12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 03/03/2021
12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Two mark Important Questions with Answer key - 2021(Public Exam)
12ஆம் வகுப்பு Computer Technology / கணினி தொழில்நுட்பம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Technology / கணினி தொழில்நுட்பம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Technology Test

1.
Auto CAD ல் வரைபடப் பகுதி என்றால் என்ன?
2.
AutoCAD விரைவு அணுகல் கருவிப்பட்டையின் பயன் யாது?
3.
AutoCADல் தற்போது திறந்திருக்கும் கோப்பை (அ) அனைத்து கோப்புகளையும் மூடுவதற்கானப் படிநிலைகளைப் பட்டியலிடு.
4.
வரைபடத்தைக் கைவிட்டு AutoCAD லிருந்து எவ்வாறு வெளியேறுவாய்?
5.
AutoCADல் உள்ள பல வகையான கோப்பு வகைகள் யாவை?
6.
ஒப்பீட்டு போலார் ஆயத்தொலைவு அமைப்பை எடுத்துக்காட்டுடன் விவரி.
7.
AutoCAD File தொகுதியில் உள்ள கோப்புப் பெயரில் தோன்றும் நட்சத்திரக் குறியீடு எதைக் குறிக்கிறது?
8.
ஆயத் தொலைவு அமைப்புகளின் பயன் யாது? AutoCADல் பயன்படுத்தப்படும் ஆயத்தொலைவு அமைப்புகளைப் பட்டியலிடு.
9.
AutoCADல் கருவிப்பட்டை எவ்வாறு தோன்றச் செய்வாய்?
10.
Auto CAD 2016 ல் உள்ள பணித்தளங்களின் வகைகள் யாவை?
11.
ஃப்ளாஷில் உள்ள Eye dropper கருவியின் பயன் யாது?
12.
ஃப்ளாஷில் உள்ள Bind கருவியின் பயன் யாது?
13.
ஃப்ளாஷில் உள்ள Line கருவி பற்றி குறிப்பு வரைக.
14.
ஃப்ளாஷில் உள்ள வரவேற்புத்திரையைப் பற்றி எழுதுக.
15.
ஃப்ளாஷ் CS6 பயன்படுத்தும் பயனாளர்கள் யார்?
16.
பல்லூடகமானது பெருமளவு பயன்படுத்தப்படும் துறைகளைப் பட்டியலிடுக.
17.
AVI படிவம் பற்றி குறிப்பு வரைக.
18.
OGG என்றால் என்ன ?
19.
RTF படிவம் - குறிப்பு வரைக.
20.
CorelDRAW -ன் object பட்டித் தேர்வுகளான ungroup objects மற்றும் ungroup all objects தேர்வுகளுக்கு இடையேயான வேறுபாடு யாது?
21.
கருவிப்பெட்டி என்றால் என்ன? அதன் பயன் யாது?
22.
CorelDRAW ஆவணத்தின் தானமைவு பக்கப் பண்புகள் யாவை?
23.
CorelDRAW-ல் உள்ள பத்தி உரையின் பயன் யாது?
24.
CorelDRAW ல் இணைக்கப்பட்ட பொருள்களுக்கும், குழுவாக்கப்பட்ட பொருள்களுக்கும் இடையேயான வேறுபாடு யாது?
25.
CorelDRAW-ல் எவ்வாறு பொருட்களை நகலெடுக்க முடியும்?
26.
CorelDRAW-ல் நீங்கள் வரையும் சாளரத் திரையானது நிறையப் பொருள்களைக் கொண்டிருந்தால் அதில் ஒரு பொருளை எவ்வாறு தேர்ந்தெடுப்பாய்?
27.
CorelDRAW-ல் சதுரம் வரையப் பயன்படும் படிநிலைகளை எழுதுக.
28.
CorelDRAW-ல் உள்ள Drop shadow கருவியின் பயன் யாது?
29.
CorelDRAW-ல் உள்ள Pick கருவியின் flyout கருவிகளைப் பட்டியலிடு.
30.
கதை எனப்படுவது யாது?
31.
InDesign-ல் உள்ள உருமாற்றக் கட்டளைகள் யாவை?
32.
பத்திகளை வடிவூட்டல் செய்யப் பயன்படும் பண்புகளை விவரி.
33.
உரைச்சட்டகம் என்றால் என்ன?
34.
InDesign - ல் எத்தனை ரூலர்கள் உள்ளன? அவற்றின் பயன் யாது?
35.
எழுத்துவகை என்றால் என்ன?
36.
திரை உருளல் செய்தல் என்றால் என்ன? அதை எவ்வாறு செய்வாய்?
37.
ஆட்டோகேடிலிருந்து எவ்வாறு வெளியேறலாம்?
38.
ERASE கட்டளையை உள்ளிட்ட பின், ஆட்டோகேட் உங்களை என்ன செய்யச் சொல்கிறது?
39.
OSNAPஐ ON மற்றும் OFF செய்வதற்கு எந்த செயல்பாட்டு விசையைப் பயன்படுத்த வேண்டும்?
40.
ரிப்பனில் உள்ள அனைத்துப் பொத்தான்களையும் எப்படி மறைப்பாய்?
41.
Adobe Professional Flash CS6ஐ தொடங்க தேவையான படிநிலைகளை எழுதுக.
42.
ஒலி கோப்பு வடிவங்களைப் பட்டியலிடுக.
43.
44.
வரையறு – அசைவூட்டல் மற்றும் அதன் சிறப்பம்சம்.
45.
Corel Draw வில் கலைத்திறனுள்ள ஊடக கருவி (Artistic Media tool) ஏன் பயன்படுத்தப்படுகின்றது?
46.
Corel Draw வில் பண்பு பட்டை (Property Bar) என்றால் என்ன?
47.
Corel Draw எதற்காக பயன்படுத்தப்படுகின்றது?
48.
உரை பதிப்பித்தல் என்றால் என்ன?
49.
எலிப்ஸ் டூல் மற்றும் எலிப்ஸ் ஃபிரேம் டூல் வேறுபடுத்துக.
50.
பேஜ்மேக்கரில் உள்ள பட்டிப்பட்டை பற்றி குறிப்பு எழுதுக.
1.
1. AutoCAD திரையின் பெருமளவுப் பகுதி வரைபடப் பகுதி ஆகும்.
2.  இதில் பொருள்களையும், முப்பரிமாண வரைகலைகளையும் எளிதாக வரைய முடியும்.
2.
1. விரைவு அணுகல் கருவிப்பட்டை, சன்னல் திரையின் இடது மேல் ஓரத்தில் சிவப்பு நிற பொத்தானை அடுத்துக் காணப்படும்.
2. இந்தப் பட்டை Workspace மற்றும் Undo/Redo கட்டளைகளுக்கும் பயன்பாட்டுப் பட்டையில் உள்ள அனைத்து கோப்புக் கட்டளைகளுக்கும் பணிக்குறிகளைக் கொண்டிருக்கும்.
3.
1. பயன்பாட்டுப் பொத்தானைக் கிளிக் செய்தால் பயன்பாட்டுப் பட்டி தோன்றும்.
2. அதில் Close என்பதைக் கிளிக் செய்து வரும் துணைப்பட்டியில், தற்போதைய கோப்பை மட்டும் மூட Current Drawing என்பதையும், திறந்திருக்கும் அனைத்து கோப்புகளையும் மூட All Drawings என்பதையும் கிளிக் செய்ய வேண்டும்.
4.
1. மூடு பொத்தானைக் (X) கிளிக் செய்ய வேண்டும்.
2. ஆட்டோகேட் வரைபடத்தை சேமிக்க வேண்டுமா என வினா எழுப்பும். வரைபடத்தை சேமிக்காமல் மூடுவதற்கு No பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.
5.
(i) .dwg: Auto CAD 2016 drawing
(ii) .dws: Auto CAD 2016 drawing standard.dws
(iii) .dwt: AutoCAD 2016 Template Drawing .dwt template file
ஆட்டோகேட் 2016 இல் வரைந்த வரைபடங்களை, அதற்கு முந்தைய பதிப்புகளிலும் சேமிக்க முடியும்.
6.
1. ஒப்பீட்டு போலார் ஆயத்தொலைவு அமைப்பில் ஒரு புள்ளியின் இருப்பிடமானது, அப்புள்ளிக்கும், தற்போதைய புள்ளிக்கும் இடைப்பட்ட தொலைவையும், X அச்சைப் பொறுத்து இரண்டு புள்ளிகளுக்கும் இடையேயான கோண அளவைப் பொறுத்தும் அமையும்.
2. ஒப்பீட்டு போலார் ஆயத்தொலைவு அமைப்பைப் பயன்படுத்தி (1,1) என்ற புள்ளியைத் தொடக்கப் புள்ளியாகக் கொண்டு 5 அலகுகள் நீளமும், 30 டிகிரி கோண அளவும் கொண்ட ஒரு கோடு வரைதல்.
Command:LINE↲
Specify first point: 1,1↲
Specify next point or [Undo]:@5<30↲
Specify next point or [Undo]: (Press ENTER to complete the drawing)
7.
கோப்பானது மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதையும், அது சேமிக்கப்பட வேண்டும் என்பதையும் குறிக்கிறது.
8.
சரியான பரிமாணங்களைக் கொண்டு பொறியல் வரைபடங்கள் தயாரிப்பதற்கு
ஆயத்தொலைவு அமைப்புகள் பயன்படுகின்றன.
1. தனித்த ஆயத்தொலைவுகள்
2. ஒப்பீட்டு ஆயத்தொலைவுகள்
3. துருவ ஆயத்தொலைவுகள்
4. நேரடித் தொலைவு உள்ளீடு
9.
கருவிப்பட்டையைக் காண்பிக்க Tools>Toolbar>Auto CAD என்ற வரிசையில் கிளிக் செய்ய வேண்டும்.
10.
ஆட்டோகேட் 2016ல் மூன்று பணித்தளங்கள் உள்ளன. அவை : 1. Drafting & Annotation தானமைவாக செயல்பாட்டில் உள்ள பணித்தளம்.
2. 3D Basics,
3. 3D Modeling.
11.
Eye dropper கருவி : வெளிக்கோடு, உட்பரப்பு மற்றும் உரையின் பண்புகளை தேர்ந்தெடுக்கப் பயன்படுகிறது. இதன் மூலம் இவற்றை ஒரு பொருளிலிருந்து மற்றொரு பொருளுக்கு நகலெடுக்க முடியும்.
12.
(i) Bind கருவி இரண்டு பொருள்களை இணைக்கும் போது அவற்றிற்கிடையே நிலவும் உறவுகளை சரிசெய்யப் பயன்படுகிறது.
(ii) தனிப்பட்ட பைன்ட் உறவுகளை சரி செய்ய பயன்படுகிறது.
13.
Line கருவி பணித்தளத்தில் ஒரு நேர்கோட்டை வரையப் பயன்படுகிறது.
படிகள்:
1. கருவிப் பலகத்திலுள்ள Line tool-ஐக் கிளிக் செய்யவும்.
2. Property Inspector பலகத்திலிருந்து விரும்பும் கோட்டின் நிறம், தடிமன் மற்றும் வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
3. சுட்டியை பணித்தளத்திற்குக் கொண்டு வந்து கிளிக் செய்து இழுக்கவும்.
14.
(i) ஃப்ளாஷ்-ல் உள்ள வரவேற்பு திரை கோப்புகளை உருவாக்கவும், திறக்கவும் உதவும் ஒரு தொடக்கப் பகுதியாக உள்ளது.
(ii) முதலில் ஃப்ளாஷைத் தொடங்கும் போது (அ) ஒரு பயன்பாட்டை திறக்கும் போது எந்த ஆவணங்களும் இல்லாதபோது இது தோன்றும்.
15.
1. வரைகலை வடிவமைப்பாளர்கள்
2. அசைவூட்டங்களை உருவாக்குபவர்கள்
3. வலைப்பக்க வடிவமைப்பாளர்கள்
4. வலைப்பக்கத்தை உருவாக்குபவர்கள்
16.
1. கல்வி 2. பொழுதுபோக்கு
3. வணிக அமைப்பு 4. மருத்துவ சேவைகள்
5. பொது இடங்கள் 6. பல்லூடகக் கலந்துரையாடல்.
17.
AVI (Audio/Video Interleave) :
1. ஒரு விண்டோஸிற்கான ஒரு ஒளிக்காட்சி கோப்பு வடிவமாகும்.
2. இங்கு, ஒலி மற்றும் படத்தின் கூறுகளைக் கோப்பில் மாற்ற நெடுவரிசை தொகுப்பில் சேமிக்கப்படுகிறது.
18.
1. சிறந்த ஓட்டத்தினை அடைவதற்காக வடிவமைக்கப்பட்ட இலவச திறந்த மூல கொள்கலன் வடிவமாகும்.
2. உயர் இறுதி தர இலக்க பல்லூடகத்தில் சிறிது சிறிதாக மாறி வருகிறது.
3. தரத்தின் அடிப்படையில் இதை MP3 கோப்புகளோடு ஒப்பிடப்படும்.
19.
RTF (Rich Text Format) மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் 1987 ஆம் ஆண்டு பிரசுரிக்கப்பட்ட தயாரிப்புகளின் குறிப்புகள் மற்றும் குறுக்கு பணித்தள ஆவணங்களின் பரிமாற்றங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட முதன்மைக் கோப்பு வடிவமாகும்.
20.
| Ungroup objects | Ungroup all objects |
| பின்னலான குழுவினைப் பல குழுக்களாகப் பிரிக்கின்றது. | பின்னலான குழுவிலுள்ளபொருள்களையும் தனித்தனிப் பொருள்களாகப் பிரிக்கின்றது. |
21.
1.கருவிப்பெட்டி : CorelDRAW பயன்பாட்டுச் சாளரத்தின் ஒரு பகுதி.
2. இது படங்களை வரைவதற்கும் திருத்துவதற்கும் பல கருவிகளைக் கொண்டுள்ளது.
22.
ஆவணத்தின்
1. தானமைவு அளவு - ஒற்றை வரி இடைவெளி
2. பக்க அளவு - Letter sized
3. பக்க அமைவு - போர்ட்ரைட் ஆக இருக்கும்.
23.
பத்தி உரையானது விளம்பரத்திற்கு, சிற்றேடு (அ) பிரசுரங்கள் மற்றும் உரையினை அடிப்படையாகக் கொண்ட பயன்பாடுகள் போன்றவற்றின் நீண்ட உரைத் தொகுதிகளை வடிவமைக்க உருவாக்கப்பட்டதாகும்.
24.
| இணைக்கப்பட்ட பொருள் | குழுவாக்கப்பட்ட பொருள் |
| பொருட்களை அதன் முந்தைய வடிவம் மற்றும் நிரப்புக்கு மாற்றியமைக்க முடியாது. |
பொருட்களை அதன் முந்தைய வடிவம் மற்றும் நிரப்புக்கு மாற்றியமைக்க முடியும். |
25.
1. Edit பட்டியிலுள்ள Duplicate அல்லது Clone கட்டளைகளைக் கொண்டு பொருட்களை நகலெடுக்க முடியும்.
2. விண்டோஸ் பிடி பலகை (Clipboard)-ஐயும் பயன்படுத்தி நகலெடுக்கலாம்.
26.
1. Pick கருவியினை தேர்ந்தெடுக்க இடைவெளிப் பொத்தானை (Spacebar) அழுத்தவும்.
2. தேர்ந்தெடுக்க விரும்பும் பொருளை சுற்றிலும் தேர்ந்தெடுப்பு பெட்டி (Selection) தோன்றும் வரை Tab சாவியினை அழுத்தவும்.
27.
1. கருவிப்பட்டையில் இருந்து Rectangle கருவியைத் தேர்ந்தெடுக்கவும். சுட்டி சிறு சதுரத்தை கொண்ட crosshair சுட்டியாக மாறும்.
2. இப்போது வரையும் பகுதியில் Ctrl விசையை அழுத்திக் கொண்டே எங்கு சதுரம் வரைய வேண்டுமோ அங்கு சுட்டியின் இடது பொத்தானைக் கிளிக் செய்து கொண்டே நகர்த்த வேண்டும்.
3. விரும்பும் அளவுடைய சதுரம் தோன்றியதும் சுட்டியின் பொத்தானை அழுத்துவதை விட்டுவிடவும்.
28.
1. பொருள்களுக்குப் பின்னே (அ) கீழே நிழல்கள் உருவாக்கப் பயன்படுகிறது.
2. Drop Shadow, Contour, Blend, Distort, Envelope, Extrude, மற்றும் Block Shadow கருவிகளை அணுக உதவுகிறது.
29.
1. Pick
2. Freehand Pick
3. Free Transform
30.
ஒன்று (அ) அதற்கு மேற்பட்ட சட்டகங்களில் உள்ள தொடர்ச்சியான உரை கதை எனப்படும்.
31.
(i) Move
(ii) Scale
(iii) Rotate
(iv) Shear
(v) Flip
32.
Leading : இரண்டு வகையான வரிகளுக்கு இடையே உள்ள இடைவெளியின் அளவைக் குறிக்கும்.
Alignment: பத்தியானது, உரைப்பெட்டியின் இடது மற்றும் வலது பக்கங்களுக்கு இடையே உள்ள கிடைமட்ட பரவலைக் குறிக்கிறது.
33.
உரைச்சட்டகங்கள் என்று அழைக்கப்படும் உரைப்பெட்டிகள் உரையின் கலன்கள் ஆகும்.
34.
1. InDesign ல் கிடைமட்ட மற்றும் செங்குத்து ரூலர்கள் என இரு ரூலர்கள் உள்ளன.
2. பொருள்களை அளவிடுவதற்கும் நிலை நிறுத்துவதற்கும் இவை பயன்படுகின்றன.
35.
1. ஒரு குறிப்பிட்ட பாணியிலுள்ள எழுத்துக்கள், எண்கள் மற்றும் குறியீடுகள் போன்றவற்றின் தொகுப்பிற்கு எழுத்து வகை என்று பெயர்.
2. ஒரு எழுத்து வகை மற்ற எழுத்து வகைகளிலிருந்து வேறுபட்டிருக்கும்.
36.
1. ஆவணத்தை மேலும் கீழுமாகவும் இடது மற்றும் வலது புறமாகவும் நகர்த்துவதை திரை உருளல் செய்தல் என்கிறோம்.
2. ஆவணத்தை மேலும் கீழுமாக நகர்த்த செங்குத்துத் திரை உருளல் பட்டையும், இடது மற்றும் வலது புறமாக நகர்த்த கிடைமட்டத் திரை உருளல் பட்டையும் பயன்படுகிறது.
37.
1. மூடு (X) பொத்தானைச் கிளிக் செய்ய வேண்டும்.
2. ஆட்டோகேட் வரைபடத்தை சேமிக்க வேண்டுமா என வினா எழுப்பும். உங்கள் வரைபடத்தை சேமிக்காமல் மூடுவதற்கு No பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும். ஆட்டோகேட் உங்கள்
வேலையை வட்டில் பதிவு செய்யாமல் வெளியேறும்.
38.
1. ERASE கட்டளையை உள்ளிட்ட பின் Auto CAD, அழிக்க வேண்டிய பொருளைத் தேர்ந்தெடுக்கக் கூறும்.
2. அழிக்க வேண்டிய அனைத்து பொருள்களையும் தேர்வு செய்த பின் Enter விசையையோ (அ) சுட்டியை வலது கிளிக் செய்து Erase என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.
39.
F3 விசை
40.
ரிப்பனின் மேல்பகுதியில் உள்ள சிறிதாக்குப் பொத்தானை மூன்று முறை கிளிக் செய்யும் போது, ரிப்பனில் உள்ள அனைத்துப் பொத்தான்களும் மறைந்து பேனல் தொகுதிகளாக மாறும்.
41.
Start > All programs > Adobe Flash Professional CS6 ஐத் தேர்வு செய்யவும்
42.
WAV (Waveform Audio File format)
MP3 (MPEG Layer-3 format)
OGG
AIFF(Audio Interchange File Format)
WMA (WindowsMediaAudio)
RA (RealAudio Format).
43.
44.
அசைவூட்டல் : அசையா படங்களை மிக விரைவாக காண்பிப்பதன் மூலம் அவற்றைத் தொடர்ச்சியான அசைவு போன்ற உணர்வை கொடுக்கும் செயல். அசைவூட்டலில், திரை பொருள் என்பது ஒரு வெக்டர் படமாகும்.
சிறப்பம்சம் :
1. எண் மாற்றத்தைப் பயன்படுத்தி ஒருங்கிணைப்புகளை வரையறுக்க படத்துடன் அதன் பாதையின் இயக்கம் கணக்கிடப்படும்.
2. குறைந்தபட்ச சட்டக விகிதம் விநாடிக்கு 16 சட்டங்கள் என இருந்தால் மென்மையான தோற்றத்தைக் கொடுக்கும்.
3. இயற்கை தோற்றத்திற்கு குறைந்தபட்சம் விநாடிக்கு 25 சட்டகங்களாக இருத்தல் வேண்டும்.
45.
Corel DRAW-ல் கலைத்திறனுள்ள ஊடகக் கருவி. ஆவணத்தில் கலை தூரிகை, தெளிப்பு மற்றும் calligraphic விளைவுகளைச் சேர்ப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றது.
46.
இயக்கத்தில் உள்ள கருவி அல்லது பொருள் தொடர்பான கட்டளைகளுடன் ஒரு நீக்கக்கூடிய பட்டையாகும்.
எ கா : செவ்வக கருவி தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தால், செவ்வகத்தை உருவாக்கும் மற்றும் செவ்வகத்தைத் திருத்தும் கட்டளைகளைக் காட்டும்.
47.
Corel Draw என்பது உயர்தர வரைகலை சித்திரங்கள், லோகோ வடிவமைப்பு மற்றும் பக்க அமைப்புகளை உருவாக்குவதற்கான பல்துறை வரைகலை பயன்பாடு ஆகும்.
48.
உரைபதிப்பித்தல் : ஆவணத்தில் உள்ள உரையில் மாற்றங்கள் செய்வது உரை பதிப்பித்தல் (Text Editing) எனப்படும். உரையை சேர்த்தல், நீக்குதல், பிழை திருத்துதல், நகர்த்துதல் மற்றும் நகலெடுத்தல் போன்ற செயல்கள் அடங்கும்.
49.
| எலிப்ஸ் டூல் | எலிப்ஸ் ஃபிரேம் டூல் |
| வட்டம் மற்றும் நீள் வட்டம் வரையப் பயன்படுகிறது. |
உரை மற்றும் வரைகலைகளை வைப்பதற்கான நீள் வட்டங்களை வரையப் பயன்படுகிறது. |
50.
பட்டிப்பட்டை :
(i) இந்தப் பட்டை File, Edit, Layout, Type, Element, Utilities, View, Window, Help போன்ற பட்டிகளைக் கொண்டுள்ளது.
(ii) ஒரு பட்டியில் கிளிக் செய்தால் பல கட்டளைகள் மற்றும் துணைப்பட்டிகளுடன் கூடிய கீழ்விரி பட்டியல் தோன்றும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards