12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 03/03/2021
12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Creative Five mark Question with Answer key - 2021(Public Exam)
12ஆம் வகுப்பு Computer Technology / கணினி தொழில்நுட்பம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Technology / கணினி தொழில்நுட்பம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Technology Test

1.
AutoCAD 2016 - வழங்கும் செயல்பாட்டு விசைகளை அவற்றிற்கு வரையறுக்கப்பட்டுள்ள செயல்பாடுகளுடன் பட்டியலிடு.
2.
AutoCAD வரைபடத்தை அச்சிடுதலுக்கான படிநிலைகளை எழுதுக.
3.
AutoCAD ல் வரையப்பட்ட பொருள்களிலிருந்து தேவையில்லாத பொருள்களை எவ்வாறு நீக்குவாய்? விவரி.
4.
AutoCAD இடைமுகத்தில் உள்ள ரிப்பன் காட்சிமுறையை எவ்வாறு மாற்றுவாய்? விவரி.
5.
ப்ளாஷில் Lasso கருவி கொண்டு தேர்வு செய்தலை விவரி.
6.
ப்ளாஷில் ஒரு frame-by-frame அசைவுப்பட மாதிரியை உருவாக்கப் பின்பற்ற வேண்டிய படிகளை விவரி:
7.
ப்ளாஷில் உள்ள Eraser கருவியின் பல்வேறு விருப்பத்தேர்வுகளை விவரி
8.
ப்ளாஷில் உள்ள Polystar கருவியின் பயன் யாது? அதைப் பயன்படுத்த பின்பற்ற வேண்டிய படிகளை எழுதுக.
9.
நூலகங்களில் உள்ள பல்லூடகத் தொழில்நுட்பப் பயன்பாடுகளை விவரி.
10.
கணினியில் படங்களை உருவாக்கும் முறைகளை விவரி.
11.
CorelDRAW கருவிப்பெட்டியில் உள்ள ஏதேனும் 10 கருவிகளை விவரி.
12.
CorelDRAW ஆவணச் சாளரத்தின் பல்வேறு பகுதிகளை விவரி.
13.
CorelDRAW-ல் பொருட்களை தேர்வு செய்யும் பல்வேறு வழிகளை விவரி.
14.
CorelDRAW ஆவணத்தில் பக்கத்தைச் சேர்ப்பதற்கான படிநிலைகளை எழுதுக.
15.
CorelDRAW-ல் தேர்வு செய்யப்பட்ட பொருட்களை நகலெடுக்க பயன்படும் வழிகள் யாவை?
16.
CorelDRAW-ல் உள்ள வண்ணத்தட்டு வண்ணங்களை பார்க்கும் பல்வேறு வழிகளை விவரி.
17.
கணிப்பொறி வரைகலையின் முக்கிய வகைகளை விவரி.
18.
InDesign-ன் கட்டுப்பாட்டுப் பலகம் மற்றும் பத்திப் பலகத்தில் உள்ள பத்தி இசைவு பொத்தான்களை விவரி.
19.
InDesign-ல் உரையைத் தேர்வு செய்யப் பயன்படும் சாவிச் சேர்மானங்களையும் சுட்டிச் செயல்பாடுகளையும் பட்டியலிடு.
20.
InDesign-ல் பொருளை உருமாற்றுவதற்கான பல வழிகளை விவரி.
21.
InDesign-ல் உள்ள Type கருவிகளைப் பயன்படுத்துதலை விவரி.
22.
InDesign கருவிப் பலகத்தில் உள்ள வரைவதற்குப் பயன்படும் கருவிகளை விவரி.
23.
பேஜ்மேக்கரில் ஆவணத்தை அச்சிடலை விவரி.
24.
பிற மென்பொருள்களில் தயாரிக்கப்பட்ட கோப்புகளை பேஜ்மேக்கரில் பயனர் கட்டுப்பாட்டு உரைப்பாய்வு மூலம் எவ்வாறு செருகுவாய்? விவரி.
25.
பேஜ்மேக்கரில் கருவிப் பெட்டியிலுள்ள கருவிகளுக்கான விசைப்பலகை குறுக்கு வழிகளைப் பட்டியலிடு.
1.
| செயல்பாட்டு விசைகள் |
ஆட்டோகேட் 2016 இல் வரையறுக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் |
| F1 | ஆன்லைன் உதவி பெற |
| F2 | கட்டளைச் சாளரத்தை ON மற்றும் OFF செய்ய |
| F3 | OSNAP ஐ ON மற்றும் OFF செய்ய |
| F4 | Tablet ஐ ON மற்றும் OFF செய்ய |
| F5 | Isoplanes இல் Right, Left மற்றும் Top ஆகியவற்றில் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாற |
| F6 | Dynamic UCS® ஐ ON மற்றும் OFF செய்ய |
| F7 | Grid ஐ ON மற்றும் OFF செய்ய |
| F8 | Ortho Mode ஐ ON மற்றும் OFF செய்ய |
| F9 | Snap Mode ஐ ON மற்றும் OFF செய்ய |
| F10 | Polar Tracking ON மற்றும் OFF செய்ய |
| F11 | Objects Snap Tracking ON மற்றும் OFF செய்ய |
| F12 | Dynamic Input ஐ ON மற்றும் OFF செய்ய |
2.
வரைபடத்தை அச்சிட PLOT கட்டளை பயன்படுகிறது.
1. சிவப்பு நிற A பணிக்குறியைக் கிளிக் செய்து, Print என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
2. தோன்றும் துணைப்பட்டியில் Plot என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
3. ஆட்டோகேட் பல விருப்பங்களுடன் கூடிய Plot உரையாடல் பெட்டியைக் காட்டும்.
4. Printer/plotter பகுதியில் Name கீழிறங்குப்பட்டியில் அச்சுப்பொறியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
5. Plot Area பகுதியில் What to plot கீழிறங்குப்பெட்டியில் Extents என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த விருப்பம் முழு வரைபடமும் அச்சிடப்படுவதை உறுதி செய்கிறது.
6. வரைபடத்தை தாளின் மையத்தில் அச்சிட, Plot Offset பகுதியில் Center the plot என்னும் தேர்வுப்பெட்டியில் கிளிக் செய்ய வேண்டும்.
7. Plot scale பகுதியில் Fit to paper என்னும் தேர்வுபெட்டியில் கிளிக் செய்ய வேண்டும். இது வரைபடத்தை தாளில் பொருந்துமாறு அச்சிடும்.
8. வரைபடம் தாளில் சரியான அளவில் அச்சிடப்படுமா என்பதை Preview பொத்தானைக் கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் பிழைகளைக் கண்டறிந்து தாள்கள் வீணாவதைத் தடுக்கலாம்.
9. அச்சு முன்னோட்டத்திலிருந்து வெளியேற ESC விசையை அழுத்த வேண்டும். (அ) மூடு பொத்தான் 'X'-ஐ கிளிக் செய்ய வேண்டும்.
10. Plot உரையாடல் பெட்டியில் OK பொத்தானைக் கிளிக் செய்து வரைபடத்தை அச்சிடலாம்.
3.
வரையப்பட்ட பொருள்களிலிருந்து தேவையில்லாத பொருள்களை நீக்க ERASE டூலைப் பயன்படுத்தலாம்.
ஒரு பொருளை அழிக்க,
1. Home tab > Modify panel > Erase tool என்பதைக் கிளிக் செய்து ERASE கட்டளையைத் தேர்ந்தெடுக்கவும். (அ) கட்டளை வரியில் ERASE (அ) E என தட்டச்சு செய்யவும்.
2. இப்பொழுது செருகும் புள்ளி cross-லிருந்து சிறிய சதுரமாக மாறியிருக்கும். இது pickbox என்று அழைக்கப்படும். இதன் தோற்றம் திரையில் உள்ள ஒரு பொருளைத் தேர்ந்தெடுக்கத் தயாராக உள்ளது என்பதைக் காட்டுகிறது. மேலும் கட்டளை வரியும் பொருளைத் தேர்ந்தெடுக்கக் கூறும்.
3. அழிக்க வேண்டிய பொருளின் மீது pickbox ஐ வைத்து கிளிக் செய்ய வேண்டும். பொருளின் கோட்டின் தடிமன் வெளிர் சாம்பல் நிறத்திற்கு மாறும்.
4. அழிக்க வேண்டிய அனைத்துப் பொருள்களையும் தொடர்ந்து தேர்ந்தெடுக்கலாம். கட்டளை நிறைவேற்றப்படும் வரை தேர்ந்தெடுக்கப்பட்ட பொருள்கள் வெளிர் சாம்பல் நிறத்தில் இருக்கும்.
5. நுழைவு விசையை அழுத்த வேண்டும் (அ) சுட்டியை வலது கிளிக் செய்து Erase என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இப்பொழுது தேர்ந்தெடுத்த பொருள்கள் அழிக்கப்பட்டு Erase கட்டளை முடிவு பெறும்.
4.
ரிப்பனின் மேல்பகுதியில் உள்ள சிறிதாக்குப் பொத்தானை கிளிக் செய்வதன் மூலம் அதன் காட்சிமுறையை மாற்ற முடியும்.
1. முதல் முறையாக சிறிதாக்குப் பொத்தானைக் கிளிக் செய்யும் போது ரிப்பன் தொகுதிகள் மற்றும் பேனல் பொத்தான்களுடன் காட்சியளிக்கும். இப்பொழுது பேனல் பொத்தானின் மீது சுட்டியை நகர்த்தினால், அந்த பேனலில் உள்ள அனைத்துக் கருவிகளும் தெரியும்.
2. இரண்டாவது முறையாக சிறிதாக்குப் பொத்தானை கிளிக் செய்யும் போது, பேனல் பொத்தான்கள் பேனல் தலைப்புகளாக மாறும். இப்பொழுது சுட்டியை பேனல் தலைப்புகளின் மீது நகர்த்தினால் அதற்குரிய கருவிகளைக் காட்டும்.
3. மூன்றாவது முறையாக ரிப்பனின் மேல்பகுதியில் உள்ள சிறிதாக்குப் பொத்தானைக் கிளிக் செய்யும் போது, பேனல் தலைப்புகள் பேனல் தொகுதிகளாக மாறும். ரிப்பனில் உள்ள தொகுதியைக் கிளிக் செய்தால் தற்காலிகமாக முழு பேனலையும் காண்பிக்கும். சுட்டியை பேனலை விட்டு வெளியே நகர்த்தியவுடன் அது மறைந்து விடும்.
4. சிறிதாக்கு ரிப்பன் பொத்தானின் பட்டியில் உள்ள Cycle through All என்ற விருப்பம் தேர்வு செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்து கொண்டு, சிறிதாக்கு பொத்தானை நான்காவது முறை கிளிக் செய்ய வேண்டும். இப்பொழுது ரிப்பன் இடைமுகம் முழுவதுமாக திரும்பப் பெறப்படும்.
5.
Freehand தேர்வு செய்தல் :
1. கருவிகள் பலகத்தில் உள்ள Lasso கருவியைக் கிளிக் செய்யவும்.
2. Lasso freehand முறையில் தேர்வு செய்ய, Polygon Mode modifier தேர்ந்தெடுக்கப் படவில்லை என்பதை உறுதிப்படுத்தவும்.
3. மேடையில் எங்கு வேண்டுமானாலும் கிளிக் செய்து, தேர்ந்தெடுக்க விரும்பும் பொருட்களை சுற்றி இழுக்கவும். இழுக்கும் போது ஒரு தேர்வுப் பகுதியை உருவாக்குகிறது. தேர்ந்தெடுப்பை முடிக்க தொடங்கிய இடத்தில் அருகில் சுட்டி, பொத்தானை விடுவிக்கவும்.
Point-to-point தேர்வு செய்தல் :
1. கருவிகள் பலகத்தில் உள்ள Lasso கருவியைக் கிளிக் செய்யவும்.
2. விருப்பங்கள் பகுதியில் இருந்து Polygon Mode modifier ஐ கிளிக் செய்யவும்.
3. தேர்வு செய்தலைத் தொடங்க, மேடையில் தேர்வு தொடங்க வேண்டிய புள்ளியில் கிளிக் செய்யவும்.
4. தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய பொருளைச் சுற்றி கோடு வரைய (Outline) அந்த பொருளை சுற்றி பணித்தளத்தில் தொடர்ந்து கிளிக் செய்யவும்.
5. தேர்ந்தெடுப்பை முடிக்க இரட்டை கிளிக் செய்யவும்.
6.
1. உரை கருவியைத் தேர்ந்தெடுத்து உரையைத் தட்டச்சு செய்யவும். எடுத்துக்காட்டாக "Save Trees-Save Earth'.
2. உரையைத் தேர்ந்தெடுத்து Modify>Convert to Symbol (அ) F8 செயல்பாட்டு விசையை அழுத்தி சின்னமாக மாற்றவும். Convert to Symbol உரையாடல் பெட்டி தோன்றும். சின்னத்தின் பெயரை தட்டச்சு (எடுத்துக்காட்டாக Save Trees) செய்து OK பொத்தானை அழுத்தவும். உரை சின்னமாக சேமிக்கப்படும்.
3. நூலகப் பலகத்தில் புதிய சின்னம் தோன்றும். நூலகம் திறக்கப்படவில்லை என்றால் Window>Library யைத் தேர்ந்தெடுக்கவும். 4. காலக்கோட்டில் Layer 1 ன் Frame 15 ஐ கிளிக் செய்யவும்.
5. Insert>Timeline>Frame என்பதைத் தேர்வு செய்யவும்.
6. Frame 15 தெரிவு செய்யப்பட்டிருக்கும் போது Insert > Timeline > Keyframe என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இந்த புதிய Keyframes வண்ண கீற்றில் (Color tab) உள்ள drop- down பட்டியலைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் உரையின் நிறத்தை மாற்றவும்.
7. இதேபோல், நான்கு அல்லது ஐந்து Keyframeகளை சேர்த்து ஒவ்வொரு Keyframe-ன் உரை வண்ணத்தையும் மாற்றவும்.
8. சலனப்படம் அல்லது அசைவுப்படத்தை இயக்க Frameஇல் Playhead வைத்து, Flash Play இல் Control >Test Movie >in Flash Professional யை தேர்வு செய்யவும்.
9. Test Movie சாளரத்தை மூடவும்.
7.
Eraser Tool : பொருட்கள் அல்லது பரப்புகளை அழிக்கப் பயன்படுகிறது. Eraser Tool ஐத் தேர்ந்தெடுக்கும் போது
1. Eraser mode modifier,
2. Faucet modifier
3. Eraser shape modifier ஆகியவை விருப்பப் பகுதியில் தோன்றும். 1. Eraser mode modifier : பயனருக்குத் தேவையான அழிக்கும் முறையைத் தேர்ந்தெடுக்க உதவுகிறது. இந்த பணிக்குறியின் ஐந்து விருப்பத் தேர்வுகள்:
2. Erase Normal : மேடையில் உள்ள அனைத்தையும் அழிக்கிறது. 3.Erase Fills : ஒரு பொருளைச் சுற்றியுள்ள வெளிக்கோட்டை விடுத்து உட்பரப்பை மட்டும் அழிக்கிறது.
4. Erase Lines : உட்பரப்பை விடுத்து சுற்றியுள்ள வெளிக்கோட்டை மட்டும் அழிக்கிறது.
5. Erase selected Fills : இது தேர்ந்தெடுக்கப்பட்ட பரப்பு மற்றும் கோடுகளை மட்டும் அழிக்கிறது.
6. Erase Inside : அழிப்பானால் தொடப்படும் பொருளின் பரப்பை அழிக்கிறது. இதில் வெளிக்கோடுகள் அழிக்கப்படுவதில்லை.
2. Faucet : வெளிக்கோடுகள் மற்றும் உட்பரப்புகளை ஒரே கிளிக்கில் அழிக்கிறது. இதற்காக நாம் அழிப்பானை பொருட்களின் மீது கிளிக் செய்து இழுக்கத் (drag) தேவையில்லை.
3. Eraser shape modifier : அழிப்பானின் வடிவம் மற்றும் அளவைத் தேர்ந்தெடுக்க உதவுகிறது.
8.
Polystar கருவி: பலகோணம் மற்றும் நட்சத்திரம் வரையப் பயன்படுகிறது. இதைப் பயன்படுத்துவதற்கான படிகள் :
1. Rectangle Tool பொத்தானிலுள்ள கீழிறங்கு அம்புக் குறியைக் கிளிக் செய்யவும். தோன்றும் துணைப் பட்டியில் Polystar Tool என்பதைத் தேர்வு செய்யவும்.
2. Property Inspector பலகத்திலிருந்து இந்த வடிவத்திற்கு தேவையான அமைப்புகளைத் (Settings) தேர்ந்தெடுக்கவும்.
3. Property Inspector பலகத்திலுள்ள Option பொத்தானைக் கிளிக் செய்யவும்.
அ) Style கீழிறங்கு பட்டிப் பெட்டியிலிருந்து Polygon (அ) star என்பதைக் கிளிக் செய்யவும்.
ஆ) பலகோணத்தின் பக்கங்களின் எண்ணிக்கை (அ) நட்சத்திரப் புள்ளிகளின் எண்ணிக்கையைக் குறிக்க 3. முதல் 32 வரையிலான எண்ணை உள்ளிடவும்.
இ) Style பட்டிப் பெட்டியிலிருந்து star தேர்ந்தெடுக்கப்பட்டால், பிறகு star point size உரைப்பட்டியில் 0 மற்றும் 1 ஆகியவற்றுக்கு இடையிலான மதிப்பை உள்ளிட வேண்டும்.
0 என்ற மதிப்பு நட்சத்திரம் அதிகபட்ச ஆழத்துடன் உருவாக்கப்பட வேண்டும் என்பதைக் குறிக்கிறது. 1 என்ற பட்ச மதிப்பு நட்சத்திரம் குறைந்த ஆழத்துடன் உருவாக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. OK பொத்தானைக் கிளிக் செய்யவும்.
4. பணித்தளத்தில் கிளிக் செய்து இழுப்பதன் மூலம் தேவையான வடிவத்தை வரையலாம்.
9.
1. பல்லூடகத் தானியங்கு சேவை வழங்கி.
2. வலை ஒளிபரப்பு மற்றும் ஒளிக்காட்சி கலந்துரையாடல்.
3. பயனரை ஒருமுகப்படுத்தும் திட்டம்.
4. உள்ளமைவு பல்லூடக வளங்கள் உருவாக்கம் மற்றும் மின் பதிப்பகம்.
5. இலக்க பல்லூடக நூலகங்கள்.
1. பல்லூடகத் தானியங்கு சேவை வழங்கி :
1. பயனர்கள் தொடுதிரை மூலம் தகவல்களைப் பெற அனுமதிக்கும் ஒரு பல்லூடக கணிப்பொறியாகும்.
2. விமான நிலையங்கள் மற்றும் பிற பொது இடங்களில் திசைகள் மற்றும் சில அவசியமான தகவல்களை பயனருக்கு வழங்க உதவுகின்றது.
3. நூலகங்களில் தானியங்கி சேவை வழங்கியானது வழக்கமாக நுழைவாயிலுக்கு அருகே வைக்கப்பட்டிருக்கும்.
4. இது அறிவிப்புகளை காண்பிக்கவும், பட்டியல்கள் நூலக பயனரிடமிருந்து வரும் குறிப்புகள் மற்றும் ஆலோசனைகளை படிக்கவும் மற்றும் நூலகத்தின் செயல்பாடுகள், நிகழ்வுகள் பற்றிய தகவல்களையும் வழங்க உதவுகின்றது.
2. வலை ஒளிபரப்பு மற்றும் ஒளிக்காட்சி கலந்துரையாடல் :
1. நிகழ் நேர நிகழ்ச்சிகளை இணையத்தின் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்வது வலை ஒளிபரப்பு எனப்படும்.
2. ஒளிக்காட்சி கலந்துரையாடல் என்பது வெவ்வேறு இடங்களில் உள்ள இரண்டிற்கும் மேற்பட்ட பங்காளர்களுக்கிடையே கலந்துரையாடலை நடத்தி அதன் ஒலி மற்றும் ஒளித் தரவுகளை கணினி வலையமைப்பு மூலம் அனுப்பும் ஒரு செயலாகும்.
3. பயனரை ஒருமுகப்படுத்தும் திட்டம்:
1. பல்லூடகத்தின் ஊடாடும் செயல்பாடு காரணமாக பள்ளி கூடங்கள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள நூலகங்களுக்கு பயிற்சி அளிப்பதில் பல்லூடகம் முக்கிய பங்காற்றுகின்றது.
2. மேலும் பேராசிரியர்களுக்கு கருத்தாழமிக்க பாடங்களில் பயிற்சி அளிக்க உதவுகின்றது.
4. உள்ளமைவு பல்லூடக வளங்கள் உருவாக்கம் மற்றும் மின் பதிப்பகம் :
1. பெரும்பான்மையான நூலகங்கள் உள்ளமைவாக பல்லூடக வளங்களை பெரிய அமைப்புக்கு சேவை வழங்குவதற்காக உருவாக்குகின்றன.
2. பல்லூடகக் கருவிகள் பல்வேறு மூலங்களிலிருந்து வரும் தகவல்களை பதிப்பித்தலை எளிதாக்கி உள்ளன.
3. நூலக பயனர்களுக்கு பயன்படுத்துவதற்கு எளியதாகவும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையிலும் உள்ளது.
5. இலக்க பல்லூடக நூலகங்கள் :
1. இலக்க வடிவத்தில் உள்ள தகவலானது இலக்க நூல்கள், ஸ்கேன் செய்யப்பட்ட நிழற்படங்கள். வரைகலை மற்றும் இலக்க முறையாக்கப்பட்ட ஒலி- ஒளி பதிவுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
2. தொடக்கத்தில் இலக்க நூலக திட்டமானது உரை வடிவத்திலான தரவினை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருந்தது.
3 .பிறகு இது பிற பல்லூடகக் கூறுகளான நிழற்படங்கள், ஒலி மற்றும் ஒளிக்காட்சி பதிவுகள் ஆகிய அனைத்தையும் அடிப்படையாகக் கொண்டு இலக்க நூலகத்தின் தொகுப்பின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டது.
10.
கணினியில் படங்களை இரு வகையில் உருவாக்கலாம். 1. பிட் மேப் (அ) செவ்வக படம்
2. வெக்டர் படங்கள்
1. பிட்மேப் (அ) செவ்வக படங்கள் :
1. கணினியில் படங்களைச் சேமிக்கும் பொதுவான மற்றும் பரந்த வடிவம் பிட்மேப் (அ) செவ்வக படமாகும்.
2. பிட்மேப் என்பது படப்புள்ளி என்றழைக்கப்படும் சிறிய புள்ளிகளின் எளிய அணியாகும்.
3. ஒவ்வொரு படப்புள்ளியும் இரண்டு (அ) அதற்கு மேற்பட்ட நிறங்களைக் கொண்டுள்ளது.
4. பிட்டுகளில் எவ்வளவு தரவு என்பதன் அடிப்படையைப் பயன்படுத்தி நிறங்களின் எண்ணிக்கையைத் தீர்மானித்து, நிறத்தின் ஆழத்தைத் தீர்மானிக்கலாம். எ.கா : ஒரு பிட்டுக்கு இரண்டு நிறங்கள், நான்கு பிட்டுகள் என்றால் பதினாறு நிறங்கள். எட்டு பிட்டுகள் என்றால் 256 நிறங்கள் மற்றும் பல.
2. வெக்டர் படங்கள்:
1. வரையும் கூறுகளான அல்லது பொருள்களான வரிகள், செவ்வகங்கள், வட்டங்கள் மற்றும் பல படங்களை உருவாக்குவது வெக்டர் படங்களின் அடிப்படையில் அமையும்.
2. படத்தைக் குறிக்க ஒப்பீட்டளவில் சிறிதளவு தரவு தேவைப்படும்.
3. அதன்மூலம் படத்தைச் சேமிக்க குறைந்த அளவு நினைவகம் தேவைப்படும். இதுவே அதன் நன்மையாகும்.
4. சுருக்க நுட்பம் படங்களின் கோப்பு அளவை குறைக்கப் பயன்படுகிறது.
5. அதாவது அதிக எண்ணிக்கையில் படங்களைச் சேமிக்கவும் வலைப்பின்னலில் உள்ள பயன்பாடுகளுக்கிடையே பரிமாற்றத்தை வேகப்படுத்தவும் பயன்படுகிறது.
எ.கா : GIF, TIFF மற்றும் JPEG.
11.
| கருவிப்பட்டை | விசைப்பலகை குறுக்குவழிச் சாவி | பயன் |
| 1. Pick tool | பொருட்களை தேர்ந்தெடுத்தல் மற்றும் மாற்றுதல் | |
| 2. Shape Tool | F10 | பொருட்களை வடிவமைத்தல் |
| 3. Crop tool | தேர்ந்தெடுத்த பகுதிக்கு வெளியே உள்ள பகுதிகளை நீக்க | |
| 4. Zoom tool | Z | பார்வைச் சாளரத்தை மாற்ற |
| 5. Freehand tool | F5 | கோடுகள்/வளைவுகளை வரைதல் |
| 6. Rectangle tool | F6 | செவ்வகங்கள்/சதுரங்களை வரைதல் |
| 7. Ellipse tool | F7 | நீள்வட்டங்கள் / வட்டங்கள் வரைதல் |
| 8. Polygon tool | Y | பலகோணங்கள் வரைதல் |
| 9. Text tool | F8 | கலை மற்றும் பத்தி இணை உரைகளை சேர்த்தல். |
| 10. Transparency tool | - | தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளுக்கு ஒளிபுகு தன்மையை அமைத்தல் |
| 11. Color Eyedrop | - | ஒரு பொருளிலிருந்து நிரப்புத் தேர்வை தேர்ந்தெடுத்தல் |
| 12. Smart Fill tool | - | நிரப்புப் பண்புகளை அமைத்தல் |
12.
| பகுதி | விளக்கம் |
| 1. தலைப்பு பட்டை (Title bar) |
தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட வரைபடத்தின் தலைப்பை அறிவிக்கும் பகுதி. |
| 2. பட்டிப் பட்டை (Menu bar) |
கீழ் விரி பட்டி விருப்பத் தேர்வுகள் உள்ள பகுதி . |
| 3. செந்தர கருவிப் பட்டை (Standard Toolbar) |
பட்டி விருப்பத் தேர்வுகள் மற்றும் பிற கட்டளைகளுக்கு குறுக்கு வழிகளைக் கொண்ட நகரக்கூடிய பட்டை. |
| 4. கருவிப்பெட்டி (Tool box) |
பொருள்களை உருவாக்க, நிரப்ப மற்றும் மாற்றியமைக்க கருவிகள் கொண்ட ஒரு இணைக்கப்பட்ட பட்டை. |
| 5. பண்புப் பட்டை (Property bar) |
இயக்கத்தில் உள்ள கருவி (அ) பொருள் தொடர்பான கட்டளைகளுடன் ஒரு நீக்கக்கூடிய பட்டை. |
|
6. ஆவண கீற்று |
ஒவ்வொரு திறந்த ஆவணத்திற்கும் ஒரு கீற்று இருக்கும். விரைவாக ஆவணங்களுக்கு இடையில் மாற அனுமதிக்கிறது. |
| 7. வரைதல் சாளரம் (Drawing window) |
வரைதல் பக்கத்திற்கு வெளியே உள்ள பகுதி. |
| 8. வரைதல் பக்கம் (Drawing page) |
வரைதல் சாளரத்தின் உள்ளே உள்ள செவ்வக பகுதி. |
| 9. ரூலர் (Rulers) |
சாளரத்தில் இரண்டு ரூலர் இருக்கும். அவை கிடைமட்ட ரூலர் மற்றும் செங்குத்து. ரூலர்கள் ஒரு ஆவணத்தில் பொருட்களின் அளவு மற்றும் நிலையை தீர்மானிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. |
| 10. டாக்கர் (Docker) |
ஒரு முதன்மை சாளரத்தின் வலது முனையுடன் ஒட்டி இருப்பதால் (இது டாக்கர் சாளரம் என்று அழைக்கப்படுகிறது. |
| 11. ஆவண உலவி (Document navigator) |
பயன்பாட்டு சாளரத்தின் கீழ் இடதுபுறம் உள்ள பகுதியாகும். இது பக்கங்களைச் சேர்ப்பதற்கும் பக்கங்களுக்கிடையே மாறுவதற்கும் கட்டுப்பாடுகளைக் கொண்டிருக்கும். |
| 12. உதவி (Navigator) |
சாளரத்தின் கீழ் வலது மூலையில் உள்ள ஒரு பொத்தான் ஆகும். இது ஒரு வரைபடத்தின் பகுதிகளுக்கிடையே நகர்த்த உதவுவதற்கு சிறிய காட்சித் திரையைத் திறக்கும். |
| 13. வண்ணத் தட்டு (Color palette) |
வண்ண பெட்டிகளைக் கொண்ட நகர்த்தக்கூடிய பட்டி. |
| 14. நிலைமைப் பட்டை (Status bar) |
ஆவண சாளரத்தின் கீழே உள்ள பகுதி ஆகும். இது தேர்ந்தெடுத்த பொருளின் பண்புகளான வகை, அளவு, நிறம், நிரப்பு வகை மற்றும் எல்லை போன்ற தகவலைக் காட்டுகிறது. |
13.
| தேர்ந்தெடுக்க | கீழ்கண்டவற்றை செய்யவும் |
| ஒரு பொருளைத் தேர்வு செய்ய | Pick கருவி கொண்டு பொருளின் மீது கிளிக் செய்யவும். |
| பல பொருளைத் தேர்வு செய்ய | Shift சாவியினை அழுத்தியவாறு தேர்வு செய்ய விரும்பும் ஒவ்வொரு பொருளின் மீதும் கிளிக் செய்யவும். |
| முதலில் உருவாக்கப்பட்ட பொருள் தொடங்கி கடைசியாக உருவாக்கப்பட்ட பொருள் நோக்கி நகர்ந்து கொண்டே ஒரு பொருளைத் தேர்வு செய்ய | நீங்கள் தேர்வு செய்ய விரும்பும் பொருளைச் சுற்றிலும் தேர்ந்தெடுத்த பெட்டி தோன்றும் வரை Shift + Tab ஒரு னை அழுத்தவும். |
| கடைசியாக உருவாக்கப்பட்ட பொருள் தொடங்கி முதலில் உருவாக்கப்பட்ட பொருள் நோக்கி நகர்ந்து கொண்டே ஒரு பொருளைத் தேர்வு செய்ய | நீங்கள் தேர்வு செய்ய விரும்பும் பொருளை சுற்றிலும் தேர்ந்தெடுப்பு பெட்டி தோன்றும் வரை Tab-னை அழுத்தவும். |
| அனைத்து பொருட்களையும் தேர்வு செய்ய | Edit>Select all>Objects தேர்வு செய்யவும். |
| ஒரு தொகுதியிலுள்ள ஒரு பொருளைத் தேர்வு செய்ய | Ctrl- னை அழுத்தியவாறு. Pick கருவியினைக் கிளிக் செய்து பின் தொகுதியிலுள்ள பொருளைக் கிளிக் செய்யவும். |
| பின்னலான தொகுதிக்குள் உள்ள பொருளைத் தேர்வு செய்ய | Ctrl- னை அழுத்தியவாறும், Pick கருவியினை கிளிக் செய்து பின் தேர்வு செய்ய விரும்பும் பொருளை சுற்றிலும் தேர்ந்தெடுப்பு பெட்டி தோன்றும் வரை பொருளின் மீது கிளிக் செய்யவும். |
| பிற பொருட்களால் காட்சியிலிருந்து மறைக்கப்பட்ட ஒரு பொருளைத் தேர்வு செய்ய | Alt - அழுத்தியவாறு, Pick கருவியினை கிளிக் செய்து, பின் தேர்வு செய்ய விரும்பும் பொருளை சுற்றிலும் தேர்ந்தெடுப்பு பெட்டி தோன்றும் வரை செய்ய எல்லாவற்றிற்கும் மேலுள்ள பொருளைக் கிளிக் செய்யவும். |
| பல மறைக்கப்பட்டப் பொருளைத் தேர்வு செய்ய | Shift + Alt னை அழுத்தியவாறு. Pick கருவியினை கிளிக் செய்து பின் நீங்கள் தேர்வு விரும்பும் மறைக்கப்பட்ட பொருள்களை சுற்றிலும் தேர்ந்தெடுத்த பெட்டி தோன்றும் வரை எல்லாவற்றிற்கும் மேலுள்ள பொருளைக் கிளிக் செய்யவும். |
| ஒரு தொகுதியிலுள்ள மறைக்கப்பட்ட ஒரு பொருளைத் தேர்வு செய்ய | Ctrl + Alt னை அழுத்தியவாறு, Pick கருவியினை கிளிக் செய்து பின் தேர்வு செய்ய விரும்பும் மறைக்கப்பட்ட பொருள்களை சுற்றிலும் தேர்ந்தெடுப்பு பெட்டி தோன்றும் வரை எல்லாவற்றிற்கும் மேலுள்ள பொருளைக் கிளிக் செய்யவும். |
14.
1. பட்டி பட்டையிலிருந்து Layout - Insert Page என்பதை கிளிக் செய்யவும்.
2. Insert Page உரையாடல் பெட்டி தோன்றும்.
3. சேர்க்க வேண்டிய பக்கங்களின் எண்ணிக்கையை Insert Page உரையாடல் பெட்டியில் தட்டச்சு செய்யவும்.
4. நடப்பு பக்கத்தை பொறுத்து புதிய பக்கங்களை எங்கு சேர்க்க வேண்டும் என்பதை Before அல்லது After மீது கிளிக் செய்து குறிப்பிடவும்.
5. பல பக்கங்களை கொண்ட ஆவணங்களில், புதிய பக்க Existing page பெட்டியில் தட்டச்சு செய்யவும். இது சார்ந்த பக்கத்திமை மாற்றுகின்றது.
6. OK பொத்தானை கிளிக் செய்யவும்.
15.
நகலெடுத்தல் :
1. வலது கிளிக் பயன்படுத்தி நகலெடுத்தல் :
1. Pick கருவி கொண்டு ஒரு பொருளின் வடிவத்தை மாற்றும் பொழுது, சுழற்றும் போது (அ) நகர்த்தும் பொழுது சுட்டியின் வலது பொத்தானைக் கிளிக் செய்யவும்.
2. இப்பொழுது ஒரு நகலானது உருவாக்கப்படும். 3. தற்பொழுது இழுக்கப்படும் பொருளானது ஒரு நகலாக மாறும்.
4.மேலும் அசல் பொருளானது எந்த மாற்றமுமின்றி அப்படியே இருக்கும்.
5. அம்புக்குறியின் அருகிலுள்ள சிறிய + குறியீடு ஒரு நகலானது உருவாக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிக்கிறது.
2. இடைவெளிபட்டை (Spacebar) பயன்படுத்தி நகலெடுத்தல் :
1. Pick கருவி கொண்டு ஒரு பொருளின் வடிவத்தை மாற்றும் பொழுது, சுழற்றும் போது அல்லது நகர்த்தும் பொழுது இடைவெளிப்பட்டையினை அழுத்தவும்.
2. இப்பொழுது ஒரு நகல் உருவாகும்.
3. ஒவ்வொரு முறையும் இடைவெளி பட்டையை அழுத்தும் பொழுது ஒரு நகலானது தோன்றும்.
4. இடைவெளி பட்டையை அழுத்திப் பிடித்துக்கொண்டே இருக்கும் பொழுது பொருளினுடைய பல நகல்கள் விரைவாக உருவாகிக் கொண்டே இருக்கும்.
3. எண்வகை + சாவியினை அழுத்துவதன் மூலம் நகலெடுத்தல் :
1. எண் வகை விசைப்பலகையிலுள்ள சாவியினை அழுத்துவதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளுடைய நகலானது பொருளின் மீது அடுக்கி வைக்கப்படும் அதாவது அசல் பொருளின் மீது உருவாகும்.
2. + சாவியை அழுத்திய பிறகு, உருவாகும் நகலானது தேர்வு செய்யப்பட்ட பொருளாகிவிடும்.
3. இதே முறையை பயன்படுத்தி எத்தனை நகல்களை வேண்டுமானாலும் உருவாக்கலாம்.
16.
1. வண்ணத் தட்டில் பார்க்கும் சிறிய சதுர வண்ணங்கள் வெல்ஸ் எனப்படும்.
2. வண்ணத் தட்டு வெல்ஸ் தொகுப்பை திரை உருளல் செய்ய மேல் மற்றும் கீழ் பகுதியில் உள்ள அம்புக்குறியை கிளிக் செய்யவும்.
3. சுட்டியின் இடது பொத்தானை கிளிக் செய்து வண்ணத் தட்டு வெல்ஸின் ஒரு வண்ணத்தை மட்டும் உருளச் செய்ய முடியும்.
4. சுட்டியின் வலது பொத்தானை கிளிக் செய்வது Page Up and Page Down விசைக்குரிய பணியை செய்யவும். நீங்கள் பார்க்கும் வண்ண தொகுதியின் ஒரு வரியை மேல் அல்லது கீழ் உருளச் செய்யவும்.
5. எந்த வண்ண வரிசை வேண்டுமோ அதற்கு ஏற்ப வண்ண வெல்ஸையும் மேலும் கிளிக் செய்து இழுத்து நகர்த்தலாம் மூலம் வண்ண வரிசை அமைப்பை மாற்றலாம்.
6. இவ்வாறு உருளச் செய்து சில வண்ண வரிசையை மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த வசதி போதுமானதாக இல்லாவிட்டால் Expand பொத்தான் மூலம் அனைத்து வண்ணங்களையும் தற்காலிகமாகப் பார்க்க முடியும்.
7. வண்ணத்தை தேர்ந்தெடுத்தவுடன் வண்ணத்தட்டு தானாக பழைய நிலைக்கு சென்றுவிடும்.
8. வண்ணத்தட்டு மிதவை பெட்டியாக இருக்கும் போது அதன் தலைப்பு பட்டியில் கிளிக் செய்து இழுத்து நகர்த்துவதன் மூலம் வண்ண தட்டை சன்னல் திரையில் எங்கு வேண்டுமானாலும் நகர்த்தலாம். மறையச் செய்ய Close பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.
9. Window > Color Palette என்பதைத் தேர்ந்தெடுத்து அதில் வண்ணத் தட்டை கிளிக் செய்தால் வண்ணத்தட்டு அது கடைசியாக இருந்த நிலையில் காட்டப்படும்.
17.
கணிப்பொறி வரைகலையில் இரண்டு முக்கிய வகைகள் 1. நெறிய வரைகலை 2. பிட்மேப்.
நெறிய வரைகலை :
1. கோடுகள் மற்றும் வளைவுகளால் உருவாக்கப்படுகின்றன.
2. கணித விளக்கங்கள் மூலம் உருவாக்கப்படுகின்றன.
3. லோகோக்கள் மற்றும் illustrations க்கு மிகவும் ஏற்றது.
4. அவை தெளிவுத்திறன் சார்பற்ற வரைகலை என்பதால் வேண்டிய அளவில் மாற்றலாம். அச்சிடலாம் மற்றும் எந்த தெளிவுத்திறனிலும் விவரம் மற்றும் தரத்தை இழக்காமல் திரையிடலாம்.
பிட்மேப் :
1. பிட்மேப்கள் ராஸ்டெர் படங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. அவை பிக்சல்கள் என்று அழைக்கப்படும் சிறிய சதுரங்களால் ஆனவை.
2. ஒவ்வொரு பிக்சலும் படத்தின் ஒவ்வொரு இடத்துடன் இணைக்கப்பட்டு வண்ணங்களின் எண்மதிப்புகளைக் கொண்டிருக்கும்.
3. பிட்மேப்கள் ஒரு படத்தில் வண்ண மண்டலங்களை நன்றாக மீளுருவாக்கம் செய்கின்றன.
4. எனவே அவை புகைப்படங்கள் மற்றும் எண்ம ஓவியங்களுக்கு மிகவும் பொருத்தம் ஆனவை.
5. பிட்மேப்கள் தெளிவுத்திறன் சார்ந்த படங்கள் ஆகும்.
6. அதாவது அவை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பிக்சல்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.
7. அவை அவற்றின் குறிப்பிட்ட அளவுகளில் சரியாக இருக்கும். ஆனால் அளவு மாற்றப்படும் போதோ (அ) மிகுந்த தெளிவுத்திறனுடன் அச்சிடும் போது அவை தெளிவில்லாமல் படத்தின் தரத்தை இழக்கின்றன.
18.
| இசைவின் வகை | விளக்கம் | |
| இடது இசைவு | உரைபெட்டியின் இடது எல்லையில் அனைத்து வரிகளும் சீரமைக்கப்படும். | |
| மைய இசைவு | உரைபெட்டியின் இடது மற்றும் வலது எல்லைகளுக்கிடையே மையப்படுத்தப்படும் . | |
| |
வலது இசைவு | உரைபெட்டியின் வலது எல்லையில் அனைத்து வலது இசைவு வரிகளும் சீரமைக்கப்படும். |
இறுதி வரி மட்டும் இடது இசைவுடன் கூடிய நேர்த்தி இசைவு |
உரை சட்டகத்தின் வலது மற்றும் இடது என இரு இறுதி வரி மட்டும் இடது இசைவுடன் எல்லைகளுக்கிடையே சமமாக பகிர்ந்து, வரிகள் கூடிய நேர்த்தி இசைவு சீரமைக்கப்படும். பத்தியின் இறுதி வரி மட்டும் இடது எல்லையில் அமைந்திருக்கும். | |
| இறுதி வரி மட்டும் வலது இசைவுடன் கூடிய நேர்த்தி இசைவு |
உரைசட்டகத்தின் வலது மற்றும் இடது என இரு இறுதி வரி மட்டும் வலது எல்லைகளுக்கிடையே சமமாக பகிர்ந்து, வரிகள் இசைவுடன் கூடிய நேர்த்தி இசைவு சீரமைக்கப்படும். பத்தியின் இறுதி வரி மட்டும் வலது எல்லையில் அமைந்திருக்கும். | |
| இறுதி வரி மட்டும் மைய இசைவுடன் கூடிய நேர்த்தி இசைவு |
.உரைசட்டகத்தின் வலது மற்றும் இடது என இரு எல்லைகளுக்கிடையே சமமாக பகிர்ந்து, சீரமைக்கப்படும். பத்தியின் இறுதி வரி மட்டும் மைய இசைவில் அமைந்திருக்கும் | |
| நேர்த்தி இசைவு (அனைத்து வரிகளும்) | உரை சட்டகத்தின் வலது மற்றும் இடது என எல்லைகளுக்கிடையே சமமாக பகிர்ந்து வரிகள் சீரமைக்கப்படும். | |
முனையை நோக்கிய இசைவு |
இடது மற்றும் வலது பக்கங்களில் பயன்படுத்தப்படும், உரைப்பெட்டியின் இடது பக்கத்திலுள்ள உரை வலது இசைவாகவும், வலது பக்கம் மீது பாயும் எந்த உரையும் இடது இசைவாகவும் இருக்கும். | |
| முனையிலிருந்து விலகும் இசைவு | இடது மற்றும் வலது பக்கங்களில் பயன்படுத்தப்படும், உரைப்பெட்டியின் இடது பக்கத்திலுள்ள உரை இடது இசைவாகவும், வலது பக்கம் மீது பாயும் எந்த உரையும் வலது இசைவாகவும் இருக்கும். |
19.
| தேர்ந்தெடுத்தல் |
செய்ய வேண்டியவை |
| ஒரு வார்த்தை | வார்த்தையின் மேல் இரட்டை கிளிக் செய்யவும். |
| ஒரு வரி | வரியின் ஏதேனும் ஒரு வார்த்தையில் மூன்று கிளிக் செய்யவும் |
| ஒரு பத்தி | பத்தியில் உள்ள ஏதேனும் ஒரு வார்த்தையின் மீது நான்கு முறை கிளிக் செய்யவும். |
| முழு கதை | கதையில் உள்ள ஏதேனும் ஒரு வார்த்தையின் மீது ஐந்து முறை கிளிக் செய்யவும். |
| முழு கதை | Ctrl + A/td> |
| செருகும் புள்ளிக்கு வலது பக்கத்தில் உள்ள ஒரு எழுத்து |
Shift + → |
| செருகும் புள்ளிக்கு இடது பக்கத்தில் உள்ள ஒரு எழுத்து |
Shift +⇠ |
| செருகும் புள்ளிக்கு மேல் ஒரு வரி |
Shift + ↑ |
| செருகும் புள்ளிக்கு கீழ் ஒரு வரி |
Shift + ↓ |
| செருகும் புள்ளிக்கு வலது பக்கத்தில் ஒரு வார்த்தை |
Shift +Ctrl + → |
| செருகும் புள்ளிக்கு இடது பக்கத்தில் ஒரு வார்த்தை |
Shift +Ctrl + <--- |
| செருகும் புள்ளிக்கு மேலே ஒரு பத்தி |
Shift +Ctrl + ↑ |
| செருகும் புள்ளிக்கு கீழே ஒரு பத்தி |
Shift +Ctrl + ↓ |
20.
InDesign-ல் பொருளை உருமாற்றுவதற்கு பல வழிகள் உள்ளன Selection கருவியைப் பயன்படுத்தி பொருளைத் தேர்ந்தெடுக்கவும். பிறகு
1. பொருளை அளவிடுவதற்கு தேர்ந்தெடுப்பு கைப்பிடியை இழுத்துவிடவும்.
2. கருவிகள் பலகத்திலிருந்து உருமாற்றக் கருவியைத் தேர்ந்தெடுத்து, உருமாற்றத்தின் மையத்தை அமைத்து, கருவியை இழுக்கவும்.
3. உருமாற்ற பலகம் (அ) கட்டுப்பாட்டு பலகம் தோன்றும். மதிப்புகளை, உருமாற்றம் செய்ய விரும்பும் தொடர்புடைய பலகப் புலத்தில் உள்ளிடவும். (அ) மேல் மீட்பு பட்டியோடு தொடர்புடைய புலத்திலிருந்து முன்னமைக்கப்பட்ட மதிப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
4. உருமாற்ற பலகப்பட்டி (அ) கட்டுப்பாட்டு பலகப்பட்டியிலிருந்து முன்னமைக்கப்பட்ட (preset) சுழற்றும் (அ) பிரதிபலிக்கும் தேர்வுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
5. கருவிப்பெட்டியிலுள்ள ஏதேனும் ஒரு உருமாற்றக் கருவியின் மீது இரட்டைக் கிளிக் செய்து, தொடர்புடைய உருமாற்ற உரையாடல் பெட்டியைத் தோன்றச் செய்யலாம்.
எ.கா : Rotate கருவியை இரட்டைக் கிளிக் செய்தால் Rotation உரையாடல் பெட்டி தோன்றும்.
6. Free Transform கருவியைத் தேர்ந்தெடுத்து, பொருளைச் சுற்றி கருவியை இழுத்து விடவும்.
7. விசைப்பலகைக் குறுக்கு வழியை அழுத்தவும்.
21.
1. கருவிப் பலகத்தில் உள்ள Type கருவியைத் தேர்வு செய்யவும்.
தனியாகப் பிரிக்கக் கூடிய பலகத்தை உருவாக்குவதற்கு கருவிப் பலகத்தின் வலது புறத்தில் உள்ள அம்புக்குறியைக் கிளிக் செய்யவும்.
2. பின்வரும் ஏதேனும் ஒரு Type கருவியைத் தேர்வு செய்யவும்.
Type - உரைச்சட்டகத்தை உருவாக்குகிறது.
Type - திறந்த (அ) மூடப்பட்ட பாதையின் வெளிப்புற விளிம்பில் உரையை உருவாக்குகிறது.
3. Type கருவியில் உரைச்சட்டகத்தை வரைய அதை இழுக்கவும். Type on path கருவியின் பாதையில் மேல் கிளிக் செய்யவும்.
4. சில உரைகளை தட்டச்சு செய்யவும்.
22.
1. பேனா கருவி : நேரான மற்றும் வளைந்த வரி பகுதிகளைக் கொண்ட பாதைகளை வரைவதற்குப் பயன்படுகிறது.
2. பென்சில் கருவி : கையால் வரையும் பாதையை உருவாக்குகிறது.
வரிக் கருவி : இரண்டு மூலைப்புள்ளிகளை உடைய நேர் கோட்டுப் பாதைகளை வரையப் பயன்படுகிறது.
3. நீள்வட்டக் கருவி : நீள்வட்டம் மற்றும் வட்டங்களை வரைகிறது. நீள்வட்டம் வரைய கிளிக் செய்து இழுக்கவும். வட்டத்தை வரைய Shift பொத்தானை அழுத்திக் கொண்டு இழுக்கவும்.
4. செவ்வகக் கருவி : சதுரம் மற்றும் செவ்வகத்தை வரைகிறது. செவ்வகத்தை வரைய கிளிக் செய்து இழுக்கவும். அந்த செவ்வகத்தை, சதுரமாக மாற்ற Shift பொத்தானை அழுத்திக் கொண்டு இழுக்கவும்.
23.
1. பட்டிப்பட்டையில் File > print என்பதைக் கிளிக் செய்யவும். (அ) Ctrl+P என்னும் விசைப்பலகை குறுக்கு வழியைப் பயன்படுத்தவும். Print Document உரையாடல் பெட்டி தோன்றும்.
2. அதில் கீழ்க்கண்ட மாற்றங்களை செய்யவும்
(i) Printer கீழிறங்குப் பட்டிப்பெட்டியில் அச்சுப்பொறியைத் தேர்ந்தெடுக்கவும்.
(ii) அச்சிட வேண்டிய பக்கங்களைக் குறிப்பிட Pages பகுதியில் கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
All : இந்த விருப்பம் ஆவணத்தில் உள்ள அனைத்துப் பக்கங்களையும் அச்சிடும்.
Ranges: இந்த விருப்பத்தில் பக்க எண்களைக் கொடுத்து ஒரு பக்கத்தையோ (அ) தொடர்ச்சியான பல - பக்கங்களையோ அச்சிடலாம். 3. ஒன்றிற்கு மேற்பட்ட பக்க எண்கள் காற்புள்ளி மூலம் பிரிக்கப்பட வேண்டும்.
4. தொடர்ச்சியான பக்கங்களை அச்சிட hyphen(-) பயன்படுத்த வேண்டும். (எ.கா 10 - 17 என்று கொடுத்தால் பக்க எண் 10 லிருந்து 17 வரை உள்ள பக்கங்களை அச்சிடும்)
5. Print: Print கீழிறங்குப் பட்டிப்பெட்டியில் Odd pages என்பதைத் தேர்ந்தெடுத்து ஒற்றைப்படை பக்க எண் உடைய பக்கங்களை மட்டும் அச்சிட முடியும். அதே போன்று Even pages என்பதைத் தேர்ந்தெடுத்து இரட்டைப் படை பக்க எண் உடைய பக்கங்களை மட்டும் அச்சிட முடியும்.
6. Copies உரைப்பெட்டியில் தேவையான நகல்களின் எண்ணிக்கையை உள்ளிட வேண்டும்.
7. Collate என்னும் தேர்வுப் பெட்டியை தேர்வு செய்யலாம். (அ) தேர்வு செய்யாமலும் இருக்கலாம்.
எ.கா:
1. ஐந்து பக்கங்கள் கொண்ட ஒரு ஆவணத்தை நான்கு நகல்கள் அச்சிட வேண்டுமெனில்,
2. இப்பொழுது Collate என்னும் தேர்வுப் பெட்டி தேர்வு செய்யாமல் இருந்தால், முதல் பக்கம் நான்கு நகல்கள் அச்சிட்ட பிறகு, இரண்டாவது பக்கம் நான்கு நகல்கள் அச்சிடும். இதே போன்று ஐந்தாவது பக்கம் வரை அச்சிடும்.
3. ஆனால் Collate என்னும் தேர்வுப் பெட்டி தேர்வு செய்திருந்தால் முதலில் ஒன்றிலிருந்து ஐந்து பக்கங்கள் வரை தொடர்ச்சியாக அச்சிடும்.
4. அதன் பிறகு மறுபடியும் ஒன்றிலிருந்து ஐந்து பக்கங்கள் வரை தொடர்ச்சியாக அச்சிடும். அதன் பிறகு மறுபடியும் ஒன்றிலிருந்து ஐந்து பக்கங்கள் வரை தொடர்ச்சியாக அச்சிடும். இதே போன்று நான்கு நகல்களும் அச்சிடப்படும்.
8. இறுதியாக Print பொத்தானை அழுத்தவும்.
24.
வழிமுறை 1:
1. உரையேற்றப்பட்ட பணிக்குறியை உரையை வைக்க வேண்டிய இடத்தில் கிளிக் செய்து தேவையான அளவிற்கு இழுத்துவிட வேண்டும்.
2. இப்பொழுது உரை நாம் வரையறுத்த உரைத்தொகுதிக்குள் வந்திருக்கும். இந்த உரைத் தொகுதிக்குள் உரை முழுவதும் வைக்க முடியவில்லை எனில் கீழ்ப்பக்க விண்டோ ஷேடில் சிவப்பு நிற முக்கோணம் தோன்றும். இதில் கிளிக் செய்தால் மறுபடியும் உரையேற்றப்பட்ட பணிக்குறி தோன்றும்.
3. இப்பொழுது புதிய உரைத் தொகுதியை உருவாக்கி அதில் கிளிக் செய்ய வேண்டும்.
4. இந்த செயல்முறையை சிவப்பு நிற முக்கோணம் மறையும் வரை (அ) செருக வேண்டிய உரை உள்ள வரை திரும்பத் திரும்ப செய்ய வேண்டும்.
வழிமுறை 2 :
1. இதே போன்று ஒரு பக்கத்தில் உரையை செருக வேண்டுமெனில் பக்கத்தின் மேற்பகுதியில் உரையேற்றப்பட்ட பணிக்குறியை வைத்து கிளிக் செய்ய வேண்டும்.
2. உரையானது அப்பக்கம் முழுவதும் நிரம்பும்.
3. ஒரு பக்கத்தை விட அதிகமான உரை இருந்தால், கீழ்ப்பகுதியில் உள்ள விண்டோ ஷேடில் சிவப்பு நிற முக்கோணம் தோன்றும்.
4. இப்பொழுது பட்டிப் பட்டையில் Layout --> Insert Pages என்பதைக் கிளிக் செய்து புதிய பக்கத்தை உருவாக்கி, பக்கத்தின் மேல் பகுதியில் உரையேற்றப்பட்ட பணிக்குறியை கிளிக் செய்ய வேண்டும். இதை செருக வேண்டிய உரை உள்ள வரை திரும்பத் திரும்ப செய்ய வேண்டும்.
25.
| கருவிகள் | விசைப்பலகை குறுக்கு வழி |
| 1. பாயின்டர் டூல் | F9 |
| 2. ரொட்டேடிங் டூல் | Shift+F2 |
| 3. லைன் டூல் | Shift +F3 |
| 4. ரொட்டேடிங் டூல் |
Shift +F4 |
| 5. எலிப்ஸ் டூல் | Shift +F5 |
| 6. பாலிகான் டூல் | Shift +F6 |
| 7. ஹேண்ட் டூல் | Shift+Alt+Drag Left mouse button |
| 8. டெக்ஸ்ட் டூல் | Shift+Alt+F1 |
| 9. கிராப்பிங் டூல் | Shift+Alt+F2 |
| 10. கன்ஸ்ட்ரெய்ன்டு லைன் டூல் | Shift+Alt+F3 |
| 11. ரெக்டாங்கல் ஃபிரேம் டூல் |
Shift+Alt+F4 |
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards