12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 13/09/2019
தாவரவியல் - சூழ்நிலையியல் கோட்பாடுகள்
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
தாவர வளர்ச்சியில் பூஞ்சை வேர்கள் எதை ஊக்குவிக்கின்றன?
தாவர வளர்ச்சி ஒழுங்குபடுத்திகளாக செயல்படுகிறது.
கனிம அயனிகளை மண்ணிலிருந்து உறிஞ்சுகிறது.
இது வளி மண்டல நைட்ரஜன் பயன்படுத்துவதில் துணைபுரிகிறது.
தாவரங்களை நோய் தாக்குதலிலிருந்து பாதுகாக்கின்றது.
2.
பெடாஜெனிஸிஸ் (pedogenesis) என்பது எதனுடன் தொடர்புடையது?
தொல்லுயிரி படிவம்
நீர்
உயிரித்தொகை
மண்
3.
4.
கீழ்கண்ட எந்தத் தாவரத்தில் இதயத்தைப் பாதிக்கும் கிளைக்கோசைடுகளை உற்பத்தி செய்கிறது?
கலோட்ராபிஸ்
அக்கேசியா
நெப்பந்தஸ்
யூட்ரிகுலேரியா
5.
சூழ்நிலையியல் படிநிலைகளின் சரியான வரிசை அமைப்பினைக் கீழ்நிலையிலிருந்து மேல்நிலைக்கு வரிசைப்படுத்தி அமைக்கவும்.
தனி உயிரினம் ➝ உயிரித்தொகை ➝ நிலத்தோற்றம் ➝ சூழல் மண்டலம்
நிலத்தோற்றம் ➝ சூழல் மண்டலம் ➝ உயிர்மம் ➝ உயிர்க்கோளம்
குழுமம் ➝ சூழல் மண்டலம் ➝ நிலத்தோற்றம் ➝ உயிர்மம்
உயிரித்தொகை ➝ உயிரினம் ➝ உயிர்மம் ➝ நிலத்தோற்றம்
6.
7.
சூழ்நிலையியல் சமானங்கள் என்றால் என்ன? ஓர் எடுத்துக்காட்டு தருக.
8.
சூழ்நிலையியல் படிநிலைகள் என்றால் என்ன? பல்வேறு சூழ்நிலையியல் படிநிலைகளை எழுதுக.
9.
விதைப் பந்து என்றால் என்ன?
10.
மிர்மிகோஃபில்லி என்றால் என்ன?
11.
வெப்ப அடுக்கமைவு என்றால் என்ன? அதன் வகைகளைக் குறிப்பிடுக.
12.
விதைபரவுதலின் நன்மைகள் யாவை?
13.
உவர்சதுப்பு நிலத்தாவரங்களில் ஏதேனும் ஐந்து புறத்தோற்றப் பண்புகளை வரிசைப்படுத்துக.
1.
(b)
கனிம அயனிகளை மண்ணிலிருந்து உறிஞ்சுகிறது.
2.
(d)
மண்
3.
(c)
4.
(a)
கலோட்ராபிஸ்
5.
(c)
குழுமம் ➝ சூழல் மண்டலம் ➝ நிலத்தோற்றம் ➝ உயிர்மம்
6.
7.
(i) வகைப்பாட்டியலில் வேறுபட்ட சிற்றினங்கள் வெவ்வேறு புவிப் பரப்புகளில் ஒரே மாதிரியான வாழிடங்கள் பெற்றிருந்தால் அவற்றைச் சூழ்நிலையியல் சமானங்கள் என அழைக்கிறோம்.
(எ.கா): இந்திய மேற்குத்தொடர்ச்சி மலைகளிலுள்ள குறிப்பிட்ட சில தொற்றுத்தாவர ஆர்கிட் சிற்றினங்கள், தென் அமெரிக்காவில் உள்ள தொற்றுத்தாவர ஆர்கிட்களிலிருந்து வேறுபடுகிறது
இருப்பினும் அவை அனைத்தும் தொற்றுத் தாவரங்களே.
8.
(i) சூழலோடு உயிரினங்கள் செயல்படுவதால் ஏற்படும் உயிரினத் தொகுதிகள் சூழ்நிலையியல் படிகள்.
9.
(i) மனித உதவியுடன் விதை பரவுதல் முறையே விதைப்பந்து எனப்படும்.
(ii) களிமண் மற்றும் இலைமட்கு (பசுமாட்டின் சாணம் உட்பட) விதைகளைக் கலந்து உருவாக்கப்படுவது விதைப்பந்துகள்.
(iii) இது ஜப்பானியர்களின் பழமையான நுட்பமாகும்.
(iv) இம்முறையில் தாவரங்களைத் தக்க சூழலில் வளர பொருத்தமான இடங்களுக்கு கொண்டு சேர்க்க வேற்று இடங்களில் தாவரங்களை மீள் உருவாக்கவும் உதவுகிறது.
10.
(i) எறும்புகள் சில நேரங்களில் மா, லிட்சி, ஜாமுன், அக்கேஷியா போன்ற சில தாவரங்களைத் தங்குமிடமாக எடுத்துக் கொள்கின்றன.
(ii) இந்த எறும்புகள் தாவரத்திற்கு தொந்தரவு அளிக்கும் உயிரினங்களிடமிருந்து காக்கும் காப்பாளராகவும் இதற்குப் பதிலாக தாவரங்கள் எறும்புகளுக்கு உணவு மற்றும் தங்குமிடத்தையும் அளிக்கின்றன.
(iii) இது மிர்மிகோஃபில்லி என அழைக்கப்படுகிறது. (எ.கா) அக்கேஷியா மற்றும் அக்கேஷியா எறும்பு.
11.
(i) பொதுவாக வெப்ப அடுக்கமைவு நீர் சார்ந்த வாழ்விடத்தில் காணப்படுகிறது.
(ii) நீரின் ஆழம் அதிகரிக்க அதன் வெப்பநிலை அடுக்குகளில் ஏற்படும் மாற்றமே வெப்பநிலை அடுக்கமைவு என அழைக்கப்படுகிறது.
(iii) மூன்று வகையான வெப்ப அடுக்கமைவுகள் காணப்படுகின்றன.
1. எபிலிம்னியான் - நீரின் வெப்பமான மேல் அடுக்கு
2. மெட்டாலிம்னியான் - நீரின் வெப்பநிலை படிப்படியாகக் குறையும் ஒரு மண்டலம்
3. ஹைப்போலிம்னியான் - குளிர்ந்த நீருள்ள கீழ் அடுக்கு
12.
(i) தாய் தாவரத்தின் அருகில் விதைகள் முளைப்பதைத் தவிர்ப்பதால் விலங்குகளினால் உண்ணப்படுவது அல்லது நோயுறுவது அல்லது சக போட்டிகளைத் தவிர்ப்பது போன்ற செயல்களிலிருந்து தாவரங்கள் தப்பிக்கின்றன.
(ii) விதை பரவுதல் விதை முளைத்தலுக்கு உகந்த இடத்தினைப் பெரும் வாய்ப்பை அளிக்க விதை பரவுதல் உதவுகிறது.
(iii) தன் மகரந்தச்சேர்க்கை நிகழ்த்தும் தாவரங்களில் அவற்றின் மரபணுக்களின் இடம் பெயர்வதற்கு உதவும் முக்கிய செயலாக இது உள்ளது.
(iv) அயல் மகரந்தச் சேர்க்கையில் ஈடுபடும் தாவரங்களில் மரபணு பரிமாற்றத்திற்கு விதை பரவுதல் உதவி செய்கிறது.
(v) மனிதர்களால் மாற்றியமைக்கப்பட்ட சூழல் மண்டலத்திலும் கூட சிற்றினங்களின் பாதுகாப்பிற்கு விதை பரவும் செயல் உதவுகிறது.
(vi) பாலைவனம் முதல் பசுமை மாறக் காடுகள் வரையிலான பல்வேறு சூழல் மண்டலங்களின் செயல்பாடுகளை அறிந்து கொள்ளவும் உயிரி பன்மத்தை தக்க வைத்துப் பாதுகாக்கவும் கனிகள் மற்றும் விதைகள் பரவுதலடைதல் அதிகம் உதவுகிறது.
13.
புறஅமைப்பில் தக அமைவுகள்:
(i) மித வெப்பமண்டலப் பகுதிகளில் காணப்படும் உவர் சதுப்பு நிலத்தாவரங்கள் சிறுசெடிகளாகவும், வெப்ப மண்டலப்பகுதிகளில் காணப்படும் உவர் சதுப்பு நிலத்தாவரங்கள் பெரும்பாலும் புதர் செடிகளாகவும் காணப்படுகின்றன.
(ii) இயல்பான வேர்களுடன் கூடுதலாக முட்டு வேர்கள் (still roots) இவற்றில் தோன்றுகின்றன.
(iii) சிறப்பு வகை வேர்கள் நிமட்டோஃபோர்கள் (pneumatophores) எனப்படுகின்றன. அதில் அமைந்துள்ள நிமத்தோடுகள் (pneumathodes) கொண்டு தாவரம் அதற்குத் தேவையான அளவு காற்றோட்டத்தைப் பெறுகிறது. இவை சுவாசிக்கும் வேர்கள் (breathing roots) எனவும் அழைக்கப்படுகின்றன. (எ.கா) அவிசென்னியா
(iv) தாவர உடலத்தின் தரைமேல் பகுதிகள் தடித்த கியூட்டிக்கிளை பெற்றுள்ளது.
(v) இலைகள் தடித்தவை, முழுமையானவை, சதைப்பற்றுள்ளவை, பளபளப்பானவை. சில சிற்றினங்களில் இலைகள் காணப்படுவதில்லை. (Aphyllous)
(vi) கனிக்குள் விதை முளைத்தல் காணப்படுகிறது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards