12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 09/09/2019
நிதிப் பொருளியல்
12ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
பற்றாக்குறை வரவு செலவுத் திட்டம் என்பதன் பொருளாவது
அரசின் செலவை விட அரசின் வருவாய் அதிகம்
அரசின் நடப்புக்கனக்குச் செலவு நடப்புக்கணக்கு வருவாயை விட அதிகம்
அரசின் மொத்தச் செலவு மொத்த வருவாயைவிட அதிகம்
மேலே கூறியவற்றில் எதுவும் இல்லை
2.
பற்றாக்குறை நிதியாக்கத்தின் அடிப்படை நோக்கமாவது
பொருளாதார முன்னேற்றம்
பொருளாதார நிலைத்தன்மை
பொருளாதார சமத்துவம்
வேலைவாய்ப்பு உருவாக்குதல்
3.
4.
GST இதற்கு சமம்?
விற்பனை வரி
தொழிற்குழும வரி
வருமான வரி
உள்ளாட்சி வரி
5.
தற்கால அரசு எனப்படுவது
நவீன அரசு எனப்படுவது
மேல்மட்டத்தில் உள்ளவர்களின் அரசு
நலம் பேணும் அரசு
காவல் அரசு
6.
"பொதுக்கடன்" என்பதன் பொருள் யாது?
7.
GST யின் கூறுகள் யாவை?
8.
நேர்முக வரிக்கு இரு எடுத்துக்காட்டு தருக.
9.
பொதுக்கடனைத் திரும்பச் செலுத்துவதற்கான மூன்று முறைகளைக் கூறுக.
10.
முதன்மைப் பற்றாக்குறை என்றால் என்ன?
11.
நேர்முக மற்றும் மறைமுக வரிகளுக்கிடையேயான மூன்று வேறுபாடுகளைக் கூறுக.
12.
நிதிக் கொள்கைகளின் கருவிகள் எவை? விளக்குக.
13.
கூட்டாட்சி நிதியின் கொள்கைகளை விளக்குக.
1.
(c)
அரசின் மொத்தச் செலவு மொத்த வருவாயைவிட அதிகம்
2.
(a)
பொருளாதார முன்னேற்றம்
3.
(b)
4.
(a)
விற்பனை வரி
5.
(c)
நலம் பேணும் அரசு
6.
"பொதுக்கடன் என்பது நிதிக் கருவிகள் வாயிலாக அரசானது தனியார் துறையிலுள்ள தனிமனிதர்கள் அல்லது நிறுவனங்களிடம் பெறுவதாகும். இதனைக் கொண்டு தனியார் துறையைத் தூண்டி அதன் மனித வளங்கள், பிற உண்மையான வளங்களைப் பெருக்குவதற்கும், அந்த நிதியினைக் கொண்டு வளங்களை வாங்குதல் அல்லது நலத்தை உருவாக்குதல் அல்லது மானியங்களை வழங்குதல் ஆகியவற்றை செய்தலைக் குறிப்பதாகும்.”
7.
GST-ன் உள்ளடக்கங்கள் மூன்று வகைப்படும் அவை.
CGST - மாநிலத்திற்குள்ளே நடைபெறுகிற விற்பனையில் மத்திய அரசால் வசூலிக்கப்படுவதாகும். (எ.கா. மாநிலத்திற்குள்/ ஒன்றியப்பகுதி)
SGST- மாநிலத்திற்குள் நடைபெறும் விற்பனையில் மாநில அரசால் வசூலிக்கப்படுவதாகும். (எ.கா. மாநிலத்திற்குள்/ஒன்றியப்பகுதி)
IGST- மாநில அரசுகளுக்கிடையேயான விற்பனையில் மத்திய அரசால் வசூலிக்கப்படுவதாகும். (எ.கா. மராட்டிய மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு பொருள் விற்பனை).
8.
நேர்முக வரிக்கு உதாரணங்களாவன;
1. வருமான வரி
2. சொத்து வரி
9.
பொதுக்கடனை திரும்ப செலுத்தும் முறைகளாவன:
வரவு செலவுத் திட்ட உபரி:
உபரி வரவு செலவுத் திட்டத்தை அரசு தாக்கல் செய்யும்போது அந்த உபரியை கடன் திருப்பிச் செலுத்த பயன்படுத்திக் கொள்ளும்.
பொது வருவாய், பொதுச் செலவைவிட அதிகரிக்கும் போது உபரி ஏற்படுகிறது.
பகுதியாகச் செலுத்துதல்:
இந்த முறையின் கீழ் அரசு பொதுக்கடனை சமமான ஆண்டு தவணைகளாகச் செலுத்துகிறது.
இது பொதுக் கடனைச் செலுத்தும் மிக எளிதான முறையாகும்.
வட்டி வீதத்தை குறைத்தல்:
நிதிச் சிக்கல் ஏற்படும் நேரங்களில் கட்டாயமாக வட்டியைக் குறைத்துக் கடனை செலுத்துவதும் ஒரு வகையான கடன் தீர்வு முறையாகும்.
10.
முதன்மைப் பற்றாக்குறையானது நிதி பற்றாக்குறையிலிருந்து வட்டி செலுத்தலை கழித்த பின் உள்ள பற்றாக்குறையாகும். இது அரசின் உண்மையான சுமையைக் காட்டும்.
மேலும் இதில் முன்னர் வாங்கிய கடனுக்கான வட்டியைக் கணக்கில் கொள்ளாது. எனவே முதன்மைப் பற்றாக்குறை என்பது அரசின் கடனுக்கான குறிப்பாக வட்டி செலுத்தலுக்கான தேவையைக் குறிக்கும்.
எனவே நிதிப் பற்றாக்குறை முதன்மைப் பற்றாக்குறையைவிட அதிகமாக இருக்கும்.
| முதன்மைப் பற்றாக்குறை (PD) = நிதிப்பற்றாக்குறை (FD) - வட்டி செலுத்துதல் (IP) |
11.
| ஒப்பீட்டிற்கான அடிப்படை | நேர்முக வரி | மறைமுக வரி |
| பொருள் | நேர்முக வரி என்பது ஒருவரின் வருமானம், செல்வத்தின் மீது விதிக்கப்பட்டு நேரடியாக அரசுக்குச் செலுத்துவதாகும். | மறைமுக வரி என்பது ஒருவர் நுகரும் பண்டங்கள், பணிகள் மீது விதிக்கப் பட்டு மறைமுகமாக அரசுக்குச் செலுத்துவதாகும் . |
| இயல்பு | வளர்வீதம் | தேய்வீதம் |
| சுமையும் தாக்கமும் | ஒரே ஒருவர் மீது விழுகிறது. | பலர் மீதும் வரிச்சுமை விழுகிறது. |
12.
நிதிக் கொள்கை சில நிதிக் கருவிகள் மூலம் செயல்படுத்தப்படுகிறது. அவையாவன, வரி விதித்தல் :
வரிகள் மக்களிடமிருந்து வருமானத்தை அரசிற்கு மாற்றுகிறது.
வரிகள் நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ இருக்கும்.
எனவே பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வரியை அதிகப்படுத்த வேண்டும்.
மந்த காலத்தில் வரிகள் குறைக்கப்படவேண்டும்.
பொதுச் செலவு :
பொதுச் செலவு பணியாளர்களின் கூலியையும் சம்பளங்களையும் அதிகரிக்கும்போது பண்டங்கள், பணிகளுக்கான மொத்தத் தேவை உயருகிறது.
ஆகையால் பொதுச் செலவு பின்னிறக்கத்தையும், பணவீக்கத்தையும் கட்டுப்படுத்த உதவுகிறது.
பொதுக்கடன் :
அரசு, கடன் மூலம் பொது மக்களிடமிருந்து அரசிற்கு பணத்தை மாற்றம் செய்கிறது.
அது பின்னர் மக்களுக்கு திரும்ப வட்டியோடு செலுத்தப்படுகிறது. இதனால் அரசிடமிருந்து பணம் மக்களுக்கு மாற்றப்படுகிறது.
13.
கூட்டாட்சியின் கொள்கைகள் :
சுதந்திரம் :
கூட்டரசு நிதி முறையின் கீழ், ஒவ்வொரு அரசும் தன்னுடைய நிதியில் தன்னாட்சி அதிகாரம் கொண்டதாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு அரசும் வருவாய் ஆதாரங்கள், வரி விதிப்பதற்கான அதிகாரம், பணத்தைக் கடன் வாங்குவது, செலவினை சமாளிப்பது முதலானவை பற்றி தன்னாட்சி பெற்றிருக்க வேண்டும்.
சமத்துவம்:
சமத்துவ நீதியின் அடிப்படையில், மாநிலங்கள் நியாயமான வருவாய்ப் பங்கினைப் பெறும் வண்ணம் வளங்கள் பங்கீடு செய்யப்பட வேண்டும்.
ஒரே மாதிரியான தன்மை:
கூட்டரசு முறையில், ஒவ்வொரு மாநிலமும் கூட்டாட்சி நிதிக்கு சம வரி செலுத்துதல்களை செய்ய வேண்டும்.
நிதி வசதி:
கூட்டரசு நிதி முறையில், மத்திய மாநில அரசுகளும் புதிய வரி ஆதாரங்களை தங்களது நிதி தேவைக்கேற்றவாறு பெருக்கிக் கொள்ள முடியும்.
ஒருங்கிணைப்பும் ஒன்றுபடுதலும்:
அனைத்து நிதிமுறைகளும் முழுவதும் நல்ல முறையில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.
நாட்டின் பல்வேறு அடுக்குகளுக்கிடையே உள்ள நிதி முறைகளில் ஒருங்கிணைப்பு அவசியமாகிறது.
செயல் திறன் :
நிதிமுறைகளை ஒன்றாக ஒருங்கிணைத்து, திறமையான முறையில் நிர்வகிக்கப்பட வேண்டும்.
ஏய்ப்பு, மோசடி ஆகியவற்றுக்கான வாய்ப்புகள் இருக்கக் கூடாது.
நிர்வாகச் சிக்கனம் : வசூலிக்கும் செலவு குறைவாக இருப்பதோடு அதிக வருவாய் பெற்று அரசின் பிற துறைகளுக்குச் செலவிடுவதற்கு ஏதுவாக அமைய வேண்டும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards