12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 03/10/2019
இடைநிலை மற்றும் உள் இடைநிலைத் தனிமங்கள்
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
லாந்தனாய்டு குறுக்கத்தைவிட, ஆக்டினாய்டு வரிசையில், ஆக்டினாய்டு குறுக்கம் அதிகமாக உள்ளது. ஏன்?
2.
Ti3+ , Mn2+ அயனியில் காணப்படும் இணையாகாத எலக்ட்ரான்களின் எண்ணிக்கையைக் கண்டறிக மேலும் அவைகளின் காந்ததிருப்பு திறன் மதிப்புகளைக் (μs) கண்டறிக.
3.
இடைச்செருகல் சேர்மங்கள் என்றால் என்ன?
4.
K2Cr2O7 மீது வெப்பத்தின் விளைவு யாது?
5.
லாந்தனைடுகளில் ஆக்சிஜனேற்ற நிலை பற்றி எழுதுக
6.
கரைசலில் Cu+ அயனிகள் நிலைப்புத்தன்மை குறைவு ஏன்?
7.
Sc முதல் Zn வரை உள்ள தனிமங்களின் Zn ன் அணுவாக்கும் என்தால்பி மதிப்பு குறைவு ஏன்?
8.
Cr2+ ஆனது வலிமையான ஆக்சிஜனொடுக்கி ஆனால் Mn3+ ஆனது வலிமையான ஆக்சிஜனேற்றி விளக்குக.
9.
3d வரிசையில் E0M3+/M2+ மதிப்பில் ஏற்படும் மாற்றங்களை விவரி
10.
லாந்தனாய்டுகளையும், ஆக்டினாய்டுகளையும் ஒப்பிடுக.
1.
ஆக்டினைடு வரிசையில், திரை மறைத்தல் விளைவு லாந்தனைடு வரிசையை விட குறைவு ஆக்டினைடு வரிசையில் அணு எண் அதிகரிக்க அதிகரிக்க செயலுறு அணுக்கரு மின்சுமை அதிகரிக்கிறது. ஆகவே லாந்தனாய்டு குறுக்கத்தை விட ஆக்டினாய்டு வரிசையில் ஆக்டினாய்டு குறுக்கம் அதிகமாக உள்ளது.
2.
Ti ன் எலக்ட்ரான் அமைப்பு = 3d24s2
Ti3+ ன் எலக்ட்ரான் அமைப்பு = 3d1
இவற்றில் தனித்த எலக்ட்ரான்களின் எண்ணிக்கை = 1
சுழற்சியின் காந்ததிருப்புத்திறன் \({ \mu_s }_{ }=\sqrt { n (n +2) } \)
\(=\sqrt { 1 (1 +2) } \)
= \(\sqrt { 3 } \) = 1.732 BM
Mn ன் எலக்ட்ரான் அமைப்பு = 3d24s2
Mn2+ ன் எலக்ட்ரான் அமைப்பு = 3d5
இவற்றில் தனித்த எலக்ட்ரான்களின் எண்ணிக்கை = 5
சுழற்சியின் காந்ததிருப்புத்திறன் \({ \mu_s }_{ }=\sqrt { n (n +2) } \)
\(=\sqrt { 5(5+2) } \) = \(\sqrt { 35 } \) = 5.92 BM
3.
ஒரு உலோக அணிக் கோவைத்தளத்தில் உள்ள இடைச்செருகல் துளைகளில் ஹைட்ரஜன், போரான், கார்பன் அல்லது நைட்ரஜன் போன்ற சிறிய அணுக்கள் இடம்பெறுவதால் ஏற்படும் சேர்மங்கள் இடைச்செருகல் சேர்மங்கள் என அழைக்கப்படுகின்றன. வழக்கமாக இவைகள் வேதி வினைக்கூறு விகித அடிப்படையில் அமையாத சேர்மங்களாகும். இடைநிலை உலோகங்கள் கணக்கற்ற இடைச்செருகல் சேர்மங்களை உருவாக்குகின்றன.
உதாரணம் : TiC, ZrH1.92, Mn4N etc.
இடைச்செருகல் சேர்மங்களின் பண்புகள்:
(i) இவை கடினமானவை. மேலும் வெப்ப மற்றும் மின்கடத்தும் தன்மையைப் பெற்றுள்ளன.
(ii) இவை அவற்றில் அடங்கியுள்ள தூய உலோகங்களைக் காட்டிலும் அதிக உருகுநிலையைக் கொண்டுள்ளன.
(iii) இடைநிலை உலோகங்களின் ஹைட்ரைடுகள் வலிமைமிக்க ஆக்சிஜன் ஒடுக்கிகள் ஆகும்.
(iv) உலோக கார்பைடுகள் வேதி மந்த தன்மையைப் பெற்றுள்ளன.
4.
பொட்டாசியம் டை குரோமேட் வெப்பப்படுத்தும்போது பொட்டாசியம் குரோமேட்டாக மாற்றுகிறது
K2Cr2O7 \(\underrightarrow { \Delta } \) K2CrO4 + 2Cr2O3 + 3O2↑
5.
(i) பொதுவான ஆக்சிஜனேற்ற நிலை +3
(ii) சில லாந்தனைடுகள் +2 மற்றும் +4 ஆகிய ஆக்சிஜனேற்ற நிலைகளையும் கொண்டுள்ளன
6.
(i) கரைசலில் அயனிகள் Cu+ அயனிகளை விட நிலைப்புத் தன்மை உடையவை.
(ii) காப்பரின் இரண்டாம் அயனியாக்கும் ஆற்றல் மதிப்பு அதிகம். ஆனால் Cu2+ அயனியின் நீரேற்ற என்தால்பி Cu+ ஐ விட அதிக எதிர்க்குறி உடையது. இது இரண்டாம் அயனியாக்கும் ஆற்றல் மதிப்பினை ஈடு செய்கிறது
(iii) எனவே அநேக Cu+ அயனி சேர்மங்கள் கரைசலில் நிலைப்புத் தன்மை குறைந்து சுய ஆக்சிஜனேற்ற ஒடுக்கத்திற்கு உட்படுகின்றன
7.
(i) Zn ஐ தவிர மற்ற தனிமங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தனித்த எலக்ட்ரான்கள் உள்ளன.
(ii) தனித்த எலக்ட்ரான்களின் எண்ணிக்கை குறையும் போது உலோக - உலோக பிணைப்பு வலிமை குறைகிறது
(iii) எனவே Zn ன் அணுவாக்கும் என்தால்பி மதிப்பு குறைவு
8.
Mn3+ னின் திட்ட மின்முனை மின்னழுத்த மதிப்பானது(E°) -1.18V அதிக எதிர்குறி மதிப்பை பெற்றுள்ளது. Cr2+ விற்கு -0.91 V மதிப்பை மட்டும் கொண்டுள்ளது. ஒரு உலோகத்தின் திட்ட மின்முனை மின்னழுத்த மதிப்பானது அதிக எதிர்குறி மதிப்பைப் பெற்றிருப்பதால் அந்த உலோகமானது ஒரு வலிமையான ஒடுக்கும் காரணியாகும். ஏனெனில் இவைகள் எலக்ட்ரான்களை எளிதில் இழக்கின்றன. இதனால் Cr2+ ஆனது வலிமையான ஆக்ஸிஜன் ஒடுக்கியாகவும், ஆனால் Mn3+ ஆனது வலிமையான ஆக்ஸிஜனேற்றியாகவும் விளங்குகிறது.
9.
1. 3d வரிசையில் Ti to Zn நோக்கிச் செல்லும் போது, திட்ட ஒடுக்க மின்னழுத்த மதிப்புகள் \(\mathrm{E}^{\circ} \frac{\mathrm{M}^{2+}}{\mathrm{M}^2}\) குறைவான எதிர்குறி மதிப்பினை M நோக்கிச் செல்கின்றன. மேலும், தாமிரமானது நேர்குறி ஒடுக்க மின்னழுத்த மதிப்பை பெற்றுள்ளது. அதாவது Cu2+ அயனியைக் காட்டிலும் தனிமநிலை தாமிரமானது அதிக நிலைப்புத் தன்மையுடையது.
2. 3d வரிசை தனிமங்களின் திட்ட ஒடுக்க மின்னழுத்தத்தின் பொதுவான போக்கில் இருவிலகல்கள் காணப்படுகின்றன. அதாவது Mn மற்றும் Zn ஆகியவற்றின் \(
\mathrm{E}^{\circ} \frac{\mathrm{M}^{2+}}{\mathrm{M}}
\) மதிப்பானது வழக்கமான போக்கிலிருந்து அதிக எதிர்குறி உடையதாக உள்ளது.
3. Mn2+ ன் சரிபாதியளவு நிரப்பப்பட்ட d5 எலக்ட்ரான் அமைப்பும் Zn2+ ன் முழுமையாக நிரப்பப்பட்ட நிலையில் காணப்படும் இடைநிலை உலோகங்கள் ஆக்ஸிஜனேற்றியாக செயல்பட முனைகின்றது.
10.
| வ.எண்: | லாந்தனைடுகள் | ஆக்டினாய்டுகள் |
| 1. | வேறுபடுத்தும் எலக்ட்ரான் 4f ஆர்பிட்டாலில் சேர்க்கிறது | வேறுபடுத்தும் எலக்ட்ரான் 5f ஆர்பிட்டாலில் சேர்க்கிறது. |
| 2. | 4f ஆர்பிட்டாலில் பிணைப்பு ஆற்றல் அதிகம் | 5f ஆர்பிட்டாலில் பிணைப்பு ஆற்றல் குறைவு |
| 3. | இவைகளில் அணைவுச் சேர்மங்களை உருவாக்கும் தன்மை குறைவு. | இவற்றின் அணைவுச் சேர்மங்களை உருவாக்கும் தன்மை அதிகம். |
| 4. | பெரும்பாலான லாந்தனாய்டுகள் நிறமற்றவை | பெரும்பாலான ஆக்டினாய்டுகள் நிறமுடையவை (U3+ சிவப்பு, U4+ பச்சை, UO22+ மஞ்சள்) |
| 5. | இவைகள் ஆக்சோ நேரயனிகளை உருவாக்குவதில்லை. | இவைகளின் ஆக்சோ நேரயனிகளை உருவாக்குகின்றன. UO22+, NpO22+ |
| 6. | லாந்தனாய்டுகள் சில நேர்வுகளில் +3 ஆக்சிஜனேற்ற நிலையுடன், +2 ஆக்சிஜனேற்ற நிலைகளையும் பெற்றுள்ளன. | ஆக்டினாய்டுகள் +3 ஆக்சிஜனேற்ற நிலையுடன் +4, +5, +6 மற்றும் +7 போன்ற உயர் ஆக்சிஜனேற்ற நிலைகளை பெற்றுள்ளன. |
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards