12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 26/09/2019
மின்-வணிகம்
12ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
இணைய பரிவர்த்தனையைப் பற்றி முதலில் முன்மொழிந்தவர் யார்? அவரைப் பற்றி எழுதுக.
2.
இணைய அறுவடை என்றால் என்ன?
3.
G2G அமைப்பின் இரு வகைகள் யாவை?
4.
மின் - வணிகத்தில் G2C மாதிரியை விளக்குக.
5.
மின் அரசாண்மை என அழைக்கப்படுபவை யாவை?
6.
முதல் மின் - வணிக பரிவர்த்தனை எனக் குறிக்கப்படுவது எது?
7.
புறத்திறனீட்டம் பற்றிச் சிறு குறிப்பு வரைக.
8.
டாட்காம் குமிழி மற்றும் டாட்காம் வெடிப்பு என்றால் என்ன?
9.
மின்-தொழில் மற்றும் மின்-வணிகம் வேறுபடுத்துக.
10.
மின்-வணிகம் வரையறு.
1.
(i) 1979 ல் ஆங்கிலேய தொழில் முனைவோர் மைக்கேல் ஆல்ட்ரிச் நுகர்வோர் மற்றும் நிறுவனங்கள் இடையே இணையப் பரிவர்த்தனையைச் செயல்படுத்தும் ஒரு செயல் நுட்பத்தை முன்மொழிந்தார். பின்னாளில் அது தொழில் ரீதியாக மின் - வணிகம் என்று அழைக்கப்பட்டது.
(ii) 1980 ல் அவர் தொலைக்காட்சி, கணினி மற்றும் தொலைத்தொடர்பு வலைப்பின்னல் தொழில்நுட்பங்கள் அடங்கிய Teleputer எனும் பல்நோக்கு இல்ல தகவமைவு சாதனத்தைக் கண்டுபிடித்தார்.
2.
இணைய அறுவடை என்பது போட்டியாளர் வலைப்பக்கங்களிலிருந்தே வணிகத் தகவலைப் பிரித்தெடுக்கும் சட்டவிரோத நடவடிக்கையாகும்.
3.
1. உள் நோக்கம் அல்லது உள்ளக நிலை - ஒரே அரசாங்கத்தின் அதிகாரத்துவத்துடன் இணைதல். எ.கா: https://www.nic.in/
2. வெளி நோக்கல் அல்லது சர்வதேச அளவில் பல அரசாங்கங்களின் அதிகாரத்துவத்துடன் இணைத்தல்.
4.
1. மின் - வணிகத்தில் G2C, C2G யை மிகவும் ஒத்திருக்கிறது. இங்கே அரசாங்கம் தனது குடிமக்களுக்கு இணையதளத்தின் மூலமாக அதன் சேவைகள் மற்றும் தகவல்களைப் பெறுவதற்கான தளத்தை வழங்குகின்றது.
2. நிகழ்நிலையில் சான்றிதழ்களை வழங்குவதும் இவ்வகை சேவையில் அடங்கும்.
எ.கா: http://csc.gov.in/governmenttocitizen
5.
அரசாங்கம் ஒரு அங்கமாகச் செயல்படும் மின் வர்த்தக மாதிரிகள் மின் அரசாண்மை என்று அழைக்கப்படுகின்றன.
எ.கா:
1. அரசாங்கம் - வணிக (G2B)
2. அரசாங்கம் - நுகர்வோர் (G2C)
3. அரசாங்கம் - அரசாங்கம் (G2G)
6.
1994 ஆகஸ்ட் பிலடெல்பியாவில் (அமெரிக்கா) இருந்து, Phil Brandenberger நாஷ்வாவில் (அமெரிக்கா) இருக்கும் kohn என்பவரிடமிருந்து String's "Ten Summoners' Tales" என்ற ஒரு இசை குறுந்தகட்டை வாங்க, தனது கடன் அட்டையைப் பயன்படுத்தி $12.48 மற்றும் Shipping கட்டணங்களை நிகழ்நிலையில் செலுத்தினார். இது முதல் மின் - வணிக பரிவர்த்தனை என குறிக்கப்படுகிறது.
7.
ஒரு நிறுவனம் தனது வேலையின் ஒரு பகுதியை செய்ய மற்றொரு நிறுவனத்தை பணியமர்த்தினால், அது புறத்திறனீட்டம் என்று அழைக்கப்படுகிறது.
8.
டாட்காம் குமிழி:
(i) டாட்காம் குமிழி சுமார் 1995 மற்றும் 2000ற்கு இடையே டாட்காம் நிறுவனங்களின் ஒரு வரலாற்று மிதமிஞ்சிய வளர்ச்சி ஆகும்.
(ii) மேலும் இது இணையத்தின் பயன்பாடு மற்றும் தகவமைப்பு ஆகியவற்றின் அதீத வளர்ச்சி காலகட்டம் ஆகும்.
டாட்காம் வெடிப்பு:
(i) NASDAQ கூட்டுப் பங்குச் சந்தை குறியீடானது 5046.86 லிருந்து 1114.11 ஆகச் சரிந்தது.
(ii) இது புகழ்பெற்ற டாட்காம் முறிவு அல்லது டாட்காம் வெடிப்பு என அறியப்படுகிறது.
9.
| மின் தொழில் | மின் வணிகம் |
| மின் தொழில் என்பது நிறுவனத்தின் ஒவ்வொரு உள் மற்றும் வெளி நடவடிக்கைகளான மூலப்பொருட்கள் கொள்முதல், விற்பனை, நிதி, உற்பத்தி மற்றும் பேச்சுவார்த்தை போன்ற அனைத்திற்கும் முற்றிலும் இணையத்தைச் சார்ந்துள்ளது. | மின் - வணிகம் இணையம் மூலம் நடைபெறும் வர்த்தக பரிவர்த்தனை ஆகும் |
10.
மின்- வணிகம் என்பது கணிப்பொறி வலையமைப்புகள் வழியாகப் பொருட்கள், சேவைகள் அல்லது தகவல்களை வாங்கும் அல்லது விற்கும் வழிமுறை ஆகும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards