12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 20/09/2019
பயன்பாட்டுப் புள்ளியியல்
12ஆம் வகுப்பு Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Business Maths and Statistics Test

1.
புள்ளியியல் தரக் கட்டுப்பாட்டின் பயன்கள் யாவை ?
2.
குறியீட்டு எண்ணின் பயன்பாட்டைக் விவரிக்க.
3.
குறியீட்டு எண் என்பதை வரையறுக்க.
4.
தொழில்துறையில் 1985 மற்றும் 1991 இடைப்பட்ட ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட சிறுதொழில்
நிறுவனங்களின் எண்ணிக்கை பின்வரும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன. போக்குக்கோட்டின் மீது இதன் வளர்ச்சியை வரைபட முறையில் காட்டுக.
| ஆண்டுகள் | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 |
| அலகுகளின் எண்ணிக்கை (in‘000) |
10 | 22 | 36 | 62 | 55 | 40 | 34 | 50 |
5.
நேர்க்கோடு பொருத்துதலில் பயன்படுத்தப்படும் இரு இயல்நிலைச் சமன்பாடுகளை கூறுக.
6.
சுழற்சி மாறுபாடுகள் என்பதை விளக்குக
7.
காலம்சார் தொடர் வரிசையின் பயன்பாட்டை குறிப்பிடுக.
8.
காலம்சார் தொடர் வரிசையைக் கற்பதன் அவசியம் என்ன?
9.
மொத்த செலவுமுறையைப் பயன்படுத்தி பின்வரும் விவரங்களுக்கு வாழ்க்கை குறியீட்டு எண்ணைக் கண்டுபிடி
| பொருள்கள் | நிறைகள் 2010 |
விலை (ரூ) | |
| 2010 | 2015 | ||
| P | 80 | 22 | 25 |
| Q | 30 | 30 | 45 |
| R | 25 | 42 | 50 |
| S | 40 | 25 | 35 |
| T | 50 | 36 | 52 |
10.
பின்வரும் குழு குறியீட்டு எண்கள் மற்றும் சராசரி தொழிலாளர் வர்க்க குடும்பத்தின் பட்ஜெட்டின் குழு நிறைகளுக்கான வாழ்க்கை குறியீட்டு எண்ணை கட்டமைக்கவும்.
| குழுக்கள் | உணவு | எரிபொருள் | ஆடை | வாடகை | இதர |
| குறியீட்டு எண்கள் | 2450 | 1240 | 3250 | 3750 | 4190 |
| எடை | 48 | 20 | 12 | 15 | 10 |
11.
போக்கினை அளவிடுவதற்கான வெவ்வேறு முறைகளை குறிப்பிடுக.
12.
பருவகால மாறுபாட்டின் மீது ஒரு சுருக்கமான குறிப்பு எழுதுக.
13.
பின்வரும் விவரங்களுக்கு, ஃபிஷர் விலைக் குறியீட்டு எண்ணைக் கட்டமைக்கவும் மேலும் அது காலமாற்றுச் சோதனை, காரணி மாற்றுச் சோதனை ஆகியவற்றைப் பூர்த்தி செய்யும் என நிரூபிக்கவும்.
| ஆண்டு | பொருள் : A | பொருள் : B | பொருள் : C | |||
| விலை (ரூ) | அளவு (கி.கி) | விலை (ரூ) | அளவு (கி.கி) | விலை (ரூ) | அளவு (கி.கி) | |
| 1996 | 5 | 10 | 8 | 6 | 6 | 3 |
| 1999 | 4 | 12 | 7 | 7 | 5 | 4 |
14.
2005ஆம் ஆண்டிற்கு
(i) லாஸ்பியரின் முறை
(ii) பாசியின் முறை மூலம் விலைக் குறியீட்டு எண்களைக் கணக்கிடுக.
| பொருள்கள் | 1995 | 2005 | ||
| விலை | அளவு | விலை | அளவு | |
| A | 5 | 60 | 15 | 70 |
| B | 4 | 20 | 8 | 35 |
| C | 3 | 15 | 6 | 20 |
15.
ஒரு பொருளின் ஆண்டு உற்பத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ளது
| ஆண்டுகள் | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 |
| உற்பத்தி (‘000) |
155 | 162 | 171 | 182 | 158 | 180 | 178 |
மீச்சிறு வர்க்க முறையில் நேர்க்கோட்டுப் போக்கினை பொருத்துக.
1.
ஆட்டோமொபைல், ஜவுளி, மின் உபகரணங்கள், பிஸ்கட், குளியல் சோப்புகள், இரசாயனங்கள், பெட்ரோலியப் பொருட்கள் போன்ற அனைத்து உற்பத்தி தொழிற்சாலைகளிலும் தரக்கட்டுப்பாட்டை நிர்ணயிக்க உதவுகிறது. புள்ளியியல் தரக்கட்டுப்பாட்டின் நோக்கம் குறிப்பிட்ட காரணங்களை நீக்குவது மற்றும் உற்பத்தி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கான புள்ளியியல் உத்திகளை வழங்குவதாகும்.
2.
(i) முடிவுகள் மற்றும் நிர்வாகக் கொள்கைகளை அமைப்பதற்கு இது ஒரு முக்கியமான கருவியாகும்.
(ii) இது போக்குகள் மற்றும் போக்கு அளவைகளை அறிய உதவுகிறது.
(iii) இது ஒரு பொருளாதாரத்தின் வீக்கம் மற்றும் பணவாட்டத்தைத் தீர்மானிக்கிறது.
3.
“ஒரு குறியீட்டு எண் என்பது துல்லியமான அளவுகளில் அளக்க முடியாத அல்லது வழக்கத்தில் நேரடி மதிப்பீடு செய்ய முடியாத எண் அளவிலான மாறுபாடுகளில் உள்ள வேறுபாடுகளை காண்பிக்கக்கூடிய ஒரு கருவியாகும்”.
4.
5.
இரு இயல்நிலை சமன்பாடு
ΣY = n a + b ΣX
ΣXY = a ΣX + b ΣX2
6.
சுழற்சி மாறுபாடுகள் சீரான காலம்சார் ஒழுங்கிற்கு அமையத் தேவையில்லை. அதாவது சுழற்சி மாறுபாடு சமமான இடைவெளிகளுக்குப் பின்னர் அல்லது இதே போன்ற சரியான வடிவங்களை பின்பற்றாமல் இருக்கலாம். பொதுவாக ஒரு சுழற்சிகாலம் என்பது 7 முதல் 9 ஆண்டுகள் வரையிலானது. சுழற்சிக்கான காலப் பகுதியை ஆண்டுகளின் நிலைப்பாட்டில் கட்டாயப்படுத்த முடியாது. எடுத்துக்காட்டாக, அரசு நிதிக்கொள்கைகளின் மாற்றங்கள், வட்டி விகிதங்களில் மாற்றங்கள் ஆகியவற்றிற்கான ஒவ்வொரு வர்த்தக சுழற்சியும் துவக்கம் – அபிவிருத்தி - வீழ்ச்சி – மீட்சி – பராமரிப்பு போன்றவைகளை பெற்றிருக்கும்.
7.
1. எதிர்கால மதிப்பீடுகளை மதிப்பிடுவதற்கும் மற்றும் அவற்றைக் கணிக்கவும் உதவுகிறது.
2. ஒரு குறிப்பிட்ட கால வரைவுகளை மற்ற கால வரைவுகளுடன் ஒப்பிட்டு ஆய்வுகள் செய்ய உதவுகிறது.
3. வணிகத்துறை, பொருளாதாரம், தொழிற்சாலை ஆகிய துறைகளின் காலம் தொடர்புடைய புள்ளி விவரங்களைப் படிப்பதற்கும் மற்றும் பகுப்பாய்வு செய்வதற்கும் நமக்கு உதவுகிறது.
8.
1. கடந்த கால நடவடிக்கைகளை பகுப்பாய்வு செய்வதற்கு.
2. எதிர்கால அம்சங்களை கணிப்பதற்கும் மற்றும் திட்டமிடுவதற்கும் உதவுகிறது.
3. நிகழ்கால செயல்பாடுகளை மதிப்பீடு செய்வதற்கு.
4. காலம்சார் தொடரானது ஒரு குறிப்பிட்ட கால வரைவுகளை மற்ற கால வரைவுகளுடன் ஒப்பிட்டு ஆய்வுகள் செய்ய உதவுகிறது.
9.
| பொருள்கள் | நிறைகள் 2010 |
விலை (ரூ) | p1q0 | p0q0 | |
| 2010 | 2015 | ||||
| P | 80 | 22 | 25 | 2000 | 1760 |
| Q | 30 | 30 | 45 | 1350 | 900 |
| R | 25 | 42 | 50 | 1250 | 1050 |
| S | 40 | 25 | 35 | 1400 | 1000 |
| T | 50 | 36 | 52 | 2600 | 1800 |
| மொத்தம் | 8600 | 6510 | |||
வாழ்க்கை குறியீட்டு எண் \(=\frac{\sum p_1 q_0}{\sum p_0 q_0} \times 100=\frac{8600}{6510} \times 100=132.1\)
10.
| குழுக்கள் | உணவு | எரிபொருள் | ஆடை | வாடகை | இதர | மொத்தம் |
| குறியீட்டு எண்கள் | 2450 | 1240 | 3250 | 3750 | 4190 | |
| எடை | 48 | 20 | 12 | 15 | 10 | 105 |
| PV | 117600 | 24800 | 39000 | 56250 | 4190 | 279550 |
வாழ்க்கை குறியீட்டு எண் \(=\frac{\sum P V}{\sum V}=\frac{279550}{105}=2662.38\)
11.
கீழ்க்காணும் முறைகளின் மூலம் நாம் போக்கு மதிப்பை அளவிட முடியும்.
(i) வரைபட முறை (Freehand or Graphic Method).
(ii) பகுதி சராசரி முறை (Method of Semi Averages).
(iii) நகரும் சராசரி முறை (Method of Moving Averages).
(iv) மீச்சிறு வர்க்க முறை (Method of Least Squares).
12.
பருவகால வேறுபாடு என்பது ஒவ்வொரு பருவத்திலும் குறிப்பிட்ட கால முறையில் மீண்டும் மீண்டும் உருவாகிறது. இந்த வேறுபாடுகள் ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்திற்குள் மீண்டும் மீண்டும் ஏற்படுகின்றன. இது குறிப்பிட்ட கால இடைவெளியில் அளவிடப்படுகிறது. பருவ கால வேறுபாடுகள் இயற்கை சக்திகள், சமூகப் பழக்கங்கள் மற்றும் மரபுகள் ஆகியவற்றால் பாதிக்கப்படலாம். இந்த மாறுபாடுகள் அதன் காரணிகளின் முடிவுகளாகும். இது சீராக மற்றும் வழக்கமாக அதிகரித்தும், வீழ்ச்சியுற்றும் காணப்படும். எடுத்துக்காட்டாக, மழைக் காலங்களில் குடைகள் மற்றும் மழைக்குப் பயன்படுத்தப்படும் உடைகள் (Raincoat) விற்பனை, கோடைப் பருவத்தில் குளிர்பானங்களின் விற்பனை, தீபாவளிப் பண்டிகை நாள்களில் பட்டாசு விற்பனை, பண்டிகை காலங்களில் ஆடைகள் வாங்குதல், பொங்கல் திருநாள்களில் கரும்பு விற்பனை.
13.
ஃபிஷர் விலைக் குறியீட்டு எண்
\(P_{01}^F =\sqrt{\frac{\sum p_1 q_0}{\sum p_0 q_0} \times \frac{\sum p_1 q_1}{\sum p_0 q_1}} \times 100 \)
\( =\sqrt{\frac{97}{116} \times \frac{117}{140}} \times 100 \)
\( =\sqrt{0.8362 \times 0.8357} \times 100=83.6\)
14.
| பொருள்கள் | 1995 | 2005 | ||
| விலை | அளவு | விலை | அளவு | |
| A | 5 | 60 | 15 | 70 |
| B | 4 | 20 | 8 | 35 |
| C | 3 | 15 | 6 | 20 |
| p0q0 | p0q1 | p1q0 | p1q1 |
| 300 | 350 | 900 | 1050 |
| 80 | 140 | 160 | 280 |
| 45 | 60 | 90 | 120 |
| 425 | 550 | 1150 | 1450 |
லாஸ்பியரின் விலைக் குறியீட்டு எண்
\(P^{L}_{01}\) = \({\frac {\sum p_{1}q_{0}}{\sum p_{0}q_{0}}} \times 100\) = \(\frac {1150}{425} \times {100}\) = 270.6
பாசியின் விலை குறியீட்டு எண்
\(P^{L}_{01}\) = \({\frac {\sum p_{1}q_{0}}{\sum p_{0}q_{1}}} \times 100\) = \(\frac {1450}{550} \times {100}\) = 263.63
15.
| ஆண்டுகள்(x) | உற்பத்தி (y) |
X = x-1998 | X2 | XY |
| 1995 | 155 | -3 | 9 | -465 |
| 1996 | 162 | -2 | 4 | -324 |
| 1997 | 171 | -1 | 1 | -171 |
| 1998 | 182 | 0 | 0 | 0 |
| 1999 | 158 | 1 | 1 | 158 |
| 2000 | 180 | 2 | 4 | 360 |
| 2001 | 178 | 3 | 9 | 534 |
| 1186 | 0 | 28 | 92 |
\(\sum\)X = 0, a = \(\frac {\sum Y}{n}\) = \(\frac {1186}{7}\) = 169.428.
b = \(\frac {\sum XY}{\sum X^2}\) \(\frac {92}{28}\) = 3.285
∴ தேவையான நேர்க்கோட்டுப் போக்கின் சமன்பாடு Y = a + bX
\(\Rightarrow \) Y= 169.428 + 3.285 (x - 1998)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards