12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 03/01/2020
உலோகவியல்
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
பின்வருவனவற்றுள் எது புலத் தூய்மையாக்கல் மூலம் தூய்மையாக்கப்படவில்லை?
சிலிக்கன்
காலியம்
சிர்கோனியம்
ஜெர்மானியம்
2.
ஒளிரும் பெயிண்ட், ஒளிரும் விளக்குகள் மற்றும் X கதிர் திரை ஆகியன தயாரிப்பில் பயன்படுவது ____________
பித்தளை
துத்தநாக சல்பைடு
வார்ப்பிரும்பு
தங்க நானோ துகள்கள்
3.
எலிங்கம் வரைபடத்தில் பெரும்பாலான உலோக ஆக்சைடுகள் உருவாகும் வினைகளின் சாய்வு _________ மதிப்புடையது.
நேர்க்குறி
எதிர்க்குறி
பூஜ்யம்
ஒன்று
4.
வெப்ப இயக்கவியல் கொள்கைகளின் படி உலோக ஆக்சைடை கொடுக்கப்பட்ட ஒரு ஒடுக்கம் காரணியுடன் சேர்த்து ஒடுக்க வேண்டுமெனில், இணைக்கப்பட்ட வினைகளின் கட்டிலா ஆற்றல் மாற்றம் _________ மதிப்பினை பெற்றிருக்க வேண்டும்.
நேரக்குறி
எதிர்க்குறி
ஒன்று
பூஜ்யம்
5.
தங்கத்தின் தாதுவை அடர்ப்பிக்கும் முறை ________.
சயனைடு வேதிக் கழுவுதல்
அம்மோனியா வேதிக் கழுவுதல்
கார வேதிக் கழுவுதல்
அமில வேதிக் கழுவுதல்
6.
நுரை மிதப்பு முறையில் சோடியம் சயனைடு _________ ஆக பயன்படுகிறது.
சேகரிப்பான்
குறைக்கும் காரணி
நுரை உருவாக்கும் காரணி
இளக்கி
7.
எது சில்வரின் தாது?
அசுரைட்
ப்ரௌசிடைட்
செருசைட்
லிமோனைட்
8.
பின்வருவனவற்றுள் எது ஆக்சைடு வகை தாது.
ஸ்பேலிரைட்
காலமைன்
காசிட்டரைட்
ஸ்டீபினைட்
9.
பின்வருவனவற்றுள் எவ்வினை வெப்பஇயக்கவியலின்படி சாதகமான வினையல்ல.
Cr2O3 + 2Al \(\rightarrow \) Al2O3 + 2Cr
Al2O3 + 2Cr \(\rightarrow \) Cr2O3 + 2Al
3TiO2 + 4Al \(\rightarrow \) 2Al2O3 + 3Ti
இவை எதுவுமல்ல
10.
சிர்கோனியத்தினை (Zr) தூய்மையாக்கலின் பின்வரும் வினைகள் பயன்படுகின்றன. இம்முறை பின்வருமாறு அழைக்கப்படுகிறது.
Zr (impure) + 2I2 \(\overset { 523K }{ \longrightarrow } \) ZrI4
ZrI4 \(\overset { 1800K }{ \longrightarrow } \) Zr (pure) + 2I2
உருக்கிப் பிரித்தல்
வான்ஆர்கல் முறை
புலத்தூய்மையாக்கல்
மான்ட் முறை
11.
ZnO விலிருந்து துத்தநாகம் (Zinc) பெறப்படும் முறை _______.
கார்பன் ஒடுக்கம்
வெள்ளியைக் கொண்டு ஒடுக்குதல் (Ag)
மின்வேதி செயல்முறை
அமிலக் கழுவுதல்
12.
பின்வருவனவற்றுள் நிகழ வாய்ப்பில்லாத வினை எது?
Zn(s) + Cu2+(aq) \(\rightarrow \) Cu(s) + Zn2+(aq)
Cu(s) + Zn2+(aq) \(\rightarrow \) Zn(s) + Cu2+(aq)
Cu(s) + 2Ag+(aq) \(\rightarrow \) 2Ag(s) + Cu2+(aq)
Fe(s) + Cu2+(aq) \(\rightarrow \) Cu(s) + Fe2+(aq)
13.
ஒடுக்க வினைக்கு உட்படுத்தும் முன்னர், சல்பைடு தாதுக்களை வறுத்தலில் ஏற்படும் நன்மையினைப் பொருத்து பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?
CS2 மற்றும் H2S ஆகியவற்றைக் காட்டிலும் சல்பைடின் \(\Delta \)Gf0 மதிப்பு அதிகம்
சல்பைடை வறுத்து ஆக்ஸைடாக மாற்றும் வினைக்கு \(\Delta \)Gr0 மதிப்பு எதிர்க்குறியுடையது.
சல்பைடை அதன் ஆக்ஸைடாக வறுத்தல் என்பது ஒரு சாதகமான வெப்ப இயக்கவியல் செயல்முறையாகும்.
உலோக சல்பைடுகளுக்கு, கார்பன் மற்றும் ஹைட்ரஜன் ஆகியன தகுந்த பொருத்தமான ஒடுக்கும் காரணிகளாகும்.
14.
ஒரு சல்பைடு தாதுவை வறுக்கும் போது (A) என்ற நிறமற்ற வாயு வெளியேறுகிறது. (A)ன் நீர்க்கரைசல் அமிலத்தன்மை உடையது. வாயு (A) ஆனது ______.
CO2
SO3
SO2
H2S
15.
தாமிரத்தின் பயன்களை எழுது.
16.
உலோகத்தைப் பயன்படுத்தி ஒடுக்குதல் மூலம் ஒரு உலோகம் பிரித்தெடுத்தல் பற்றி எழுது.
17.
அடர்ப்பிக்கப்பட்ட தாதுவிலிருந்து, பண்படா உலோகத்தினை பிரித்தெடுத்தலில் உள்ள படிநிலைகள் யாவை?
18.
தாது என்றால் என்ன?
19.
பின்வருவனவற்றை தகுந்த உதாரணங்களுடன் விளக்குக.
(அ) மாசு
(ஆ) கசடு
20.
துத்தநாகத்தின் பயன்களைக் கூறுக.
21.
இரும்பை அதன் தாதுவான Fe2O3 யிலிருந்து பிரித்தெடுப்பதில் சுட்ட சுண்ணாம்புவின் பயன்பாடு யாது?
22.
துத்தநாகத்தின் பயன்பாடுகள் யாவை?
23.
எலிங்கம் வரைபடம் பற்றி எழுது.
24.
கார வேதிக் கழுவுதல் பற்றி எழுது.
25.
26.
உலோகவியலின் இயக்கவியல் தத்துவங்களை விளக்கு.
27.
மின்னாற் தூய்மையாக்கலின் தத்துவத்தினை ஒரு உதாரணத்துடன் விளக்குக.
28.
தாதுக்களிலிருந்து கனிமக் கழிவுகளை நீக்குதல் _________ எனப்படும்.
29.
எளிதில் அரிமானம் அடையாத, வேதி உலைகளில் பயன்படும் உலோகம் _________
30.
அ. கயோலினைட், அலுமினியம்
ஆ. ஸ்டீபினைட், சில்வர்
இ. கலீனா, லெட்
ஈ. ப்ரௌசிடைட், டின்
31.
கூற்று (A): Cr2O3 ஆனது அலுமினோ வெப்ப ஒடுக்க முறை மூலம் குரோமியாக ஒடுக்கப்படுகிறது.
காரணம் (R): இம்முறையில் அலுமினியம் ஒடுக்கியாக செயல்படுகிறது.
i. A மற்றும் R சரி, R ஆனது A யினை விளக்குகிறது.
ii. A சரி, ஆனால் R தவறு
iii. A தவறு, ஆனால் R சரி
iv. A மற்றும் R சரி ஆனால் R ஆனது A யினை விளக்கவில்லை.
32.
கூற்று (A): வணிக ரீதியாக அலுமினியத்தை சைனாக்களியிலிருந்து இலாபகரமாக பிரித்தெடுக்க இயலும்
காரணம் (R): சைனாக்களில் அலுமினியத்தின் கனிமமாகும்.
i. A மற்றும் R சரி, R ஆனது A யினை விளக்குகிறது.
ii. A சரி, ஆனால் R தவறு
iii. A தவறு, ஆனால் R சரி
iv. A மற்றும் R சரி ஆனால் R ஆனது A யினை விளக்கவில்லை.
33.
அ. மின்னாற் தூய்மையாக்கலில் தூய உலோகம் நேர்மின்வாயாகவும், தூய்மையற்ற உலோகம் எதிர்மின்வாயாகவும் செயல்படுகிறது.
ஆ. வாலை வடித்தல் முறை அதிக கொதிநிலை உடைய எளிதில் ஆவியாகாத உலோகங்களை தூய்மைப்படுத்த பயன்படுகிறது.
இ. புலத் தூய்மையாக்கல் முறையானது பின்ன படிகமாக்கல் தத்துவத்தை அடிப்படியாகக் கொண்டது.
ஈ. மான்ட் முறை டைட்டேனியத்தை தூய்மையாக்க பயன்படுகிறது.
34.
அ. நுரைமிதப்பு முறையில் சோடியம் ஈத்தைல் சாந்தேட் சேகரிப்பானாக செயல்படுகிறது.
ஆ. வேதிக்கழுவுதல் முறையில் தாதுவானது உலோகத்தின் கரையாத உப்பு அல்லது அணைவுச் சேர்மமாக மாற்றப்படுகிறது.
இ. அம்மோனியா வேதிக் கழுவுதல் முறை தங்கம் மற்றும் வெள்ளி உலோகத்திற்கு ஏற்றது.
ஈ. பாக்சைட் தாது அமில வேதிக் கழுவுதலுக்கு உட்படுத்தப்படுகிறது.
35.
i. சோடியம், பொட்டாசியம் போன்ற வினைத்திறன் மிக்க உலோகங்களின் ஆக்சைடுகளை கார்பனைக் கொண்டு ஒடுக்குவது வெப்ப இயக்கவியல் படி சாத்தியமாகும்.
ii. அதிக வினைத்திறன் கொண்ட உலோகம், குறைவான வினைத்திறன் கொண்ட உலோக அயனியின் கரைசலில் சேர்க்கப்படும் போது குறைந்த வினைத்திறன் கொண்ட உலோகம் கரைசலுக்குள் செல்கிறது.
iii. காப்பர் உலோகம், துத்தநாக உப்பு கரைசலிலிருந்து துத்தநாகத்தை இடப்பெயர்ச்சி செய்கிறது.
அ) i & ii
ஆ) i & iii
இ) ii & iii
ஈ) i, ii, & iii
1.
(c)
சிர்கோனியம்
2.
(b)
துத்தநாக சல்பைடு
3.
(a)
நேர்க்குறி
4.
(b)
எதிர்க்குறி
5.
(a)
சயனைடு வேதிக் கழுவுதல்
6.
(b)
குறைக்கும் காரணி
7.
(b)
ப்ரௌசிடைட்
8.
(c)
காசிட்டரைட்
9.
(b)
Al2O3 + 2Cr \(\rightarrow \) Cr2O3 + 2Al
10.
(b)
வான்ஆர்கல் முறை
11.
(a)
கார்பன் ஒடுக்கம்
12.
(b)
Cu(s) + Zn2+(aq) \(\rightarrow \) Zn(s) + Cu2+(aq)
13.
(d)
உலோக சல்பைடுகளுக்கு, கார்பன் மற்றும் ஹைட்ரஜன் ஆகியன தகுந்த பொருத்தமான ஒடுக்கும் காரணிகளாகும்.
14.
(c)
SO2
15.
1. மனிதர்களால் முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட உலோகம் தாமிரம் ஆகும்.
2. இதன் உலோகக் கலவையான வெண்கலத்தின் பயன்பாட்டினால் வெண்கலக் காலம் என்ற சகாப்தம் உருவானது.
3. தங்கம் மற்றும் பிற உலோகங்களோடு இணைந்து நாணயங்கள், நகை பொருட்கள் தயாரிக்க தாமிரம் பயன்படுகிறது.
4. தாமிரம் மற்றும் அதன் உலோக கலவைகள் ஆகியன மின்கம்பிகள், நீர் செல்லும் குழாய்கள் மற்றும் பல மின் பொருளின் பாகங்கள் தயாரிக்க பயன்படுகிறது.
16.
1. சோடியம், பொட்டாசியம், கால்சியம் போன்ற வினைத்திறன் மிக்க உலோகங்கள், உலோக ஆக்சைடுகளை உலோகமாக ஒடுக்க பயன்படுகின்றன.
Rb2O3 + 3Mg ⟶ 2Rb + 3MgO
TiO2 + 2Mg ⟶ Ti + 2MgO
ThO2 + 2Ca \(\underrightarrow { 1250K }\) Th + 2CaO
2. இம்முறைக்கு அலுமினோ வெப்ப ஒடுக்க முறையும் ஓர் எடுத்துக்காட்டாகும்.
17.
1. தாதுவை, தேவைப்படும் உலோகத்தின் ஆக்சைடாக மாற்றுதல்.
2. உலோக ஆக்சைடை தனிம உலோகமாக ஒடுக்குதல்.
18.
எக்கனிமம் அதிக சதவீதத்தில் உலோகத்தினை பெற்று, அதிலிருந்து எளிதாகவும், பொருளாதார ரீதியாக சிக்கனமாகவும் உலோகத்தினை பிரிக்க இயலுமோ, அக்கனிமமே தாது எனப்படும்.
19.
(அ) மாசு அல்லது கனிமக் கழிவு:
பொதுவாக, தாதுக்களுடன் உலோகத் தன்மையற்ற மாசுகள் பாறைப் பொருட்கள் மற்றும் மண் மாசுகள் போன்றவை இரண்டறக் கலந்துக் காணப்படும். இத்தகைய மாசுகள் அனைத்தும் சேர்த்துக் கனிமக் கழிவு (gangue) என அழைக்கப்படுகிறது.
(ஆ) கசடு:
உருக்கி பிரித்தலில், சிலிக்காவுடன் இளக்கி சேர்த்து கனிமக்கசடை தருகிறது.
CaO(S) + SiO2(S) ⟶ CaSiO3(S)
இளக்கி + கனிமக்கழிவு ⟶ கசடு
கனிமக்கசடு எளிதில் உருகக் கூடியதாகும்.
20.
1. எஃகு மற்றும் இரும்பு அமைப்புகள் அரிமானம் மற்றும் துருப்பிடிக்காமல் பாதுகாக்கும் துத்தநாகப்பூச்சில் (கால்வனைசேஷன்) பயன்படுகிறது.
2. மோட்டார் வாகன அச்சு வார்ப்பு, மின்சாதனப் பொருட்களில் பயன்படுகிறது.
3. துத்தநாகத்தின் உலோகக் கலவையான பித்தளை (brass) அரிமானம் அடையாத தன்மையை பெற்றிருப்பதால் குழாய் வால்வுகள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் தயாரிக்க பயன்படுகிறது.
21.
மேற்கண்டுள்ள பிரித்தெடுத்தலில், ஒரு காரத்தன்மை உடைய இளக்கியான சுண்ணாம்புக்கல் (CaCO3) பயன்படுத்தப்படுகிறது. இத்தாதுவில் காணப்படும் சிலிக்கா கனிமக் கழிவானது அமிலத்தன்மையை பெற்றிருப்பதால், சுண்ணாம்புக்கல் அதனுடன் இணைந்து கால்சியம் சிலிக்கேட் எனும் கனிமக் கசடினைத் தருகிறது.
CaO(S)+ SiO2(S) ⟶ CaSiO3(S)
இளக்கி கனிமக்கழிவு கனிமக் கசடு
22.
1. துத்தநாகம் எஃகு மற்றும் இரும்பு அமைப்புகள் அரிமானம் மற்றும் துருப்பிடிக்காமல் பாதுகாக்கும் துத்தநாகப்பூச்சில் (கால்வனைசேஷன்) பயன்படுகிறது.
2. துத்தநாகம் மோட்டார் வாகன அச்சு வார்ப்பு மற்றும் மின்சாதனப் பொருட்களில் பயன்படுகிறது.
3. துத்தநாக ஆக்சைடு பெயிண்ட், ரப்பர், அழகு சாதனப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், நெகிழிகள், மை, மின்கலன்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.
4. துத்தநாக சல்பைடு ஒளிரும் பெயிண்ட், ஒளிரும் மின்விளக்குகள், மற்றும் X-கதிர் திரை ஆகியன தயாரிக்க பயன்படுகிறது.
5. துத்தநாக உலோகக் கலவையான பித்தளை அரிமானம் அடையாத தன்மையைப் பெற்றிருப்பதால் குழாய் வால்வுகள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் தயாரிக்க பயன்படுகிறது.
23.
1. பல்வேறு உலோக ஆக்சைடுகள் உருவாகும் வினைகளுக்கு வெப்பநிலையினைப் பொறுத்து அவ்வினைகளின் திட்ட கட்டிலா ஆற்றல் மதிப்பில் ஏற்படும் மாறுபாடுகளை வரைபடமாகக் குறிப்பிடுவது எலிங்கம் வரைபடம் எனப்படுகிறது.
2. ஒரு வினையில் ஏற்படும் கிப்ஸ் கட்டிலா ஆற்றல் மாற்றம் ∆G என்பது
∆G = ∆H - T∆S
∆H = என்தல்பி மாற்றம் T = கெல்வின் அலகில் வெப்பநிலை ∆S = என்ட்ரோபி மாற்றம்
3. ஒரு சமநிலைச் செயல்முறைக்கு சமநிலைமாறியின் மதிப்பினைக் கொண்டு ∆G0 மதிப்பானது பின்வருமாறு கணக்கிடப்படுகிறது.
∆G0 = RT ln Kp
4. பல்வேறு வெப்பநிலைகளில் உலோக ஆக்சைடுகளின் ஒடுக்க வினைகளை சமநிலை செயல்முறையாகக் கருதி அவ்வினைகளின் ∆G0 மதிப்புகளை மேற்கண்ட சமன்பாட்டினை பயன்படுத்தி ஹெரால்ட் எலிங்கம் கண்டறிந்தார்.
5. X அச்சில் வெப்பநிலையையும், Y அச்சில் உலோக ஆக்சைடுகள் உருவாகும் வினைக்கான ∆G0 மதிப்புகளையும் எடுத்துக்கொண்டு எலிங்கம் ஒரு வரைபடத்தை உருவாக்கினார்.
6. உருவான வரைபடம் ∆S மதிப்பை சாய்வாகவும், ∆H மதிப்பை வெட்டுத்துண்டாகவும் உடைய நேர் கோடாகும்.
24.
1. தாது நீர்ம காரங்களுடன் வினைபட்டு கரையும் அணைவுச் சேர்மம் உருவாகிறது.
2. பாக்சைட் தாது சோடியம் ஹைட்ராக்சைடு அல்லது சோடியம் கார்பனேட் கரைசலுடன் 35 atm அழுத்தம் மற்றும் 470 - 520 K வெப்பநிலையில் வினைபுரிந்து கரையும் தன்மையுடைய சோடியம் மெட்டா அலுமினேட்டைத் தருகிறது.
3. இரும்பு ஆக்சைடு மற்றும் டைட்டேனியம் ஆக்சைடு போன்ற மாசுக்கள் கரையாமல் தங்கி விடுகின்றன.
Al2O3(S) + 2NaOH(aq) + 3H2O(l) ⟶ 2Na [Al(OH)4](aq)
4. சூடான கரைசல் வடிகட்டப்பட்டு, குளிர்விக்கப்பட்டு, நீர்க்கப்படுகிறது.
5. இக்கரைசல் வழியே CO2 வாயு செலுத்தப்பட்டு நடுநிலையாக்கப்படுவதால் நீரேற்றமடைந்த Al2O3 வீழ்ப்படிவாகிறது.
2Na[Al(OH)4](aq) + CO2(g) ⟶ Al2O3.XH2O(S) + 2NaHCO3(aq)
6. வீழ்படிவு வடிகட்டப்பட்டு சுமார் 1670K வெப்பநிலையில் வெப்பப்படுத்தும் போது தூய அலுமினா Al2O3 பெறப்படுகிறது.
25.
26.
1. வெவ்வேறு ஒடுக்கும் காரணிகளை பயன்படுத்தி உலோக ஆக்சைடுகளிலிருந்து உலோகங்களை பிரித்தெடுக்கலாம்.
2. MxOy என்ற உலோக ஆக்சைடின் ஒடுக்கும் வினையைக் கருதுக.
\(\frac { 2 }{ Y }\) MxOy(s) ➝ \(\frac { 2X }{ Y } \) Ms + O2(g) .............1
3. மேற்கண்ட ஒடுக்க வினையை கார்பனைக் கொண்டு நிகழ்த்தலாம். இந்நிகழ்வில் ஒடுக்கும் காரணி கார்பன் CO அல்லது CO2 ஆக ஆக்சிஜனேற்றம் அடையலாம்.
C + O2 ➝ CO2(g) ............2
2C + O2 ➝ 2CO(g) ............3
4. கார்பன் மோனாக்சைடு ஒடுக்கியாக பயன்பட்டால் அது CO2 ஆக ஆக்சிஜனேற்றமடைகிறது.
2CO + O2 ➝ 2CO2 ............4
5. வெப்ப இயக்கவியல் கொள்கைகளின் படி தகுந்த ஒடுக்கம் காரணியினை தேர்வு செய்ய வேண்டும்.
6. ஒரு தனிச்சை வினைக்கு கட்டிலா ஆற்றல் மாற்றம் (∆G) கண்டிப்பாக எதிர்குறி மதிப்பினை பெற்றிருக்க வேண்டும்.
7. எனவே சமன்பாடு 1ல் கண்ட உலோக ஆக்சைடை கொடுக்கப்பட்ட ஒரு ஒடுக்கும் காரணியுடன் (சமன்பாடு 2, 3 அல்லது 4) சேர்த்து ஒடுக்க வேண்டுமெனில், இணைக்கப்பட்ட வினைகளின் (சமன்பாடுகள் 1 & 2, 1 & 3 அல்லது 1 & 4) கட்டிலா ஆற்றல் மாற்றம் ∆G எதிர்குறி மதிப்பினை பெற்றிருக்க வேண்டும்.
8. எனவே கட்டிலா ஆற்றல் மாற்றம் ∆G அதிக எதிர்குறி மதிப்பினை பெறும் வகையில் ஒடுக்கும் காரணி தெரிவு செய்யப்படுகிறது.
27.
பண்படா உலோகமானது மின்னாற்பகுத்தல் மூலம் தூய்மை செய்யப்படுகிறது.
நேர்மின்வாய் : தூய்மையற்ற உலோகத் தண்டு.
எதிர்மின்வாய்: தூய உலோகத் தகடு
மின்பகுளி : மின்னாற் பகுத்தலானது
பிரித்தெடுக்கப்பட வேண்டிய உலோகத்தின் உப்புகளைக் கொண்ட நீர்க்கரைசலைக் கொண்டுள்ள மின்பகு கலத்தில் நிகழ்த்தப்படுகிறது.
மின்னாற் பகுத்தல் நிகழ்த்தும் போது, பிரித்தெடுக்கப்பட வேண்டிய உலோகம் நேர்மின் வாயிலிருந்து கரைந்து கரைசலில் சென்று எதிர்மின்வாயில் வீழ்படிவாகிறது.
1. மின்னாற்பகுத்தலின் போது குறைவான எலக்ட்ரோ நேர்மின் தன்மை உடைய மாசுக்கள் நேர்மின் வாயின் அடியில் தங்குகின்றன. அவை ஆனோடு மாசு என அழைக்கப்படுகிறது.
2. சில்வரை மின்னாற்பகுத்தல் முறையில் தூய்மையாக்கலை உதாரணமாகக் கொண்டு இச்செயல்முறையினைப் புரிந்து கொள்ளலாம்.
எதிர் மின்வாய் : தூய சில்வர்
நேர்மின்வாய் : தூய்மையற்ற சில்வர்
மின்பகுளி : அமிலத்தன்மையுள்ள சில்வர் நைட்ரேட்கரைசல்
3. மின்வாய்களின் வழியே மின்சாரத்தைச் செலுத்தும் போது சில்வர் அனு எலக்ட்ரான்களை இழந்து கரைசலுக்குள் செல்கின்றது. நேர்மின் தன்மையுடைய சில்வர் அயனிகள் எதிர்மின்வாயில் சென்று மின்னிறக்கம் அடைந்து மின்வாயில் படிகிறது.
4. காப்பர், ஜிங்க் போன்ற பிற உலோகங்களுக்கு இதே முறையை பின்பற்றித் தூய்மையாக்கப்படுகின்றன.
28.
( )
தாதுக்களை அடர்ப்பித்தல்
29.
( )
அலுமினியம்
30.
ஈ. ப்ரௌசிடைட், டின்
31.
i. A மற்றும் R சரி, R ஆனது A யினை விளக்குகிறது.
32.
iii. A தவறு, ஆனால் R சரி
33.
( )
இ. புலத் தூய்மையாக்கல் முறையானது பின்ன படிகமாக்கல் தத்துவத்தை அடிப்படியாகக் கொண்டது.
34.
( )
அ. நுரைமிதப்பு முறையில் சோடியம் ஈத்தைல் சாந்தேட் சேகரிப்பானாக செயல்படுகிறது.
35.
ஈ) i, ii, & iii
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards