12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 18/10/2025
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test

1.
கைபேசிகளின் மூலம் உருவாகும் மின்னணுக் கழிவுகளில் எந்த உலோகம் அதிகமாகக் காணப்படுகிறது?
தாமிரம்
வெள்ளி
பலேடியம்
தங்கம்
2.
'சுத்தமான குடிநீர்ப் பெறுதல்' என்பது நமது அடிப்படை உரிமை இது இந்திய அரசியலமைப்பில் எந்த பிரிவில் அடங்கியுள்ளது?
பிரிவு 12
பிரிவு 21
பிரிவு 31
பிரிவு 41
3.
கிளைன் ஃபெல்டர் சிண்ட்ரோம் குரோமோசோம் தொகுப்பு வரைபடம் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது?
XYY
XO
XXX
XXY
4.
கீழ்க்கண்ட எந்த புறத்தோற்ற சந்ததி பெற்றோர்களின் மரபுவகையான IA I0 X IA IB களுக்கிடையே பிறக்க சாத்தியமில்லை?
AB
O
A
B
5.
ஒரு குடும்பத்தில் மூன்று குழந்தைகள் A, AB மற்றும் B என்ற இரத்தவகைகளை கொண்டுள்ளனர். இவர்களின் பெற்றோர்கள் எவ்வகையான மரபுவகை விகிதத்தை கொண்டிருப்பார்?
IA IB மற்றும் I0 I0
IA I0 மற்றும் IB I0
IB IB மற்றும் IA IA
IA IA மற்றும் I0 I0
6.
'காற்று தரக் குறியீட்டு எண்' என்றால் என்ன?
7.
'சமீர்' என்பது எதைக் குறிக்கிறது? (அ) சமீர் என்றால் என்ன?
8.
வீடுகள், பள்ளி அல்லது சுற்றுலாத் தலங்களில் உன்னால் உருவாக்கப்படும் கழிவுகளைப் பட்டியலிடுக. அவற்றை மிக எளிதாகக் குறைக்க முடியுமா? எந்த வகைக் கழிவுகளை குறைப்பது மிகக் கடினம் அல்லது இயலாது?
9.
பனிப்புகை என்றால் என்ன? அது நமக்கு எந்த வகையில் தீங்கிழைக்கின்றது?
10.
விரிவாக்கம் செய்க.
அ) CFC
ஆ) AQI
இ) PAN
11.
பீனைல்கிடோநியூரியாவின் அறிகுறிகளை குறிப்பிடுக?
12.
ஹோலாண்டிரிக் மரபணுக்கள் யாவை?
13.
14.
லையோனைசேஷன் என்றால் என்ன?
15.
ஒற்றைமய – இரட்டைமய நிலை என்றால் என்ன?
16.
ஒலி மாசுபாட்டின் விளைவுகள் யாவை?
17.
உயிரிய உருப்பெருக்கம் எனக் குறிப்பிடப்படுவது எது?
18.
அமில மழை என்றால் என்ன?
19.
சுற்றுச்சூழல் மாசுபாட்டினை குறைப்பதில் தனி நபரின் பங்கினை விவாதி?
20.
உரம் கலந்த நீர் வழிந்தோடி நீர் நிலையில் கலப்பதால் நீர் சூழ்நிலை மண்டலத்தில் ஏற்படுத்தும் விளைவுகள் யாவை ?
21.
Rh காரணியின் மரபுக் கட்டுப்பாட்டை பற்றி விளக்கு
22.
வேறுபட்ட இனச்செல் ஆண் உயிரிகளை விவரி.
23.
மனிதனில் பால் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது?
24.
டவுன் சிண்ட்ரோமின் அறிகுறிகளை குறிப்பிடுக?
25.
மனித ABO இரத்த வகைகளை பற்றி விவரி
26.
மனிதனில் பால் சார்ந்த மரபுக் கடத்தலில் காணப்படும் பண்புகளை எழுதுக.
27.
மறுசுழற்சி முறைகள் மாசுபாடுகளை குறைப்பதில் எவ்வாறு உதவிபுரிகின்றன?
28.
குரோமோசோம் தொகுப்பு வரைபடத்தின் பயன்களை எழுதுக?
1.
(a)
தாமிரம்
2.
(b)
பிரிவு 21
3.
(d)
XXY
4.
(b)
O
5.
(b)
IA I0 மற்றும் IB I0
6.
குறிப்பிட்ட கால அளவில் காற்று எவ்வாறு மாசடைகிறது என்பது பொதுமக்களுக்கு தெரிவிக்க அரசு முகமைகள் பயன்படுத்தும் எண்ணே "காற்றுத் தரக் குறியீட்டு எண்" ஆகும்.
7.
மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் வெளியீடு ஆகிய சமீர் என்னும் செயலி தேசிய அளவில் ஒவ்வொரு மணிக்கும் காற்றின் பண்புக் குறியீட்டை வெளியிடுகிறது.
8.
1. நெகிழிப்பேப்பர். காய்கறி மற்றும் பழங்களின் தோல்கள், ஒருமுறை பயன்படக்கூடிய சோப்பு தட்டு, கரண்டி.
2. இவைகளை சரியான அளவில் பயன்படுத்தி அவைகளின் பயன்பாட்டினை குறைக்கலாம்.
3. பேப்பரின் இரண்டு பக்கங்களிலும் எழுதுவதன் மூலமும், மறுசுழற்சி செய்த பேப்பர்களை பயன்படுத்துவதால் அதன் பயன்பாட்டை குறைக்கலாம்.
4. நெகிழி மற்றும் கண்ணாடி போன்ற பொருட்களை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதால் அதன் பயன்பாட்டை குறைக்கலாம்.
5. நெகிழிப்பைகளுக்கு பதிலாக உயிரிச்சிதைவடையக்கூடிய சணல் பைகளை பயன்படுத்துவதால் பள்ளி மற்றும் சுற்றுலாக்களில் போது ஏற்படும் கழிவுகளை கட்டுப்படுத்தலாம்.
6. வீடுகளில் குளிப்பதற்கு சமைப்பதற்கு பயன்படும் தண்ணீரை குறைப்பதன் மூலம் வீட்டுக்கழிவுகளின் அளவை குறைக்கலாம்.
7. உயிரியச் சிதைவடையாத நெகிழி, உலோகம் உடைந்த கண்ணாடி போன்றவைகளை குறைப்பது கடினம் ஏனெனில் அவைகளை நுண்ணுயிரிகள் முழுவதும் சிதைக்க முடிவதில்லை.
9.
1. புகைப்பனி என்பது காற்றில் காணப்படும் சிறிய துகள்களினால் ஏற்படும் ஒரு வகையான காற்று மாசுபாடு ஆகும்.
2. இவை காற்றின் ஊடே பார்வை திறனை குறைக்கிறது.
3. புகைப்பனியானது ஆஸ்துமா நோயுடைய மக்களின் சுவாசத்தை கடினமாக்குகிறது.
4. புகைப்பனியானது தாவரங்கள் மற்றும் விலங்குகளையும் பாதிக்கின்றது.
5. இது பயிர்களை பாதிப்பதோடு செல்லப் பிராணிகள், பண்ணை விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு உடல் நலக் கோளாறுகளையும் ஏற்படுத்துகிறது.
6. கட்டடங்கள் மற்றும் வாகனங்களை அரித்து (அரித்து கரைக்கும்) சேதத்தினை ஏற்படுத்துகிறது.
10.
CFC - குளோரோபுளுரோ கார்பன்
AQI - காற்று தரக்குறியீட்டு எண்
PAN - பெராக்சி அசிட்டைல் நைட்ரேட்
11.
(i) அதி தீவிர மூளை குறைபாட்டு நோய்.
(ii) தோல் மற்றும் முடிகளில் குறைவான நிறமிகள் உண்டாகின்றன.
(iii) பைருவிக் அமிலம் சிறுநீர் வழியாக வெளியேற்றப்படுகின்றது.
12.
(i) Y குரோமோசோமின் வெவ்வேறு பகுதிகளில் காணப்படும் மரபணுக்கள் Y சார்ந்த மரபணுக்கள் அல்லது ஹோலண்டிரிக் ஜீன்கள் எனப்படும்.
(ii) 'Y' சார்ந்த மரபணுக்களுக்கு இணையான அல்லீகள் X குரோமோசோமில் இல்லை.
(iii) 'Y' சார்ந்த மரபணுக்கள் Y குரோமோசோமுடன் சேர்ந்தே கடத்தப்படுகிறது.
(iv) ஆண் பாலினத்தின் மட்டுமே அல்லீல்கள் பண்புகளை புறத்தோற்றத்தில் வெளிப்படுத்தப்படுகின்றன.
13.

14.
லியோன் கொள்கை -ஒரு X குரோமோசோம் செயல்படாமல் இருப்பது.
(i) XY குரோமோசோம் வகை பால் நிர்ணயித்தலில் ஆண் உயிரிகள் ஒரு X குரோமோசோம் கொண்டுள்ளது.
(ii) பெண் உயிரிகள் இரண்டு X குரோமோசோம்கள் கொண்டுள்ளன.
(iii) பாலினத்திற்கு இடையேயான இந்த அளவீட்டு வேறுபாடு ஈடு செய்யப்படுகிறது.
(iv) ஆண் மற்றும் பெண் ஆகிய இரு பாலின உயிரிகளிலும் ஒரு செல்லுக்கு ஒரு X குரோமோசோம் மட்டுமே செயல்திறன் பெற்றுள்ளது.
(v) மேரி லியோன் கருதுகோளின்படி பார் உறுப்புகள் செயல்படாமல் உள்ளது.
(vi) பெண் உயிரிகளில் இவை மிக நெருக்கமாக சுருண்டு குரோமோட்டினை காணத்தக்க வடிவமான ஹைட்ரோ குரோமேட்டின் ஆக மாறுகிறது.
(vii) ஹெட்டிரோகுரோமேட்டின் என்பது எங்கு புரத உற்பத்தியில் பிரித்தெடுத்தல் நடக்கவில்லையா ஆகும்.
15.
ஒற்றை மய -இரட்டைமய நிலை (எ.கா) தேனீ, எறும்பு மற்றும் குளவி
(i) சேய் உயிரிகளின் பாலினம் அவை பெறுகிற குரோமோசோம் தொகுதியின் எண்ணிக்கையை பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது.
(ii) கருவுற்ற முட்டைகள் பெண் உயிரிகளால் உருவாகின்றது ராணி,வேலைகாரத்தேனீ.
(iii ) கருவுறாத முட்டைகள் ஆண் தேனீக்களாக கன்னி இனப்பெருக்க முறையில் மூலம் வளர்ச்சியடைகின்றன.
(iv) எனவே ஆண் தேனீக்கள் ஒற்றைமய குரோமோசோம்களைக் கொண்டுள்ளன.
(v) பெண் தேனீக்கள் இரட்டைமய குரோமோசோம்களைக் கொண்டுள்ளன. இம்முறை ஒற்றைமய -இரட்டைமய பால்நிர்ணயம் என அழைக்கப்படுகிறது.
16.
ஒலி மாசுபாட்டின் விளைவுகள்:
(i) இரைச்சலும், உடல் நலமும் ஒன்றுக்கொன்று நேரடி தொடர்புடையதாகும். இதய நோய், உயர் இரத்த அழுத்தம், மன அழுத்தம் தொடர்பான நோய்கள், தூக்க இடையூறுகள், காது கேளாமை மற்றும் ஆக்கத்திறன் குறைதல் போன்றவை ஒலி மாசுபாடு தொடர்பான பிரச்சனைகள் ஆகும்.
(ii) மன அழுத்தம், பதற்றம் அதிகரிப்பு, நரம்பு தளர்ச்சி, கவலை, மனச்சோர்வு, பெரும் அச்சம் ஆகியவை ஏற்படுதல்.
(iii) வயிற்றுப் புண், தீவிர தலைவலி, நினைவாற்றல் குறைதல் ஆகியவை.
(iv) கடற்கரை மற்றும் துறைமுக செயல்பாடுகளினால் ஏற்படும் ஒலி மாசுபாடு கடல் வாழ் விலங்குகளைப் பாதிக்கின்றது.
(v) பட்டாசுகள் விலங்குகளை மிரளச்செய்கின்றன. அதிகப்படியான வானூர்திகளால் பறவைகள் அடிக்கடி பாதிப்பிற்குள்ளாகின்றன.
17.
1. சிதைவடையாப் பொருட்கள் உணவுச்சங்கிலியினுள் நுழையும் பொழுது அவை வளர்சிதை மாற்றமடைவதில்லை.
2. அவைகள் உணவுச்சங்கிலியின் அடுத்தடுத்த ஊட்டநிலைகளுக்கு இடம் மாற்றப்படுகின்றன.
3. இச்செயல்களின்போது அவற்றின் அடர்த்தி அதிகரிக்கின்றது.
4. இது உயிரிய உருப்பெருக்கம் எனப்படுகிறது.
18.
கந்தக அமிலம் அல்லது நைட்ரிக் அமிலம் போன்ற அமிலப் பொருட்களைக் கொண்ட மழைப் பொழிவு ஆகும்.
19.
1. தனிமனிதர்கள் வளங்களை வீணாக்குதலை குறைக்க முக்கியமாக மின்சாரச் சிக்கனத்தை மேற்கொள்ள வேண்டும்.
2. மோட்டார் வாகனங்கள் பயன்படுத்தலை தவிர்த்து நடந்தோ அல்லது மிதிவண்டியை பயன்படுத்தலாம்.
3. மறுசுழற்சி செய்து பயன்படுத்த வேண்டும்.
4. சணல் பைகளை பயன்படுத்தி பிளாஸ்டிக் பைகளை தவிர்க்கலாம்.
5. நீர் வளங்களை சரியாக பயன்படுத்துதல்.
6. ஓசோன் இழப்புக்கு முக்கிய காரணமான CFC குளிர்சாதனப் பெட்டிகளில் அதிகமாக பயன்படுத்துவதால் அதன் பயன்பாட்டை குறைக்கலாம்.
7. சுற்றுச்சூழல் மாசடைதலின் கேடுகள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
20.
1. நன்மையளிக்கும் பாக்டீரியங்கள் கொல்லப்படும்.
2. நீர் நிலைகளில் மிகை உணவூட்டத்தை ஏற்படுத்தும்.
3. நீர் வாழ் விலங்குகளையும் அவற்றின் உற்பத்தித்திறனையும் பாதிக்கிறது.
21.
ஃபீஷர் மற்றும் ரேஸ் கருதுகோள்:
(i) Rh காரணியின் மூன்று வெவ்வேறு அல்லீல் இணைகள் குரோமோசோம் இணைகளின் நெருக்கமான மூன்று வெவ்வேறு இடங்களில் அமைந்துள்ளன.(Cc,Dd Ee)
(ii) இது பொதுவாக cde என்ற பெயர்களில் பயன்படுத்தப்படுகிறது.
(iii) ஒவ்வொரு குரோமோசோம் C அல்லது c ஒரு D அல்லது d, ஒரு E அல்லது e வாய்ப்புகளை மரபு வகையைப் பெற்றிருக்கும்.
(iv) எ.கா /cde
CdE/eDe
Cde/cde
CDe
CDe/CdE

(v) அனைத்து மரபு வகைகளிலும் உள்ள ஓங்கிய D அல்லீல்கள் Rh+ புறத்தோற்ற வகையை உருவாக்குகின்றன.
(vi) இரண்டு ஓங்கிய பண்பு கொண்ட மரபு வகையில் dd அல்லீல்கள் Rh- புறத்தோற்ற வகையை உற்பத்தி செய்கின்றன.
வெய்னரின் கருதுகோள் :
(i) ஒரு Rh னுடைய இருப்பிடத்தில் எட்டு அல்லீல்கள் (R1R2R0RZr 1r11r1) இருக்கின்றன.
(ii) ஓங்கிய அல்லீல்களைக் கொண்ட அனைத்து மரபு வகைகளும்(R1R2R0RZ) Rh (+) புறத்தோற்ற வகையை உற்பத்தி செய்கின்றன.
(iii) ஒடுங்கிய பண்பு கொண்ட அனைத்து மரபு வகைகளும் (rr rr1rr11ry) Rh-புறத்தோற்றத்தையும் உற்பத்தி செய்கின்றன.
22.

இவ்வகையான பால் நிர்ணயித்தலில் ஆண்கள் வேறுபட்ட இனச்செல் பண்புகளை (ஹெடிரோகேமிட்டிக்) உடையவர்.
XX -XO வகை
(i) எ.கா.பூச்சிகள்,கரப்பான்பூச்சி,வெட்டுக்கிளி.
(ii) ஆண்கள் ஹெட்டிரோகேமிட்டிக் வகையினர் ஒரு X குரோமோசோம் உடையவர்.
(iii) இரண்டு வகையான விந்துகளை உற்பத்தி செய்கின்றன.
(iv)ஒன்று X குரோமோசோம் மற்றும் X குரோமோசோம் இல்லை.
(v) சேய்களின் பால் அவைகளின் விந்துகள் எந்த அண்டத்துடன் இணைகிறதோ அதைக் கொண்டு முடிவு செய்யப்படுகிறது. X விந்து அல்லது Y விந்து.
XX-XY வகை(லைகஸ் வகை )
(i) உ.ம். மனிதன் மற்றும் பழப்பூச்சி
(ii) ஆண்கள் வேறுபட்ட இனச்செல் பண்பினை உடையவர்.
(iii) அவர்கள் இரண்டு விதமான விந்துக்களை சில 'X' குரோமோசோம் கொண்டும் உள்ளன.
(iv) கருவின் பாலானது அது எவ்வகை விந்துவால் கருவுறுதல் அடைகிறது என்பதை பொறுத்தது.
(v) 'X' குரோமோசோம் உடைய விந்துக்கள் பெண் உயிரியையும் 'Y' குரோமோசோம் உடைய விந்துக்கள் ஆண் உயிரியையும் உருவாக்கும்.
23.

(i) பால் நிர்ணயம் செய்யும் ஜீன்கள் பால் குரோமோசோம்களில் அமைந்துள்ளன.
(ii) ஆண் பெண் பால் நிர்ணயம் குரோமோசோம்களின் வேறுபாடுகளில் நடைபெறுகிறது.
(iii) பெண் உயிரிகள் XX குரோமோசோம்களையும் ஆண்கள் XY குரோமோசோம்களையும் ஆண்கள் XY குரோமோசோம்களை உடையவர்.
(iv) பெண்கள் ஒத்த இனச்செல்களை கொண்டு ஒரே வகையான முட்டையை உற்பத்தி செய்கின்றனர்.
(v) ஆண்கள் வேறுபட்ட இனச்செல்களை கொண்டு இரண்டு வகை விந்து செல்களை உற்பத்தி செய்கின்றனர்.
(vi) XY-XX வகை பால் நிர்ணயம் பழம் பூச்சியில் நடைபெறுகிறது.
(vii) கருவுறச் செய்யக்கூடிய விந்து செல்லின் வகையை கருக்களின் பாலினத்தை நிர்ணயம் செய்கின்றன.
(viii) X குரோமோசோமை கொண்ட விந்து செல்லால் கருவுற்றால் அவை பெண் உயிரியாகிறது.
(viii) Y குரோமோசோமை கொண்ட விந்து செல்லால் கருவுற்றால் அவை ஆண் உயிரியாகவும் மாறுகின்றன.
24.
(i) தீவிர மூளை வளர்ச்சி குறைபாடு
(ii) மைய நரம்பு மண்டல வளர்ச்சி பாதிக்கப்படுதல்
(iii) தட்டையான மூக்கு
(iv) செவி குறைபாடு
(v) வாய் எப்போதும் திறந்திருத்தல்
(vi) நாக்கு வெளியே நீட்டியவாறு இருத்தல்
25.
26.
பால் சார்ந்த குரோமோசோமில் அமைந்துள்ள மரபணு சில பண்புகளின் மரபுக்கடத்தலை நிர்ணயிக்கிறது. பால் சார்ந்த குரோமோசோமில் பண்புகள் அமைந்துள்ளதால் அவை ஒன்றாக கடத்தப்படுகின்றன.
சிவப்பு - பச்சை நிறக்குருடு அல்லது டால்டோனிசம் இரத்தக் கசிவு நோய் மற்றும் டச்சென்ஸின் தசை நலிவு நோய் போன்றவை மனிதனில் காணப்படும் X சார்ந்த மரபணுவின் மரபுக் கடத்தலுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.
i) சிவப்பு பச்சை நிறக்குருடு அல்லது டால்டோனிசம்/நிறக்குருடு:
நிறக்குருடு பால்சார்ந்த மரபணு கடத்தல் நோயாகும். இந்நோயுடையவர்களால் பச்சை மற்றும் சிவப்பு நிறங்களை வேறுபடுத்தி அறிய முடிவதில்லை. இவர்கள் பழுப்பு நிற கண்களை உடையவர்கள்.
X குரோமோசோமில் சாதாரண மரபணுக்களும் அதன் ஒடுங்கு அல்லீலும் காணப்படுகின்றன.
ஒத்த தன்மை கொண்ட ஒடுங்கு அல்லீல்களைக் கொண்ட பெண்களில் நோய் வெளிப்படுத்தப்படுகிறது ( XcXc).
நிறக்குருடிற்கான ஒரே ஒரு மரபணுவைக் கொண்ட பெண்கள் (XXc) கடத்திகளாகச் செயல்படுகின்றனர்.
ஆனால் ஆண்களில் ஒரு ஒடுங்கு மரபணு காணப்பட்டாலும் நோய் ஏற்படுகிறது (XCY), ஏனெனில் Y குரோமோசோமில் பார்வைக்கான மரபணு காணப்படுவதில்லை. இக்குறைபாடு பெண்களைவிட ஆண்களில் அதிகமாக காணப்படுகிறது.
பிற பால்சார்ந்த மரபுக்கடத்தலைப் போல இப்பண்பும் குறுக்கு மறுக்கு மரபுக்கடத்தல் முறையில் நடைபெறுகிறது.
இயல்பான பார்வையுடைய பெண் ஒரு நிறக்குருடு ஆணை மணக்கும் போது ஆண்கள் இயல்பான பார்வையுடனும், பெண்கள் கடத்திகளாகவும் பிறக்கின்றனர். பெண்கள் நிறக்குருடிற்கான ஒடுங்கு Xc அல்லீலை தந்தையிடமிருந்து பெறுகின்றனர்.
நிறக்குருடுள்ள பெண் (XcXc) இயல்பான பார்வையுடைய ஆணை மணக்கும் போது நிறக்குருடு ஆண் மற்றும் கடத்திகளான பெண்களும் பிறக்கின்றனர். ஏனெனில் அனைத்து கருமுட்டைகளும் நிறக்குருடு பண்பினை கொண்டுள்ளன. ஆனால் விந்தணுக்கள் பண்பிற்கான அல்லீல்களின்றி காணப்படுகின்றன.
நிறக்குருடு பெண் (XcXc) மற்றும் நிறக்குருடு ஆணிற்கு (XcY) பிறக்கும் குழந்தைகள் நிறக்குருடு ஆண்களாகவும் (XcY) நிறக்குருடு பெண்களாகவும் (XcXc) காணப்படுவர்.
ii) ஹீமோஃபிலியா: (இரத்தக் கசிவு நோய்)
இது ஒரு பால்சார்ந்த நோய் ஆகும். இந்நோயுடையோரது உடலில் இரத்தம் உறைதலுக்கான குளோபுலின் அல்லது VIII காரணி காணப்படுவதில்லை. எனவே சிறு காயங்கள் ஏற்பட்டாலும் இரத்தம் தொடர்ச்சியாக வெளியேறி இறப்புக்கு வழி வகுக்கின்றது.
இந்நோயை குணமாக்க இயலாது ஆனால் நோயாளிக்கு இயல்பான இரத்தத்தை செலுத்துவதன் மூலம் இரத்தம் உறைதலுக்கான பொருட்களை வழங்க முடியும்.
இரத்தக் கசிவு நோய் ஒடுங்கிய X சார்ந்த மரபணுவால் ஏற்படுகிறது Xh பெண்களில் இரு XX குரோமோசோம்கள் காணப்படுவதால் நோயைப் பெற ஒவ்வொரு குரோமோசோமிலும் ஒரு மரபணு தேவைப்படுகின்றது (XhXh). ஆனால், இந்நிலையில் இறப்பு ஏற்படுவதால் அத்தகைய பெண்கள் காணப்படுவதில்லை.
இரத்தக்கசிவிற்கான ஒரே (XXh) மரபணுவைக் கொண்ட பெண்கள் இயல்பாகக் காணப்படுகின்றனர். ஏனெனில் அடுத்த X குரோமோசோமிலுள்ள ஓங்கு காரணியால் இரத்தம் உறைதலுக்கான காரணிகள் உருவாக்கப்படும். இவர்கள் கடத்திகள் எனப்படுவர்.
ஆண்களில் Y குரோமோசோம்களில் இதற்கான மரபணு காணப்படுவதில்லை எனவே ஒரே ஒரு மரபணு காணப்பட்டாலும் நோய் ஏற்படுகிறது. எனவே இரத்தக் கசிவு நோய் ஆண்களில் மட்டுமே காணப்படுகிறது.
ஒத்த நிலையுடைய (XX) இயல்பான பெண்ணும் இரத்தக் கசிவுடைய ஆணும் (XhY) இயல்பான ஆண்களையும் (XY)கடத்திகளான (XhY). பெண்களையும் உருவாக்குகின்றனர் ஒரு கடத்தியான பெண் இயல்பான ஆணை மணம் புரியும் போது கடத்தியான பெண்களும் நிறக்குருடு ஆண்களும் சமமாக பிறக்கின்றனர்.
கடத்தியான பெண், நோயுடைய ஆணை மணக்கும் போது பிறக்கும் ஆண்களில் பாதிப்பேர் இயல்பாகவும் பாதிப்பேர் நோயுடனும் காணப்படுவர். பெண் குழந்தைகளிலும் பாதிப்பேர் நோயுடனும் பாதிப்பேர் கடத்திகளாகவும் காணப்படுவர்.
27.
1. மறுசுழற்சி அதிக பச்சை வீடு வாயுக்கள் வெளிவிடுவதை தவிர்த்து நீர் மாசுபடுதலை குறைத்து ஆற்றலை சேமிக்கிறது.
2. மறுசுழற்சி மூலம் பெறப்பட்ட பொருட்கள் திடக் கழிவுகளின் அளவை குறைக்கும்.
3. பொருட்கள், தயாரிக்கும் பொருள்களை பிரித்தெடுப்பதனால் மற்றும் உருவாக்குவதில் ஏற்படும் மாசுக்களை குறைக்க உதவுகிறது.
28.
(i) பாலினங்களை அடையாளம் காண உதவுகின்றது.
(ii) நீக்கம் இரட்டித்தல் இடம் பெயர்தல் குரோமோசோம்கள் பிரியாநிலை போன்ற குரோமோசோம் பிறழ்ச்சிகளை கண்டறிய பயன்படுகிறது.
(iii) ஒழுங்கற்ற பன்மயம் கண்டறிய பயன்படுகிறது.
(iv) சிற்றினங்களுக்கிடையேயான பரிணாம உறவுகளை கணிக்க உதவுகின்றது.
(v) மனிதனில் காணப்படும் மரபியல் நோய்களை கண்டறியலாம்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards