12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 03/10/2019
கூட்டாண்மை நிறுவனக் கணக்குகள் - அடிப்படைகள்
12ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
எடுப்புகள் மீதான வட்டியை கணக்கிடும் முறைகளை எழுதுக.
2.
முதல் மீதான வட்டி எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
3.
குறிப்பு வரைக:
(i) கூட்டாளிகளின் முதல் கணக்கு
(ii) கூட்டாளிகளின் நடப்பு கணக்கு
4.
கூட்டாளிகளின் முதல் கணக்குகளைத் தயாரிக்கும் முறைகளை எழுதுக.
5.
2018, ஜனவரி 1 அன்று பேகம் மற்றும் பாத்திமா என்ற கூட்டாளிகளின் முதல் கணக்குகள் முறையே ரூ.50,000 மற்றும் ரூ.40,000 இருப்பினைக் காட்டியது. 2018, அக்டோபர் 1 அன்று பேகம் கூடுதல் முதலாக ரூ.10,000 கொண்டு வந்தார் மற்றும் 2018, மே 1 அன்று பாத்திமா கொண்டுவந்த கூடுதல் முதல் ரூ.9,000. டிசம்பர் 31, 2018 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய முதல் மீது வட்டி ஆண்டுக்கு 4% கணக்கிடவும்.
6.
கூட்டாண்மை ஒப்பாவணத்தின் உள்ளடக்கங்கள் ஏதேனும் ஆறினைத் தரவும்.
7.
ஜான் என்பவர் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளி. அவர் வழக்கமாக ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 எடுத்துக் கொள்கிறார். எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 5% விதிக்கப்பட வேண்டும். எடுப்புகள் மீது வட்டி சராசரி கால முறையைப் பயன்படுத்தி கீழ்க்கண்ட சூழ்நிலைகளில் கணக்கிடவும். அவர்
(i) ஒவ்வொரு மாதத் தொடக்கத்தில் எடுத்திருந்தால்
(ii) ஒவ்வொரு மாத நடுவில் எடுத்திருந்தால்
(iii) ஒவ்வொரு மாத இறுதியில் எடுத்திருந்தால்
8.
அன்பு என்பவர் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளி. கூட்டாண்மை ஒப்பாவணத்தின்படி எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 12 % கணக்கிடப்படுகிறது. 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டில் அவருடைய எடுப்புகள் பின்வருமாறு:
| நாள் | ரூ. |
|---|---|
| மார்ச் 1 | 6,000 |
| ஜுன் 1 | 4,000 |
| செப்டம்பர் | 5,000 |
| டிசம்பர் 1 | 2,000 |
பெருக்குத் தொகை முறையைப் பயன்படுத்தி எடுப்புகள் மீது வட்டி கணக்கிடவும்.
9.
தங்கள் இலாப நட்டங்களை 3:4 என்ற இலாபவிகிதத்தில் பகிர்ந்து வரும் பிருந்தா மற்றும் பிரவீனா என்ற கூட்டாளிகளின் பின்வரும் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து 2017, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய முதல் மீது வட்டி ஆண்டுக்கு 6 % கணக்கிடவும்.
| பொறுப்புகள் | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|
| முதல்கணக்குகள்: | பல்வகைச் சொத்துகள் | 80,000 | |
| பிருந்தா | 30,000 | ||
| பிரவீனா | 40,000 | ||
| இலாப நட்டப் பகிர்வு க/கு | 10,000 | ||
| 80,000 | 80,000 |
2017, ஜுலை 1 அன்று பிருந்தா கொண்டு வந்த கூடுதல் முதல் ரூ.6,000 மற்றும் 2017, அக்டோபர் 1 அன்று பிரவீனா கொண்டு வந்த கூடுதல் முதல் ரூ.10,000. அவ்வாண்டில் பிருந்தா மற்றும் பிரவீனா எடுப்புகள் முறையே ரூ.5,000 மற்றும் ரூ.7,000. அவ்வாண்டில் ஈட்டிய இலாபம் ரூ.31,000.
10.
கூட்டாண்மை ஒப்பாவணம் இல்லாதபோது, இந்திய கூட்டாண்மைச் சட்டம் 1932-ன் படி கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து சிறு குறிப்பு தரவும்.
1.
எடுப்புகள் மீதான வட்டி நேரடி முறை அல்லது பெருக்குத் தொகை முறை இவைகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் கணக்கிடப்படுகிறது
(i) நேரடி முறை:
இம்முறையில் எடுப்பு மீதான வட்டி, எடுப்புகள் எடுத்த நாளிலிருந்து கணக்காண்டின் இறுதி நாள் வரையிலான காலத்திற்குரிய எடுப்புகள் மீது கணக்கிடப்படுகிறது. எடுப்புகள் மீதான வட்டி கணக்கிட பின்வரும் சூத்திரம் பயன்படுத்தப்படுகிறது
எடுப்புகள் மீதான வட்டி = எடுப்புத் தொகை x வட்டி விகிதம் x வட்டிக்குரிய காலம்
(ii) பெருக்குத் தொகை முறை:
பெருக்குத் தொகை முறையில், மொத்தப் பெருக்குத் தொகையின் மீது வட்டி கணக்கிடப்படுகிறது. அதாவது, எடுப்புத் தொகை மற்றும் எடுப்புத் தொகை மாத அடிப்படையில் கணக்கிடப்படுவதாக இருந்தால், மொத்தப் பெருக்குத் தொகைக்கு, குறிப்பிட்ட வட்டி விகிதத்தில் ஒரு மாதத்திற்குரிய வட்டி கணக்கிடப்படுகிறது
(iii) சராசரி கால முறை:
கூட்டாளிகள் ஒரு குறிப்பிட்ட தொகையை குறிப்பிட கால இடைவெளியில் எடுத்ததால், எடுப்புகள் மீது வட்டி, சராசரி கால அடிப்படையில் கணக்கிடப்படும். குறிப்பிட்ட கால இடைவெளி என்பது மாதந்தோறும், காலாண்டு தோறும், அரையாண்டு தோறும், 2 மாதங்களுக்கு ஒரு முறை தொகை எடுப்பதைக் குறிக்கிறது.
2.
(i) முதல் மீது வட்டி நடப்பாண்டுக்குரிய தொடக்க முதல் கணக்கிடப்படுகிறது.
(ii) அவ்வாண்டில் கூட்டாளிகள் கூடுதல் முதல் ஏதாவது கொண்டு வந்திருந்தாலோ, அல்லது முதல் தொகையை நிரந்தரமாக திரும்ப எடுத்திருந்தாலோ, அது முதல் தொகையில் மாற்றத்தை உண்டாக்கும்
(iii) எனவே, நடப்பாண்டுக்குரிய வட்டியானது முதல் தொகையில் ஏற்பட்ட மாற்றங்களின் விகிதாச்சாரத்திற்கேற்ப கணக்கிடுதல் வேண்டும்.
(iv) முதல் மீது வட்டி = முதல் தொகை x ஆண்டுகளுக்கான வட்டி விகிதம் x வட்டிக்குரிய காலம்
3.
(i) கூட்டாளிகளின் முதல் கணக்கு:
(1) நிறுவனத்திற்கு கூட்டாளியால் கொண்டுவரப்பட்ட தொடக்க முதல் மற்றும் அவரால் எதிர்வரும் ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட ஏதேனும் கூடுதல் முதல போன்றவை முதல் கணக்கில் வரவு வைக்கப்படுகின்றன.
(2) ஒரு கூட்டாளியால் நிரந்தரமாக நிறுவனத்திலிருந்து முதல் தொகை திரும்ப எடுக்கப்பட்டிருந்தால் அது முதல் கணக்கில் பற்று வைக்கப்படுகிறது.
(ii) கூட்டாளிகளின் நடப்பு கணக்கு
(1) கூட்டாளிகளால் கொண்டுவரப்பட்ட தொடக்க முதல், கூடுதல் முதல் மற்றும் அவர்களால் நிரந்தரமாக திரும்ப எடுக்கப்பட்ட முதல் தவிர, கூட்டாளிகளுக்கும் நிறுவனத்திற்கும் இடையே உள்ள அனைத்து பிற நடவடிக்கைகளைப் பதிவு செய்வதற்காக கூட்டாளிகளின் நடப்புக் கணக்கு தயாரிக்கப்படுகிறது
(2) முதல் மீது வட்டி, கூட்டாளிகளின் ஊதியம் அல்லது கழிவு மற்றும் கூட்டாளிக்குரிய இலாபப் பங்கு போன்றவை இக்கணக்கில் வரவு வைக்கப்படுகின்றன.
(3) எடுப்புகள், எடுப்புகள் மீது வட்டி மற்றும் கூட்டாளியின் நட்டப் பங்கு போன்றவை இக்கணக்கில் பற்று வைக்கப்படுகின்றன
4.
கூட்டாளிகள், கூட்டாண்மை நிறுவனத்தில் முதலீடு செய்யும் தொகை கூட்டாளிகளின் முதல் எனப்படுகிறது. ஒரு நிறுவனத்திலுள்ள கூட்டாளிகளின் முதல் கணக்குகளைப் பின்வரும் ஏதேனும் இரு முறைகளில் பராமரிக்கலாம்.
(i) நிலைமுதல் முறை மற்றும்
(ii) மாறுபடும் முதல் முறை
(i) நிலைமுதல்:
நிலைமுதல் முறையில், கூட்டாளிகளின் முதல் மாறாமல் இருக்கும் மற்றும் பொதுவாக அதே தொகையாக, நிலையானதாக இருக்கும். ஒவ்வொரு கூட்டாளிக்கும் இரண்டு கணக்குகள் பராமரிக்கப்பட வேண்டும். அதாவது (அ) முதல் கணக்கு மற்றும் (ஆ) நடப்புக் கணக்கு, தொடக்க முதல் கொண்டு வந்தது, கூடுதல் முதல் கொண்டு வந்தது போன்றவை தொடர்பான நடவடிக்கைகள் முதல் கணக்கில் பதிவு செய்யப்படுகின்றன. மற்ற அனைத்து நடவடிக்கைகளும் நடப்புக் கணக்கில் பதிவு செய்யப்படுகின்றன.
(ii) மாறுபடும் முதல் முறை:
இம்முறையில், ஒவ்வொரு கூட்டாளிக்கும் முதல் கணக்கு மட்டும் பராமரிக்கப்படுகிறது கூட்டாளி மற்றும் நிறுவனத்திற்கு இடையேயுள்ள அனைத்து நடவடிக்கைகளும் முதல் கணக்கில் பதியப்படுகின்றன. கூட்டாளியால் கொண்டு வரப்பட்ட தொடக்க முதல் மற்றும் கூடுதல் முதல், முதல் மீது வட்டி, கூட்டாளியின் ஊதியம், கழிவு மற்றும் கூட்டாளியின் இலாபப் பங்கு போன்றவை இக்கணக்கில் வரவு வைக்கப்படுகின்றன. முதல் திரும்ப எடுத்தது, எடுப்புகள் மீது வட்டி மற்றும் கூட்டாளிக்குரிய நட்டப்பங்கு போன்றவை இக்கணக்கில் பற்று வைக்கப்படுகின்றன
5.
முதல் மீதான வட்டி கணக்கிடுதல்:
பேகம்:
தொடக்க முதல் (ஓராண்டு) = 50,000 x \(\frac {4}{100}\) = ரூ.2,000
கூடுதல் முதல் (3 மாதங்கள்) = 10,000 x \(\frac {4}{100}\) x \(\frac {3}{12}\) = ரூ.100
(அக்டோபர் - டிசம்பர்) ________
முதல் மீது வட்டி = ரூ.2,100
________
பாத்திமா:
தொடக்க முதல் (ஓராண்டு) = 40,000 x \(\frac {4}{100}\) = ரூ.1,600
கூடுதல் முதல் (8 மாதங்கள்) = 9,000 x \(\frac {4}{100}\) x \(\frac {8}{12}\) = ரூ. 240
________
முதல் மீது வட்டி = ரூ.1,840
________
6.
(i) நிறுவனத்தின் பெயர், தன்மை மற்றும் தொழில் செய்யும் இடம்
(ii) தொழில் தொடங்கிய நாள் மற்றும் தொழிலின் கால அளவு
(iii) அனைத்துக் கூட்டாளிகளின் பெயர் மற்றும் முகவரி
(iv) ஒவ்வொரு கூட்டாளியும் அளித்த முதல்
(v) இலாபப் பகிர்வு விகிதம்
(vi) முதல் மீது அனுமதிக்கப்படும் வட்டி வீதம்
7.
மொத்த எடுப்புத் தொகை = 1,000 × 12 = ரூ.12,000
(i) எடுப்புகள் ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் எடுத்திருந்தால்:
சராசரி காலம் = 6.5

=ரூ.12,000 x \(\frac { 5 }{ 100 } \times \frac { 6.5 }{ 12 } \)=ரூ.325
(ii) எடுப்புகள் ஒவ்வொரு மாத நடுவிலும் எடுத்திருந்தால்:
சராசரி காலம் = 6

=ரூ.12,000 x \(\frac { 5 }{ 100 } \times \frac { 6 }{ 12 } \) =ரூ.300
(iii) எடுப்புகள் ஒவ்வொரு மாத இறுதியிலும் எடுத்திருந்தால்:
சராசரி காலம் = 5.5

=ரூ.12,000 x \(\frac { 1 }{ 100 } \times \frac { 5.5 }{ 12 } \)=ரூ.275
8.
பெருக்குத் தொகை முறையில் எடுப்புகள் மீது வட்டி கணக்கிடுதல்
| எடுப்பு நாள் | எடுப்புத் தொகை | வட்டிக்குரிய காலம் டிசம்பர் 31 வரை (மாதங்களில்) |
பெருக்குத் தொகை |
|---|---|---|---|
| மார்ச் 1 | 6,000 | 10 | 60,000 |
| ஜுன் 1 | 4,000 | 7 | 28,000 |
| செப்டம்பர் 1 | 5,000 | 4 | 20,000 |
| டிசம்பர் 1 | 2,000 | 1 | 2,000 |
| மொத்த பெருக்குத் தொகை | 1,10,000 |
எடுப்புகள் மீதான வட்டி = மொத்த பெருக்குத் தொகை × ஆண்டு வட்டி வீதம் x \(\frac { 1 }{ 12 } \)
=1,10,000 x \(\frac { 12 }{ 100 } \times \frac { 1 }{ 12 } \) =ரூ.1,100
9.
| விவரம் | பிருந்தா | பிரவீனா | ||
|---|---|---|---|---|
| ரூ. | ரூ. | ரூ. | ரூ. | |
| 2017, டிசம்பர் 31 அன்று முதல் | 30,000 | 40,000 | ||
| கூட்டுக: எடுப்புகள் | 5,000 | 7,000 | ||
| 35,000 | 47,000 | |||
| கழிக்க: | ||||
| கூடுதல் முதல் | 6,000 | 10,000 | ||
| இலாபம் ஏற்கனவே வரவு வைத்தது | 9,000 | 15,000 | 12,000 | 22,000 |
| 2017, ஜனவரி 1 அன்று முதல் | 20,000 | 25,000 | ||
இலாபம் வரவு வைத்தது = ஈட்டிய இலாபம் ரூ.31,000 – இருப்புநிலைக் குறிப்பின் படியான இலாப இருப்பு ரூ.10,000 = ரூ.21,000. இந்தத்தொகை 3:4 என்ற இலாபப் பகிர்வு விகிதத்தில் கூட்டாளிகளுக்கிடையே பகிர்ந்தளிக்கப்படுகிறது.
பிருந்தா:


10.
கூட்டாண்மை ஒப்பாவணம் இல்லாத போது அல்லது கூட்டாண்மை ஒப்பாவணத்தில் வெளிப்படையான அறிக்கை எதுவும் இல்லாத நிலையில், சட்டத்தின் பின்வரும் நிபந்தனைகள் பின்பற்றப்படுகின்றன.
(i) கூட்டாளிகளின் ஊதியம் [பிரிவு 13(அ)]:
எந்த கூட்டாளிக்கும் ஊதியம் அல்லது உழைப்பு ஊதியம் அனுமதிக்கப்பட வேண்டியதில்லை
(ii) இலாபப் பகிர்வு விகிதம் [பிரிவு 13(ஆ)]:
இலாபங்கள் அல்லது நட்டங்களை கூட்டாளிகள் சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும்
(iii) முதல் மீது வட்டி [பிரிவு 13(இ)]:
கூட்டாளிகளின் முதல் மீது வட்டி அனுமதிக்கப்படுவதில்லை. கூட்டாளி ஒருவர் கூட்டாண்மை ஒப்பாவணத்தின்படி தான் அளித்த முதல் தொகைக்கு முதல் மீது வட்டி பெற உரிமை உடையவராயின், அந்த முதல் மீது வட்டி இலாபத்திலிருந்து மட்டுமே வழங்கப்பட வேண்டும்
(iv) கூட்டாளிக்குகளிடமிருந்து நிறுவனத்திற்காக பெறப்பட்ட கடன்மீதான வட்டி [பிரிவு 13(ஈ)]:
கடன்மீதான வட்டி ஆண்டுகளுக்கு 6% வழங்கப்பட வேண்டும்
(v) எடுப்புகள் மீது வட்டி:
கூட்டாளிகளின் எடுப்புகள் மீது வட்டி விதிக்கக்கூடாது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards