12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/03/2021
12ஆம் வகுப்பு உயிரியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021 - 12th Standard Tamil Medium Biology Reduced Syllabus Annual Exam Model Question Paper - 2021
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
இந்தியாவின் முக்கிய மாம்பழ வகைகள் கூறு?
2.
மறுவேறுபாடுறுதல் (Redifferentiation) மற்றும் வேறுபாடிழத்தல் (Dedifferentiation) வேறுபடுத்துக.
3.
விந்துக்குழல் தடை, கருக்குழல் தடை வேறுபடுத்துக.
4.
தன் கருவுறுதல் என்றால் என்ன?
5.
கடலின் ஆழமான அடுக்குகளில் பசும்பாசிகள் பொதுவாகக் காணப்படுவதில்லை. ஏதேனும் ஒரு காரணம் தருக.
6.
கீழ்க்கண்டவற்றை வரையறு.
அ) ஓரிடத் தன்மை (endemism)
ஆ) சிற்றினச் செழுமை (Species richness)
7.
PCR-ன் ஒவ்வொரு சுற்றிலும் எத்தனை முன்னோடிகள் தேவைப்படுகின்றன? PCRல் மற்றும் டி.என்.ஏ பாலிமரேஸ் பங்கு யாது? PCR சுற்றில் பயன்படுத்தப்படும் டி.என்.ஏ பாலிமரேஸ் எந்த உயிரின மூலத்திலிருந்து பெறப்படுகின்றது?
8.
வேறுபடுத்துக – வார்ப்புரு இழை மற்றும் குறியீட்டு இழை
9.
தகுந்த எடுத்துக்காட்டுடன் இரண்டு தரைஒட்டிய தண்டின் மாற்றுருக்களைப் பட்டியலிடுக.
10.
இந்தியாவில் உயிரியல் பல்வகைத் தன்மையின் பரிணாமத்தை விவரி.
11.
இரு ஒடுங்கு தன்மையுள்ள ஆட்டோசோம் மரபணுக்கள் a மற்றும் b உடைய வேறுபட்ட காரணி நிலை -ஒரு இரு இணை ஒடுங்கு பெற்றோரோடு கலப்பு செய்யப்படுகிறது அவற்றிற்கான புறத்தோற்ற விகிதத்தை பின் வரும் சூழலில் கண்டறி.
12.
நீர் மாசுபாட்டினால் உயிரினங்களில் ஏற்படும் விளைவுகள் யாவை?
13.
உயிரிகளில் காணப்படும் பல்வேறு வகையான ஒருங்கிணைவு முறைகளை விவரி.
14.
நறுமணப் பொருட்களின் அரசன், அரசி யாவை ? அவற்றை விளக்கி, அவற்றின் பயன்களையும் விளக்குக.
15.
கலப்பின வீரியம் - குறிப்பு வரைக
16.
வழிமுறை வளர்ச்சியின் பல்வேறு நிலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை முறைப்படி வரிசைப்படுத்தி, வழிமுறை வளர்ச்சியின் வகையைக் கண்டறிந்து விளக்குக.
நாணற் சதுப்பு நிலை, தாவரமிதவை உயிரிநிலை, புதர்செடி நிலை, நீருள் மூழ்கிய தாவரநிலை, காடுநிலை, நீருள் மூழ்கி மிதக்கும் நிலை, சதுப்பு புல்வெளி நிலை.
17.
Bt பருத்தியின் நன்மை, தீமைகளை எழுதுக.
18.
பசுங்கணிக மரபணு சார்ந்த பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுடன் வெளிக்கொணர்க.
19.
இருவிதையிலை மற்றும் ஒருவிதையிலை விதைகளின் அமைப்பை வேறுபடுத்துக.
20.
பின்வரும் கூற்று (அ) அறிக்கையை வாசித்து சரியான விடையை தேர்வு செய்து (A) மற்றும் (B) யில் நிரப்புக.
தொல்லுயிர் படிவ எரிபொருளாக சேமிக்கப்படும் கார்பன் __________ (A) _________ மற்றும் உயிர்க்கோளத்தில் சேமிக்கப்படும் கார்பன் _______ (B) ______.
சரியான ஒன்றை தேர்வு செய்க.
| A | B |
| பழுப்பு கார்பன் | கருமை கார்பன் |
| A | B |
| சாம்பல் கார்பன் | பசுமைக் கார்பன் |
| A | B |
| கருமை கார்பன் | சாம்பல் கார்பன் |
| A | B |
| பசுமை கார்பன் | நீல கார்பன் |
21.
குர்கமின் எதிலிருந்து பெறப்படும்?
மஞ்சள்
மிளகாய்
ஏலக்காய்
புளி
22.
பின்வரும் எந்த தொழில்நுட்பம் மருத்துவ சிகிச்சைக்கான ஹார்மோன்கள் மற்றும் புரதத்தினை அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றது.
விலங்கு நகலாக்கம்
PCR
எலைசா
டி.என்.ஏ மறுசேர்க்கை
23.
பின்வருவனவற்றில் எது ஒட்டுண்ணி வாழ்க்கையுடன் தொடர்பற்றது.
அக்கேஷியா, டுரான்தா, கஸ்குட்டா
பெலனோஃபோரா, ஒரபாஞ்சி, ரெஃப்லீசியா போன்றவை உயர் தாவரங்களின் மீது காணப்படுதல்.
குடுவைத்தாவரம் பூச்சியுடன்
விஸ்கம் மற்றும் லொரான்தஸ் - தண்டு ஒட்டுண்ணி
24.
குழந்தையின் _______ மாதகாலம் வரை தாய்ப்பால் மட்டும் போதுமானது
5
12
6
3
25.
பாலினச் சமமின்மைப் பட்டியலில் 187 நாடுகளில் நம்நாடு_______ இடத்தை பெற்றுள்ளது.
135
153
115
151
26.
உயிரினங்களின் சிவப்பு பட்டியலை வெளியிட்டுள்ள நிறுவனம் ____.
WWF
IUCN
ZSI
UNEP
27.
கீழ்கண்ட எந்த இரண்டு சிற்றினங்களைக் கலப்பு செய்து அதிக இனிப்புத்தன்மை, அதிக விளைச்சல், தடித்த தண்டு மற்றும் வட இந்தியாவில் கரும்பு பயிரிடப்படும் இடங்களில் வளரும் தன்மையுடைய இரகங்கள் பெறப்பட்டன.
சக்காரம் ரோபோஸ்டம் மற்றும் சக்காரம் அஃபிசினாரம்
சக்காரம் பார்பெரி மற்றும் சக்காரம் அஃபிசினாரம்
சக்காரம் சைனென்ஸ் மற்றும் சக்காரம் அஃபிசினாரம்
சக்காரம் பார்பெரி மற்றும் சக்காரம் ரோபோஸ்டம்
28.
மரத்தீவனத்திற்காக வளர்க்கப்படுகின்ற தாவரம் எது?
செஸ்பேனியா மற்றும் அக்கேசியா
சொலானம் மற்றும் குரோட்டலேரியா
கிளைட்டோரியா மற்றும் பிகோனியா
தேக்கு மற்றும் சந்தனம்
29.
தொடக்க மற்றும் பின்தங்கும் டி.என்.ஏ இழைகள் உருவாக்கத்தில் உள்ள வேறுபாடு என்ன?
டி.என்.ஏ மூலக்கூறின் 5 முனையில் மட்டுமே இரட்டிப்படைதல் தோன்றும்.
டி.என்.ஏ லைகேஸ் நொதி 3'➝ 5' திசையிலேயே செயல்படும்.
டி.என்.ஏ பாலிமரேஸ் நொதி, வளர்ந்து வரும் இழையின் 3' முனைப் பகுதியில் மட்டுமே புதிய நியூக்ளியோடைடுகளை இணைக்கும்.
ஹெலிகேஸ் நொதிகள் மற்றும் ஒற்றை இழை இணைப்புப் புரதம் ஆகியவை 5' முனையிலேயே செயல்படும்.
30.
மறுகூட்டிணைவு நிகழ்விரைவு 0.09 என இருந்தால், A மற்றும் B என்ற இரு அல்லீல்களை பிரிக்கும் வரைபட அலகு எதுவாக இருக்கும்?
900 cM
90 cM
9 cM
0.9 cM
31.
ஒரே குரோமோசோமில் G S L H என்ற மரபணுக்கள் அமைந்துள்ளன. மறுகூட்டிணைவு விழுக்காடு L க்கும் G க்கும் இடையே 12 %, S க்கும் L க்கும் இடையே 50%, H க்கும் S க்கும் இடையே 20 % எனில் மரபணுக்களின் சரியான
வரிசையை எழுதுக.
G H S L
S H G L
S G H L
H S L G
32.
முப்புள்ளி சோதனைக் கலப்பின் மூலம் துல்லியமான மரபணு வரைபடம் வரைய முடியும் ஏனெனில் இதன் அதிகரிப்பால்
ஒற்றைக் குறுக்கேற்றம் சாத்தியமாகிறது
இரட்டைக் குறுக்கேற்றம் சாத்தியமாகிறது
பல் குறுக்கேற்றம் சாத்தியமாகிறது
மறுகூட்டிணைவு நிகழ்விரைவு சாத்தியமாகிறது
33.
பின்வரும் எந்தக் கூற்றுகள் சரியானவை?
1. முழுமையற்ற பிணைப்பினால் பெற்றோர் சேர்க்கை வழித்தோன்றல்கள் மட்டுமே வெளிப்படுத்துகின்றன.
2. முழுமையான பிணைப்பில் பிணைந்த மரபணுக்கள் குறுக்கேற்றத்தை வெளிப்படுத்துகின்றன.
3. முழுமையற்ற பிணைப்பில் இரண்டு பிணைந்த மரபணுக்கள் பிரிவடையலாம்.
4. முழுமையான பிணைப்பில் குறுக்கேற்றம் நடைபெறுவதில்லை.
1 மற்றும் 2
2 மற்றும் 3
3 மற்றும் 4
1 மற்றும் 4
34.
A மற்றும் B என்ற மரபணுக்கள் குரோமோசோமின் மீது 10 cM தொலைவில் அமைந்துள்ளது. ஒரு மாற்றுப்பண்பு கருமுட்டை AB/ab என்பதோடு ab/ ab யை சோதனைக் கலப்பு செய்தால் மொத்த 100 வழித்தோன்றல்களில் ஒவ்வொரு வழித்தோன்றலிலும் எத்தனை இனங்களை எதிர்பார்க்கலாம்
25 AB, 25 ab, 25 Ab, 25 aB
10 AB, 10 ab
45 AB, 45 ab
45 AB, 45 ab, 5 Ab, 5 aB
35.
ஓசோன் அடுக்கை நம்மால் பார்க்க முடியுமா?
36.
ஈரப்பதம் என்றால் என்ன? அதன் வகைகளை பற்றி எழுதுக.
37.
ட்ரைக்கோடெர்மா (பூஞ்சை) அஸ்பர்ஜில்லஸ் பூஞ்சையின் வளர்ச்சியை தடுக்கிறது. ஏன்? அமென்சாலிசம் என்றால் என்ன?
38.
வைரஸ் அற்ற தாவரங்களை உருவாக்குவது ஏன் அவசியம்?
39.
மூல இனச்செல் அடுக்குகள் யாவை? அவற்றிலிருந்து உருவாகும் உறுப்புகள் யாவை?
40.
41.
உயிர் உரங்களாக நுண்ணுயிரிகளின் பங்கினை நியாயப்படுத்துக.
42.
கீழ்க்கண்ட அட்டவணையை நிரப்புக.
| நோய்கள் | நோய்க்காரணி | அறிகுறிகள் |
| அஸ்காரியாசிஸ் | அஸ்காரிஸ் | |
| டிரைகோஃபைட்டான் | உடலின் பல்வேறு உறுப்புகளில் வறண்ட, செதில் புண்கள் காணப்படுதல். |
|
| டைபாய்டு | அதிக காய்ச்சல், வலுவிழத்தல், தலைவலி, வயிறுவலி மற்றும் மலச்சிக்கல். | |
| நிமோனியா |
43.
அனைத்து சூழல்மண்டலங்களிலும் பொதுவாக காணப்படும் உணவுச்சங்கிலியின் பெயரை கண்டறிந்து விளக்குக. அதன் முக்கியத்துவத்தை எழுதுக.
1.
அல்போன்ஸா, பங்கனப்பள்ளி, நீலம், மல்கோவா
2.
| மறுவேறுபாடுறுதல் | வேறுபாடிழத்தல் |
|---|---|
| ஏற்கனவே வேறுபாடற்ற ஒரு செல் மேலும் வேறுபாடுற்று மற்றொரு செல்லாக மாற்றமடைதல் ஆகும். | முதிர்ச்சி அடைந்த செல்கள் மீண்டும் ஆக்குத்திசுவாக மாறிக் கேலஸ் திசுவை உருவாக்கும் நிகழ்ச்சி. |
3.
| கருக்குழல் | விந்துக்குழல் தடை | ||
| 1. | அறுவைச்சிகிச்சையால் பெண்களில் கருத்தரித்தலைத் தடுப்பது | 1. | அறுவைச்சிகிச்சையால் ஆண் இனப்பெருக்கத் திறனைத் தடுப்பது |
| 2. | வயிற்றுப்பகுதி வெட்டு மூலமாகவோ, கலவிக் கால்வாய் வழியாகவோ அண்ட நாளங்கள் வெட்டப்படுகின்றன. வெட்டு முனைகள் முடிச்சிடப்படும். | 2. | விதைப்பைத் துளைவழி, விந்து நாளங்கள் வெட்டப்படும், வெட்டப்பட்ட பகுதிகள் முடிச்சுடப்படும். |
| 3. | கருவுறுதல் நிகழாது, கருவுற்ற முட்டை கருப்பையை அடையாது | 3. | சிறுநீர் வடிகுழாயில் விந்தணுக்கள் நுழையாது. |
4.
ஒரே உயிரியிலிருந்து ஆண் மற்றும் பெண் இனச்செல்கள் உருவாகி அவை இணைந்து கருமுட்டை உருவாகிறது.(எ.கா) செராஷியம்.
5.
(i) கடலின் ஆழமான அடுக்குகளில் போதுமான சூரிய வெளிச்சம் காணப்படாததால் அப்பகுதி மிகவும் இருண்டு காணப்படும்.
(ii) பசும்பாசிகளின் ஒளிச்சேர்க்கைக்கு சூரியஒளி அவசியமாதலால் இங்கு அவை காணப்படுவதில்லை.
(iii) பசும்பாசிகளின் வளர்ச்சிக்கு உவர்நீர் (சிறிது உப்புநீர்) தேவைப்படுகிறது இதுவும் இங்கே இல்லாத காரணத்தினால் பசும்பாசிகள் காணப்படுவதில்லை.
6.
அ) ஓரிடத் தன்மை என்பது ஒரு தாவரமோ அல்லது ஒரு விலங்கோ குறிப்பிட்ட பகுதியிலோ அல்லது குறிப்பிட்ட தீவிலோ காணப்படக் கூடிய தன்மை உடையது.
எ.கா. காட்டு கழுதை, இந்தியப் பாலைவனத்தில் மட்டும் காணப்படும் விலங்காகும்.
ஆ) ஒரு அலகு பரப்பளவில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் காணப்படும் சிற்றினங்களின் எண்ணிக்கை சிற்றினச்செழுமை எனப்படும்.
7.
PCR ன் ஒவ்வொரு சுற்றிலும் இரண்டு முன்னோடிகள் தேவைப்படுகின்றன. அவையாவன முன்னோக்கு மற்றும் பின்னோக்கு முன்னோடிகள்.
PCR ல் டி.என்.ஏ பாலிமரேஸின் பங்கு:
PCR ல் முதன்மை இணைப்பு அச்சு வார்ப்பு இழையைக் கொண்டு Taq டி.என்.ஏ பாலிமரேஸைப் பயன்படுத்தி டி.என்.ஏ உருவாக்கப்படுகிறது.
டி.என்.ஏ பாலிமரேஸ் நொதியின் மூலம்:
கொதிநிலையில் வாழும் பாக்டீரியா தெர்மசு அக்குவாட்டிக்கசில் இருந்து பெறப்படுகிறது.
8.
| வார்ப்புரு இழை | குறியீட்டு இழை | |
| 1 | இவ்விழை mRNA உருவாக்கத்திற்கு வார்ப்பாக செயல்படுகிறது. | இது வார்ப்புரு பணியைச் செய்வதில்லை |
| 2 | இதன் நைட்ரஜன் காரங்கள் mRNA இழைக்கு ஈடான இழைகளை உருவாக்குகிறது. | இதன் நைட்ரஜன் காரங்கள் அப்படியே mRNA இழையில் காணப்படுவதேயாகும். |
| 3 | இது 3' ⟶ 5' திசையில் கொண்டது | இது 5' ⟶ 3' திசையில் கொண்டது |
9.
1. மட்டநிலத்தண்டு (மியூசா பாரடிசியாக்கா)
2. தரையடிக்கிழங்கு (கொலகேஸியா)
3. கிழங்கு (சொலானம் டியூபராசம் )
4. குமிழ்த்தண்டு (அல்லியம் சீப்பா)
5. ஓடு தண்டு (சென்டெல்லா ஏசியாட்டிகா)
6. வேர் விடும் ஓடுதண்டு (மென்தா)
7. நீர் ஓடு தண்டு (ஐக்கார்னியா)
8. தரை கீழ் தண்டு (கிரைசான்திமம்)
9. சிறு குமிழ் மொட்டு (அகேவ்)
10.
1. தனித்தன்மை வாய்ந்த உயிரிய புவியமைப்பு கொண்ட இருப்பிடங்கள், பரந்த மாறுபாடுடைய காலநிலை கூறுகள், எண்ணிலடங்கா சுற்றுச் சூழல் பல்வகைத் தன்மை மற்றும் புவியியல் தன்மையை பெற்றிருப்பதால் இந்தியா செழிப்பு மிக்க நாடாக விளங்குகிறது.
2. நிலப்பரப்பின் அடிப்படையில் இந்தியா உலகின் 7வது பெரிய நாடாகும்.
3. இந்தியாவில் பல்வேறு வகையான சூழ்நிலை மண்டலங்கள், மலைகள், பள்ளத்தாக்குகள், பீடபூமிகள், கடற்கரைகள், சதுப்பு நிலங்கள், கழிமுகங்கள், பனிப்பாறைகள், புல்வெளிகள் மற்றும் ஆற்றுப் படுக்கைகள் போன்ற பல்வேறுபட்ட சுற்றுச்சூழல் மண்டலங்களை இந்தியா கொண்டுள்ளது.
4. 17 உயிரிய மிகைப் பல்வகைத் தன்மை கொண்ட உலக நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
5. மேலும் இந்தியாவில் 10 வெவ்வேறு உயிர் புவி மண்டலங்கள் உள்ளது. அவை இமயமலைக்கு அப்பாலுள்ள மண்டலம், இமயமலை, இந்திய பாலைவனம், குறைவறட்சி மண்டலம், மேற்கு தொடர்ச்சி மலை, டெக்கான் தீபகற்பம், கங்கை சமவெளி, வடகிழக்கு இந்தியா கடற்கரையோர மண்டலம், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்.
6. மேலும் இந்தியாவில் 89 தேசிய பூங்காக்கள் 492 வனவிலங்கு சரணாலயங்கள், 14 உயிர்கோள காப்பிடங்கள் உள்ளன.
7. 50 புலி காப்பகங்களை உள்ளடக்கியுள்ளது.
11.
அ) a மற்றும் b வெவ்வேறு ஆட்டோசோம்களில் காணப்படுகிறது.
ஆ) a மற்றும் b ஒரே ஆட்டோசோமில் பிணைந்து காணப்பட்டாலும் அவை குறுக்கேற்றம் நிகழ ஏதுவாக உள்ளது.
இ) a மற்றும் b ஒரே ஆட்டோசோமில் நெருங்கி பிணைந்து காணப்படுவதால் - அவற்றிற்கிடையே குறுக்கேற்றம் நடைபெறும் வாய்ப்பு இல்லை.
இதைப் புரிந்து கொள்ள பிணைப்பு, குறுக்கேற்றம் மற்றும் சார்பின்றி ஒதுங்குதல் காணப்படுகிறது.
a) F2 ஜீனாக்கம் மற்றும் புறத்தோற்ற விகிதம்
AaBb : Aabb : aaBb : aabb
1 : 1 : 1 : 1
b) குறுக்கேற்றம் நடத்தாலும் அதே முடிவுகளே கிடைக்கின்றன.
F2 ஜீனாக்கம் மற்றும் புறத்தோற்ற விகிதம்
AaBb : Aabb : aaBb : aabb
1 : 1 : 1 : 1
c) a மற்றும் b பிணைப்பு -குறுக்கேற்றம் இன்றி நடைபெறும் போது - வேறுபட்ட காரணி நிலை பெற்றோர் AB/ab -(அ) Ab/aB (டிரான்ஸ்)
மறுசேர்க்கை கேமிட்கள் உருவாகவில்லை - குறுக்கேற்றம் நடைபெறவில்லை
அது Ab &aB (50% ஒவ்வொன்றும்)
சோதனைக் கலப்பு
12.
1. நீரின் மேற்பரப்பில் உயிரினங்களில் ஒளி மற்றும் ஆக்சிஜன் நீரினுள் செல்வது தடுக்கப்படுகிறது.
2. இது உயிரிய ஆக்சிஜன் தேவையை அதிகரித்து இறப்பினை ஏற்படுத்துகின்றது.
3. மீன்களின் செவுள்களை அடைத்து கொள்கிறது நீர்வாழ் பறவைகளின் இறக்கைகளிலும் தடையினை ஏற்படுத்துகின்றன.
4. கெட்டுப்போன நீர் மற்றும் உணவினை எடுத்துக் கொள்வதால் கல்லீரல் அழற்சி டைபாய்டு போன்ற நோய்களால் மனிதர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
5. குடிநீரின் அதிகப்படியான புளோரைடு புளோரோசிஸ் என்னும் நோயினை ஏற்படுத்துகிறது. மிகை உணவூட்டச் செறிவு நீர் நிலைகளில் தரத்தினை பாதித்து பாசிபெருக்கத்தை ஏற்படுத்துகின்றது.
13.
இரண்டு ஒற்றை மய இனச்செல்கள் இணைவதே ஒருங்கிணைவாகும்
ஒருங்கிணைவு முறையின் பல்வேறு வகைகள்:
i) தன் கருவுறுதல்:-
ஒரு செல்லிலிருந்தோ அல்லது ஒரே உயிரியிலிருந்தோ உருவாகின்ற ஆண் மற்றும் பெண் இனச்செல்கள் இணைந்து கரு முட்டையை உருவாக்குகின்றன.
2. எ.கா: ஆக்டினோஸ்பேரியம் மற்றும் பாரமீசியம்.
ii) அயல் கருவுறுதல்:
1.ஆண் மற்றும் பெண் என்னும் இரு தனித்தனி பெற்றோர்களிலிருந்து உருவாகின்ற ஆண் மற்றும் பெண் இனச்செல்கள் ஒன்றிணைந்து கருமுட்டை உருவாகிறது.
2. எ.கா: மனிதன்.
iii) முழு சேர்க்கை:
1. கீழ் நிலை உயிரிகளில் சில சமயங்களில் முதிர்ந்த உயிரிகள் இனச்செல்களை உருவாக்காமல், அவ்வுயிரிகளே இனச்செல்கள் போன்று செயல்பட்டு ஒன்றிணைந்து புதிய உயிரிகளைத் தோற்றுவிக்கின்றன.
2. எ.கா: டிரைக்கோநிஃம்பா.
iv) இளம் சேர்க்கை:
முதிர்ந்த பெற்றோர் செல்லிலிருந்து மறைமுகப்பிரிவு மூலம் உருவாகும் இரு இளம் சேய் செல்கள் இனச்செல்கள் போன்று செயல்பட்டு ஒன்றிணைந்து புதிய உயிரிகளைத் தோற்றுவிக்கின்றன.
v) மாறுபட்ட செல் சேர்க்கை:
அமைப்பில் மாறுபட்ட இரு சிறிய இனச்செல்கள் ஒன்றிணையும் முறை புதிய மாறுபட்ட செல் சேர்க்கை எனப்படும்.
vi) ஒத்த செல் சேர்க்கை:
1. அமைப்பிலும் செயலிலும் ஒரே மாதிரியான இரு இனச்செல்கள் ஒன்றிணைதல் ஒத்த செல் சேர்க்கை எனப்படும்.
2. எ.கா: மோனோசிஸ்டிஸ்.
vii) வேறுபட்ட செல் சேர்க்கை:
முற்றிலும் வேறுபட்ட இரு இனச்செல்கள் ஒன்றிணையும் முறை வேறுபட்ட செல் சேர்க்கை எனப்படும்.
14.
நறுமணப் பொருட்களின் அரசி - ஏலக்காய்:
தாவரவியல் பெயர் : எலிட்டரியா கார்டோமோமம்
தோற்றம், விளையுமிடம்:
தென்னிந்தியா, ஸ்ரீலங்கா, மேற்குத் தொடர்ச்சி மலை, வடகிழக்கு இந்தியா.
பயன்கள்:
(i) நறுமணம், வெதுவெதுப்பான பண்பு, காரச்சுவை கொண்டவை.
(ii) மிட்டாய்த் தொழிற்சாலை, நறுமணத் தயாரிப்பு, புத்துணர்வான நறுமணப் பொருள்
(iii) குழம்புப் பொடி, ஊறுகாய், கேக் தயாரிப்பு
(iv) மருத்துவத்தில் தூண்டி, அபான வாயு நீக்கி, வாயு நறுமண மூட்டி.
நறுமணப் பொருட்களின் அரசன் - (இந்தியாவின் கருத்தங்கம்):
கருமிளகு (பைப்பர் நைக்ரம்)
தோற்றம், விளையுமிடம்:
மேற்கு தொடர்ச்சி மலையைச் சார்ந்தது. காரத்தன்மைக்கு அல்கலாய்டு பைப்பரின் காரணம்.
பயன்கள்:
(i) சாஸ், சூப், குழம்புப்பொடி, ஊறுகாய் தயாரிக்க. மணமூட்ட பயன்படும்.
(ii) மருத்துவத்தில் உமிழ்நீர், வயிற்றுச் சுரப்பு, செரிப்பு மருந்து, மருந்துகளின் உயிர்ப்பு உறிஞ்சலை அதிகரிக்கும்.
15.
(i) பெற்றோரை விடக் கலப்புயிரி முதல் மகவுசந்ததியில் செயல்திறன் மேம்பட்டிருப்பதால் ஈர்ப்பு கலப்புயிரி வீரியம் என்றழைக்கப்படுகிறது.
(ii) G.H ஷல் என்பவர் தான் முதன்முதலில் ஹெட்டிரோசிஸ் என்ற சொல்லை பயன்படுத்தினார்.
(iii) கலப்பின வீரியத்தின் வகைகள் மெய்கலப்பின வீரியம், சடுதிமாற்ற வீரியம், சமநிலை மெய்கலப்பின வீரியம் மற்றும் பொய்கலப்பின வீரியம்.
1) மெய்கலப்பினவீரியம் (Euheterosis): மெய்கலப்பினவீரியம் என்பது மரபு வழியாகப் பெறப்படும் கலப்பு வீரியமாகும். மேலும் இது கீழ்கண்டவாறு வகைப்படுத்தப்படுகிறது.
அ. சடுதிமாற்ற மெய்கலப்பின வீரியம் (Mutational Euheterosis) - இது மெய்கலப்பினவீரிய வகைகளில் மிக எளிமையானது. அயல்-மகரந்தச்சேர்க்கை நடைபெறக்கூடிய பயிர்களில் மேம்பட்ட ஓங்கிய அல்லீல்கள் மூலம் தேவையற்ற, கேடுவிளைவிக்கக்கூடிய, கொல்லும் ஒடுங்குப்பண்புடைய அல்லது சடுதிமாற்றம் பெற்ற மரபணுக்களை நீக்குவதன் மூலம் ஏற்படுகிறது.
ஆ. சமநிலை மெய்கலப்பினவீரியம் (Balanced Euheterosis) : இவை வேளாண்மைக்கு உதவும் வகையில் பல சூழ்நிலைக் காரணிகளுக்கேற்பத் தகவமைத்துக் கொள்ளும் சமநிலை பெற்ற மரபணு இணைப்பு, சமநிலை மெய்கலப்பினவீரியமாகும்.
ii) பொய்கலப்பினவீரியம் (Pseudoheterosis): சந்ததி தாவரமானது உடல் வளர்ச்சியில் பெற்றோர் தாவரங்களை விட மேம்பட்டும் ஆனால் விளைச்சலிலும், தகவமைப்பிலும், மலட்டுத்தன்மையுடனோ அல்லது குறைந்தளவு வளமானதாகவோ காணப்படுகிறது. இது உடலவளவீரியம் என்றும் அழைக்கப்படும்.
16.
1. தாவர மிதவை உயிரிநிலை (Phytoplankton state) -நீலப்பசும்பாலிகள், பாக்டீரியங்கள், சயனோ பாக்டீரியங்கள், பசும்பாசிகள், டயட்டம் போன்ற முன்னோடி குழுமங்களைக் கொண்ட வழிமுறை வளர்ச்சியின் முதல்நிலை இதுவாகும்.
2. இந்த உயிரினங்களின் குடிபெயர்பு, வாழ்க்கை செயல்முறைகள், இறப்பின் மூலமாக குளத்தின் கரிம பொருளின் அளவு மற்றும் ஊட்டச்சத்து செறிவடைகிறது. இது வளர்ச்சியின் அடுத்த படிநிலை வளர்ச்சிக்கு உதவுகிறது.
3. நீருள் மூழ்கிய தாவர நிலை (Submerged plant stage)- மிதவை உயிரிகளின் இறப்பு மற்றும் மட்குதலின் விளைவாலும், மழைநீர் மூலம் நிலத்திலிருந்து மண் துகள்கள் அடித்து வரப்படுவதாலும், குளத்தின் அடிப்பகுதியில் ஒரு தளர்வான மண் உருவாக்க வழி வகுக்கிறது. எனவே வேரூன்றி நீருள் மூழ்கி வாழும் நிர்வாழ்த்தாவரங்கள் புதிய வாழ்தளத்தில் தோன்ற ஆரம்பிக்கிறது. எ.காட்டுகள்: கேரா, யூட்ரிகுலேரியா,
4. தாவரங்களின் இறப்பு மற்றும் சிதைவு குளத்தின் அடித்தளத்தை உயர்த்துவதால் குளம் ஆழற்றதாக மாறுகிறது. எனவே இந்த வாழிடம் நீருள் மூழ்கி மிதக்கும் நிலையிலுள்ள வேறுவகையான தாவரங்கள் குடியேறுவதற்கு ஏதுவாக அமைகிறது.
5. நீருள் மூழ்கி மிதக்கும் நிலை (Submerged free floating stage)- இந்த நிலையில் குளத்தின் ஆழம் கிட்டத்தட்ட 2-5 அடியாக இருக்கும். எனவே, வேரூன்றிய நிர்வாழ்த் தாவரங்கள் மாற்றும் பெரிய இலைகளுடன் கூடிய மிதக்கும் தாவரங்கள் குளத்தில் குடியேற ஆரம்பிக்கின்றன.
எடுத்துக்காட்டாக, வேரூன்றிய மிதக்கும் தாவரங்களான தாமரை, அல்லி மற்றும் ட்ராபா.
6. இந்த தாவரங்களின் இறப்பு மற்றும் சிதைத்தல் மூலம் குளத்தின் ஆழம் மேலும் குறைகிறது. இதன் காரணமாக மிதக்கும் தாவரங்கள் படிப்படியாக பிற இனங்களால் மாற்றி அமைக்கப்படுவதால் புதிய நிலை ஒன்று உருவாகிறது.
7. நாணற் சதுப்பு நிலை (Reed -swamp stage) - இது நீர்-நில வாழ்நிலை எனவும் அழைக்கப்படுகின்றது. இந்த நிலையில் வேரூன்றிய மிதக்கும் தாவரங்கள் பிற தாவரங்களால் மாற்றியமைக்கப்படுகிறது. இது நீர் சூழ்நிலையிலும், நில சூழ்நிலையிலும், நில சூழ்நிலையிலும் வெற்றிகரமாக வாழக்கூடியது. எடுத்துக்காட்டு: பைஃபா.
8. சதுப்பு புல்வெளி நிலை (Marsh meadow stage)-நீரின் அளவு குறைவதால், குளத்தின் ஆழம் குறையும்பொழுது சைப்பரேசி மற்றும் போயேசி இவற்றின் அதிகம் கிளைத்த வேர்களின் உதவியால் பாய் விரித்தது போன்ற தாவரத்தொகுப்பு ஒன்று உருவாகிறது.
9. இது அதிக அளவு நீர் உறிஞ்சுவதற்கும், நீர் இழப்பிற்கு வழிவகுக்கிறது. இந்த நிலையின் முடிவில் மண் வறண்டு சதுப்புநிலத் தாவரங்கள் படிப்படியாக மறைந்து புதர்ச்செடிகள் குடிபுக வழிவகுக்கிறது.
10. புதர்ச்செடி நிலை (shrub stage)-சதுப்பு நிலத் தாவரங்கள் தொடர்ந்து மறைவதாக, மண் வறண்டு போகிறது. எனவே இந்த பகுதிகளில் நிலவாழ்த் தாவரங்களான புதர்ச்செடிகள் (சாலிக்ஸ் மற்றும் கர்னஸ்) ஆகியவை படையெடுக்கின்றன. இந்த தாவரங்கள் அதிக அளவிலான நீரை உறிஞ்சி வறண்ட வாழிடத்தை உருவாக்குகின்றன. அத்துடன் செழுமையான நுண்ணுயிரிகளுடன் கூடிய கரிம மட்கு சேகரமடைவதால் மண்ணில் கனிமவளம் அதிகரிக்கிறது. இறுதியில் அப்பகுதி புதிய மர இனங்களின் வருகைக்கு சாதகமாகிறது.
11. காடுநிலை (Forest stage)-நீர் வழிமுறை வளர்ச்சியின் உச்சநிலை குழுமம் இதுவாகும். இந்த நிலையின்போது பல்வேறு வகையான மரங்கள் படையெடுப்பதோடு ஏதாவது ஒருவகையான தாவரத்தொகுப்பு உருவாகிறது.
17.
நன்மைகள்
1. விளைச்சல் அதிகரிக்கிறது. ஏனெனில் காய்ப்புழுக்களின் தாக்குதல் கட்டுப்படுத்தப்படுகிறது.
2. பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு குறைகிறது.
3. பயிர் வளர்ப்பில் உண்டாகும் செலவு குறைகிறது.
தீமைகள்
1. இதன் விதையின் விலை அதிகம்.
2. முதல் 120 நாட்கள் மட்டுமே வீரியமுள்ளதாக இருக்கிறது. பின்னர் இதன் வீரியம் வர வர குறைகிறது.
3. சாறு உறிஞ்சும் தத்துப்பூச்சிகள், அசுவினிப்பூச்சிகள், வெள்ளை ஈக்கள் போன்றவற்றிற்கு எதிராகச் செயல்படுவதில்லை.
4. மகரந்தச்சேர்க்கையில் துணைபுரியும் பூச்சிகளை பாதிக்கிறது. அதனால் விளைச்சல் குறைகிறது.
18.
(i) இரு வேறுபட்ட நிறமுடைய இலைகள் காணப்படுகின்றன.
(ii) இவற்றில் அடர்பச்சை நிறமுடைய (இலை) தாவரங்களை (ஆண்) வெளிறிய பச்சை நிற இலையுடைய தாவரங்களுடன் (பெண்) கலப்பு செய்த போதும் - (அ) அடர்பச்சை நிற இலையையுடைய தாவரங்கள் (பெண்) வெளிறிய நிற பச்சை நிற இலைகளையுடைய தாவரங்கள் (ஆண்) கலப்பு செய்தபோதும் மெண்டலின் மரபியல் தத்துவத்தின் படி ஒரே விதமான F1 தாவரங்கள் கிடைக்க வேண்டும். ஆனால் இப்பாரம்பரியத்தில் முதல் மகவுச் சந்ததி F1 வேறுபட்ட பண்புகளை வெளிப்படுத்தின.
(iii) இரு வகை கலப்பிலும் பெண் தாவரத்தின் பண்புகள் வெளிப்படக் காரணம், பெண் தாவரத்தின் பசுங்கணிக மரபணு சார்ந்து இப்பாரம்பரியம் நிகழ்வதே இவ்வேறுபாட்டிற்கு காரணம்.
19.
| இரு விதையிலைத் தாவர விதை | ஒரு விதையிலைத் தாவர விதை | |
| 1. | இரண்டு விதையிலைகள் ஒட்டிக் காணப்படும். | ஒரு விதையிலையைக் கொண்டது. |
| 2. | விதை உறை தடித்த வெளியுறை (testa) மற்றும் மெல்லிய உள்ளுறை (tegmen) கொண்டது. | விதை பழுப்பு நிற உமியால் மூடப்பட்டிருக்கும். விதையுறை பழுப்பு நிறத்தில், சவ்வு போல விதையை நெருக்கமாக ஒட்டி இருக்கும். |
| 3. | பட்டாணியில் விதையிலைகள் உணவைச் சேமித்து வைக்கும். ஆமணக்கில் கருவூண் திசு உள்ளது. இது சேமிப்புப் பொருள் கொண்டது. | ஸ்கூட்டெல்லம், கருவூண் திசுவிலிருந்து உணவை கருவுக்கு வழங்கும். |
| 4. | முளைக்கருத்து உறை, (coleoptile) முளை வேர் உறை (coleorrhizae) இருக்காது. | முளைக்கருத்து உறை, முளை வேர் உறை உள்ளது. |
20.
(b)
| A | B |
| சாம்பல் கார்பன் | பசுமைக் கார்பன் |
21.
(a)
மஞ்சள்
22.
(d)
டி.என்.ஏ மறுசேர்க்கை
23.
(c)
குடுவைத்தாவரம் பூச்சியுடன்
24.
(c)
6
25.
(a)
135
26.
(b)
IUCN
27.
(b)
சக்காரம் பார்பெரி மற்றும் சக்காரம் அஃபிசினாரம்
28.
(a)
செஸ்பேனியா மற்றும் அக்கேசியா
29.
(c)
டி.என்.ஏ பாலிமரேஸ் நொதி, வளர்ந்து வரும் இழையின் 3' முனைப் பகுதியில் மட்டுமே புதிய நியூக்ளியோடைடுகளை இணைக்கும்.
30.
(c)
9 cM
31.
(b)
S H G L
32.
(d)
மறுகூட்டிணைவு நிகழ்விரைவு சாத்தியமாகிறது
33.
(c)
3 மற்றும் 4
34.
(d)
45 AB, 45 ab, 5 Ab, 5 aB
35.
1. ஓசோன் மிகவும் மெல்லிய அடுக்கு. இது வளிமண்டலத்தில் (மிகவும் குறைந்த அளவில் இருந்தாலும்) நீல நிறத்தை தோற்றுவிக்கும்.
2. நமது கண்களால் பார்க்க முடியாது. ஆனால் செயற்கை கோள்கள் மூலம் காணலாம்.
36.
வளிமண்டலத்தில் உள்ள கண்ணுக்குப் புலப்படாத நீராவியினால் ஏற்படும் ஈரம், ஈரப்பதம் எனப்படும்.
வகைகள்:
(i) முழுமையான ஈரப்பதம் மற்றும்
(ii) ஒப்புமை ஈரப்பதம்
முழுமையான ஈரப்பதம் மற்றும்:
குறிப்பிட்ட கொள்ளளவு பொருண்மை, அளவுள்ள காற்றில் உள்ள ஒட்டு மொத்த நீராவியின் பொருண்மை முழுமையான ஈரப்பதம் எனப்படும். இதில் வெப்பநிலை கருத்தில் கொள்ளப்படுவதில்லை.
ஒப்புமை ஈரப்பதம் :
காற்றின் உள்ள நீராவியின் அளவு ஒப்புமை ஈரப்பதம் எனப்படும். ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் காற்றில் உள்ள ஈரப்பதம் தெவிட்டு நிலையை அடைய தேவைப்படும் நீராவியின் அளவை விழுக்காட்டில் குறிப்பதே ஒப்புமை ஈரப்பதம் அதன் விழுக்காட்டில் குறிக்கப்படுகிறது.
37.
(i) இங்கு இரண்டு உயிரினங்களுக்கிடையே நிகழும் இடைச்செயல்களில் ஒரு உயிரி ஒடுக்கப்பட்டாலும் மற்றொரு உயிரி எந்த பயனையும் அடைவதில்லை (அ) பாதிக்கப்படுவதில்லை.
(ii) இடைத்தடை வேதிப்பொருட்கள் என்ற சில வேதிப்பொருட்களைச் சுரப்பது மூலம் இந்த ஒடுக்கப்படுதல் நிகழ்கிறது.
(iii) இந்த நிகழ்ச்சி அமென்சாலிசம் (அ) நுண்ணுயிரி எதிர்ப்பு எனவும் அழைக்கப்படுகின்றன.
38.
(i) வேதிப்பொருட்களைக் கொண்டு பூஞ்சை, மைக்கோபிளாஸ்மா போன்ற நோய்க்கிருமிகளை அழிப்பது எளிது. ஆனால் நோய் தொற்றை உண்டாக்கும் வைரஸ்களை அழிப்பது அரிது தாவரங்களுக்கு வைரஸால் உண்டாக்கப்படும் பொருளாதாரச் சேதம் அதிகம்.
(ii) தண்டு நுனி ஆக்குத்திசு வளர்ப்பு மூலம் வைரஸ் அற்ற தாவரங்களை உருவாக்க இயலும் - ஏனெனில் தண்டு நுனியில் வைரஸ் தொற்று காணப்படுவதில்லை.
39.
40.
41.
1. உயிரிய உரங்கள் என்பது மண்ணின் ஊட்டச்சத்து தரத்தை வளப்படுத்தக் கூடிய உயிருள்ள நுண்ணுயிரிகளால் உருவாக்கப்பட்டதாகும்.
2. இவை பல ஊட்டச்சத்துகள் மற்றும் போதுமான அளவு கரிமப் பொருட்களை வழங்கி மண்ணின் அமைப்பு முறை, கட்டமைப்பு, நீர் சேமிப்புத் திறன், நேர்மின் அயனி பரிமாற்றத் திறன் மற்றும் கார அமிலத் தன்மை (pH) போன்ற இயற்பிய வேதிய பண்புகளை அதிகரிக்கச் செய்கிறது.
3. உயிர் உரங்களின் முக்கிய மூலாதாரங்கள் பாக்டீரியா, பூஞ்சை மற்றும் சயனோபாக்டீரியா ஆகும்.
பாக்டீரியா:
1. ரைசோபியம் இணைந்து வாழக்கூடிய நைட்ரஜனை நிலை நிறுத்தும் பாக்டீரியா ஆகும்.
2. இந்த பாக்டீரியா பயறு வகை தாவரங்களின் வேர், முடிச்சுகளில் தொற்றி வளிமண்டல நைட்ரஜனை கரிம வடிவில் நிலைப்படுத்துகின்றன.
3. அசோஸ்பைரில்லம் மற்றும் அசோட்டோபாக்டர் போன்றவை தனித்து வாழும் பாக்டீரியாக்கள்.
4. இவை வளிமண்டல நைட்ரஜனை நிலைப்படுத்தி மண்ணின் நைட்ரஜன் அளவை அதிகப்படுத்துகின்றன.
மைக்கோரைசா:
பூஞ்சைகளும் தாவரங்களின் வேர்களும் இணைந்து வாழும் அமைப்பு ஆகும்.
1. இணை வாழ் உயிரியான பூஞ்சை மண்ணிலிருந்து பாஸ்பரஸை உறிஞ்சி தாவரங்களுக்கு அளிக்கின்றது
2. மேலும் இந்த தாவரங்கள் வேரிலுள்ள நோயூக்கிகளுக்கு எதிரான எதிர்ப்பு திறன், உப்புத் தன்மை மற்றும் வறட்சி தாங்கு திறன், தாவர வளர்ச்சியை மேம்படுத்துதல் போன்ற பிற நன்மைகளையும் பெறுகின்றன.
3. எடுத்துக்காட்டாக, குளோமஸ் என்ற பேரினத்தின் பல உறுப்பு இனங்கள் இத்தகைய மைக்கோரைசாவை ஏற்படுத்துகின்றன.
சயனோ பாக்டீரியா (அ) நீலப் பசும்பாசிகள்:
1. இவை தனித்து வாழ்ந்து நைட்ரஜனை நிலைப்படுத்தும் புரோகேரியாட்டிக் உயிரிகள் ஆகும். எ.கா. ஆசிலாக்டோரியா, நாஸ்டாக், அனபீனா, டோலிபோத்ரிக்ஸ்.
2. இங்கு அவை பெருக்கமடைந்து மூலக்கூறு நைட்ரஜனை நிலைப்படுத்துகின்றன.
3. இவை இன்டோல் - 3 - அசிட்டிக் அமிலம், இண்டோல் - 3 - பியூட்டைரிக் அமிலம், நாப்தலீன் அசிட்டிக் அமிலம், அமினோ அமிலங்கள், புரதங்கள், வைட்டமின்கள் போன்ற தாவர வளர்ச்சி மற்றும் உற்பத்தியை தூண்டும் பொருட்களை சுரக்கின்றன.
இவ்வாறு உயிரிய உரங்கள் பொதுவாக இயற்கை வேளாண்மை முறைகளில் பயன்படுத்தப்படுகின்றன. இயற்கையான வழிகளில் தாவரங்களை பயிர் செய்தல் மற்றும் விலங்குகளை வளர்த்தல் இயற்கை வேளாண்மை ஆகும்.
42.
| நோய்கள் | நோய்க்காரணி | அறிகுறிகள் |
| அஸ்காரியாசிஸ் | அஸ்காரிஸ் | |
| டிரைகோஃபைட்டான் | உடலின் பல்வேறு உறுப்புகளில் வறண்ட, செதில் புண்கள் காணப்படுதல். |
|
| டைபாய்டு | சால்மோனெல்லா | அதிக காய்ச்சல், வலுவிழத்தல், தலைவலி, வயிறுவலி மற்றும் மலச்சிக்கல். |
| நிமோனியா | ஸ்ட்ரெப்டோகாக்கஸ் | காய்ச்சல், இருமல் வலியுடன் கூடிய சுவாசம் மற்றும் பழுப்பு நிற சளி. |
43.
மட்குப்பொருள் (சிதைவுக்கூளம்) உணவுச்சங்கிலி அனைத்து சூழல் மண்டலத்திற்கும் பொதுவானது.
மட்குப்பொருள் உணவுச்சங்கிலி:
1. இந்த உணவுச்சங்கிலி இறந்த கரிமபொருட்களிலிருந்து தொடங்குகிறது. இது முக்கிய ஆற்றல் மூலமாக உள்ளது.
2. அதிகப்படியான கரிமப்பொருள்கள் இறந்த தாவரங்கள் விலங்குகள் மற்றும் அவற்றின் கழிவு பொருட்களிலிருந்து பெறப்படுகிறது.
3. இறந்த உயிரிகளின் கரிமப்பொருட்கள் மறுசுழற்சி மற்றும் அதன் சமநிலையை தக்கவைக்கவும் சூழ்நிலை மண்டலத்தில் இது முக்கியமான உணவு சங்கிலியாகும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards