12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test

1.
கருவுற்ற கருப்பையில் ஒருமடிய, இருமடிய, மும்மடிய அமைப்புகளின் சரியான வரிசை எது?
சினர்ஜிட், கருமுட்டை, முதல்நிலை கருவூண் உட்கரு
சினர்ஜிட், எதிரடிச் செல், துருவ உட்கருக்கள்
எதிரடிச் செல், சினர்ஜிட், முதல்நிலை கருவூண் உட்கரு
சினர்ஜிட், துருவ உட்கருக்கள், கருமுட்டை
2.
குதிரை லாடம் போல வளைந்திருக்கும் சூழ்துளை _________ வகை சூலில் உள்ளது.
சிர்சினோட்ரோபஸ்
ஆம்பிடரோபஸ்
தலைகீழ்
கிடைமட்ட சூல்
3.
மரபணுக்களின் இடையீட்டுச் செயலை அறிமுகப்படுத்தியவர்
W. பேட்சன்
மோர்கன்
E. பேஃயர்
நில்சன்
4.
மெண்டலின் காலத்தில் எந்தச் சோதனையில் F1 சந்ததியின் இரு பெற்றோரின் பண்புகளையும் வெளிப்படுத்தும்?
முழுமைபெறா ஓங்குத்தன்மை
ஓங்கு வழி
ஒரு மரபணுவின் பாரம்பரியம்
இணை ஓங்குத்தன்மை
5.
6.
ஊடு கடத்தும் திசு காணப்படுவது ______.
சூலின் சூல்துளைப் பகுதி
மகரந்தச்சுவர்
சூலகத்தின் சூலகத்தண்டு பகுதி
சூலுறை
7.
ஹாப்லோபாப்பஸ் கிராசிலிஸ் தாவரத்தில் சூல் திசு செல்லிலுள்ள குரோமோசோம் எண்ணிக்கை 4 ஆகும். இதன் முதல்நிலை கருவூண் திசுவிலுள்ள குரோமோசோம் எண்ணிக்கை யாது?
8
12
6
2
8.
மயோசோட்டிஸின் மகரந்தத்துகளின் அளவு ______.
10 மைக்ரோமீட்டர்
20 மைக்ரோமீட்டர்
200 மைக்ரோமீட்டர்
2000 மைக்ரோமீட்டர்
9.
காந்தரோஃபில்லி என்றால் என்ன?
10.
சூல்திசுவின் நடைமுறை பயன்பாடுகளை எழுதுக?
11.
முதிர்ந்த மகரந்தப்பையின் சுவரடுக்குகளின் பெயர்களை எழுதுக?
12.
மரபணு வகையகம் என்றால் என்ன?
13.
மெண்டலியத்தை மறு ஆய்வு செய்து கண்டறிந்த அறிவியல் அறிஞர்களின் பெயர்களை எழுதுக.
14.
தகுந்த எடுத்துக்காட்டுடன் இரண்டு தரைஒட்டிய தண்டின் மாற்றுருக்களைப் பட்டியலிடுக.
15.
'எண்டோதீசியம் மகரந்தப்பை வெடித்தலுடன் தொடர்புடையது' இக்கூற்றை நியாயப்படுத்துக.
16.
உறை குளிர்பாதுகாப்பு என்றால் என்ன?
17.
போலன்கிட் பற்றி சிறுகுறிப்பு வரைக.
18.
முழுமைபெறா ஓங்குத்தன்மை மற்றும் இணை ஓங்குத்தன்மையை வேறுபடுத்துக.
19.
டபீட்டத்தின் பணிகளை பட்டியலிடுக.
20.
பல்கூட்டு பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
21.
ஓங்கு மறைத்தலை எடுத்துக்காட்டுடன் விவரி.
22.
தகுந்த படத்துடன் சூலின் அமைப்பை விவரி.
23.
பூச்சி மகரந்தச்சேர்க்கை மலர்களில் காணப்படும் சிறப்பியல்புகளைக் குறிப்பிடுக.
1.
(b)
சினர்ஜிட், எதிரடிச் செல், துருவ உட்கருக்கள்
2.
(b)
ஆம்பிடரோபஸ்
3.
(a)
W. பேட்சன்
4.
(d)
இணை ஓங்குத்தன்மை
5.
(d)
6.
(c)
சூலகத்தின் சூலகத்தண்டு பகுதி
7.
(c)
6
8.
(c)
200 மைக்ரோமீட்டர்
9.
காந்தரோஃபில்லி:
ஒரு மலரில் உள்ள மகரந்தத்துகள் வேறொரு மலரில் உள்ள சூலக முடியைச் சென்றடையும் நிகழ்வு அயல்-மகரந்தச்சேர்க்கை எனப்படும். இந்த அயல் மகரந்தச்சேர்க்கையில் பூச்சிகளின் மூலம் நடைபெறும் மகரந்தச்சேர்க்கை பூச்சி மகரந்தச்சேர்க்கை என்றும் அழைக்கப்படுகிறது. இதில் தேனீக்கள், அந்துப்பூச்சிகள், பட்டாம்பூச்சிகள், ஈக்கள், குளவிகள், வண்டுகள் போன்றவை மகரந்தச்சேர்க்கைக்கு உதவும் வகையில் சிறந்த தகவமைப்பைப் பெற்றுள்ளன.
வண்டுகள் மூலம் நடைபெறும் அயல் மகரந்தச் சேர்க்கை காந்தரோஃபில்லி எனப்படும். வண்டுகள் வழி நடைபெறும் மகரந்தச் சேர்க்கையுறும் மலர்கள் மகரந்தக் காரணிகளை ஈர்க்க துர்நாற்றத்தைப் பரப்புகின்றன
10.
(i) சூல்திசு வளரும் கருப்பை, கரு ஆகியவற்றால் முழுவதுமாக உறிஞ்சப்படும் அல்லது குறைந்த அளவு சேமிப்பு திசுவாக காணப்படும்.
(ii) விதைகளின் எஞ்சியுள்ள சூல்திசு பெரிஸ்பெர்ம் எனப்படும். எடுத்துக்காட்டு. மிளகு, பீட்ரூட்
11.
முதிர்ந்த மகரந்தப்பையின் சுவர் - புறத்தோல், என்டோதீசியம், இடையடுக்குகள், டபீட்டம் என்ற அடுக்குகளைக் கொண்டுள்ளது.
12.
ஒரு பண்புக்குரிய மரபணுக்கள் மரபணு வகையகம் எனப்படும்
13.
(i) 1900 இல் டி - விரிஸ் கோரன்ஸ் & வான் செர்மாக் இவர்கள் மூவரும், மெண்டலின் ஆய்வுகளை மறு ஆய்வு செய்தனர்.
(ii) மெண்டலின் ஆய்வுகள் 1865 இல் கண்டறியப்பட்டாலும் அது உலகம் 35 ஆண்டுகள் ஆயிற்று.
14.
1. மட்டநிலத்தண்டு (மியூசா பாரடிசியாக்கா)
2. தரையடிக்கிழங்கு (கொலகேஸியா)
3. கிழங்கு (சொலானம் டியூபராசம் )
4. குமிழ்த்தண்டு (அல்லியம் சீப்பா)
5. ஓடு தண்டு (சென்டெல்லா ஏசியாட்டிகா)
6. வேர் விடும் ஓடுதண்டு (மென்தா)
7. நீர் ஓடு தண்டு (ஐக்கார்னியா)
8. தரை கீழ் தண்டு (கிரைசான்திமம்)
9. சிறு குமிழ் மொட்டு (அகேவ்)
15.
16.
17.
18.
| முழுமைபெறா ஓங்குத்தன்மை | இணை ஒடுங்குத்தன்மை | |
| 1. | ஓங்கு அல்லீல்கள் பிறிதொரு ஓங்கு அல்லீலைத் கட்டுப்படுத்தவில்லை - இருவகை அல்லீல்களும் கூட்டாகச் செயல்பட்டு இடைப்பட்ட நிறம் தோன்றியுள்ளது. | ஒரு உயிரியல் மாற்றுப் பண்புடைய இரு அல்லீல்களும் ஒரே சமயத்தில் பண்பை வெளிப்படுத்தும் நிகழ்விற்கு இணை ஓங்குத்தன்மை என்று பெயர். |
| 2. | அல்லீல்கள் கலப்புற்றதாக வெளிப்பட்டது. | அல்லீல்கள் கலப்புற வில்லை. |
| 3. | ஹைபிரிட் - இரு அல்லீல்களுக்கும் இடைப்பட்ட வெளிப்பாட்டை கொண்டிருக்கிறது. | ஒவ்வொரு அல்லீல்களும் தனித்தனியாக வெளிப்படுத்திக் கொண்டன. |
| 4. | புதிய புறத்தோற்றப் பண்பு உருவானது | புதிய புறத்தோற்றப் பண்பு உருவாகவில்லை |
| 5. | எ.கா ஸ்நேப்டிராகன் மலரின் நிறம் (சிவப்பு x வெள்ளை) | மனித இரத்த வகை(ABO) |
19.
1. வளரும் நுண்வித்தகத்திற்கு ஊட்டமளிக்கிறது.
2. உபிஷ் உருவுகள் மூலம், ஸ்போரோபொலினின் உற்பத்திக்கு உதவுவதால், மகரந்தச் சுவர் உருவாக்கத்தில் உதவும்.
3. போலன்கிட்டிற்குத் தேவையான வேதிபொருட்களைத் தந்து, மகரந்தத்துகளின் பரப்புக்கு கடத்தும்.
4. சூலக முடியின் ஒதுக்குதல் வினைக்கான, எக்சைன் புரதங்கள் டபீட்ட செல்களினின்று பெறப்படுகின்றன.
20.
வரையறை:
(i) ஒரு உயிரினத்தின் பல மரபணுக்கள் ஒன்று சேர்ந்து ஒரு பண்பைத் தீர்மானிக்கும் முறைக்கு பல் மரபணு பாரம்பரியம் ஏற்படுகிறது.
(ii) ஒன்றுக்கும் மேற்பட்ட மரபணுக்கள் ஒரு பாரம்பரியத்தை தீர்மானிக்கும் போது பல் மரபணு பாரம்பரியம் ஏற்படுகிறது.
(iii) H - நில்சன் ஹீல் (1909) கோதுமையின் விதையுறைகளில் இவ்வாய்வை நிகழ்த்தி இப்பாரம்பரியத்தை விளக்கினார்.
(iv) சிவப்பு விதையுறை நிறம் (ஓங்கு பண்பு) தாவரத்தை வெள்ளை விதையுறை (ஒடுங்கு பண்பு) தாவரத்துடன் கலப்பு செய்தார்.
(v) அடர் சிவப்பு R1R2R2R2 x வெள்ளை நிறம் r1r1r2r2 இக்கலப்பில்
(vi) 4 - R மரபணுக்கள் மிகுந்த அடர்சிவப்பு நிறம் - 1
(vii) 3 - R மரபணுக்கள் மிதமான அடர் சிவப்பு நிறம் - 1
(viii) 2 - R மரபணுக்கள் சிவப்பு நிறம் - 6
(ix) 1 - R மரபணுக்கள் வெளிர் சிவப்பு நிறம் - 4
(x) R ஓங்கு மரபணு இல்லாமை வெள்ளை நிறம் - 1
(xi) இந்த சிவப்பு நிற செறிவை வரைபடமாக்கினால் ஒரு மணி வடிவ வரைபடம் - கிடைத்தது
(xii) பிற எடுத்துக்காட்டுகள் - மனிதனில் உயரம் & தோல் நிறம்
முடிவுகள்:
நில்சன் ஹீல் ஆய்வு முடிவுகள்:
(i) பிணைதல் இல்லை.
(ii) விதையுறை நிறத்தை மூன்றாவது மரபணுவும் தீர்மானிக்கிறது என்பர் பின்னர் கண்டறியப்படுகிறது.
(iii) மூன்று தனித்த இணை அல்லீல்கள் - இந்த விதையுறை நிறத்தில் பங்கு கொள்கின்றன.
(iv) நிலசன் - ஷீல் F2 சந்ததி விகிதம் 63 : 1
புறத்தோல் விகிதம்
| சிவப்பு | வெள்ளை |
| 63 | 1 |
மரபணு வகையும்
| 1 : 6 : 15 : 20 : 15 : 6 : 1 |
(i) இதன்படி கோதுமை விதையுரையில் கலப்புப் பாரம்பரியம் தென்படவில்லை.
(ii) F2 சந்ததியில் அதிக அளவில் நிற வேறுபாடுகள் காணப்பட்டது.(மரபணுக்களில் தனிதொங்குதல்)
(iii) இதில் பெற்றோர் புறத் தோற்றங்களான அடர் சிவப்பு மற்றும் வெள்ளை நிறம் இல்லாமல் போனது.
(iv) மரபணுக்களில் கலப்பு இல்லை.
(v) பல மரபணு இலைகளின் ஒட்டு மொத்த விளைவால் - பல்வேறு நிறச் சாயல்கள் தோன்றியது.
(vi) நிலசன் - ஷீல் கருதுகோளின் படி இரு அமைவிடங்களும் கூட்டாக இணைந்து கோதுமை விதையுறை நிறத்தைத் தோற்றுவித்தன.
21.
வரையறை:
ஓர் இலக்கிலுள்ள ஒரு மரபணுவின் இரு அல்லீல்களுடன் இடைச்செல்கள் ஏற்பட்டு மரபுப் பண்புகள் வெளிப்படுவது தடுக்கப்படுவதற்கு அல்லது மறைக்கப்படுவதற்கு மறைத்தல் பாரம்பரியம் என்று பெயர். மறைக்கும் மரபணு ஓங்கு தன்மையுடையதாய் இருப்பதால் இது ஓங்கு தன்மை மறைத்தல் பாரம்பரியம் என்று பெயர். ஒடுங்கிய மரபணு ஒடுக்கும் மரபணு எனவும் மற்றது மறைக்கப்பட்ட மரபணு எனவும் வழங்கப்படுகிறது.
எ.கா: பூசணிகளின் நிறம்
W - அல்லீல் - வெள்ளை நிறம் W - அல்லீல் - பச்சை நிறம்
G - அல்லீல் - மஞ்சள் நிறம் g - அல்லீல் - பச்சை நிறம்
F2 - புறத்தோற்ற விகிதம்
22.
1. இரண்டு சூலுறைகளால் சூழப்பட்டுள்ளது.
2. முதிர்ந்த சூலில், ஒரு காம்பும், உடலும் உள்ளது.
3. சூலகக்காம்பு, சூல்களை சூலொட்டுத்திசுவுடன் இணைக்கிறது.
4. சூலகக்காம்பு, சூலின் உடலோடு இணையும் பகுதி சூல் தழும்பு (Hilum) எனப்படும்.
5. சூலகக்காம்பு ஒட்டிய இடத்தில் உருவாகும் விளிம்பு பகுதி சூல்காம்புவடு (raphe) எனப்படும்.
6. சூலின் மையத்தில் உள்ள, பாரன்கைமா திசு சூல் திசு ஆகும்.
7. சூல்திசுவைச் சூழ்ந்து, சூலுறை என்ற பாதுகாப்பு உறை உள்ளது.
8. சூலுறையால் சூழப்படாத, சூல்திசுப்பகுதி சூல்துளை (micropyle) எனப்படும்.
9. சூல்திசு, சூலுறை, சூல் காம்பு இணையும் பகுதி சலாசா எனப்படும்.
10. சூல்திசுவில் உள்ள முட்டை வடிவப் பை போன்ற அமைப்பு கருப்பை.
11. சூலுறையின் உள்ளடுக்கு எண்டோதீலியம், டபீட்டம் எனப்படும்.
12. சலாசாவுக்கும், கருப்பைக்கும் இடையேயுள்ள செல் தொகுப்பு ஹைப்போஸ்டேஸ்.
13. சூல்துளைக்கும், கருப்பைக்கு இடையே எபிஸ்டேஸ் என்ற செல்தொகுப்பு உள்ளது.
23.
1. பெரிதான மலர்கள், சிறிய மலர்கள் நெருக்கமான மஞ்சரியாகும். (எ.டு. ஆஸ்ட்ரேசி)
2. பிரகாசமான வண்ணம் (எ.டு பாய்ன்செட்டியா)
3. மணம், பூந்தேனும் மலரை நாடி வரும் விருந்தாளிகளுக்கு வெகுமதி.
4. ஈக்கள், வண்டுகளால் மகரந்தச் சேர்க்கையுறும் மலர்கள் ஈர்க்க, துர்நாற்றம் பரப்பும்
5. சாறு செல்களைக் கொண்ட மலர்களின் சாற்றை பூச்சிகள் ஓட்டையிட்டு உறிஞ்சும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards