12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/03/2021
12ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Application Reduced Syllabus Creative Five mark Question with Answer key - 2021(Public Exam)
12ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
EDIFACT கூறுகள் பற்றி விவரி.
2.
பயன்பாட்டு அடுக்கில் உள்ள பிரபலமான அடுக்குகள் யாவை?
3.
வலையமைப்பு அடுக்கில் செயல்படும் முக்கியமான இணைய நெறிமுறைகள் யாவை?
4.
சமூக வலையமைப்புகளின் பயன்களை விரிவாக எழுதுக.
5.
வணிகத்தில் வலையமைப்பின் பயனை விரிவாக எழுதுக.
6.
கணினி வலையமைப்புகளின் பொதுவான பயன்பாடுகளை விளக்கமாக எழுதுக.
7.
அளப்புருக்களைக் கொண்ட செயற்கூறுகள் பற்றி விரிவாக எழுதுக.
8.
தரவுத்தளத்தில் பதிவை சேர்த்தலைப் பற்றி விவரி.
9.
SQL கட்டளைகளின் வகைகளை எழுதி விளக்குக.
10.
குறிப்பு வரைக:
1.பயனர் கட்டுப்பாட்டு உரைப் பாய்வு
2. தானமைவு உரைப் பாய்வு
11.
ஆவணத்தில் உரையை உள்ளிடுதல் பற்றி விளக்குக.
12.
பயனாளர் சேவையக கட்டமைப்பு வகைகளை விவரி.
13.
களப்பெயருக்கான விதிமுறைகளைப் பட்டியலிடுக.
14.
while மடக்கினை விவரி
15.
பேஜ்மேக்கரில் தொடர்புள்ள உரைத் தொகுதியை தொடர்பற்ற உரைத் தொகுதியாக மாற்ற வேண்டிய வழிமுறைகளை விவரி.
16.
ஈத்தர்நெட் தொடர்பியின் (Port) ஊசி விவரங்களை விவரி.
17.
நிகழ்நிலை வங்கிச் சேவையைப் பயன்படுத்தி நிதி பரிமாற்றம் செய்வதற்கானப் படிநிலைகளை விவரி.
18.
பிற மென்பொருளில் தயாரிக்கப்பட்ட கோப்புகளை பேஜ்மேக்கரில் பயனர் கட்டுப்பாட்டு உரைப்பாய்வு மூலம் எவ்வாறு செருகுவாய்? விவரி.
19.
மின் வணிகத்தில் நுகர்வோர்க்கான குறைபாடுகளை விவரி.
20.
மின்னணு வர்த்தகத்தின் பரிணாம வளர்ச்சியை விவரி.
21.
Crimping கருவியைப் பயன்படுத்தி ஈத்தர்நெட் வடத்தை உருவாக்குவதற்கான செயல்முறையை விவரி.
22.
நூலகங்களில் உள்ள பல்லூடகத் தொழில்நுட்பம் பயன்பாடுகளை விவரி.
23.
கணினியில் படங்களை உருவாக்கும் முறைகளை விவரி.
24.
குறியாக்கத் தொழில் நுட்பத்தை விவரி.
25.
PHP – ல் தரவுத்தளத்தில் பிழையை கையாளும் முறை மற்றும் தரவுத்தள மேலாண்மை செயல்முறை பற்றி விரிவாக விளக்கவும்.
1.
EDIFACT கூறுகள் (Elements):
EDIFACT கூறுகள் என்பது தரவுகளின் துணுக்கு ஆகும். இந்த தரவு உறுப்புகள் எளிமையாகவோ அல்லது கலப்பு நிலையில் இருக்கலாம்.
எடுத்துக்காட்டு:
DTM +11:200 606 200 730:203
EDIFACT ல் இந்த வரியை ஒரு பிரிவு என்கிறோம்.
ஒவ்வொரு குறியீட்டின் பொருளும் வருமாறு:
(i) DTM என்பது பிரிவு அடையாளம் மற்றும் அது பின்வரும் தரவுகள் தேதி /நேரம் என்பதைக் குறிக்கிறது.
(II) 11 என்பது ஒரு தரவு கூறு, இந்த எடுத்துக்காட்டில், ஒரு தகுதியாக்கி எந்த வகையான நிகழ்வு என்பதை விவரிக்கிறது. குறியீடு 11 என்றால் பொருட்கள் ஒப்படைப்பு நேரம்.
(iii) 200606200730 என்பது தரவு கூறு இங்கு இது CCYYMMDDHHMM என்ற வடிவத்தில் தேதியைக் குறிக்கிறது.
(iv) 203 என்பது மற்றொரு தரவு கூறு, இது தேதியின் வடிவத்தை குறிக்கும். இதன் பொருள் (D.188 என்ற பதிப்பில்) தேதியின் வடிவம் CCYYMMDDHHMM, CC-நூற்றாண்டு, YY-ஆண்டு, MM-மாதம், DD-தேதி, HH-மணி, MM-நிமிடம் )
2.
பயன்பாட்டு அடுக்கு (Application Layer): TCP / IP மாதிரியின் பயன்பாட்டு அடுக்கு OSI குறிப்பு மாதிரியின் தொடர், விளக்கக் காட்சி, பயன்பாட்டு அடுக்குகளை ஒத்திருக்கும். மிகப் பிரபலமான பயன்பாட்டு அடுக்கு நெறிமுறைகள்.
பின்வருமாறு:
(i) Hypertext Transfer protocol (HTTP):இது உலகளாவிய வலையின் முக்கிய பொறிமுறை ஆகும்.
(ii) File Transfer Protocol (FTP): சேவையகத்திலிருந்து பயனருக்கு முழுமையான கோப்புகளை அனுப்பவும் பெறவும் அனுமதிக்கிறது.
(iii)Telnet: இணையத்தில் ஒரு கணினியை மற்றொரு கணினியோடு இணைக்கிறது.
(iv) Simple Mail Transfer Protocol: மின்னஞ்சல் சேவைகளை வழங்குகிறது.
(v) Domain Name System: பிற கணினிகளை எண்களைக் காட்டிலும் பெயர்களைக் கொண்டு குறிப்பிடுகிறது.
3.
வலையமைப்பு அடுக்கில் செயல்படும் முக்கியமான இணைய நெறிமுறைகள் :
(i) இணைய நெறிமுறை (Internet protocol - IP):
பொட்டலங்களை வழங்க IP முகவரிகளைப் பயன்படுத்தி வழிப்படுத்தும் நெறிமுறை ஆகும். இது ஒரு நம்பகத் தன்மை இல்லாததாகும். இது தகவலை விநியோகிக்க உறுதி அளிக்கிறது.
(ii) முகவரி தீர்வு நெறிமுறை (Address Resolution Protocol - ARP):
IP MAC (Medium Access Control) முகவரிகளாக உறுதி செய்கிறது.(MAC முகவரி என்பது வலையமைப்பில் ஒவ்வொரு சாதனத்தையும் தனிப்பட்ட முறையில் கண்டறியும் வன்பொருள் அடையாள எண் ஆகும்.) அதாவது IP வலையமைப்பு முகவரியை MAC முகவரிக்கு இணைக்கிறது.
(iii) இணைய கட்டுப்பாட்டு செய்தி நெறிமுறை (Internet Control Message Protocol - ICMP):
இது பிழை செய்திகள் மற்றும் செயல்பாட்டுத் தகவல்களை அனுப்ப வலையமைப்பு சாதனங்களால் பயன்படுத்தப்படுகிறது.
எடுத்துக்காட்டு : ஹோஸ்ட் (Host) அல்லது ரவுட்டரை அணுக முடியவில்லை அல்லது கேட்கப்பட்ட சேவை வழங்கப்படவில்லை.
(iv) இணைய குழு மேலாண்மை நெறிமுறை (Internet Group Management Protocol - IGMP):
இது பல IP முகவரிகளை ஒரே நேரத்தில் பல குழுக்களின் செய்திகளை அனுப்புவதற்கு ஹோஸ்ட்கள் மற்றும் ரவுட்டர்களால் பயன்படுத்தப்படும் தொடர்பு நெறிமுறை ஆகும்.
4.
சமூக வலையமைப்புகளின் பயன்கள்:
மக்கள் சந்திக்கவும் மற்றும் ஒரு வேடிக்கையான இடத்தில் ஓய்வெடுப்பதை தவிர, சமூக வலைப்பின்னல் அதன் உறுப்பினர்களுக்கும் சமூகத்திற்கும் மேலும் பயனுள்ள நன்மைகளை தருகிறது.
1. நீண்ட தூர குழு தகவல் பகிர்வு:
நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மொபைல் போன் அழைப்புகளிலோ அல்லது உரை செய்திகளிலோ தொடர்பு கொள்ளலாம் என்றாலும், சமூக வலைகள் தொடர்பில் இருப்பதற்கு மேலும் சிறந்த சூழலை தருகின்றன.
2. புகைப்பட ஆல்பங்களையோ வீடியோக்களையோ பகிர்தல் பிறந்தநாள் வாழ்த்துக் கூறுதல் போன்றவற்றில் பலர் பங்கெடுப்பதால் இது சிறந்தது. மொத்தத்தில், கருத்துகளை வெளியிடும் நேரத்தில் ஒருவர் நிகழ்நிலையில் இருக்க வேண்டிய தேவையில்லை என்பதால் குழு கலந்துரையாடல்கள் மிகவும் வசதியானவை.
3. ஒளிபரப்பு அறிவிப்புகள் (Broadcast Announcement):
(i) இதன் மூலம் சமூக வலையமைப்பில் வரவிருக்கும் நிகழ்வுகள் மற்றும் விளம்பரம் பற்றி உள்ளூர் கடைகள் விளம்பரம் செய்யலாம்.
(ii) மேலும் நகரங்களில் அவசரகாலச் செய்திகளை மற்றும் இயற்கைப் பேரழிவுகள் ஆகியவற்றைப் பரப்புவது எளிதாகிறது.
(iii) வணிகங்கள் வாடிக்கையாளர்களுக்கு தனது பொருட்களை சந்தைப்படுத்த முடியும் (சில நேரடியான கருத்துகளை மீட்டெடுக்கின்றன).
4. பன்முக சிந்தனையை வளர்த்தல் (Fostering Diversity of Thought):
(i) சமூக வலைகள் ஒத்த பின்னணி மற்றும் ஆர்வம் கொண்ட மக்களை ஈர்ப்பதாக சிலரால் விமர்சிக்கப்படுகிறது.
(ii) உண்மையில், வெவ்வேறு கருத்துகளுடன் கூடிய மக்கள் நிகழ்நிலையில் இணையும்போது, பல விவாதங்கள் தனிப்பட்ட தாக்குதல்களாலும் மற்றும் "அக்கினி போர்கள் "(Flame wars) எனப்படும் குழு தாக்குதல்களாலும் சீரழிந்து போகின்றன.
(iii) நிகழ்நிலை விவாதங்கள் நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமானவை.
(iv) தனிநபர்கள் அதிக தீவிர கருத்துகளைத் தொடங்கினாலும், காலப்போக்கில், அவர்களது சிந்தனை, மற்றவர்களின் கருத்துகள் சிலவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
(v) இது அவசரச் சூழ்நிலையில் உள்ளவர்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும் மற்றும் நடப்பு விவகாரங்கள் பற்றித் தெரிந்து கொள்ளவும், சிலருக்கு வாழ்த்துச் சொல்லவும், பின் தொடர்பவர் மற்றும் அன்புக்குரிய நபருடன் தொடர்பு கொள்ளவும் எளிதாக இருக்கும்.
5.
வணிகத்தில் வலையமைப்பு:
1. இருபத்தோராம் நூற்றாண்டில் வெற்றிகரமான வணிக செயல்பாடுகளுக்கு கணினி வலையமைப்பு தொழில்நுட்பங்கள் அவசியமாகிறது.
2. இங்கு வேகமான கணினி வலையமைப்புகள்,வலிமையான இணையம் மற்றும் கம்பியில்லா தகவல்தொடர்பு வணிகத்தின் வழியை மாற்றிவிட்டன.
3. வணிகத்தில் ஒவ்வொரு நொடியும் பணம் என்று அனைவருக்கும் தெரியும்.
4. மின்-வங்கிச்சேவை மூலம் ஒருவருக்கொருவர் பணப் பரிவர்த்தனை செய்ய வழிவகை செய்கிறது, இதற்கு Payment Gateways வழிவகை செய்கிறது.
5. இங்கே வலையமைப்பு வழியாக B2B, B2C, B2G, C2B, C2C, C2G, G2B, G2C மற்றும் G2G போன்ற அனைத்து வகை வணிகமும் சாத்தியமாகிறது.
6. இந்த முறையிலேயே குறைந்த விலையில் பொருட்களை வாங்கவும் வழிவகை செய்கிறது.
7. இணைய சேவைக்கு முன்பு ஒரு பொருளின் Choice and Comparison மிகவும் கடினம். இன்று பொருட்களைப் பற்றி இணையத்தில் தேடுவது மிகவும் எளிது.
8. இணையத்தின் வழியாக மிக எளிமையாகவும் குறைந்த விலையில் ஒரு பொருளை வாங்க முடியும்.
9. ஒரு வாடிக்கையாளரால் ஒரு பொருளை தேடுவதன் மூலம் பழமையான நாட்களில் ஒரு குறிப்பிட்ட கடைக்காரர் சில பிராண்டுகள் இருக்கலாம், சில வகைகள் மற்றும் சில மாதிரிகள் கடையில் ஒரு இடத்திலிருந்து வேறுபட்டிருக்கலாம்,எனவே நிறுவனங்கள் தேவைப்படும் சில நபர்களை பிறர் பொருட்களைப் பிறர் தவறாகப் பயன்படுத்தலாம்.
10. நிறுவன உரிமம் புதுப்பித்தல், பிற சான்றிதழ்கள், பில் கட்டணங்கள், ரசீதுகள், விலைப்பட்டியல், பங்கு பராமரிப்பு, இன்டர்நெட் மற்றும் கணினி வலையமைப்புகள் வழியாக எந்த புவியியல் எல்லைகளையும் இல்லாமல் செய்ய முடியும்.
11. அரசு மானியங்களை மற்றும் டிஜிட்டல்மயமாக்கல் மூலம் வியாபாரத்தை ஊக்குவிக்கிறது.
12. இணையத்தால் நேரடி மனித உரையாடல்கள் குறைந்து வருகின்றன. உழைக்கும் சூழலும் கூட சுருங்கிவருகிறது. வாங்குபவரும் நேரடியாக உற்பத்தியாளர்களிடமிருந்து குறைந்த செலவில் வாங்குவார், நடுத்தர நபர் தரகு கட்டணங்கள் குறைக்கப்படுகின்றன.
6.
கணினி வலையமைப்புகளின் பொதுவான பயன்பாடுகள்.
(i) தொடர்பாடல் (Communication)
(ii) வளப்பகிர்வு (Resource Sharing)
(iii) தரவு அல்லது மென்பொருள் பகிர்வு (Data/Software Sharing)
(iv) பணம் சேமிப்பு (Money Saving)
தொடர்பாடல் :
(i) கணினி வலையமைப்புகளைப் பயன்படுத்துவதால், உலகெங்கிலும் உள்ள ஒருவர் மற்றவர்களிடம் தொடர்புகொள்ளலாம்.
(ii) பரவலாக பிரிக்கப்பட்ட குழுக்கள், பல்வேறு மொபைல், சமூக ஊடகம், தொலைபேசி, மின்னஞ்சல், அரட்டை, வீடியோ தொலைபேசி, வீடியோ கான்பரன்சிங், எஸ்எம்எஸ், எம்எம்எஸ் மற்றும் பலவற்றின் ஊடகங்கள் மூலம் மிகக் குறைந்த விலையில் எளிதாக தொடர்பு கொள்ளலாம்.
வளப்பகிர்வு:
(i) வளப்பகிர்வு என்பது பல அமைப்புகள் அணுகும் ஒரு சாதனமாகும்.
(ii) இது அனைத்து வகையான நிரல்கள்,உபகரணங்கள் மற்றும் கிடைக்கக்கூடிய இருப்பிடத்தை பொருட்படுத்தாமல் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது.
(iii) இங்கு வளம் என்பது அச்சுப்பொறிகள், ஸ்கேனர், PDA, தொலைநகல் இயந்திரம் மற்றும் மோடம்கள் போன்றவை ஆகும்.
(iv) உதாரணமாக வலையமைப்பில் பல கணினிகள் ஒரே அச்சுப்பொறியை அணுகலாம்.
மென்பொருள் (அல்லது) தரவு பகிர்வு :
(i) கணினி வலையமைப்பு சேவையகத்தில் ஒரு மென்பொருள் அல்லது பயன்பாடு சேமிக்கப்பட்டிருக்கும்.
(ii) அதனை முனையங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
(iii) இது தரவுகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்கிறது.
(iv) எடுத்துக்காட்டாக, எல்லா கோப்புகளையும் ஒன்றுக்கும் மேற்பட்ட கணினிகளில் காப்புப் பிரதி எடுக்கவோ அல்லது நகலெடுக்கவோ முடியாது.
(v) எனவே வன்பொருள் செயல்பாடு என்றால் சேவையகத்தில் உள்ள பிரதிகளைப் பயன்படுத்தலாம்.
பணம் சேமிப்பு :
(i) கணினி வலையமைப்புகளை பயன்படுத்துவது மூலம் ஒரு நிறுவனம் அதிக பணத்தை சேமிக்க முடியும்.
(ii) இது காகித வேலை, மனித சக்தி மற்றும் நேரத்தை சேமிக்கிறது.
(iii) ஊதியம், சரக்கு, விலைப்பட்டியல் போன்றவற்றைக் கணக்கிடுவதில் துல்லியம்.
(iv) உதாரணமாக ஒரு நிறுவனம் ஒவ்வொருவருக்கும் முதல்நிலை கணிப்பொறியை வழங்க முடியும்.
(v) ஆனால் இணையத்தை பயன்படுத்தி தனியாள் கணிப்பொறியில் முதல்நிலை கணிப்பொறியின் செயல்பாட்டை வழங்க முடியும்.
7.
(i) ஒரு நிரலுக்குள் தேவையான தகவல்களை செயற்கூறு அறிவிப்பு மற்றும் செயற்கூறு அழைப்புப் பகுதிகளுக்கு இடையே பகிர்ந்து கொள்ள முடியும்.
(ii) அளப்புருக்களை செயலுருபுகள் என்றும் அழைக்கலாம். இது மாறிகளை போன்று இருக்கும்.
(iii) செயலுருபுகள் செயற்கூறின் பெயருக்கு பின்னால் அடைப்பு குறிகளுக்குள் குறிப்பிடப்பட வேண்டும்.
(iv) செயலுருபுகளை அனுப்புவதற்கு எந்த விதமான வரம்பும் இல்லை. அவற்றை காற்புள்ளிகளால் பிரிக்க வேண்டும்.
எ.கா 1:
பின்வரும் எடுத்துக்காட்டில் ஒரு செயற்கூறு ஒரு செயலுருபை கொண்டுள்ளது.
($ sfname):
< ? php >
function School_Name ( $ sname) {
echo $ sname".in Tamilnadu. <br>";
}
School_Name ("Government Higher Secondary School Madurai");
School_Name ("Government Higher Secondary School Trichy");
School_Name ("Government Higher Secondary School Chennai");
School_Name ("Government Higher Secondary School Kanchipuram");
School_Name ("Government Higher Secondary School Tirunelveli");
?>
எ.கா 2:
பின்வரும் எடுத்துக்காட்டில் ஒரு செயற்கூறு இரண்டு செயலுருபுகளை கொண்டுள்ளது.
( $sfname and $Strength):
<?php
function School_Name($ sname,$ Strength) {
echo $ sname."in Tamilnadu and Student Strength is".$ Strength;
}
School_Name ("Government Higher Secondary School Madurai",200);
School_Name ("Government Higher Secondary School Trichy",300);
School_Name ("Government Higher Secondary School Chennai",250);
School_Name ("Government Higher Secondary School Kanchipuram",100);
School_Name ("Government Higher Secondary School Tirunelveli",200);
?>
எ.கா 3:
Return கூற்றினை பயன்படுத்தி ஒரு செயற்கூறு ஒரு மதிப்பினை திருப்பி அனுப்புகிறது.
<?php
function sum ($x,$y) {
$z=$x+$y;
return $z;
}
echo "5+10=".sum(5,10)."
";
echo "7+13=".sum(7,13)."
";
echo "2+4=".sum(2,4);
?>
8.
பதிவைச் சேர்க்க (Insert record):
(i) தரவுத்தளம் பல அட்டவணைக் கொண்டிருக்கும். "Create" கட்டளையைப் பயன்படுத்தி தேவையான பல்வேறு புலங்களை இணைத்து அட்டவணைகள் உருவாக்கப்படுகின்றன.
(ii) எந்த ஒரு அட்டவணையும் அதனுள் இருக்கும் தரவுகளோடு முடிவடைகிறது. எனவே புது வரிசையானது (பதிவு) "Insert" கட்டளையைப் பயன்படுத்தி அட்டவணையில் சேர்க்கப்படுகிறது.
(iii) ஒரு புதிய பதிவைச் சேர்ப்பதற்கு தொடரியல் மற்றும் எடுத்துக்காட்டு பின்வருமாறு.
|
Syntax:1 INSERT INTO table name (COLUMN 1,COLUMN 2,COLUMN 3) VALUES (value 1, value 2, value 3); Syntax:2 INSERT INTO table name VALUES (value 1, value 2, value 3); |
(iv) எடுத்துக்காட்டு "Biodata" என்கிற அட்டவணையை எடுத்துக்கொள்ளும் போது அதில் மூன்று நெடுவரிசைகள் உள்ளது என்றால் அவை first name, lastname மற்றும் Age. புதிய பதிவானது தொடரியல் 1 அல்லது 2 பயன்படுத்தி பின்வருமாறு சேர்க்கப்படும்.
|
mysql>INSERT INTO Biodata (firstname,lastname,age) VALUES (Krishna,Sam,10); |
பதிவைத் தேர்ந்தெடுக்க (Select record):
(i) அட்டவணையில் இடம் பெற்றிருக்கும் பல பதிவுகளில் இருந்து தேவையான தரவை மீட்டெடுக்க SELECT கட்டளையில் சில நிபந்தனைகளைச் சேர்த்து பயன்படுத்த வேண்டும்.
(ii) ஒரு பதிவில் உள்ள அனைத்து புலங்களையும் மீட்கலாம் அல்லது குறிப்பிட்ட புலங்களையும் அட்டவணையில் மீட்கலாம்.
(iii) அட்டவணையின் பதிவுகளை பின்வரும் SELECT தொடரியலைப் பயன்படுத்தி மீட்டெடுக்கலாம்.
Syntax:
SELECT*from tablename;
எடுத்துக்காட்டு:
mysql>SELECT * from biodata;
| அட்டவணை பதிவு பட்டியல் |
| Firstname | Lastname | Age |
| Krishna | S | 10 |
| Sugal | S | 14 |
| Arun | J | 15 |
| Mani | K | 18 |
Syntax:
SELECT Column 1, column 2 from tablename;
எடுத்துக்காட்டு :
mysql>SELECT firstname,age from Biodata;
| அட்டவணை SQL SELECT பதிவு பட்டியல் |
| Firstname | Age |
| Krishna | 10 |
| Sugal | 14 |
| Arun | 15 |
| Mani | 18 |
9.
பல்வேறு செயல்பாடுகளைச் செய்ய பல்வேறு SQL கட்டளைகள் அதன் செயல்பாட்டை பொறுத்து ஐந்து முக்கிய வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன.
(i) தரவு வரையறை மொழி (Data Definition language-DDL) :
DDL கட்டளைகள் தரவுத்தளத்தை வரையறுக்கப் பயன்படுகின்றன. தரவுத்தள பொருளின் கட்டமைப்பை உருவாக்கவும் மாற்றம் செய்யவும் இது பயன்படுகிறது. Create, Alter, Drop, Rename மற்றும் Truncate கட்டளைகள் இந்த வகையைச் சார்ந்தவை ஆகும்.
| SQL DDL கட்டளைப் பட்டியல் |
| கட்டளைகள் | விளக்கம் |
| CREATE | அட்டவணைகள் அல்லது தரவுத் தளங்களை உருவாக்கப் பயன்படுகிறது. |
| ALTER | ஏற்கனவே இருக்கும் தரவுத்தள அல்லது அட்டவணைக் கட்டமைப்பை மாற்றி அமைக்கிறது. |
| RENAME | தரவுத்தளத்தில் ஏற்கனவே உள்ள பொருளின் பெயரை மாற்றப் பயன்படுகிறது. |
| TRUNCATE | அட்டவணையில் உள்ள அனைத்து பதிவுகளையும் நீக்க பயன்படுகிறது. |
(ii) தரவு கையாளுதல்மொழி (Data manipulation language DML):
இந்த மொழியில் அமைந்திருக்கும் SQL கட்டளைகள் தரவுத்தளத்தில் அமைந்திருக்கும் SQL கட்டளைகள் தரவுத்தளத்தில் உள்ள தரவை கையாளுவதற்கு உதவுகிறது.அதிகமான SQL கட்டளைகள் DML க்கு கீழ் வருகின்றன.
| SQL DML கட்டளைப் பட்டியல் விளக்கம் |
| கட்டளைகள் | விளக்கம் |
| INSERT | தரவுத்தள அட்டவணையில் புதிய வரிசைகளைச் சேர்க்கிறது. |
| UPDATE | ஒரு அட்டவணையில் ஏற்கனவே தரவுகளுடன் புதிய தரவுகளை மாற்றி அமைக்கிறது. |
| DELETE | அட்டவணையில் இருந்து பதிவுகளை நீக்குகிறது. |
(iii) தரவு வினவல் மொழி (Data Query language - DQL):
தரவு வினவல் மொழியில் (DQL) உள்ள தரவுத்தள அட்டவணைகளிலிருந்து தரவை மீட்டெடுக்க SELECT என்கிற SQL கட்டளை மட்டுமே பயன்படுகிறது.
| SQL DQL கட்டளைப் பட்டியல் |
| கட்டளைகள் | விளக்கம் |
| SELECT | அட்டவணையில் இருந்து தரவை மீட்டெடுக்க. |
(iv) பரிவர்த்தனை கட்டுப்பாட்டு மொழி (Transaction Control Language-TCL):
இதில் உள்ள SQL கட்டளைகள் தரவுத்தளத்தில் உள்ள பரிவர்த்தனைகளை நிர்வகிக்கிறது. மேலும் அது மாற்றங்களை நிரந்தரமாக தரவுத்தளத்தில் சேமிக்க உதவுகிறது. COMMIT, ROLLBACK, SET TRANSACTION மற்றும் SAVE POINT ஆகிய கட்டளைகள் இந்த வகையைச் சார்ந்ததாகும்.
| SQL TCL கட்டளைப் பட்டியல் |
| கட்டளைகள் | விளக்கம் |
| COMMIT | தரவுத்தளத்தில் நிரந்தரமாக சேமிக்கிறது. |
| ROLLBACK | கடைசியான COMMIT கட்டளையிலிருந்து தரவுத்தளத்தை அசல் வடிவத்திற்கு மீட்டெடுக்க. |
| SET TRANSACTION | படிக்க-எழுத அல்லது படிக்க மட்டும் அணுகல் போன்ற பரிவர்த்தனை பண்புகளை அமைக்கிறது. |
| SAVE POINT | பரிவர்த்தனைகளை தற்காலிகமாக சேமித்து எப்பொழுதும் வேண்டுமானாலும் பழைய நிலைக்குத் திரும்பச் செய்யும். |
(v) தரவுக்கட்டுப்பாட்டு மொழி (Data Control Language-DCL): இது அட்டவணை, பார்வை, சேமித்த செயல்முறை போன்ற தரவுத்தள பொருட்களில், SQL கட்டளைகள் பாதுகாப்பை அமல்படுத்துகின்றன. GRANT மற்றும் REVOKE கட்டளைகள் இதன் வகையைச் சேர்ந்ததாகும்.
| SQL DCL கட்டளைப் பட்டியல் |
| கட்டளைகள் | விளக்கம் |
| GRANT | குறிப்பிட்ட தரவுத்தள பொருள்களான அட்டவணை,பார்வை போன்றவற்றில் குறிப்பிட்ட பயனர்களுக்கு அனுமதி வழங்கப் பயன்படுகிறது. |
| REVOKE | குறிப்பிட்ட தரவுத்தள பொருள்களான அட்டவணை, பார்வை போன்றவற்றில் குறிப்பிட்ட பயனரிடமிருந்து அனுமதியை திரும்பப் பெற பயன்படுகிறது. |
10.
பயனர் கட்டுப்பாட்டு உரைப் பாய்வு: (Manual Text flow)
(i) உரையேற்றப்பட்ட (Loaded text) பணிக்குறியை உரையை வைக்க வேண்டிய இடத்தில் கிளிக் செய்து தேவையான அளவிற்கு இழுத்துவிட வேண்டும்.
(ii) இப்பொழுது உரை நாம் வரையறுத்த உரைத்தொகுதிக்குள் வந்திருக்கும். இந்த உரைத்தொகுதிக்குள் உரை முழுவதும் வைக்க முடியவில்லை எனில், கீழ்ப்பக்க விண்டோ ஷேடில் சிவப்பு நிற முக்கோணம் தோன்றும். இதில் கிளிக் செய்தால் மறுபடியும் உரையேற்றப்பட்ட (Loaded text) பணிக்குறி தோன்றும்.
(iii) இப்பொழுது புதிய உரைத்தொகுதியை உருவாக்கி அதில் கிளிக் செய்ய வேண்டும்.
(iv) இந்த செயல்முறையை சிவப்பு நிற முக்கோணம் மறையும் வரை அல்லது செருக வேண்டிய உரை உள்ளவரை திரும்பத் திரும்ப செய்ய வேண்டும்.
(v) இதே போன்று ஒரு பக்கத்தில் உரையை செருக வேண்டுமெனில் பக்கத்தின் மேற்பகுதியில் உரையேற்றப்பட்ட (Loaded text) பணிக்குறியை வைத்து கிளிக் செய்ய வேண்டும். உரையானது அப்பக்கம் முழுவதும் நிரம்பும்.
(vi) ஒரு பக்கத்தை விட அதிகமான உரை இருந்தால், கீழ்ப்பகுதியில் உள்ள விண்டோ ஷேடில் சிவப்பு நிற முக்கோணம் தோன்றும்.
(vii) இதைக் கிளிக் செய்தால் உரையேற்றப்பட்ட (Loaded text) பணிக்குறி மறுபடியும் தோன்றும்.
(viii) இப்பொழுது பட்டிப் பட்டையில் Layout > Insert Pages என்பதைக் கிளிக் செய்து புதிய பக்கத்தை உருவாக்கி,பக்கத்தின் மேல் பகுதியில் உரையேற்றப்பட்ட (Loaded text) பணிக்குறியைக் கிளிக் செய்ய வேண்டும்.
(ix) இதை செருக வேண்டிய உரை உள்ளவரை திரும்பத் திரும்ப செய்ய வேண்டும்.
தானமைவு உரைப் பாய்வு (Automatic text flow):
(i) உரையை ஏற்றுவதற்கு (Importing) முன்பு பட்டிப் பட்டையில் Layout > Autoflow என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். பின்னர் உரையை ஏற்ற வேண்டும்.
(ii) இப்பொழுது உரையேற்றப்பட்ட (Loaded text) பணிக்குறி சற்று வேறுபட்டு squiggly arrow வாகத் தோன்றும்.
(iii) இப்பொழுது உரையேற்றப்பட்ட (Loaded text) பணிக்குறியை பக்கத்தின் மேல் பகுதியில் கிளிக் செய்தால்,உரையானது தானமைவாக தேவையான அளவிற்கு அடுத்தடுத்தப் பக்கங்களில் நிரப்பப்படும்.
11.
(i) பேஜ்மேக்கர் ஆவணத்தில் உரைத்தொகுதியின் (Text block) உள்ளே உரையை உள்ளிட வேண்டும்.
(ii) உரைத்தொகுதியை உருவாக்க டெக்ஸ்ட் டூலை (Text Tool) பயன்படுத்த வேண்டும். டெக்ஸ்ட் டூலை பயன்படுத்தி உரைத்தொகுதியை உருவாக்கியபின் அதில் உரையை நேரடியாக தட்டச்சு செய்யலாம்.
(iii) உரையை தட்டச்சு செய்யும் போது விட்டுவிட்டுத் தோன்றும் நெடும்பட்டை ஒன்று வலது புறமாக நகர்ந்து கொண்டே செல்லும். அதற்கு செருகும் புள்ளி என்று பெயர்.
(iv) உரையை தட்டச்சு செய்யும் பொழுது உரையானது உரைத்தொகுதியின் ஓரத்தைத் தொட்டவுடன், தானாகவே மடிந்து அடுத்த வரிக்குச் செல்லும்.
(v) உரைத்தொகுதியின் ஒவ்வொரு வரி முடிவிலும் நுழைவு விசையை (Enter Key) அழுத்த வேண்டியதில்லை.
(vi) ஒரு காலி பத்தியின் முடிவிலோதான் நுழைவு விசையை அழுத்த வேண்டும்.
12.
மூன்று வகை பயனாளர் சேவையகக் கட்டமைப்பு :
1. ஒற்றை அடுக்கு கட்டமைப்பு
2. இரண்டு அடுக்கு கட்டமைப்பு
3. பல/மூன்று அடுக்கு கட்டமைப்பு
1. ஒற்றை அடுக்கு கட்டமைப்பு :
(i) சேவையகம் பயன்படுத்துகின்றது. பயனாளரால் அணுகப்படுகின்றது.
(ii) பயனாளர் பயன்பாடு சேவையக கணிப்பொறிக்குள்ளேயே இயங்குகின்றது.
2. இரண்டு அடுக்கு கட்டமைப்பு
(i) இந்த கட்டமைப்பைச் சேவையகம் பயன்படுத்துகின்றது.
(ii) இரண்டு அடுக்கு ஊடாடுதலை கொண்டு பயனாளரால் அணுகப்படுகின்றது.
(iii) அதாவது பயனாளர் அடுக்கு ஒன்றிலும் சேவையகம் அடுக்கு இரண்டிலும் இயங்குகின்றன.
3. பல/மூன்று அடுக்கு கட்டமைப்பு :
(i) இந்த கட்டமைப்பைச் சேவையகம் பயன்படுத்துகின்றது.
(ii) ஒன்றிற்கு மேற்பட்ட அடுக்கு ஊடாடுதலைக் கொண்டு பயனரால் அணுகப்படுகின்றது.
(iii) நிரலர் வணிக ரீதியான அடுக்குகளின் எண்ணிக்கையை மென்பொருளின் தேவையைப் பொறுத்து தீர்மானிக்கிறார்.
(iv) இந்த காரணத்தினால் இந்த மாதிரியை பல/மூன்று அடுக்கு கட்டமைப்பு என்கிறோம்.
13.
(i) களப்பெயரானது a-z, A-Z வரையிலான ஆங்கில எழுத்துக்களையும் 0 - 9 வரையிலான எண்களையும் கொண்டிருக்க முடியும்
(ii) இடைக்கோடு (hyphen -) அனுமதிக்கப்படலாம். ஆனால் அது களப் பெயரின் முதல் உருவாக்க இயக்கத்தில் முடியாது
(iii) இடைவெளிகள் அனுமதிக்கப்படுவதில்லை.
(iv) சிறப்பு குறியீடுகள் (!, $, &, மற்றும் பல) அனுமதிக்கப்படுவதில்லை
(v) களப்பெயர்கள் குறைந்தபட்சம் 2 மற்றும் அதிகபட்சம் 63 எழுத்துக்களை கொண்டிருக்கலாம். ஒரு முழுமையான களப்பெயரில் அதிகபட்சமாக 253 எழுத்துக்கள் இடம் பெறலாம்
(vi) களப்பெயர்கள் எழுத்து வடிவ உணர் திறன் அற்றவை.
14.
(i) while மடக்கு என்பது முக்கியமான மடக்கு அமைப்பு ஆகும். இது எளிய பன்முறை செயல்பாட்டிற்குப் பயன்படுகிறது.
(ii) இது நிபந்தனையினை சரி (அ) தவறு என சோதிக்கிறது
(iii) கொடுக்கப்பட்ட நிபந்தனை சரி எனில் மடக்கினை செயல்படுத்தும்.
கட்டளை அமைப்பு:
while(condition is true) {
code to be executed;
}
எ.கா:
$scount = 10;
$sno = 1;
while($sno<=$scount)
{
echo "The student number is: $sno < br > ";
$sno++;
}
? >
15.
தனி உரைத் தொகுதியாக மாற்ற வேண்டிய உரைத் தொகுதி:
1. தனி உரைத் தொகுதியாக மாற்ற வேண்டிய உரைத் தொகுதியை பாயின்டர் டூல் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும்.
2. பட்டிப்பட்டையில் Edit>Cut என்பதைக் கிளிக் செய்தால் உரைத் தொகுதி மறைந்துவிடும்.
3. பின்னர் Edit > Paste என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
4. இப்பொழுது மறுபடியும் அந்த உரைத் தொகுதி அதே இடத்தில் தோன்றும்.
5. ஆனால் அது தனி உரைத் தொகுதியாக மாற்றப்பட்டிருக்கும்.
தொடர்பற்ற உரைத் தொகுதியாக மாற்ற வேண்டிய உரைத் தொகுதி:
1. தொடர்பற்ற உரைத் தொகுதியாக மாற்ற வேண்டிய உரைத் தொகுதியை பாயின்டர் டூல் மூலம் தேர்வு செய்ய வேண்டும்.
2. டெக்ஸ்ட் டூலைக் கிளிக் செய்து அந்த தொகுதியிலுள்ள உரை முழுவதையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.
3. பிறகு பட்டிப்பட்டையில் Edit > Cut என்பதைக் கிளிக் செய்தால் உரைத் தொகுதி மறைந்து விடும்.
4. இப்பொழுது செருகும் புள்ளியை ஏற்கனவே உள்ள தொடர்புள்ள உரைத் தொகுதியில் கிளிக் செய்து Edit > Paste என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். இப்பொழுது உரை அந்த தொகுதியில் சேர்க்கப்பட்டிருக்கும்.
16.
ஈத்தர்நெட் தொடர்பியின் (Port) ஊசி விவரங்கள்:
1. இதில் இரண்டு முக்கிய சமிக்ஞைகள் உள்ளன. ஒன்று TX (தரவை அனுப்ப) மற்றும் RX (தரவைப் பெற).
2. முதல் ஊசி தரவை அனுப்பப் பயன்படும் நேர்மின் முனையாகும் (TX+)
3. இரண்டாவது ஊசி தரவை அனுப்பப் பயன்படும் எதிர்மின் முனையாகும் (TX-)
4. மூன்றாவது ஊசி தரவைப் பெறப் பயன்படும் நேர்மின் முனையாகும். (RX+)
5. நான்காவது, ஐந்தாவது ஊசிகள் பிற்கால பயன்பாட்டிற்கான விடப்பட்டிருக்கும்.
6. ஆறாவது ஊசி தரவைப் பெறப் பயன்படும் எதிர்மின் முனையாகும். (RX-)
7. ஏழாவது, எட்டாவது ஊசிகள் பிற்காலப் பயன்பாட்டிற்காக விடப்பட்டிருக்கும்
8. அனைத்தும் இரு வழி செயல்பாட்டு (Bidirectional) ஊசிகள் ஆகும்.
17.
படி 1: முன்னதாக வங்கி வழங்கிய பிரத்யேக பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி நிகழ்நிலை வங்கிக் கணக்கில் உள்நுழையவும்.
படி 2: நிதி பரிமாற்றத்தைச் செயல்படுத்த பயனாளியை "பணம் பெறுபவரில் சேர்க்கவும்". பயனாளியின் வங்கிக் கணக்கு எண். பெயர், IFSC போன்றவற்றை, "புதிய பணம் பெறுபவரின் பிரிவை சேர்" பகுதியில் நிரப்பப்பட வேண்டும்.
படி 3: பயனாளி சேர்க்கப்பட்டவுடன், நிதி பரிமாற்ற முறையை (RTGS/NEFT/IMPS) தேர்வு செய்யவும்.
படி 4: பணத்தைச் செலுத்த வேண்டிய கணக்கைத் தேர்ந்தெடுக்கவும், பணம் பெறுபவரைத் தேர்ந்தெடுக்கவும், அனுப்ப விரும்பும் தொகையை உள்ளிட்டு குறிப்புரையை (விருப்பத்தேர்வு) சேர்க்கவும்.
படி 5: சமர்ப்பி கொடுக்கவும்.
படி 6: வங்கி கணக்குடன் தொடர்புடைய கைப்பேசி எண்ணுக்குப் பெறப்பட்ட OTP ஐ உள்ளிட்டு பரிவர்த்தனையை நிறைவு செய்யவும்.
நவீன மின்னணு பணப் பரிமாற்றம் தனிப்பட்ட அடையாள எண் (PIN). ஒரு முறை கடவுச் சொல் (OTP) போன்றவற்றால் பாதுகாக்கப்படுகின்றன. ஒரு தானியங்கி தீர்வை அமைப்பு (ACH) அதன் பின் பணம் செலுத்தும்.
18.
வழிமுறை 1:
1. உரையேற்றப்பட்ட பணிக்குறியை உரையை வைக்க வேண்டிய இடத்தில் கிளிக் செய்து தேவையான அளவிற்கு இழுத்துவிட வேண்டும்.
2. இப்பொழுது உரை நாம் வரையறுத்த உரைத்தொகுதிற்குள் உரை முழுவதும் வைக்க முடியவில்லை எனில் கீழ்ப்பக்க விண்டோஸேடில் சிவப்பு நிற முக்கோணம் தோன்றும். இதில் கிளிக் செய்தால் மறுபடியும் உரையேற்றப்பட்ட பணிக்குறி தோன்றும்.
3. இப்பொழுது புதிய உரைத் தொகுதியை உருவாக்கி அதில் கிளிக் செய்ய வேண்டும்.
4. இந்த செயல்முறையை சிவப்பு நிற முக்கோணம் மறையும் வரை (அ) செருக வேண்டிய உரை உள்ள வரை திரும்ப திரும்ப செய்ய வேண்டும்.
வழிமுறை :
1. இதே போன்று ஒரு பக்கத்தில் உரையை செருக வேண்டுமெனில் பக்கத்தின் மேற்பகுதியில் உரையேற்றப்பட்ட பணிக்குறியை வைத்து கிளிக் செய்ய வேண்டும்.
2. உரையானது அப்பக்கம் முழுவதும் நிரம்பும்.
3. ஒரு பக்கத்தை விட அதிகமான உரை இருந்தால், கீழ்ப்பகுதியில் உள்ள விண்டோஸேடில் சிவப்பு நிற முக்கோணம் தோன்றும்.
4. இப்பொழுது பட்டிப் பட்டையில் Layout \(\rightarrow \) Insert Pages என்பதைக் கிளிக் செய்து புதிய பக்கத்தை உருவாக்கி, பக்கத்தின் மேல் பகுதியில் உரையேற்றப்பட்ட பணிக்குறியை கிளிக் செய்ய வேண்டும்.
இதை செருக வேண்டிய உரை உள்ள வரை திரும்பத் திரும்ப செய்ய வேண்டும்.
19.
(i) பொருட்களை விநியோகிக்க அதை ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்ப வேண்டும். இது நீண்ட நேரத்தையும், பணத்தையும் எடுத்துக் கொள்ளும்.
(ii) மின் வணிகத்தில் ஒரு பொருளுக்கான அனுப்பாணை கொடுப்பதிலிருந்து அதைக் கையில் பெறும் வரை நாம் காத்திருக்க வேண்டும். சில மின் வணிக நிறுவனங்கள் தங்கள் அனுப்பும் பொருள் இருக்குமிடத்தை வாடிக்கையாளருக்குத் தகவல் புதுப்பித்தல் மூலம் கையாளுகிறது.
(iii) மின் வணிகம் மூலம் பெற்ற பொருட்களை திருப்பி அனுப்புவது ஒரு சிரமமான பணியாக உள்ளது. திரும்பி அனுப்பும் காலம் பற்றிய சந்தேகங்கள், திரும்பிய பொருட்கள் வணிகரைச் சென்றடையும் நேரம், பணத்தை திரும்பப் பெறுதல், பரிமாற்றம் மற்றும் அஞ்சல் செலவுகள் ஆகியவை களைப்பான செயலாக்க கருதப்படுகிறது.
தனியுரிமைச் சிக்கல்கள்: மின் - வணிகத்தில் மிகவும் கவலைக்குரியவை. மின் வணிகத்தில் ஒரு நிறுவனம் நுகர்வோர் பற்றிய தகவல்களைத் திரட்டுவது தவிர்க்க முடியாது. பல நிறுவனங்கள் அந்த தகவல்களைப் பயன்படுத்தி அதிலிருந்து பணம் ஈட்டத் துவங்கியுள்ளனர்.
இயல் பொருள் சார்ந்த சர்ச்சைகள்: மின் - வணிகத்தில் விற்பனையாளர் தேர்வு செய்த படத்தை மட்டுமே நாம் பார்க்க முடியும். பெரும்பாலும் நுகர்வோர் இணையம் வழியாகத் தனித்துவமான (அ) சிக்கலான பொருட்களை காட்டிலும் ஒரு சிறிய குழப்பமற்ற பொருட்களை வாங்குவதற்கு மட்டுமே மிகவும் பாதுகாப்பாக உணர்கின்றனர்.
எ.கா: இணையம் மூலம் பரிவர்த்தனை செய்யப்படும் சில பொருட்கள் விற்பனையாளரிடம் நுகர்வோரை அடையும் வரை பயன்படுத்தும் நிலையில் இருக்க வேண்டும்.
விநியோகத் தெளிவின்மை: மின் வணிகத்தில் வணிகங்கள் உலகம் முழுவதும் இருந்து நடத்தப்படுகின்றன என்பதால், வர்த்தக நிறுவனங்கள் நேர்மையானவையோ (அ) அவர்கள் நமது பணத்தை எடுத்துக் கொள்ளப் போகிறார்களா என்பது நிச்சயமில்லாமல் இருக்கலாம். புகார் கொடுக்கவோ சட்ட உதவியைப் பெறவோ நாம் அவர்களின் கதவைத் தட்டுவது கடினம். மேலும் பொருட்கள் அனுப்பப்பட்டாலும், அது வந்து சேருமா இல்லையா என ஐயம் கொள்வது எளிது.
20.
(i) மின் வணிகம் முதன் முதலில் 1970 களில் தனியார் வலையமைப்புகளில் உருவானது. மின்னணு தகவல் பரிமாற்றங்கள் மற்றும் தொலை - கடைச்செலவு இணைந்து மின்-வணிகத்திற்கு வழிவகுத்தது.
(ii) நவீன மின் - வணிக வரலாறு இணையத்தின் வரலாற்றுடன் நெருக்கமாகப் பிணைந்து உள்ளது.
(iii) இணையம், வர்த்தக பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட பின்புதான், மின் - வணிகம் உண்மையில் சாத்தியமாயிற்று.
(iv) தேசிய அறிவியல் அறக்கட்டளை 1991 இல் இணையத்தை பொது மக்களுக்குத் திறந்த போது நிகழ்நிலை - கடைச் செலவு வளர ஆரம்பித்தது.
(v) பின்னர் வணிக நிறுவனங்கள் வலைத்தளங்களில் குடியேறத் தொடங்கிவிட்டன.
(vi) இணையம் தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் மிகப் பரந்தளவில் அபிவிருத்தி அடைந்த உலகளாவிய இணைய சமூகம், அதிக அளவிலான Dotcoms, Fintech மற்றும் இணைய startups-களை தோற்றுவித்தது.
(vii) மேலும் மின்னணு வர்த்தகத்திற்கு வலுவான அடித்தளத்தைக் கட்டமைத்து வருகிறது.
(viii) இணையம் பெரிய நிறுவனங்களுக்கு புதிய வர்த்தக ஆற்றலை வழங்குவது மட்டும் அல்லாமல் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (SME) மின் வணிகத்திற்காக நுழைவாயிலாகவும் உள்ளது.
(ix) இணைய வணிகமயமாக்கலுடன் இணைந்து தனியாள் கணிப்பொறிகள் மற்றும் மின்னணு கட்டணம் செலுத்தல் அமைப்புகள் மின்வணிகத்தை செழிப்படையச் செய்கிறது.
21.
1. வடத்தை தேவையான நீளம் வெட்டிக் கொள்ளவும்.
2. வடத்தின் இருபுறமும் இருந்து 1 அங்குல அளவிற்கு பாதுகாப்பு உறையை நீக்கவும். இதனால் முறுக்கப்பட்ட இணை கம்பிகள் வெளியே தெரியும்.
3. கம்பி அகற்றப்பட்ட பிறகு, சிறிய கம்பிகளை அவிழ்த்து, சரியான வயரிங் அமைப்பில் வைக்கவும்
4. கம்பிகளை ஒன்றாக வைத்து அவற்றை ஒரே அளவுள்ளதாக (1/2 அங்குல) வெட்டவும்.
5. இணைப்பில் உள்ள 8 பள்ளங்களில் இந்த 8 நிற கம்பிகளை சேர்க்கவும். பிளாஸ்டிக் உறை இணைப்பின் உள்ளே செல்லும் வகையில் செருகப்பட வேண்டும்.
6. Crimping கருவியைப் பயன்படுத்தி RJ45 இணைப்பியை வடத்தில் பொருத்தவும். கையால் இழுத்தால் வெளிவராத அளவிற்கு நன்கு பொருந்தியிருக்க வேண்டும். இப்போது வடம் தரவு பரிமாற்றத்திற்குத் தயாராக உள்ளது.
7. தேவைப்பட்டால் வடத்தின் இணைப்பைச் சரிபார்க்க ஒரு வட சோதிப்பானை (Cable Tester) பயன்படுத்தவும்.
22.
(i) பல்லூடகத் தானியங்கு சேவை வழங்கி.
(ii) வலை ஒளிபரப்பு மற்றும் ஒளிக்காட்சி கலந்துரையாடல்.
(iii) பயனரை ஒழுங்குபடுத்தும் திட்டம்.
(iv) உள்ளமைவு பல்லூடக வளங்கள் உருவாக்கம் மற்றும் மின் பதிப்பகம்.
(v) இலக்க பல்லூடக நூலகங்கள்.
1. பல்லூடகத் தானியங்கு சேவை வழங்கி :
(i) பயனர்கள் தொடுதிரை மூலம் தகவல்களை பெற அனுமதிக்கும் ஒரு பல்லூடக கணிப்பொறியாகும்.
(ii) விமான நிலையங்கள் மற்றும் பிற பொது இடங்களில் திசைகள் மற்றும் சில அவசியமான தகவல்களை பயனருக்கு வழங்க உதவுகின்றது.
(iii) நூலகங்களில் தானியங்கி சேவை வழங்கியானது வழக்கமாக நுழைவாயிலுக்கு அருகே வைக்கப்பட்டிருக்கும்.
(iv) இது அறிவிப்புகளை காண்பிக்கவும், பட்டியல்கள் நூலக பயனரிடமிருந்து வரும் குறிப்புகள் மற்றும் ஆலோசனைகளை படிக்கவும் மற்றும் நூலகத்தின் செயல்பாடுகள், நிகழ்வுகள் பற்றிய தகவல்களையும் வழங்க உதவுகின்றது.
2. வலை ஒளிபரப்பு மற்றும் ஒளிக்காட்சி கலந்துரையாடல் :
(i) நிகழ் நேர நிகழ்ச்சிகளை இணையத்தின் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்வது வலை ஒளிபரப்பு எனப்படும்.
(ii) ஒளிக்காட்சி கலந்துரையாடல் என்பது வெவ்வேறு இடங்களில் உள்ள இரண்டிற்கும் மேற்பட்ட பங்காளர்களுக்கிடையே கலந்துரையாடலை நடத்தி அதன் ஒலி மற்றும் ஒளித் தரவுகளை கணினி வலையமைப்பு மூலம் அனுப்பும் ஒரு செயலாகும்.
3. பயனரை ஒருமுகப்படுத்தும் திட்டம் :
(i) பல்லூடகத்தின் ஊடாடும் செயல்பாடு காரணமாக பள்ளி கூடங்கள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள நூலகங்களுக்கு பயிற்சி அளிப்பதில் பல்லூடகம் முக்கிய பங்காற்றுகின்றது.
(ii) மேலும் பேராசிரியர்களுக்கு கருத்தாழமிக்க பாடங்களில் பயிற்சி அளிக்க உதவுகின்றது.
4. உள்ளமைவு பல்லூடக வளங்கள் உருவாக்கம் மற்றும் மின் பதிப்பகம் :
(i) பெரும்பான்மையான நூலகங்கள் உள்ளமைவாக பல்லூடக வளங்களை பெரிய அமைப்புக்கு சேவை வழங்குவதற்காக உருவாக்குகின்றன.
(ii) பல்லூடகக் கருவிகள் பல்வேறு மூலங்களிலிருந்து வரும் தகவல்களை புதுப்பித்தலை எளிதாக்கி உள்ளன.
(iii) நூலக பயனர்களுக்கு பயன்படுத்துவதற்கு எளியதாகவும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையிலும் உள்ளது.
5. இலக்க பல்லூடக நூலகங்கள் :
(i) இலக்க வடிவத்தில் உள்ள தகவலானது இலக்க நூல்கள், ஸ்கேன் செய்யப்பட்ட நிழற்படங்கள், வரைகலை மற்றும் இலக்க முறையாக்கப்பட்ட ஒலி-ஒளி பதிவுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
(ii) தொடக்கத்தில் இலக்க நூலக திட்டமானது உரை வடிவத்திலான தரவினை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருந்தது.
(iii) பிறகு இது பிற பல்லூடகக் கூறுகளான நிழற்படங்கள், ஒலி மற்றும் ஒளிக்காட்சி பதிவுகள் ஆகிய அனைத்தையும் அடிப்படையாகக் கொண்டு இலக்க நூலகத்தின் தொகுப்பின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
23.
கணினியில் படங்களை இரு வகையில் உருவாக்கலாம்.
1. பிட்மேப் (அ) செவ்வக படம்
2. வெக்டர் படங்கள்
1. பிட்மேப் (அ) செவ்வக படங்கள் :
1. கணினியில் படங்களைச் சேமிக்கும் பொதுவான, மற்றும் பரந்த வடிவம் பிட்மேப் (அ) செவ்வக படமாகும்.
2. பிட்மேப் என்பது படப்புள்ளி என்றழைக்கப்படும் சிறிய புள்ளிகளின் எளிய அணியாகும்.
3. ஒவ்வொரு படப்புள்ளியும் இரண்டு (அ) அதற்கு மேற்பட்ட நிறங்களைக் கொண்டுள்ளது.
4. பிட்டுகளில் எவ்வளவு தரவு என்பதன் அடிப்படையைப் பயன்படுத்தி நிறங்களில் எண்ணிக்கையைத் தீர்மானித்து நிறத்தின் ஆழத்தைத் தீர்மானிக்கலாம்.
எ.கா : ஒரு பிட்டுக்கு இரண்டு நிறங்கள், நான்கு பிட்டுகள் என்றால் பதினாறு நிறங்கள், எட்டு பிட்டுகள் என்றால் 256 நிறங்கள் மற்றும் பல.
2. வெக்டர் படங்கள்:
1. வரையும் கூறுகளான அல்லது பொருள்களான வரிகள், செவ்வகங்கள், வட்டங்கள் மற்றும் பல படங்களை உருவாக்குவது வெக்டர் படங்களின் அடிப்படையில் அமையும்.
2. படத்தைக் குறிக்க ஒப்பிட்டளவில் சிறிதளவு தரவு தேவைப்படும்.
3. அதன் மூலம் படத்தைச் சேமிக்க குறைந்த அளவு நினைவகம் தேவைப்படும். இதுவே அதன் நன்மையாகும்.
4. சுருக்க நுட்பம் படங்களின் கோப்பு அளவை குறைக்கப் பயன்படுகிறது.
5. அதாவது அதிக எண்ணிக்கையில் படங்களைச் சேமிக்கவும் வலைப்பின்னலில் உள்ள பயன்பாடுகளுக்கிடையே பரிமாற்றத்தை வேகப்படுத்தவும் பயன்படுகிறது. எ.கா : GIF, TIFF மற்றும் JPEG.
24.
1. குறியாக்கத் தொழில் நுட்பம் என்பது ஒரு செயல்திறன் மிக்க தகவல் பாதுகாப்பு அமைப்பாகும்.
2. குறியாக்க வழிமுறைகளைப் பயன்படுத்தி ஒரு மூல உரையை அர்த்தமற்ற மறைஎழுத்து உரையாக மாற்றுவது குறியாக்கம் என்று வரையறுக்கப்படுகிறது.
3. இதனால் தரவுகளின் இரகசியத்தன்மை உறுதி செய்யப்படுகிறது.
4. குறியாக்கம் மற்றும் மறைகுறியாக்கம் வழிமுறைகள் தரவை குறியாக்கம் (அ) குறிநீக்கம் செய்ய குறியீட்டை உபயோகப்படுத்துகிறது.
5. இரண்டு குறியாக்கத் தொழில்நுட்பங்கள்
i. சமச்சீர் குறியீடு குறியாக்கம்
ii. சமச்சீரற்ற குறியீடு குறியாக்கம்
i. சமச்சீர் குறியீடு குறியாக்கம்:
1. சமச்சீர் குறியீடு குறியாக்கம், நெறிமுறை குறியாக்கம் மற்றும் மறைக் குறியாக்கம் ஆகிய இரண்டிற்கும் ஒரே குறியீட்டை பயன்படுத்துகின்றன.
2. இதில் ஒரு குறிப்பிட்ட நீளமுடைய இயல் உரையை பல சிக்கலான செயல்பாடுகள் மூலம் அதே நீளம் கொண்ட மறைகுறி உரையாக மாற்றப்படுகிறது.
3. சமச்சீர் குறியீடு குறியாக்கம் வழிமுறைகள் ஒரு குறியீட்டை மட்டுமே பயன்படுத்துவதால், கோட்பாட்டின் படி, குறியாக்கம் செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட துல்லியமான குறியீட்டை அறிந்தவர்கள் மட்டுமே மறைகுறியாக்கம் செய்ய முடியும்.
4. AES, RC4, DES, 3DES போன்ற பிரபலமான குறியாக்கத் தொழில்நுட்பங்கள் சமச்சீர் குறியீடு குறியாக்கம் நெறிமுறைகளைப் பயன்படுத்துகின்றன.
ii. சமச்சீரற்ற குறியீடு குறியாக்கம்:
1. சமச்சீரற்ற குறியீடு குறியாக்கம் பொது குறியீடு குறியாக்கம் என்றும் அழைக்கப்படுகிறது.
2. பொது குறியீடு மற்றும் எண்முறைச் சான்றிதழ்களைப் பயன்படுத்துகிறது.
3. இதில் தகவல் பரிமாற்றம் செய்யும் நபர்களுக்கு மற்றவரின் தனிப்பட்ட குறியீடு தெரிந்திருக்க வேண்டியதில்லை.
4. ஒவ்வொரு பயனரும் தனிப்பட்ட குறியீடு மற்றும் பொது குறியீடு என அவர்களின் சொந்தக் குறியீட்டு ஜோடியை உருவாக்குவர்.
5. பொதுக் குறியீட்டு குறியாக்கம் முறையில் ஒரு பொதுக் குறியீட்டை கொண்டு இயல் உரையை மறை உரையாக மாற்றி பின் ஒரு தனிப்பட்ட குறியீட்டை கொண்டு மறை உரையை மீண்டும் இயல் உரையாக மாற்றப்படுகிறது.
எ.கா: RSA, DSS தொழில் நுட்பங்கள்
25.
1. தரவுத் தளத்தில் பிழைகளைக் கையாளும் முறை என்பது நம் நிரலால் உருவாகும் பிழைகளை அறிந்து அதன் பிறகு பொருத்தமான நடவடிக்கையை மேற்கொள்ளுதல் ஆகும்.
2. PHP ல் பிழைகளைக் கையாளுதல் மிகவும் எளிதாகும்.
PHP ல் பிழைகளைக் கையாளவும் மேலாண்மை செய்யவும் பயன்படும் செயற்கூறுகள்:
1. die () செயற்கூறு: செய்தியைக் காண்பித்தபின் ஸ்கிரிப்ட் நிரலை விட்டு வெளியேறப் பயன்படுகிறது.
i) நிரல் காட்டும் பிழைச் செய்திக்குப் பதிலாக பயனர் விரும்பும் செய்தியைக் காட்டப் பயன்படுகிறது.
ii) சர வடிவிலான செய்திகளை மட்டுமே வெளியிடப் பயன்படுகிறது.
2. mysqli_connect_error (): die () செயற்கூறுடன் இதைப் பயன்படுத்தி, கடைசி இணைப்பில் ஏற்படும் பிழையிலிருந்து பிழையின் விளக்கத்தை காண்பிக்கப் பயன்படுத்தலாம்.
3. mysqli_connect_errno (): கடைசி இணைப்பின் பிழைக் குறியீட்டு எண்ணைத் திருப்பித் தரும் : பிழை இல்லை எனில் 0 என்ற மதிப்பைத் தரும்.
எ.கா:
< ?php
$conn= mysqli _connect("localhost", "user 1",
"Password", "Employee");
if(!$conn)
{
die("Connection error: ".mysqli_connect_
error ());
die("Error is :".mysqli_connect_error());
}
else
echo"Connected Successfully";
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards