12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 17/10/2019
வலையமைப்பு வடமிடல்
12ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
ஈத்தர்நெட் வடத்தின் வகையைத் தீர்மானிப்பது எப்படி?
2.
டாங்கிள் என்றால் என்ன?
3.
கம்பி வலை அமைப்புகளுக்கும், கம்பியில்லா வலையமைப்புகளுக்கும் இடையேயான வேறுபாடுகளை எழுதுக.
4.
ஈத்தர்நெட் அட்டையின் வகைகளை விவரி.
5.
பூஜ்ய மோடம் கேபிள் என்பதன் பொருள் யாது?
6.
நெட்வொர்க் கேபிள்களின் வகைகளை விளக்குங்கள்.
7.
ஈத்தர்நெட் கேபிளிங்கில் பயன்படுத்தப்படும் கூறுகளை விளக்குங்கள்.
8.
RJ45 இணைப்பான் பற்றி விளக்கவும்
9.
ஈத்தர்நெட் வடமிடலில் (Cabling) பயன்படுத்தப்படும் கூறுகளை விளக்குக.
10.
பதிவு செய்யப்பட்ட ஜாக் (RJ) என்றால் என்ன? ஜாக் வகைகளை சுருக்கமாக விளக்குக.
1.
(i) Straight - Through: வடத்தின் வண்ணக் கம்பிகள் இரு முனைகளிலும் ஒரே வரிசையில் இருக்கும்.
(ii) Cross-over Wiring: ஒரு முனையின் முதல் வண்ணக் கம்பி அடுத்த முனையில் மூன்றாவது வண்ணக் கம்பியாக இருக்கும்.
(iii) Roll-over Wiring: வண்ணக் கம்பிகள் இரண்டு முனைகளிலும் எதிரெதிர் வரிசையில் இருக்கும்.
2.
1. டாங்கிள் ஒரு சிறிய புறச் சாதனம் ஆகும்.
2. இது இணையும் ஒரு SIM Slot ஐக் கொண்டிருக்கும்.
3. மேலும் இது கணினியை இணையத்துடன் இணைக்க மோடம் போல் செயல்படுகிறது
3.
| கம்பி வலையமைப்பு | கம்பியில்லா வலையமைப்பு |
| 1. காப்பிடாத மற்றும் காப்பிடப்பட்ட முறுக்கு இணைக் கம்பிகள் ஒளியிழை வடங்கள் போன்றவை ஊடங்களாகப் பயன்படுகின்றன. | அகச்சிவப்புக் கதிர்கள், புளுடூத் மற்றும் வைஃபை (WiFi) போன்றவை ஊடங்களாகப் பயன்படுகின்றன. |
| 2. அதிக இணைய வேகம் மற்றும் பாதுகாப்பானது | குறைந்த இணைய வேகம் மற்றும் பாதுகாப்பற்றது. |
| 3. பெரிய பரப்பளவில் நிறுவ மிகுந்த செலவை ஏற்படுத்தும் | பெரிய பரப்பளவில் நிறுவ குறைந்த செலவை ஏற்படுத்தும் |
4.
(i) ஈத்தர்நெட் அட்டை ஒரு விரிவாகக் அட்டை (அ) உள்ளிணைந்த அட்டையாக இருக்கலாம்.
(ii) விரிவாக்க வகை அட்டை (தனி மின்சுற்றுப் பலகை) என்பது PCI ஈத்தர்நெட் அட்டை எனவும் அழைக்கப்படுகிறது.
(iii) கணினியின் மதர்போர்டில் உள்ள PCI ஸ்லாட்டுக்குள் செருகப்படுகிறது.
(iv) தற்போது பெரும்பாலான கணினிகளில் அட்டைகள் உள்ளன.
(v) தற்போது ரேடியோ அலைகள் மூலம் தரவுகளைப் பரிமாறும் கம்பியில்லா ஈத்தர்நெட் அட்டைகளும் பயன்பாட்டில் உள்ளன
5.
ஈதர்நெட் கிராஸ் ஓவர் வடங்கள் போலவே , RS-232 வடமும் மோடமின்றி இரண்டு கணினிகளை இணைக்கப் பயன்படுகிறது. எனவே இது ஒரு பூஜ்ய மோடம் வடம் ஆகும்.ஒரு வடம் இரண்டு சாதனங்களை ஒன்றோடொன்று நேரடியாக இணைத்தால் அது பூஜ்ய மோடம் எனப்படுகிறது. எ.கா: ஈத்தர்நெட் கிராஸ் ஓவர் வடம் மற்றும் RS - 232 வடம்
6.
வலையமைப்பில் பயன்பாட்டில் உள்ள சில வகையான வடங்கள்:
| 1. இணையச்சு வடம் | i. தொலைக்காட்சிகளில் பயன்படுத்தப்படும். இது 1880களின் பிற்பகுதியில் கண்டறியப்பட்டது ii. தொலைக்காட்சியை அலைவங்கியுடன் இணைக்கப் பயன்படுகிறது iii. 10 mbps வேகத்தில் தகவலை பகிர்கிறது.இவை இருவகைப்படும் 1. இலகு வலை வடம் 2. தடிமன் வலை வடம் i. உட்பகுதியில் தாமிரக் கம்பியைக் கொண்டு சுற்றிலும் காப்பிடப்பட்டு பாதுகாக்கப்பட்டிருக்கும் iv. அளவில் பெரியவை என்பதால் எடுத்துச் செல்வதும் மாற்றுவதும் கடினமானது v) இதனை நிறுவுவதும் பராமரிப்பதும் எளிதல்ல |
| 2. முறுக்கு இணை வடம் | i. இரண்டு (அ) அதற்கு மேற்பட்ட காப்பிடப்பட்டு முறுக்கப்பட்டக் கம்பிகளின் தொகுப்பாகும் ii. வேகம் 10 mbps யில் துவங்கி 100 mbps வேகத்துடன் வெளியிடப்பட்டு மேலும் மேம்படுத்தப்பட்டு 10 mbps வேகத்துடன் 10 BASE - T என்ற பெயரில் அழைக்கப்படுகிறது iii. மின்காந்தக் குறுக்கீட்டைத் தவிர்ப்பதற்காக 8 கம்பிகள் முறுக்கப்பட்ட வடிவில் அமைக்கப்பட்டிருக்கும் இரண்டு வகைகள் 1. காப்பிடப்பட்ட முறுக்கு இணைக் கம்பி (STP) 2. காப்பிடப்படாத முறுக்கு இணைக் கம்பி (UTP) |
| 3. ஒளி இழை வடம் | i. வடம் கண்ணாடி இழைகளால் ஆனது ii. தகவல்களைப் பரிமாற ஒளித் துடிப்புகளைப் பயன்படுத்துகிறது. iii. முக்கியமாக பரந்த வலையமைப்பில் பயன்படுத்தப்படுகிறது iv. கேபிள்களுக்கு சேதம் ஏற்படாமல் தவிர்க்க அவை தரையின் ஆழத்தில் புதைக்கப்படுகிறது v. ஒளி இல்லை வடத்தில் இரண்டு வகைகள் உள்ளன 1. ஒற்றை முறை ஒளியியல் வடம் (Single mode Cable - 100 Base BX) 2. பன்முறை ஒளியியல் வடம் (Multimode Cable - 100 SX) |
| 4. USB கேபிள் (Universal Serial Bus) | (i) விசைப்பலகை, சுட்டி மற்றும் பிற புறச் சாதனங்களை கணினியுடன் இணைக்கப் பயன்படுகிறது. (ii) ஆனால் Dongle எனப்படும் சில சிறப்பு USB வலையமைப்பு சாதனங்கள் இணைய இணைப்பை ஏற்படுத்த பயன்படுத்தப்படும் (iii) மைக்ரோ USB என்பது மொபைல் சாதனங்களை இணைப்பதற்குப் பயன்படுத்தப்படும் (iv) USB இந்த சிறிய பாதிப்பாகும். இது ஸ்மார்ட் போன்கள், GPS சாதனங்கள் மற்றும் டிஜிட்டல் கேமராக்கள் போன்ற சாதனங்களை இணையத்துடன் இணைக்கிறது |
| 5. தொடர் மற்றும் இணை வடங்கள் | 1990க்கு முன்பு கணினியை இணையத்துடன் இணைக்க தொடர் மற்றும் இணை வடங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. இணை வடங்கள் அச்சுப்பொறி மற்றும் பிற வட்டு இயக்கிகளை கணிப்பொறியுடன் இணைக்கப் பயன்படுகின்றன |
| 6. ஈத்தர் வடம் | (i) வீடு (அ) அலுவலங்களில் கணினிகளை இணைக்கப் பையன்படும் பொதுவான வடம் ஆகும் (ii) வளைப் பகிர்வு மற்றும் இணைய அணுகலுக்காக குறும்பரப்பு வலையில் (LAN) உள்ள கம்பித் தொடர்பு சாதனங்களை இணைக்கிறது |
7.
ஈதர்நெட் கேபிளிங்கில் பயன்படுத்தப்படும் கூறுகள்:
(i) RJ45 ஈத்தர்நெட் இணைப்பி ஒரு சிறிய பிளாஸ்டிக் cube ஆகும். இதில் கம்பிகள் இணைக்கப்பட்டு இணையத்தொடர்பினை ஏற்படுத்த தயார் செய்யப்படுகிறது
(ii) RJ45 இணைப்பி ஒரு தொலைபேசி ஜாக் (Jack) போலவே தோற்றமளிக்கிறது. ஆனால் அளவில் சற்று பெரியது
(iii) ஒவ்வொரு RJ45 இணைப்பிற்கும் எட்டு ஊசிகள் (pins) உள்ளன
(iv) RJ45 இணைப்பிகள் ஈத்தர்நெட் வடத்தின் இருமுனைகளிலும் இணைக்கப்பட்டுள்ளது
(v) இது 8 - position, 8 - contact (8P8C) இணைப்பி என்றும் அறியப்படுகிறது
1. இணைப்பு வடம் (முறுக்கப்பட்ட இணைக்கம்பிகள்):
(i) இந்த வடங்கள் பொதுவாக எட்டு வெவேறு வண்ணங்களில் தயாரிக்கப்படுகின்றன
(ii) அவைகளில் நான்கு திட நிறங்கள், மற்றவை கோடிடப்பட்டவை
(iii) பச்சை, வெள்ளை - பச்சை ஆரஞ்சு, வெள்ளை - ஆரஞ்சு, நீளம், வெள்ளை - நீலம், பழுப்பு மற்றும் வெள்ளை - பழுப்பு ஆகியவை அந்த எட்டு வண்ணங்கள் ஆகும்
(iv) பல்வேறு தொழில்முறை திறன்களில் உற்பத்தி செய்யப்படுகின்றன
(v) CAT 3, CAT 5, CAT 6, CAT6e மற்றும் CAT 7 இதில் CAT என்பது Category என்ற வார்த்தையில் இருந்து உருவாக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வரும் எண் வடத்தின் மதிப்பைக் குறிக்கிறது
2. RJ 45 இணைப்பி:
(i) RJ45 ஈத்தர்நெட் இணைப்பி ஒரு சிறிய பிளாஸ்டிக் cube ஆகும். இதில் கம்பிகள் இணைக்கப்பட்டு இணையத்தொடர்பினை ஏற்படுத்த தயார் செய்யப்படுகிறது
(ii) RJ45 இணைப்பி ஒரு தொலைபேசி ஜாக் (Jack) போலவே தோற்றமளிக்கிறது. ஆனால் அளவில் சற்று பெரியது
(iii) ஒவ்வொரு RJ45 இணைப்பிற்கும் எட்டு ஊசிகள் (pins) உள்ளன
(iv) RJ45 இணைப்பிகள் ஈத்தர்நெட் வடத்தின் இருமுனைகளிலும் இணைக்கப்பட்டுள்ளது
(v) இது 8 - position, 8 - contact (8P8C) இணைப்பி என்றும் அறியப்படுகிறது
3. ஈத்தர் தொடர்பி :
1. ஈத்தர்நெட் போர்ட் (அ) தொடர்பி என்பது ஈத்தர்நெட் அட்டையில் ஒரு திறவுப் பகுதியாகும். இது RJ45 இணைப்பியை ஏற்கிறது
2. ஈத்தர்நெட் வடத்தின் RJ45 இணைப்பியை ஏற்படுகிறது
3. மதர்போர்டில் உள்ள ஈத்தர்நெட் அட்டையுடன் ஈத்தர்நெட் வடத்தை இணைக்கிறது
4. கிளிப்பிங் கருவி:
வடத்துடன் ஈத்தர்நெட் இணைப்பியை இணைக்கப் பயன்படும் ஒரு கருவி
1. வடத்தை தேவையான நீளம் வெட்டிக்கொள்ளவும்.
2. வடத்தின் இருபுறமும் இருந்து 1 அங்குல அளவிற்கு பாதுகாப்பு உறையை நீக்கவும். இதனால் முறுக்கப்பட்ட இணை கம்பிகள் வெளியே தெரியும்.
3. கம்பி அகற்றப்பட்ட பிறகு, சிறிய கம்பிகளை அவிழ்த்து, சரியான வயரிங் அமைப்பில் வைக்கவும். (T568 B பொதுவாக விரும்பப்படுகிறது)
8.
RJ - 45 இணைப்பான்:
1. RJ45 இணைப்பி, பொதுவாக பல்வேறு தொழில்முறை தரங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவை CAT 3, CAT 5, CAT 6, CAT6e மற்றும் CAT 7
2. இதில் CAT என்பது Category என்ற வார்த்தையில் இருந்து உருவாக்கப்பட்டது
3. அதனை தொடர்ந்து வரும் எண் வட்டத்தின் பாதிப்பைக் குறிக்கிறது
4. சமீபத்திய பாதிப்பு வேகமான வடம் என்பதைக் காட்டுகிறது
இணைப்பின் வடமிடல் திட்டங்கள் மற்றும் எண்ணை குறியீடுகள்:
(i) RJ 45 வடத்தில் உள்ள எட்டு சிறிய கம்பிகளை இணைக்க RJ 45 இணைபி எட்டு சிறிய துளைகளைக் கொண்டுள்ளது
(ii) எட்டு வயர்களுக்கு எட்டு வெவ்வேறு நிறங்களில் இருக்கும்
(iii) வயரிங் திட்டங்கள் கம்பிகளை (Wires) RJ 45 இணைப்பியுடன் (Connector) எவ்வாறு இணைக்க வேண்டும் என்பதைக் குறிக்கின்றன
(iv) முறுக்கு இணை வடங்களின் இரு முனைகளிலும் RJ45 இணைப்பியை இணைப்பதற்கு இரண்டு வகையான வயரிங் திட்டங்கள் உள்ளன
(v) அவை T-568A மற்றும் T-568B ஆகும்
| Pin | T-568A | Pin | T-568B |
| 1. | White / green Stripe (Tx+) | 1. | White / Orange Stripe (Tx+) |
| 2. | green (Tx-) | 2. | Orange (Tx-) |
| 3. | White / Orange Stripe (Rx+) | 3. | White / green Stripe (Rx+) |
| 4. | blue | 4. | blue |
| 5. | White / blue Stripe | 5. | White /blue Stripe |
| 6. | Orange (Rx -) | 6. | green(Rx-) |
| 7. | White / brown Stripe | 8. | brown |
(vi) வடத்தின் நான்கு ஜோடி கம்பிகள் இருந்தாலும், ஈதர்நெட் இரண்டு ஜோடிகள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது
(vii) ஆரஞ்சு மற்றும் பச்சை, மற்ற இரண்டு வண்ணங்கள் (நீலம் மற்றும் பழுப்பு ISDN (அ) தொலைப்பேசி இணைப்புகளில் பயன்படுத்த முடியும்
9.
ஈத்தர்நெட் வடமிடலில் நான்கு முக்கிய பகுதிகள் உள்ளன.
(1) இணைப்பு வடம் (Patch Cable)
(2) RJ45 (RJ45 Connector)
(3) ஈத்தர்நெட் தொடர்பி (Ethernet Port)
(4) கிரிம்பிங் கருவி (Crimping Tool)
1. இணைப்பு வடம் (முறுக்கப்பட்ட இணை கம்பிகள்):
(i) இந்த வடங்கள் பொதுவாக எட்டு வெவ்வேறு வண்ணங்களில் தயாரிக்கப்படுகின்றன.
(ii) அவைகளில் நான்கு திட (Solid) நிறங்கள். மற்றவை கோடிடப்பட்டவை (Striped).
(iii) ஈத்தர்நெட் வடங்கள் பொதுவாக பல்வேறு தொழில்துறை தரங்களில் உற்பத்திசெய்யப்படுகின்றன. அவை CAT 3, CAT 5, CAT 6, CAT 62, CAT 7. இதில் CAT என்பது Category என்ற வார்த்தையில் இருந்து உருவாக்கப்பட்டது.
2. RJ45 (RJ45 Connector):
(i) RJ45 இணைப்பி ஒரு தொலைபேசி ஜாக் (Jack) போலவே தோற்றமளிக்கிறது.
(ii) ஆனால் இது அளவில் சற்று பெரியது.
(iii) RJ45 இல் "RJ” என்பது Registered Jack மற்றும் "45" என்பது வடத்தின் இடைமுகத் தரத்தை குறிக்கிறது.
(iv) RJ45 ஈத்தர்நெட் இணைப்பி ஒரு சிறிய பிளாஸ்டிக் cube ஆகும்.
3. ஈத்தர்நெட் தொடர்பி:
(i) ஈத்தர்நெட் தொடர்பி என்பது ஈதர்நெட் அட்டையின் ஒரு திறவுப் (Opening) பகுதியாகும். இது ஈத்தர்நெட் வடத்தின் RJ45 இணைப்பியை ஏற்கிறது.
(ii) தனியாள் கணினிகள், மடிக்கணினிகள், திசைவிகள், சுவிட்சுகள், மையங்கள் (hub) மற்றும் மோடம்கள் போன்றவற்றில் இது காணப்படுகிறது.
4. கிரிம்பிங் கருவி (Crimping Tool):
(i) Crimping என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கம்பிகள் ஒன்றை ஒன்று பற்றிக் கொள்ளும் வகையில் இணைக்கும் செயலாகும்.
(ii) ஈத்தர்நெட் வடமிடலின் முக்கிய செயல் 45 இணைப்பியை முறுக்கு இணைக்கம்பியின் இருபுறமும் இணைப்பதாகும்.
(iii) crimping கருவி என்பது வடத்துடன் ஈத்தர்நெட் இணைப்பியை இணைக்கப் பயன்படும் ஒரு கருவி ஆகும்.
10.
பதிவு செய்யப்பட்ட ஜாக்குகள்:
(i) பொதுவாக RJ என்று அழைக்கப்படும் Registered Jack என்பது வலையமைப்பு வடமிடல், வயரிங் மற்றும் ஜாக் கட்டுமானத்திற்காக பயன்படுத்தப்படும் வலையமைப்பு இடைமுகமாகும்
Registered Jack என்பது இணைப்பி (male connector / Plug), தொடர்பி (female connector / Jack) மற்றும் அதன் வயரிங் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்துக் குறிக்கிறது.
பதிவுசெய்யப்பட்ட ஜாக் வகைகள்:
1. RJ - 11:
(i) இது பதிவுசெய்யப்பட்ட ஜாக்கின் மிகவும் பிரபலமான வடிவமாகும்.
(ii) இது வீடு மற்றும் அலுவலங்களில் தொலைபேசி இணைப்பிற்குப் பயன்படுத்தப்படுகிறது.
(iii) RJ-11 இல் ஆறு ஊசிகள் (6 PINS) உள்ளன.
(iv) அவற்றில் 2 ஊசிகள் தகவலை அனுப்புவதற்கும் 2 ஊசிகள் தகவலைப் பெறுவதற்கும் மீதம் 2 ஊசிகள் பயன்படுத்தபடாமலும் விடப்பட்டிருக்கும்.
2. RJ - 14 மற்றும் RJ - 61:
(i) RJ-14 என்பது RJ-11 போன்று தொலைபேசி இணைப்பில் பயன்படுத்தப்படுகிறது.
(ii) இதிலும் 6 ஊசிகளே பயன்படுத்தப்படுகின்றன.
(iii) ஆனால் RJ-61 எட்டு ஊசிகளை கொண்டிருக்கும்.
(iv) இந்த RJ -61 வலையமைப்பு கருவிகளை இணைப்பதற்கு, முறுக்கு இணை கம்பிகளை பயன்படுத்துகிறது.
3. RJ - 21:
(i) இந்த இணைப்பான் ஒரு முனையில் 25 ஊசிகளும் அடுத்த முனையில் 25 ஊசிகளுமாக மொத்தம் 50 ஊசிகளைக் கொண்டுள்ளது.
(ii) இது சாம்ப் (Champ) இணைப்பி அல்லது ஆம்பனோல் (Amphenol) இணைப்பி எனவும் அழைக்கப்படுகிறது.
(iii) Amphenol என்பது இணைப்பியை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஆகும்.
(iv) RJ- 21 இடைமுகமானது தரவுத் தொடர்பைப் பிரித்தனுப்பும் பயன்பாடுகளில் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards