12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 03/10/2019
மின்காந்தத்தூண்டலும் மாறுதிசை மின்னோட்டமும்
12ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
மின் மற்றும் இயந்திர அளவுகளுக்கிடையேயான ஒப்புமைகளைக் கூறு.
2.
ஒரு AC சுற்றின் கட்ட வெக்டார் எவ்வாறு வரையறுக்கப்படுகிறது.
3.
மாறுதிசை மின்னோட்டத்தின் சராசரி மதிப்பிற்கான கோவையை பெறுக.
4.
சுழல் மின்னோட்டத்தின் குறைபாடுகள் யாவை? எவ்வாறு தவிர்க்கலாம்?
5.
மின்காந்த தூண்டலின் முக்கியத்துவத்தைக் கூறு.
6.
சென்னையில் புவி காந்தப்புலத்தின் கிடைத்தளக்கூறு 4.04 x 10-5 T கொண்ட ஒரு இடத்தில் 7.2 m உயரமுள்ள ஒரு கட்டிடத்தின் மேற்புறத்தில் இருந்து 0.5 m நீளமுள்ள கடத்தும் தண்டு தடையின்றி விழுகிறது. தண்டின் நீளம் புவிகாந்தப்புலத்தின் கிடைத்தளக்கூறுக்கு செங்குத்தாக இருப்பின், தண்டானது தரையை தொடும்போது தண்டில் தூண்டப்பட்ட மின்னியக்கு விசையைக் காண்க (g = 10 m s-2 s–2 என்ற சீரான முடுக்கத்துடன் விழுவதாகக் கொள்க)
7.
ஒரு நேரான கடத்தக்கூடிய கம்பியானது ஒரு குறிப்பிட்ட உயரத்திலிருந்து அதன் நீளம் கிழக்கு – மேற்கு திசையில் உள்ளவாறு கிடைமட்டமாக விழச் செய்யப்படுகிறது. அதில் ஒரு மின்னியக்கு விசை தூண்டப்படுமா? உனது விடையை நியாயப்படுத்துக.
8.
ஒரு உருளைவடிவ சட்டக்காந்தம் ஒரு வரிச்சுருளின் அச்சின் வழியே வைக்கப்பட்டுள்ளது. காந்தமானது சுருளின் அச்சைப் பொருத்து சுழற்றப்பட்டால், சுருளில் மின்னோட்டம் தூண்டப்படுமா என்பதைக் காண்க.
9.
ஒரு சுற்றில் AC–இன் சராசரி திறனுக்கான கோவையைப்பெறுக. அதன் சிறப்பு நேர்வுகளை விவரி.
10.
மின்தூண்டி மற்றும் மின்தேக்கி மின்மறுப்பை வரையறு. அதன் அலகுகளைத் தருக.
1.
| மின் அமைப்பு | இயந்திர அமைப்பு | |
|---|---|---|
| 1 | மின்னூட்டம் q | இடப்பெயர்ச்சி x |
| 2 | மின்னூட்டம் \(i=\frac { dq }{ dt } \) | திசைவேகம் \(v=\frac { dx }{ dt } \) |
| 3 | மின்தூண்டல் எண் L | நிறை m |
| 4 | மின்தேக்குத்திறனின் தலைகீழி \(\frac { 1 }{ c } \) | விசை மாறிலி k |
| 5 | மின் ஆற்றல் = 1/2 \(\left( \frac { 1 }{ c } \right) { q }^{ 2 }\) | நிலை ஆற்றல் = 1/2 kx2 |
| 6 | காந்த ஆற்றல் = 1/2 Li2 | இயக்க ஆற்றல் = 1/2 mv2 |
| 7 | மின் காந்த ஆற்றல் U = 1/2 \(\left( \frac { 1 }{ c } \right) { q }^{ 2 }\) + 1/2 Li2 | இயந்திர ஆற்றல் E = 1/2 kx2 + 1/2 mv2 |
2.
(i) கோட்டுத் துண்டின் நீளம், Vm or Im ற்கு சமமாக உள்ளது.
(ii) கோண திசைவேகம் ω ஆனது V or i ன் கோண அதிர்வெண்ணுக்கு சமமாக உள்ளது.
(iii) எந்த ஒரு செங்குத்து அச்சிலும் உள்ள கட்ட வெக்டரின் வீழ்ச்சி V அல்லது i ன் கண நேர மதிப்பை தருகிறது.
(iv) கட்ட வெக்டரும், குறிப்பு அச்சுக்கும் (x) இடையே உள்ள கோணம் V அல்லது i ன் கட்டத்தை குறிக்கிறது.
3.
மாறுதிசை மின்னோட்டத்தின் சராசரி மதிப்பு என்பது ஒரு நேர் அரைச்சுற்று (அ) எதிர் அரைச் சுற்றில் உள்ள மின்னோட்டத்தின் அனைத்து மதிப்புகளின் சராசரி ஆகும்.
i = Im sin ωt = Im sin θ
சிறுபட்டையின் பரப்பு = i d θ
நேர் அரைச்சுற்றின் பரப்பு = \(\int _{ o }^{ \pi }{ id\theta } =\int _{ o }^{ \pi }{ { I }_{ m } } sin\theta d\theta \)
\(={ I }_{ m }{ \left[ -cos\theta \right] }_{ o }^{ \pi }=-{ I }_{ m }[cos\pi -cos\theta ]\)
= 2 Im
மாறுதிசை மின்னோட்ட சராசரி மதிப்பு Iav = \(\frac { 2{ I }_{ m } }{ \pi } \)
Iav = -0.637 Im
4.
(i) கடத்தியில் சுழல் மின்னோட்டம் பாயும் போது அதிக அளவில் ஆற்றல் வெப்ப வடிவில் வெளியிடப்படுகிறது.
(ii) ஆற்றல் இழப்பு தவிர்க்க முடியாது. ஆனால் தகுந்த நடவடிக்கைகளால் பெருமளவு குறைக்கப்படும்.
குறைக்கும் வழிகள்:
(i) மின்மாற்றி உள்ளகம் ஒன்றுடன் ஒன்று காப்பிடப்பட்ட சிறு தகடுகளால் உருவாக்கப்படுவதால் ஆற்றல் இழப்பு குறைக்கப்படும்.
(ii) மின்மோட்டருக்கு கம்பிச்சுற்றுகள் காப்பிடப்பட்ட கம்பிகளின் தொகுப்பால் உருவாக்கப்படுகின்றன.
(iii) அதிக அளவிலான சுழல் மின்னோட்டங்கள் பாய்வதை மின்காப்பு அனுமதிக்காது. எனவே இழப்பு சிறுமமாக குறைக்கப்படும்.
5.
(i) இன்றைய வாழ்வில் எல்லா இடங்களிலும் மின்காந்த தூண்டல் பயன்படுகிறது.
(ii) வீட்டு உபயோக சாதனம் முதல் பெரிய தொழிற்சாலை சாதனம் வரை செயல்பட மின்சாரம் தேவை.
(iii) கைபேசி முதல் கணினி, இணையம் வரை, மின்சார கிடார் முதல் செயற்கைக் கோள் தகவல் தொடர்பு வரை மின்காந்தத் தூண்டல் உதவுகிறது.
(iv) மின்காந்தத் தூண்டல் படி மின்னியற்றிகள் மற்றும் மின்மாற்றிகள் மூலம் மின்திறனுக்கான தேவை நிறைவு செய்யப்படுகிறது.
6.
l = 0.5 m; h = 7.2 m; u = 0 m s-1;
g = 10 m s-2; BH = 4.04 x 10-5 T
தண்டின் இறுதி திசைவேகம்
v2 = u2 + 2gh
= 0 + (2 x 10 x 7.2)
v2 = 144
v = 12 m s-1
தண்டானது தரையைத் தொடும்போது தூண்டப்பட்ட மின்னியக்கு விசை ε = BHlv
= 4.04 x 10-5 x 0.5 x 12
= 242.4 μV
7.
ஆம்! கம்பியில் ஒரு மின்னியக்கு விசை தூண்டப்படும். ஏனெனில் அது புவிகாந்தப்புலத்தின் கிடைத்தளக் கூறுக்கு செங்குத்தாக இயங்குகிறது. அப்பொழுது புவிகாந்தப்புலத்தின் காந்தப்புலக் கோடுகளை வெட்டுகிறது.
8.
ஒரு உருளை வடிவ காந்தத்தின் காந்தப்புலம் அதன் அச்சைப் பொருத்து சமச்சீராக உள்ளது. காந்தமானது வரிச்சுருளின் அச்சின் வழியே சுழற்றப்படுவதால் வரிச்சுருளில் தூண்டப்பட்ட மின்னோட்டம் உருவாகாது. ஏனெனில் காந்தத்தின் சுழற்சியால் வரிச்சுருளோடு தொடர்புடைய பாயம் மாறுவதில்லை.
9.
ஒரு சுற்றின் திறன் என்பது அச்சுற்றில் மின் ஆற்றல் நுகரப்படும் வீதம் என வரையறுக்கப்படுகிறது. அது மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்டம் ஆகியவற்றின் பெருக்குத்தொகையால் குறிக்கப்படுகிறது. ஒரு மாறுதிசை மின்னோட்டச் சுற்றில் மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்டம் நேரத்தைப் பொருத்து தொடர்ச்சியாக மாறுகின்றன. முதலில் ஒரு கணத்தில் உள்ள திறனை நாம் கணக்கிட்டு, பிறகு ஒரு முழுச்சுற்றுக்கு அதன் சராசரியை மதிப்பிடலாம்.
தொடர் மின்தூண்டி RLC சுற்றில், கணநேர மாறுதிசை மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்டமானது
\(\upsilon \) = Vm sin ωt மற்றும் i = Im sin (ωt + ф)
இங்கு ϕ என்பது υ மற்றும் i இடையே உள்ள கட்டக்கோணம் ஆகும். கணநேர திறனை (Instantaneous power) இவ்வாறு எழுதலாம்.
கணநேர திறன் P = \(\upsilon \)i
= Vm Im sin ωt sin (ωt + ф)
= Vm Im sin ωt (sinωt cos ф - cosωt sinф)
P = Vm Im (cosфsin2 ωt - sinωt cosωt sinф)
இங்கு ஒரு சுற்றுக்கான sin2 ωt ன் சராசரி \(\frac { 1 }{ 2 } \) ஆகும் மற்றும் sin c ω ω t t os இன் சராசரி சுழியாகும். இந்த மதிப்புகளைப் பிரதியிட்டு, ஒரு சுற்றுக்கான சராசரி திறனைப் பெறலாம்.
Pav = VmIm cos ф x \(\frac { 1 }{ 2 } \)
\(\frac { { V }_{ m } }{ \sqrt { 2 } } \frac { { I }_{ m } }{ \sqrt { 2 } } cos\phi \)
∴ Pav = VRMS IRMS cos ф
இங்கு VRMS IRMS தோற்றத்திறன் எனப்படும். cos ф திறன் காரணி (Power factor) ஆகும். ஒரு மாறுதிசை மின்னோட்டச் சுற்றின் சராசரி திறன் சுற்றின் உண்மைத் திறன் (True power) எனவும் அழைக்கப்படுகிறது.
சிறப்பு நேர்வுகள்:
i) மின்தடைப் பண்புள்ள சுற்றுக்கு, மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்டம் இடையே உள்ள கட்டக்கோணம் சுழியாகும் மற்றும் cos φ = 1.
∴ Pav = VRMS IRMS
ii) மின்தூண்டல் அல்லது மின்தேக்கிப் பண்புள்ள சுற்றுக்கு கட்டக் கோணமானது
ф = 土 π/2 மற்றும் \(\left( \cos\pm \frac { \pi }{ 2 } \right) \)= 0
∴ Pav = 0
iii) தொடர் RLC சுற்றுக்கு கட்டக் கோணம்
\(\phi ={ \tan }^{ -1 }\left( \frac { { X }_{ L }-{ X }_{ C } }{ R } \right) \)
∴ Pav = VRMS IRMS cos ф
iv) ஒத்ததிர்வில் உள்ள தொடர் RLC சுற்றுக்கு கட்டக்கோணம் சுழியாகும் மற்றும் cos 0o = 1
∴ Pav = VRMS IRMS
10.
மின்தூண்டியின் மின்மறுப்பு:
\({ I }_{ m }=\frac { { V }_{ m } }{ \omega L } \) ஐ \({ I }_{ m }=\frac { { V }_{ m } }{ R } \) உடன் ஒப்பிட மின்தூண்டி அளிக்கும் மின்தடை மின்தூண்டியின் மின்மறுப்பு XL எனப்படும்.
XL = ωL
இதன் அலகு ஓம்(Ω)
XL = 2πfL
f = 0 எனில் XL லட்சிய மின்தூண்டி மின்மறுப்பு அளிக்காது.
மின்தேக்கியின் மின்மறுப்பு:
\({ I }_{ m }=\frac { { V }_{ m } }{ 1/c\omega } \) ஐ \({ I }_{ m }=\frac { { V }_{ m } }{ R } \) உடன் ஒப்பிட
சுற்றுக்கு மின்தேக்கி அளிக்கும் மின்தடை மின்மறுப்பு Xc எனப்படும்.\({ X }_{ C }=\frac { 1 }{ c\omega } \)
இதன் அலகு ஓம்(Ω)
f = 0 எனில் \({ X }_{ C }=\frac { 1 }{ \omega c } =\frac { 1 }{ 2\pi fc } =\frac { 1 }{ 0 } =\infty \)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards