12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/03/2021
12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil Medium Accountancy Reduced Syllabus Annual Exam Model Question Paper with Answer key - 2021
12ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
குப்தா நிறுமத்தின் பின்வரும் இருப்புநிலைகுறிப்பிலிருந்து 2016 மார்ச் 31 மற்றும் 2017 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய ஒப்பீட்டு இருப்புநிலைக் குறிப்பினை தயார் செய்யவும்.
| விவரம் | 2016, மார்ச் 31 | 2017, மார்ச் 31 | |
|---|---|---|---|
| ரூ. | ரூ. | ||
| I | பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் | ||
| பங்குதாரர் நிதி | 2,00,000 | 5,20,000 | |
| நீண்டகாலப் பொறுப்புகள் | 1,00,000 | 1,20,000 | |
| நடப்புப் பொறுப்புகள் | 50,000 | 60,000 | |
| மொத்தம் | 3,50,000 | 7,00,000 | |
| II | சொத்துகள் | ||
| நிலைச் சொத்துகள் | 2,00,000 | 4,00,000 | |
| நடப்புச் சொத்துகள் | 1,50,000 | 3,00,000 | |
| மொத்தம் | 3,50,000 | 7,00,000 |
2.
ராகுல், ரவி மற்றும் ரோஹித் எனும் கூட்டாளிகள் முறையே 5 : 3 : 2 என்ற விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். அவர்களில் ரோஹித் விலகினார். அவருடைய பங்கு ராகுல் மற்றும் ரவி ஆகியோரால் 3 : 2 எனும் விகிதத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. புதிய இலாப விகிதம் மற்றும் ஆதாய விகிதம் கணக்கிடவும்
3.
திருச்சி இலக்கிய மன்றத்தின் 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்கான பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு பின்வருமாறு:
| பெறுதல்கள் | ரூ. | ரூ. | செலுத்தல்கள் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | மைதான பராமரிப்பு | 33,000 | |||
| ரொக்கம் | 1,000 | விளையாட்டுப் போட்டிச் செலவுகள் | 38,000 | ||
| வங்கி | 14,000 | பல்வகைச் செலவுகள் | 22,000 | ||
| சந்தா (2016-17ஆம் ஆண்டிற்கான ரூ.4,000 உட்பட) | 60,000 | அறைகலன் | 40,000 | ||
| உயில்கொடை | 18,000 | இருப்பு கீ/இ | |||
| விளையாட்டுப் போட்டி நிதி | 20,000 | கையிரொக்கம் | 3,000 | ||
| வரவுகள் | 45,000 | வங்கி ரொக்கம் | 22,000 | 25,000 | |
| 1,58,000 | 1,58,000 |
கூடுதல் தகவல்கள்:
2017, ஏப்ரல் 1 அன்று மன்றத்தின் முதலீடு ரூ.80,000 ஆக இருந்தது. மன்றத்தின் விளையாட்டுப் போட்டி நிதிக் கணக்கின் வரவு இருப்பில் ரூ.60,000 இருந்தது. 2018, மார்ச் 31-ல் பெறவேண்டிய சந்தா ரூ.8,000 மற்றும் 2018, மார்ச் 31 அன்று பெறவேண்டிய சந்தா ரூ.9,000 இறுதிக் கணக்குகளைத் தயார் செய்யவும்.
4.
அருண் நிறுமத்தின் 31.03.2019 ஆம் நாளைய பின்வரும் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து
(i) புற அக பொறுப்புகள் விகிதம்
(ii) உரிமையாளர் விகிதம் மற்றும்
(iii) முதல் உந்துதிறன் விகிதம் கணக்கிடவும்.
| விவரம் | ரூ | |
| I | பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் | |
| 1. | பங்குதாரர் நிதி | |
| (அ) பங்குமுதல் | ||
| நேர்மைப் பங்குமுதல் | 1,50,000 | |
| 8% முன்னுரிமைப் பங்குமுதல் | 2,00,000 | |
| (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி | 1,50,000 | |
| 2. | நீண்டகாலப் பொறுப்புகள் | |
| நீண்டகால கடன்கள் (9% கடனீட்டுப் பாத்திரங்கள்) | 4,00,000 | |
| 3. | நடப்பு பொறுப்புகள் | |
| (அ) வங்கியிலிருந்து பெற்ற குறுகிய காலக் கடன்கள் | 25,000 | |
| (ஆ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் | 75,000 | |
| மொத்தம் | 10,00,000 | |
| II | சொத்துகள் | |
| 1. | நீண்ட காலச் சொத்துகள் | |
| நிலைச் சொத்துகள் | 7,50,000 | |
| 2. | நடப்புச் சொத்துகள் | 1,20,000 |
| (அ) சரக்கிருப்பு | 1,20,000 | |
| (ஆ) கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள் | 1,000,000 | |
| (இ) ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்கு சமமானவர்கள் | 27,500 | |
| (ஈ) இதர நடப்புச் சொத்துகள் | ||
| செலவுகள் முன்கூட்டிச் செலுத்தியது | 2,500 | |
| மொத்தம் | 10,00,000 | |
5.
அன்பு என்பவர் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளி, கூட்டாண்மை ஒப்பாவணத்தின்படி எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 12% கணக்கிடப்படுகிறது. 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டில் அவருடைய எடுப்புகள் பின்வருமாறு:
| நாள் | ரூ. |
|---|---|
| மார்ச் 1 | 8,000 |
| ஜூன் 1 | 6,000 |
| செப்டம்பர் 1 | 4,000 |
| டிசம்பர் 1 | 3,000 |
பெருக்குத் தொகை முறையைப் பயன்படுத்தி எடுப்புகள் மீது வட்டி கணக்கிடவும்
6.
ஒரு கூட்டடாண்மை நிறுவனத்தில் சரண், அருண் மற்றும் கரண் என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 4:3:3 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2016, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:
| பொறுப்புகள் | ரூ | ரூ | சொத்துகள் | ரூ | ரூ |
|---|---|---|---|---|---|
| முதல் கணக்குகள் | கட்டடம் | 60,000 | |||
| சரண் | 60,000 | இயந்திரம் | 40,000 | ||
| அருண் | 50,000 | முதலீடுகள் | 20,000 | ||
| கரண் | 40,000 | 1,50,000 | சரக்கிருப்பு | 12,000 | |
| பொதுக்காப்பு | 15,000 | கடனாளிகள் | 25,000 | ||
| கடனீந்தோர் | 35,000 | கழிக்க: வாராக்கடன் ஒதுக்கு | 1000 | 24,000 | |
| வங்கி ரொக்கம் | 44,000 | ||||
| 2,00,000 | 2,00,000 |
1.1.2017 அன்று கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு கரண் விலகினார்.
(i) நிறுவனத்தின் நற்பெயர் ரூ.21,000 என மதிப்பிடப்பட்டது.
(ii) இயந்திரம் மீது 10% மதிப்பேற்றம் செய்ய வேண்டும்.
(iii) கட்டடம் ரூ.80,000 ஆக மதிப்பிட வேண்டும்.
(iv) வாராக்கடன் ஒதுக்கு ரூ.2,000 ஆக அதிகரிக்க வேண்டும்.
(v) சரக்கிருப்பு மதிப்பில் ரூ.2,000 குறைக்க வேண்டும்.
(vi) கரணுக்கு செலுத்த வேண்டிய தொகை உடனடியாகச் செலுத்தப்படவில்லை.
தேவையான பேரேட்டுக் கணக்குகளை தயார் செய்யவும் மற்றும் விலகலுக்குப் பின் உள்ள கூட்டாண்மை நிறுவனத்தின் இருப்புநிலைக் குறிப்பையும் தயார் செய்யவும்
7.
அமல் மற்றும் விமல் இருவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். அவர்கள் 7:5 என்ற விகிதத்தில் இலாபங்கள் மற்றும் நட்டங்களை பகிர்ந்து வந்தனர். 2019, மார்ச் 31 அன்றைய அவர்களின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | கட்டடம் | 80,000 | ||
| அமல் | 70,000 | அறைகலன் | 20,000 | |
| விமல் | 50,000 | 1,20,000 | சரக்கிருப்பு | 25,000 |
| பற்பல கடனீந்தோர் | 30,000 | கடனாளிகள் | 30,000 | |
| இலாப நட்ட க/கு | 24,000 | வங்கி | 19,000 | |
| 1,74,000 | 1,74,000 |
1.4.2019 இல் நிர்மல் புதிய கூட்டாளியாக சேருகிறார். அவர் ரூ.30,000 முதலுடன் எதிர்கால இலாபப்பங்கில் 1/3 விகிதத்தில், பின்வரும் சரிக்கட்டலுடன் கூட்டாளியாகிறார்.
அ) சரக்கிருப்பின் மதிப்பு ரூ.5,000 குறைக்கப்பட வேண்டும்.
(ஆ) வாரா ஐயக்கடன் ஒதுக்கு ரூ.3,000 உருவாக்கப்பட வேண்டும்.
(இ) கட்டடம் ரூ.20,000 மதிப்பேற்றம் செய்யப்பட வேண்டும்.
மறுமதிப்பீட்டுக் கணக்கு மற்றும் கூட்டாளி சேர்க்கைக்கு பின்பான கூட்டாளி முதல் கணக்கு தயார் செய்யவும்.
8.
அப்துல் நிறுமத்தின் 2019 மார்ச் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு (வருவிய) பின்வருமாறு
| விவரம் | ரூ. |
|---|---|
| I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் | |
| 1. பங்குதாரர் நிதி | |
| (அ) பங்குமுதல் | 2,00,000 |
| (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி | 50,000 |
| 2. நீண்டகால பொறுப்புகள் | |
| நீண்டகால கடன்கள் | 1,50,000 |
| 3. நடப்புப் பொறுப்புகள் | |
| (அ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் | 1,30,000 |
| (ஆ) இதர நடப்புப் பொறுப்புகள் | 5,000 |
| (இ) குறுகிய கால ஒதுக்குகள் | 20,000 |
| மொத்தம் | 5,55,000 |
அவ்வாண்டில் வட்டி மற்றும் வரிக்கு முன்னர் உள்ள நிகர இலாபம் ரூ.60,000.
அவ்வாண்டில் பயன்படுத்திய முதலிலிருந்து பெற்ற வருவாய் விகிதம் கணக்கிடவும்.
9.
பின்வரும் நடவடிக்கைகளை Tally-ல் பதிவு செய்யவும்.
(1) ரூ. 4,00,000 முதலுடன் தேவி தொழில் தொடங்கினர்.
(2) இந்தியன் வங்கியில் கணக்கு துவங்கப்பட்டு ரூ. 60,000 செலுத்தியது.
(3) ரொக்கத்திற்கு அறைகலன் வாங்கியது ரூ. 15,000
(4) சுமதியிடம் இருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது ரூ. 50,000
(5) ரொக்க விற்பனை மேற்கொண்டது ரூ. 10,000
(6) இராஜாவிடம் சரக்கு கொள்முதல் செய்து காசோலை மூலம் செலுத்தியது ரூ. 5000.
(7) அருணுக்கு கடனாக விற்ற சரக்கு ரூ. 70,000.
(8) அலுவலக செலவிற்காக வங்கியிலிருந்து பணம் எடுத்தது ரூ. 25,000
(9) சுமதிக்கு காசோலை மூலம் பகுதி தொகை செலுத்தியது ரூ. 30,000
(10) அருண் பகுதி தொகையாக செலுத்திய ரொக்கம் ரூ. 10,000
(11) பணியாளர்களுக்கு மின்னணு பரிமாற்றம் மூலம் வழங்கப்பட்ட சம்பளம் ரூ. 36,000
(12) கொள்முதல் மீதான தூக்குக் கூலி ரொக்கமாக செலுத்தியது ரூ. 6,000
(13) முத்து நிறுவனத்திடமிருந்து கடனுக்கு கணினி வாங்கியது ரூ. 44,000
10.
கணினிமயக் கணக்கியல் முறையின் பயன்பாடுகளில் ஏதேனும் ஐந்தினை விளக்கவும்.
11.
பின்வரும் விவரங்களிலிருந்து, உயர் இலாபத்தில் 2 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.
(அ) நிறுவனத்தின் மொத்த சொத்துகள் ரூ.5,00,000
(ஆ) நிறுவனத்தின் பொறுப்புகள் ரூ.2,00,000
(இ) இவ்வகைத் தொழில்களின் சாதாரண இலாப விகிதம் 12.5%
(ஈ) நிறுவனத்தின் சராசரி இலாபம் ரூ.60,000
12.
13.
அருளப்பன் மற்றும் நல்லசாமி இருவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். அவர்கள் தங்கள் இலாப நட்டங்களை 4:1 என்ற விகிதத்தில் பகிர்ந்து வருகின்றனர். 2018, ஜனவரி 1அன்று அவர்களுடைய முதல் முறையே ரூ.20,000 மற்றும் ரூ.10,000. கூட்டாண்மை ஒப்பாவணம் பின்வருவனவற்றைக் குறிப்பிடுகிறது:
(அ) முதல் மீது வட்டி ஆண்டுக்கு 5 % அனுமதிக்க வேண்டும்.
(ஆ) அருளப்பன் மற்றும் நல்லசாமி இருவருக்கும் விதித்த எடுப்புகள் மீதான வட்டி முறையே ரூ.200 மற்றும் ரூ.300 ஆகும்.
(இ) முதல் மீது வட்டி மற்றும் எடுப்புகள் மீதான வட்டி கழிப்பதற்கு முன் உள்ள நிறுவனத்தின் நிகர இலாபம் ரூ.18,000.
கூட்டாளிகளுடைய முதல் மாறுபடும் முதல் எனக் கொண்டு தேவையான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும் மற்றும் 2018, டிசம்பர் 31 ஆம் நாளைய இலாபநட்டப் பகிர்வு கணக்கையும் தயார் செய்யவும்.
14.
நண்பர்கள் கால்பந்து மன்றத்தின் 31.03.2017 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பின்வரும் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிலிருந்து, 31.03.2017 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.
ப நண்பர்கள் கால்பந்து மன்றத்தின் ஏடுகளில் 2017, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு வ
| பெறுதல்கள் | ரூ | ரூ | செலுத்தல்கள் | ரூ | ரூ |
|---|---|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | அறைகலன் | 7,000 | |||
| ரொக்கம் | 1,000 | விளையாட்டுப் பொருள்கள் வாங்கியது | 800 | ||
| வங்கி | 10,000 | 11,000 | சிறப்பு விருந்துக்கான செலவுகள் | 1,500 | |
| சந்தா | 5,000 | மின்கட்டணம் | 900 | ||
| உயில்கொடை | 6,000 | இருப்பு கீ/இ | |||
| சிறப்பு விருந்து | கைரொக்கம் | 1,800 | |||
| கட்டண வசூல் | 2,000 | வங்கி ரொக்கம் | 12,000 | 13,800 | |
| 24,000 | 24,000 |
கூடுதல் தகவல்கள்:
(i) 2016, ஏப்ரல் 1 அன்று மன்றத்தில் இருந்த அறைகலன் ரூ12,000. அறைகலன் மீதான தேய்மானம் கணக்கில் கொள்ள வேண்டியதில்லை.
(ii) 2016-2017-ல் பெற வேண்டிய சந்தா ரூ. 600.
(iii) 31.3.2017 அன்று விளையாட்டுப் பொருள்கள் இருப்பு ரூ.100
(iv) 2016, ஏப்ரல் 1 அன்றைய முதல் நிதி ரூ.23,000
15.
X நிறுமம் ரூ.10 மதிப்புள்ள 10,000 நேர்மைப் பங்குகளை வெளியீடு செய்தது. பங்குகள் மீதான பணம் செலுத்த வேண்டிய விவரங்கள் பின்வருமாறு:
விண்ணப்பத்தின் போது = ரூ.2
ஒதுக்கீட்டின் போது = ரூ.4
முதல் அழைப்பின் போது = ரூ.2
இறுதி அழைப்பின் போது = ரூ.2
30,000 பங்குகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 10,000 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. மீதமுள்ள விண்ணப்பங்கள் விகிதச்சார அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு, மிகுதியாகப் பெற்ற விண்ணப்பத் தொகையை ஒதுக்கீட்டிற்கு பயன்படுத்தி கொள்ளப்பட்டது. இயக்குனர்கள் இரண்டு அழைப்புகளையும் மேற்கொண்டனர். 600 பங்குகளின் இரண்டாம் அழைப்புத் தொகையை தவிர அனைத்து தொகைகளும் பெறப்பட்டன. பின்னர் அப்பங்குகள் ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன. அவற்றில், 400 பங்குகள் ஒரு பங்கிற்கு ரூ.7 பெற்றுக் கொண்டு, முழுமையாக செலுத்திய பங்காக மறுவெளியீடு செய்யப்பட்டன குறிப்பேட்டுப் பதிவுகள் தரவும்.
16.
அகமது முறையான கணக்கேடுகளைப் பராமரிப்பதில்லை. 2018 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இலாபம் அல்லது நட்டம் கண்டறியவும்.
| விவரம் | 1.4.2017 | 31.3.2018 |
|---|---|---|
| ரூ. | ரூ. | |
| வங்கி இருப்பு | 14,000 (வ) | 18,000 (ப) |
| கைரொக்கம் | 800 | 1,500 |
| சரக்கிருப்பு | 12,000 | 16,000 |
| கடனாளிகள் | 34,000 | 30,000 |
| பொறித்தொகுதி | 80,000 | 80,000 |
| அறைகலன் | 40,000 | 40,000 |
| கடனீந்தோர் | 60,000 | 72,000 |
அகமது தனது சொந்தப் பயனுக்காக ரூ. 40,000 எடுத்துக்கொண்டார். தன்னுடைய வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்காக அவர் ரூ. 16,000 கூடுதல் முதல் கொண்டு வந்தார். கடனாளிகள் மீது 5% ஒதுக்கு உருவாக்க வேண்டும். பொறித்தொகுதி மீது 10% தேய்மானம் நீக்கப்பட வேண்டும்.
17.
ரூ.100 வீதம் 50000 பங்குகள் பொது மக்களுக்கு வெளியீடு செய்யப்பட்டது. அவற்றில் 45,000 பங்குகள் பொதுமக்களால் ஒப்பப்பட்டது எனில் ஒப்பாத முதல் ரூ. ________ ஆகும்.
ரூ.4,50,000
ரூ.5,00,000
ரூ.50,000
ரூ.45,000
18.
______ வணிக நிறுவனத்தின் செயல்பாடுகளையும், நிதிநிலைகளையும் புரிந்து கொள்வதற்கு வழி செய்கிறது.
நிதிநிலை பகுப்பாய்வு
நிதிநிலை தொகுப்பாய்வு
இரண்டும்
இவற்றில் எதுவுமில்லை
19.
________ கணக்கு ஒரு தற்காலிக கணக்கு ஆகும்
இலாப நட்ட அனாமத்து
மறுமதிப்பீட்டு
நற்பெயர்
முதல்
20.
சாதாரண இலாபத்தை விட சராசரி இலாபம் மிகுதிக்கு ______ என்று பெயர்.
மொத்த இலாபம்
நிகர இலாபம்
உயர் இலாபம்
இவற்றில் எதுவுமில்லை
21.
இலாபநோக்கற்ற அமைப்புகள் செய்யும் முதலீடுகளிலிருந்து பெறப்படும் வட்டி ஒரு _______ ஆகும்.
செலவின வரவு
வருவாயின வரவு
வருவாயின செலுத்தல்கள்
முதலின வரவு
22.
நற்பெயர் என்பது பழைய கூட்டாளிகளின் ________ கால முயற்சிகளின் பலன் ஆகும்
கடந்த
நிகழ்
வருங்கால
இவற்றில் எதுவுமில்லை
23.
_______ என்பது கூட்டாளிகளின் முதல் மீது அனுமதிக்கப்படும் வட்டி ஆகும்.
எடுப்பு மீது வட்டி
முதல் மீது வட்டி
கடன் மீது வட்டி
இவற்றில் எதுவுமில்லை
24.
ஒற்றைப்பதிவு முறையில் கணக்கேடுகள் பராமரிப்பு என்று அழைக்கப்படுவது எது?
முழுமை பெறா பதிவேடுகள்
நிலையறிக்கை
இருப்புநிலைக் குறிப்பு
குறிப்பேடுகள்
25.
சரக்கிருப்பை விற்பனை செய்வதற்கு எடுத்துக்கொள்ளப்படும் எது?
சரக்கிருப்பு காலம்
சரக்கிருப்பு மாற்று காலம்
கடன் வசூலிப்புக் காலம்
இவற்றில் எதுவுமில்லை
26.
சரக்கிருப்பு, சரக்கிருப்பு அளவுகள் போன்றவற்றின் மேம்படுத்தப்பட்ட தகவல்களை உடனுக்குடன் எடுக்க உதவுவது எது?
கணினிமயக் கணக்கியல்
கணக்கோடுகள்
ஒற்றைப்பதிவு முறை
இவற்றில் எதுவுமில்லை
27.
நிதி என்னும் சொல் குறிப்பிடுவது_____.
நடப்புப் பொறுப்புகள்
நடைமுறை முதல்
நிலைச் சொத்துகள்
நீண்டகாலச் சொத்துகள்
28.
கூட்டாளி விலகலின் பொதுக்காப்பு மாற்றப்படுவது _____.
அனைத்து கூட்டாளிகளின் முதல் கணக்கிற்கு
மறுமதிப்பீட்டுக் கணக்கிற்கு
தொடரும் கூட்டாளிகளின் முதல் கணக்கிற்கு
நினைவுக் குறிப்பு மறுமதிப்பீட்டு கணக்கிற்கு
29.
பொறுப்புகளைக் காட்டிலும் மிகுதியாக உள்ள சொத்துகள் ______.
நட்டம்
ரொக்கம்
முதல்
இலாபம்
30.
மறுமதிப்பீட்டுக் கணக்கு ஒரு_____.
சொத்து க/கு
பெயரளவு க/கு
ஆள்சார் க/கு
ஆள்சாரா க/கு
31.
பின்வருவனவற்றில் சரியாகப் பொருந்தாதது எது?
நீர்மை விகிதம் – விகிதாச்சாரம்
மொத்த இலாப விகிதம் – சதவீதம்
நிலைச் சொத்துகள் சுழற்சி விகிதம் – சதவீதம்
புற அக பொறுப்புகள் விகிதம் – விகிதாச்சாரம்
32.
அலுவலகப் பயன்பாட்டிற்காக ரூ. 25,000 வங்கியில் இருந்து எடுக்கப்பட்டது. எந்த வகை சான்றாவணத்தில் இந்த நடவடிக்கை பதியப்படும்?
எதிர்பதிவு சான்றாவணம்
பெறுதல்கள் சான்றாவணம்
செலுத்தல்கள் சான்றாவணம்
விற்பனை சான்றாவணம்
33.
ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக பெற்ற நன்கொடை_____.
வருவாயின வரவு
முதலின வரவு
வருவாயினச் செலவு
முதலினச் செலவு
34.
2017- ல் கணக்கேட்டின்படி இலாபம் ரூ.35,000; இலாபத்தில் சேர்ந்துள்ள திரும்பத் திரும்ப நிகழா வருமானம் ரூ.1,000 மற்றும் 2017 ஆம் ஆண்டில் ஏற்பட்ட அசாதாரண நட்டம் ரூ.2,000 எனில், சரிக்கட்டப்பட்ட இலாபம்_____.
ரூ.36,000
ரூ.35,000
ரூ.38,000
ரூ.34,000
35.
எடுப்பு மீது வட்டி, முதல் மீது வட்டி மற்றும் ஊதியம் கழித்தபின் உள்ள இலாபம் ரூ.10,500. கீதா என்ற கூட்டாளி கழிவுக்குப்பின் உள்ள நிகர இலாபத்தில் 5% கழிவு பெற உரியவராயின் கழிவுத்தொகையை கண்டறியவும்.
ரூ.50
ரூ.150
ரூ.550
ரூ.500
36.
ஒறுப்பிழப்பு செய்யும்போது பங்கு முதல் கணக்கு எதில் பற்று வைக்கப்படுகிறது?
முகமதிப்பு
பெயரளவு மதிப்பு
செலுத்தப்பட்ட தொகை
அழைக்கப்பட்ட தொகை
37.
நிறுமம் வரைவிலக்கணம் தருக.
38.
அரசு மற்றும் இதர அமைப்புகளிடமிருந்து பெறப்படும் மானியம் பற்றி குறிப்பு வரைக.
39.
கணக்கியல் விகிதங்களின் வடிவங்களை எழுதுக.
40.
கூட்டாளி சேர்ப்பு என்றால் என்ன? அவர் என்ன காரணத்திற்காக சேர்க்கப்படுகிறார்?
41.
கூட்டாண்மை பொருள் தருக.
42.
ஆதாய விகிதம் கணக்கிடுவதன் நோக்கம் என்ன?
43.
பின்வரும் விவரங்களிலிருந்து பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு தயாரிக்கவும் மற்றும் கடனாளிகளிடமிருந்து பெற்ற மாற்றுச்சீட்டுத் தொகையினைக் கணக்கிடவும்.
| விவரம் | ரூ. |
|---|---|
| ஆண்டு தொடக்கத்தில் பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 1,40,000 |
| ஆண்டு முடிவில் பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 2,00,000 |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுக்காக ரொக்கம் பெற்றது | 3,90,000 |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது | 30,000 |
44.
பின்வரும் விவரங்களிலிருந்து தருண் & கோ நிறுமத்தின் ஒப்பீட்டு வருமான அறிக்கை தயார் செய்யவும்.
| விவரம் | 2016-17 | 2017-18 |
|---|---|---|
| ரூ. | ரூ. | |
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 2,00,000 | 2,50,000 |
| இதர வருமானங்கள் | 50,000 | 40,000 |
| செலவுகள் | 1,50,000 | 1,20,000 |
45.
தானியங்கும் கணக்கியல் முறை என்றால் என்ன?
46.
நற்பெயர் என்றால் என்ன?
47.
ஹரிணி நிறுமத்தின் கடன் விற்பனை மூலம் பெற்ற வருவாய் தொகை ரூ.9,60,000. அந்த கணக்காண்டின் இறுதியில் இதன் வியாபார கடனாளிகள் மற்றும் பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு தொகை முறையே ரூ.1,00,000 மற்றும் ரூ.60,000. கணக்குகள் மூலம் பெறவேண்டியவைகளின் சுழற்சி விகிதம் மற்றும் கடன் வசூலிப்புக் காலம் (மாதங்களில்) கணக்கிடவும்.
48.
நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வின் நோக்கங்களை எழுதுக.
49.
நற்பெயரை மதிப்பீடு செய்வதற்கான தேவைகள் யாவை?
50.
கூட்டாளியின் இறப்பின் போது செய்ய வேண்டிய சரிக்கட்டுதல்கள் யாவை?
51.
பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கை தயாரிப்பதற்கான படிநிலைகளை எழுதுக.
52.
53.
நற்பெயருக்கான கணக்கியல் செயல்முறை குறித்து சிறு குறிப்பு தரவும்.
54.
முழுமை பெறா பதிவேடுகளின் இயல்புகள் யாவை?
1.
| விவரம் | 2016-17 | 2017-18 | தொகையின் கூடுதல் (+) அல்லது குறைவு (-) | சதவீதத்தின் கூடுதல் (+) அல்லது குறைவு (-) | |
|---|---|---|---|---|---|
| ரூ. | ரூ. | ||||
| I | பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் | ||||
| பங்குதாரர் நிதி | 2,00,000 | 5,20,000 | +3,20,000 | +160 | |
| நீண்டகாலப் பொறுப்புகள் | 1,00,000 | 1,20,000 | +20,000 | +20 | |
| நடப்புப் பொறுப்புகள் | 50,000 | 60,000 | +10,000 | +20 | |
| மொத்தம் | 3,50,000 | 7,00,000 | 3,50,000 | +100 | |
| II | சொத்துகள் | ||||
| நிலைச் சொத்துகள் | 2,00,000 | 4,00,000 | +2,00,000 | +100 | |
| நடப்புச் சொத்துகள் | 1,50,000 | 3,00,000 | +1,50,000 | +100 | |
| மொத்தம் | 3,50,000 | 7,00,000 | 3,50,000 | +100 |
2.
ரோஹித் பங்கு = \(\frac { 2 }{ 10 } \)
ஆதாயப் பங்கு = விலகும் கூட்டாளியின் பங்கு x ஆதாயப்பங்கின் விகிதாச்சாரம்
ராகுல் = \(\frac { 2 }{ 10 } \times \frac { 3 }{ 5 } =\frac { 6 }{ 50 } \)
ரவி = \(\frac { 2 }{ 10 } \times \frac { 2 }{ 5 } =\frac { 4 }{ 50 } \)
ஆதாய விகிதம் = \(\frac { 4 }{ 50 } :\frac { 4 }{ 50 } \) அதாவது 3 : 2
தொடரும் கூட்டாளிகளின் புதிய பங்கு = பழைய பங்கு + ஆதாயப் பங்கு
ராகுல் = \(\frac { 5 }{ 10 } +\frac { 6 }{ 50 } =\frac { 25+6 }{ 50 } =\frac { 31 }{ 50 } \)
ரவி = \(\frac { 3 }{ 10 } +\frac { 4 }{ 50 } =\frac { 15+4 }{ 50 } =\frac { 19 }{ 50 } \)
ஆகையால், ராகுல் மற்றும் ரவி ஆகியோரின் புதிய விகிதம் = \(\frac { 31 }{ 50 } :\frac { 19 }{ 50 } \) அதாவது 31 : 19
3.
குறிப்பு: தொடக்க முதல் நிதியினைக் கண்டறிய தொடக்க இருப்புநிலைக் குறிப்பினைத் தயாரிக்க வேண்டும்.
| பொறுப்புகள் | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|
| முதல் நிதி | 43,000 | முதலீடு | 80,000 |
| (இருப்புக்கட்டும் தொகை) | பெறவேண்டிய சந்தா | 8,000 | |
| விளையாட்டுப் போட்டி நிதி | 60,000 | வங்கி ரொக்கம் | 14,000 |
| 1,03,000 | 1,03,000 |
| செலவுகள் | ரூ. | வருமானம் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|
| மைதான பராமரிப்பு | 33,000 | சந்தா | 60,000 | |
| பல்வகை செலவுகள் | 22,000 | கழிக்க: 2016-2017 ஆம் ஆண்டிற்காகப் பெற்றது | 8,000 | |
| செலவுகளைக் காட்டிலும் மிகுதியான வருமானம் (உபரி) | 26,000 | 52,000 | ||
| கூட்டுக: நடப்பு ஆண்டில் பெற வேண்டியது | 9,000 | 61,000 | ||
| அரங்க வாடகை | 20,000 | |||
| 81,000 | 81,000 |
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|---|
| முதல்நிதி | 43,000 | அறைகலன் | 40,000 | |
| கூட்டுக: செலவுகளைக் காட்டிலும் மிகுதியான வருமானம் (உபரி) | 26,000 | 69,000 | முதலீடு | 80,000 |
| உயில்கொடை | 18,000 | சந்தா பெற வேண்டியது | 9,000 | |
| விளையாட்டுப் போட்டி நிதி | 60,000 | வங்கி ரொக்கம் | 22,000 | |
| கூட்டுக: விளையாட்டுப் போட்டி நிதி வரவுகள் | 45,000 | கையிரொக்கம் | 3,000 | |
| 1,05,000 | ||||
| கழிக்க: விளையாட்டுப் போட்டி நிதிச் செலவுகள் | 38,000 | 97,000 | ||
| 1,54,000 | 1,54,000 |
4.

நீண்டகாலக் கடன் = 9% கடனீட்டுப் பத்திரங்கள் = ரூ.4,00,000
பங்குதாரர் நிதி = நேர்மைப் பங்குமுதல் + முன்னுரிமைப் பங்குமுதல் + காப்புகள் மற்றும் மிகுதி
= 1,50,000+2,00,000+1,50,000=ரூ.5,00,000
\(\therefore \) புற அக பொறுப்புகள் விகிதம் =
\(\cfrac { 4,00,000 }{ 5,00,000 } =0.8:1\)
(ii)

(iii)

= 8%முன்னுரிமைப் பங்குமுதல் +9% கடனீட்டுப் பத்திரங்கள்
= 2,00,000+4,00,000=ரூ 6,00,000
நேர்மைப் பங்குதாரர் நிதி = 1,50,000+1,50,000=ரூ.3,00,000
\(\therefore \) முதல் உந்து திறன் விகிதம் = \(\cfrac { 6,00,000 }{ 3,00,00 } =2:1\)
5.
| எடுப்பு நாள் | எடுப்புத் தொகை ரூ. |
வட்டிக்குரிய காலம் டிசம்பர் 31 வரை (மாதங்களில்) | பெருக்குத் தொகை (ரூ) |
|---|---|---|---|
| மார்ச் 1 | 8,000 | 10 | 80,000 |
| ஜூன் 1 | 6,000 | 7 | 42,000 |
| செப்டம்பர் 1 | 4,000 | 4 | 16,000 |
| டிசம்பர் 1 | 3,000 | 1 | 3,000 |
| மொத்த பெருக்குத் தொகை | 1,14,000 | ||
எடுப்புகள் மீதான வட்டி = மொத்த பெருக்குத் தொகை x ஆண்டு வட்டி வீதம் x \(\frac { 1 }{ 12 } \)
= \(1,14,000\times \frac { 12 }{ 100 } \times \frac { 1 }{ 12 } \)
6.
| விவரம் | ரூ. | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|---|
| வாராக்கடன் ஒதுக்கு க/கு | 1,000 | இயந்திரம் க/கு | 4,000 | |
| சரக்கிருப்பு க/கு | 2,000 | கட்டடம் க/கு | 20,000 | |
| மறுமதிப்பீட்டு இலாபம்: | ||||
| சரண் முதல் க/கு \(\left( 21,000\times \frac { 4 }{ 10 } \right) \) | 8,400 | |||
| அருண் முதல் க/கு \(\left( 21,000\times \frac { 3 }{ 10 } \right) \) | 6,300 | |||
| கரண் முதல் க/கு \(\left( 21,000\times \frac { 3 }{ 10 } \right) \) | 6,300 | 21,000 | ||
| 24,000 | 24,000 |
| விவரம் | சரண் ரூ. |
அருண் ரூ. |
கரண் ரூ. |
விவரம் | சரண் ரூ. |
அருண் ரூ. |
கரண் ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| கரண் முதல் க/கு | 3,600 | 2,700 | - | இருப்பு கீ/கொ | 60,000 | 50,000 | 40,000 |
| கரண் கடன்க/கு | - | - | 57,100 | பொதுக்கப்பு க/கு | 6,000 | 4,500 | 4,500 |
| இருப்பு கீ/இ | 70,800 | 58,100 | - | மறுமதிப்பீடு க/கு | 8,400 | 6,300 | 6,300 |
| சரண் முதல் க/கு | - | - | 3,600 | ||||
| அருண் முதல் க/கு | - | - | 2,700 | ||||
| 74,400 | 60,800 | 57,100 | 74,400 | 60,800 | 57,100 | ||
| இருப்பு கீ/கொ | 70,800 | 58,100 | - |
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துக்கள் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | கட்டடம் | 60,000 | |||
| சரண் | 70,800 | கூட்டுக: | 80,000 | ||
| அருண் | 58,100 | 1,28,900 | மதிபெற்றம் 10% | 20,000 | 80,000 |
| சரணின் கடன் க/கு | 57,100 | இயந்திரம் | 40,000 | ||
| கடனீந்தோர் | 35,000 | கூட்டுக: | |||
| மதிபெற்றம் | 4,000 | 44,000 | |||
| முதலீடுகள் | 20,000 | ||||
| சரக்கிருப்பு | 12,000 | ||||
| கழிக்க: | |||||
| மதிப்பு குறைப்பு | 2,000 | 10,000 | |||
| கடனாளிகள் | 25,000 | ||||
| கழிக்க: | |||||
| வரா ஐயக்கடன் ஒதுக்கு | 2,000 | 23,000 | |||
| வாங்கி ரொக்கம் | 44,000 | ||||
| 2,21,000 | 2,21,000 |
குறிப்பு: (i) புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் ஆதாய விகிதம் கொடுக்கப்படவில்லை. எனவே தொடரும் கூட்டாளிகளின் பழைய இலாப பகிர்வு விகிதமான 4:4 - ல் ஆதாயம் பெற்றுக் கொள்கிறார்கள் என எடுத்துக் கொள்ள வேண்டும்
(ii) நற்பெயரில் கரணின் பங்கு 21,000 x \(\frac { 3 }{ 10 } \)
கரணின் நற்பெயர் ஏற்பு = ரூ.6,300
சரண் : 6,300 x \(\frac { 4 }{ 7 } \) = ரூ.3,600
அருண் : 6,300 x \(\frac { 4 }{ 7 } \) = ரூ.2,700
7.
| விவரம் | ரூ. | ரூ. | விவரம் | ரூ |
|---|---|---|---|---|
| சரக்கிருப்பு க/கு | 5,000 | கட்டடம் க/கு | 20,000 | |
| வாரா ஐயக்கடன் ஒதுக்கு க/கு | 3,000 | |||
| மறுமதிப்பீட்டு இலாபம்: | ||||
| அமல் முதல் க/கு (12,000 x 7/12) |
7,000 | |||
| விமல் முதல் க/கு (12,000 x 5/12) |
5,000 | 12,000 | ||
| 20,000 | 20,000 |
| விவரம் | அமல் ரூ. |
விமல் ரூ. |
நிர்மல் ரூ. |
விவரம் | அமல் ரூ. |
விமல் ரூ. |
நிர்மல் ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| இருப்பு கீ/இ | 91,000 | 65,000 | 30,000 | இருப்பு கீ/கொ | 70,000 | 50,000 | - |
| வங்கி க/கு | - | - | 30,000 | ||||
| மறுமதிப்பீட்டுக் க/கு | 7,000 | 5,000 | - | ||||
| இலாபநட்டக் க/கு | 14,000 | 10,000 | - | ||||
| 91,000 | 65,000 | 30,000 | 91,000 | 65,000 | 30,000 | ||
| இருப்பு கீ/கொ | 91,000 | 65,000 | 30,000 |
8.

பயன்படுத்தப்பட்ட முதல் = பங்குமுதல் + காப்புகள் மற்றும் மிகுதி + நீண்டகாலக் கடன்கள்
= 2,00,000+50,000+1,50,000
= ரூ.4,00,000
முதலீடு மீதான வருவாய் = \(\cfrac { 60,000 }{ 4,00,000 } \times 100 = 15\%\)
9.
| S.NO. | Particulars | Debit Rs |
Credit Rs |
Voucher type | Group | ||
|---|---|---|---|---|---|---|---|
| (1) | CashA/c | Dr. | 4,00,000 | Receipt | Cash-in-Hand | ||
| To Devi's Capital A/c | 4,00,000 | Voucher | Capital Account | ||||
| (2) | Indian Bank A/c | Dr. | 60,000 | Contra | Bank Accounts | ||
| To CashA/c | 60,000 | Voucher | Cash-in-Hand | ||||
| (3) | Furniture A/c | Dr. | 15,000 | Payment | Fixed Assets | ||
| To CashA/c | 15,000 | Voucher | Cash-in-Hand | ||||
| (4) | Purchases A/c | Dr. | 50,000 | Purchase | Purchase Accounts | ||
| To Sumathy A/c | 50,000 | Voucher | Sundry Creditors | ||||
| (5) | Cash A/c | Dr. | 10,000 | Sales | Cash-in-Hand | ||
| To SalesA/c | 10,000 | Voucher | Sales Accounts | ||||
| (6) | Purchases A/c | Dr. | 5,000 | Purchase | Purchase Accounts | ||
| To CashA/c | 5,000 | Voucher | Cash-in-Hand | ||||
| (7) | Arun A/c | Dr. | 70,000 | Sales | Sundry Debtors | ||
| To SalesAlc | 70,000 | Voucher | Sales Accounts | ||||
| (8) | Cash A/c | Dr. | 25,000 | Contra | Cash-in-Hand | ||
| To BankAlc | 25,000 | Voucher | Bank Accounts | ||||
| (9) | Sumathy A/c | Dr. | 30,000 | Payment | Sundry Creditors | ||
| To BankA/c | 30,000 | Voucher | Bank Accounts | ||||
| (10) | Cash A/c | Dr. | 10,000 | Receipt | Cash-in-Hand | ||
| To Arun A/c | 10,000 | Voucher | Sundry Debtors | ||||
| (11) | Salaries A/c | Dr. | 36,000 | Payment | Indirect Expenses | ||
| To BankA/c | 36,000 | Voucher | Bank Accounts | ||||
| (12) | Carriage A/c | Dr. | 6,000 | Payment | Indirect Expenses | ||
| To Cash A/c | 6,000 | Voucher | Cash-in-Hand | ||||
| (13) | Computer A/c | Dr. | 44,000 | Journal | Indirect Expenses | ||
| To Muthu Ltd Alc | 44,000 | Voucher | Sundry Creditors |
10.
(i) கணக்கேடுகளைப் பராமரித்தல் :
1. கணினிமயக் கணக்கியல் முறையில் கணக்கேடுகளை எளிதாகவும் திறம்பட நீண்ட காலங்களுக்கு பராமரிக்கலாம்.
2. இதற்கு அதிகப்படியான இடவசதி தேவையில்லை.
3. தரவு மற்றும் தகவல்களை விரைவாகவும் துல்லியமாகவும் எடுக்க இது வழிவகை செய்கிறது.
(ii) சரக்கிருப்பு மேலாண்மை :
1. கணினிமயக் கணக்கியல் முறை திறம்பட சரக்கிருப்பு மேலாண்மைக்கு வழிவகை செய்கிறது.
2. வேகமாக நகரும், மெதுவாக நகரும் மற்றும் வழக்கொழிந்த சரக்கிருப்பை கண்டறியலாம்.
(iii) அறிக்கை உருவாக்குதல் :
கணினிமயக் கணக்கியல் முறை பல்வேறு வழக்கமான மற்றும் குறிப்பிட்ட நோக்க அறிக்கைகள் உருவாக்குவதற்கு உதவி புரிகிறது.
(iv) தரவு அனுப்புதல் /பெறுதல் :
கணக்கியல் தரவு மற்றும் தகவல்களை நிறுவனத்தின் உள்ளேயோ அல்லது நிறுவனத்திற்கு வெளியேயோ உள்ள வேறு ஒரு பயனரிடம் இருந்து அனுப்பலாம் அல்லது பெறலாம்.
(v) 'வரிவிதிப்பு':
கணினிமயக் கணக்கியல் முறை பல்வேறு வரிகளை கணக்கீடு செய்யவும் அதை பிடித்தம் செய்து அரசாங்க கணக்கில் செலுத்துவதற்கும் உதவி புரிகிறது.
11.
சாதாரண இலாபம் = பயன்படுத்தப்பட்ட முதல் x சாதாரண இலாப விகிதம்
பயன்படுத்தப்பட்ட முதல் = நிலைச் சொத்துக்கள் + நடப்புச் சொத்துக்கள் - நடப்புப் பொறுப்புகள்
= 5,00,000 - 2,00,000 = ரூ.3,00,000
சாதாரண இலாபம் = 3,00,000 x 12.5%
= ரூ.37,500
உயர் இலாபம் = சராசரி இலாபம் - சாதாரண இலாபம்
= 60,000 - 37,500
= ரூ.22,500
நற்பெயர் = உயர் இலாபம் x கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை
= 22,500 x 2 = ரூ.45,000
12.
13.
| நாள் | விவரம் | பே.ப.எ | பற்று ரூ. | வரவு ரூ. | |
|---|---|---|---|---|---|
| 2018 | முதல் மீதான வட்டி க/கு | ப | 1,500 | ||
| டிசம்பர் 31 | அருளப்பன் முதல் க/கு | 1,000 | |||
| நல்லசாமி முதல் க/கு | 500 | ||||
| (முதல் மீதான வட்டி 5% அனுமதிக்கப்பட்டது) | |||||
| " | இலாபநட்டப் பகிர்வு க/கு | ப | 1,500 | ||
| முதல் மீதான வட்டி க/கு | 1,500 | ||||
| (முதல் மீதான வட்டி கணக்கு முடிக்கப்பட்டது) | |||||
| " | அருளப்பன் முதல் க/கு | ப | 200 | ||
| நல்லசாமி முதல் க/கு | ப | 300 | |||
| எடுப்புகள் மீதான வட்டி க/கு | 500 | ||||
| (எடுப்புகள் மீதான வட்டி கணக்கிடப்பட்டது) | |||||
| " | எடுப்புகள் மீதான வட்டி க/கு | ப | 500 | ||
| இலாபநட்டப் பகிர்வு க/கு | 500 | ||||
| (எடுப்புகள்மீதான வட்டி கணக்கு முடிக்கப்பட்டது) | |||||
| " | இலாபநட்டப் பகிர்வு க/கு | ப | 17,000 | ||
| அருளப்பன் முதல் க/கு | 13,600 | ||||
| நல்லசாமி முதல் க/கு | 3,400 | ||||
| (இலாபம் முதல் கணக்கிற்கு மாற்றப்பட்டது) |
| விவரம் | ரூ. | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|---|
| முதல் மீதான வட்டி க/கு: | இலாபநட்ட க/கு | 18,000 | ||
| அருளப்பன் | 1,000 | எடுப்புகள்மீதான வட்டி க/கு: | ||
| நல்லசாமி | 500 | அருளப்பன் | 200 | |
| கூட்டாளிகளின் முதல் க/கு: (இலாபம்) | நல்லசாமி | 300 | ||
| அருளப்பன் (4/5) | 13,600 | |||
| நல்லசாமி (1/5) | 3,400 | 17,000 | ||
| 18,500 | 18,500 |
14.
| செலவுகள் | ரூ | ரூ | வருமானம் | ரூ | ரூ |
|---|---|---|---|---|---|
| பயன்படுத்திய விளையாட்டுப் பொருள்கள் | சந்தா | 5,000 | |||
| கொள்முதல் | 800 | கூட்டுக: பெற வேண்டியது (2016-17 | 600 | 5,600 | |
| கழிக்க: இறுதிச் சரக்கிருப்பு | 100 | 700 | சிறப்பு விருந்து கட்டண வசூல் | 2,000 | |
| சிறப்பு விருந்துக்கான செலவுகள் | 1,500 | ||||
| மின் கட்டணம் | 900 | ||||
| உபரி (செலவுகளைக் காட்டிலும் மிகுதியான வருமானம் | 4,500 | ||||
| 7,600 | 7,600 |
| பொறுப்புகள் | ரூ | ரூ | சொத்துகள் | ரூ | ரூ |
|---|---|---|---|---|---|
| முதல்நிதி | 23,000 | அறைகலன் | 12,000 | ||
| கூட்டுக: செலவுகளைக் | கூட்டுக: கூடுதல் அறைகலன் | 7,000 | 19,000 | ||
| காட்டிலும் மிகுதியான | விளையாட்டுப் பொருள்கள் இருப்பு | 100 | |||
| வருமானம் (உபரி) | 4,500 | 27,500 | பெறவேண்டிய சந்தா | 600 | |
| உயில்கொடை | 6,000 | (2016-2017) | |||
| வங்கி ரொக்கம் | 12,000 | ||||
| கைரொக்கம் | 1,800 | ||||
| 33,500 | 33,500 |
15.
| நாள் | விவரம் | பே. ப.எ |
பற்று ரூ. |
வரவு ரூ |
|
|---|---|---|---|---|---|
| வங்கி க/கு (30,000 x 2) | ப | 60,000 | |||
| நேர்மைப் பங்கு விண்ணப்பக் க/கு | 60,000 | ||||
| (30,000 பங்குகளுக்கான விண்ணப்பப் பணம் பெற்றது) | |||||
| நேர்மைப் பங்கு விண்ணப்பக் க/கு (10,000 x 2) | ப | 20,000 | |||
| நேர்மைப் பங்குமுதல் க/கு | 20,000 | ||||
| (பங்கு விண்ணப்பப் பணம் பங்குமுதல் கணக்கிற்கு மாற்றப்பட்டது ) | |||||
| நேர்மைப் பங்கு விண்ணப்பக் க/கு | ப | 40,000 | |||
| வங்கி க/கு (10,000 x 2) | 20,000 | ||||
| நேர்மைப் பங்கு ஒதுக்கீட்டு க/கு (10,000 x 2) | 20,000 | ||||
| (நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு பணம் திருப்பி அளிக்கப்பட்டது மற்றும் மிகுதியாகப் பெற்ற விண்ணப்பத் தொகை ஒதுக்கீட்டிற்கு சரிக்கப்பட்டது) | |||||
| நேர்மைப் பங்கு ஒதுக்கீட்டு க/கு (10,000 x 4) | ப | 40,000 | |||
| நேர்மைப் பங்குமுதல் க/கு | 40,000 | ||||
| (ஒதுக்கீட்டுக் பணம் பெற வேண்டியது) | |||||
| வங்கி க/கு (40,000-20,000) | ப | 20,000 | |||
| நேர்மைப் பங்கு ஒதுக்கீட்டு க/கு | 20,000 | ||||
| (ஒதுக்கீட்டு பணம் பெற்றது) | |||||
| நேர்மைப் பங்கு முதல் அழைப்பு க/கு (10,000 x 2) | ப | 20,000 | |||
| நேர்மைப் பங்குமுதல் க/கு | 20,000 | ||||
| (முதல் அழைப்பு பணம் பெற வேண்டியது) | |||||
| வங்கி க/கு | ப | 20,000 | |||
| நேர்மைப் பங்கு முதல் அழைப்பு க/கு | 20,000 | ||||
| (முதல் அழைப்பு பணம் பெற்றது) | |||||
| நேர்மைப் பங்கு இரண்டாம் மற்றும் இறுதி அழைப்பு க/கு (10,000 x 2) | ப | 20,000 | |||
| நேர்மைப் பங்குமுதல் க/கு | 20,000 | ||||
| (இரண்டாம் மற்றும் இறுதி அழைப்பு பணம் பெற வேண்டியது) | |||||
| வங்கி க/கு (9,400 x 2) | ப | 18,800 | |||
| நேர்மைப் பங்குமுதல் க/கு | 18,800 | ||||
| (9,400 பங்குகளுக்கான இரண்டாம் மற்றும் இறுதி அழைப்பு பணம் பெற்றது) | |||||
| நேர்மைப் பங்குமுதல் க/கு (600 x 10) | ப | 6,000 | |||
| நேர்மைப் பங்கு இரண்டாம் மற்றும் இறுதி அழைப்பு க/கு (600 x 2) | 1,200 | ||||
| பங்கு ஒறுப்பிழப்பு க/கு (600 x 8) | 4,800 | ||||
| (600 பங்குகள் ஒறுப்பிழப்பு செய்யப்பட்டது) | |||||
| வங்கி க/கு (400 x 7) | ப | 2,800 | |||
| பங்கு ஒறுப்பிழப்பு க/கு (400 x 3) | ப | 1,200 | |||
| நேர்மைப் பங்குமுதல் க/கு | 4,000 | ||||
| (ஒறுப்பிழப்பு செய்யப்பட்ட 400 பங்குகள் மறுவெளியீடு செய்யப்பட்டது) | |||||
| பங்கு ஒறுப்பிழப்பு க/கு | ப | 2,000 | |||
| முதலினக் காப்பு க/கு | 2,000 | ||||
| (மறுவெளியீட்டு இலாபம் முதலினக் காப்பு கணக்கிற்கு மாற்றப்பட்டது |
குறிப்பு:
ஒறுப்பிழப்பு செய்யப்பட்ட 600 பங்குகளுக்கான தொகை = ரூ.4,800
400 பங்குகளுக்கான ஒறுப்பிழப்பு செய்யப்பட்ட தொகை = \(\frac {4,800}{600}\) x 400 = ரூ. 3,200
கழிக்க: மறுவெளியீட்டு நட்டம் 1,200
______
நிகர ஆதாயம் முதலினக் காப்பு கணக்கிற்கு மாற்றப்பட்டது 2,000
_______
16.
| பொறுப்புகள் | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|
| வங்கி மேல்வரைப்பற்று | 14,000 | கைரொக்கம் | 800 |
| கடனீந்தோர் | 60,000 | சரக்கிருப்பு | 12,000 |
| முதல் (இருப்புக் கட்டும் தொகை) | 92,800 | கடனாளிகள் | 34,000 |
| பொறித்தொகுதி | 80,000 | ||
| அறைகலன் | 40,000 | ||
| 1,66,800 | 1,66,800 |
| பொறுப்புகள் | ரூ. | சொத்துகள் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|
| கடனீந்தோர் | 72,000 | வங்கி இருப்பு | 18,000 | |
| முதல் (இருப்புக் கட்டும் தொகை) | 1,04,000 | கைரொக்கம் | 1,500 | |
| சரக்கிருப்பு | 16,000 | |||
| கடனாளிகள் | 30,000 | |||
| கழிக்க: கடனாளிகள் மீதான ஒதுக்கு 5% | 1,500 | 28,500 | ||
| பொறித்தொகுதி | 80,000 8,000 |
|||
| கழிக்க: தேய்மானம் | 72,000 | |||
| அறைகலன் | 40,000 | |||
| 1,76,000 | 1,76,000 |
| விவரம் | ரூ. |
|---|---|
| 31.3.2018 அன்று இறுதிமுதல் | 1,04,000 |
| கூட்டுக: அவ்வாண்டின் எடுப்புகள் | 40,000 |
| 1,44,000 16,000 |
|
| கழிக்க: அவ்வாண்டில் கொண்டுவரப்பட்ட கூடுதல் முதல் | |
| சரிக்கட்டப்பட்ட இறுதிமுதல் | 1,28,000 92,800 |
| கழிக்க: 31.3.2017 அன்று தொடக்க முதல் | |
| 31.3.2018 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டின் இலாபம் | 35,200 |
17.
(b)
ரூ.5,00,000
18.
(a)
நிதிநிலை பகுப்பாய்வு
19.
(a)
இலாப நட்ட அனாமத்து
20.
(c)
உயர் இலாபம்
21.
(b)
வருவாயின வரவு
22.
(a)
கடந்த
23.
(b)
முதல் மீது வட்டி
24.
(a)
முழுமை பெறா பதிவேடுகள்
25.
(a)
சரக்கிருப்பு காலம்
26.
(b)
கணக்கோடுகள்
27.
(b)
நடைமுறை முதல்
28.
(a)
அனைத்து கூட்டாளிகளின் முதல் கணக்கிற்கு
29.
(d)
இலாபம்
30.
(b)
பெயரளவு க/கு
31.
(c)
நிலைச் சொத்துகள் சுழற்சி விகிதம் – சதவீதம்
32.
(a)
எதிர்பதிவு சான்றாவணம்
33.
(b)
முதலின வரவு
34.
(a)
ரூ.36,000
35.
(d)
ரூ.500
36.
(d)
அழைக்கப்பட்ட தொகை
37.
லின்ட்லே பிரபு அவர்களின் கூற்றுப்படி, "பொதுவான பங்கிற்காக பணம் அல்லது பண மதிப்பினை வழங்கி அதனை சில தொழில் அல்லது வணிகத்தில் பயன்படுத்தி, அதிலிருந்து பெறும் இலாபம் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்து கொள்ளும் பல நபர்களின் கூட்டமைப்பே நிறுமம் ஆகும். பங்களிப்பாக பெறக்கூடிய பொதுப்பங்குகளின் பண மதிப்பே நிறுமத்தின் மூலதனம் ஆகும். அம்மூலதனத்திற்கு பங்களிப்புச் செய்யும் நபர்கள் அல்லது அந்நிறுமத்தை உருவாக்குபவர்கள் அல்லது அந்நிறுமம் யாருக்குச் சொந்தமானதோ அவர்கள் நிறுமத்தின் உறுப்பினர்கள் ஆவர். ஒவ்வொரு உறுப்பினருக்கும் உரிய மூலதனத்தின் பகுதி அவருக்கான பங்கு ஆகும்".
38.
இலாப நோக்கற்ற அமைப்புகள் அரசு மற்றும் இதர அமைப்புகளிடமிருந்து பல்வேறு வகையான மானியங்களைப் பெறுகின்றன. அவையாவன: கட்டடங்கள் கட்டுவதற்காகப் பெறப்படும் மானியமானது திரும்பத் திரும்ப நிகழாத் தன்மையுடையதால் முதலின வரவாகக் கருதப்படுகிறது.
சொத்துகளைப் பராமரிக்கவும் மற்றும் சம்பளம் கொடுக்கவும் பெறப்படும் மானியமானது திரும்பத் திரும்ப நிகழும் தன்மையுடையதால் வருவாயின வரவாகக் கருதப்படுகிறது.
39.
கணக்கியல் விகிதங்கள் பின்வரும் ஏதேனும் ஒரு வடிவத்தில் வெளிப்படுத்தலாம். விகிதம்
(i) விகிதாச்சாரம் : இதில் ஒரு ஈவாக குறிப்பிடப்படுகிறது. எடுத்துக்காட்டு, 2 அல்லது 2:1.
(ii) சதவிகிதம் : இதில், விகிதம் சதவிகிதத்தில் குறிப்பிடப்படுகிறது. எடுத்துக்காட்டு, 25%
(iii) மடங்கு : இதில், ஒரு குறிப்பிட்ட தொகை எத்தனை மடங்கு உள்ளது எனக் குறிப்பிடப்படுகிறது. எடுத்துக்காட்டு 4 மடங்கு.
40.
ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தில் ஒரு நபரை புதிய கூட்டாளியாக சேர்க்கலாம். இதுவே கூட்டாளி சேர்ப்பு என்று அழைக்கப்படுகிறது. தொழில் விரிவாக்கத்திற்கு தேவையான கூடுதல் முதல் பெறுவதற்காகவும் அல்லது புதிய கூட்டாளி சேர்க்கப்படலாம்
41.
கூட்டாண்மை நிறுவனம் என்பது இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட நபர்களோ, அவர்களுக்கிடையே ஏற்படும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒரு தொழிலை ஏற்று நடத்தும் தொழில் வடிவமைப்பு ஆகும். கூட்டாண்மைத் தொழிலை ஏற்று நடத்த ஒப்புக் கொள்ளும் நபர்களை தனித்தனியாக கூட்டாளிகள் எனவும், ஒட்டுமொத்தமாக நிறுவனம் என்றும் அழைக்கிறோம்.
42.
(i) ஆதாய விகிதம் கணக்கிடுவதன் நோக்கம் விலகும் கூட்டாளிக்கு கொடுக்கப்படும் நற்பெயரை ஏற்றுக் கொள்வதாகும். ஆதாயப் பங்கு பின்வருமாறு கணக்கிடப்படுகிறது.
(ii) ஆதாயப்பங்கு = புதிய பங்கு - பழைய பங்கு
(iii) ஆதாய விகிதம் = தொடரும் கூட்டாளிகளுக்கு கிடைக்க பெற்ற ஆதாயத்தின் விகிதமாகும்.
43.
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
| இருப்பு கீ/கொ | 1,40,000 | ரொக்கக் க/கு | 3,90,000 |
| கடனாளிகள் க/கு | 4,80,000 | கடனாளிகள் க/கு | 30,000 |
| (அவ்வாண்டில் மாற்றுச்சீட்டு பெற்றது-இருப்புக்கட்டும் தொகை) | (பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது) | ||
| இருப்பு கீ/இ | 2,00,000 | ||
| 6,20,000 | 6,20,000 |
44.
| விவரம் | 2016-17 | 2017-18 | தொகையின் கூடுதல் (+) அல்லது குறைவு (-) |
தவீதத்தின் கூடுதல் (+) அல்லது குறைவு (-) |
|---|---|---|---|---|
| ரூ. | ரூ. | ரூ. | ||
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 2,00,000 | 2,50,000 | +50,000 | +25 |
| கூட்டுக: இதர வருமானங்கள் | 50,000 | 40,000 | –10,000 | –20 |
| மொத்த வருமானங்கள் | 2,50,000 | 2,90,000 | +40,000 | +16 |
| கழிக்க: செலவுகள் | 1,50,000 | 1,20,000 | –30,000 | –20 |
| வரிக்கு முன்னர் உள்ள இலாபம் | 1,00,000 | 1,70,000 | +70,000 | +70 |
விற்பனை மூலம் பெற்ற வருவாயின் கூடுதல் மற்றும் குறைதல் சதவீதக் கணக்கீடு
x 100 = 25%
45.
(i) தானியங்கும் கணக்கியல் என்பது கணக்கியல் மென்பொருள் உதவியுடன் கணக்கேடுகளை உடனடியாக பராமரிக்கும் அணுகுமுறையாகும்.
(ii) கையால் எழுதும் கணக்கியல் முறையில் வெவ்வேறு கணக்கேடுகளில் பதிவுகள் மேற்கொள்ளப்படுகிறது.
46.
(i) ஒரு தொழிலுக்கு நன்மையை தரக்கூடிய அத்தொழிலின் புகழ் அல்லது நன்மதிப்பு நற்பெயர் ஆகும். இது அத்தொழிலுக்கு அதிக இலாபம் ஈட்ட உதவுகிறது
(ii) இது எதிர்காலத்தில் நிறுவனம் மிகுதியாக ஈட்டக்கூடிய வருமானங்களில் தற்போதைய மதிப்பு ஆகும்
47.
கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகளின் சுழற்சி விகிதம் =
= \(\frac {9,60,000}{1,60,000}\) = 6 மடங்குகள்
கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள் = கடனாளிகள் + பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுகள்
= 1,00,000 + 60,000 = ரூ.1,60,000
கணக்குகள் மூலம் பெறவேண்டியவைகளின் தொடக்க இருப்பு கொடுக்கப்படாததால், கணக்குகள் மூலம் பெறவேண்டியவைகளின் சராசரிக்குப் பதிலாக, கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகளின் இறுதி இருப்பு எடுத்துக்கொள்ளப்பட்டது
கடன் வசூலிப்புக் காலம் (மாதங்களில்) =
= \(\frac {12}{6}\) = 2 மாதங்கள்
48.
நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வின் நோக்கங்கள்:
1) வருவாயீட்டும் தன்மை மற்றும் இலாபமீட்டும் திறனை ஆய்வு செய்வதற்காக.
2) நீண்டகால மற்றும் குறுகிய கால கடனைத் தீர்க்கும் திறன் பற்றி அறிய
3) சொத்துகளை பயன்படுத்துவதிலும், செயல்பாடுகளிலும் ஆற்றலைத் தீர்மானிப்பதற்கு
4) நிர்வாகம் மற்றும் பணியாளர்களின் திறமையைத் தீர்மானிப்பதற்கு
5) உற்பத்தி, மற்றும் விற்பனையின் போக்கினைத் தீர்மானிப்பதற்கு
6) எதிர்கால முன்கணிப்பு மற்றும் திட்டப் பட்டியல் தயாரிப்பதற்கு
7) நிறுவனத்திற்குள்ளேயும், பிற நிறுவனங்களோடும் ஒப்பீடு செய்வதற்கு.
49.
கூட்டாண்மை நிறுவனங்களில் கூட்டாளிகளின் பரஸ்பர உரிமைகளில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் நற்பெயர் மதிப்பீடுச் செய்வதற்கான தேவை எழுகிறது. கூட்டாளிகளின் உரிமைகளைக் காக்கும் பொருட்டு பின்வரும் சூழ்நிலைகளில் நற்பெயரை மதிப்பிடுவதற்கான தேவை எழுகிறது:
(i) இலாபப் பகிர்வு விகிதத்தில் மாற்றம் ஏற்படும்போது
(ii) கூட்டாண்மை நிறுவனத்தில் புதிய கூட்டாளி சேர்க்கப்படும்போது
(iii) கூட்டாண்மை நிறுவனத்தில் இருக்கும் கூட்டாளி ஒருவர் நிறுவனத்தை விட்டு விலகும் போது அல்லது கூட்டாளி ஒருவர் இறக்கும் போது
(iv) ஒரு கூட்டாண்மை நிறுவனத்தை கலைக்கும் போது
50.
கூட்டாளியின் இறப்பின்போது கீழ்கண்ட சரிக்கட்டுதல்கள் செய்யப்பட வேண்டும்
(i) பகிர்ந்து தரா இலாபங்கள், காப்புகள் மற்றும் நட்டங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்
(ii) சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் மறுமதிப்பீடு செய்யப்பட வேண்டும்.
(iii) புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் ஆதாய விகிதம் நிர்ணயிக்க வேண்டும்
(iv) நற்பெயர் சரிக்கட்டுதல்
(v) இறந்த கூட்டாளிக்கு உரிய தொகையை தீர்வு செய்தல் கூட்டாளி இறப்பின் போது செய்ய வேண்டிய சரிக்கட்டுதல்கள், இறந்த கூட்டாளிக்குரிய தொகையை செலுத்துவதைத் தவிர பெரும்பாலும் விலகும் கூட்டாளிக்கு செய்ய வேண்டியவை போன்றதேயாகும்.
51.
பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கினைத் தயாரிக்கப் பின்வரும் படிநிலைகளைப் பின்பற்ற வேண்டும்:
1) பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கின் பற்றுப் பக்கத்தில் தொடக்க ரொக்க இருப்பையும், சாதகமான வங்கி இருப்பையும் பதிவு செய்ய வேண்டும். வங்கி மேல்வரைப்பற்றாக இருந்தால் அதனை வரவுப் பக்கம் தொடக்க இருப்பாக பதிவு செய்ய வேண்டும்.
2) அந்த ஆண்டில் மேற்கொண்ட ரொக்கப் பெறுதல்கள் பற்றுப்பக்கத்திலும் மற்றும் ரொக்கச் செலுத்தல்கள் வரவுப் பக்கத்திலும் பதியப்பட வேண்டும்.
3) ரொக்கப் பெறுதல்கள் மற்றும் ரொக்கச் செலுத்தல்கள் பதியும் போது அவை வருவாயினத்தைச் சார்ந்ததா அல்லது முதலினத்தைச் சார்ந்ததா என்று வேறுபடுத்தத் தேவையில்லை. அதுபோன்று, அவை முந்தைய ஆண்டுக்குரியதா அல்லது நடப்பாண்டிற்குரியதா அல்லது எதிர்வரும் ஆண்டிற்குரியதா எனவும் வேறுபடுத்த வேண்டியதில்லை.
4) பற்றுப் பக்கத்தின் மொத்தம் வரவுப்பக்கத்தின் மொத்தத்தை விட அதிகமாக இருந்தால் இருப்புக் கட்டப்படும் தொகை வரவுப் பக்கத்தில் தோன்றும், இது இறுதி ரொக்கம் அல்லது வங்கி இருப்பினைக் குறிக்கும்.
5) வரவுப் பக்கத்தின் மொத்தம் பற்றுப்பக்கத்தின் மொத்தத்தை விட அதிகமாக இருந்தால் இருப்புக்கட்டும் தொகை பற்றுப் பக்கத்தில் தோன்றும். இது வங்கி மேல்வரைப்பற்று ஆகும்.
52.
53.
கூட்டாளி சேர்க்கையின்போது நற்பெயருக்கான கணக்கியல் செயல்முறைகள் கீழே விவாதிக்கப்பட்டுள்ளது
(i) புதிய கூட்டாளி நற்பெயருக்கான ரொக்கம் அல்லது சொத்து கொண்டு வரும் போது
(ii) புதிய கூட்டாளி நற்பெயருக்கான ரொக்கம் அல்லது சொத்து ஏதும் கொண்டு வராத போது
(iii) புதிய கூட்டாளி நற்பெயருக்கான ஒரு பகுதியை மட்டும் ரொக்கம் அல்லது சொத்துக்களாக கொண்டு வரும் போது
(iv) பழைய நற்பெயர்
(i) புதிய கூட்டாளி நற்பெயருக்கான ரொக்கம் அல்லது சொத்து கொண்டு வரும் போது:
புதிய கூட்டாளி முதல் தொகையோடு, கூடுதலாக நற்பெயருக்காகவும் பணம் கொண்டுவரும் போது, அது பழைய கூட்டாளிகளின் தியாக விகிதத்தின்படி அவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.
(ii) புதிய கூட்டாளி நற்பெயருக்கான ரொக்கம் அல்லது சொத்து ஏதும் கொண்டு வராத போது:
புதிய கூட்டாளி நற்பெயருக்காக பணம் அல்லது சொத்துக்கள் ஏதும் கொண்டு வராத போது, அவருடைய நற்பெயருக்கான பங்கினை கூட்டாளிகளின் முதல் கணக்கில் சரிக்கட்ட வேண்டும்
(iii) புதிய கூட்டாளி நற்பெயருக்கான ஒரு பகுதியை மட்டும் ரொக்கம் அல்லது சொத்துக்களாக கொண்டு வரும் போது:
சில நேரங்களில் புதிய கூட்டாளி நற்பெயருக்கென ஒரு பகுதியை மட்டும் ரொக்கம் அல்லது சொத்துக்களாகக் கொண்டு வருவதுண்டு, அந்நிலைகளில், ரொக்கம் அல்லது சொத்துக்கள் குறிப்பிட்ட கணக்கில் பற்று வைக்கப்படுகிறது. கொண்டு வராத தொகை புதிய கூட்டாளியின் முதல் கணக்கில் பற்று செய்யப்படுகிறது. இத்தொகையானது பழைய கூட்டாளிகளின் முதல் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது
(iv) பழைய நற்பெயர்:
நற்பெயர் ஏற்கனவே கணக்கேடுகளில் இருந்தால், கூட்டாளி சேர்க்கையின் போது கூட்டாளிகள் முடிவெடுத்தால் அதனை போக்கெழுத பழைய கூட்டாளிகளின் முதல் கணக்கில் அல்லது நடப்புக் கணக்கில் பழைய இலாப விகிதத்தில் மாற்றிட வேண்டும்.
54.
முழுமை பெறா பதிவேடுகளின் இயல்புகள்:
1) தன்மை: இது நடவடிக்கைகளை அறிவியல் தன்மையற்ற மற்றும் ஒழுங்கற்ற முறையில் பதிவு செய்யும் ஒரு முறையாகும் இதில் கணக்கியல் கொள்கைகள் மற்றும் கணக்கியல் தரநிலைகள் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை.
2) பராமரிக்கப்படும் கணக்கின் வகைகள்: பொதுவான, ரொக்கம் மற்றும் ஆள்சார் கணக்குகள் மட்டும் முழுமையாகப் பராமரிக்கப்படுகின்றன. சொத்து மற்றும் பெயரளவுக் கணக்குகள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை. சில நடவடிக்கைகள் பதிவு செய்யப்படுவதே இல்லை.
3) சீரற்றத் தன்மை: பல்வேறு நிறுவனங்களுக்கிடையில் நடவடிக்கைகளை பதிவு செய்வதில் சீரற்றத் தன்மை காணப்படுகிறது. வெவ்வேறு நிறுவனங்கள் தங்கள் தேவைகள் மற்றும் வசதிகளுக்கேற்ப நடவடிக்கைகளை பதிவு செய்கின்றன.
4) பொருந்தும் தன்மை: கணக்கேடுகளை இரட்டைப்பதிவு முறையில் பின்பற்ற சட்டப்படியான கடமையுள்ள நிறுவனங்கள் அல்லாத பிற நிறுவனங்கள் முழுமை பெறா பதிவேடுகளைப் பராமரிக்கலாம். எனவே, சிறு அளவிலான தனியாள் வணிகம் மற்றும் கூட்டாண்மை கணக்குகள் இம்முறையில் பராமரிக்கலாம்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards