12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set C
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set C

Published on: 02/03/2021
12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Accountancy Reduced Syllabus Three mark Important Questions with Answer key - 2021(Public Exam)
12ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
நிதிநிலை அறிக்கைகளின் முக்கியத்துவத்தினை எழுதுக (ஏதேனும் மூன்று).
2.
நற்பெயரை மதிப்பீடு செய்வதற்கான தேவைகள் யாவை?
3.
குறிப்பு வரைக:
1) தனியார் ஒதுக்கீடு
2) உரிமை வெளியீடு
3) மேலூதிய பங்கு வெளியீடு
4.
விலகும் கூட்டாளிக்குரிய தொகையை எவ்வகையில் தீர்க்கப்படலாம்?
5.
விகிதப் பகுப்பாய்வின் பொருள் மற்றும் வரைவிலக்கணம் தருக.
6.
முதலீட்டு மாறுபடும் நிதி பற்றி குறிப்பு வரைக
7.
ஜனனி, ஜானகி, மற்றும் ஜமுனா என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபங்கள் மற்றும் நட்டங்களை முறையே 3:3:1 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2017, டிசம்பர் 31 அன்று ஜானகி இறந்து விட்டார். அவருக்குச் செலுத்த வேண்டிய தொகை ரூ.1,40,000 என வரவிருப்பைக் காட்டியது. கீழ்க்கண்ட நிலைகளில் குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
(i) செலுத்த வேண்டியதொகை காசோலை மூலம் உடனடியாகச் செலுத்தப்பட்டது.
(ii) செலுத்த வேண்டிய தொகை உடனடியாகச் செலுத்தப்படவில்லை.
(iv) உடனடியாக ரூ.75,000 காசோலை மூலம் செலுத்தப்பட்டது,மீதித்தொகை இன்னும் செலுத்தப்பட வேண்டி உள்ளது.
8.
நிதிநிலை அறிக்கையின் குறைபாடுகள் ஏதேனும் மூன்றினை விளக்கவும்.
9.
நிலை அறிக்கை வாயிலாக இலாபம் அல்லது நட்டம் கண்டறியும் படிநிலைகளைத் தரவும்.
10.
சதீஷ் மற்றும் சுதன் இருவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். அவர்கள் 4:3 என்ற விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்து வருகின்றனர். 2018 ஏப்ரல் 1 அன்று சசி என்பவரை கூட்டாளியாகச் சேர்த்துக்கொண்டனர். சசி கூட்டாண்மையில் சேர்ந்த அன்று நிறுவன ஏடு நற்பெயர் மதிப்பினை ரூ.35,000 என்று காட்டியது. மாறுபடும் முதல் முறையில் பராமரிக்கப்படுவதாக கருதி தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும். கூட்டாளிகள் பின்வரும் முடிவினை எடுத்தனர்.
(i) ஏட்டில் உள்ள நற்பெயர் தொகை முழுவதையும் போக்கெழுவது
(ii) ஏட்டில் உள்ள நற்பெயரில் ரூ.21,000 மட்டும் போக்கெழுவது
11.
பின்வரும் விவரங்கள் தூத்துக்குடி இளம் முன்னோடிகள் சங்கத்தின் இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும்.
சங்கத்தில் 100 உறுப்பினர்கள் உள்ளனர். ஒவ்வொருவரும் ரூ.25 ஆண்டுச் சந்தாவாக செலுத்துகின்றனர். ஆண்டிறுதியில் 10 உறுப்பினர்கள் சந்தா செலுத்தாமல் இருந்தனர். ஆனால் நான்கு உறுப்பினர்கள் அடுத்த ஆண்டிற்கான சந்தா தொகையை முன்கூட்டிச் செலுத்தி இருந்தனர்
12.
13.
சரக்கிருப்பு மாற்று காலம் என்றால் என்ன? இது எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
14.
சராசரி இலாபம் ரூ.15,000 ஆக இருக்கும்போது 2 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.
15.
கவிதா என்பவர் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளி. அவர் வழக்கமாக ஒவ்வொரு மாதமும் ரூ.2,500 எடுத்துக் கொள்கிறார். எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 4% கணக்கிடப்பட வேண்டும். எடுப்புகள் மீது வட்டி சராசரி கால முறையைப் பயன்படுத்தி கீழ்க்கண்ட சூழ்நிலைகளில் கணக்கிடவும். அவர்
(i) ஒவ்வொரு மாதத் தொடக்கத்தில் எடுத்திருந்தால்
(ii) ஒவ்வொரு மாத இடையில் எடுத்திருந்தால்
(iii) ஒவ்வொரு மாத இறுதியில் எடுத்திருந்தால்
16.
சுபா மற்றும் சுதா என்ற கூட்டாளிகள் தங்கள் இலாப நட்டங்களை 2:3 என்ற விகிதத்தில் பகிர்ந்து வருகின்றனர். அவர்களின் பின்வரும் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய முதல் மீது வட்டி ஆண்டுக்கு 5% கணக்கிடவும்.
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | நிலைச் சொத்துகள் | 70,000 | ||
| சுபா | 40,000 | நடப்புச் சொத்துகள் | 50,000 | |
| சுதா | 60,000 | 1,00,000 | ||
| நடப்புப் பொறுப்புகள் | 20,000 | |||
| 1,20,000 | 1,20,000 |
அவ்வாண்டில் சுபா மற்றும் சுதாவின் எடுப்புகள் முறையே ரூ.8,000 மற்றும் ரூ.10,000; அவ்வாண்டில் ஈட்டிய இலாபம் ரூ.30,000.
17.
தங்கள் இலாப நட்டங்களை 3:4 என்ற இலாபவிகிதத்தில் பகிர்ந்து வரும் பிருந்தா மற்றும் பிரவீனா என்ற கூட்டாளிகளின் பின்வரும் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து 2017, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய முதல் மீது வட்டி ஆண்டுக்கு 6 % கணக்கிடவும்.
| பொறுப்புகள் | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|
| முதல்கணக்குகள்: | பல்வகைச் சொத்துகள் | 80,000 | |
| பிருந்தா | 30,000 | ||
| பிரவீனா | 40,000 | ||
| இலாப நட்டப் பகிர்வு க/கு | 10,000 | ||
| 80,000 | 80,000 |
2017, ஜுலை 1 அன்று பிருந்தா கொண்டு வந்த கூடுதல் முதல் ரூ.6,000 மற்றும் 2017, அக்டோபர் 1 அன்று பிரவீனா கொண்டு வந்த கூடுதல் முதல் ரூ.10,000. அவ்வாண்டில் பிருந்தா மற்றும் பிரவீனா எடுப்புகள் முறையே ரூ.5,000 மற்றும் ரூ.7,000. அவ்வாண்டில் ஈட்டிய இலாபம் ரூ.31,000.
18.
ஜஸ்டினா, நவி மற்றும் ரித்திகா எனும் கூட்டாளிகள் இலாப நட்டங்களை சமமாகப் பகிர்ந்து வந்தனர். 31.3.2019 அன்று ரித்திகா என்பவர் கூட்டாண்மையிலிருந்து விலகினார். முந்தைய ஆண்டுகளின் இலாபம் பின்வருமாறு.
2016: ரூ.5,000; 2017: ரூ.10,000; 2018: ரூ.30,000; 2019 ஆம் ஆண்டிற்கான ரித்திகாவின் இலாபப் பங்கை அவர் விலகும் நாள் வரை பின்வரும் நிலைகளில் கணக்கிடவும்.
(அ) முந்தைய ஆண்டின் இலாபத்தை அடிப்படையாகக் கொண்டு இலாபத்தைப் பகிர்ந்தளிக்க வேண்டும்.
(ஆ) கடந்த மூன்று ஆண்டுகளின் சராசரி இலாபத்தை அடிப்படையாகக் கொண்டு இலாபத்தைப் பகிர்ந்தளிக்க வேண்டும்.
மேலும், கூட்டாளிகளின் முதல் கணக்கு மாறுபடும் முதல் முறை எனக் கொண்டு தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
19.
அனு நிறுமத்தால் ரூ.10 முகமதிப்பில் வெளியிடப்பட்ட நேர்மைப் பங்குகளில், தியாகு என்பவர் வைத்திருந்த ரூ.200 நேர்மைப் பங்குகளுக்கு இறுதி அழைப்புத் தொகையான ரூ.3 செலுத்தாத காரணத்தால் அவை ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன. அப்பங்குகள் ரூ.6 வீதம் லக்ஷ்மனுக்கு மறுவெளியீடு செய்யப்பட்டன. ஒறுப்பிழப்பு மற்றும் மறுவெளியீட்டிற்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்
20.
பின்வரும் விவரங்களிலிருந்து விடுபட்ட தகவலைக் கண்டறியவும்:
| விவரம் | ரூ. |
|---|---|
| 31.3.2019 அன்று இறுதி முதல் | 1,90,000 |
| அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் | 50,000 |
| அவ்வாண்டின் எடுப்புகள் | 30,000 |
| 1.4.2018 அன்று தொடக்க முதல் | ? |
| 31.3.2019 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டின் நட்டம் | 40,000 |
21.
இரத்ன குமார் மற்றும் ஆரோக்கியதாஸ் எனும் கூட்டாளிகள் முறையே 3.2 என இலாப நட்டம் பகிர்ந்து வந்தனர். 31 மார்ச் 2017 ஆம் நாளைய அவர்களது இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | கட்டடம் | 30,000 | ||
| இரத்ன குமார் | 30,000 | பொறித்தொகுதி | 60,000 | |
| ஆரோக்கியதாஸ் | 50,000 | 80,000 | அறைகலன் | 20,000 |
| இலாப நட்டப் பகிர்வு க/கு | 20,000 | கடனாளிகள் | 10,000 | |
| பொதுக்காப்பு | 5,000 | சரக்கிருப்பு | 15,000 | |
| தொழிலாளர் ஈட்டு நிதி | 15,000 | வங்கி ரொக்கம் | 15,000 | |
| பற்பல கடனீந்தோர் | 30,000 | |||
| 1,50,000 | 1,50,000 |
2017, ஏப்ரல் 1 அன்று, டேவிட் என்பவரை கூட்டாளியாகச் சேர்த்தனர். கூட்டாளி சேர்ப்பின் போது பகிர்ந்து தரா இலாபம் மற்றும் காப்பினை பகிர்ந்தளிக்க குறிப்பேட்டுப் பதிவு தரவும்.
22.
புதிய கூட்டாளி ஒருவரை சேர்ப்பதற்காக, ஒரு நிறுவனம் 4 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 3 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் கூட்டு சராசரி இலாபத்தினை பயன்படுத்தி, நற்பெயரை மதிப்பிட முடிவு செய்தது. கடந்த நான்கு ஆண்டுகளின் இலாபங்கள் மற்றும் அந்தந்த ஆண்டுகளுக்கான நிறைகள் பின்வருமாறு.
| விவரம் | 2015 | 2016 | 2017 | 2018 |
|---|---|---|---|---|
| இலாபம் (ரூ) | 20,000 | 22,000 | 24,000 | 28,000 |
| நிறை | 1 | 2 | 3 | 4 |
நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.
23.
பின்வரும் விவரங்களிலிருந்து 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் பற்று வைக்கப்பட வேண்டிய அச்சு மற்றும் எழுதுபொருள் செலவைக் கணக்கிட்டு அவை 2018, மார்ச் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பில் எவ்வாறு தோன்றும் என்பதையும் குறிப்பிடவும்.
எழுதுபொருள்களுக்காக கொடுத்த தொகை (2017-2018) = ரூ1,500
எழுதுபொருள்கள் இருப்பு (ஏப்ரல் 1, 2017) = ரூ 300
எழுதுபொருள்கள் இருப்பு (மார்ச் 31, 2018) = ரூ 200
24.
வெளிச்செல்லும் கூட்டாளிக்குச் செலுத்தவேண்டிய தொகையினை எவ்வாறு தீர்வு செய்யலாம்?
25.
சீனு மற்றும் சிவா இருவரும் கூட்டாளிகள். அவர்கள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 5:3 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றனர். சுப்பு என்பவரை புதிய கூட்டாளியாக சேர்க்கும்போது அவர்கள் பின்வரும் முடிவுகள் எடுத்தனர்.
(i) கட்டடம் மதிப்பினை ரூ.40,000 ஆக உயர்த்த வேண்டும்.
(ii) கணக்கேடுகளில் இதுவரை பதியப்படாத ரூ.10,000 மதிப்புள்ள முதலீடுகளை கணக்கில் கொண்டுவர வேண்டும்.
(iii) இயந்திரம் மதிப்பு ரூ.14,000 மற்றும் அறைகலன் மதிப்பு ரூ.12,000 குறைக்க வேண்டும்.
(iv) பற்பல கடனீந்தோரில் ரூ.16,000 போக்கெழுத வேண்டும்.
குறிப்பேட்டுப் பதிவுகள் மற்றும் மறு மதிப்பீட்டுக் கணக்கினைத் தயார் செய்யவும்.
1.
நிதிநிலை அறிக்கைகள் வியாபார நிறுவனத்தின் இயக்க முடிவுகள் மற்றும் நிதிநிலையை வெளிப்படுத்துகின்றன. பல்வேறு பயனீட்டாளர்களுக்கான நிதிநிலை அறிக்கைகளின் முக்கியத்துவம் பின்வருமாறு:
1) மேலாண்மைக்கு : நிதி நிலை அறிக்கைகளானது முடிவுகளை எடுப்பதற்கும் மற்றும் பல்வேறு துறைகளில் வணிக நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கும் தேவையானத் தகவல்களை மேலாண்மைக்குத் தருகிறது.
2) பங்குதாரர்களுக்கு: வணிக நிறுவனம் வளர்ச்சிக்கு தேவையான ஆதாரங்களைக் கொண்டுள்ளதா மற்றும் தொடர்ந்து பங்குதாரராக நீடிப்பதா என்பதை முடிவு செய்யவும் பங்குதாரர்களுக்கு நிதிநிலை அறிக்கைகள் உதவியாக இருக்கின்றன.
3) எதிர்கால முதலீட்டாளர்களுக்கு: பத்திரங்களை மதிப்பீடு செய்து அவற்றை பிற தொழிலமைப்புகளின் பத்திரங்களோடு ஒப்பீடு செய்து அதனடிப்படையில் தங்கள் முதலீடுகள் மீதான முடிவினை எடுப்பதற்கு நிதிநிலை அறிக்கைகள் பயனுள்ளதாக இருக்கின்றன.
2.
கூட்டாண்மை நிறுவனங்களில் கூட்டாளிகளின் பரஸ்பர உரிமைகளில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் நற்பெயர் மதிப்பீடுச் செய்வதற்கான தேவை எழுகிறது. கூட்டாளிகளின் உரிமைகளைக் காக்கும் பொருட்டு பின்வரும் சூழ்நிலைகளில் நற்பெயரை மதிப்படுவதற்கான தேவை எழுகிறது:
(i) இலாபப் பகிர்வு விகிதத்தில் மற்றம் ஏற்படும்போது
(ii) கூட்டாண்மை நிறுவனத்தில் புதிய கூட்டாளி சேர்க்கப்படும்போது
(iii) கூட்டாண்மை நிறுவனத்தில் இருக்கும் கூட்டாளி ஒருவர் நிறுவனத்தை விட்டு விலகும் போது அல்லது கூட்டாளி ஒருவர் இறக்கும் போது
(iv) ஒரு கூட்டாண்மை நிறுவனத்தை கலைக்கும் போது
3.
1) தனியார் ஒதுக்கீடு:
தனியார் ஒதுக்கு என்பது நிருமத்தால், ஒரு குறிப்பிட்ட நபர்களின் குழுவிற்கு (பொது வெளியீடாக அல்லாமல்) நேர்மைப் பங்குகளுக்கான முனைவு அல்லது தனியார் ஒதுக்கு அழைப்பு கடிதம் விடுப்பதாகும். இது, இந்திய நிறுமச்சட்டம், 2013, பிரிவு 42-ல் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதாக இருக்க வேண்டும்.
2) உரிமை வெளியீடு:
நிறுமத்தில் ஏற்கனவே உள்ள பங்குதாரர்களுக்கு, முனைவு கடிதம் மூலம் பங்குகளை ஒதுக்கீடு செய்வது உரிமை வெளியீடு ஆகும்.
3) மேலூதிய பங்கு வெளியீடு:
நிறுமத்தில் ஏற்கனவே பங்குதாரர்களாக உள்ளவர்களுக்கு பகிர்ந்துதரா இலாபத்திலிருந்து இலவசமாக நேர்மைப் பங்குகளை வெளியிடுவது மேலூதிய பங்கு வெளியீடு எனப்படும்.
4.
(i) கூட்டாண்மை நிறுவனத்திலிருந்து கூட்டாளி ஒருவர் விலகும் போது, நற்பெயர், பகிர்ந்து தரா இலாபம் அல்லது நாட்டம், மறுமதிப்பீட்டு இலாபம் அல்லது நாட்டம், கூட்டாளியின் ஊதியம் ஆகியவற்றை சரிகட்டிய பிறகு கிடைக்கக்கூடிய முதல் கணக்கின் இருப்பு அக்கூட்டாளிக்கு செலுத்தப்பட வேண்டும்
(ii) கூட்டாண்மை ஒப்பாவனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அவருக்கு சேர வேண்டிய தொகையைத் தீர்வுச் செய்ய வேண்டும். பின்வரும் வழிகளில் விலகும் கூட்டாளிக்கு செலுத்த வேண்டிய தொகை தீர்க்கப்படலாம்
1. அவருக்கு சேரவேண்டிய முழுத் தொகையையும் ரொக்கமாக உடனடியாக செலுத்தலாம்
2. மொத்தத் தொகையும் கூட்டாளியின் கடன் கணக்கிற்கு மாற்றி விடலாம்
3. பாதித் தொகையை உடனடியாக ரொக்கமாகவும் மீதித் தொகையை கடன் கணக்கிற்கு மாற்றி விடலாம்
5.
(i) பொருள் : விகிதப் பகுப்பாய்வு என்பது பல்வேறு விகிதங்களைக் கணக்கிடுவதன் வாயிலாக நிதிநிலை அறிக்கைகளை பகுப்பாய்வு செய்தலை உள்ளடக்கிய ஒரு கருவியாகும்.
(ii) இதில், வெவ்வேறு விகிதங்கள் கணக்கிடுதல் மற்றும் பகுப்பாய்வு செய்வதன் அடிப்படையில் முடிவுகள் தீர்மானிக்கப்படுகின்றன.
(iii) இலக்கணம் : மையர்ஸ் அவர்களின் கூற்றுப்படி விகிதப் பகுப்பாய்வு என்பது "வணிகத்தில் உள்ள பல்வேறு நிதியியல் காரணிகளுக்கிடையேயான தொடர்பினைப் பகுப்பாய்வு செய்வதாகும்.
6.
முதலீடுகளின் சந்தை மதிப்பில் ஏற்படும் இறக்கத்தை சரிக்கட்டுவதற்காக முதலீட்டு மாறுபடும் நிதி இலாபத்திலிருந்து உருவாக்கப்படுகிறது உருவாக்கப்படுகிறது. முதலீடுகளின் சந்தை மதிப்பு, ஏட்டு மதிப்பிற்கு சமமாகவோ அல்லது அதிகமாகவோ இருப்பின் முதலீட்டு மாறுபடும் நிதி முழுவதும் பழைய கூட்டாளிகளின் முதல் கணக்கிற்கு பழைய இலாப விகிதத்தில் மாற்றப்படுகிறது. முதலீடுகளின் சந்தை மதிப்பு, ஈட்டு மதிப்பிற்கு குறைவாக இருப்பின், அதன் வேறுபாடு முதலீட்டு மாறுபடும் நிதியிலிருந்து கழிக்கப்பட்டு, மீதமுள்ள தொகை பழைய கூட்டாளிகளின் முதல் கணக்கிற்கு பழைய இலாப விகிதத்தில் மாற்றப்படுகிறது.
7.
| நாள் | விவரம் | பே.ப. எண் |
பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| 2017 | (i) ஜானகியின் நிறைவேற்றாளர் க/கு | ப | 1,40,000 | ||
| டிசம்பர் 31 | வங்கி க/கு | 1,40,000 | |||
| (சேர வேண்டியத் தொகை உடனடியாகச் செலுத்தப்பட்டது) | |||||
| " | (ii) ஜானகியின் நிறைவேற்றாளார் க/கு | ப | 1,40,000 | ||
| ஜானகியின் நிறைவேற்றாளார் கடன் க/கு | 1,40,000 | ||||
| (சேர வேண்டியத் தொகை கடன் கணக்கிற்கு மாற்றப்பட்டது) | |||||
| " | (iii) ஜானகியின் நிறைவேற்றாளார் க/கு | ப | 1,40,000 | ||
| வங்கி க/கு | 75,000 | ||||
| ஜானகியின் நிறைவேற்றாளார் கடன் க/கு | 65,000 | ||||
| (ரூ75,000 செலுத்தப்பட்டு, மீதித் தொகை கடன் கணக்கிற்கு மாற்றப்பட்டது) |
8.
1) விலை நிலை மாற்றங்களை பொருட்படுத்துவதில்லை:
விலை நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் நிதிநிலை அறிக்கைகள் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. எனவே, அவை நடப்பு நிலைமையை வெளிப்படுத்தாமல் போகலாம்.
2) நிலைத்தன்மை குறைவு:
பல்வேறு நிறுவனங்கள், பல்வேறு கணக்கியல் முறைகளை பின்பற்றுகின்றன. எனவே இரண்டு தொழிலமைப்புகளை ஒப்பீடு செய்வது கடினமாகும்.
3) தனிப்பட்ட முடிவுகளினால் பாதிக்கப்படுகிறது:
நிதிநிலை அறிக்கைகள் தயாரிப்பு என்பது தனிநபரின் முடிவுக்குட்பட்டது. எனவே, இவை ஒருதலைப்பட்சமானதாக இருக்கலாம்.
9.
நிலையறிக்கை தயாரித்து இலாபம் அல்லது நட்டம் கண்டறிவதற்கான படிநிலைகள் பின்வருமாறு:
1) ஆண்டு தொடக்கத்தில் உள்ள சொத்துகள் மற்றும் பொறுப்புகளின் இருப்புகளைக் கொண்டு தொடக்க நிலையறிக்கை தயாரித்து தொடக்க முதலைக் கண்டறியவும்.
2) கணக்காண்டின் இறுதியில் தேய்மானம், வாராக்கடன், கொடுபட வேண்டிய மற்றும் முன்கூட்டி செலுத்திய செலவுகள், பெற வேண்டிய வருமானம், முதல் மீது வட்டி, எடுப்பு மீது வட்டி போன்றவற்றிக்குத் தேவையான சரிக்கட்டுதல்களைச் செய்தபின் இறுதி நிலையறிக்கை தயாரித்து இறுதிமுதல் கண்டறியவும்.
3) இறுதி முதலுடன் எடுப்புத் தொகையினை (பணம் மற்றும் பொருட்கள் இரண்டும்) கூட்டவும்.
4) சரிகட்டப்பட்ட இறுதிமுதலைக் கண்டறிய கூடுதல் முதலைக் கழிக்கவும்.
5) சரிகட்டப்பட்ட இறுதி முதலிலிருந்து தொடக்க முதலைக் கழித்து இலாபம் அல்லது நட்டத்தினைக் கண்டறியவும்.
அ) சரிகட்டப்பட்ட இறுதி முதலானது தொடக்க விட அதிகமானதாக இருந்தால், அது இலாபத்தைக் குறிக்கும்.
ஆ) சரிக்கட்டப்பட்ட இறுதி முதலானது தொடக்க முதலை விட குறைவானதாக இருந்தால், அது நட்டத்தைக் குறிக்கும்.
10.
(i) ஏட்டில் உள்ள நற்பெயர் தொகை முழுவதையும் போக்கெழுவது
| நாள் | விவரம் | பே.ப.எ | பற்று ரூ. | வரவு ரூ. | |
|---|---|---|---|---|---|
| 2018 | சதீஷின் முதல் க/கு (4/7) | ப | 20,000 | ||
| ஏப்ரல் 1 | சுதனின் முதல் க/கு (3/7) | ப | 15,000 | ||
| நற்பெயர் க/கு | 35,000 | ||||
| (ஏட்டில் உள்ள நற்பெயரைப் போக்கெழுதியது ) |
(ii) ஏட்டில் உள்ள நற்பெயர் தொகையில் ரூ.21,000 மட்டும் போக்கெழுதுவது
| நாள் | விவரம் | பே.ப.எ | பற்று ரூ. | வரவு ரூ. | |
|---|---|---|---|---|---|
| 2018 | சதீஷின் முதல் க/கு (21,000 x 4/7) | ப | 12,000 | ||
| ஏப்ரல் 1 | சுதனின் முதல் க/கு (21,000 x 3/7) | 9,000 | |||
| நற்பெயர் க/கு | 21,000 | ||||
| (ஏட்டில் உள்ள நற்பெயரில் ரூ.21,000 போக்கெழுவது ) |
11.
| செலவுகள் | ரூ. | வருமானம் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|
| சந்தா | 2,250 | |||
| கூட்டுக: பெறவேண்டிய சந்தா | 250 | 2,500 |
2017-18 ஆம் ஆண்டுக்கான மொத்த சந்தா = 2,500
(100 உறுப்பினர்கள் ரூ.25 வீதம்)
கழிக்க: 10 உறுப்பினர்களிடம் பெறவேண்டியது = 250
( 100 x 25) ________
பெற்ற சந்தா 2,250
| பொறுப்புகள் | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|
| முன்கூட்டிப்பெற்ற சந்தா (ரூ.25x4) |
100 | பெறவேண்டிய சந்தா (ரூ.25x10) |
250 |
12.
13.
சரக்கிருப்பு மாற்று காலம் என்பது சரக்கிருப்பை விற்பனை செய்வதற்கு எடுத்துக் கொள்ளப்படும் காலம் ஆகும். குறுகிய சரக்கிருப்பு மாற்று காலம், சரக்கிருப்பு மேலாண்மையில் அதிக செயல்திறனை குறிப்பிடுகிறது.
சரக்கிருப்பு மாற்று காலம் (நாட்களில்)

14.
நற்பெயர் = சராசரி இலாபம் x கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை
= 15,000 x 2
நற்பெயர் = ரூ.30,000
15.
மொத்த எடுப்புத் தொகை = ரூ.2,500 x 12 = ரூ.30,000
(i) எடுப்புகள் ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் எடுத்திருந்தால்:
சராசரி காலம் = 6.5
= ரூ.30,000 x \(\frac { 4 }{ 100 } \times \frac { 6.5 }{ 12 } \)
= ரூ.650
(ii) எடுப்புகள் ஒவ்வொரு மாத இடையிலும் எடுத்திருந்தால்:
சராசரி காலம் = 6
= ரூ.30,000 x \(\frac { 4 }{ 100 } \times \frac { 6 }{ 12 } \)
= ரூ.600
(iii) எடுப்புகள் ஒவ்வொரு மாத இறுதியிலும் எடுத்திருந்தால்
சராசரி காலம் = 5.5
= ரூ.30,000 x \(\frac { 4 }{ 100 } \times \frac { 5.5 }{ 12 } \)
= ரூ.550
16.
| விவரம் | சுபா ரூ. |
சுதா ரூ. |
|---|---|---|
| 2018, டிசம்பர் 31 அன்று முதல் | 40,000 | 60,000 |
| கூட்டுக: எடுப்புகள் | 8,000 | 10,000 |
| 48,000 | 70,000 | |
| கழிக்க: இலாபம் ஏற்கனவே வரவு வைத்தது | 12,000 | 18,000 |
| 2018, ஜனவரி | 36,000 | 52,000 |
முதல் மீது வட்டி கணக்கிடுதல்:
சுபா:
தொடக்க முதல் = 36,000 x \(\frac {5}{100}\) = ரூ.1,800
சுதா:
தொடக்க முதல் = 52,000 x \(\frac {5}{100}\) = ரூ.2,600
(குறிப்பு: இலாபப்பகிர்வு வீதம்
சுபா = 30,000 x \(\frac {2}{5}\) = ரூ.12,000
சுதா = 30,000 x \(\frac {3}{5}\) = ரூ.18,000)
17.
| விவரம் | பிருந்தா | பிரவீனா | ||
|---|---|---|---|---|
| ரூ. | ரூ. | ரூ. | ரூ. | |
| 2017, டிசம்பர் 31 அன்று முதல் | 30,000 | 40,000 | ||
| கூட்டுக: எடுப்புகள் | 5,000 | 7,000 | ||
| 35,000 | 47,000 | |||
| கழிக்க: | ||||
| கூடுதல் முதல் | 6,000 | 10,000 | ||
| இலாபம் ஏற்கனவே வரவு வைத்தது | 9,000 | 15,000 | 12,000 | 22,000 |
| 2017, ஜனவரி 1 அன்று முதல் | 20,000 | 25,000 | ||
இலாபம் வரவு வைத்தது = ஈட்டிய இலாபம் ரூ.31,000 – இருப்புநிலைக் குறிப்பின் படியான இலாப இருப்பு ரூ.10,000 = ரூ.21,000. இந்தத்தொகை 3:4 என்ற இலாபப் பகிர்வு விகிதத்தில் கூட்டாளிகளுக்கிடையே பகிர்ந்தளிக்கப்படுகிறது.
பிருந்தா:


18.
அ) முந்தைய ஆண்டின் இலாபத்தை அடிப்படையாகக் கொண்டு இலாபத்தைப் பகிர்ந்தளித்தால்
ரித்திகாவின் மூன்று மாதங்களுக்கான இலாபப் பங்கு =\(30,000\times \frac { 3 }{ 12 } \times \frac { 1 }{ 3 } =\) ரூ.2 ,500
| நாள் | விவரம் | பே.ப.எ. | பற்று ரூ. |
வரவு ரூ. |
|---|---|---|---|---|
| 2019 மார்ச் 31 | இலாப நட்ட அனாமத்து க/கு ப | 2,500 | ||
| ரித்திகா முதல் க/கு | 2,500 | |||
| (ரித்திகாவின் நடப்பாண்டின் இலாபத்தின் பங்கு அவருடைய கணக்கில் வரவு வைக்கப்பட்டது) |
ஆ) கடந்த மூன்று ஆண்டுகளின் சராசரி இலாபத்தை அடிப்படையாகக் கொண்டு இலாபத்தைப் பகிர்ந்தளிக்க வேண்டும்.
சராசரி இலாபம் =\(\frac { 5,000+10,000+30,000 }{ 3 } =15,000\)
ரித்திகாவின் மூன்று மாதங்களுக்கான இலாபப் பங்கு \(=15,000\times \frac { 3 }{ 12 } \times \frac { 1 }{ 3 } \) =ரூ.1,250
| நாள் | விவரம் | பே.ப.எ. | பற்று ரூ. |
வரவு ரூ. |
|---|---|---|---|---|
| 2019 மார்ச் 31 | இலாப நட்ட அனாமத்து க/கு ப | 1,250 | ||
| ரித்திகா முதல் க/கு | 1,250 | |||
| (ரித்திகாவின் இலாபத்தில் பங்கு அவருடைய கணக்கில் வரவு வைக்கப்பட்டது) |
19.
| நாள் | விவரம் | பே. ப.எ |
பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| நேர்மைப் பங்கு முதல் க/கு (200 × 10) | ப | 2,000 | |||
| நேர்மைப் பங்கு இறுதி அழைப்பு க/கு (200 × 3) | 600 | ||||
| பங்கு ஒறுப்பிழப்பு க/கு (200 × 7) | 1,400 | ||||
| (200 பங்குகள் ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன) | |||||
| வங்கி க/கு (200 × 6) | ப | 1,200 | |||
| பங்கு ஒறுப்பிழப்பு க/கு (200 × 4) | ப | 800 | |||
| நேர்மைப் பங்குமுதல் க/கு (200 × 10) | 2,000 | ||||
| (ஒறுப்பிழப்பு செய்த பங்குகள் மறுவெளியீடு செய்யப்பட்டன) | |||||
| பங்கு ஒறுப்பிழப்பு க/கு (1,400-800) | ப | 600 | |||
| முதலினக் காப்பு க/கு | 600 | ||||
| (பங்கு ஒறுப்பிழப்பு கணக்கு முதலினக் காப்பு கணக்கிற்கு மாற்றப்பட்டது) |
20.
| விவரம் | ரூ. |
|---|---|
| இறுதி முதல் (31.3.2019) | 1,90,000 |
| கூட்டுக: அவ்வாண்டின் எடுப்புகள் | 30,000 |
| 2,20,000 50,000 |
|
| கழிக்க: அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் | |
| சரிக்கட்டப்பட்ட இறுதி முதல் | 1,70,000 2,10,000 |
| கழிக்க: தொடக்க முதல் (1.4.2018) (இருப்புக் கட்டும் தொகை) | |
| 31.3.2019 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டின் நட்டம் | (-) 40,000 |
21.
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ. | வரவு ரூ. | |
|---|---|---|---|---|---|
| 2017 | இலாப நட்டப் பகிர்வு க/கு | ப | 20,000 | ||
| ஏப்ரல் 1 | பொதுக்காப்பு க/கு | ப | 5,000 | ||
| தொழிலாளர் ஈட்டு நிதி க/கு | ப | 15,000 | |||
| இரத்ன குமார் முதல் க/கு (40,000 x 3/5) | 24,000 | ||||
| ஆரோக்கியதாஸ் முதல் க/கு (40,000 x 2/5) | 16,000 | ||||
| (பகிர்ந்து தரா இலாபம் மற்றும் காப்பு பழைய கூட்டாளிகளின் முதல் கணக்குக்கு பழைய இலாப விகிதத்தில் மாற்றப்பட்டது) |
22.
கூட்டு சராசரி இலாப முறை கணக்கிடல்
| ஆண்டு | இலாபம் (அ) ரூ. | நிறைகள் (ஆ) | கூட்டு இலாபம் (அ x ஆ) ரூ. |
|---|---|---|---|
| 2015 | 20,000 | 1 | 20,000 |
| 2016 | 22,000 | 2 | 44,000 |
| 2017 | 24,000 | 3 | 72,000 |
| 2018 | 28,000 | 4 | 1,12,000 |
| மொத்தம் | 10 | 2,48,000 |
=\(\frac { 2,48,000 }{ 10 } \)=ரூ.24,800
நற்பெயர் = கூட்டு சராசரி இலாபம் x கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை
= 24,800 × 3 = ரூ.74,400
23.
| செலவுகள் | ரூ | ரூ | வருமானம் | ரூ | ரூ - |
|---|---|---|---|---|---|
| எழுதுபொருள்கள் பயன்படுத்தியது | |||||
| தொடக்க இருப்பு | 300 | ||||
| கூட்டுக: கொள்முதல் | 1,500 | ||||
| 1,800 | |||||
| கழிக்க: இறுதி இருப்பு | 200 | 1,600 |
| பொறுப்புகள் | ரூ | சொத்துகள் | ரூ |
|---|---|---|---|
| எழுதுபொருள்கள் இருப்பு | 200 |
24.
கூட்டாண்மை நிறுவனத்திலிருந்து கூட்டாளி ஒருவர் விலகும் போது, நற்பெயர், பகிர்ந்து தரா இலாபம் அல்லது நட்டம், மறுமதிப்பீட்டு இலாபம் அல்லது நட்டம், கூட்டாளியின் ஊதியம் ஆகியவற்றை சரிக்கட்டிய பிறகு கிடைக்கக் கூடிய முதல் கணக்கின் இருப்பு அக்கூட்டாளிக்கு செலுத்தப்பட வேண்டும். கூட்டாண்மை ஒப்பாவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அவருக்கு சேர வேண்டிய தொகையைத் தீர்வு செய்ய வேண்டும்.
பின்வரும் வழிகளில் விலகும் கூட்டாளிக்கு செலுத்த வேண்டிய தொகை தீர்க்கப்படலாம்
(i) அவருக்கு சேரவேண்டிய முழுத் தொகையையும் ரொக்கமாக உடனடியாக செலுத்தலாம்
(ii) மொத்தத் தொகையையும் கூட்டாளியின் கடன் கணக்கிற்கு மாற்றிவிடலாம்.
(iii) பாதித் தொகையை உடனடியாக ரொக்கமாகவும் மீதித் தொகையை கடன் கணக்கிற்கு மாற்றிவிடலாம்
25.
| நாள் | விவரம் |
|
பே.ப. எண் |
பற்று ரூ. |
வரவு |
|---|---|---|---|---|---|
| கட்டடம் க/கு | ப | 40,000 | |||
| முதலீடுகள் க/கு | ப | 10,000 | |||
| பற்பல கடனீந்தோர் க/கு | ப | 16,000 | |||
| மறுமதிப்பீட்டுக் க/கு (சரக்கிருப்பின் மதிப்பு அதிகரிப்பு, பதிவு பெறாமலுள்ள முதலீடுகள் பதிவு செய்யப்பட்டது மற்றும் பற்பல கடனீந்தோர் போக்கெழுதியது) |
66,000 | ||||
| மறுமதிப்பீட்டு க/கு | ப | 26,000 | |||
| இயந்திரம் க/கு | 14,000 | ||||
| அறைகலன் க/கு (இயந்திரம் மற்றும் அறைகலனின் மதிப்பு குறைப்பது) |
12,000 | ||||
| மறுமதிப்பீடு க/கு | ப | 40,000 | |||
| சீனு முதல் க/கு (5/8) | 25,000 | ||||
| சிவா முதல் க/கு (3/8) (மறுமதிப்பீட்டு இலாபம் முதல் கணக்கிற்கு மாற்றப்பட்டது) |
15,000 |
| விவரம் | ரூ. | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|---|
| இயந்திரம் க/கு | 14,000 | கட்டடம் க/கு | 40,000 | |
| அறைகலன் | 12,000 | முதலீடுகள் க/கு | 10,000 | |
| மறுமதிப்பீட்டு இலாபம்: | பற்பல கடனீந்தோர் க/கு | 16,000 | ||
| சீனு முதல் க/கு (40,000 x 5/8) |
25,000 | |||
| சிவா முதல் க/கு (40,000 x 3/8) |
15,000 | |||
| 40,000 | ||||
| 66,000 | 66,000 |
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set C
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards