12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test

1.
உலகமயமாக்கலின் ஏதேனும் இரண்டு நன்மையை எழுதுக.
2.
தனியார்மயமாக்கல் என்றால் என்ன?
3.
புதிய பொருளாதாரக் கொள்கைகளின் கிளைகள் எழுதுக.
4.
VUCA -ஐ விரிவாக்கம் தருக.
5.
சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (GST) என்றால் என்ன?
6.
பெருநிறுவன நிர்வாகத்தின் பொருள் என்ன?
7.
மாநில ஆணையம் என்ற பதத்தை விவரிக்கவும்.
8.
தேசிய ஆணையத்தினைப் பற்றி விவரி.
9.
வியாபாரத்தின் ஏதேனும் மூன்று உட்புறச்சூழல் காரணிகளை விளக்குக.
10.
மாநில ஆணையத்தின் உறுப்பினர்கள் யார்?
11.
உலகமயமாக்கலின் ஏதேனும் மூன்று தாக்கங்களை எழுதுக.
12.
13.
தொழில்நுட்ப சூழலை விளக்குக.
14.
அரசியல் சூழ்நிலை காரணிகள் யாவை? (ஏதேனும் 3)
15.
தன்னார்வ நுகர்வோர் அமைப்பு பற்றி விவரிக்கவும்.
16.
17.
நுகர்வோர் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் தன்னார்வ நிறுவனங்களின் நோக்கம் யாது?
18.
எல்பிஜி (LPG) யின் சிறப்பு அம்சங்கள் விளக்குக. (ஏதேனும் 5)
19.
வியாபாரத்தின் நுண்ணிய சூழல் காரணிகளை விளக்கு. (ஏதேனும் 5)
20.
வியாபாரத்தின் பரந்தச் சூழலின் பங்கு பற்றி விவரி.(ஏதேனும் 5)
1.
1. வெளிநாட்டு ஒத்துழைப்பை கூட்டுதல்
2. சந்தை விரிவாக்கம்
3. தொழில்நுட்ப வளர்ச்சி
2.
தனியார்மயமாக்கல் என்றால் பொதுத்துறை நிறுவனங்களின் உரிமைகளை தனியார் நிறுவனங்களுக்கு மாற்றி தரும் நிகழ்வு அல்லது கொள்கையை குறிப்பிடுவதாகும். சுருங்கக் கூறின் தனியார்மயமாக்கல் என்பது பொதுதுறைக்கு ஒதுக்கப்பட்ட தொழில்களை தனியார் துறைக்கு மாற்ற அனுமதி அளிப்பதாகும்.
3.

4.
விரைவான தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக வணிகத்தின் எதிர்கால சூழலை சுருக்கமாக ஏற்ற இறக்கம், நிச்சயமற்ற தன்மை, சிக்கலானத் தன்மை மற்றும் தெளிவற்றத் தன்மை கொண்டவை என்று கூறலாம்.
5.
(i) நாடு முழுவதும் சரக்குகள் மற்றும் சேவைகளில் மறைமுக வரியாக சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விதிக்கப்பட்டுள்ளது. இது ஒரு விரிவான, பல கட்ட இலக்கு அடிப்படையிலான மதிப்பு கூட்டுவரியாகும்.
(ii) சரக்குகள் மற்றும் சேவைகள் வரி என்பது. சரக்குகள் மற்றும் சேவை வரி தொடர்பான பிரச்சினைகள் தீர்ப்பது தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு பரிந்துரைகளை வழங்கும் ஒரு அரசியலமைப்பு ஆகும்.
6.
(i) பெருநிறுவன ஆளுகை என்பது ஒரு நிறுவனத்தை நிர்வகிக்கும் விதிகள் மற்றும் கொள்கைகள் ஆகும். ஒரு நிறுவனத்தை நிர்வகித்து அதன் குறிக்கோளை அடைவதற்கான ஒரு வடிவமைப்பை இது வழங்குகிறது. இது உட்கட்டுப்பாட்டு செயல்திறன் அளவீடு மற்றும் பெருநிறுவனத்தை வெளிப்படுத்துதல் ஆகியவற்றிற்கான வழிகாட்டுதல்களை வழங்குகிறது.
(ii) பெருநிறுவன ஆளுகை என்பது பயமின்மை, வெளிப்படைத்தன்மை, பொறுப்பு மற்றும் பொறுப்பு ஏற்பு (Accountability) போன்ற நான்கு தூண்களை அடிப்படையாக கொண்டது.
7.
(i) இந்த ஆணையம் மாநில அளவில் செயல்பட்டுவருகிறது. இந்த அமைப்பை நுகர்வோர் குறைபாட்டு தீர்ப்பாணையம் என அழைக்கப்படுகிறது.
(ii) சரக்கு மற்றும் சேவைகள் தொடர்பாக எழும் புகார்கள் இந்த தீர்ப்பாணையத்தின் செயல் எல்லைக்குள் அடங்கும்.
(iii) விற்கப்பட்ட சரக்கில் ஏற்படும் பழுதுகள் மற்றும் தரக்குறைகள் மற்றும் நியாயமற்ற மற்றும் தடை செய்யும் வணிக நடைமுறைகளுக்கு (Unfair Restrictive Trade Practices). வணிக நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு ஆணையம் என்ற பெயரில் துவங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டுவருகிறது.
8.
இவ் அமைப்பு நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986 ன் கீழ் ஒரு பகுதி நீதிமன்றமாக 1988 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இதன் தலைமையலுவலகம் புதுடெல்லியில் இயங்கி வருகிறது. இவ் தீர்ப்பாணையம் உச்சநீதிமன்றத்திலிருந்து ஓய்வு பெற்ற நீதிபதியை தலைவராக கொண்டு இயங்கி வருகிறது. இவ் அமைப்பு தேசிய தீர்ப்பாணையம் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.
9.
(i) மதிப்பு அமைப்பு :
வணிகத்தின் நிறுவனர்/ உரிமையாளர்கள் மதிப்புகளில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் வெளி நபர்களின் மதிப்பை பொறுத்தே நிறுவனத்தின் வெற்றி சார்ந்துள்ளது.
(ii) பார்வை மற்றும் குறிக்கோள்கள்:
வணிகத்தின் பார்வை மற்றும் குறிக்கோள்கள் அதன் செயற்பாடுகள் மற்றும் யுக்தி முடிவுகளை மேற்கொள்ள வழிகாட்டுகின்றன.
(iii) மேலாண்மை அமைப்பு மற்றும் அதன் இயல்பு:
மேலாண்மை / குழு கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டு நடைமுறை, நிர்வாகத்தின் தொழில்முறை நிலை, குழுவின் அமைப்பு போன்ற பல்வேறு காரணிகள் முடிவெடுப்பதில் பாதிப்பை ஏற்படுத்தும் காரணிகளாக உள்ளது. முடிவெடுப்பதின் உயர் அதிகாரம் மேலாண்மை குழுவிடம் உள்ளது.
(iv) மனிதவளம்:
ஒரு நிறுவனத்தின் வெற்றி அதன் மனிதவளத்தின் மீது மட்டுமே சார்ந்துள்ளது. எனவே, ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கு தரமான, திறன் படைத்த, திறமையான சரியான அணுகுமுறை மற்றும் மனித வளங்களின் உறுதிப்பாடு அவசியம் ஆகும்.
(v) நிறுவனத்தின் மதிப்பு:
நிறுவனத்தின் மதிப்பு, புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துதல், விநியோகிப்பதற்கான முகவர்கள் மற்றும் விற்பனையாளர்களை தேர்ந்தெடுப்பது, பொருள் அளிப்பவர்களுடன் கூட்டு ஒப்பந்தங்களை உருவாக்குதல், உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தையில் நிதி திரட்டுதல், விரிவாக்கம் செய்தல், புதிய சந்தையில் நுழைதல் மற்றும் பல.
10.
(1) உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக சம்பந்தப்பட்ட மாநில அரசால் பதவி அமர்த்தப்பட்ட நபர் அந்த ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்படலாம்.
(2) நீதி, நேர்மை, நாணயம் கொண்ட மற்றும் போதிய அறிவு மற்றும் அனுபவம் கொண்ட நபர்களையோ அல்லது பொருளாதாரம் சட்டம், வணிகம் மற்றும் தொழில் நிர்வாகம் போன்ற துறைகளில் ஏற்படும் சிக்கல்களைக் கையாளும் திறனை கொண்டவர்களையும் நியமிக்கலாம்.
11.
(i) குறைந்த இயக்கச் செலவுகளின் அடக்கம் மற்றும் புதிய மூல பொருட்கள் மற்றும் கூடுதல் சந்தை அனுகல் மூலம் பெரிய நிறுவனங்கள் போட்டி திறனை பெறுகின்றன.
(ii) பன்னாட்டு நிறுவனங்கள் (MNC's) பொருட்களை தயாரிக்க வாங்க மற்றும் பொருட்களை விற்பனை செய்ய முடிகின்றது.
(iii) உலகமயமாக்கல் நுகர்வோர் பொருட்களின் சந்தையை வெகுவாக (ஏற்றத்துடன்) பெருக்கிட உதவும் வாய்ப்பை உருவாக்கலாம்.
12.
13.
கடந்த காலங்களில் தொழில் நுட்பத்தின் விரைவான வளர்ச்சி அனைத்து வியாபாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பின் வளர்ச்சி உலகளாவிய சந்தையை உருவாக்கியுள்ளது.
1. புதுமைகளை படைத்து வாடிக்கையாளர்களை கவர்தல் மூலம் வணிகத்தின் வாழ்வாதாரத்தை நிலைநாட்டிக் கொள்ள முடியும்.
2. வாடிக்கையாளர்களை நன்கு அறிந்து கொள்ள தகவல் ஆய்ந்தெடுத்தல் மற்றும் தகவல் பகுப்பாய்வு பயன்படுத்தப்படுகின்றன.
3. இவை பொருட்களை நிர்வகிப்பதற்கும் உற்பத்தி செய்த பொருட்களை கிடங்குகளில் சேமித்து வைக்கவும் பணம் பெறவும் பயன்படுகின்றன.
1. நாடுகளில் கிடைக்கும் தொழில்நுட்பத்தின் நிலை.
2. தொழில்நுட்ப மாற்ற விகிதம்
3. போட்டியாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தொழில் நுட்பம்.
4. காலாவதியான தொழில்நுட்ப முறைகள்.
14.
சட்டம் மற்றும் அரசியல் சுற்றுச் சூழலின் முக்கிய கூறுகள் பின்வருமாறு:
(i) அரசியல் ஸ்திரத்தன்மை என்பது, தேர்தல் அமைப்பு, சட்டம் மற்றும் ஒழுங்குநிலை, இராணுவம் மற்றும் காவல்படை, ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்துதல், உள்நாட்டு யுத்தம் மற்றும் பல அளவு கொள்கை கொண்டுள்ளது.
(ii) அரசியல் அமைப்பு என்பது, அரசியல் கட்சிகள், அரசாங்கம், அதிகாரத்துவத்தின் அதிகாரம் மற்றும் பற்றாக்குறை, குடிமக்கள் மத்தியில் அரசியல் நகர்வின் நிலை, நிதி நிறுவனங்கள் மற்றும் அவர்களால் வழங்கப்படும் செல்வாக்கு அல்லது ஆதிக்கம் ஆகியவற்றின் நிதியியல் போன்றவற்றை குறிக்கிறது.
(iii) சர்வதேச அரங்கில் தலைவர்கள் மற்றும் நாட்டின் மதிப்பு போன்றவை.
(iv) சட்ட வியாபார கட்டமைப்பு மற்றும் நெகிழ்வுத்தன்மையின் அளவு போன்றவை.
(v) நாட்டின் அரசியலமைப்பு
(vi) சுங்கவரி மற்றும் இலவச வர்த்தகம் குறித்த நாட்டின் வெளியுறவுக் கொள்கை போன்றவை.
15.
1. பொருட்களை வாங்கி பயன்படுத்தும் ஒரு தனிநபரோ அல்லது ஒரு குடும்பமோ நுகர்வோராக இருக்கலாம்.
2. தன்னார்வ நுகர்வோர் அமைப்பு என்பது நுகர்வோரின் உரிமை மற்றும் நலனை பாதுகாத்திட ஏற்படுத்தப்பட்ட அமைப்பைக் குறிக்கும்.
16.
17.
பொருட்களை வாங்கி பயன்படுத்தும் ஒரு தனிநபரோ அல்லது ஒரு குடும்பமோ நுகர்வோராக இருக்கலாம். தன்னார்வ நுகர்வோர் அமைப்பு என்பது நுகர்வோரின் உரிமை மற்றும் நலனை பாதுகாத்திட ஏற்படுத்தப்பட்ட அமைப்பை குறிக்கும்.
நோக்கங்கள்
1. நுகர்வோர் விவகாரத் துறை என்ற அமைப்பை நுகர்வோர் நல நிதியை ஏற்படுத்தி அதனை நிர்வகித்து வருகிறது.
2. இந்த துறையினுடைய தலையாய நோக்கம் இந்தியாவில் உள்ள நுகர்வோரை பாதுகாக்க இந்த துறை நுகர்வோர் குறித்த விழிப்புணர்வை அகில இந்திய அளவில் பல்வேறு அமைப்புகளின் உதவியுடன் பெருக்கி வருகிறது.
3. நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் நலனை வலுப்படுத்துதல் மற்றும் நுகர்வோருக்கு வழிகாட்டுவது மற்றும் ஆலோசனை வழங்குவது மற்றும் குறைகளை தலையீடு செய்து தீர்ப்பது.
4. தன்னார்வ நுகர்வோர் அமைப்பு நுகர்வோர் நல நிதியிலிருந்து பொருட்கள் மற்றும் சேவைகளின் தரத்தை ஆய்வு செய்யும் செயல் திட்டங்களுக்கு நிதி உதவி செய்கிறது மற்றும் பொருட்களின் தர சோதனை குறித்து நடத்தப்பட்ட ஆய்வின் கண்டுபிடிப்புகளின் பொது மக்களுக்கு வெளியிட்டு, நுகர்வோருக்கு பலதரப்பட்ட பொருட்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
5. தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளின் தங்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல். அரசு குடிமக்களிடம் கொண்டுள்ள தொடர்பினை இணையதளம் மூலமாக வெளிப்படையாக அறிவித்தல்.
18.
தாராளமயமாக்குதல், தனியார்மயமாக்குதல் மற்றும் உலகமயமாக்குதல் என்பது
பின்வரும் சிறப்பு கூறுகளை உள்ளடக்கியது.
(i) புதிய வெளிநாட்டு வர்த்தக ஒப்பந்தங்களை அறிமுகம் செய்வது.
(ii) வெளிநாட்டு முதலீடுகள் (FDI & FII) கவர்ந்து இழுத்து நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக உதவியது.
(iii) முன்னுரிமை மற்றும் வணிகத்தடை நுட்பம் (MRTP) 1969 சட்டம் (திருத்தியமைக்கப்பட்டது).
(iv) கட்டுப்பாடுகள் அகற்றுதல் (Deregulation).
(v) பன்னாட்டு வணிகத்தை மேம்படுத்த உதவி வருவது.
(vi) வரிகளை மறுசீரமைப்பு செய்தல்.
19.
வியாபாரத்தின் செயல் திறனை உடனடியாக பாதிக்கும் சுற்றுச் சூழலாக இருக்கும் காரணிகளை நுண்ணிய சூழல் குறிக்கிறது. இதில் பின்வருவன அடங்கும்.
(அ) நிதி அளிப்பவர்கள்:
(i) கடனீட்டுப் பத்திரதாரர்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் வணிகம் சிறந்த முறையில் இயங்க முக்கிய பங்கினை வகிக்கிறார்கள்.
(ii) அவர்களின் நிதிதிறன், கொள்கை உத்திகள், இடர் பற்றிய அணுகுமுறை மற்றும் நிதிசாரா அமைப்புகளின் பங்கு முக்கியமாக உள்ளது.
(ஆ) சரக்கு விற்பனையாளர்கள் :
எந்தவொரு அமைப்பிலும் மூலப்பொருட்கள் மற்றும் இதர உள்ளீடுகளின் வழங்குநர்கள் மிகவும் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். விநியோகிப்பாளரிடமிருந்து பெறப்படும் பொருட்கள் உற்பத்திகளில் தொடர்ச்சியான செயல்பாட்டை செயல்படுத்துகிறது.
(இ) சந்தையிடுகை இடைநிலையர்கள்:
(i) உற்பத்தி பொருளை விற்பனை செய்யவும் நுகர்வோரிடம் கொண்டு சேர்ப்பதற்கும் விநியோகிப்பாளர்களின் உதவி தேவைப்படுகிறது.
(ii) இவர்கள் நிறுவனத்தையும், நுகர்வோரையும் இணைக்கும் திகழ்கின்றனர். மொத்த விற்பனையாளர்கள் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் முகவர்கள் பொருள்களை நுகர்வோரிடம் சேர்ப்பதை உறுதி செய்கின்றனர்.
(ஈ) பொது மக்கள்:
தொழிலில் தாக்கத்தை ஏற்படுத்தும் பின்வரும் குழுக்கள் பொது மக்கள் எனப்படுகிறது.அவையானவை ஊடகக்குழு, குடிமக்கள் குழு மற்றும் உள்ளூர் பொது மக்கள் போன்ற குழுக்கள் வியாபாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பொது மக்களிடம் ஒரு வியாபாரத்தை உருவாக்குவதற்கும் அல்லது அழிப்பதற்குமான திறமை உள்ளது.
(உ) வாடிக்கையாளர்கள்
ஒவ்வொரு வியாபாரத்தின் நோக்கமும் அதன் வாடிக்கையாளர்களின் தேவையை நிறைவேற்றுவதாகும். வாடிக்கையாளரே வணிகத்தின் மன்னராக கருதப்படுகிறார் மற்றும் அவர்களைச் சுற்றியே வணிகம் உள்ளது.
(ஊ) போட்டியாளர்கள்:
அனைத்து நிறுவனங்களும் எல்லா நிலைகளிலும் போட்டியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.உள்ளுர், தேசிய மற்றும் உலகளாவிய அளவில் ஒரே மாதிரியான பொருள் உற்பத்தி அல்லது தயாரிப்புகள் இருப்பதால் நிறுவனங்கள் பல்வேறு நிலைகளில் போட்டியிட கூடிய நிலை ஏற்படுகிறது.
20.
வணிகத்தின் வெற்றி பரந்த சூழலுக்கு பொருந்தக்கூடிய தன்மையைச் சார்ந்து இருக்கிறது. ஏனென்றால், இவை கட்டுப்படுத்தமுடியாத காரணிகள் ஆகும். அவை வியாபாரத்திற்கான மகத்தான வாய்ப்புகளை வழங்குகின்றன. மேலும் வியாபாரத்திற்கு தீவிர அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகின்றன. பொது அல்லது பழமையான சூழல்கள் பின்வருமாறு
(1) பொருளாதாரச் சூழல்
(i) ஒரு நாட்டில் வணிகம் என்பது பொருளாதார அமைப்பு முறையின் அடிப்படையில் ஒருங்கிணைந்த பகுதியாகும்.
(ii) வணிக சுழற்சிகள் தவிர்க்க முடியாதவை. பரந்த சுற்றுச்சூழலின் பல காரணிகளிடையே தொடர்புடையவை.
(2) சமூக - கலாச்சாரச் சூழல்
வணிகம் சமூகத்தின் ஒரு அங்கமாகும். சமூக சூழலானது வணிகம் அமைந்துள்ள சமூகத்தின் மொத்தக் காரணிகளைக் குறிக்கிறது. சமுதாயத்தின் சமூக மற்றும் கலாச்சார சூழல் வணிகத்தினைப் பாதிக்கிறது.
(3) அரசியல் மற்றும் சட்டச் சூழல்
(i) ஒரு வணிகத்தை நடத்துவதற்குத் தேவையான கட்டமைப்பினை அரசியல் மற்றும் சட்டச் சூழலால் வழங்கப்படுகிறது.
(ii) ஒரு வணிகத்தின் வெற்றி என்பது அரசியல் மற்றும் சட்ட மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றித் தக்கவைத்துக் கொள்வதற்கான அதன் திறனில் உள்ளது.
(4) புவியியல் சார்ந்தச் சூழல்
இயற்கை வளங்கள் மற்றும் கனிம வளங்கள் போன்றவை வணிகத்தை தாங்கி நிற்கின்றன.
(5) தொழில்நுட்பம் சார்ந்தச் சூழல்
(i) கடந்த காலங்களில் தொழில் நுட்பத்தின் விரைவான வளர்ச்சி அனைத்து வியாபாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
(ii) தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பின் வளர்ச்சி உலகளாவிய சந்தையை உருவாக்கியுள்ளது. எனவே போட்டியைத் தக்கவைத்துக்கொள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நுகர்வோரின் சிறப்புத் தேவைகளை சந்தை ஆராய்ச்சியின் மூலம் கண்டறிய முடிகிறது.
(6) உலகளாவிய சூழல்
தொழில்நுட்பத்தின் விரைவான வளர்ச்சியுடன் வர்த்தக எல்லைகள் வேகமாக மறைந்து புதிய உலகளாவிய சந்தை வளர்ந்து வருகிறது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards