12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 06/12/2019
செயற்கூறு
12ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
இடைமுகம் மற்றும் செயல்படுத்துதலை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
2.
3.
பின்வரும் நிரலில்
let rec gcd a b : =
if b < > 0 then gcd b (a mod b) else return a
அ) செயற்கூறுவின் பெயர்
ஆ) தற்சுழற்சி செயற்கூறு கூற்று
இ) அளபுருக்கள் கொண்ட மாறியின் பெயர்
ஈ) செயற்கூறுவை தற்சுழற்சிக்கு அழைக்கும் கூற்று
உ) தற்சுழற்சியை முடிவுக்கு கொண்டுவரும் கூற்று ஆகியவற்றை எழுதுக.
4.
அளபுருக்கள் என்றால் என்ன?
(அ) தரவுவகை இல்லாத அளபுருக்கள்
(ஆ) தரவு வகையுடன் கூடிய அளபுருக்கள் விவரி?
5.
_______ என்பது செயற்கூறு வரையறையில் உள்ள மாறிகள் ஆகும்.
அளபுருக்கள்
தரவு வகை மாறிகள்
செயலுருபுகள்
துணை நிரல்
6.
குறிமுறையின் ஒரு அலகு என்பது _______
அளபுருக்கள்
செயலுருபுகள்
செயற்கூறு
துணை நிரல்
7.
பின்வரும் எந்த செயற்கூறுவின் திருப்பி அனுப்பும் மதிப்பு முற்றிலும் அளபுருக்களை பொறுத்தே அமையும்?
impure
pure
random
இவற்றில் எதுவுமில்லை
8.
பின்வருவனவற்றுள் impure செயற்கூற்றின் எடுத்துக்காட்டு யாது?
strlen ( )
random ( )
sqrt ( )
pow ( )
9.
பின்வருவனவற்றுள் செயற்கூறு வரையறைக்கு அனுப்பப்படும் மதிப்புகள் என்பது யாது?
அளபுருக்கள்
நிரல் பெயர்ப்பி
தரவு வகைகள்
செயலுருப்புக்கள்
10.
உள்ளிடப்பட்ட எண் ஒற்றைப்படை எண்ணா அல்லது இரட்டைப்படை எண்ணா என சோதிக்கும் நெறிமுறையை எழுதுக.
11.
தற்சுழற்சி செயற்கூறு என்றால் என்ன?
12.
Impure செயற்கூறு ஒரு எடுத்துக்காட்டு தருக.
13.
இனக்குழு அறிவிப்பானது எதனை இணைக்கிறது?
14.
கொடுக்கப்பட்டுள்ள 3 செயலுருபுகளில் குறைந்த மதிப்பைக் காணும் செயல்கூறின் நெறிமுறையை எழுதுக.
15.
செயற்கூறுவிற்கு வெளியில் மாறியை மாற்றுதல் ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்கமாக எழுதுக.
16.
இரண்டு வகையான பச்சோந்திகள் சமமான எண்ணாக இருந்தால், இந்த இரண்டு வகையும் சேர்ந்து மூன்றாவது வகையின் நிறத்தை மாற்றுவதற்கான நிரல் நெறிமுறையை உருவாக்கவும். முடிவில் அனைத்தும் ஒரே நிறத்தை காண்பிக்க வேண்டும். நிரல் நெறிமுறையை செயற்கூறுவைப் பயன்படுத்தி எழுதவும்.
17.
இரண்டு நேர்முழு எண்களின் மீப்பெரு வகு எண்ணை கண்டுபிடிக்கும் pure செயற்கூற்றின் நெறிமுறையை எழுது.
18.
செயற்கூறு வகைகளின் தொடரியலை விளக்கமாக எழுதுக.
19.
செயற்கூற்றை வரையறுப்பதற்கான தொடரியல் விவரி.
1.
(i) இடைமுகம் :
ஒரு பொருள் (Object) செய்யக்கூடிய செயல்களின் தொகுப்பு இடைமுகம் ஆகும். எடுத்துக்காட்டாக, மின் விளக்கின் சுவிட்சை அழுத்தும் போது மின் விளக்கு ஒளிர்கிறது. அது எவ்வாறு ஒளிர்கிறது என்பது தெரிந்திருக்க வேண்டியதில்லை. பொருள் நோக்கு நிரலாக்க மொழியில், இடைமுகம் என்பது அனைத்து செயற்கூறுகளின் விவரிப்பு ஆகும். எடுத்துக்காட்டில், மின் விளக்கை போல் செயல்படும் எதுவும் turn_on () மற்றும் turn_off () என்ற செயற்கூறு வரையறையைக் கொண்டிருக்கும். இனக்குழுவின் பண்புக் கூறுகளை செயல்படுத்த இடைமுகம் பயன்படுகிறது.
(ii) இடைமுகம் மற்றும் செயல்படுத்துதல் இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்னவெனில்,
| இடைமுகம் | செயல்படுத்துதல் |
| ஒரு பொருள் செய்யக்கூடிய நடவடிக்கையை வரையறுக்கிறது, ஆனால் அவற்றை உண்மையில் செய்யக்கூடியது இல்லை. | இடைமுகத்தில் வரையறுக்கப்பட்டுள்ள கட்டளைகளை நிறைவேற்றுகிறது. |
(iii) பொருள் நோக்கு நிரலாக்க மொழியில் இனக்குழு என்பது இடைமுகம் ஆகும். செயல்படுத்துதல் என்பது பொருள் (object) எவ்வாறு செயல்படுத்தப்பட்டு இயங்குகிறது என்பதை குறிப்பதாகும்.
இடைமுகத்தின் பண்புகள்
(i) ஒரு பொருளை முறையாக உருவாக்கி வழங்குவதற்கும் அதனை செயல்படுத்துவதற்கும் தேவையான இடைமுகத்தை இனக்குழு வார்ப்பு குறிப்பிடுகிறது.
(ii) செயற்கூறுகளைப் பொருளுக்கு அனுப்புவதன் மூலம் பொருளின் பண்புகளையும் பண்புக்கூறுகளையும் கட்டுப்படுத்த முடிகிறது.
காரின் வேகத்தை அதிகரிக்கும் எடுத்துக்காட்டை எடுத்துக் கொள்வோம்.

(iii) காரை ஓட்டும் நபர் அந்த காரின் உட்புற செயல்பாடுகள் பற்றி அறிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. காரின் வேகத்தை அதிகப்படுத்த, அவர் காரின் துரிதப்படுத்தியை (accelerator) அழுத்தி விரும்பிய பண்பை பெறுவார். இங்கு துரிதப்படுத்தி என்பது கார் ஓட்டுநருக்கும் (அழைக்கும் பொருள்) இயந்திரத்துக்கும் (அழைக்கப்படும் பொருள்) இடையேயான இடைமுகம் ஆகும். இதில், அழைக்கும் செயற்கூறு இவ்வாறு இருக்க வேண்டும் speed(70): என இருக்க வேண்டும். இது ஒரு இடைமுகமாகும்.
(iv) உட்புறமாக, காரின் இயந்திரம் அனைத்து வேலைகளையும் செய்கிறது. எரிபொருள், காற்று, அழுத்தம் மற்றும் மின்சாரம் ஆகியவை இங்கு ஒன்றாக சேர்ந்து, ஆற்றலை உருவாக்கி, வாகனத்தை நகர்த்துகிறது. இந்த அனைத்து நடவடிக்கைகளும் கார் ஓட்டுநரிடம் இருந்து பிரித்து வைக்கப்பட்டுள்ளது. அவர் வேகமாக காரை செலுத்துவதில் ஆர்வமாக இருப்பார். இதனால், இடைமுகத்தை செயல்படுத்துதலில் இருந்து பிரித்து வைக்கப்படுகிறது.
(v) ஒரு எளிமையான உதாரணத்தைக் காணலாம். கொடுக்கப்பட்டுள்ள 3 செயலுருபுகளில் குறைந்த மதிப்பைக் காணும் செயற்கூற்றைச் செயல்படுத்துவதைக் கவனி.
let min x y z:=
if x < y then
if x < z then x else z
else
if y < z then y else z
2.
3.
(அ) gcd
(ஆ) let rec gcd a b : =
(இ) a,b
(ஈ) gcd b (a mod b)
(உ) if b < > 0 ல் உள்ள else return a
4.
அளபுருக்கள் என்பது செயற்கூறு வரையறையில் உள்ள மாறிகள் ஆகும்.
அ) தரவு வகை இல்லாத அளபுருக்கள்:
(i) செயற்கூறு வரையறைக்கு ஓர் எடுத்துக்காட்டைக் காணலாம்.
(requires: b> = 0)
(returns: a to the power of b)
let rec pow a b:=
if b = 0 then 1
else a * pow a(b - 1)
(ii) மேலேயுள்ள செயற்கூறு வரையறையில் 'b' என்ற மாறி அளபுரு ஆகும். மாறி 'b'க்கு அனுப்பப்படும் மதிப்பானது செயலுருபு ஆகும்.
(iii) செயற்கூறின் முன் நிபந்தனை (requires) மற்றும் பின் நிபந்தனை (return) கொடுக்கப்பட்டுள்ளது.
(iv) சில மொழிகளின் நிரல் பெயர்ப்பி இவ்வகை சிக்கல்களை நிரல் நெறிமுறைப்படி சரி செய்கிறது. ஆனால் சில நிரல் பெயர்ப்பிக்கு தரவு வகையைக் குறிப்பிடுவது கட்டாயமாகும்.
(v) மேலே உள்ள செயற்கூறு வரையறையில், if கோவை, then கிளைக்கு மதிப்பு 1 யைத் திருப்பி அனுப்பினால், தரவு வகை (data type) விதிப்படி if கோவை முழுவதுமே 'int' தரவு வகைக் கொண்டிருக்கும்.
if கோவையின் தரவு வகை int ஆக இருப்பதால், செயற்கூறின் திருப்பி அனுப்பும் மதிப்பும் int ஆக இருக்கும், 'b' யின் மதிப்பு சுழியத்தோடு ஒப்பீடு செய்யப்படுகிறது.
(vi) அதனால் 'b' யின் தரவுவகை 'int' ஆகும். * செயற்குறியுடன் 'a' யின் மதிப்பு மற்றொரு கோவையோடு பெருக்குத் தொகையைக் கணக்கிடுவதால், 'a' யின் வகையும் int ஆகும்.
ஆ) தரவு வகையுடன் கூடிய அளபுருக்கள் :
(i) சில காரணங்களுக்காக, இப்பொழுது நாம் அதே செயற்கூறு வரையறை தரவு வகையுடன் எழுதலாம்.
(requires: b > = 0)
(returns: a to the power of b)
let rec pow(a: int) (b: int) : int: =
if b = 0 then 1
else a * pow b(a - 1)
(ii) 'a' மற்றும் 'b' தரவு வகை குறிப்பு (type annotations) எழுதும் போது, அடைப்புக்குறிக்குள் ( ) அவசியமானது ஆகும்.
(iii) ஏனெனில், நிரல்பெயர்ப்பி இவற்றை அனுமானிப்பது மிகவும் எளிது.
(iv) வரையறை let என்ற சிறப்புச் சொல்லோடு அறிமுகப்படுத்தப்படுகிறது. அதனைத் தொடர்ந்து செயற்கூறின் பெயர் மற்றும் அதனுடைய செயலுருபுகள் பிறகு செயலுருபுவைக் கணக்கீடு செய்யும் வாய்ப்பாடு := குறிக்குப் பிறகு எழுத வேண்டும். தற்சுழற்சி செயற்கூற்றை வரையறுக்க விரும்பினால் let-க்கு பதிலாக let rec என்று பயன்படுத்த வேண்டும்.
செயற்கூறு வரையறையின் தொடரியல் :
let rec fn a 1 a2,,,an := k
5.
(a)
அளபுருக்கள்
6.
(c)
செயற்கூறு
7.
(b)
pure
8.
(b)
random ( )
9.
(d)
செயலுருப்புக்கள்
10.
(requires: x > = 0)
let rec even x:=
x = 0 || odd (x - 1)
return 'even'
(requires: x > = 0)
let odd x:=
x < > 0 && even (x - 1)
return 'odd'
11.
தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் செயற்கூறு வரையறைக்கு தற்சுழற்சி செயற்கூறு என்று பெயர்.
12.
let Random number
let a:= random ( )
if a > 10 then
return: a
else
return: 10
13.
இனக்குழு அறிவிப்பானது வெளிப்புற இடைமுகத்தோடு அதன் உள்ளமை நிலை அந்த இடைமுகத்தைச் செயல்படுத்தும் செயல்பாட்டுடன் பண்புகளை உடைய குறிமுறை இணைக்கிறது.
14.
let min 3 xyz:=
if x < y then
if x < z then x else z
else
if y < z then y else z
15.
செயற்கூறுவிற்கு வெளியே மாறியை மாற்றம் செய்வது என்பது பக்கவிளைவுகளில் ஒன்றாகும்.
எடுத்துக்காட்டு:
let y:= 0
(int) inc (int)x
y:=y+ x;
return (y)
மேலே கூறப்பட்ட எடுத்துக்காட்டில், y-ன் மதிப்பு செயற்கூறு வரையறையின் உள்ளே மாறுவதால் விடையானது ஒவ்வொரு முறையும் மாறும். int ( ) செயற்கூறுவின் பக்க விளைவு என்னவென்றால் வெளிப்புற மாறியான 'y' ன் மதிப்பை மாற்றுவதாகும். சில பக்க விளைவுகளை அடையாளம் காண்பது எளிதானதாகும் மற்றும் சில யோசிக்க தகுந்ததாக இருக்கும். நமது Impure செயற்கூறு எந்த அளவுருக்களையும் எடுத்துக்கொள்ளாது, எந்த மதிப்பையும் திருப்பி அனுப்பாது என்பது ஒரு நல்ல அறிகுறியாகும்.
16.
let rec monochromatize a b c:=
if a > 0 then
a, b, c:= a - 1, b - 1, c + 2
else
a:= 0 b:= 0 c:= a + b + c
return c
17.
let rec gcd a b :=
if b < > 0 then ged b (a mod b) else return
a;;
வெளியீடு:
ged 13 27;;
- : int = 1
ged 20536 7826;;
- : int = 2
18.
செயற்கூறு வகைகளின் தொடரியல்
x⇾y
x1⇾x2⇾y
x1⇾...⇾xn⇾y
'x' மற்றும் 'y'மாறிகள் செயற்கூறு வகைகளைக் குறிக்கும்.x ⇾ y என்ற செயற்கூறு வகையானவை 'x' வகையின் உள்ளீட்டைப் பெற்று 'y' வகையின் வெளியீட்டைத் திருப்பி அனுப்பும். அதே சமயம் x1⇾x2⇾y என்ற செயற்கூறு வகையானது இரண்டு உள்ளீட்டின் வகை 'x1' ஆகும். இரண்டாவது உள்ளீட்டின் வகை 'x2' ஆகும். x1 ⇾...⇾xn ⇾y யில் n அளபுருக்களின் உள்ளீட்டு வகை x ஆகும். வெளியீட்டின் வகை 'y' ஆகும்.
19.
செயற்கூற்றை வரையறுப்பதற்கான தொடரியல், கணித பயன்பாட்டோடு நெருக்கம் கொண்டது. வரையறை let என்ற சிறப்புச் சொல்லோடு அறிமுகப்படுத்தப்படுகிறது. அதனைத் தொடர்ந்து செயற்கூறின் பெயர் மற்றும் அதனுடைய செயலுருபுகள் பிறகு செயலுருபுவைக் கணக்கீடு செய்யும் வாய்ப்பாடு. குறிக்குப் பிறகு எழுத வேண்டும். தற்சுழற்சி செயற்கூற்றை வரையறுக்க விரும்பினால் let-க்குப் பதிலாக let rec என்று பயன்படுத்த வேண்டும்.
செயற்கூறு வரையறையின் தொடரியல்:
let rec fn a1 a2...an:=k
இங்கு 'fn' என்பது ஒரு மாறி ஆகும். இது செயற்கூறின் பெயரைக் குறிக்கும் குறிப்பெயராகும். 'a1' முதல் 'an' வரை உள்ள மாறிகள் அளபுருக்களைக் குறிக்கும் குறிப்பெயராகும். 'fn' என்பது தற்சுழற்சி செயற்கூறினால் 'rec' என்ற சிறப்புச் சொல் தேவை, இல்லையெனில் அதை விட்டு விடலாம்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards