12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 20/01/2020
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
நீண்ட காலத்திற்கு காப்பர் சல்பேட்டை இரும்புக் கலனில் சேமித்து வைக்க இயலுமா? கொடுக்கப்பட்டது: (\(E^{0}_{Cu^{2+}|Cu}=0.34 V\) மற்றும் \(E^{0}_{Fe^{2+}|Fe}= -0.44V\))
2.
pH வரையறு.
3.
ஆர்ஹீனியஸ் சமன்பாட்டினை எழுதி அதில் இடம் பெற்றுள்ளவற்றை விளக்குக.
4.
Fcc அலகுகூட்டில் காணப்படும் அணுக்களின் எண்ணிக்கையினைக் கணக்கிடுக.
5.
ஆர்கானின் பயன்களைத் தருக.
6.
p-தொகுதி தனிமங்களின் உலோகப் பண்பினை பற்றி குறிப்பு வரைக.
7.
துத்தநாகத்தின் பயன்களைக் கூறுக.
8.
A,B மற்றும் C ஐ கண்டறிக \(CH_3-NO_2\overset{LiAlH_4}\longrightarrow A\overset{2CH_3CH_2Br}\longrightarrow B \overset{H_2SO_4}\longrightarrow C\)
9.
பேரியம் படிகத்தை 2.29A0 அலைநீளம் கொண்ட X-கதிர் மூலம் விளிம்பு விளைவிற்கு உட்படுத்தும் போது முதல்படி எதிரொளிப்பு 27081 ல் நடைபெறுகிறது. படிகத்தின் தளங்களுக்கு இடைப்பட்ட தொலைவு யாது?
10.
அயனிப் படிகங்கள் பற்றி எழுதுக.
11.
லாந்தனைடுகளில் ஆக்சிஜனேற்ற நிலை பற்றி எழுதுக
12.
ஒரு முதல் வகை வினை 48 நிமிடங்களில் 75% நிறைவடைந்தால், அவ்வினையின் அரை வாழ் காலம் என்ன?
13.
ஒரு முதல் வகை வினையின் வினைவேக மாறிலி 2.3x10-4 s-1. வினைபடு பொருட்களின் ஆரம்பச் செறிவு 0.1 m எனில் 1 மணி நேரத்திற்குப் பின்னர் எஞ்சியிருக்கும் வினைபடு பொருளின் செறிவு யாது?
14.
போரிக் அமிலத்தின் மீது வெப்பத்தின் விளைவு யாது?
15.
காற்றில்லாச் சூழலில் வறுத்தல் என்றால் என்ன?
16.
Cr2+ ஆனது வலிமையான ஆக்சிஜனொடுக்கி ஆனால் Mn3+ ஆனது வலிமையான ஆக்சிஜனேற்றி விளக்குக.
17.
கந்தக அமிலம் ஒரு நீர் நீக்கும் காரணி - என்பதனைத் தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
18.
19.
ஓரிணைய, ஈரிணைய, மூவிணைய அமீன்களை எவ்வாறு வேறுபடுத்தி அறிவாய்?
20.
எண்முகி படிக புலத்தில், d – ஆர்பிட்டாலின் படிக புலப் பிளப்பினை குறிப்பிடும் வரைபடம் வரைக
1.
\(\begin{aligned}
\left(\mathrm{E}_{\mathrm{ox}}^0\right)_{\mathrm{FFe}^{2+}}=+0.44 \mathrm{~V}
\end{aligned}\)
\(\begin{aligned}
\left(\mathrm{E}_{\mathrm{red}}^0\right)_{\mathrm{Cu}^{2+} |\mathrm{Cu}}=+0.34 \mathrm{~V}
\end{aligned}\)
இந்த +Ve emf மதிப்புகள் இரும்பு ஆக்ஸிஜனேற்றமடைகிறது எனவும் காப்பர் ஒடுக்கமடைகிறது எனவும் தெரிவிக்கின்றன. (எனவே) இரும்புக் கலனில் காப்பர் சல்பேட்டை சேமித்து வைக்க இயலாது.
2.
pH = - log10[H3O +]
ஒரு கரைசலின் pH என்பது அக்கரைசலில் உள்ள ஹைட்ரோனியம் அயனிகளின் மோலார் செறிவின், 10ஐ அடிப்படையாக கொண்ட எதிர்குறி மடக்கை மதிப்புகள் என வரையறுக்கப்படுகிறது.
3.
K = \(A{ e }^{ \frac { -Ea }{ RT } }\)
K = வினைவேக மாறிலி
A = அதிர்வெண் காரணி
Ea = கிளர்வு ஆற்றல்
R = வாயு மாறிலி
T = தனி வெப்பநிலை Kல்
4.
Fcc அலகுகூட்டில் காணப்படும் அணுக்களின் எண்ணிக்கை = \(\frac { { Nc } }{ 8 } +\frac { Nf }{ 2 } \)
= \(\frac { 8 }{ 8 } +\frac { 6 }{ 2 } \)
= 1+ 3
= 4
5.
சூடான மின்னிழைகளில் ஆக்சிஜனேற்றம் ஏற்படுவதை ஆர்கான் தடுக்கிறது. இதனால் பல்புகளில் காணப்படும் மின்னிழைகளில் ஆயுள் நீடிக்கப்படுகிறது.
6.
உலோகப் பண்பு, ஒரு தொகுதியில் மேலிருந்து கீழாக செல்லும்போது அயனியாக்கும் ஆற்றல் மதிப்பு குறைகிறது. இதனால் உலோகப்பண்பு அதிகரிக்கிறது.
7.
1. எஃகு மற்றும் இரும்பு அமைப்புகள் அரிமானம் மற்றும் துருப்பிடிக்காமல் பாதுகாக்கும் துத்தநாகப்பூச்சில் (கால்வனைசேஷன்) பயன்படுகிறது.
2. மோட்டார் வாகன அச்சு வார்ப்பு, மின்சாதனப் பொருட்களில் பயன்படுகிறது.
3. துத்தநாகத்தின் உலோகக் கலவையான பித்தளை (brass) அரிமானம் அடையாத தன்மையை பெற்றிருப்பதால் குழாய் வால்வுகள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் தயாரிக்க பயன்படுகிறது.
8.
9.
n = 1 λ = 2.29A0 θ = 27081, d = ?
2d sinθ = nλ
\(d=\frac { n\lambda }{ 2sin\theta } \)
\(=\frac { 1\times 2.29 }{ 2sin{ 27 }^{ 0 }{ 8 }^{ 1 } } \)
\(=\frac { 1\times 2.29 }{ 2\times 0.456 } \)
\(d=2.51{ A }^{ 0 }\)
10.
1. அடிப்படை அமைப்பு அலகுகளாக நேர் அயனிகள் மற்றும் எதிர் அயனிகள் காணப்படும் படிகங்கள் அயனிப் படிகங்கள் எனப்படும்.
2. இவ்விரு அயனிகளும் வலிமையான நிலைமின்னியல் கவர்ச்சி விசையால் ஒன்றொடொன்று இறுக்கமாக பிணைக்கப்பட்டுள்ளன.
3. இந்த நிலை மின்னியல் கவர்ச்சி விசை பெருமமாக அமையும் வகையில் நேர் அயனியைச் சுற்றி அதிகபட்சமாக எத்தனை எதிர் அயனிகள் இருக்க வாய்ப்புள்ளதோ அத்தனை எதிர் அயனிகள் காணப்படுகின்றன.
4. அயனிப் படிகங்கள் வரையறுக்கப்பட்ட படிக அமைப்பினைப் பெற்றுள்ளன.
5. பெரும்பாலான அயனிப் படிகங்கள் கனசதுர நெருங்கிப் பொதிந்த அமைப்பினைப் பெற்றுள்ளன.
6. எ.கா. சோடியம் குளோரைடு படிகம்
11.
(i) பொதுவான ஆக்சிஜனேற்ற நிலை +3
(ii) சில லாந்தனைடுகள் +2 மற்றும் +4 ஆகிய ஆக்சிஜனேற்ற நிலைகளையும் கொண்டுள்ளன
12.
t = 48நிமிடங்கள்;
[Ao] = 100%; [A] = 100-75 = 25%
k = ?; t1/2 = ?
\(k=\frac { 2.303 }{ t } log\frac { [{ A }_{ o }] }{ [A] } \)
\(=\frac { 2.303 }{ 48 } log\frac { 100 }{ 25 } \)
\(=\frac { 2.303 }{ 48 } \times 0.6021\)
\(\\ k=0.0288\)நிமி-1
\({ t }_{ 1/2 }=\frac { 0.6932 }{ K } \)
\(=\frac { 0.6932 }{ 0.0288 } \)
\({ t }_{ 1/2 }=24.06\)48 நிமிடங்கள்
13.
K = 2.3 x 10-4s-1; [A] = 0.01M; [A] = ?
t = 1 மணி = 60 x 60 = 3600 விநாடிகள்
\(K=\frac { 2.303 }{ t } log\frac { \left[ { A }_{ o } \right] }{ [A] } \)
\(2.3\times { 10 }^{ -4 }=\frac { 2.303 }{ 3600 } log\frac { 0.01 }{ [A] } \)
\(log\frac { 0.01 }{ [A] } =\frac { 2.3\times { 10 }^{ -4 }\times 3600 }{ 2.303 } \)
\(log\frac { 0.01 }{ [A] } =0.3595\)
\(\frac { 0.01 }{ [A] } =0.3595\)
\(\frac { 0.01 }{ [A] } =2.288\) ன் எதிர்மடக்கை
\([A]=\frac { 0.01 }{ 2.288 } \)
\(\\ [A]=0.00437M\)
14.
| வெப்பநிலை | உருவாகும் சேர்மங்கள் |
| 373 K | மெட்டா போரிக் அமிலம் |
| 413 K | மெட்டா போரிக் அமிலம் |
| சென்சூட்டு வெப்பநிலை | போரிக் அமில நீரிலி (போராக்ஸ் மணிகள்) |
H3BO3 \(\underrightarrow { 373K } \) HBO2 + H2O
15.
1. அடர்ப்பிக்கப்பட்ட தாது, காற்றில்லாச் சூழலில் வன்மையாக வெப்பப்படுத்தப்படுகிறது.
2. இந்நிகழ்வில் நீரேற்றம் பெற்ற ஹைட்ராக்சைடுகளில் காணப்படும் படிக நீரானது ஆவியாக வெளியேறுகிறது.
3. கரிமச் சேர்மங்கள் ஏதேனும் இருப்பின் அவைகளும் வெளியேறி, தாது நுண் துளைகளுடன் காணப்படுகிறது.
4. இம்முறையில் தாதுக்களை கட்டுப்படுத்தப்பட்ட அளவு காற்றினை செலுத்தியும் வறுக்கலாம்.
5. இம்முறையில் கார்பனேட் தாதுக்களை வறுக்கும்போது கார்பன் டை ஆக்சைடு வெளியேறுகிறது.
PbCO3 \(\underrightarrow { ∆ }\) PbO + CO2 ↑
CaCO3 \(\underrightarrow { ∆ }\) CaO + CO2 ↑
6. படிக நீரைக் கொண்ட தாதுக்களிலிருந்து நீரானது, நீராவியாக வெளியேறுகிறது.
Al2O3.2H2O \(\underrightarrow { ∆ }\) Al2O3(S)+2H2O(g) ↑
16.
Mn3+ னின் திட்ட மின்முனை மின்னழுத்த மதிப்பானது(E°) -1.18V அதிக எதிர்குறி மதிப்பை பெற்றுள்ளது. Cr2+ விற்கு -0.91 V மதிப்பை மட்டும் கொண்டுள்ளது. ஒரு உலோகத்தின் திட்ட மின்முனை மின்னழுத்த மதிப்பானது அதிக எதிர்குறி மதிப்பைப் பெற்றிருப்பதால் அந்த உலோகமானது ஒரு வலிமையான ஒடுக்கும் காரணியாகும். ஏனெனில் இவைகள் எலக்ட்ரான்களை எளிதில் இழக்கின்றன. இதனால் Cr2+ ஆனது வலிமையான ஆக்ஸிஜன் ஒடுக்கியாகவும், ஆனால் Mn3+ ஆனது வலிமையான ஆக்ஸிஜனேற்றியாகவும் விளங்குகிறது.
17.
C12H22O11 + H2SO4 ⟶ 12C + H2SO4.11H2O
HCOOH + H2SO4 ⟶ CO + H2SO4.H2O
(COOH)2 + H2SO4 ⟶ CO + CO2 + H2CO3H2O
18.
19.
| வ.எண் | வினைபொருள் | 1o அமீன் | 2o அமீன் | 3o அமீன் |
| 1 | கார்பைலமீன் வினை CHCI /KOH | கார்பைல் அமீன் உருவாகிறது | கார்பைல் அமீன் உருவாவதில்லை | கார்பைல் அமீன் உருவாவதில்லை |
| 2 | நைட்ரஸ் அமிலம் | ஆல்கஹால் உருவாகிறது | N, N டை அல்கைல் அசிட்டமைடு | வினை இல்லை |
| 3 | அசிட்டைல் குளோரைடு | N அல்கைல் அசிட்டமைடு | N, N அல்கைல் அசிட்டமைடு | வினை இல்லை |
| 4 | ஆல்கைல் ஹாலைடு | மூன்று மூலக்கூறு ஆல்கைல் ஹாலைடு ஏற்று நான்கினைய உப்பு உருவாகிறது. | இரண்டு மூலக்கூறு ஆல்கைல் ஹாலைடு ஏற்று நான்கினைய உப்பு உருவாகிறது. | ஒரு மூலக்கூறு டை ஆல்கைல் ஹாலைடு ஏற்று நான்கினைய உப்பு உருவாகிறது. |
| 5 | கடுகு எண்ணெய் (CS 2+H g CI 2) | ஆல்கைல் ஐசோ தையோ சயனேட் உருவாகிறது | வினை இல்லை | வினை இல்லை |
| 6 | டை எத்தில் ஆக்சலேட் |
திட டை ஆல்கைல் ஆக்ஸமைடு |
நீர்ம N, N டை ஆக்ஸ்மிக் ஆல்கைல் எஸ்டர் உருவாகிறது | டை ஆல்கஹால் ஆக்கசமிக் எஸ்டர் உருவாகிறது . |
20.

12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards