\mathrm{f}(x)]-\mathrm{E}[\mathrm{f}(x-\mathrm{h})] \)
\(=\mathrm{f}(x+\mathrm{h})-\mathrm{f}(x) \)
\(=\nabla f(x+h)=\nabla E f(x) \)
\( \therefore E \nabla=\nabla E \)
\( \nabla=\frac{E-1}{E} \)
\( E \nabla=\mathrm{E}-1 \)
\(E \nabla=\Delta \)
சமன்பாடு (1) மற்றும் (2) லிருந்து,
\(E \nabla=\Delta=\nabla E\) எனவே நிறுவப்பட்டது
13.
Δ4U0=(E-1)4U0
=(E4-4E3+6E2-4E+1)U0
=E4U0-4E3U0+6E2U0-4EU0+U0
=U4-4U3+6U2-4U1+U0
=29-4(28)+6(21)-4(11)+1
=156-156=0

14.
\(\cos x(1+\cos y) d x-\sin y(1+\sin x) d y=0 \)
\(\cos x(1+\cos y) d x=\sin y(1+\sin x) d y \)
\(\int \frac{\cos x}{1+\sin x} d x=\int \frac{\sin y}{1+\cos y} d y \)
\(\log (1+\sin x)=-\log (1+\cos y)+\log c \)
\(\log (1+\sin x)+\log (1+\cos y)=\log c \)
\(\log (1+\sin x)(1+\cos y)=\log c \)
\((1+\sin x)(1+\cos y)=c
\)
15.
ஆதியைக் குவியமாகக் கொண்ட பரவளையத் தொகுப்பின் சமன்பாடு
\((y-0)^2 =-4 a(x-a) \)
\(2 y y^{\prime} =-4 a \)
\(y y^{\prime} =-2 a\)
(1) லிருந்து
\(y^2=-4 a x+4 a^2\)
(2) ஐ (3) ல் பிரதியிட
\( \mathrm{y}^2=2 x y y^{\prime}+y^2 y^{\prime 2} \)
\( \mathrm{y}=2 x y^{\prime}+y y^{\prime 2}\)
\(\mathrm{y}=2 x \frac{d y}{d x}+y\left(\frac{d y}{d x}\right)^2\)
16.
\(\mathrm{MR} =275-x-0.3 x^2
\)
\(\mathrm{R} =\int_{10}^{20}\left(275-x-0.3 x^2\right) d x \)
\(\mathrm{R} =\left[275 x-\frac{x^2}{2}-\frac{0.3 x^3}{3}\right]_{10}^{20}\)
மொத்த வருவாய்
R =5500-200-800-(2750-50-100)
=4500-2600=₹ 1900
= ரூ.1,900
17.
(i) கொடுக்கப்பட்ட MC=2+5ex
C=\(\int { MC } dx+k\)
=\(\int { (2+5{ e }^{ x }) } dx+k\)
=2x+5ex+k
x=0, C=100 ⇒100=2(0)+5(e0)+k
k=95
∴ C=2x+5ex+95
(ii) சராசரி விலை =\(\frac { C }{ x } =\frac { 2x+{ 5e }^{ x }+95 }{ x } \)
AC=\(2+\frac { 4e^{ x } }{ x } +\frac { 95 }{ x } \).
18.
\(I=\int _{ 0 }^{ 1 }{ \sqrt { x(x-1) } dx } \)
= \(\int _{ 0 }^{ 1 }{ \sqrt { { x }^{ 2 }-xdx } } \)
= \(\int _{ 0 }^{ 1 }{ \sqrt { { x }^{ 2 }-x+\cfrac { 1 }{ 4 } -\cfrac { 1 }{ 4 } dx } } \)
= \(\int _{ 0 }^{ 1 }{ \sqrt { \left( x-\cfrac { 1 }{ 2 } \right) ^{ 2 }-\left( \cfrac { 1 }{ 2 } \right) ^{ 2 }dx } } \)
\(\left[ \because \int { \sqrt { { x }^{ 2 }-{ a }^{ 2 } } dx } =\cfrac { x }{ 2 } \sqrt { { x }^{ 2 } } -\cfrac { { a }^{ 2 } }{ 2 } \log\left| x+\sqrt { { x }^{ 2 }-{ a }^{ 2 } } \right| \right] \)
= \(\left[ \cfrac { x-\frac { 1 }{ 2 } }{ 2 } \sqrt { { x }^{ 2 }-x } -\cfrac { 1 }{ 8 } \log|x-\cfrac { 1 }{ 2 } +\sqrt { { x }^{ 2 }-x } \right] _{ 0 }^{ 1 }\)
= \(\left[ \cfrac { 1-\frac { 1 }{ 2 } }{ 2 } \sqrt { 0 } -\cfrac { 1 }{ 8 } \log|1-\cfrac { 1 }{ 2 } +0| \right] -\left[ 0-\cfrac { 1 }{ 8 } \log|-\cfrac { 1 }{ 2 } | \right] \)
= \(0-\cfrac { 1 }{ 8 } \log\left| \cfrac { 1 }{ 2 } \right| +\cfrac { 1 }{ 8 } \log\left| \cfrac { 1 }{ 2 } \right| \)
= 0
19.
t = x2 + 3x + 7
⇒ dt = (2x + 3)
இங்கு x = -1, t = (-1)2 +3(-1)+7 = 1-3 + 7= 5
x = 1, t = 12 +3(1)+7 = 11
\(\int _{ -1 }^{ 1 }{ \frac { 2x+3 }{ { x }^{ 2 }+3x+7 } } dx=\int _{ 5 }^{ 11 }{ \frac { dt }{ t } } ={ \left( \log { t } \right) }_{ 5 }^{ 11 }\)
\(=\log { 11 } -\log { 5 } \)
\(=\log { \left( \frac { 11 }{ 5 } \right) } \)
20.
மாறுதல் நிகழ்தகவு அணி T =\(\left( \begin{matrix} \frac { 1 }{ 3 } & \frac { 2 }{ 3 } \\ \frac { 4 }{ 5 } & \frac { 1 }{ 5 } \end{matrix} \right) \)
சமநிலையில், (S H)\(\left( \begin{matrix} \frac { 1 }{ 3 } & \frac { 2 }{ 3 } \\ \frac { 4 }{ 5 } & \frac { 1 }{ 5 } \end{matrix} \right) \) (S H)
இங்கு S + H = 1
\(\frac { 1 }{ 3 } S+\frac { 4 }{ 5 } H\)=S
\(\frac { 1 }{ 3 } (1-H)+\frac { 4 }{ 5 } H\)=1-H
இதைத் தீர்க்க, நாம் பெறுவது S =\(\frac { 6 }{ 11 } \) மற்றும் H =\(\frac { 5 }{ 11 } \)
நீண்ட கால அடிப்படையில், தேர்ந்தெடுக்கப்பட்ட நாளில் மகிழ்ச்சியாக இருப்பதற்கான நிகழ்தகவு \(\frac { 5 }{ 11 } \) ஆகும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards