12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/09/2019
p-தொகுதி தனிமங்கள் - I
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
டியூராலுமினியம் என்பது பின்வரும் எந்த உலோகங்களின் உலோகக்கலவை.
Cu, Mn
Cu, Al, Mg
Al, Mn
Al, Cu, Mn, Mg
2.
AlF3 ஆனது KF முன்னிலையில் மட்டுமே HF-ல் கரைகிறது. இதற்கு பின்வருவனவற்றுள் எது உருவாவது காரணமாக அமைகிறது
K3[AlF3H3]
K3[AlF6]
AlH3
K[AlF3H]
3.
பின்வருவனவற்றுள், அதிக மூலக்கூறு நிறையுடைய சிலிக்கோன் பலபடியினுடைய ஒருபடியாக(monomer) இல்லாதது எது?
Me3SiCl
PhSiCl3
MeSiCl3
Me2SiCl2
4.
டை போரேனில், வளைந்த பால பிணைப்பில் (வாழைப்பழ பிணைப்பு) ஈடுபட்டுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை _______.
ஆறு
இரண்டு
நான்கு
மூன்று
5.
போராக்ஸின் நீர்க் கரைசலானது _______.
நடுநிலைத் தன்மை உடையது
அமிலத் தன்மை உடையது
காரத் தன்மை உடையது
ஈரியல்புத் தன்மை கொண்டது
6.
ஜியோலைட்டுகள் பற்றி குறிப்பு வரைக.
7.
p தொகுதி தனிமங்களின் முதல் தனிமத்தின் முரண்பட்ட பண்புகள் பற்றி சிறுகுறிப்பு வரைக.
8.
CO ஒரு ஒடுக்கும் காரணி. ஒரு எடுத்துக்காட்டுடன் இக்கூற்றை நிறுவுக.
9.
பின்வரும் வினைகளை பூர்த்தி செய்க.
அ. B (OH)3 + NH3 \(\longrightarrow\)
ஆ. Na2B4O7 + H2SO4H2O\(\longrightarrow\)
இ. B2H6 + 2NaOH + 2H2O\(\longrightarrow\)
ஈ. B2H6 + CH3OH\(\longrightarrow\)
உ. BF3 + 9 H2O\(\longrightarrow\)
ஊ. HCOOH + H2SO4\(\longrightarrow\)
எ. SiCl4 + NH3\(\longrightarrow\)
ஏ. SiCl4 + C2H5OH\(\longrightarrow\)
ஐ. B + NaOH\(\longrightarrow\)
ஒ. H2B4O7
10.
டைபோரேனின் வடிவமைப்பினை விவரிக்க.
11.
சிலிக்கோன்களின் பயன்களைத் தருக.
12.
CO மற்றும் CO2 ன் வடிவங்களைத் தருக.
13.
போராக்ஸின் பயன்களைத் தருக.
1.
Al-95%, Cu-4% , Mn-0.5%, Mg-0.5%
2.
AlF3 + 3KF ➡ K3[AlF6]
3.
(a)
Me3SiCl
4.
இரண்டு 3c-2e பிணைப்புகள் காணப்படுகின்றன. அதாவது இப்பிணைப்பு நான்கு எலக்ட்ரான்களைக் கொண்டுள்ளது.
5.
Na2 B2 O2 + 7H2O ⇌ 2NaOH + 4H3BO3
Strong base Weak acid
6.
(i) ஜியோலைட்டுகள் என்பவை அலுமினியம், சிலிக்கான் மற்றும் ஆக்சிஜன் ஆகியவற்றை ஒழுங்கான முப்பரிமாண கட்டுமான அமைப்பில் கொண்டுள்ள முப்பரிமாண படிகத் திண்மங்களாகும்.
(ii) இவை நீரேறிய சோடியம் அலுமினோ சிலிகேட்டுகளாகும்.
(iii) பொதுவான வாய்ப்பாடு Na2O.(AI2O3).x(SiO2).y(H2O) (x = 2 முதல் 10; y = 2 முதல் 6 வரை)
(iv) ஜியோலைட்டுகள் நுண்துளை அமைப்பைக் கொண்டுள்ளன. இத்துளைகளில் ஒன்றை நேர்மின் சுமை கொண்ட சோடியம் அயனிகளும், நீர் மூலக்கூறுகளும் தளர்வாக இருத்தி வைக்கப்பட்டுள்ளன. பங்கிடப்பட்ட ஆக்சிஜன் அணுக்களின் மூலம் Si மற்றும் Al அணுக்கள் நான்முகி அமைப்பில் ஒன்றுடன் ஒன்று ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
(v) ஜியோலைட்டுகள், களிமண் கனிமத்தை ஒத்துள்ளன. ஆனால் அவற்றின் படிகச் அமைப்பில் வேறுபடுகின்றன.
(vi) ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட தடங்கள் மற்றும் கூடுகளைக் கொண்ட, தேன்கூட்டு அமைப்பை ஒத்த முப்பரிமாண படிக அமைப்பை ஜியோலைட்டுகள் பெற்றுள்ளன. ஜியோலைட்டு கட்டமைப்பு நகராமல் இறுக்கமாக உள்ள போதும், நுண் துளைகளின் வழியாக நீர் மூலக்கூறுகள் உள்ளேயும், வெளியேயும் மிக எளிதாக நகர்கின்றன.
(vii) ஏறத்தாழ ஒரே சீராக அமைந்திருக்கும் நுண்துளைகளின் உருவளவு இக்கட்டமைப்பின் மற்றொரு ஜியோலைட்டுகள் நீரின் நிரந்தரக் கடினத் தன்மையை நீக்க பயன்படுகிறது.
7.
1. 13ம் தொகுதியின் முதல் தனிமமான போரான் ஒரு உலோக போலியாகும். ஆனால் மற்ற தனிமங்கள் வினைதிறன் மிக்க உலோகங்களாகும்.
2. மேலும் போரான் ஆனது 14 ஆம் தொகுதியைச் சார்ந்த சிலிக்கானுடன் மூலைவிட்ட தொடர்பை பெற்றுள்ளது.
3. போரான் மற்றும் சிலிக்கானின் ஆக்சைடுகள் அவற்றின் அமிலப்பண்பில் ஒத்துள்ளன. இவை இரண்டும் எளிதில் நீராற்பகுப்படையும் சகப்பிணைப்பு ஹைட்ரைடுகளை உருவாக்குகின்றன.
4. இதே போல போரான் ட்ரைபுளூரைடைத் தவிர, இவ்விரு தனிமங்களின் ஹேலைடுகளும் எளிதில் நீராற்பகுப்படைகின்றன.
5. 14 ஆம் தொகுதியில், முதல் தனிமமான கார்பன் ஒரு அலோகமாகும். அதேசமயம், மற்ற தனிமங்கள் உலோக போலிகளாகவோ (சிலிக்கான்-ஜெர்மானியம்) அல்லது உலோகங்களாகவோ (டின்-லெட்) உள்ளன.
6. கார்பன் அணுவானது அது இடம்பெற்றுள்ள தொகுதியிலுள்ள மற்ற தனிமங்களைப் போலல்லாமல், C = C, C = O... போன்ற பல்பிணைப்புகளை உருவாக்கும் தன்மையைப் பெற்றுள்ளது. கார்பன் அணுவானது மற்றொரு கார்பன் அணுவுடனோ அல்லது மற்ற அணுக்களுடனோ நீண்ட சங்கிலித் தொடர் சேர்மங்களை உருவாக்கும் திறனைப் பெற்றுள்ளது.
7. இப்பண்பு சங்கிலித்தொடராக்கம் என அறியப்படுகிறது.
8. தொகுதியில் கீழாக செல்லும்போது சங்கிலித் தொடராக்கத் திறன் குறிப்பிடத்தகுந்த அளவில் குறைகிறது. (C >> Si > Ge = Sn > Pb).
9. 15 ஆம் தொகுதியிலும், முதல் தனிமமான நைட்ரஜனானது அத்தொகுதியிலுள்ள மற்ற தனிமங்களிலிருந்து வேறுபடுகிறது.
10. கார்பனைப் போன்றே நைட்ரஜன் அணுவும் பல்பிணைப்புகளை உருவாக்கும் தன்மையைப் பெற்றுள்ளது.
11. (N = N, C = N,= O போன்றவை.) தொகுதியிலுள்ள மற்ற தனிமங்களைப் போல அல்லாமல் நைட்ரஜன் ஒரு டையாகாந்தத் தன்மை கொண்ட வாயுவாகும்.
12. 16 ஆம் தொகுதியிலும் முதல் தனிமமான ஆக்ஸிஜனும் ஈரணு மூலக்கூறாக வாயு நிலையில் காணப்படுகிறது.
13. அது அதிக எலக்ட்ரான் கவர்திறன் தன்மையைக் கொண்டிருப்பதால் ஹைட்ரஜன் பிணைப்புகளை உருவாக்குகிறது.
14. 17 ஆம் தொகுதியின் முதல் தனிமமான புளூரின் அதிகபட்ச எலக்ட்ரான் கவர்திறன் கொண்ட தனிமமாகும். தொகுதியிலுள்ள மற்ற தனிமங்களுடன் ஒப்பிடும்போது இது முற்றிலும் வேறுபட்ட பண்புகளைப் பெற்றுள்ளது.
15. ஆக்ஸிஜனைப் போலவே புளூரினும் ஹைட்ரஜன் பிணைப்புகளை உருவாக்குகிறது.
16. புளூரின் -1 ஆக்ஸிஜனேற்ற நிலையை மட்டுமே காட்டுகிறது. ஆனால் மற்ற ஹேலஜன்கள் -1 நிலையுடன் +1, +3, +5 மற்றும் +7 ஆக்ஸிஜனேற்ற நிலைகளையும் காட்டுகின்றன.
17. புளூரின் வலிமை மிக்க ஒரு ஆக்ஸிஜனேற்றக் காரணியாகும், மேலும் ஹேலஜன்களில் புளூரின் மிக அதிக வினைத் திறன் கொண்ட தனிமமாகும்.
8.
i) CO ஒரு வலிமை மிகு ஒடுக்கும் காரணியாகும்.
ii) உலோக ஆக்ஸைடை உலோகமாக ஒடுக்குகிறது
CO + Fe2O3 ⟶ 2Fe + 3CO2
9.

ஊ) HCOOH + H2SO4 ⟶ CO + H2O + H2SO4
10.
1. இரண்டு BH3 அலகுகள் இரு H-பாலங்களால் இணைந்துள்ளது.
2. 8 B-H பிணைப்புகள். எனினும் 12 இணைதிற எலக்ட்ரான்கள் மட்டும் உள்ளன.
3. 4 B-H இயல்பு சகப்பிணைப்பு. இரு B-H-B பாலங்கள் 3C-2e பிணைப்புகள்.
4. பிணைப்புப் பாலங்களிலுள்ள ஹைட்ரஜன்கள் ஒரே தளத்திலும், போரானின் நான்கு sp3 இனக்கலப்பு ஆர்பிட்டாலில், மூன்றில் ஒற்றை எலக்ட்ரான்கள் மற்றும் ஒன்று காலியான ஆர்பிட்டால் போரானின் பாதி நிரம்பிய இரண்டு எலக்ட்ரான்கள் இரண்டு ஹைட்ரஜன் அணுக்களுடன் சேர்ந்து நான்கு 2C-2e- பிணைப்புகளை தரும். ஒரு போரானின் பாதி நிரம்பிய ஆர்பிட்டால் மற்றொரு போரானின் காலியான ஆர்பிட்டால் மற்றும் ஹைட்ரஜனின் 1s ஆர்பிட்டால் மேற்பொருந்தி B-H-B உருவாகிறது.
11.
1. சிலிகோன்கள் குறைந்த வெப்பநிலை உயர்வுப் பொருளாகவும் வெற்றிட பம்புகள், உயர் வெப்பநிலை எண்ணெய்த் தொட்டியில் பயன்படுகின்றன.
2. இவை நீர் வெறுக்கும் ஆடைகள் தயாரித்தலில் பயன்படுகின்றன.
3. இவை, மின் மோட்டார்கள் மற்றும் வீட்டு உபயோக பொருள்களில் மின்காப்பு பொருளாக பயன்படுகின்றன.
4. சிலிகோன்கள் சேகரிக்கப்பட்ட பெயிண்ட் மற்றும் எனாமல் அதிக வெப்பநிலை, சூரிய ஒளி, ஈரப்பதம் மற்றும் வேதிப் பொருள்கள் தாக்குதல் ஆகியவற்றை தாக்குபிடிக்கின்றன.
12.
| வ.எண் | ஆக்ஸைடுகள் | வடிவமைப்பு | அளவீடுகள் |
| 1 | CO | கார்பனுக்கும், ஆக்ஸிஜனுக்கும் இடையே மூன்று எலக்ட்ரான் இரட்டைகள் பங்கிடப்பட்டுள்ளன C-O பிணைப்பின் நீளம் 1.128Å. | |
| 2 | CO2 | இரண்டு C-O பிணைப்புகளும் ஒரே நீளத்தைக் கொண்டுள்ளன. மூலக்கூறில் இரண்டு C-O சிக்மா பிணைப்பு உள்ளது. கூடுதலாக ஒரு மூன்று அணுக்களையும் பிணைக்கும் வகையில் ஒரு 3c-4e பிணைப்பும் காணப்படுகிறது. |
13.
1. நிறமுள்ள உலோக அயனிகளைக் கண்டறிவதில் போராக்ஸ் பயன்படுகிறது. (போராக்ஸ் மணி சோதனை)
2. இது கண் கண்ணாடி, போரோசிலிகேட் கண்ணாடி, எனாமல் மற்றும் பளபளப்பான மண் பாண்டங்கள் தயாரிக்க பயன்படுகிறது.
3. இது உலோகவியலில் இலக்கியாக பயன்படுகிறது.
4. உணவு பதப்படுத்தியாக செயலாற்றும் தன்மையுடையது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards