By QB365 on 02 Mar, 2021
12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Five mark Important Questions - 2021(Public Exam)
12th Standard
கணினி தொழில்நுட்பம்
பகுதி I
பேஜ்மேக்கர் கருவிப்பெட்டியிலுள்ள கருவிகளைப் பற்றி விவரி.
உரைத்தொகுதியிலுள்ள உரையை சட்டத்திற்கு எவ்வாறு மாற்றுவாய்?
பிற மென்பொருள்களில் தயாரிக்கப்பட்ட கோப்புகளை பேஜ்மேக்கரில் பயனர் கட்டுப்பாட்டு உரைப்பாய்வு மூலம் எவ்வாறு செருகுவாய்? விவரி.
பேஜ்மேக்கரில் ஆவணத்தை அச்சிடலை விவரி.
InDesign-ல் புதிய ஆவணத்தை உருவாக்குவதற்கான படிநிலைகளை எழுதுக
பாதையில் ஒரு வகையினை உருவாக்க படிநிலைகளை எழுதுக
InDesign-do உள்ள Type கருவிகளைப் பயன்படுத்துதலை விவரி.
In Design - ல் பொருளை உருமாற்றுவதற்கான பல வழிகளை விவரி.
InDesign-ல் உரையைத் தேர்வு செய்யப் பயன்படும் சாவிச் சேர்மானங்களையும் சுட்டிச் செயல்பாடுகளையும் பட்டியலிடு.
பலகோணங்களை (Polygon) யை படிநிலைகளை எழுதுக.
கட்டங்களை (Grid) வரைய படிநிலைகளை எழுதுக.
கணிப்பொறி வரைகலையின் முக்கிய வகைகளை விவரி.
CorelDRAW-ல் தேர்வு செய்யப்பட்ட பொருட்களை நகலெடுக்க பயன்படும் வழிகள் யாவை?
CorelDRAW ஆவணச் சாளரத்தின் பல்வேறு பகுதிகளை விவரி.
பல்லூடக செயல்கள் பற்றி விரிவாக விளக்கவும்.
பல்லூடக உருவாக்க குழுவின் பணிகள் மற்றும் பொறுப்புகள் விரிவாக எழுதவும்.
கணினியில் படங்களை உருவாக்கும் முறைகளை விவரி.
Tools பலகத்தில் காணப்படும் கருவிகள் சிலவற்றை விவரி.
ப்ளாஷில் உள்ள Polystar கருவியின் பயன் யாது?அதைப் பயன்படுத்த பின்பற்ற வேண்டிய படிகளை எழுதுக.
ப்ளாஷில் உள்ள Selection கருவியைப் பயன்படுத்தி பொருளைத் தேர்வு செய்யும் பல்வேறு முறைகளை விவரி.
ப்ளாஷில் ஒரு franle-by-frame அசைவுப்பட மாதிரியை உருவாக்கப் பின்பற்ற வேண்டிய படிகளை விவரி:
ஆட்டோகேட் இடைமுகத்தைப் பற்றி விவரி.
ரெக்டாங்கல் பொருளைப் பற்றி எழுதுக. ஆட்டோகேடில் செவ்வகம் வரைவதற்கான வழிமுறைகளைக் கூறு.
Auto CAD இடைமுகத்தில் உள்ள ரிப்பன் காட்சிமுறையை எவ்வாறு மாற்றுவாய்? விவரி.
AutoCAD வரைப்படத்தை அச்சிடுதலுக்கான படிநிலைகளை எழுதுக.
Answers
கருவியின் பெயர் |
கருவிப் பெட்டியிலுள்ள பணிக்குறி |
சுட்டுக்குறி | பயன் |
பாயின்டர் டூல் |
உரை மற்றும் வரைகலைப் படங்களைத் தேர்ந்தெடுக்க நகர்த்த, அளவை மாற்ற. |
||
டெக்ஸ்ட் டூல் |
உரையை உள்ளிட, தேர்ந்தெடுக்க பதிப்பிக்க. |
||
ரொடேடிங் டூல் |
பொருள்களை |
||
கிராப்பிங் டூல் | வரைகலைகளை ஒழுங்கமைக்க. | ||
லைன் டூல் |
நேர்கோடு வரைய. |
||
கன்ஸ் ரெய்ன்டு டூல் |
கிடைமட்டமாகவும் செங்குத்தாகவும் கோடுகள் வரைய |
||
ரெக்டாங் கல் டூல் |
சதுரம் மற்றும் செவ்வகம் வரைய |
||
ரெக்டாங் கல் ஃபிரேம் டூல் |
உரை மற்றும |
||
எலிப்ஸ் டூல் |
வட்டம் மற்றும் நீள்வட்டம் வரைய |
||
எலிப்ஸ் ஃபிரேம் டூல் |
உரை மற்றும் வரைகலைகளை வைப்பதற்கான நீள்வட்டங்களை வரைய |
||
பாலிகான் டூல் |
பல கோணங்கள் வரைய |
||
பாலிகான் ஃபிரேம் டூல் |
உரை மற்றும் வரைகலைகளை வைப்பதற்கான பல கோணங்களை வரைய |
||
ஹேண்ட் டூல் |
பக்கத்தை திரை உருளல் செய்ய |
||
ஜூம் டூல் | பக்கத்தின் அளவை பெரிதாக்கியும் சிறிதாக்கியும் பார்க்க |
1. பேஜ்மேக்கரில் உள்ள ஃபிரேம் டூல்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி சட்டம் ஒன்றை வரைய வேண்டும்.
2. சட்டத்திற்குள் செருக வேண்டிய உரைத் தொகுதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
3. Shift விசையை அழுத்திக் கொண்டு சட்டத்தைக் கிளிக் செய்ய வேண்டும். இப்பொழுது இரண்டு பொருள்களும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்.
4. பட்டிப்பட்டையில் Element > Frame>Attach Content என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
5. இப்பொழுது உரையானது சட்டத்திற்குள் தோன்றும்.
வழிமுறை 1:
1. உரையேற்றப்பட்ட பணிக்குறியை உரையை வைக்க வேண்டிய இடத்தில் கிளிக் செய்து தேவையான அளவிற்கு இழுத்துவிட வேண்டும்.
2. இப்பொழுது உரை நாம் வரையறுத்த உரைத்தொகுதிக்குள் வந்திருக்கும். இந்த உரைத் தொகுதிக்குள் உரை முழுவதும் வைக்க முடியவில்லை எனில் கீழ்ப்பக்க விண்டோஸேடில் சிவப்பு நிற முக்கோணம் தோன்றும். இதில் கிளிக் செய்தால் மறுபடியும் உரையேற்றப்பட்ட பணிக்குறி தோன்றும்.
3. இப்பொழுது புதிய உரைத் தொகுதியை உருவாக்கி அதில் கிளிக் செய்ய வேண்டும்.
4. இந்த செயல்முறையை சிவப்பு நிற முக்கோணம் மறையும் வரை (அ) செருக வேண்டிய உரை உள்ள வரை திரும்ப திரும்ப செய்ய வேண்டும்.
வழிமுறை 2 :
1. இதே போன்று ஒரு பக்கத்தில் உரையை செருக வேண்டுமெனில் பக்கத்தின் மேற்பகுதியில் உரையேற்றப்பட்ட பணிக்குறியை வைத்து கிளிக் செய்ய வேண்டும்.
2. உரையானது அப்பக்கம் முழுவதும் நிரம்பும்.
3. ஒரு பக்கத்தை விட அதிகமான உரை இருந்தால், கீழ்ப்பகுதியில் உள்ள விண்டோஸேடில் சிவப்பு நிற முக்கோணம் தோன்றும்.
4. இப்பொழுது பட்டிப் பட்டையில் Layout --> Insert Pages என்பதைக் கிளிக் செய்து புதிய பக்கத்தை உருவாக்கி, பக்கத்தின் மேல் பகுதியில் உரையேற்றப்பட்ட பணிக்குறியை கிளிக் செய்ய வேண்டும். இதை செருக வேண்டிய உரை உள்ள வரை திரும்பத் திரும்ப செய்ய வேண்டும்.
1. பட்டிப்பட்டையில் File > print என்பதைக் கிளிக் செய்யவும். (அ) Ctrl+P என்னும் விசைப்பலகை குறுக்கு வழியைப் பயன்படுத்தவும். Print Document உரையாடல் பெட்டி தோன்றும்.
2. அதில் கீழ்க்கண்ட மாற்றங்களை செய்யவும்
(i ) Printer கீழிறங்குப் பட்டிப்பெட்டியில் அச்சுப்பொறியைத் தேர்ந்தெடுக்கவும்.
(ii ) அச்சிட வேண்டிய பக்கங்களைக் குறிப்பிட Pages பகுதியில் கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
All : இந்த விருப்பம் ஆவணத்தில் உள்ள அனைத்துப் பக்கங்களையும் அச்சிடும்.
Ranges: இந்த விருப்பத்தில் பக்க எண்களைக் கொடுத்து ஒரு பக்கத்தையோ(அ ) தொடர்ச்சியான பல - பக்கங்களையோ அச்சிடலாம். 3.ஒன்றிற்கு மேற்பட்ட பக்க எண்கள் காற்புள்ளி மூலம் பிரிக்கப்பட வேண்டும்.
4. தொடர்ச்சியான பக்கங்களை அச்சிட hyphen(-) பயன்படுத்த வேண்டும். (எ.கா 10 - 17 என்று கொடுத்தால் பக்க எண் 10 லிருந்து 17 வரை உள்ள பக்கங்களை அச்சிடும்)
5. Print: Print கீழிறங்குப் பட்டிப்பெட்டியில் Odd pages என்பதைத் தேர்ந்தெடுத்து ஒற்றைப்படை பக்க எண் உடைய பக்கங்களை மட்டும் அச்சிட முடியும். அதே போன்று Even pages என்பதைத் தேர்ந்தெடுத்து இரட்டைப் படை பக்க எண் உடைய பக்கங்களை மட்டும் அச்சிட முடியும்.
6. Copies உரைப்பெட்டியில் தேவையான நகல்களின் எண்ணிக்கையை உள்ளிட வேண்டும்.
7. Collate என்னும் தேர்வுப் பெட்டியை தேர்வு செய்யலாம். (அ) தேர்வு செய்யாமலும் இருக்கலாம்.
எ.கா:
1. ஐந்து பக்கங்கள் கொண்ட ஒரு ஆவணத்தை நான்கு நகல்கள் அச்சிட வேண்டுமெனில்,
2. இப்பொழுது Collate என்னும் தேர்வுப் பெட்டி தேர்வு செய்யாமல் இருந்தால், முதல் பக்கம் நான்கு நகல்கள் அச்சிட்ட பிறகு, இரண்டாவது பக்கம் நான்கு நகல்கள் அச்சிடும். இதே போன்று ஐந்தாவது பக்கம் வரை அச்சிடும்.
3. ஆனால் Collate என்னும் தேர்வுப் பெட்டி தேர்வு செய்திருந்தால் முதலில் ஒன்றிலிருந்து ஐந்து பக்கங்கள் வரை தொடர்ச்சியாக அச்சிடும்.
4. அதன் பிறகு மறுபடியும் ஒன்றிலிருந்து ஐந்து பக்கங்கள் வரை தொடர்ச்சியாக அச்சிடும். அதன் பிறகு மறுபடியும் ஒன்றிலிருந்து ஐந்து பக்கங்கள் வரை தொடர்ச்சியாக அச்சிடும். இதே போன்று நான்கு நகல்களும் அச்சிடப்படும்.
8. இறுதியாக Print பொத்தானை அழுத்தவும்.
1.Start - > All programs - > Adobe InDesign CC 2019 என்பதை தேர்வு செய்யவும் . ( அ ) InDesign திரைமுகப்பில் உள்ள குறுக்கு வழியைத் தேர்வு செய்யவும் .
2."Welcome to InDesign " என்ற சன்னல் திரை திறக்கப்படும் .இப்பொழுது Create New பொத்தானைக் கிளிக் செய்யவும் .
3.இப்பொழுது New Document window புதிய ஆவண சன்னல் திறக்கப்படும் .
4.புதிய ஆவணத்தில் அடிப்படை தேர்வுகளை பொருத்துவதற்கு New Document உரையாடல் பெட்டியில்
Category தத்தலில் உள்ள Print , Web (அ) Mobile - ஐ thervu செய்யவும் .
5.Width and Height , orientation , Pages , Start , Columns போன்ற தேர்வுகளை ஏற்கனவே தேர்வுசெய்யப்பட்ட தொகுதியில் குறிப்பிடவும்.
6.முன்பே இருத்தப்பட்ட அமைப்புகளோடு ஆவணத்தை திறக்க Create பொத்தானைக் கிளிக் செய்யவும்.
1. கருவிப் பலகத்தில் பாதைக் கருவியில் உள்ள தட்டச்சை தேர்வு செய்யவும்.
2. தட்டச்சை சேர்க்க பாதையின் விளிம்பில் கிளிக் செய்யவும். (திறந்து அல்லது மூடி) உரைச் சட்டகத்தில் ஒரு ஒளிரும் செருகும் புள்ளி தோன்றும். பொருளில் எல்லை நீக்கப்படும்.
3. ஏதேனும் ஒரு உரையைத் தட்டச்சு செய்யவும். உரை தானாகவே மடிந்து உரைச் சட்டகத்திற்கு ஏற்றவாறு அமையும்.
4. பொருளின் விளிம்பில் தட்டச்சு தோன்றும். எல்லைகளை நீக்கிவிட்டு அதன் வடிவத்தில் உறுதியாக அமைகிறது.
5. Overflow குறியீடு தோன்றினால் உரைச் சட்டகத்தின் தேர்வை நீக்கி, தேர்வுக் கருவியை கருவிப் பலகத்தில் இருந்து தேர்வு செய்து உரைச் சட்டகத்தில் ஒரு மூலையில் இழுக்கவும்.
6. தேர்வுக்கருவியை தேர்வு செய்யவும் (அ) தட்டச்சு கருவியை மீண்டும் தேர்வு செய்யவும்.
1. கருவிப் பலகத்தில் உள்ள Type கருவியைத் தேர்வு செய்யவும்.
தனியாகப் பிரிக்கக் கூடிய பலகத்தை உருவாக்குவதற்கு கருவிப் பலகத்தின் வலது புறத்தில் உள்ள அம்புக்குறியைக் கிளிக் செய்யவும்.
2. பின்வரும் ஏதேனும் ஒரு Type கருவியைத் தேர்வு செய்யவும்.
Type - உரைச்சட்டகத்தை உருவாக்குகிறது.
Type - திறந்த (அ) மூடப்பட்ட பாதையின் வெளிப்புற விளிம்பில் உரையை உருவாக்குகிறது.
3.Type கருவியில் உரைச்சட்டகத்தை வரைய அதை இழுக்கவும். Type on path கருவியின் பாதையில் மேல் கிளிக் செய்யவும்.
4. சில உரைகளை தட்டச்சு செய்யவும்.
Indesign ல் பொருளை உருமாற்றுவதற்கு பல வழிகள் உள்ளன selection கருவியைப் பயன்படுத்தி பொருளைத் தேர்ந்தெடுக்கவும். பிறகு
1. பொருளை அளவிடுவதற்கு தேர்ந்தெடுப்பு கைப்பிடியை இழுத்துவிடவும்.
2. கருவிகள் பலகத்திலிருந்து உருமாற்றக் கருவியைத் தேர்ந்தெடுத்து, உருமாற்றத்தின் மையத்தை அமைத்து, கருவியை இழுக்கவும்.
3. உருமாற்ற பலகம் (அ) கட்டுப்பாட்டு பலகம் தோன்றும். மதிப்புகளை, உருமாற்றம் செய்ய விரும்பும் தொடர்புடைய பலகபுலத்தில் உள்ளிடவும். (அ) மேல் மீட்பு பட்டியோடு தொடர்புடைய புலத்திலிருந்து முன்னமைக்கப் பட்ட மதிப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
4. உருமாற்ற பலகப்பட்டி (அ) கட்டுப்பாட்டு பலகப்பட்டியில்ருந்து முன்னமைக்கப்பட்ட (presct) சுழற்றும் (அ) பிரதிபலிக்கும் தேர்வுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
5. கருவிப்பெட்டியிலுள்ள ஏதேனும் ஒரு உருமாற்றக் கருவியின் மீது இரட்டைக் கிளிக் செய்து, தொடர்புடைய உருமாற்ற உரையாடல் பெட்டியைத் தோன்றச் செய்யலாம்.
எ.கா : Rotate கருவியை இரட்டைக் கிளிக் செய்தால் Rotation உரையாடல் பெட்டி தோன்றும்.
6. Free Transform கருவியைத் தேர்ந்தெடுத்து, பொருளைச் சுற்றி கருவியை இழுத்து விடவும்.
7. விசைப்பலகைக் குறுக்கு வழியை அழுத்தவும்.
தேர்ந்தெடுத்தல் |
செய்ய வேண்டியவை |
ஒரு வார்த்தை | வார்த்தையின் மேல் இரட்டை கிளிக் செய்யவும். |
ஒரு வரி | வரியின் ஏதேனும் ஒரு வார்த்தையில் மூன்று கிளிக் செய்யவும் |
ஒரு பத்தி | பத்தியில் உள்ள ஏதேனும் ஒரு வார்த்தையின் மீதுநான்கு முறை கிளிக் செய்யவும். |
முழு கதை | கதையில் உள்ள ஏதேனும் ஒரு வார்த்தையின் மீது ஐந்து முறை கிளிக் செய்யவும். |
முழு கதை | Ctrl +A |
செருகும் புள்ளிக்கு வலது பக்கத்தில் உள்ள ஒரு எழுத்து |
Shift + → |
செருகும் புள்ளிக்கு இடது பக்கத்தில் உள்ள ஒரு எழுத்து |
Shift +⇠ |
செருகும் புள்ளிக்கு மேல் ஒரு வரி |
Shift + ↑ |
செருகும் புள்ளிக்கு கீழ் ஒரு வரி |
Shift + ↓ |
செருகும் புள்ளிக்கு வலது பக்கத்தில் ஒரு வார்த்தை |
Shift +Ctrl + → |
செருகும் புள்ளிக்கு இடது பக்கத்தில் ஒரு வார்த்தை |
Shift +Ctrl + <--- |
செருக்கும் புள்ளிக்கு மேலே ஒரு பத்தி |
Shift +Ctrl + ↑ |
செருக்கும் புள்ளிக்கு கீழே ஒரு பத்தி |
Shift +Ctrl + ↓ |
1. பலகோண உருவம் வரைய polygon கருவியைக் கருவிப்பட்டையிலிருந்து தேர்ந்தெடுக்கவும். சுட்டியின் வடிவம் Crosshair குறியுடன் கீழ்ப்பகுதியில் பலகோணம் கொண்ட குறியாக இருக்கும்.
2. இப்போது வரையும் பகுதியில் எங்கு ஐங்கோணம் வரைய வேண்டுமோ அங்கு சுட்டியின் இடது பொத்தனை அழுத்தி பிடித்தவாறு நகர்த்த வேண்டும்.
3. விரும்பும் வடிவமுடைய பலகோணம் உருவானவுடன் சுட்டியின் பொத்தானை அழுத்துவதை விட்டு விடவும்.
4. வரைந்த பலகோணத்தின் பக்கங்களை அதிகரிக்க வரைந்த பலகோணத்தை Pick கருவி மூலம் தேர்ந்தெடுக்கவும்.
5. சுட்டியை பண்பு பட்டையில் உள்ள Number of Point on Polygon உரைப்பெட்டியில் கிளிக் செய்து தேவையான பக்கங்களின் எண்ணிக்கையைக் கொடுக்கவும்.
1. பலகோண (Polygon) கருவியின் மீது அழுத்திக் கொண்டே இருந்தால் flyout பட்டி தோன்றி மேலும் பல கருவிகளைக் காட்டும்.
2. flyout பட்டியில் உள்ள Graph Paper கருவியைக் கிளிக் செய்யவும்.
3. பண்புபட்டையில் உள்ள மேல் மற்றும் கீழ்ப் பகுதியில் நெடுவரிசை மற்றும் வரிசைகளின் எண்ணிக்கையை உள்ளிடவும்.
4. வரையும் பகுதியில் எங்கு கட்டகம் தோன்ற வேண்டுமோ அங்கு கிளிக் செய்யவும்.
5. சுட்டியை கிடைமட்டமாக இழுப்பதன் மூலம் வேண்டிய கட்டகம் வரைய முடியும்.
6. மையப் புள்ளியிலிருந்து வெளிப்புறமாக கட்டங்கள் வரைய Shift விசையை அழுத்தியவாறு நகர்ந்த வேண்டும். கட்டங்களை சதுர வடிவில் அமைக்க Ctrl விசையை அழுத்தியவாறு நகர்ந்த வேண்டும்.
கணிப்பொறி வரைகலையில் இரண்டு முக்கிய வகைகள் 1. நெறிய வரைகலை 2.பிட்மேப்.
நெறிய வரைகலை :
1. கோடுகள் மற்றும் வளைவுகளால் உருவாக்கப்படுகின்றன.
2. கணித விளக்கங்கள் மூலம் உருவாக்கப் படுகின்றன.
3. லோகோக்கள் மற்றும் illustrations க்கு மிகவும் ஏற்றது.
4. அவை தெளிவுத்திறன் சார்பற்ற வரைகலை என்பதால் வேண்டிய அளவில் மாற்றலாம். அச்சிடலாம் மற்றும் எந்த தெளித்திறனிலும் விவரம் மற்றும் தரத்தை இழக்காமல் திரையிடலாம்.
பிட்மேப் :
1. பிட்மேப்கள் ராஸ்டெர் படங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. அவை பிக்சல்கள் என்று அழைக்கப்படும் சிறிய சதுரங்களால் ஆனவை.
2. ஒவ்வொரு பிக்சலும் படத்தின் ஒவ்வொரு இடத்துடன் இணைக்கப்பட்டு வண்ணங்களின் எண்மதிப்புகளைக் கொண்டிருக்கும்.
3. பிட்மேப்கள் ஒரு படத்தில் வண்ண மண்டலங்களை நன்றாக மீளுருவாக்கம் செய்கின்றன.
4. எனவே அவை புகைப்படங்கள் மற்றும் எண்ம ஓவியங்களுக்கு மிகவும் பொருத்தம் ஆனவை.
5. பிட்மேப்கள் தெளிதிறன் சார்ந்த படங்கள் ஆகும்.
6. அதாவது அவை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பிக்சல்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.
7. அவை அவற்றின் குறிப்பிட்ட அளவுகளில் சரியாக இருக்கும். ஆனால் அளவு மாற்றப் படும் போதோ (அ) மிகுந்த தெளித்திறனுடன் அச்சிடும் போது அவை தெளிவில்லாமல் படத்தின் தரத்தை இழக்கின்றன.
நகலெடுத்தல் :
1. வலது கிளிக் பயன்படுத்தி நகலெடுத்தல் :
1. Pick கருவி கொண்டு ஒரு பொருளின் வடிவத்தை மாற்றும் பொழுது, சுழற்றும் போது (அ) நகர்த்தும் பொழுது சுட்டியின் வலது பொத்தானைக் கிளிக் செய்யவும்.
2. இப்பொழுது ஒரு நகலானது உருவாக்கப்படும். 3.தற்பொழுது இழுக்கப்படும் பொருளானது ஒரு நகலாக மாறும்.
4.மேலும் அசல் பொருளானது எந்த மாற்றமுமின்றி அப்படியே இருக்கும்.
5. அம்புகுறியின் அருகிலுள்ள சிறிய + குறியீடு ஒரு நகலானது உருவாக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிக்கிறது.
2. இடைவெளிபட்டை (Spacebar) பயன்படுத்தி நகலெடுத்தல் :
1. Pick கருவி கொண்டு ஒரு பொருளின் வடிவத்தை மாற்றும் பொழுது, சுழற்றும் போது அல்லது நகர்த்தும் பொழுது இடைவெளிப்பட்டையினை அழுத்தவும்.
2. இப்பொழுது ஒரு நகல் உருவாகும்.
3. ஒவ்வொரு முறையும் இடைவெளி பட்டையை அழுத்தும் பொழுது ஒரு நகலானது தோன்றும்.
4. இடைவெளி பட்டையை அழுத்தி பிடித்துகொண்டே இருக்கும் பொழுது பொருளினுடைய பல நகல்கள் விரைவாக உருவாகிக் கொண்டே இருக்கும்.
3. எண்வகை + சாவியினை அழுத்துவதன் மூலம் நகலெடுத்தல் :
1. எண் வகை விசைப்பலகையிலுள்ள சாவியினை அழுத்துவதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளுடைய நகலானது பொருளின் மீது அடுக்கி வைக்கப்படும் அதாவது அசல் பொருளின் மீது உருவாகும்.
2. + சாவியை அழுத்திய பிறகு, உருவாகும் நகலானது தேர்வு செய்யப்பட்ட பொருளாகிவிடும்.
3. இதே முறையை பயன்படுத்தி எத்தனை நகல்களை வேண்டுமானாலும் உருவாக்கலாம்.
பகுதி | விளக்கம் |
1. தலைப்பு பட்டை (Title bar) |
தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட வரைபடத்தின் தலைப்பை அறிவிக்கும் பகுதி. |
2. பட்டிப் பட்டை (Menu bar) |
கீழ் விரி பட்டி விருப்பத் தேர்வுகள் உள்ள பகுதி . |
3. செந்தர கருவிப் பட்டை (Standard Toolbar) |
பட்டி விருப்பத் தேர்வுகள் மற்றும் பிற கட்டளைகளுக்கு குறுக்கு வழிகளைக் கொண்ட நகரக் கூடிய பட்டை. |
4.கருவிப்பெட்டி (Tool box) |
பொருள்களை உருவாக்க, நிரப்ப மற்றும் மாற்றியமைக்க கருவிகள் கொண்ட ஒரு இணைக்கப்பட்ட பட்டை. |
5. பண்புப் பட்டை (Property bar) |
இயக்கத்தில் உள்ள கருவி (அ) பொருள் தொடர்பான கட்டளைகளுடன் ஒரு நீக்க கூடிய பட்டை. |
6. ஆவண கீற்று |
ஒவ்வொரு திறந்த ஆவணத்திற்கும் ஒரு கீற்று இருக்கும். விரைவாக ஆவணங்களுக்கு இடையில் மாற அனுமதிக்கிறது. |
7. வரைதல் சாளரம் (Drawing window) |
வரைதல் பக்கத்திற்கு வெளியே உள்ள பகுதி. |
8. வரைதல் பக்கம் (Drawing page) |
வரைதல் சாளரத்தின் உள்ளே உள்ள செவ்வக பகுதி. |
9. ரூலர் (Rulers) |
சாளரத்தில் இரண்டு ரூலர் இருக்கும். அவை கிடைமட்ட ரூலர் மற்றும் செங்குத்து. ரூலர்கள் ஒரு ஆவணத்தில் பொருட்களின்அளவு மற்றும் நிலையை தீர்மானிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. |
10. டாக்கர் (Docker) |
ஒரு முதன்மை சாளரத்தின் வலது முனையுடன் ஒட்டி இருப்பதால் ( இது டாக்கர் சாளரம் என்று அழைக்கப்படுகிறது. |
11. ஆவண உலவி (Document navigator) |
பயன்பாட்டு சாளரத்தின் கீழ் இடதுபுறம் உள்ள பகுதியாகும். இது பக்கங்களைச் சேர்ப்பதற்கும் பக்கங்களுக்கிடையே மாறுவதற்கும் கட்டுப்பாடுகளைக் கொண்டிருக்கும். |
12. உதவி (Navigator) |
சாளரத்தின் கீழ் வலது மூலையில் உள்ள ஒரு பொத்தான் ஆகும். இது ஒரு வரைப்படத்தின் பகுதிகளுக்கிடையே நகர்த்த உதவுவதற்கு சிறிய காட்சித் திரையைத் திறக்கும். |
13. வண்ணத் தட்டு (Color palette) |
வண்ண பெட்டிகளைக் கொண்ட நகர்த்தக் கூடிய பட்டி. |
14. நிலைமைப் பட்டை (Status bar) |
ஆவண சாரளத்தின் கீழே உள்ள பகுதி ஆகும். இது தேர்ந்தெடுத்த பொருளின் பண்புகளான வகை, அளவு, நிறம், நிரப்பு வகை மற்றும் எல்லை போன்ற தகவலைக் காட்டுகிறது. |
பல்லூடகத்தை உருவாக்குவதற்கு போதுமான நேரம் மற்றும் திறமையான திட்டமிடல் ஆகியவை தேவைப்படுகின்றன. இது திட்டப்பணி சுமூகமாக தொடரவும் மற்றும் தகவல் இலக்கு பார்வையாளர்களைச் சென்றடையவும் உறுதி செய்கிறது. சிக்கலான பல்லூடகத் திட்டங்களை உருவாக்குவதற்கான படிநிலைகள் 1. கருத்துரு பகுப்பாய்வு மற்றும் திட்டமிடல் :
கருத்துரு பகுப்பாய்வு பொருத்தமான கருப்பொருள், வரவு-செலவு திட்டம் மற்றும் தேர்வு செய்த கருப்பொருளின் பொருளடக்கத்தின் இருப்பு ஆகியவற்றை அடையாளம் காண்கின்றது. கூடுதலாக. பதிப்புரிமை பிரச்சனைகளையும் இந்த படிநிலையில் கருத்தில் கொள்ளப்படுகிறது.
2. திட்ட வடிவமைப்பு : ஒருமுறை கருப்பொருளை இறுதி செய்த பிறகு, பல்லூடகத்தின் திட்டத்திற்கான நோக்கங்கள், குறிக்கோள்கள் மற்றும் செயல்பாடுகள் ஆகியவை வடிவமைக்கப்படுகின்றன. நோக்கத்தை செயல்படுத்துவதற்குத் தொடர்ச்சியான செயல்களை நிகழ்த்துவதைச் செயல்பாடுகள் என்கிறோம். இந்த செயல்பாடுகள், திட்ட வடிவமைப்பு படிநிலைக்கு பங்களிப்பை வழங்குகிறது.
3. முன் - உருவாக்குதல் : திட்டமிடல் மற்றும் வடிவமைத்தலின் அடிப்படையில் திட்டத்தை உருவாக்குவது தேவையானது ஆகும்.
முன்உருவாக்குதலின் படிநிலைகள் பின்வருமாறு :
1. வரவு - செலவு திட்டமிடல் : ஆலோசகர்கள், வன்பொருள், மென்பொருள், பயணம், தகவல் தொடர்பு மற்றும் பிரசுரித்தல் போன்ற ஒவ்வொரு நிலையிலும் அனைத்து பல்லூடக திட்டங்களுக்கும் வரவு செலவு திட்டம் தோராயமாகக் கணக்கிடப்படுகிறது.
2. பல்லூடகத்தை உருவாக்கும் குழு : உயர்ந்த பல்லூடகத் திட்டத்தை உருவாக்கும் குழுவிற்கு அந்த குழுவின் ஒட்டு மொத்த முயற்சி தேவை. குழுவானது ஸ்கிரிப்ட் எழுத்தாளர். தயாரிப்பு மேலாளர், பதிப்பாசிரியர், வரைகலை வடிவமைப்பாளர். பல்லூடக வடிவமைப்பாளர் மற்றும் வரை வல்லுநர் போன்ற பல்வேறு பதவிகளையும் மற்றும் பொறுப்புகளையும் செய்யும் உறுப்பினர்களைக் கொண்டது.
3. வன்பொருள் / மென்பொருள் தேர்ந்தெடுத்தல் :
பயன்பாட்டினை உருவாக்குவதற்கும், அதனை மீண்டும் செயல்படுத்துவதற்கும் பொருத்தமான கருவிகள் அனைத்து பல்லூடக பயன்பாடுகளுக்கும் தேவை. வன்பொருளானது தேர்ந்தெடுத்த வேகமான மையச் செயலகம், மற்றும் பெரிய திரையகம், பதிவுகளைச் சேமிக்கத் தேவையான வட்டுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. பொருத்தமான் மென்பொருள் மற்றும் கோப்பு வடிவங்களைத் தேர்ந்தெடுத்தல் என்பது உருவாக்கப்படும் திட்டப் பணிக்கு கிடைக்கும் நிதியைப் பொறுத்தாகும்.
4. பொருளடக்கத்தை வரையறுத்தல் :
பொருளடக்கம் என்பது பொருளடக்க வல்லு ந ரால் பல் லூ ட க வடிவமைப்பாளருக்கு வழங்கப்படும் தகவல்கள் ஆகும். இந்த தகவல்களைக் கொண்டு உருவாக்கிய பயன்பாட்டில் பல்லூடக வடிவமைப்பாளர் விவரித்தல், புல்லட்கள், வரைபடங்கள் மற்றும் அட்டவணைகள் போன்றவற்றைத் தயார் செய்கிறார்.
5. கட்டமைப்பை தயார் செய்தல் : விரிவான கட்டமைப்பில் அனைத்து படிநிலைகளும் அடுத்தடுத்து வரும் செயல்பாட்டிற்கான நேர அளவு பற்றிய தகவல்களைக் கண்டிப்பாக கொண்டிருக்க வேண்டும், இந்த கட்டமைப்புச் செயல்பாடுகள், ஒவ்வொரு செயல்பாட்டிற்குமான பொறுப்பாளர் மற்றும் ஒவ்வொரு செயல்பாட்டிற்குமானத் தொடக்க / முடிவு நேரம் ஆகியவற்றை வரையறுக்கிறது. பல்லூடகப் பயன்பாட்டில் முன் உருவாக்குதல் செயல்பாட்டிற்குப் பிறகு, இந்தபடி நிலை தொடங்குகிறது.
6. உருவாக்குதல் : இது பின்னணி இசையைத் தேர்ந்தெடுத்தல், ஒலிப்பதிவு போன்ற செயல்பாடுகளை உள்ளடக்கியது. OCR மென்பொருளைக் கொண்டு உரையானது இணைக்கப்படுகிறது. படங்கள் இலக்கக் கேமராவைக் கொண்டு படம் பிடிக்கப்படுகிறது. ஒளிக்காட்சியினை பதிவு செய்து. தொகுத்து மற்றும் குறுக்கப்படுகிறது. இப்பொழுது, மாதிரி திட்டம் தயார் நிலையில் உள்ளது.
7.சோதித்தல் : திட்டத்தை பிரமாண்டமாக உருவாக்குவதற்கு முன், மாதிரி திட்டத்தை முழுவதுமாக சோதித்தல் வேண்டும். இவை அனைத்தும் சரியான இடத்தில் உள்ளதா என்பதை உறுதி செய்வதன் மூலம் வெளியீட்டிற்கு பிறகு நேரக்கூடிய தோல்வியைத் தவிர்க்க முடியும். Internet Explorer சோதனை செயல்பாடுகள் முடிந்த திட்டமான சரியாக பரிந்துரைக்கப்பட்டுள்ள மாற்றங்களோடு இணைக்கப்படுகிறது.
1. தயாரிப்பு மேலாளர்: பல்லூடக உருவாக்குதலில் குறித்த நேரத்தில் முழு தரத்துடன் பல்லூடகத் திட்ட உருவாக்கத்தை வரையறுப்பது மற்றும் ஒருங்கிணைப்பது.
2. பொருளடக்க வல்லுநர் : ஏற்கனவே திட்டமிட்ட பயன்பாட்டின் பொருளடக்கத்தைப் பற்றி அனைத்து ஆராய்ச்சி செயல்பாடுகளையும் செய்வதற்கு பொறுப்பானவர்.
3. ஸ்கிரிப்ட் எழுத்தாளர் : கருத்துருக்களை முப்பரிமாண சூழல்களில் காட்சிப்படுத்துகிறார், தேவை ஏற்படின் நிரல் மீது மெய்நிகர் உண்மை ஒருங்கிணைப்பைப் பயன்படுத்தலாம்.
4. உணரப் பதிப்பாளர் : உரை எப்பொழுதும் கட்டமைப்பாகவும் சரியான இலக்கணத்தோடும் இருக்க வேண்டும் என்பதற்கு பொறுப்பானவர்.
5. பல்லூடக வடிவமைப்பாளர் : பல்லூடகத்தின் அனைத்து அடிப்படைத் தொகுதிகளைப் படைப்பாக்க மென்பொருளைப் பயன்படுத்தி அசைவூட்டல் போன்றவற்றை ஒருங்கிணைப்பவர்.
6. கணினி வரைகலை கலைஞர் : நிரலின் வரைகலைக் கூறுகளான பின்னணி, புல்லட்கள், பொத்தான்கள், பாடப்பதிப்பாய்வு, 3D பொருள்கள், அசைவூட்டல் மற்றும் சின்னங்கள் ஆகியவற்றைக் கையாளும் பங்கினை வகிப்பவர்.
7. ஒலி மற்றும் ஒளிக்காட்சி வல்லுநர்: பதிவு செய்தல். ஒலி விளைவுகளைப் பதிப்பாய்வு செய்தல் மற்றும் இலக்கமாக்கல் ஆகியவற்றுக்கு பொறுப்பானவர்.
8. கணினி நிரலர் : பொருத்தமான மொழியில் குறிமுறை (அ) ஸ்கிரிப்ட் வரிகளை எழுதுபவர்.
9. வலை வல்லுநர் : ஒரு இணைய வலைப் பக்கத்தை உருவாக்க, அதை பராமரிப்பது மற்றும் இணைய சேவைகள் பரவலான சமூக அணுகுதலை வழங்குதல்.
கணினியில் படங்களை இரு வகையில் உருவாக்கலாம். 1. பிட் மேப் (அ) செவ்வக படம்
2. வெக்டர் படங்கள்
1. பிட்மேப் (அ) செவ்வக படங்கள் :
1. கணினியில் படங்களைச் சேமிக்கும் பொதுவான மற்றும் பரந்த வடிவம் பிட்மேப் (அ) செவ்வக படமாகும்.
2. பிட்மேப் என்பது படப்புள்ளி என்றழைக்கப்படும் சிறிய புள்ளிகளின் எளிய அணியாகும்.
3.ஒவ்வொரு படப்புள்ளியும் இரண்டு (அ) அதற்கு மேற்பட்ட நிறங்களைக் கொண்டுள்ளது.
4.பிட்டுகளில் எவ்வளவு தரவு என்பதன் அடிப்படையைப் பயன்படுத்தி நிறங்களின் எண்ணிக்கையைத் தீர்மானித்து, நிறத்தின் ஆழத்தைத் தீர்மானிக்கலாம். எ.கா : ஒரு பிட்டுக்கு இரண்டு நிறங்கள், நான்கு பிட்டுகள் என்றால் பதினாறு நிறங்கள். எட்டு பிட்டுகள் என்றால் 256 நிறங்கள் மற்றும் பல.
2. வெக்டர் படங்கள்:
1. வரையும் கூறுகளான அல்லது பொருள்களான வரிகள், செவ்வகங்கள், வட்டங்கள் மற்றும் பல படங்களை உருவாக்குவது வெக்டர் படங்களின் அடிப்படையில் அமையும்.
2. படத்தைக் குறிக்க ஒப்பீட்டளவில் சிறிதளவு தரவு தேவைப்படும்.
3. அதன்மூலம் படத்தைச் சேமிக்க குறைந்த அளவு நினைவகம் தேவைப்படும். இதுவே அதன் நன்மையாகும்.
4.குறுக்க நுட்பம் படங்களின் கோப்பு அளவை குறைக்கப் பயன்படுகிறது.
5. அதாவது அதிக எண்ணிக்கையில் படங்களைச் சேமிக்கவும் வலைப்பின்னலில் உள்ள பயன்பாடுகளுக்கிடையே பரிமாற்றத்தை வேகப்படுத்தவும் பயன்படுகிறது.
எ.கா : GIF, TIFF மற்றும் JPEG.
1. Selection கருவி (V): ஒரு பொருள் (அ) ஒரு பொருளின் பகுதியாகிய வெளிக்கோடு மற்றும் உட்பரப்பு ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கப் பயன்படுகிறது.
2. Sub Selection கருவி ( A) : ஒரு பொருளை தேர்ந்தெடுக்க. இழுக்க, மீள் வடிவமைக்க பயன்படுகிறது.
3. Free Transform sal (F): பொருள்களை சுழற்ற, அளவிட, வளைக்க மற்றும் உருக்குலைக்கப் பயன்படுகிறது.
4. 3D Rotation கருவி (W) : மேடையில் முப்பரிமாண வெளியில் சலனப் படத்துண்டுகளை சுழற்றுவதன் மூலம் முப்பரிமாண விளைவுகளை உருவாக்க பயன்படுகிறது.
5. Lasso கருவி (L) : ஒரு பொருளைச் சுற்றி வரைவதன் மூலம், இது பொருள்களை தேர்ந்தெடுப்பதற்கு (அ) ஒரு பொருளின் பகுதியைத் தேர்ந்தெடுப்பதற்குப் பயன்படுகிறது.
6. Pen கருவி (P) : நங்கூரப் புள்ளிகள் எனப்படும். தொடர் புள்ளிகளை உருவாக்குவதன் மூலம் கோடுகள் மற்றும் வளைகோடுகளை வரைவதற்கு பயன்படுகிறது.
7. Text கருவி (T) : உரையை உருவாக்க மற்றும் பதிப்பிக்கப் பயன்படுகிறது.
8. Line கருவி (N) : நேர்கோடுகளை ரைவதற்குப் பயன்படுகிறது. செங்குத்து, கிடைமட்ட மற்றும் 45° மூலைவிட்ட கோடுகளை வரைவதற்கு Shift விசையை அழுத்திப் பிடிக்க வேண்டும்.
9. Rectangle கருவி (R) : செவ்வகம் வரையப் பயன்படுகிறது. Shift விசையை அழுத்திப் பிடிப்பதன் மூலம் சதுரம் வரையலாம்.
10. Oval கருவி (O) : நீள்வட்ட வடிவங்களை வரைவதற்குப் பயன்படுகிறது. Shift விசையைப் பயன்படுத்தி வட்டம் வரையலாம்.
Polystar கருவி: பலகோணம் மற்றும் நட்சத்திரம் வரையப் பயன்படுகிறது. இதைப் பயன்படுத்துவதற்கான படிகள் :
1. Rectangle Tool பொத்தானிலுள்ள கீழிறங்கு அம்புக் குறியைக் கிளிக் செய்யவும். தோன்றும் துணைப் பட்டியில் Polystar Tool என்பதைத் தேர்வு செய்யவும்.
2. Property Inspector பலகத்திலிருந்து இந்த வடிவத்திற்கு தேவையான அமைப்புகளைத் (Setting) தேர்ந்தெடுக்கவும்.
3. Property Inspector பலகத்திலுள்ள Option பொத்தானைக் கிளிக் செய்யவும்.
அ) Style கீழிறங்கு பட்டிப் பெட்டியிலிருந் Polygon (அ) star என்பதைக் கிளிக் செய்யவும்.
ஆ)பலகோணத்தின் பக்கங்களின் எண்ணிக்கை (அ) நட்சத்திரப் புள்ளிகளின் எண்ணிக்கையைக் குறிக்க 3. முதல் 32 வரையிலான எண்ணை உள்ளிடவும்.
இ) Style பட்டிப் பெட்டியிலிருந்து star தேர்ந்தெடுக்கப்பட்டால், பிறகு star point size உரைப்பட்டியில் 0 மற்றும் 1 ஆகியவற்றுக்கு இடையிலான மதிப்பை உள்ளிட வேண்டும்.
0 என்ற மதிப்பு நட்சத்திரம் அதிகபட்ச ஆழத்துடன் உருவாக்கப்பட வேண்டும் என்பதைக் குறிக்கிறது. 1 என்ற பட்ச மதிப்பு நட்சத்திரம் குறைந்த ஆழத்துடன் உருவாக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. OK பொத்தானைக் கிளிக் செய்யவும்.
4. பணித்தளத்தில் கிளிக் செய்து இழுப்பதன் மூலம் தேவையான வடிவத்தை வரையலாம்.
Selection Tool ஐப் பயன்படுத்தித் தேர்ந்தெடுத்தல்:
1.ஒரு பொருளைத் தேர்ந்தெடுப்பதற்கு Selection toolன் மீது கிளிக் செய்ய வேண்டும். பிறகு அந்த பொருளின் மீது கிளிக் செய்ய வேண்டும்.
2.அந்த பொருள் ஓரக்கோடு (outline) எதையும் பெற்றிருக்கவில்லை எனில், Selection tool பயன்படுத்தி கிளிக் செய்து. தேர்ந்தெடுக்கவும்.
3.அந்த பொருள் வெளிக்கோடு மற்றும் உட்பரப்பைப் பெற்றிருந்தால், உட்பரப்பை (fill) மட்டும் தேர்ந்தெடுக்க அதன் மீது கிளிக் செய்யவும். இப்பொழுது வெளிக்கோடு தேர்ந்தெடுக்கப்படாமல் விடப்பட்டிருக்கும்.
4.இரண்டையும் தேர்ந்தெடுக்க, அதன் மீது இரட்டை கிளிக் செய்ய வேண்டும்.
5.முழுப் பொருளையும் தேர்ந்தெடுக்க Selection toolஜப் பயன்படுத்தி Selection Boxse உருவாக்க வேண்டும். ஒரு முனையில் கிளிக் செய்து அதன் எதிர்முனையை நோக்கி இழுக்க வேண்டும். தேர்ந்தெடுக்க வேண்டிய பொருள் அல்லது பொருட்கள் முழுவதும் Selection Box. க்குள் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
6.வெளிக்கோட்டை மட்டும் தேர்ந்தெடுக்க, Selection கருவி மூலம் வெளிக்கோட்டை கிளிக் செய்யவும். வெளிக்கோடு பல பொருள்களாக இருந்தால், முழு வெளிக்கோட்டையும் தேர்ந்தெடுக்க அதை இரட்டை கிளிக் செய்யவும்.
7. பல இணைக்கப்படாத பொருள்களைத் தேர்ந்தெடுக்க, பொருளைத் தேர்ந்தெடுத்து, பின்னர் Shift விசையை அழுத்திக்கொண்டு கூடுதல் பொருள்களையும் தேர்ந்தெடுக்கவும். இவ்வாறு நீங்கள் Shift விசையை கொண்டு தேர்ந்தெடுக்கும் போது ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட பொருள்களுடன் தற்போது தேர்வு செய்த பொருட்களையும் சேர்க்கலாம்.
1. உரை கருவியைத் தேர்ந்தெடுத்து உரையைத் தட்டச்சு செய்யவும். எடுத்துக்காட்டாக "Save Trees-Save Earth'.
2, உரையைத் தேர்ந்தெடுத்து Modify>Convert to Symbol (அ) F8 செயல்பாட்டு விசையை அழுத்தி சின்னமாக மாற்றவும். Convert to Symbol உரையாடல் பெட்டி தோன்றும். சின்னத்தின் பெயரை தட்டச்சு (எடுத்துக்காட்டாக Save Trees) செய்து OK பொத்தானை அழுத்தவும். உரை சின்னமாக சேமிக்கப்படும்.
3. நூலகப் பலகத்தில் புதிய சின்னம் தோன்றும். நூலகம் திறக்கப்படவில்லை என்றால் Window>Library யைத் தேர்ந்தெடுக்கவும். 4. காலக்கோட்டில் Layer 1 ன் Frame15 ஐ கிளிச் செய்யவும்.
5. Insert>Timeline>Frame என்பதைத் தேர்வு செய்யவும்.
6. Frame 15 தெரிவு செய்யப்பட்டிருக்கும் போது Insert > Timeline > Keyframe என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இந்த புதிய Keyframes வண்ண கீற்றில் (Color tab) உள்ள drop- down பட்டியலைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் உரையின் நிறத்தை மாற்றவும்.
7. இதேபோல், நான்கு அல்லது ஐந்து Keyframesகளை சேர்த்து ஒவ்வொரு Keyframe-60 உரை வண்ணத்தையும் மாற்றவும்.
8. சலனப்படம் அல்லது அசைவுப்படத்தை இயக்க Frameஇல் Playheada வைத்து, Flash Play இல் Control >Test Movie >in Flash Professional யை தேர்வு செய்யவும்.
9. Test Movie சாளரத்தை மூடவும்.
ஆட்டோகேட் 2016 இன் இடைமுகமானது ரிப்பன்களையும், பயன்பாட்டுப் பட்டிகளையும் அடிப்படையாகக் கொண்டது.
இந்த இடைமுகத்தின் முக்கியமான அம்சம் வரைகலைப் பகுதியின் அளவு பெரியதாக இருக்கும்.
1. பயன்பாட்டுப் பட்டி :
(i) சிவப்பு நிறத்தில் உள்ள பயன்பாட்டுப் பொத்தானைக் (A) கிளிக் செய்தால், பயன்பாட்டுப் பட்டி தோன்றும்.
(ii) இந்த பட்டியில் உள்ள கோப்புத் தொடர்புடையக் கட்டளைகள் :
* புதிய கோப்பை உருவாக்குதல்,
* ஏற்கனவே உள்ள கோப்பை திறத்தல்,
* நடப்பு கோப்பை சேமித்தல்,
* நடப்புக் கோப்பை வேறொரு பெயரில்,
* வேறு கோப்புறையில் சேமித்தல்,
* வேறு கோப்பு வடிவத்தில் சேமித்தல்,
* நடப்புக் கோப்பை அச்சிடுதல்.
(iii) பயன்பாட்டுப் பட்டியின் மேல் பகுதியில் தேடல் பட்டை இடம்பெற்றிருக்கும்.
(iv) இந்தப் பட்டை கட்டளைகளைத் தேடுவதற்குப் பயன்படுகிறது. இதில் ஏதேனும் ஒரு முக்கியச் சொல்லை தட்டச்சு செய்தால், தொடர்புடைய கட்டளைகளின் பட்டியலைக் காட்டும்.
(v) பயன்பாட்டுப் பட்டியில் சமீபத்தில் நாம் பயன்படுத்திய கோப்புகள் இருக்கும்.
2. ரிப்பன் :
ஆட்டோகேட் 2016 சன்னல் திரையின் மேல் பகுதியிலுள்ள தலைப்புப் பட்டைக்கு கீழே உள்ள பகுதி ரிப்பன் ஆகும். இந்த ரிப்பன் இரண்டு பகுதிகளை உடையது.
1. ரிப்பன் தொகுதி
2. ரிப்பன் பேனல்
(i) ரிப்பனின் Home தொகுதியில் Draw. Modify, Annotation, Layers போன்ற பேனல்கள் இருக்கும்.
(ii) Draw, Modify போன்ற சில பேனல்கள் திரையில் காண்பிப்பதை விட அதிக பொத்தான்களைக் கொண்டிருக்கும்.
(iii) மேலும் பல கருவிகளைக் காண்பிக்கும் வகையில் இந்தப் பேனல்களை விரிவாக்க முடியும்.
(iv) பேனல் தலைப்பின் வலது புறத்தில் உள்ள அம்புக்குறிகை க்ளிக் செய்து பேனலை விரிவாக்க முடியும்.
(v) இது கூடுதல் கருவிகளையும் கட்டுப்பாடுகளையும் கொண்டிருக்கும்.
(vi) ஒரு செயல் செயல்பாட்டில் இருக்கும் பொழுது ESC விசையை அழுத்தினால், அது அக்கட்டளையை முடிவுக்குக் கொண்டு வரும்.
(vii) ஆட்டோகேடில் முன்னதாகப் பயன்படுத்திய கட்டளையைத் திரும்பவும் பயன்படுத்த வேண்டுமெனில், Command: Prompt இல் நுழைவு விசை (அ) இடைவெளி விசையை அழுத்த வேண்டும்
வடிவமைப்பாளர் பயன்படுத்தும் அடிப்படை வடிவங்களில் ஒன்று செவ்வகம் ஆகும்.
ஆட்டோகேட் 2016 இல் உள்ள RECTANG கட்டளை, சரியான கோன அளவுகளுடன் ஒரு செவ்வகத்தை ஒரேப் பொருளாக வரைய வழி வகுக்கிறது.
1. Command - RECTANG (அல்லது) REC (நுழைவு விசையை அழுத்தவும்).
2. கட்டளை வரியில் செய்தி தோன்றும்.
RECTANGLE
Specify first corner point or [Chamfer/Elevation/Fillet/Thickness/Width]:
செவ்வகத்தின் முதல் முனை (P1) வரைய வேண்டிய இடத்திற்கு சுட்டுக்குறியை நகர்த்தி சுட்டியின் இடது பொத்தானைக் கிளிக் செய்யவும்.
3. கட்டளை வரியில் செய்தி தோன்றும், Specify other corner point or [Area / Dimensions / Rotatio]: செவ்வகத்தின் முதல்முனையிலிருந்து சுட்டியை மூலைவிட்டம் வழியாக நகர்த்தி, மறுமுனையில் ( (P2) சுட்டியின் பொத்தானைக் கிளிக் செய்யவும்.
இப்பொழுது செவ்வகம் வரையப்பட்டிருக்கும்.
எ.கா:
மூலைவிட்ட புள்ளிகள் (20,30) மற்றும் (150. 160) கொண்ட ஒரு செவ்வகம் வரைதல் Command: RECTANGLE↲
Specify first corner point or [chamfer/Elevation! Fillet Thickness/Width] :20,30↲ .
Specify other corner point of [Area/Dimcnsions/ Rotation]: 150,160↲
ரிப்பனின் மேல்பகுதியில் உள்ள சிறிதாக்குப் பொத்தானை கிளிக் செய்வதன் மூலம் அதன் காட்சிமுறையை மாற்ற முடியும்.
1. முதல் முறையாக சிறிதாக்குப் பொத்தானைக் கிளிக் செய்யும் போது ரிப்பன் தொகுதிகள் மற்றும் பேனல் பொத்தான்களுடன் காட்சியளிக்கும். இப்பொழுது பேனல் பொத்தானின் மீது சுட்டியை நகர்த்தினால், அந்த பேனலில் உள்ள அனைத்துக் கருவிகளும் தெரியும்.
2. இரண்டாவது முறையாக சிறிதாக்குப் பொத்தானை கிளிக் செய்யும் போது, பேனல் பொத்தான்கள் பேனல் தலைப்புளாக மாறும். இப்பொழுது சுட்டியை பேனல் தலைப்புகளின் மீது நகர்த்தினால் அதற்குரிய கருவிகளைக் காட்டும்.
3. மூன்றாவது முறையாக ரிப்பனின் மேல்பகுதியில் உள்ள சிறிதாக்குப் பொத்தனைப் கிளிக் செய்யும் போது, பேனல் தலைப்புகள் பேனல் தொகுதிகளாக மாறும். ரிப்பனில் உள்ள தொகுதியைக் கிளிக் செய்தால் தற்காலிகமாக முழு பேனலையும் காண்பிக்கும். சுட்டியை பேனலை விட்டு வெளியே நகர்த்தியவுடன் அது மறைந்து விடும்.
4. சிறிதாக்கு ரிப்பன் பொத்தானின் பட்டியில் உள்ள Cycle through All என்ற விருப்பம் தேர்வு செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்து கொண்டு, சிறிதாக்கு பொத்தானை நான்காவது முறை கிளிக் செய்ய வேண்டும். இப்பொழுது ரிப்பன் இடைமுகம் முழுவதுமாக திரும்பப் பெறப்படும்.
வரைபடத்தை அச்சிட் PLOT கட்டளை பயன்படுகிறது.
1. சிவப்பு நிற A பணிக்குறியைக் கிளிக் செய்து, Print என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
2. தோன்றும் துணைப்பட்டியில் Plot என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
3. ஆட்டோகேட் பல விருப்பங்களுடன் கூடிய Plot உரையாடல் பெட்டியைக் காட்டும்.
4. Printer/plotter பகுதியில் Name கீழிறங்குப்பட்டியில் அச்சுப்பொறியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
5. Plot Area பகுதியில் What to plot கீழிறங்குப்பெட்டியில் Extents என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த விருப்பம் முழு வரைபடமும் அச்சிடப்படுவதை உறுதி செய்கிறது.
6. வரைபடத்தை தாளின் மையத்தில் அச்சிட, Plot Offset பகுதியில் Centerthe plot என்னும் தேர்வுப்பெட்டியில் கிளிக் செய்ய வேண்டும்.
7. Plot scale பகுதியில் Fit to paper என்னும் தேர்வுபெட்டியில் கிளிக் செய்ய வேண்டும். இது வரைபடத்தை தாளில் பொருந்துமாறு அச்சிடும்.
8. வரைபடம் தாளில் சரியான அளவில் அச்சிடப்படுமா என்பதை Preview பொத்தானைக் கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் பிழைகளைக் கண்டறிந்து தாள்கள் வீணாவதைத் தடுக்கலாம்.
9. அச்சு முன்னோட்டத்திலிருந்து வெளியேற ESC விசையை அழுத்த வேண்டும். (அ) மூடு பொத்தானைக் 'X' கிளிக் செய்ய வேண்டும்.
10. Plot உரையாடல் பெட்டியில் OK பொத்தானைக் கிளிக் செய்து வரைபடத்தை அச்சிடலாம்.