12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/03/2021
12ஆம் வகுப்பு உயிரியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Biology Reduced Syllabus Creative Three mark Question with Answer key - 2021(Public Exam)
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
சர்வதேச இயற்கை பாதுகாப்பு கூட்டமைப்பின் முக்கிய நோக்கங்கள் யாவை?
2.
வலசை போதல் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
3.
மரபணு தொகையை சீர்வரிசையாக்கம் என்றால் என்ன?
4.
சயனோபாக்டீரியா எவ்வாறு உயிர் உரங்களாக பயன்படுகின்றன?
5.
தலைகீழ் திருப்பம் என்றால் என்ன?
6.
பரந்த செயலாற்றலுள்ள உயிர் எதிர்பொருட்கள் மற்றும் குறுகிய செயலாற்றலுள்ள உயிர் எதிர்பொருட்கள் வேறுபடுத்துக.
7.
மரபணு மாற்றப்பட்ட விலங்குகள் என்றால் என்ன?
8.
தொற்று நோய் மற்றும் தொற்றா நோய்கள் வேறுபடுத்துக.
9.
டெர்மட்டோ மைக்கோசிஸ் பற்றிய சிறு குறிப்பு தருக.
10.
பல்வேறு தாவரங்களில் உள்ள சில சுவாரசியமான மகரந்தச் சேர்க்கை முறைகள் எவை?
11.
ஓங்கு தன்மை ஒடுங்கு தன்மை வேறுபாடு தருக
12.
படிவங்களின் வயதினைக் கண்டறிய முடியுமா? எவ்வாறு?
13.
காப்புரிமை என்றால் என்ன?
14.
சூழ்நிலை மண்டலத்தில் நடைபெறும் ஆற்றல் ஓட்டம் பற்றி கூறுக.
15.
பெல்லோப்பியன் நாளங்களின் பாகங்களை விவரி.
16.
கரு வளர வளர ஈஸ்ட்ரோஜனின் அளவு அதிகரிக்கிறதா? அதன் விளைவு என்ன?
17.
மெண்டலின் மரபுக் குறைபாடுகள் ஏற்படுவதற்கு காரணம் என்ன?
18.
சீரியக்க கால இடைவெளி குடும்பக்கட்டுப்பாட்டு முறையில், கலவி எப்போது தவிர்க்கப்படும்?
19.
தாமிரம் வெளிவிடும் உள்கருப்பை சாதனங்கள் எவ்வாறு பணியாற்றுகிறது?
20.
இயற்கையான கன்னி இனப்பெருக்கத்தின் வகைகளை பற்றி எழுதுக.
21.
பிளாஸ்மோ டோமி என்றால் என்ன?
22.
யூகுரோமேட்டின் - ஹெட்டிரோகுரோமேட்டின் வேறுபடுத்துக.
23.
மனித மரபணு முக்கிய இலக்குகள் யாவை?
24.
பாக்டீரியாவில் படியெடுத்தல் மொழிபெயர்தல் எங்கு நடைபெறுகிறது?
25.
DNA மற்றும் RNA வை அதன் நிலைப்புத்தன்மை வேதி எதிர்வினைப்பண்புகள் அடிப்படையில் வேறுபடுத்துக.
1.
1. தகவல் சேகரிப்பு
2. பகுப்பாய்வு ஆராய்ச்சிகள்
3. களத்திட்டங்கள், பாதுகாப்பு தொடர்பான கல்வி
4. நிலையான வளர்ச்சி
5. உயிரின பல்வகைத் தன்மை ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது. மேலும் அழியும் ஆபத்தில் உள்ள உயிரினங்களின் தகவல் சேகரித்து சிவப்பு பட்டியலாக வெளியிடுகிறது.
2.
1. வலசை போதல் என்பது ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கும். மீண்டும் பழைய இடத்திற்குமான பெருமளவிலான உயிரினங்களின் தனித்துவமான இயக்கத்தை/நகர்வதைக் குறிக்கும்.
2. சைபீரியாவில் வாழும் சைபீரியக் கொக்குகள், கடுமையான பனிக்காலத் குளிரைத் தவிர்க்கும் பொருட்டு சைபீரியாவிலிருந்து தமிழ்நாட்டின் வேடந்தாங்கலுக்கு வருகை தந்து பின்பு வசந்த காலத்தின் போது திரும்பச் செல்கின்றன.
(i) அனாட்ராமஸ்: மீன்கள் கடல் நீரிலிருந்து நன்னீருக்கு வலசை போதல். எ.கா: சால்மன்
(ii) கேட்டாட்ராமஸ்: மீன்கள் நன்னீரிலிருந்து கடல் நீருக்கு வலசை போதல். எ.கா: விலாங்கு
3.
1. ஒரு உயிரினத்தின் DNA வில் மாற்றம் ஏற்படுத்தும் திறன் கொண்ட தொழில் நுட்பங்களின் ஒரு தொகுதி தான் மரபணு தொகையை சீர் வரிசையாக்கமாகும்.
2. இதனால் எந்த மரபணு சார் பொருட்களை சேர்க்கவோ, நீக்கவோ, மாற்றவோ அனுமதிக்கிறது.
(எ.கா) CRISPR சீர்வரிசையாக்கி முறையால் கலப்பின அரிசி உருவாக்கப்படுகிறது.
4.
1. சயனோ பாக்டீரியா (அ) நீலப் பசும் பாசிகள் என்பவை தனித்து வாழ்ந்து நைட்ரஜனை நிலைப்படுத்தும் புரோகேரியாட்டிக் உயிரிகள் ஆகும்.
2. நீர் தேங்கும் நெல் வயல்களில் இவற்றின் முக்கியத்துவம் உணரப்படுகிறது.
3. இங்கு இவை பெருக்கமடைந்து மூலக்கூறு நைட்ரஜனை நிலைப்படுத்துகின்றன.
4. மேலும் இவை இண்டோல்-3-அசிட்டிக் அமிலம், இண்டோல்-3-பியூட்டைரிக் அமிலம், நாப்தலீன் அசிட்டிக் அமிலம், அமினோ அமிலங்கள்/புரதங்கள் வைட்டமின்கள் போன்ற தாவர வளர்ச்சி மற்றும் உற்பத்தியை தூண்டும் பொருட்களை சுரக்கின்றன.
5. எ.கா. ஆசில்லடோரியா, நாஸ்டாக், அனபீனா, டோலிபோத்ரிக்ஸ் ஆகியவை நன்கு அறியப்பட்ட நைட்ரஜன் நிலைப்படுத்தும் சயனோபாக்டீரியாக்கள் ஆகும்.
5.
1. குரோமோசோமில் உள்ள மரபணுக்கள் 180° கோணத்தில் தலைகீழாக மாற்றப்படுகிறது.
2. இரு பிளவுகள் ஏற்பட்டு மறு இணைவு நடைபெறுகிறது
3. இதில் எவ்வித மரபணுக்கள் எண்ணிக்கை கூடுதலோ அல்லது குறைதலோ நடைபெறாது ஆனால் அவற்றின் வரிசை அமைப்பில் மாறுதல் ஏற்படும்.
4. முதன்முதலாக ஸ்டர்டீவண்ட் என்பவரால் டிரோசோபில்லாவில் கண்டறியப்பட்டது.
6.
| பரந்த செயலாற்றலுள்ள உயிர் எதிர்பொருட்கள் | குறுகிய செயலாற்றலுள்ள உயிர் எதிர்பொருட்கள் | |
| 1 | இவை பலதரப்பட்ட நோய்களை உண்டாக்கக்கூடிய பாக்டீரியாக்களை எதிர்த்து செயல்படுகின்றன. | குறிப்பிட்ட நோய்களை தோற்றுவிக்கும் பாக்டீரியாக் குழுக்களை மட்டுமே எதிர்த்து செயல்படுகின்றன. |
| 2 | இவை நுண்ணுயிரிகளில் எதிர்ப்புத் திறன் உருவாகும் வாய்ப்பு அதிகம். | குறிப்பிட்ட நுண்ணுயிரிகளை குறிவைத்து தாக்குவதோடு அந்நுண்ணுயிரிகளில் எதிர்ப்புத் திறன் உருவாகும் வாய்ப்பையும் குறைக்கிறது. |
7.
(i) உயிரிகளின் மரபணுத் தொகுதிக்குள் புதிய மிகைப்படியான டி.என்.ஏ-க்களை நுழைத்து நிலையான மரபியல் மாற்றங்களை விரும்பிய வண்ணம் தோற்றுவிக்கலாம்.
(ii) மரபணு மாற்றம் என்று பெயர் இவ்விதம் உள் நுழைக்கப்படும் அந்நிய டி.என்.ஏவானது 'மாற்று மரபணு' எனவும், இதனால் தோற்றுவிக்கப்படும் விலங்குகளை 'மரபு பொறியியல் மூலம் மாற்றப்பட்ட' அல்லது 'மரபியல்பு மாற்றப்பட்ட உயிரிகள்' என்று அழைக்கலாம்.
8.
| தொற்று நோய் | தொற்றா நோய் | ||
|---|---|---|---|
| 1. | ஒரு நபரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும். | இந்நோய் மற்றவர்களுக்கு பரவாது. | |
| 2. | நோயூக்கிகள் நோய்கடத்திகள் மற்றும் காற்று நீர் மூலம் பரவுகிறது. | இது மரபியல் ஊட்டச்சத்து மற்றும் உடற்சிதைவின் மூலம் ஏற்படுகிறது. | |
| 3. | நோயூக்கிகள் - வைரஸ் பாக்டீரியா போன்றதாகும். | புற்றுநோய் மரணத்தை விளைவிக்கும். | |
9.
1. இது ஒரு தோல் தொற்றாகும்.
2. இது டிரைகோபைட்டான் மைக்ரோஸ்போரம் மற்றும் எபிடெர்மோஃபைட்டான் ஆகிய பூஞ்சை பேரினங்களால் ஏற்படும்.
10.
1. பொறி இயங்கு முறை (அரிஸ்டலோக்கியா)
2. விழுகுழி இயங்கு முறை (ஆரம்)
3. இயக்க, ஏதுவாக்கி இயங்கு முறை (அஸ்கிளபியடேசி)
4. உந்து தண்டு இயங்கு முறை (பாப்பிலியோனேசி)
11.
| ஓங்குத் தன்மை | ஒடுங்கு தன்மை | |
| 1 | F1 இல் வெளிப்படும் பண்பே ஓங்கு தன்மைப் பண்பு | F1 இல் மறைக்கப்படும் பண்பு ஒடுங்கு தன்மைப் பண்பு |
| 2 | ஓங்கு அல்லீல் மற்றும் ஒடுங்கு அல்லீல் இருந்த போதும் இப்பண்பு வெளிப்படும் | ஒடுங்கு அல்லீல்கள் இருந்தால் மட்டுமே இப்பண்பு வெளிப்படும் |
| 3 | பட்டாணி தாவரத்தில் நெட்டை மற்றும் சிவப்பு மலர்கள் ஓங்கு பண்பு ஆகும் | குட்டை மற்றும் வெள்ளை மலர்கள் பட்டாணி தாவர ஒடுங்கு பண்புகள் ஆகும் |
| 4 | ஓங்கு பண்பு ஹோமோசைகஸ் & ஹெட்டிரோசைகஸ் தன்மையிலும் வெளிப்படும் | ஒடுங்கு பண்பு - ஹோமோசைகஸ் (ஒத்த காரணி நிலை) தன்மையில் மட்டுமே வெளிப்படும் |
12.
படிவங்களின் வயதினை 2 முறைகளில் அறியலாம்.
1. ஒப்பீடு வயது கணக்கிடும் முறை
புதைபடிவங்களின் வயது புதைபடிவங்களை ஒத்த பாறைகள் அல்லது வயது தெரிந்த புதைபடிவங்களோடு ஒப்பிட்டுக் கணக்கிடப்படுகிறது.
2. முழுமையான வயது கணக்கிடும் முறை:
புதைபடிவங்களில் உள்ள ஐசோடோப்புகளின் சிதைவு அளவிடப்பட்டு புதைபடிவங்களின் வயது கணக்கிடப்படுகிறது.
13.
காப்புரிமம்
(i) கண்டுபிடிப்பவருக்கு வழங்கப்படும் ஒரு சிறப்பு உரிமை ஆகும் - இது புதிய பொருட்களை வணிகம் செய்வதற்கான ஒப்புதல் (அ) அதிகாரம் சட்டங்கள் மூலம் அரசால் வழங்கப்பட்டது.
(ii) காப்புரிமம் என்ற சொல் மற்றவர்களைத் தவிர்த்து கண்டுபிடிப்பவர்களைத் தயாரித்தல், பயன்படுத்துதல், மற்றும் விற்பனை செய்தலுக்கு உரிய உரிமையைக் கொடுத்தது
(iii) சில உருவாக்கங்களுக்கு அவற்றின் ரகசியங்களைக் காக்க தகுதி வாய்ந்த காப்புரிம வழக்கறிஞர் மூலம் வழிகாட்டுதல் பெறப்படுகிறது.
14.
உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் தொடர் சங்கிலி போன்று சூழ்நிலை மண்டலத்தில் உண்ணுதல் செயல்பாடுகளால் ஆற்றல் ஓட்டம் ஏற்படுகிறது.
15.
1. பெல்லோப்பியன் குழாய் அண்டக விளிம்பிலிருந்து, கருப்பை வரை நீண்டுள்ளது.
2. இதன் முன் முனையின் புனல் வடிவ இன்பண்டிபுலம் உள்ளது. இதில் விரல் போன்ற நுண் நீட்சிகள் உள்ளன. இவை அண்டம் வெளிப்படும்போது இழுக்கின்றன.
3. ஆம்புல்லா என்பது விரிவடைந்த மையப்பகுதி.
4. குழாயின் கடைசிப்பகுதி, தடித்த சுவர் கொண்ட இஸ்த்மஸ் ஆகும்.
16.
1. கரு வளர ஈஸ்ட்ரோஜனின் அளவு அதிகரித்து கருப்பை சுருக்கங்கள் ஏற்படுகின்றன.
2. இச்சுருக்கங்கள் கரு உருப்பெறவும், கீழ்நோக்கி இடம் பெயரவும் உதவுகின்றன.
3. இந்த இடம்பெயர்ச்சியினால், கருப்பை வாய் கலவிக்கால்வாய் விரிவடைகிறது. இது நியூரோஹியுமோரால் அனிச்சைச் செயல் எனப்படும். இது பெர்குஸன் அனிச்சைச் செயல் மற்றும் கருவொளித்தள்ளல் அனிச்சைச் செயல் எனவும் அழைக்கப்படும்.
17.
1. ஒரு மரபணுவில் ஏற்படுகின்ற மறுசீரமைப்பு அல்லது திடீர்மாற்றம் மெண்டலின் குறைபாட்டை ஏற்படுத்துகின்றன.
2. மெண்டலின் மரபுக்கடத்தல் விதிகளின் படியே இவை சேய் உயிரிகளுக்குத் கடத்தப்படுகின்றன.
(எ.கா) அல்பினிசம்
18.
1. மாதவிடாயின் 14 ஆம் நாளில் அண்ட செல் வெளியேறும்.
2. வெளியேறிய அண்டசெல் 2 நாட்கள் உயிருடன் இருக்கும்.
3. விந்தணு, பெண் இனப்பாதையில் 72 மணிநேரம் உயிருடன் இருக்கும். இந்தக் காலத்தில் கலவியைத் தவிர்க்க வேண்டும்.
19.
தனித்த தாமிரம், தாமிர உப்புக்கள் விந்து இயக்கத்தை தடைசெய்கின்றன. இவை கருப்பையினுள் 5 முதல் 10 ஆண்டுகள் இருக்கலாம்.(எ.கா) CuT -380, Multiload 375.
20.
1. அர்ரீனோடோகி -ஆண் உயிரிகள் மட்டும் உருவாகின்றது. (எ.கா) தேனீக்கள்
2. தெலிடோகி - பெண் உயிரிகள் மட்டும் உருவாக்கப்படுகின்றன. (எ.கா) சொலினோபியா
3. ஆம்ஃபிடோகி - ஆண் அல்லது பெண் உயிரி உருவாகின்றது. (எ.கா) எஃபிஸ்
21.
1. பல உட்கருக்களைக்கொண்ட சேய் உயிரிகளை உருவாக்கும்.
2. பின்னர் உட்கருக்கள் பிளந்து இயல்பான எண்ணிக்கையை நிலைப்படுத்துகின்றன.
3. (எ.கா) பிலோமிக்ஸா, ஒபாலினா
22.
23.
(i) கண்டறிதல் - மனித DNA விலுள்ள அனைத்து மரபணுக்களையும் (ஏறத்தாழ 30,000) கண்டறிதல்.
(ii) தீர்மானித்தல் - கூடவே அதிலுள்ள 3 பில்லியன் வேதி கார இணைகளின் வரிசையைத் தீர்மானித்தல்.
(iii) தகவல்களைச் சேமித்தல் - தகவல்களை தரவுத்தளங்களில் சேமித்தல்
(iv) கருவிகளை மேம்படுத்துதல் - தரவுகளை ஆய்வு செய்வதற்கான கருவிகளை மேம்படுத்துதல்
(v) தொடர்புடைய தொழில்நுட்பங்கள் தொழிற்சாலை போன்ற பிற இடங்களுக்கும் இடம் மாறுதல்
(vi) ELSI - அறம் சார்ந்த சட்ட, சமூக இடர்பாடுகளை (ELSI) தெரிவித்தல்.
24.
(i) பாக்டீரியாவில் தெளிவான உட்கரு காணப்படாததால் தனித்தனியாக இரண்டு படிகளும் நடைபெற இட மில்லாததால் இரண்டும் ஒன்றாகவே செல்லில் நடைபெறுகிறது.
(ii) படியெடுத்தல் முடியுமுன்னே மொழிபெயர்த்தல் துவங்குகிறது.
25.
| DNA | RNA | |
| 1. | மரபுப்பொருளில் முக்கியப் பண்பான நிலைப்புத் தன்மை DNA வில் அதிகமாக உள்ளது. | எளிதில் சிதைகிறது - ஏனெனில் 2' - OH குழு - ஒவ்வொரு நியூக்ளியோடைடுகளிலும் காணப்படுகிறது. |
| 2. | இரு இழைகளைக் கொண்டிருப்பதால் வெப்பத்தினால் தன்மை மாற்றம் நடந்தாலும், தனிமைப்படுத்தப்பட்ட இரு இழைகளும் இயல்பு சூழல் அமையும் போது டி.என்.ஏவின் நிரப்பு கூறுகள் மீண்டும் உருவாகின்றன. | வெப்பப்படுத்தப்படும் போது தன்மை மாற்றம் நடைபெறும். |
| 3. | தைமின் - காணப்படுவதால் அதிகபட்ச நிலைப்புத்தன்மை கொண்டுள்ளது. | யுராசில் காணப்படுவதால் நிலைப்புத் தன்மை குறைவு. |
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards