12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 01/03/2021
12ஆம் வகுப்பு வேதியியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Chemistry Reduced Syllabus Five mark Important Questions with Answer key - 2021(Public Exam)
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
பின்வருவனவற்றுள் என்ன நிகழும்
i. 2 – நைட்ரோ புரப்பேனை HCl உடன் கொதிக்க வைக்கும் போது
ii. நைட்ரோ பென்சீன் வலிமையான அமில ஊடகத்தில் மின்னாற் ஒடுக்குதல்
iii. மூவிணைய பியூட்டைலமீனை KMnO4 உடன் ஆக்சிஜனேற்றம் செய்தல்
iv. அசிட்டோன் ஆக்சைமை ட்ரைபுளூரோ பெராக்சி அசிட்டிக் அமிலம் கொண்டு ஆக்சிஜனேற்றம் செய்தல்
2.
பின்வரும் வினையில் A, B, C மற்றும் D ஆகியவற்றை கண்டறிக.
எத்தனாயிக் அமிலம் \(\overset{SOCl_2}\longrightarrow A\overset{Pd/BaSO_4}\longrightarrow B\overset{NaOH}\longrightarrow C\overset{\Delta}\longrightarrow D\)
3.
X மற்றும் Y ஆகிய அணுக்கள் bcc படிக அமைப்பினை உருவாக்குகின்றன. கனச்சதுரத்தின் மூலையில் X அணுக்களும் அதன் மையத்தில் Y அணுவும் இடம் பெறுகிறது. அச்சேர்மத்தின் வாய்ப்பாடு என்ன?
4.
காப்பர் சல்பேட்டின் நீர்க்கரைசலுடன், திரவ அம்மோனியாவைச் சேர்ப்பதால் உருவாகும் அணைவு அயனி யாது?
5.
படிகங்களின் குறைபாடுகளை எழுதுக.
6.
C4H9NO2 என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டினை உடைய நைட்ரோ சேர்மத்தின் மாற்றியங்கள் பட்டியலிடு.
7.
போபஃப் விதியை எடுத்துக்காட்டுடன் விளக்கு.
8.
கீழ்கண்ட மாற்றங்களை எவ்வாறு நிகழ்த்துவாய் ?
i ) பீனால் \(\longrightarrow \) சாலிசிலால்டிஹைடு
ii ) பீனால்\(\longrightarrow \) பீனால்ப்தலீன்
iii ) கிளைகால் \(\longrightarrow \) 1, 4 டையாக்சேன்
9.
நானோ வினைவேக மாற்றம் என்றால் என்ன? உதாரணம் தருக.
10.
கால்வானிக் மின்கலங்களில் உப்புப்பாலத்தின் பங்கு என்ன?
11.
மோலார் கரைதிறன் மதிப்பிலிருந்து கரைதிறன் பெருக்க மதிப்பு எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது.
12.
குளுக்கோஸின் வளைய அமைப்பை பற்றி எழுதுக
13.
VBT ன் வரம்புகள் யாவை?
14.
பேக்கலைட் தயாரித்தல் மற்றும் பயன்களை எழுதுக.
15.
P -தொகுதி தனிமங்களின் முதல் தனிமங்களின் முரண்பட்ட பண்புகளை எழுதுக.
16.
தங்கத்தாது எவ்வாறு சயனைடு வேதிக் கழுவுதல் முறையில் அடர்ப்பிக்கப்படுகிறது என்பதை விவரி .
17.
H2 - O2 எரிபொருள் மின்கலத்தின் செயல்பாடுகளை விளக்குக.
18.
கருஊதா நிறம் கொண்ட மாங்கனீசு சேர்மம் (A) சூடுபடுத்தும்போது சிதைவடைந்து ஆக்சிஜனுடன் சேர்மம் (B) மற்றும் (C) ஐ தருகிறது. சேர்மம் (C) KOH உடன் பொட்டாசியம் நைட்ரேட் முன்னிலையில் வினைபுரிந்து சேர்மம் (B) ஐத் தருகிறது. அடர் H2SO4 உடன் NaCl சேர்ந்து சேர்மம் (C) ஐ சூடுபடுத்தும் போது குளோரின் வாயு வெளியேறுகிறது. சேர்மம் (D) உருவாகிறது. சேர்மங்கள் A, B, C, D ஐ கண்டறிந்து வினைகளைத் தருக.
19.
வினைவேகத்தை பாதிக்கும் காரணிகளை விளக்குக.
20.
ஷாட்கி குறைபாட்டினை விளக்குக.
21.
பின்வருவனவற்றுள் இருந்து பீனாலை எவ்வாறு தயாரிப்பாய் ?
i) குளோரோபென்சின்
ii) ஐசோபுரப்பைல் பென்சீன்
22.
பல்லின பலபடிகள் குறித்து குறிப்பு வரைக.
23.
0.150 L கனஅளவுடைய 0.1M Pb(NO3)2 மற்றும் 0.100 L கனஅளவுடைய 0.2M NaCl கரைசல் ஆகியவற்றை ஒன்றாக கலக்கும் போது வீழ்படிவு உருவாகுமா? \(K_{sp} (PbCl_{2})=1.2\times10^{-5}\).
24.
ஒரு வினையின் கிளர்வு ஆற்றல் 22.5 k Cal mol-1 மேலும் 40\(^{\circ}\)C ல் வினைவேக மாறிலி 1.8×10-5 s-1 எனில் அதிர்வுக் காரணி A ன் மதிப்பைக் கண்டறிக.
1.
i. 2 – நைட்ரோ புரப்பேனை HCl உடன் கொதிக்க வைக்கும் போது
ii. நைட்ரோ பென்சீன் வலிமையான அமில ஊடகத்தில் மின்னாற் ஒடுக்குதல்
இது அனிலீன், பினைல் ஹைட்ராக்ஸைலமீன் மற்றும் p - அமினோ பீனால் ஆகியவற்றை தருகிறது.
iii. மூவிணைய பியூட்டைலமீனை KMnO4 உடன் ஆக்சிஜனேற்றம் செய்தல்
2- மெத்தில் -2-நைட்ரோ புரப்பேன் கிடைக்கிறது.
iv. அசிட்டோன் ஆக்சைமை ட்ரைபுளூரோ பெராக்சி அசிட்டிக் அமிலம் கொண்டு ஆக்சிஜனேற்றம் செய்தல்
2-நைட்ரோ புரப்பேன் கிடைக்கிறது.
2.
\(\mathrm{CH}_{3} \mathrm{COOH} \stackrel{\mathrm{SOCl}_{2}}{\longrightarrow} \mathrm{CH}_{3} \mathrm{COCl} \frac{\mathrm{Pd} / \mathrm{BaSO}_{4}}{-\mathrm{H} \mathrm{Cl}} \rightarrow \mathrm{CH}_{3} \mathrm{CHO}\)
எத்தனாயிக் அமிலம் A B
அசிட்டைல் அசிட்டால்டிஹைடு
குளோரைடு \(CH_{ 3 }CHO\downarrow NaOH\)
\(\mathrm{CH}_{3}-\mathrm{CH}=\mathrm{CH}-\mathrm{CHO}\) \(\overset { \Delta }{ \longleftarrow } \) \({ CH }_{ 3 }{ \underset { \underset { OH }{ | } }{ CH } }-{ CH }_{ 2 }{ CHO }\)
D C
குரோட்டனால்டிஹைடு ஆல்டால்
(A ) CH3COCl அசிட்டைல் குளோரைடு
(B ) CH3CHO அசிட்டால்டிஹைடு
(C )\({ CH }_{ 3 }{ \underset { \underset { OH }{ | } }{ CH } }-{ CH }_{ 2 }{ CHO }\) ஆல்டால்
(D) CH-CH=CH-CHO குரோட்டனால்டிஹைடு
3.
bcc அமைப்பில்
மூலை அணுக்கள் X = 8 x \(\frac { 1 }{ 8 } \) = 1 அணு
பொருள் மைய அணு Y = 1 x \(\frac { 1 }{ 1 } \) = 1 அணு
∴ வாய்ப்பாடு X1 Y1 அல்லது XY.
4.
1) அதிகளவு திரவ அம்மோனியாவை, காப்பர் சல்பேட் நீர்கரைசலுடன் சேர்ப்பதால் \(\left[\mathrm{Cu}\left(\mathrm{NH}_3\right)_4\right] \mathrm{SO}_4\) ஆகும்.
CuSO4 + 4NH3 ⟶ [Cu(NH3)4]SO4
2) இதிலுள்ள அணைவு அயனி [Cu(NH3)4]2+ ஆகும்.
\(\mathrm{CuSO}_4+4 \mathrm{NH}_3 \longrightarrow\left[\mathrm{Cu}\left(\mathrm{NH}_3\right)_4\right] \mathrm{SO}_4\)
5.
(i) இயற்கையில் காணப்படும் எவையும் மிகச் சரியாக இருக்கும் என்பதற்கில்லை.
(ii) அதேபோலவே படிகங்களும் சரியாக அமைந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
(iii) படிகங்கள் எப்போதும் அவைகளின் உட்கூறுகளில் ஒழுங்கமைப்பில் சில குறைபாடுகளைக் கொண்டிருக்கின்றன.
(iv) இத்தகைய குறைபாடுகள் அவைகளின் இயற் மற்றும் வேதிப் பண்புகளில் பாதிப்புகளை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பல்வேறு செயல்முறைகளில் முக்கியப் பங்காற்றுகின்றன.
(v) எ.கா சிலிக்கன் போன்ற படிகங்களுடன் மாசுக்களைச் சேர்த்து படிகக்குறைபாட்டினை ஏற்படுத்தும் போது அவற்றின் குறை மின்கடத்தும் திறன் அதிகரிக்கிறது.
(vi) படிக குறைபாட்டினைப் பொறுத்து இரும்பு நிக்கல் போன்ற ஃபெர்ரோ காந்தப் பொருட்களை காந்தத்தன்மை பெறச் செய்யவோ அல்லது காந்தத் தன்மையை இழக்கச் செய்யவோ இயலும்.
(vii) படிகக் குறைபாடுகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
(i) புள்ளிக் குறைபாடுகள்
(ii) கோட்டுக் குறைபாடுகள்
(iii) இடைச்செருகல் குறைபாடுகள்
(iv) கனஅளவு குறைபாடுகள்
6.
C4H9NO2 என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டினை உடைய நைட்ரோ சேர்மங்கள் பின்வரும் மாற்றியங்களை கொண்டுள்ளன
| மாற்றியம் | மாற்றியங்களின் அமைப்பு வாய்ப்பாடு |
| சங்கிலித் தொடர் மாற்றியம் இவைகளில் கார்பன் சங்கிலியின் நீளத்தில் மாற்றம் காணப்படுகிறது | CH3CH2CH2CH2NO2 1- நைட்ரோ பியூட்டேன் மற்றும் \({ CH }_{ 3 }{ \underset { \overset { | }{ { CH }_{ 3 } } }{ CH } }{ CH }_{ 2 }-{ NO }_{ 2 }\) 2-மீத்தைல் 1-நைட்ரோ புரோப்பேன் |
| இடமாற்றியம் இவைகளில் நைட்ரோ தொகுதியின் இடம் மாறுபடுகிறது | CH3CH2CH2CH2 - NO2 1- நைட்ரோ பியூட்டேன் \({ CH }_{ 3 }{ \overset { \underset { | }{ { NO }_{ 2 } } }{ CH } }{ CH }_{ 2 }-{ CH }_{ 3 }\) 2-நைட்ரோ பியூட்டேன் \({ CH }_{ 3 }-{ \underset { \overset { | }{ { CH }_{ 3 } } }{ \overset { \underset { | }{ { CH }_{ 3 } } }{ C } } }-{ NO }_{ 2 }\) 2-மெத்தில் 2-நைட்ரோ பியூட்டேன் |
| வினைசெயல் தொகுதி மாற்றியம் நைட்ரோ ஆல்கேன்கள், ஆல்கைல் நைட்ரைட்டுகளுடன் வினைசெயல் தொகுதி பெற்றுள்ளது. |
CH3CH2CH2CH2NO2 1- நைட்ரோ பியூட்டேன் மற்றும் CH3CH2CH2CH2O -N=O பியூட்டைல் நைட்ரேட் |
7.
போபஃப் (Popoff 's ) விதியினைக் கொண்டு சீர்மையற்ற கீட்டோன்களின் ஆக்ஸிஜனேற்றம் விளக்கப்படுகிறது. இவ்விதிப்படி, சீர்மையற்ற கீட்டோன்களை ஆக்ஸிஜனேற்றம் செய்யும்போது சிறிய ஆல்கைல் தொகுதியுடன் கீட்டோ தொகுதி இணைந்திருக்கும் வகையில் (C-C = O) பிணைப்பு பிளவுறுகிறது.
\(CH_{ 3 }-{ CH }_{ 2 }-{ CH }_{ 2 }-{ \underset { \overset { || }{ O } }{ C } }-CH_{ 3 }\)அடர் \(\overset { (O) }{ \underset { HNO_{ 3 } }{ \longrightarrow } } \)\(CH_{ 3 }-{ CH }_{ 2 }-COOH+CH_{ 3 }-COOH\)
பென்டன் -2-ஒன் புரோபனாயிக் அமிலம் எத்தனாயிக் அமிலம்
8.
i ) பீனால் \(\longrightarrow \) சாலிசிலால்டிஹைடு
ii ) பீனால்\(\longrightarrow \) பீனால்ப்தலீன்
iii ) கிளைகால் \(\longrightarrow \) 1, 4 டையாக்சேன்
9.
(i) உலோகம் மற்றும் உலோக ஆக்சைடுகளின் நானோ துகள்கள் பல்வேறு வேதி மாற்றங்களில் வினைவேக மாற்றிகளாக பயன்படுகின்றன.
(ii) நானோ வினைவேக மாற்றிகளானவை, ஒருபடித்தான மற்றும் பலபடித்தான வினைவேக மாற்றிகளைவிட சிறந்தவைகளாக உள்ளன.
(iii) ஒருபடித்தான வினைவேகமாற்றிகளைப் போலவே, நானோ வினை வேகமாற்றிகளும் 100% தேர்ந்தெடுக்கப்பட்ட மாற்றத்தையும், மேம்பட்ட விளைச்சலையும் தருகின்றன.
(iv) மேலும், இவை அதிவேக செயல்திறனைக் கொண்டுள்ளன.
(v) பலபடித்தான வினைவேகமாற்றிகளைப் போலவே, நானோ வினை வேகமாற்றிகளை மீளப்பெற்று, மறுசுழற்சி செய்ய முடியும்.
(vi) உண்மையில், நானோ வினை வேகமாற்றிகள் என்பவை கரையும் பலபடித்தான வினைவேக மாற்றிகளாகும்.
(vii) நானோ துகள்களால் வினையூக்கம் பெறும் வினைக்கு எடுத்துக்காட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
10.
(i ) இரண்டு அரை மின்கலன்களிலுள்ள மின்பகுளிக் கரைசல்கள் உப்புப் பாலத்தை பயன்படுத்தி இணைக்கப்படுகின்றன.
(ii ) ஜிங்க் மின்முனையின் நேர்மின்முனை ஆக்ஸிஜனேற்றத்தால் கரைசலில் Zn2+ அயனிச் செறிவு அதிகரிக்கிறது என்பதை நாம் கற்றறிந்தோம் .
(iii ) அதாவது, \({ SO }_{ 4 }^{ 2- }\) அயனிகளுடன் ஒப்பிடும்போது அதிகளவில் Zn2+ அயனிகளை கொண்டிருப்பதால் நேர்மின்முனைப்பகுதியானது அதிக நேர்மின்சுமையை பெறுகிறது.
(iv ) இதேபோல், எதிர்மின்முனைப் பகுதியில் Cu2+ அயனிகள் காப்பராக ஒடுக்கப்படுவதால், அதிக எதிர்மின்சுமையை பெறுகிறது.
(v ) அதாவது Cu2+ அயனிகளுடன் ஒப்பிடும்போது \({ SO }_{ 4 }^{ 2- }\) அயனிகள் அதிகமாக உள்ளன.
(vi ) இரண்டு பகுதிகளிலும் மின்நடு நிலைத்தன்மையை பராமரிக்கும் பொருட்டு , வினையுறா எதிரயனிகள் Cl- (உப்புப் பாலத்தில் வைக்கப்பட்டுள்ள KCl-லிருந்து உப்புப் பாலத்திலிருந்து நேர்மின் முனைப்பகுதிக்குள் நுழைகின்றன.
(vii ) அதே நேரத்தில் K + அயனிகள் உப்புப்பாலத்திலிருந்து எதிர்மின் முனைப்பகுதிக்குள் நகருகின்றன.
11.
கரைதிறன் பெருக்க மதிப்பை மோலார் கரைதிறன் மதிப்பிலிருந்து கணக்கிட முடியும். மோலார் கரைதிறன் என்பது ஒரு லிட்டர் கரைசலில் கரையக்கூடிய கரைபொருளின் அதிகபட்ச மோல் எண்ணிக்கை ஆகும்.
XmYn எனும் கரைபொருளுக்கு,
\({ X }_{ m }{ Y }_{ n(s) }\rightleftharpoons mX_{ (aq) }^{ n+ }+nY_{ (aq) }^{ m- }\)
மேற்காண் விகிதக்கூறு சமன்படுத்தப்பட்ட சமன்பாட்டிலிருந்து, 1 மோல் XmYn (s) பிரிகையடைந்து 'm ' மோல்கள் Xn+ அயனிகளையும் , 'n ' மோல்கள் Ym- அயனிகளையும் , உருவாக்குகிறது என்பதை நாம் அறிகிறோம். 's ' என்பது XmYn' இன் மோலார் கரைதிறன் எனில்
[Xn+] = ms மற்றும் [Ym -] = ns
\(\therefore \) Ksp = [Xn+]m [Ym-]n
Ksp = (ms)m(ns)n
Ksp = (m)m (n)n (s)m +s
12.
குளுக்கோஸின் வளைய அமைப்பு:
1.தான் முன்மொழிந்த குளுக்கோஸின் திறந்த சங்கிலி பென்டாஹைட்ராக்ஸில் ஆல்டிஹைடூ அமைப்பானது அதன் வேதி இயைபை முழுமையாக விளக்குவதாக அமையவில்லை என பிஷர் கண்டறிந்தார்.
2.சாதாரண ஆல்டிஹைடுகள் போலல்லாமல்,குளுக்கோஸ் ஆனது சோடியம் பைசல்பைட்டுடன்,படிக பைசல்பைட்டுடன் சேர்மத்தை உருவாக்கவில்லை.
3.குளுக்கோஸ் ஷிஃப் சோதனையை தரவில்லை மேலும் குளுக்கோஸின் பென்டா அசிட்டேட் பெறுதியானது டாலன்ஸ் வினைக்காரணி அல்லது பெல்லிங் கரைசல் ஆகியவற்றால் ஆக்சிஜனேற்றம் அடையவில்லை.
4.இந்த பண்புகளை திறந்த சங்கிலி அமைப்பு விளக்கவில்லை மேலும், படிகமாக்கப்படும் நிபந்தனைகளைப் பொருத்து குளுக்கோஸ் ஆனது வெவ்வேறு உருகுநிலைகளைக் (419 மற்றும் 423 K)கொண்ட இரண்டு வெவ்வேறு வடிவங்களில் படிகமாவது கண்டறியப்பட்டுள்ளது.
5.இவற்றை விளக்கும் பொருட்டு, படத்தில் காட்டியுள்ளவாறு ஹைட்ராக்ஸில் தொகுதிகளுள் ஒன்று ஆல்டிஹைடு தொகுதியுடன் வினைப்பட்டு வளைய அமைப்பு ( ஹெமிஅசிட்டால் வடிவம் உருவாகிறது என முன்மொழியப்பட்டது.
6.இதன் காரணமாக சீர்மையுள்ள ஆல்டிஹைடு கார்பனானது சீர்மையற்ற கார்பனாக மாற்றமடைவதால் இரண்டு மாற்றியங்கள் உருவாகின்றன.
7.இந்த இரண்டு மாற்றியங்கள் C1கார்பன் அணுவில் மட்டும் மாறுபட்ட அமைப்பை கொண்டுள்ளன.
8.இந்த மாற்றியங்கள் ஆனோமர்கள்(anomers)என்றழைக்கப்படுகின்றன.
9.குளுக்கோஸின் இரண்டு ஆனோமர் வடிவங்கள் α மற்றும்β-வடிவங்கள் என்றழைக்கப்படுகின்றன.
10. கார்பன் அணுக்கள் மற்றும் ஒரு ஆக்ஸிஜன் அணுவை உள்ளடக்கிய குளுக்கோஸின் இந்த வளைய அமைப்பானது பைரானின் அமைப்பை ஒத்துள்ள காரணத்தால் பைரனோஸ் வடிவம் எனப்படுகிறது.
11. தூய α மற்றும் β-(D) குளுக்கோஸ்ஆகியவற்றின் நியம சுழற்சி மதிப்புகள் முறையே 11.2°, 18.7° ஆகும்.
12. எனினும், தூய நிலையில் உள்ள இந்த சர்க்கரைகளில் ஏதேனும் ஒன்றை, நீரில் கரைக்கும்போது, நியம சுழற்சி மதிப்பு + 53o கொண்ட சமநிலையை அடையும் வரை α-D குளுக்கோஸ் மற்றும் β-D குளுக்கோஸ் ஆகியன, திறந்த சங்கிலி அமைப்பின் வழியாக மெதுவாக ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாற்றமடைகின்றன. இந்நிகழ்வானது மியுட்டா சுழற்சி என்றழைக்கப்படுகிறது.
13.
அணைவுச் சேர்மங்களின் பல்வேறு கண்டுணரப்பட்ட பண்புகளை VBT விளங்கினாலும் இக்கொள்கை பின்வரும் வரம்புகளை உடையது.
(i) அணைவுச் சேர்மங்களின் நிறங்களை இக்கொள்கை விளக்கவில்லை.
(ii) இது சுழற்சியால் ஏற்படும் காந்த திருப்பு திறனை மட்டுமே கருத்திற் கொண்டது. காந்தத் திருப்புத் திறனின் பிற கூறுகளை கருத்திற்கொள்ளவில்லை.
(iii) ஒரே உலோகத்தின் அணைவுச் சேர்மங்களில் சில, உள் ஆர்பிட்டால் அணைவுகளாகவும் மற்ற சில சேர்மங்கள், வெளி ஆர்பிட்டால் அணைவுகளாகவும் காணப்படுகின்றன.
(iv) ஏன் இவ்வாறு மாறுபட்ட அணைவுகள் உருவாகின்றன என்பதற்கு உரிய விளக்கத்தினை இக்கொள்கை தரவில்லை.
எடுத்துக்காட்டு : \(\left[ Fe\left( CN \right) _{ 6 } \right] ^{ 4- }\) ஆனது டையாகாந்தப்பண்புடையது (குறை சுழற்சி அணைவு) ஆனால் \(\left[ FeF_{ 6 } \right] ^{ 4- }\) ஆனது பாராகாந்தத் தன்மையுடையது (உயர் சுழற்சி அணைவு )
14.
பேக்கலைட் தயாரித்தல்:
1.பீனால் மற்றும் பார்மால்டிஹைடு ஆகியன இதில் ஒற்றைப்படிகளாக உள்ளன .
2.அமிலம் அல்லது கார வினையூக்கிகள் முன்னிலையில் இந்த ஒற்றைப்படி மூலக்கூறுகளை குறுக்க பலபடியாக்கல் வினைக்கும் உட்படுத்தி இந்த பலபடி பெறப்படுகிறது .
3 .பீனால் மூலக்கூறுகள் பார்மால்டிஹைடுடன் வினைப்பட்டு ஆர்த்தோ மற்றும் பாரா ஹைட்ராக்ஸி மீதில் பீனால்களை உருவாக்குகிறது.
4.இவை பீனாலுடன் தொடர்ச்சியாக வினைப்பட்டு நேவோலேக் என்று அழைக்கப்படும் நேர்கோட்டுப் பலபடிகளை உருவாக்குகின்றன.
5.நேவோலேக் பலபடியை தொடர்ந்து பார்மால்டிஹைடுடன் வெப்பப்படுத்தும் போது குறுக்க பிணைப்புகளை கொண்ட பேக்கலைட் உருவாகிறது.
பயன்கள் :
நேவோலேக் ஆனது பெயிண்டுகளில் பயன்படுகிறது அடுக்கு மரப்பலகைகளை ஒட்டுவதற்கு பயன்படும் பசை மற்றும் வார்னிஷ்களில் மிருதுவாக பேக்கலைட்டுகள் பயன்படுகின்றன .சீப்புகள் ,பேனாக்கள் போன்றவை தயாரிக்க கடினமான பேக்கலைட் பயன்படுகின்றன.
15.
p -தொகுதி தனிமங்களில், ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள முதல் தனிமமானது, அத்தொகுதியிலுள்ள மற்ற தனிமங்களிலிருந்து வேறுபடுகின்றன. இத்தகைய முரண்பட்ட பண்புகளுக்கு பின்வரும் காரணிகள் காரணமாக அமைகின்றன.
(i) முதல் தனிமத்தின் சிறிய உருவளவு
(ii) அதிக அயனியாக்கும் என்தால்பி மற்றும் எலக்ட்ரான் கவர் திறன்
(iii) இணைதிறன் கூட்டில் d ஆர்பிட்டால்கள் இல்லாதிருத்தல்
13 ஆம் தொகுதியின் முதல் தனிமமான போரான் ஒரு உலோகப்போலியாகும் . ஆனால் மற்ற தனிமங்கள் வினைத்திறன் மிக்க உலோகங்களாகும். மேலும் போரான் ஆனது 14 ஆம் தொகுதியைச் சார்ந்த சிலிக்கானுடன் மூலைவிட்ட தொடர்பை பெற்றுள்ளது. போரான் மற்றும் சிலிக்கானின் ஆக்சைடுகள் அவற்றின் அமிலப்பண்பில் ஒத்துள்ளன. இவை இரண்டும் எளிதில் நீராற்பகுப்படையும் சகப்பிணைப்பு ஹைட்ரைடுகளை உருவாக்குகின்றன. இதே போல் போரான் ட்ரைபுளுரைடைத் தவிர, இவ்விரு தனிமங்களின் ஹேலைடுகளும் எளிதில் நீராற்பகுப்படைகின்றன.
14 ஆம் தொகுதியில், முதல் தனிமமான கார்பன் ஒரு அலோகமாகும். அதேசமயம், மற்ற தனிமங்கள் உலோக போலிகளாகவோ (சிலிக்கான் & ஜெர்மானியம் ) அல்லது உலோகங்களாகவோ (டின் &லெட் ) உள்ளன. கார்பன் அணுவானது அது இடம்பெற்றுள்ள தொகுதியிலுள்ள மற்ற தனிமங்களைப் போலல்லாமல், C =C , C =O .. போன்ற பல்பிணைப்புகளை உருவாக்கும் தன்மையைப் பெற்றுள்ளது.
கார்பன் அணுவானது மற்றொரு கார்பன் அணுவுடனோ அல்லது மற்ற அணுக்களுடனோ நீண்ட சங்கிலித் தொடர் சேர்மங்களை உருவாக்கும் திறனைப் பெற்றுள்ளது. இப்பண்பு சங்கிலித்தொடராக்கம் என அறியப்படுகிறது. தொகுதியில் கீழாக செல்லும் போது சங்கிலித் தொடராக்கத்திறன் குறிப்பிடத்தகுந்த அளவில் குறைகிறது.(C >>Si >>Ge ~ Sn>Pb ).
15 ஆம் தொகுதியிலும், முதல் தனிமமான நைட்ரஜனானது அத்தொகுதியிலுள்ள மற்ற தனிமங்களிலிருந்து வேறுபடுகிறது. கார்பனைப் போன்றே நைட்ரஜன் அணுவும் பல்பிணைப்புகளை உருவாக்கும் தன்மையைப் பெற்றுள்ளது (N = N,C = N, N = O போன்றவை ...). தொகுதியிலுள்ள மற்ற தனிமங்களைப் போல அல்லாமல் நைட்ரஜன் ஒரு டையாகாந்தத்தன்மை கொண்ட வாயுவாகும்.
16 ஆம் தொகுதியிலும், முதல் தனிமமான ஆக்ஸிஜனும் ஈரணு மூலக்கூறாக வாயு நிலையில் காணப்படுகிறது. அது அதிக எலக்ட்ரான் கவர்திறன் தன்மையைக் கொண்டிருப்பதால் ஹைட்ரஜன் பிணைப்புகளை உருவாக்குகிறது.
17 ஆம் தொகுதியின், முதல் தனிமமான புளூரின் அதிகபட்ச எலக்ட்ரான் கவர்திறன் கொண்ட தனிமமாகும். தொகுதியிலுள்ள மற்ற தனிமங்களுடன் ஒப்பிடும்போது இது முற்றிலும் வேறுபட்ட பண்புகளைப் பெற்றுள்ளது
ஆக்ஸிஜனைப் போலவே புளூரினும் ஹைட்ரஜன் பிணைப்புகளை உருவாக்குகிறது. புளூரின் -1 ஆக்ஸிஜனேற்ற நிலையை மட்டுமே காட்டுகிறது, ஆனால் மற்ற ஹேலஜன்கள் -1 நிலையுடன் +1, +3,+5 மற்றும் +7 ஆக்ஸிஜனேற்ற நிலைகளையும் காட்டுகின்றன. புளூரின் வலிமை மிக்க ஒரு ஆக்ஸிஜனேற்றக் காரணியாகும், மேலும் ஹேலஜன்களில் புளூரின் மிக அதிக வினைத்திறன் கொண்ட தனிமமாகும் .
16.
சயனைடு வேதிக் கழுவுதல் : தங்கத் தாதுவை அடர்ப்பித்தலை எடுத்துக்காட்டாகக் கருதுவோம். தங்கத்தின் நன்கு தூள் செய்யப்பட்டத் தாதுவானது நீர்த்த சோடியம் சயனைடு கரைசலுடன் சேர்த்து காற்றினைச் செலுத்தி கழுவப்படுகிறது. தங்கமானது கரையக்கூடிய சயனைடு அணைவாக மாறுகிறது. அலுமினோ சிலிக்கேட் கனிமக் கழிவு கரையாமல் அப்படியே தங்குகிறது.
\(4Au_{ (s) }+8C{ N }^{ - }_{ (aq) }+O_{ 2(g) }+2H_{ 2 }{ O }(1)\rightarrow 4\left[ Au(CN)_{ 2 } \right] ^{ - }_{ (aq) }+4OH_{ (aq) }^{ - }\)
17.
எரிபொருள் மின்கலத்தில் ஹைட்ரஜன், எரிபொருளாகவும், ஆக்ஸிஜன், ஆக்ஸிஜனேற்றியாகவும், 200°C வெப்பநிலை மற்றும் 20-40 atm அழுத்தத்தில் பராமரிக்கப்படும் நீர்த்த KOH கரைசல் மின்பகுளியாகவும் செயல்படுகின்றன. Ni மற்றும் NiO ஆகியவற்றைக் கொண்டுள்ள நுண்துளைகளையுடைய கிராஃபைட் மின்முனையானது வினையுறா மின்முனையாக செயல்படுகிறது.
ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் வாயுக்கள் முறையே நேர்மின்முனை மற்றும் எதிர்மின்முனைகளில் குமிழிகளாக செலுத்தப்படுகின்றன. நேர்மின்முனையில் ஆக்ஸிஜனேற்றம் நிகழ்கிறது.
\(2 \mathrm{H}_2(\mathrm{~g})+4 \mathrm{OH}^{-}(\mathrm{aq}) \rightarrow 4 \mathrm{H}_2 \mathrm{O}(\mathrm{l})+4 e^{-}\)
எதிர்மின்முனையில் ஒடுக்கம் நிகழ்கிறது
\(\mathrm{O}_2(g)+2 \mathrm{H}_2 \mathrm{O}(\mathrm{l})+4 e^{-} \rightarrow 4 \mathrm{OH}^{-}(a q)\)
ஒட்டுமொத்த வினை
\(2 \mathrm{H}_2(g)+\mathrm{O}_2(g) \rightarrow 2 \mathrm{H}_2 \mathrm{O}(\mathrm{l})\)
மேற்கண்ட வினையானது ஹைட்ரஜனின் எரிதல் வினையை ஒத்துள்ளது. எனினும், அவை நேரடியாக வினைபுரிவதில்லை. அதாவது ஆக்ஸிஜனேற்றம் மற்றும் ஒடுக்கம் வினைகள் முறையே நேர்மின்முனை மற்றும் எதிர்மின்முனைகளில் தனித்தனியாக நிகழ்கின்றன. H2 - O2 எரிபொருள் மின்கலத்தைப் போலவே புரப்பேன் -O2 மற்றும் மீத்தேன் -O2, போன்ற எரிபொருள் கலன்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
18.
(i) கருஊதா நிறம் கொண்ட மாங்கனீசு சேர்மம் KMnO4(A) ஆகும்
(ii) KMnO4 ஐ சூடுபடுத்தும் போது சிதைவடைந்து K2MnO4 (B), MnO2 (C) மற்றும் O2 ஐ தருகிறது
\(\underset { (C) }{ { 2MnO }_{ 2 } } +4KOH\underrightarrow { \Delta } { K }_{ 2 }Mn\underset { (B) }{ { O }_{ 4 }+ } \underset { (C) }{ { MnO }_{ 4 } } +{ O }_{ 2 }\)
(iii) MnO2(C) ஐ KOH உடன் வினைபுரியச் செய்யும் போது K2MnO4 (B) ஐ தருகிறது
\(\underset { (C) }{ { 2MnO }_{ 2 } } +4KOH+{ O }_{ 2 }\rightarrow { K }_{ 2 }Mn\underset { (B) }{ { O }_{ 4 }+ } { H }_{ 2 }O\)
(iv) மேலும் MnO2 (C) ஐ NaCl மற்றும் H2SO4 உடன் சூடுபடுத்தும் போது குளோரின் வாயு வெளியேறுகிறது
\(\underset { (C) }{ { MnO }_{ 2 } } +4NaCl+{ 4H }_{ 2 }S{ O }_{ 2 }\rightarrow MnCl\underset { (D) }{ _{ 2 }+ } 4NaH{ SO }_{ 4 }+{ Cl }_{ 2 }+2{ H }_{ 2 }O\)
| சேர்மம் | வாய்பாடு | பெயர் |
| A | KMnO4 | பொட்டாசியம் பெர்மாங்கனேட் |
| B | K2MnO4 | பொட்டாசியம் பெர்மாங்கனேட் |
| C | MnO2 | மாங்கனீசு டை ஆக்ஸைடு |
| D | MnCl2 | மாங்கனீசு குளோரைடு |
19.
i) வினைபடு பொருட்களின் நிலைமை மற்றும் இயைபு:
1. ஒரு வேதி வினையில், வினைபடு பொருட்களில் உள்ள சில பிணைப்புகள் பிளவுறுத்தல் மற்றும் சில புதிய பிணைப்புகள் உருவாதல் ஆகியவற்றின் காரணமாக வினைவிளை பொருட்கள் உருவாகின்றன.
இச்செயல்முறையோடு தொடர்புடைய நிகர ஆற்றல் மாற்றமானது, வினைபடு பொருட்களின் தன்மையைப் பெற்றுள்ளன.
எ.கா: பெர்ரஸ் அம்மோனியம் சல்பேட் மற்றும் KMnO4 ஆகியவற்றிற்கு இடையே நிகழும் வினை விரைவாக நடைபெற்று, குளிர்ந்த நிலையிலேயே KMnO4 ன் இளஞ்சிவப்பு நிறம் மறைகிறது.
2. ஆனால் ஆக்சாலிக் அமிலம் மற்றும் KMnO4 ஆகியவற்றிற்கு இடையே நிகழும் வினை மெதுவாக நடைபெறுவதால், வெப்பப்படுத்தும் போதே வினை நிகழ்ந்து KMnO4 ன் இளஞ்சிவப்பு நிறம் மறைகிறது.
3. வினைபடு பொருட்களின் இயற்பியல் நிலைமை வினைவேகத்தை பாதிக்கிறது.
4. வாயு நிலை வினைகள், திட மற்றும் திரவ நிலைமை வினைபடு பொருட்களின் வினைகளை விட விரைவாக நடைபெறும்.
எ.கா: திட சோடியம் மற்றும் திட அயோடினுக்கு இடையேயான வினையோடு ஒப்பிடும் போது அயோடின் ஆவியுடன் உலோக சோடியத்தின் வினைவேகமாக நடைபெறும். திண்ம காரீய நைட்ரேட் மற்றும் திண்ம பொட்டாசியம் அயோடைடு ஆகியவற்றை கலக்கும் போது மஞ்சள் நிறம் மெதுவாக உருவாகிறது. ஆனால் இவ்விரண்டின் நீர்க்கரைசல்களை சேர்க்கும் போது வினைவேகமாக நடைபெற்று மஞ்சள் நிறம் உடனடியாகத் தோன்றுகிறது.
ii) வினைபடு பொருட்களின் செறிவு:
1. வினைபடு பொருட்களின் செறிவு அதிகரிக்கும் போது வினையின் வேகமும் அதிகரிக்கின்றது.
2. இதனை மோதல் கொள்கையைப் பயன்படுத்தி விளக்கலாம்.
3. வினைவேகமானது மூலக்கூறுகளுக்கிடையே நடைபெறும் மோதல்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அமைகிறது.
4. செறிவு அதிகரிக்கும் போது, மோதல் அதிகரிப்பதால், வினைவேகமும் அதிகரிக்கின்றது.
iii) வினை பொருளின் புறப்பரப்பளவினால் ஏற்படும் விளைவு:
1. வினை பொருளின் உருவளவு குறையும் போது அதன் புறப்பரப்பளவு அதிகரிக்கின்றது.
2. வினைபடு பொருட்களின் புறப்பரப்பளவு அதிகரிப்பதால் ஒரு லிட்டர் கன அளவில் ஒரு வினாடியில் அதிக மோதல்கள் நடைபெற வாய்ப்பு ஏற்படுகிறது.
3. எனவே வினைவேகம் அதிகரிக்கின்றது.
எ.கா: தூளாக்கப்பட்ட கால்சியம் கார்பனேட், அதே அளவுடைய பளிங்குக் கல்லுடன் (CaCO3) ஒப்பிடும் போது நீர்த்த HCl அமிலத்துடன் வேகமாக வினைபுரிகின்றது.
iv) வெப்பத்தின் விளைவு:
1. பொதுவாக வெப்பநிலை அதிகரிக்கும் போது வேதிவினை வேகம் அதிகரிக்கிறது.
2. பெரும்பாலான வினைகளுக்கு 10oC வெப்பநிலை அதிகரிப்பிற்கு வினைவேகம் தோராயமாக இரு மடங்கு அதிகரிக்கும்.
எ.கா: மெக்னீசியம் குளிர்ந்த நீரை விட, சுடு நீரில் வேகமாக வினைபுரிந்து காரக் கரைசலை உருவாக்குவதை, சுடு நீரில் ஃபீனால்ப்தலின் இளஞ்சிவப்பு நிறமாக மாறுவதிலிருந்து அறியலாம்.
v) வினைவேக மாற்றியின் விளைவு:
1. எந்த ஒரு நிரந்தரமான வேதி மாற்றத்திற்கும் உட்படாமல் வினையின் வேகத்தினை மாற்றியமைக்கும் பொருள் வினைவேக மாற்றி எனப்படும்.
2. வினைவேக மாற்றிகள் வினைகளில் பங்கேற்றால், வினையின் இறுதியில் அவை மீளவும் பெறப்படுகின்றன.
3. வினைவேக மாற்றி வினையின் கிளர்வு ஆற்றலை குறைக்கிறது.
4. எனவே, ஆற்றல் தடையினை கடந்து சென்று விளைபொருளாக மாறும் வினைபடு மூலக்கூறுகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. இதனால் வினைவேகமும் அதிகரிக்கின்றது.
20.
அயனிப் படிகங்களின் அணிக்கோவை புள்ளிகளில் சம எண்ணிக்கையில் நேர் மற்றும் எதிர் அயனிகள் இல்லாமல் வெற்றிடம் காணப்படுவதால் ஏற்படும் படிகக் குறைபாடு ஷாட்கி குறைபாடு எனப்படும்.
(i) இக்குறைபாடு படிகத்தின் வேதிவினைக்கூறு விகிதத்தினை மாற்றியமைப்பதில்லை,
(ii) நேரயனியின் உருவளவு, எதிரயனியின் உருவளவுடன் ஏறத்தாழ ஒத்திருக்கும் அயனிகளைக் கொண்ட படிகங்களில் இக்குறைபாடு காணப்படுகிறது.
(iii) படிகங்களில் அதிக அளவு ஷாட்கி குறைபாடு காணப்பட்டால் அவைகளின் அடர்த்தி குறையும்.
(iv) ஷாட்கி குறைபாடானது, படிகங்களில் அணுக்கள் அல்லது அயனிகள் படிக அணிக்கோவைத் தளம் முழுமைக்கும் நகர்வதற்கு ஒரு எளிய வழியினை ஏற்படுத்துகிறது.
(v) எ.கா. சோடியம் குளோரைடு
21.
குளோரோ பென்சீன்:
300 வளிமண்டல அழுத்தம் மற்றும் 633 K வெப்பநிலை கொண்ட மூடிய கலனில் வைத்து குளோரோ பென்சீனை 6-8% NaOH கொண்டு நீராற்பகுக்கும் போது முதலில் சோடியம் பீனாக்ஸைடு கிடைக்கிறது. இதனை நீர்த்த HCl கொண்டு வினைப்படுத்த பீனால் கிடைக்கிறது.

ஐசோபுரப்பைல் பென்சீன்:
523 K வெப்பநிலையில் H3PO4, வினையூக்கி முன்னிலையில் ஒரு மூடிய கலனில் பென்சீன் மற்றும் புரப்பீன் கலந்த கலவையை வெப்பப்படுத்தும் போது கியூமின் (ஐசோபுரப்பைல் பென்சீன்) கிடைக்கிறது. கியூமின் மற்றும் 5% நீரிய சோடியம் கார்பனேட் கரைசலுடன் காற்றை செலுத்தும்போது ஆக்ஸிஜனேற்றமடைந்து கியூமின் ஹைட்ரோபெராக்ஸைடு கிடைக்கிறது. இதனை நீர்த்த அமிலத்துடன் வினைப்படுத்தும் போது பீனால் மற்றும் அசிட்டோன் கிடைக்கிறது. அசிட்டோன் இவ்வினையில் முக்கிய துணை விளைபொருளாக கிடைக்கிறது.

22.
அ) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வெவ்வேறு வகை ஒற்றைப்படி மூலக்கூறுகளைக் கொண்டுள்ள பலபடியானது, பல்லின பலபடி என்றழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, SBR இரப்பர் (Buna-S) எனும் பலபடியானது ஸ்டைரீன் மற்றும் பியூட்டாடையீன் ஆகிய ஒற்றைப்படி மூலக்கூறுகளைக் கொண்டுள்ளது பல்லின பலபடிகள், ஒற்றைப்பலபடிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பண்புகளைக் கொண்டுள்ளன.
ஆ) பியூனா-S இது ஒரு பல்லின பலபடியாகும். இது, சோடியம் முன்னிலையில் பியூட்டா 1,3 டையீன் மற்றும் ஸ்டைரீன் ஆகியவற்றை 3:1 என்ற விகிதத்தில் சேர்ப்பு பலபடியாக்கலுக்கு உட்படுத்துவதன் மூலம் பெறப்படுகிறது.
23.
இரண்டும் (அ) அதற்கு மேற்பட்ட கரைசல்களை ஒன்றாக கலக்கும் போது, இறுதி செறிவானது முதன்மை கரைகளிலிருந்து மாறுபடும்.
மோலாரிட்டி = \(\frac{n}{v}\) (அ) n = மோலாரிட்டி \(\times\) v
கலவையின் மொத்த கன அளவு
= 0.15 + 0.1 = 0.25 L
\(\mathrm{Pb}\left(\mathrm{NO}_3\right)_2 \rightleftharpoons \mathrm{pb}^{2+}+2 \mathrm{NO}_3^{-}\)
0.1 M 0.1 M 0.2 M
\(\begin{aligned}
\mathrm{n}_{\mathrm{pb}}^{2+}=0.1 \times 0.15=0.015 \mathrm{~mol}
\end{aligned}\)
[pb2+]கலவை\(\begin{aligned}
={\frac{\mathrm{n}}{\mathrm{v}}=\frac{0.15}{0.25}=0.06 \mathrm{M}}
\end{aligned}\)
\(\begin{aligned}
\mathrm{NaCl} \rightleftharpoons \mathrm{Na}^{+}+\mathrm{Cl}^{-}
\end{aligned}\)
0.2 M 0.2 M 0.2 M
ncl- = 0.2 \(\times\) 0.1 = 0.02 mol
[cl-]கலவை = \(\frac{0.02}{0.25}=0.08 M\)
அயனிப் பெருக்கம் (IP) = [Pb2+][Cl-]2
\(\begin{aligned}
=0.06 \times(0.08)^2
\end{aligned}\)
\(\begin{aligned}
=3.84 \times 10^{-14}
\end{aligned}\)
\(\begin{aligned}
\therefore 3.84 \times 10^{-14}>1.2 \times 10^{-5}
\end{aligned}\)
\(\therefore\) அயனிப்பெருக்கம் > கரைதிறன் பெருக்கம்
\(\therefore\) pbCl2 வீழ்படிவாகும்
24.
\( \mathrm{k} =\mathrm{Ae}^{-\frac{\mathrm{E}_a}{R T}} \\ \log \mathrm{k} =\log \mathrm{A}-\frac{\mathrm{E}_{\mathrm{a}}}{2.303 \mathrm{RT}} \\ \log \mathrm{A} =\log \mathrm{k}-\frac{\mathrm{E}_{\mathrm{a}}}{2.303 \mathrm{RT}} \\ \mathrm{k} =1.8 \times 10^{-5} \mathrm{~s}^{-1} \\ \mathrm{E}_{\mathrm{a}} =22.5 \mathrm{~K} \mathrm{cal} \mathrm{mol}^{-1} \\ =22500 \mathrm{cal} \mathrm{mol}^{-1} \\ \mathrm{~T} =313 \mathrm{~K} \\ \mathrm{R} =1.987 \mathrm{cal} \mathrm{mol}^{-1} \mathrm{~K}^{-1} \\ \log \mathrm{A} =\log \left(1.8 \times 10^{-5}\right)+\frac{22500}{2.303 \times 1.987 \times 313} \\ \log \mathrm{A} =\log 1.8-5 \log 10+15.7 .1 \\ =0.2553-5+15.71 \\ \log \mathrm{A} =10.9653, \quad \mathrm{~A}=\mathrm{Antilog} 10.9653 \)
\(=9.2 \times 10^{10}\) மோதல்கள் விநாடி-1
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards