12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 03/03/2021
12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Three mark Important Questions - 2021(Public Exam)
12ஆம் வகுப்பு Computer Technology / கணினி தொழில்நுட்பம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Technology / கணினி தொழில்நுட்பம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Technology Test

1.
AutoCADல் ஒப்பீட்டு செவ்வக ஆயத் தொலைவு அமைப்பைப் பயன்படுத்தும் போது டைனமிக் இன்புட் பொத்தானின் முக்கியத்துவம் யாது?
2.
AutoCADன் கட்டளை வரி இடைமுகத்தில் செயல்படுதல் பற்றி எழுதுக.
3.
ஃப்ளாஷில் உள்ள பின்வரும் கருவியின் பயன் யாது? 1) Paint Bucket 2) Ink Bottle 3) Stroke color
4.
ஃப்ளாஷ் பணித்தளத்தில் உரையை எவ்வாறு சேர்ப்பாய்?
5.
ஃப்ளாஷில் சதுரம் அல்லது செவ்வகம் வரைவதற்கான படிகளை எழுதவும்.
6.
ஃப்ளாஷில் ஒரு புதிய ஆவணத்தை எவ்வாறு உருவாக்குவாய்?
7.
இணையத்தில் பல்லூடகத்தின் பயன்பாடு பற்றி எழுதவும்.
8.
BMP மற்றும் DIB என்றால் என்ன ?
9.
CorelDRAW-ல் பத்தி உரையினைச் சேர்ப்பதற்கான படிநிலைகளை எழுதுக.
10.
கலைத்திறனுள்ள உரையினை CorelDRAW - ல் எவ்வாறு சேர்ப்பாய்?
11.
CorelDRAW-ல் Angle of Rotation பெட்டியைப் பயன்படுத்தி ஒரு பொருளினை சுழற்றுவதற்கான படிநிலைகளை எழுதுக.
12.
உரைச் சட்டத்தில் தட்டச்சு உருவாக்குவதற்கான படிநிலைகள் யாவை?
13.
InDesign கருவிப் பலகத்தில் உள்ள பின்வரும் கருவிகளின் பயன் யாது?
14.
InDesign - ல் ஏற்கனவே உள்ள ஆவணத்தை எவ்வாறு திறப்பாய்?
15.
பேஜ்மேக்கரில் ஒரு குறிப்பிட்ட பக்கத்திற்கு எவ்வாறு செல்வாய்?
16.
பேஜ்மேக்கரில் ஒரு நேர் கோட்டை எவ்வாறு வரைவாய்?
17.
பேஜ்மேக்கரில், முதல் முறையாக ஆவணத்தை சேமிக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் யாவை?
18.
பேஜ்மேக்கரில் டெக்ஸ்ட் நிலைக் கொண்டு எவ்வாறு உரைத் தொகுதியை உருவாக்குவாய்?
19.
பேஜ்மேக்கரில் சுட்டி மூலம் உரையை எவ்வாறு தேர்ந்தெடுப்பாய்?
20.
LINE கட்டளையில் உள்ள Undo தேர்வின் பயன்களை எழுதுக.
21.
உருவாக்க குழு உறுப்பினர்களின் பணிகள் மற்றும் பொறுப்புகளைப் பற்றி எழுதுக.
22.
ஒரு கோட்டினை அம்புகுறியாக மாற்றுவதற்கு நீங்கள் என்ன செய்வீர்கள்?
23.
Corel Draw வில் வட்டத்தை வரைய படிநிலைகளை எழுதுக.
24.
எழுத்துக்களை மேலொட்டு அல்லது கீழோட்டு என எவ்வாறு மாற்றுவாய்?
25.
பிரிக்கப்பட்ட உரைத்தொகுதியை எவ்வாறு சேர்ப்பாய்?
1.
1. ஒப்பீட்டு செவ்வக ஆயத்தொலைவு மதிப்புகளை உள்ளிடுவதற்கு, டைனமிக் இன்புட்டின் நிலையை (ON Or OFF) சோதிக்கவும்.
2. டைனமிக் இன்புட் ON நிலையில் இருந்தால், தானமைவாக ஒப்பீட்டு செவ்வக ஆயத்தொலைவு அமைப்பைப் பயன்படுத்தி வடிவம் வரையப்படும்.
3. இந்த வகையில் X ஆயத்தொலைவு மதிப்பிற்கும் Y ஆயத்தொலைவு மதிப்பிற்கும் இடையில் காற்புள்ளி (,) இட வேண்டும்.
4. டைனமிக் இன்புட் OFF நிலையில் இருந்தால், ஆயத்தொலைவு மதிப்புகளுக்கு முன்னால் @குறியீடு இட வேண்டும்.
2.
1. கட்டளை வரி இடைமுகமானது, முன்னியல்பாக வரைபடப் பகுதியின் கீழ்ப்பகுதியில் காணப்படும்.
2. இது ஆட்டோகேடுடன் தொடர்பு கொள்வதற்கான முதன்மை வழிமுறையை வழங்குகிறது.
3. பயனரிடமிருந்துத் தேவையான தகவல்களைப் பெறுவதற்கு ஆட்டோகேட் இந்த இடைமுகத்தைப் பயன்படுத்துகிறது.
3.
1. Paint Bucket (K) கருவி : மூடிய பகுதிகளில் வண்ணங்களைக் கொண்டு நிரப்பப் பயன்படுகிறது.
2. Ink bottle (S) கருவி : பொருளின் வெளிக்கோட்டின் தடிமன் மற்றும் கோட்டின் வண்ணம் போன்ற பண்புகளை மாற்றப் பயன்படுகிறது.
3. Stroke color கருவி : வரையப்பட்ட பொருள்களின் வெளிக்கோட்டின் நிறத்தை மாற்றி அமைக்கப் பயன்படுகிறது.
4.
1. கருவிப் பலகத்திலுள்ள Text Tool ஐக் கிளிக் செய்யவும்.
2. Property Inspector பலகத்தில் எழுத்து, எழுத்து அளவு, நிறம், பாங்கு (Pattern), எழுத்து இடைவெளி, இசைவு போன்ற உரைக்கான விருப்பங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
3. உரையைத் தட்டச்சு செய்ய, மேடையில் கிளிக் செய்து தட்டச்சு செய்யவும். இது தட்டச்சு செய்யப்படும் உரைக்கு தகுந்தாற்போல் உரைப்பெட்டியை விரிவடையச் செய்கிறது. (அல்லது) மேடையில் கிளிக் செய்து இழுப்பதன் மூலம் ஒரு செவ்வகம் வரையவும். இது குறித்த அளவுள்ள உரைப்பெட்டியை உருவாக்குகிறது. இப்பொழுது Text Box-ல் உரையை உள்ளிடவும். உரையானது தானாகவே உரைப்பெட்டியின் அகலத்திற்குள் மடிந்து விடுகிறது.
5.
1. கருவிப் பலகத்திலுள்ள Rectangle Tool ஐக் கிளிக் செய்யவும்.
2. Property Inspector பலகத்திலிருந்து செவ்வகத்திற்குத் தேவையான அமைப்புகளைத் தேர்ந்தெடுக்கவும்.
3. மேடையில் செவ்வகம் வரைய வேண்டிய இடத்திற்கு சுட்டியைக் கொண்டு சென்று சுட்டியின் இடது பொத்தானை அழுத்திக் கொண்டே இழுக்கவும்.
4. தேவையான அளவில் செவ்வகத்தைப் பெற்ற பின் சுட்டியின் பொத்தானை விட்டுவிடவும். சுட்டியின் பொத்தானை அழுத்திக் கொண்டு இழுக்கும் போது Shift பொத்தானை அழுத்திப் பிடிப்பதன் மூலம் Rectangle tool ஐப் பயன்படுத்தி சதுரம் வரைய முடியும்.
6.
(i) ஃப்ளாஷைத் தொடங்கும் போது தோன்றும் மையத்திலுள்ள Create new நெடுவரிசையில் இருக்கும் ActionScript 3.0-ஐ கிளிக் செய்யவும். (அல்லது)
(ii) File – New-ஐ தேர்ந்தெடுத்தால் New Document உரையாடல் பெட்டி தோன்றும். அதில் General தாவலின் கீழ் உள்ள ActionScript 3.0-ஐத் தேர்ந்தெடுத்து OK பொத்தானைக் கிளிக் செய்தால் ஒரு புதிய ஆவணம் உருவாகும்.
7.
1. இணையம் மற்றும் பல்லூடகத்தின் ஒருங்கிணைப்போடு, முக்கிய பயன்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
2. எடுத்துக்காட்டாக, வரைபடம் மற்றும் ஊடகங்கள் நிறைந்த வலைப்பதிவு.
3.அமெரிக்காவில் இணையம் மற்றும் பல்லூடகத்தின் பயன்கள் பற்றிய விரிவான ஆய்வு நடத்தப்பட்டது.
4. அதில் 55 மில்லியன் நுகர்வோர்கள் ஒவ்வொரு மாதமும் இணையத்தைப் பயன்படுத்தி வானொலி மற்றும் ஒளிக்காட்சி சேவைகளைப் பெறுகிறார்கள்.
5. இணையத்தில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும்பல்லூடக வளம் நிழற்படம் ஆகும். 6. முகநூல் போன்ற சமூக வலைத்தளங்கள், பல்லூடகம் நிறைந்த பொருளடக்கத்தை நிகழ்நிலையில் பரிமாற வழிவகை செய்கிறது.
8.
(i) BMP(Bitmap):
1. தொடக்கத்தில் இந்த வடிவமானது விண்டோஸ் 3.1 - ல் பயன்படுத்தப்பட்டது.
2. மிகவும் பெரியது மற்றும் குறுக்கமற்றது.
3. எனவே, அதிக தெளிவுத்திறன் (அ) பெரிய நிழற்படங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.
(ii) DIB (Device Independent Bitmap):
1. இந்த வடிவம் BMP - யை ஒத்ததாகும்.
2. கோப்புகளை பல்வேறு சாதனங்களில் காண்பிக்க அனுமதிக்கிறது.
9.
1. Text கருவியினை கிளிக் செய்யவும், சுட்டியின் அம்புக் குறியானது சிறிய அளவு'A' கொண்டதாக மாறும்.
2. சுட்டியின் அம்புக்குறியினை, பக்கத்தின் மீது எதிர் கோணத்தில் (Diagonally) ஒரு உரைபெட்டியினை வரைய இழுத்து விடவும்.
3. இப்போது உரையினை உரைபெட்டியில் தட்டச்சு செய்யவும். முடித்தபிறகு Pick கருவியினைக் கிளிக் செய்யவும்.
10.
1. Text கருவியினைக் கிளிக் செய்ய வேண்டும். சுட்டியின் அம்புக்குறியானது சிறிய A என மாறும்.
2. வரைபடத்தில் எங்கு உரை தோன்ற வேண்டுமோ அந்த இடத்தில் சுட்டியை வைத்து கிளிக் செய்ய வேண்டும். செருகும் இடம் என அழைக்கப்படும் செங்குத்தான கோடு தோன்றும்.
3. உரையைத் தட்டச்சு செய்யவும்.
4. முடித்த பிறகு Pick கருவியினைக் கிளிக் செய்தால் புதிய உரையானது எட்டு சிறிய சதுர கருப்பு கைப்பிடியுடன் சூழப்பட்டிருக்கும்.
11.
1. Pick கருவி கொண்டு பொருளினைத் தேர்ந்தெடுக்கவும்.
2. பண்புக்கூறு பட்டையிலுள்ள (Property bar) Angle of Rotation பெட்டியைப் மீது சுட்டெலியின் அம்புக்குறியினை வைத்து கிளிக் செய்யவும்.
3. எந்த பொருளை சுழற்ற வேண்டுமோ அதனுடைய சுழற்றும் கோணத்தை Angle of Rotation உரை பெட்டியில் உள்ளிடவும்.
12.
1. கருவிப்பலகத்தில் இருந்து தட்டச்சுக் கருவியை தேர்ந்தெடுக்கவும்.
2. தேவைப்படும் அளவில் இழுத்து செவ்வக உரைப்பெட்டியை உருவாக்கவும். ஒரு ஒளிரும் செருகும் புள்ளியானது உரைச்சட்டகத்தில் தோன்றும்.
3. இப்பொழுது தட்டச்சு செய்ய ஆரம்பிக்கலாம். உரையானது தானாகவே மடிந்து அந்த உரைச் சட்டத்தின் வடிவத்திற்கு அமைகிறது. புதுவரியைத் தொடங்க 'Enter' பொத்தானை அழுத்தவும்.
13.
1. தொகுப்புப் புள்ளியைச் சேர்க்கும் கருவி :
தேர்ந்தெடுக்கப்பட்ட பாதையில் இந்தக் கருவியைக் கிளிக் செய்யும் பொழுது InDesign பாதையில் உள்ள இடத்தில் ஒரு புள்ளியைச் சேர்க்கிறது.
2. தொகுப்புப் புள்ளியை நீக்கும் கருவி :
தேர்ந்தெடுக்கப்பட்ட பாதையில் உள்ள ஒரு புள்ளியில் இந்தக் கருவியை கிளிக் செய்யும் பொழுது InDesign இதை நீக்குகிறது.
3. திசைமாற்றப் புள்ளி கருவி : தேர்ந்தெடுக்கப்பட்ட பாதையில் உள்ள புள்ளியில் கிளிக் செய்தால், InDesign அந்தப் புள்ளியை வேறு ஒரு புள்ளியாக மாற்றுகிறது.
14.
1. File –-> Open (அ) Ctrl + O வை அழுத்தும் பொழுது InDesign, Open a File என்ற உரையாடல் பெட்டியை காண்பிக்கிறது.
2. தேவையான ஆவணத்தை தேர்ந்தெடுக்கவும்.
3. பின் Open பொத்தானை கிளிக் செய்யவும்.
15.
1. பட்டிப்பட்டையில் Layout > Go to page என்பதைக் கிளிக் செய்யவும். (அ) விசைப் பலகையில் Alt+Ctrl+G என்பதை அழுத்தவும்.
2. இப்பொழுது Go to page உரையாடல் பெட்டி தோன்றும்.
3. அந்த உரையாடல் பெட்டியில் தேவையான பக்கத்தின் எண்ணை உள்ளிடவும்.
4. பிறகு OK பொத்தானை அழுத்தவும்.
16.
1. கருவிப் பெட்டியிலிருந்து லைன் டூலை தேர்ந்தெடுக்க வேண்டும். சுட்டுக்குறியானது crosshair ஆக மாறும்.
2. திரையில் தேவையான இடத்தில் கிளிக் செய்து இழுக்க வேண்டும்.
3. சுட்டியை அழுத்துவதை விட்டவுடன், ஒரு கோடு வரையப்பட்டு தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும். அந்தக் கோட்டின் இருபுறமும் அதன் அளவை மாற்றக்கூடிய கைப்பிடிகள் இருக்கும்.
4. தேவையானால் கைப்பிடியை கிளிக் செய்து இழுத்து கோட்டின் அளவை மாற்றிக் கொள்ளலாம்.
17.
1. பட்டிப்பட்டையில் File > Save என்பதைக் கிளிக் செய்ய வேண்டும் (அ) கருவிப் பட்டையில் Save பணிக்குறியைக் கிளிக் செய்ய வேண்டும் (அ) விசைப்பலகையில் Ctrl + S என்ற சாவி சேர்மானத்தை அழுத்த வேண்டும். Save Publication உரையாடல் பெட்டி பின் தோன்றும்.
2. File name உரைப் பெட்டியில் ஆவணத்தின் பெயரை தட்டச்சு செய்ய வேண்டும்.
3. பிறகு Save பொத்தானை அழுத்தி ஆவணத்தை சேமிக்க வேண்டும்.
18.
1. கருவிப் பெட்டியிலிருந்து டெக்ஸ்ட் டூலைத் தேர்ந்தெடுக்கவும். சுட்டெலியின் சுட்டுக்குறியானது I-beam ஆக மாறும்.
2. ஒரு காலியான ஆவணப் பக்கத்திலோ (அ) பத்தியிலோ கிளிக் செய்யவும். இப்பொழுது அந்த ஆவணப் பக்கம் (அ) பத்தியின் அகலத்திற்கு ஒரு உரைத் தொகுதி உருவாகிறது. கொடாநிலையாக செருகும் புள்ளி உரைத் தொகுதியின் இடது ஓரத்தில் இருக்கும்.
3. இப்பொழுது தேவையான உரையைத் தட்டச்சு செய்யவும்.
19.
1. செருகும் புள்ளியை தேர்ந்தெடுக்க வேண்டிய உரைத் தொகுதியின் தொடக்கத்தில் வைக்க வேண்டும்.
2. சுட்டியின் இடது பொத்தானை அழுத்திப் பிடித்தவாறு உரையின் மீது நகர்த்த வேண்டும்.
3. தேவையான உரை தேர்ந்தெடுக்கப் பட்டவுடன் சுட்டியை அழுத்துவதை விட்டுவிட வேண்டும்.
4. இப்பொழுது உரை உயர்த்திக் காட்டப்பட்டிருக்கும்.
| தேர்ந்தெடுக்க |
அழுத்த வேண்டியவை |
| ஒரு வார்த்தை | I-beam சுட்டுகுறி மூலம் இருமுறை கிளிக் செய்ய வேண்டும். |
| ஒரு பத்தி | I-beam சுட்டுகுறி மூலம் மூன்று கிளிக் செய்ய வேண்டும். |
20.
1. ஒரு கோடு வரையும் போது முடிவுப் புள்ளியைத் தவறாகக் குறிப்பிட்டுவிட்டால், Undo கட்டளை மூலம் கடைசியாகக் குறிப்பிட்ட புள்ளியை நீக்கிவிட்டு, முந்தைய கட்டத்திற்குச் செல்லலாம்.
2. இந்தக் கட்டளையை பலமுறை பயன்படுத்த, கட்டளை வரியில் இந்த விருப்பத்தைப் பயன்படுத்த முடியும்.
3. Specify next point (or) [Undo] கட்டளை வரியில் Undo அல்லது U எனத் தட்டச்சு செய்ய வேண்டும்.
4. சுட்டியை வலது கிளிக் செய்து தோன்றும் பட்டியலில் உள்ள Undo விருப்பத்தைத் தேர்ந்தெடுத்தும் இதைச் செய்யலாம்.
21.
1. தயாரிப்பு மேலாளர்: பல்லூடக உருவாக்குதலில் குறித்த நேரத்தில் முழு தரத்துடன் பல்லூடகத் திட்ட உருவாக்கத்தை வரையறுப்பது மற்றும் ஒருங்கிணைப்பது.
2. பொருளடக்க வல்லுநர் : ஏற்கனவே திட்டமிட்ட பயன்பாட்டின் பொருளடக்கத்தைப் பற்றி அனைத்து ஆராய்ச்சி செயல்பாடுகளையும் செய்வதற்கு பொறுப்பானவர்.
3. ஸ்கிரிப்ட் எழுத்தாளர் : கருத்துருக்களை முப்பரிமாண சூழல்களில் காட்சிப்படுத்துகிறார், தேவை ஏற்படின் நிரல் மீது மெய்நிகர் உண்மை ஒருங்கிணைப்பைப் பயன்படுத்தலாம்.
4. உரை பதிப்பாளர் : உரை எப்பொழுதும் கட்டமைப்பாகவும் சரியான இலக்கணத்தோடும் இருக்க வேண்டும் என்பதற்கு பொறுப்பானவர்.
5. பல்லூடக வடிவமைப்பாளர் : பல்லூடகத்தின் அனைத்து அடிப்படைத் தொகுதிகளைப் படைப்பாக்க மென்பொருளைப் பயன்படுத்தி அசைவூட்டல் போன்றவற்றை ஒருங்கிணைப்பவர்.
6. கணினி வரைகலை கலைஞர் : நிரலின் வரைகலைக் கூறுகளான பின்னணி, புல்லட்கள், பொத்தான்கள், பாடப்பதிப்பாய்வு, 3D பொருள்கள், அசைவூட்டல் மற்றும் சின்னங்கள் ஆகியவற்றைக் கையாளும் பங்கினை வகிப்பவர்.
7. ஒலி மற்றும் ஒளிக்காட்சி வல்லுநர்: பதிவு செய்தல். ஒலி விளைவுகளைப் பதிப்பாய்வு செய்தல் மற்றும் இலக்கமாக்கல் ஆகியவற்றுக்கு பொறுப்பானவர்.
8. கணினி நிரலர் : பொருத்தமான மொழியில் குறிமுறை (அ) ஸ்கிரிப்ட் வரிகளை எழுதுபவர்.
9. வலை வல்லுநர் : ஒரு இணைய வலைப் பக்கத்தை உருவாக்க, அதை பராமரிப்பது மற்றும் இணைய சேவைகள் பரவலான சமூக அணுகுதலை வழங்குதல்.
22.
1. Freehand கருவி மூலம் ஒரு கோடு வரையவும்.
2. கோட்டைத் தேர்ந்தெடுக்கவும்.
3. பண்புப்பட்டையில் உள்ள End Arrow head Selector கீழிறங்கு பட்டிப் பெட்டியில் கிளிக் செய்யவும்.
4. பின் தேவையான அம்புக்குறி முனையைத் தேர்வு செய்யவும்.
23.
1.நீள்வட்ட (Ellipse) கருவியைக் கருவிப் பட்டையிலிருந்து தேர்ந்தெடுக்கவும். சுட்டியின் வடிவம் Crosshair குறியுடன் கீழ்ப்பகுதியில் நீள்வட்டம் கொண்ட குறியாக இருக்கும்.
2. இப்போது வரையும் பகுதியில் எங்கு வட்டம் வரைய வேண்டுமோ அங்கு Ctrl விசையை அழுத்தியவாறு சுட்டியின் இடது பொத்தானை இழுத்து நகர்த்த வேண்டும்.
3. விரும்பும் வட்டவடிவம் தோன்றியவுடன் சுட்டியின் பொத்தானை அழுத்துவதை விட்டுவிடவும்.
24.
1. கீழொட்டு அல்லது மேலோட்டாக மாற்றப்படவேண்டிய எழுத்தை தேர்ந்தெடுக்கவும் .
2.கட்டுப்பாட்டுத் தட்டில் உள்ள ஏதேனும் ஒரு பொத்தானை கிளிக் செய்யவும்
மேலோட்டு
கீழொட்டு
3. தேர்வு செய்யப்பட்ட எழுத்து தேவைப்படும் படி மாறும்.
25.
1. செருகும் புள்ளியை இரண்டாவது உரைத் தொகுதியின் கீழ்ப்பக்க கைப்பிடியில் கிளிக் செய்து அதன் மேல்பகுதி வரை இழுக்கவும்.
2. பிறகு செருகும் புள்ளியை முதல் உரைத் தொகுதியின் கீழ்ப்பக்க கைப்பிடியில் கிளிக் செய்து கீழ்நோக்கி தேவையான அளவிற்கு இழுக்கவும். இப்பொழுது பிரிக்கப்பட்ட இரண்டு உரைத் தொகுதிகளும் ஒன்றாக இணைக்கப்பட்டுவிடும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards