12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 06/01/2020
விகிதப் பகுப்பாய்வு
12ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
நீர்மைத் தன்மை விகிதங்கள் குறிப்பு வரைக.
2.
விகித பகுப்பாய்வின் ஏதேனும் மூன்று நன்மைகள் தரவும்
3.
சானியா நிறுமத்தின் கொடுக்கப்பட்ட தகவல்களிலிருந்து சரக்கிருப்பு சுழற்சி விகிதம் மற்றும் சரக்கிருப்பு மாற்று காலத்தை (மாதங்களில்) கணக்கிடவும்.
| விவரம் | ரூ. |
|---|---|
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 1,90,000 |
| அவ்வாண்டில் தொடக்கச் சரக்கிருப்பு | 40,000 |
| அவ்வாண்டில் இறுதிச் சரக்கிருப்பு | 20,000 |
| அவ்வாண்டில் மேற்கொண்ட கொள்முதல் | 90,000 |
| உள்தூக்குக்கூலி | 10,000 |
4.
பின்வரும் தகவல்களிலிருந்து புற அக பொறுப்புகள் விகிதம் கணக்கிடவும்:
| விவரம் | ரூ. |
|---|---|
| I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் | |
| 1. பங்குதாரர் நிதி | |
| (அ) பங்கு முதல் | |
| நேர்மைப் பங்குமுதல் | 1,00,000 |
| (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி | 60,000 |
| 2. நீண்டகாலப் பொறுப்புகள் | |
| நீண்ட காலக் கடன்கள் (கடனீட்டுப் பத்திரங்கள்) | 80,000 |
| 3. நடப்புப் பொறுப்புகள் | |
| (அ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் | 50,000 |
| (ஆ) இதர நடப்புப் பொறுப்புகள் கொடுபடவேண்டிய செலவுகள் | 30,000 |
| மொத்தம் | 3,20,000 |
5.
செயல்பாட்டின் அடிப்படையில் விகிதங்களை எவ்வாறு வகைப்படுத்தலாம்?
6.
விகித பகுப்பாய்வின் ஏதேனும் இரண்டு குறைபாடுகளைத் தரவும்.
7.
பின்வரும் தகவல்களிலிருந்து மொத்த இலாபம் கணக்கிடவும்:
விற்பனை மூலம் பெற்ற வருவாய் ரூ.1,00,000, விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்கவிலை ரூ.80,000 மற்றும் கொள்முதல் ரூ.62,500.
8.
_______ என்பது பங்குதாரர்கள் / உரிமையாளர்களின் நிதி மற்றும் மொத்த புலனாகும் சொத்துகள் இடையேயான உறவை காட்டுகிறது.
புற-அக பொறுப்புகள் விகிதம்
உரிமையாளர் விகிதம்
இயக்க விகிதம்
நீர்மை விகிதம்
9.
________ என்பது ஒரு வணிக நிறுவனம் தனது நடப்புப் பொறுப்புகளை எப்போது செலுத்த வேண்டுமோ அப்போது, அதை எதிர்கொள்ளும் திறனைக் குறிக்கிறது.
நடப்பு விகிதம்
விரைவு விகிதம்
உரிமையாளர் விகிதம்
முதல் உந்துதிறன் விகிதம்
10.
பங்குதாரர் நிதிக்கும் சொத்துகளுக்கும் உள்ள விகிதாச்சாரத்தை தருவது எது?
புற அக பொறுப்புகள் விகிதம்
உரிமையாளர் விகிதம்
முதல் உந்து திறன் விகிதம்
நிகர இலாப விகிதம்
11.
விகிதங்களை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
12.
பங்குதாரர் நிதிக்கும் மொத்த சொத்துகளுக்கும் உள்ள விகிதாச்சாரம் ______.
உரிமையாளர் விகிதம்
முதல் உந்துதிறன் விகிதம்
புற அக பொறுப்பு விகிதம்
நடப்பு விகிதம்
13.
நவீன் நிறுமத்தின் பின்வரும் வணிக நடவடிக்கையிலிருந்து
(i) மொத்த இலாப விகிதம்
(ii) நிகர இலாப விகிதம்
(iii) இயக்க அடக்கவிலை விகிதம்
(iv) இயக்க இலாப விகிதம் கணக்கிடவும்.
| விவரம் | ரூ | |
| I | விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 20,000 |
| II. | இதர வருமானம் | |
| முதலீடு மூலம் வருவாய் | 200 | |
| III | மொத்த வருவாய் (I+II) | 20,200 |
| IV | செலவுகள் | |
| கொள்முதல் சரக்குகள் | 17,000 | |
| சரக்கிருப்பு மாற்றம் | (-)1,000 | |
| நிதிசார் செலவுகள் | 300 | |
| இதர செலவுகள் (நிர்வாகம் மற்றும் விற்பனை) | 2,400 | |
| மொத்த செலவுகள் | 18,700 | |
| V | அவ்வாண்டிற்கான வரிக்கு முன்னர் உள்ள இலாபம் (III-IV) | 1,500 |
14.
கூற்று (A) : விகிதம் என்பது இரண்டு தொடர்புடைய அல்லது ஒன்றை ஒன்று சார்ந்த இனங்களுக்கு இடையே உள்ள தொடர்பைக் கணிதவியல் அடிப்படையில் வெளிப்படுத்துவதாகும்.
காரணம் (R) : ஒரு இனம் வருமான அறிக்கையிலிருந்தும் மற்றொரு இனம் இருப்புநிலைக் குறிப்பிலிருந்தும் எடுத்து விகிதம் கணக்கிடப்பட்டால், அது அறிக்கைகளுக்கிடையேயான விகிதம் என அழைக்கப்படுகிறது.
(அ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
(ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
(இ) (A) சரி ஆனால் (R) தவறு
(ஈ) (A) தவறு ஆனால் (R) சரி
15.
| (அ) | நடப்பு விகிதம் | = | |
| (ஆ) | விரைவு விகிதம் | = | |
| (இ) | புற அக பொறுப்புகள் விகிதம் | = | |
| (ஈ) | உரிமையாளர் விகிதம் | = |
16.
1. நீர்மைத் தன்மை என்பது எளிதாக ரொக்கமாக மாற்றக்கூடிய திறனைக் குறிக்கிறது.
2. நடப்புப் பொறுப்புகள் ஒரு குறுகிய காலத்திற்குள் திரும்பச் செலுத்தக் கூடிய பொறுப்புகள் ஆகும்.
3. விரைவு விகிதம் நீர்மைச் சொத்துக்களுக்கும் நடப்புப் பொறுப்புகளுக்குமுள்ள விகிதச்சாரமாகும்.
(அ) 1 மட்டும் சரி
(ஆ) 2 மட்டும் சரி
(இ) 3 மட்டும் சரி
(ஈ) 1, 2 மற்றும் 3 சரி
1.
(i) நீர்மைத் தன்மை என்பது எளிதாக ரொக்கமாக மாற்றக்கூடிய திறனைக் குறிக்கிறது.
(ii) நீர்மைத் தன்மை விகிதங்கள், ஒரு வணிக நிறுவனம் தன்னுடைய குறுகிய கால நிதிப் பொறுப்புகளை எதிர்கொள்ளும் திறனை மதிப்பிட உதவுகிறது.
(iii) குறுகிய காலச் சொத்துகள் (நடப்புச் சொத்துகள்) நீண்டகாலச் சொத்துகளோடு (நிலைச் சொத்துகள்) ஒப்பீடு செய்யும் போது அதிக நீர்மைத் தன்மை கொண்டதாக இருக்கிறது.
(iv) நீர்மைத் தன்மை விகிதங்கள் குறுகிய கால செயல்திறன் விகிதங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
நீர்மைத் தன்மை விகிதங்கள்
(i) நடப்பு விகிதம்
(ii) விரைவு விகிதம்
ஆகிய இரு விகிதங்களை உள்ளடக்கியது.
2.
விகிதப் பகுப்பாய்வின் நன்மைகள் பின்வருமாறு :
(i) செயல்பாடுகளின் செயல்திறனை அளவிடுகிறது :
விகிதப் பகுப்பாய்வு, இயக்க அடக்கவிலை மற்றும் வருவாய்க்கும் இடையே உள்ள உறவை கண்டறிவதன் மூலமும், தற்போதைய விகிதங்களைக் கடந்த கால விகிதங்களுடன் ஒப்பீடு செய்வதன் மூலமும் செயல்பாடுகளின் செயல்திறனை அளவிடுகிறது.
(ii) நிதிநிலையின் கடன் தீர்க்கும் திறனை அளவிடுகிறது :
விகிதப் பகுப்பாய்வு, ஒரு வணிக நிறுவனத்தின் நீர்மைத் தன்மை அல்லது குறுகிய கால கடன் தீர்க்கும் திறன் மற்றும் நீண்டகால கடன் தீர்க்கும் திறனை அறிய உதவுகிறது.
(iii) முதலீட்டு முடிவுகளுக்கு வழிவகை செய்கிறது :
விகிதப் பகுப்பாய்வு இலாபகரமான முதலீடு வழிவகைகள் தொடர்பான பயனுள்ள முடிவுகளை எடுப்பதற்கு நிர்வாகத்திற்கு உதவுகிறது.
3.
சரக்கிருப்பு சுழற்சி விகிதம் = = \(\frac {1,20,000}{30,000}\) = 4 மடங்கு
விற்பனை மூலம் பெற்ற வருவாயின் அடக்கவிலை
தொடக்கச் சரக்கிருப்பு + நிகரக் கொள்முதல் + நேரடிச் செலவுகள் (உள்தூக்குக் கூலி) – இறுதிச் சரக்கிருப்பு
= 40,000 + 90,000 + 10,000 – 20,000
= ரூ.1,20,000
சராசரி சரக்கிருப்பு = = \(\frac {4,000+20,000}{2}\) = ரூ.30,000
மாற்று காலம்
சரக்கிருப்பு மாற்று காலம் (மாதங்களில்) = =\(\frac {12}{4}\)= 3 மாதங்கள்
4.
புற அக பொறுப்புகள் விகிதம் = =\(\frac {80,000}{1,60,000}\) = 0.5:1
நீண்டகாலக் கடன் = கடனீட்டுப் பத்திரங்கள் = ரூ.80,000
பங்குதாரர் நிதி = நேர்மைப் பங்குமுதல் + காப்புகள் மற்றும் மிகுதி
= 1,00,000 + 60,000 = ரூ.1,60,000
5.
செயல்பாட்டின் அடிப்படையில் விகிதங்கள் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன.
(i) நீர்மைத் தன்மை விகிதங்கள்.
(ii) நீண்டகால கடன்தீர்க்கும் விகிதங்கள்
(iii) சுழற்சி விகிதங்கள்
(iv) இலாபத் தன்மை விகிதங்கள்
6.
(i) விகிதங்கள் வழிமுறைகளை மட்டும் தருகின்றன :
விகிதங்களே முடிவல்ல, ஆனால், ஒரு குறிப்பிட்ட நோக்கத்தினை அடைவதற்கான வழிமுறைகளை மட்டும் அவை தருகின்றன.
(ii) விலை நிலையில் ஏற்படும் மாற்றம் :
நிதிநிலை அறிக்கைகளில் தரப்பட்டுள்ள புராதன தகவல்களின் அடிப்படையில் விகிதப் பகுப்பாய்வு மேற்கொள்ளப்படுவதால் விலை நிலையில் ஏற்படும் மாற்றம் மற்றும் தற்போதைய மதிப்பை இது பிரதிபலிப்பதில்லை.
7.
மொத்த இலாப விகிதம் = x 100 = \(\frac {20,000}{1,00,000}\) × 100 = 20%
மொத்த இலாபம் = விற்பனை மூலம் பெற்ற வருவாய் – விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்கவிலை
= 1,00,000 – 80,000 = ரூ.20,000
8.
(b)
உரிமையாளர் விகிதம்
9.
(a)
நடப்பு விகிதம்
10.
(b)
உரிமையாளர் விகிதம்
11.
(a)
இரண்டு
12.
(a)
உரிமையாளர் விகிதம்
13.

விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்க விலை = கொள்முதல் செய்த சரக்குகள் + சரக்கிருப்பு மாற்றம் + நேரடிச் செலவுகள் வருவாய்க்கான அடக்க விலை
= 17,000-1,000+0=ரூ.16,000
மொத்த இலாபம் = விற்பனை மூலம் பெற்ற வருவாய் - விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்க விலை
= 20,000-16,000=ரூ.4,000
\(\therefore \) மொத்த இலாப விகிதம் = \(\cfrac { 4,000 }{ 20,000 } \times 100=20\%\)
(ii)

குறிப்பு :
வரி இல்லை எனக் கொள்ளவும்.
(iii)

இயக்க அடக்க விலை = விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்க விலை + இயக்கச் செலவுகள்
இயக்கச் செலவுகள் = இதர செலவுகள் = ரூ.2,400
இயக்க அடக்க விலை = 16,000+2,400=ரூ.18,400
\(\therefore \) இயக்க அடக்க விலை விகிதம் = \(\cfrac { 18,400 }{ 20,000 } \times 100=92\%\)
(iv)

இயக்க இலாபம் = விற்பனை மூலம் பெற்ற வருவாய் - இயக்க அடக்க விலை
= 20,000-18,400=ரூ1,600
\(\therefore \) இயக்க இலாப விகிதம் = \(\cfrac { 1,600 }{ 20,000 } \times 100=8\%\)
14.
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
15.
விரைவு விகிதம் -
16.
1, 2 மற்றும் 3 சரி
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards