12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/03/2021
12ஆம் வகுப்பு வணிகவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Commerce Reduced Syllabus Creative Two mark Question with Answer key - 2021(Public Exam)
12ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
நுகர்வோர் ஒரு பொருளை வாங்கும் பொழுது எவ்வாறு வாங்கக்கூடாது?
2.
திருமதி இராஜி என்பவர் ஒரு தொலைக்காட்சி வாங்குகிறார். அதன் தரத்தில் குறைபாடு, ஆனால் அவரது உறவினர் முத்து என்பவர் புகார் அளிக்கலாமா?
3.
ஒரு நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் மனுவை தாக்கல் செய்யும் முன் செய்ய வேண்டியவை யாவை?
4.
செபியின் அமைப்பு உறுப்பினர்கள் கூறு?
5.
செபி இந்தியாவில் எப்போது ஏற்படுத்தப்பட்டது?
6.
நுகர்வோர்கள் சட்டப்படி எவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள்?
7.
நுகர்வோரியல் என்றால் என்ன?
8.
ஒரு இயக்குனர் தனக்குண்டான பணியை வேறு எவரிடமும் ஒப்படைக்கலாமா?
9.
பங்கெடுப்பாளர் என்பவர் யார்?
10.
புதிய தொழில் நிறுவனங்கள் அமைக்க தொழில் முனைவோருக்கு வழங்கப்படுவதை பட்டியலிடுக.
11.
நிறும செயலரின் பொறுப்புகள் யாவை?
12.
தூண்டப்பட்ட தொழில் முனைவோர் என்பவர் யார்?
13.
விலை என்பது யாது?
14.
பண்டமாற்று பரிவர்த்தனையின் பங்கேற்பாளர்கள் யாவர்?
15.
"வர்த்தக வட்டம்" என்றால் என்ன?
16.
மறு விற்பனை பத்திர சந்தை என்பதன் பொருள் யாது?
17.
இந்திய பங்குச் சந்தையில் மூன்று பங்கு பரிவர்த்தனை நிலையங்களைக் கூறு
18.
புதிய பொருளாதார கொள்கைக்கு அடித்தளமாக விளங்கியது எது?
19.
உலகமயமாக்கல் என்றால் என்ன?
20.
வணிக சுற்றுச் சூழல் என்றால் என்ன?
21.
பணி ஒப்பந்தம் என்றால் என்ன? (அல்லது)
வேலை வாய்ப்பு ஒப்பந்தம் என்றால் என்ன?
22.
சோதனை ஆய்வுத் தேர்வுக்கு எடுத்துக்காட்டுடன் தருக.
23.
தூய்மை இரசீது என்பதன் பொருள் யாது? எடுத்துக்காட்டு தருக
24.
பணச் சந்தைக்கு எடுத்துக்காட்டு தருக
25.
பழைய பணியாளர்களை திருப்திப்படுத்துவது எப்படி?
26.
பதவி இறக்கம் என்றால் என்ன?
27.
முதல் நிலைச் சந்தையில் எவ்வாறு மூலதனத்தை திரட்டலாம்?
28.
இந்திய உடனடி பங்கு மாற்றத்தின் நன்மைகளைக் கூறுக
29.
மனித வளத்தை நிர்வகிப்பதற்கு முக்கியமானதாக கருதப்படுவது எது?
30.
மனித வளத்தின் வரைவிலக்கணம் தருக.
31.
முதல் நிலைச் சந்தை என்றால் என்ன?
32.
செயல் முனைவோர்கள் என்பவர்கள் யார்?
33.
எதன் அடிப்படையில் குறிக்கோள்கள் கட்டமைக்கப்படுகின்றன?
34.
யாரால் குறிக்கோள்களை மறு ஆய்வு செய்யப்படுகிறது?
35.
எப்பொழுது காசோலையில் கேட்டவுடன் தரவேண்டும் என்ற கட்டளை தேவை இல்லாதது?
36.
காசோலையை பென்சிலால் எழுதலாமா? ஏன்?
37.
புதுமைப்படுத்துதல் உள்ளடக்கியது எது?
38.
புதுமைப்படுத்துதல் என்றால் என்ன?
39.
திரு. டேலரின் அறிவியல்பூர்வ மேலாண்மைத் தத்துவம் யாது?
40.
வேலை வாய்ப்பு உலகில் நுழைவதற்கு "சிறந்த கடவுச்சீட்டு" எது?
41.
பசுமை சந்தைப்படுத்தல் என்றால் என்ன?
42.
பெயரிடல் என்றால் என்ன?
43.
வசதிப் பணிகள் என்றால் என்ன? (அல்லது) துணைப் பணிகள் என்றால் என்ன?
44.
சந்தையிடுகை கலவையின் வரைவிலக்கணம் தருக
45.
தயாரிப்பு பொருள் மாற்று சந்தை என்பது யாது?
46.
பன்னாட்டு சந்தை என்றால் என்ன?
47.
பயிற்சி முறை - வரைவிலக்கணம் தருக.
48.
மொத்த விற்பனை சந்தைக்கும் மற்றும் சில்லறை விற்பனை சந்தைக்கும் இடையே உள்ள நான்கு வேறுபாடுகளை குறிப்பிடுக.
49.
தலால் தெரு - விளக்குக.
1.
1. பொருளை வாங்கும் போது உறையுடன் கூடியதான நிகர எடையாக வாங்கக்கூடாது
2. அதன் எடை மற்றும் அளவை கண்காணிக்க வேண்டும்
2.
(i) ஆம், புகார் அளிக்கலாம்
(ii) பாதிக்கப்பட்டவர் மட்டுமே புகார் அளிக்கவேண்டும் என்ற அவசியமில்லை அவருக்கு பதில் வேறொருவரும் புகார் அளிக்கலாம்
3.
புகார் மனுவை பொருள் தயாரித்த நிறுவனத்திற்கோ அல்லது பொருள் விற்ற நிறுவனத்திற்கோ சட்டப்படி அறிவிப்பை நுகர்வோர் அனுப்ப வேண்டும்
4.
1. தொழில்நுட்ப இயக்குநர்
2. துணை இயக்குநர்கள்
3. உதவி இயக்குநர்கள்
4. தொழில்நுட்ப உதவியாளர்கள்
5.
(i) இந்தியாவில் முதன் முதலில் 1988ல் சந்தைப் பாத்திரங்களை ஒழுங்குபடுத்தும், ஒரு சட்டபூர்வமற்ற அமைப்பாக நிறுவப்பட்டது
(ii) 1992 ஆம் ஆண்டு மே மாதம் 12ம் தேதி இந்திய அரசாங்கத்தால் சுயமாக இயங்கக்கூடிய ஒரு அமைப்பாக உருவாக்கப்பட்டது
6.
(i) விற்பனையாளர்கள் பொருட்களை விற்கும் போதே அதற்கான இடாப்பில் விற்ற பொருள் திரும்ப பெற மாட்டாது என அச்சிட்டு வெளியிடுகின்றனர்
(ii) இதனை அரசு கண்டு கொள்வதில்லை. எனவே சட்டப்படியே நுகர்வோர்கள் ஏமாற்றப்படுகிறார்கள்
7.
வாங்குவோருக்கு விற்போருக்கும் இடையேயான பரிமாற்றத்தில் சமநிலையை ஏற்படுத்துவதற்கான சமுதாய முயற்சியே நுகர்வோரியல் எனப்படும்
8.
1. இயக்குனர் தாங்கள் பணியை தாங்களே செய்ய வேண்டும்.
2. நிறும செயல்முறை விதிகளில் அனுமதி வழங்கியிருந்தால் அல்லது சிறப்பு நிபுணத்துவம் கோருகின்ற சில வேலைகளை இயக்குனர் செய்ய இயலாவிடின் இயக்குனர் தனது பணியை வேறு ஒருவருக்கு ஒப்படைக்கலாம்.
9.
அமைப்பு முறை ஏட்டில் கையொப்பமிடுபவர்களை பங்கெடுப்பாளர் என்று அழைக்கப்படுகின்றனர்.
10.
(i) நிதி உதவி
(ii) காப்பீடு
(iii) மானியம்
(iv) பயிற்சி
(v) தொழில் தொடங்க ஆரம்பநிலை தொழில்நுட்பம்
(vi) வணிக கடன்கள்
(vii) சிறப்பு ஊக்கம்
11.
1. நிறுமக் கொள்கைகள் குறித்த இரகசியம் காத்தல்
2. நிதிசார்ந்த முடிவுகள் எடுத்தல்
3. பணியாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்தல்
12.
அரசு வழங்கும் சலுகைகள், மானியங்கள் மற்றும் வரிவிலக்கு போன்ற தொழில் முனைவுக்கு சாதகமான செயலால் கவர்ந்திழுக்கப்பட்டு தொழில் முனைவில் இறங்குபவர்.
13.
1. பொருளின் விற்பனைக்கான மறுபயனே விலை எனப்படும்.
2. பொருளை மற்றொரு பொருளுக்கு மாற்றாக பரிமாற்றம் செய்து கொள்வது விலை ஆகாது.
14.
1. தயாரிப்பாளர்கள்
2. முகவர்கள்
3. நிறுவனங்களின் வியாபாரிகள்
4. ஊக வணிகர்கள்
15.
பங்குச் சந்தைக்கு அங்கீகரிக்கப்பட்ட தரகர்கள் தினசரி வருகை தந்து ஒன்றுகூடி வணிக நடவடிக்கைகளின் ஈடுபடும் ஒரு குறிப்பிட்ட சந்தை பகுதி "வர்த்தக வட்டம்" என்று அழைக்கப்படுகிறது
16.
(i) நிறுவனங்களால் ஏற்கனவே வெளியிடப்பட்ட பங்குகள், கடனீட்டுப் பத்திரங்கள் விற்பனையில் ஈடுபடுவதற்கு மறு விற்பனை பத்திர சந்தை என்று பெயர்
(ii) இது இரண்டாம் நிலை சந்தை என்றும் அழைக்கப்படுகிறது
17.
1. தேசிய பங்குச் சந்தை (NSE)
2. இந்திய உடனடிப் பங்கு மாற்றகம் (OTCEI)
3. ஒருங்கிணைந்த இந்திய பங்கு பரிவர்த்தனை லிமிடெட் (ISE)
18.
1. வணிகம் மற்றும் வரிவிதிப்பு தொடர்பான பொது உடன்பாடுகள் குறித்து ஆர்தர் டங்கல் கொடுத்த வரைவுத்திட்டம்.
2. 1991 ஆம் ஆண்டு இந்தியாவில் செயல்படுத்தப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கை ஆர்தர் டங்கல் வரைவுத்திட்டத்தை ஒட்டியே அமைந்தது.
19.
உலக பொருளாதாரத்துடன் ஒரு நாட்டின் பொருளாதாரம் இணைவது உலகமயமாக்கல் எனப்படும்.
20.
வணிகத்தை சுற்றியுள்ள அதே சமயம் வணிகத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகின்ற உட்புற மற்றும் வெளிப்புற காரணிகளின் தொகுப்பு.
21.
1. இறுதியான தேர்ந்தெடுத்தல் செயல்முறை முடிந்த பிறகு சில ஆவணங்களில் நிறுவனமும் தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களும் கையொப்பம் இடும் ஆவணம் பணி ஒப்பந்தம் ஆகும்.
2. இதைத் தயாரிப்பது அவசியமானது ஆகும்.
22.
அ) ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பித்தவரை வாகனம் ஓட்டி காட்டச் சொல்லுதல்.
ஆ) இசைப்பள்ளி மாணவரை இசைக்கச் சொல்லிக் கேட்டல்.
இ) ஆசிரியர் பணிக்கானவரை பாடம் நடத்திக் காட்டிச் சோதித்தல்.
23.
எந்த ஒரு ஆவணமும் எழுதி இணைக்கப்படாத இரசீதுகள் தூய்மை இரசீதுகள் எனப்படும். எ.கா: தொடர்வண்டி இரசீது மற்றும் சரக்குந்து இரசீது
24.
(i) கருவூலச் சீட்டுகள்
(ii) வணிக இரசீதுகள்
(iii) வைப்பு சான்றிதழ்கள்
(iv) அரசுப் பத்திரங்கள்
25.
பழைய பணியாளர்களை திருப்திப்படுத்த அவர்களது உறவினர்கள் அல்லது நண்பர்களை வேலைக்கு அமர்த்தலாம்.
26.
பணியில் தொடர்ந்து குறைவான செயல்திறனை வெளிப்படுத்தும் பணியாளர், செயல் திறனின் முக்கியத்துவத்தை உணரும் வகையில் அவரை மேல்நிலைப் பணியிலிருந்து கீழ்நிலைப் பணிக்கு மாற்றுவது "பதவி இறக்கம்" எனப்படுகிறது.
27.
முதல் நிலைச் சந்தையில் மூன்று வழிகளில் மூலதனத்தை திரட்டலாம். அவை,
1. பொது வெளியீடு
2. உரிமை வெளியீடு
3. தனியார் வெளியீடு
28.
முதலீட்டாளர் மற்றும் நிறுமத்திற்கு சில பிரச்சனைகள் இருந்தபோதும் வெளிப்படைத் தன்மை, விரைவான முடிவு, நெகிழ்வுத் தன்மை ஆகிய நன்மைகளை அளிக்கிறது.
29.
1. பணியாளர்களை ஊக்குவித்தல்
2. பங்கேற்கச் செய்தல்
3. ஒருங்கிணைத்தல்
30.
பீட்டர், எப். ட்ரக்கர் அவர்களின் கூற்றின்படி," மனிதன் அவனுக்கு கிடைக்கும் எல்லா வளங்களையும் கொண்டு வளர்ச்சி மற்றும் மேம்பாடு அடைய முடியும்.
31.
நிறுமங்கள் முதன் முதலில் பத்திரங்களை விற்பனை செய்வதில் பங்குபெறும் அனைத்து நிறுவனங்களையும் உள்ளடக்க பயன்படுத்தப்படும் சொல் முதல் நிலைச் சந்தை எனப்படும்
32.
(i) பிரெஞ்ச் மொழியில் இன்னிசை கச்சேரி மற்றும் மனமகிழ் கேளிக்கை நிகழ்வுகளை நடத்துபவர்கள் செயல் முனைவோர்கள் அழைத்தனர்
(ii) 16 ஆம் நூற்றாண்டில் இராணுவ தாக்குதல் நடத்துபவர்களையும், 17 ஆம் நூற்றாண்டில் பொறியியல் கட்டிடம் கட்டுதல் மற்றும் அதை பலப்படுத்தும் செயலில் இறங்கியவர்களையும் இவ்வார்த்தை குறித்தது.
33.
1. கிடைக்கக்கூடிய வளங்களின் அடிப்படையில் குறிக்கோள்கள் கட்டமைக்கப்படுகின்றன.
2. சில வளங்கள் போதுமானதாக இல்லை என்றால், அமைப்பின் குறிக்கோள்கள் அதற்கேற்றபடி மாற்றம் செய்யப்பட வேண்டும்.
34.
உயர் மேலாண்மை நிர்வாகி மாறும் சூழ்நிலைக்கு ஏற்ப குறிக்கோள்களை கட்டமைக்க நிறுவனத்தின் குறிக்கோள்களை மறுமதிப்பீடு செய்ய வேண்டும்.
35.
எப்பொழுது தரவேண்டும் என்ற நாள் குறிப்பிட்டு இருப்பின் கேட்டவுடன் கொடுக்க என்ற கட்டளை தேவையற்றது.
36.
(i) காசோலையில் பென்சிலால் எழுதுவதற்கு சட்டம் தடை விதிக்கவில்லை
(ii) இருப்பினும் மோசடி செய்யும் வாய்ப்பை கருதி வங்கியர்கள் தாங்கள் அச்சிட்டு தந்த காசோலைகளில் பென்சில் வைத்து எழுத அனுமதிப்பதில்லை
37.
1. புதிய தொழில்நுட்பம்
2. புதிய கையகப்படுத்துதல்
3. புதிய வடிவமைப்பிலான தயாரிப்பு
4. செலவு குறைப்பு
ஆகியவற்றை புதுமைப்படுத்துதல் உள்ளடக்கியுள்ளது.
38.
வியாபார உலகில் செய்யப்படும் மாற்றங்களை எதிர்கொள்ள ஊழியர்களையும், அமைப்பையும் தயார்நிலைப்படுத்தும் செயல்பாடு ஆகும்.
39.
1. தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகம் ஆகிய இரண்டுக்குமிடையே மிகப்பெரிய ஒத்துழைப்பு ஏற்படுகின்றது.
2. மேலாண்மை நடைமுறைகளின் முன்னேற்றத்திற்கு அறிவியல்பூர்வ மேலாண்மை முக்கிய பங்கு வகிக்கின்றது.
40.
வணிக உலகம் அல்லது அரசுத்துறை அல்லது தனியார் துறை போன்றவற்றின் வேலை வாய்ப்பு உலகில் வெற்றிகரமாக நுழைவதற்கு சிறந்த கடவுச்சீட்டு போன்றது "மேலாண்மை" ஆகும்.
41.
1. சுற்றுச் சூழலுக்கு எவ்வித தீங்கும் விளைவிக்காமல் சுற்றுப்புறச் சூழலுக்கு பாதுகாப்பாக சந்தைப்படுத்துவதை பசுமை சந்தைப்படுத்துதல் எனலாம்.
2. சுற்றுச் சூழல் சந்தைப்படுத்தலுக்கு சூழல் நட்பு சந்தைப்படுத்தல் எனவும் பெயர் உண்டு.
42.
போட்டி பொருட்களிலிருந்து வேறுபடுத்தி காண்பதற்கு ஒரு பெயரையோ அல்லது வணிகக் குறியோ இடப்படுவதற்கு பெயரிடல் எனப்படுகிறது.
43.
1. பண்டங்கள் மற்றும் பணிகளை உற்பத்தியாளர்களிடமிருந்து நுகர்வோருக்கு கொண்டு செல்வதற்கு உதவி புரியும் பணியையே துணைப் பணிகள் எனப்படும்.
2. இத்தகைய பணிகள் நேரடியாக பண்டங்களை மாற்றம் செய்வது அல்ல.
44.
அமெரிக்கா சந்தையிடுகை கழகத்தின் கூற்றுப்படி, "சந்தையிடுகை என்பது மக்கள் மற்றும் அவர்களின் நடவடிக்கைகளை உள்ளடக்கி பண்டங்கள் மற்றும் பணிகளை உற்பத்தியாளரிடமிருந்து நுகர்வோருக்கு கொண்டு சேர்ப்பதையே சந்தையிடுகை ஆகும்".
45.
1. தொழிற்சாலை சார்ந்த உற்பத்திப் பொருட்கள் இவ்வகை சந்தையில் மேற்கொள்ளப்படுகிறது.
எ.கா.: தோல், இயந்திர சாதனப் பொருட்கள்
46.
1. பண்டங்கள் மற்றும் பணிகளை பன்னாட்டு அளவில் சந்தையிடுகை செய்வதனை பன்னாட்டு சந்தை அல்லது உலகளாவிய சந்தை என அழைக்கப்படுகிறது.
2. வாங்குவோர் மற்றும் விற்போர் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட நாடுகளுக்கிடையே சந்தையிடுகையில் ஈடுபடுவர்.
47.
மதிஸ் மற்றும் ஜாங்சன் கூற்றுப்படி, "பயிற்சி என்பது கற்றல் நடைமுறை. இது ஊழியருக்கு திறன்கள், கருத்துக்கள், மனோபாவங்கள் மற்றும் இலக்குகளை அடைய உதவும் அறிவு".
48.
| வ.எண் | அடிப்படை | மொத்த விற்பனை சந்தை | சில்லறை விற்பனை சந்தை |
| 1. | பொருள் | உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக பொருட்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. | மொத்த விற்பனையாளர்களிடமிருந்து நேரடியாக பொருட்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. |
| 2. | கொள்முதல் அளவு | மொத்தமாக பொருட்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. | சிறு சிறு அளவில் பொருட்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. |
| 3. | யாருக்கு விற்பனை செய்யப்படுகிறது | சில்லறை விற்பனையாளருக்கு மொத்தமாக விற்பனை செய்யப்படுகிறது. | நுகர்வோர் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சிறு சிறு அளவில் விற்பனை செய்யப்படுகிறது. |
| 4. | யாருக்கு விற்பனை செய்யப்படுவதில்லை | நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படுவதில்லை. | நுகர்வோருக்கு தேவையான அளவில் விற்பனை செய்யப்படுகிறது. |
49.
(i) 1874 ஆம் ஆண்டு இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட முதல் பங்குச் சந்தை அமைந்த இடத்திற்கு தலால் தெரு என்று பெயர்.
(ii) தலால் என்ற வார்த்தைக்கு மராத்தி மொழியில் தரகர் அல்லது இடைத்தரகர் என்று பொருள்.
(iii) இங்கு இந்தியாவின் புகழ்பெற்ற பங்குச்சந்தையான பம்பாய் பங்குச் சந்தை மற்றும் பிற மதிப்புமிக்க நிறுவனங்களும் உள்ளன.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards