12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 01/08/2019
கணினி பயன்பாடுகள் முதல் இடைத்தேர்வு மாதிரி வினாத்தாள்
12ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
MySQL தரவுதளத்தில், ஒரு தரவுதளத்தின் முழு வடிவமைப்பு கட்டமைப்பை பிரதிபலித்தல் _________ என அழைக்கப்படுகிறது.
திட்டம் (Schema)
பார்வை (View)
நிகழ்வு (Instance)
அட்டவணை (table)
2.
PageMaker இல் ஆவணத்தை அச்சிடப் பயன்படும் விசைப்பலகை குறுக்கு வழி _______.
Ctrl+A
Ctrl+P
Ctrl+C
Ctrl+V
3.
Place கட்டளை _______ பட்டியில் இடம்பெற்றிருக்கும்.
File
Edit
Layout
Window
4.
RTF கோப்பு வடிவத்தை அறிமுகப்படுத்தியது _______.
TCS
Microsoft
Apple
IBM
5.
_________ என்பது ஒன்றிற்கு மேற்பட்ட ஊடக வகையான உரை, வரைகலை, ஒளிக்காட்சி, அசைவூட்டல் மற்றும் ஒலி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு வகைப் பயன்பாட்டைக் குறிக்கும்.
நிறைவேற்றப்படும் கோப்பு
கணினி பதிப்பகம்
பல்லூடகம்
மீவுரை
6.
தரவுதள உறவுநிலைகளின் வகைகளை பட்டியலிடுக.
7.
SQL பற்றி குறிப்பு வரைக?
8.
கோப்பு செயலாக்க முறையின் (File Processing System) சில குறைபாடுகளை பட்டியலிடுக.
9.
எலிப்ஸ் டூல் மற்றும் எலிப்ஸ் ஃபிரேம் டூல் வேறுபடுத்துக.
10.
பேஜ்மேக்கர் மென்பொருளை திறப்பதற்கான வழிமுறைகளைக் கூறு.
11.
வரையறு – பல்லூடகம் மற்றும் அதன் சிறப்பம்சம்
12.
MYSQL –ல் பயனருக்கு பயன்படும் ஏதேனும் 5 சிறப்பியல்புகளைப் பட்டியலிடு.
13.
மாஸ்டர் பக்கத்தின் பயன் என்ன?
14.
பிரிக்கப்பட்ட உரைத்தொகுதியை எவ்வாறு சேர்ப்பாய் ?
15.
பேஜ்மேக்கர் என்றால் என்ன? அதன் பயன்களை கூறு?
16.
அசைவூட்டலின் சிறப்பம்சங்கள் மற்றும் தொழில் நுட்பங்களை விவரிக்கவும்
17.
பல்லூடக கூறுகளை சுருக்கமாக விவரி
18.
பொருத்தமான எடுத்துக்காட்டுடன் துணை வினவல்கள் (Sub queries) பற்றி விரிவாக விளக்கவும்.
19.
பேஜ்மேக்கர் கருவிப்பெட்டியிலுள்ள கருவிகளைப் பற்றி விவரி.
20.
பல்லூடக செயல்கள் பற்றி விரிவாக விளக்கவும்
1.
(a)
திட்டம் (Schema)
2.
(b)
Ctrl+P
3.
(a)
File
4.
(b)
Microsoft
5.
(c)
பல்லூடகம்
6.
ER மாதிரியில், இரண்டு உருப்பொருளுக்கு இடையே உறவுநிலை உள்ளது. மூன்று வகையான உறவுநிலைகள் உள்ளன. அவை:
(i) ஒன்றுடன் ஒன்று உறவு நிலை
(ii) ஒன்றுடன் பல உறவு நிலை
(iii) பலவற்றுடன் பல உறவு நிலை
7.
SQL-Structured query language தரவுத் தளங்களை அனுகவும் மற்றும் கையாளவும் பயன்படும் தரநிலை மொழியே SQL ஆகும். American National Standards Institute (ANSI) International Organization for Standardization (ISO) ஆல், தரநிலையானது முறையே அறிவிக்கப்பட்டது. SQL என்பது தரநிலை மொழியாக இருந்தாலும் வேறுபட்ட பதிப்புகள் தேவைகளைப் பூர்த்தி செய்ய பராமரிக்கப்படுகின்றன.
8.
1. தரவு நகல்கள் : ஒரே தரவானது, செயலாக்கத்திற்கான பல வளங்களால் பயன்படுத்தப்பட்டது. இது ஒரே தரவின் பல நகல்களை உருவாக்கி இடங்களை வீணாக்கியது.
2. அதிக பராமரிப்பு : அணுகல் கட்டுப்பாட்டு மற்றும் நிலைத்தன்மையைச் சரிபார்க்க அதிக பராமரிப்புத் தொகை தேவைப்பட்டது.
3. பாதுகாப்பு : தரவுக்கு குறைந்த பாதுகாப்பே வழங்கபட்டது.எனவே, கோப்பு அமைப்பின் மேற்கூறிய வரம்புகளை சமாளிக்க தரவுதள அமைப்புகள் பிரபலமானது.
9.
| கருவியின் பெயர் | கருவிப் பெட்டியிலுள்ள பயன்குறி | சுட்டுக்குறி | பயன் |
|---|---|---|---|
| எலிப்ஸ் டூல் | ![]() |
![]() |
வட்டம் மற்றும் நீள் வட்டம் வரைய உதவுகிறது. |
| எலிப்ஸ் ஃபிரேம் டூல் | ![]() |
![]() |
உரை மற்றும் வரைகலைகளை வைப்பதற்கான நீள்வட்டங்களை வரைய உதவுகிறது. |
10.
விண்டோஸ் 7 இயக்க அமைப்பில், Start > All Programs > Adobe > Page Maker 7.0 > Adobe PageMaker 7.0 என்ற வரிசையில் கிளிக் செய்து அடோப் பேஜ்மேக்கரைத் திறக்கலாம்.
11.
பல்லூடகம் என்னும் சொல் 'பல' மற்றும் 'ஊடகம்' என இரண்டு சொற்களை உள்ளடக்கியது. அதாவது ஊடகங்களின் பல வடிவங்களை ஒன்றாக இணைக்கிறது. சேமித்தல், தகவல் தொடர்பு, வழங்கல் மற்றும் உரை, ஒளி, நிழற்படம், வரைகலை மற்றும் ஒலி ஆகியவற்றின் உள்ளீடு/வெளியீடு ஊடாடுதல் போன்ற சேவைகளையும் வழங்குகிறது.
அதன் சிறப்பம்சம் :
(i) ஊடகங்களை ஒரே ஊடகத்தில் ஒரே தகவல் தொகுப்பில் ஒன்றிணைக்கிறது .
(ii) தகவல்துறையில் பல்லூடகம் சமீபத்திய செறிவூட்டும் அனுபவமாக மாறி வருகிறது .
12.
MYSQLல் உள்ள சிறப்புரிமைகள் :
| சிறப்பியல்புகள் | பயன்பாடு/செயல் (வழங்கப்பட்டால்) |
| Select _ priv | பயனர் தரவுத்தள அட்டவணைகளில் இருந்து வரிசைகளைத் தேர்வு செய்யலாம். |
| insert_ priv | பயனர் தரவுத்தள அட்டவணைகளில் வரிசைகளை செருகலாம் |
| Update_priv | பயனர் தரவுத்தள அட்டவணைகளின் வரிசைகளைப் புதுப்பிக்கலாம். |
| Delete_Priv | பயனர் தரவுத்தள அட்டவணைகளின் வரிசைகளை நீக்கலாம் |
| Create_priv | பயனர் தரவுத்தளங்களில் புதிய அட்டவணையை உருவாக்கலாம். |
| Alter_ priv | பயனர் தரவுத்தள அமைப்பில் மாற்றங்களைச் செய்யலாம். |
13.
(i) மாஸ்டர் பக்கத்தில் வைக்கப்படும் எந்தவொரு பொருளும் ஆவணத்தில் உள்ள அனைத்துப் பக்கங்களிலும் தோன்றும்.
(ii) அடுத்தடுத்த பக்கங்களில் நீங்கள் மீண்டும் அதே பொருள்களை உருவாக்க வேண்டிய அவசியமில்லை.
(iii) அதனால் நேரத்தின் அளவு குறைகிறது. மாஸ்டர் பக்கங்கள் பொதுவாக லோகோக்கள் (logos) பக்க எண்கள், தலைப்புகள் மற்றும் அடிக்குறிப்புகளைக் கொண்டிருக்கின்றன.
(iv) மேலும் அவைகள் Column guides, Ruler guides மற்றும் Margin Guides ஐயும் கொண்டுள்ளன.
14.
பிரிக்கப்பட்ட இரண்டு உரைத்தொகுதிகளை மீண்டும் ஒன்றாக இணைப்பதற்கு :
1. செருகும் புள்ளியை இரண்டாவது உரைத் தொகுதியின் கீழ்ப்பக்க கைப்பிடியில் கிளிக் செய்து அதன் மேல்பகுதி வரை இழுக்கவும்.
2. பிறகு செருகும் புள்ளியை முதல் உரைத் தொகுதியின் கீழ்ப்பக்க கைப்பிடியில் கிளிக் செய்து கீழ்நோக்கி தேவையான அளவிற்கு இழுக்கவும், இப்பொழுது பிரிக்கப்பட்ட இரண்டு உரைத் தொகுதிகளும் ஒன்றாக இணைக்கப்பட்டுவிடும்.
15.
அடோப் பேஜ்மேக்கர் என்பது ஒரு பக்க வடிவமைப்பு மென்பொருளாகும்.
பயன்கள்:
(i) இது அச்சிடுவதற்கு ஏற்ற வகையில் ஆவணங்களை வடிவமைக்கப் பயன்படுகிறது.
(ii) இதைப் பயன்படுத்தி சிறிய வணிக அட்டை முதல் பெரிய புத்தகம் வரை அனைத்தையும் வடிவமைக்கலாம்.
(iii) பக்க வடிவமைப்பு, மென்பொருளில் உள்ள கருவிகள், ஆவணத்தில் எளிதாக உரை மற்றும் வரைகலை வடிவங்களை சேர்க்க உதவுகின்றன.
(iv) உதாரணமாக, பேஜ்மேக்கரைப் பயன்படுத்தி, ஒவ்வொரு பக்கத்திலும் கட்டுரைகள் மற்றும் படங்களை வைத்து ஒரு செய்தி மடலை உருவாக்க முடியும்.
16.
அசைவூட்டலில், திரை பொருள் என்பது ஒரு வெக்டர் படமாகும்.
(i) எண் மாற்றத்தைப் பயன்படுத்தி ஒருங்கிணைப்புகளை வரையறுக்க படத்துடன் அதன் பாதையின் இயக்கம் கணக்கிடப்படும்.
(ii) குறைந்தபட்ச சட்டக விகிதம் விநாடிக்கு 16 சட்டங்கள் என இருந்தால் மென்மையான தோற்றத்தைக் கொடுக்கும்.
(iii) இயற்கை தோற்றத்திற்கு குறைந்தபட்சம் விநாடிக்கு 25 சட்டகங்களாக இருத்தல் வேண்டும்.
தொழில்நுட்பம் :
(i) அசைவூட்டல் இரு அல்லது முப்பரிமாணங்களைக் கொண்டது.
(ii) திரையில் X, மற்றும் Y அச்சுகளுக்கு இடையேயான பரப்பில் இரு பரிமாண அசைவூட்டல் நிழற்படத்தை உயிரோட்டமாகக் கொண்டு வருகிறது.
(iii) முப்பரிமாண அசைவூட்டத்தில் X, Y மற்றும் Z ஆகிய மூன்று அச்சுகளுக்கிடையே உயிரோட்டம் நடைபெறுகிறது.
(iv) அசைவூட்டல் கருவிகள் மிகவும் சக்தி வாய்ந்தவை ஆகும். இரண்டு வகையான அசைவூட்டல்களாவன:
1. பாதை அசைவூட்டல்
2. சட்டக அசைவூட்டல்
1. பாதை அசைவூட்டல் :
மாறாத பின்னணியைக் கொண்ட திரையில் ஒரு பொருளை நகர்த்துவதை உள்ளடக்கியது.
2. சட்டக அசைவூட்டல் :
பல பொருட்கள் ஒரே சமயத்தில் நகர்வதற்கு அனுமதிக்கிறது மற்றும் பின்னணி அல்லது பொருள்களும் மாறுகிறது.
17.
1. பல்லூடகம் 5 முக்கியக் கூறுகளைக் கொண்டுள்ளது. அவை
(i) உரை
(ii) நிழற்படம்
(iii) ஒலி
(iv) ஒளிக்காட்சி
(v) அசைவூட்டல்
உரை :
பல்லூடகத்தின் அடிப்படை கூறு. இது தொடர்பிற்கான மிகவும் பொதுவான வழி ஆகும்.
நிழற்படம் :
பல்லூடகத்தின் முக்கியக் கூறாகச் செயல்படுகிறது.
ஒலி :
எந்த மொழியிலும் உள்ள அர்த்தமுள்ள பேச்சு ஆகும். இசையின் இன்பம், சிறப்பு விளைவுகள் போன்றவற்றை வழங்கும் முக்கியமானக் கூறு.
ஒளிக்காட்சி :
பல்லூடகப் பயன்பாடுகளில் தகவலைத் தெரிவிக்க, சக்தி வாய்ந்த வழி ஆகும். இது பதிவு செய்யப்பட்ட நிகழ்வு, காட்சி போன்றவற்றைப் காண்பித்தால் ஆகும்.
அசைவூட்டல் :
அசையா நிழற்படங்களை மிக விரைவாகப் காட்சிப்படுத்தும் செயலாகும்.
18.
துணை வினவல்கள்:
(i) இதில் முதன்மை வினவலுக்கு உள்ளே SQL வினவல் எழுதப்படுகிறது. இது பின்னலான அல்லது துணை வினவல் எனப்படும். துணை வினவல்கள் முதலில் இயக்கப்படுகின்றன.
(ii) இதனுடைய விடையானது நிபந்தனையாக முதன்மை வினவலுக்கு அமைகிறது. துணை வினவல் கீழே உள்ள விதிகளை பின்பற்ற வேண்டும்.
1. துணை வினவல்கள் அடைப்புக் குறிக்குள் எழுதப்படவேண்டும்.
2. ஒப்பீட்டு செயற்குறிக்கு வலது புறத்தில் துணை வினவல் அமையவேண்டும்.
3. ORDER BY பிரிவு துணை வினவலில் பயன்படுத்தவில்லை, ஏனெனில் துணை வினவல்கள் அதனுள்ளேயே விடைகளை கையாள முடியாது.
(iii) EMPLOYEE அட்டவணையை கருத்தில் கொண்டால் EMPID, Name, Age D Salary ஆகிய புலங்கள் உள்ளன. மாதிரி தரவுகள் கீழே உள்ள அட்டவணை-ல் கொடுக்கப்பட்டுள்ளன
| EMPID | Name | Age | Salary |
| 101 | Ram | 35 | 15000 |
| 102 | Gopal | 41 | 30000 |
| 103 | Priya | 32 | 13000 |
| 104 | Hari | 37 | 20000 |
(iv) பின்வரும் வினவலில் SELECT கூற்றில் துணை வினவல் பயன்படுத்தப்பட்டுள்ளது. SELECT * From Employee where EMPID IN (SELECT EMPID from Emplooyee WHERE Salary < 20000);
(v) முதலில் அடைப்புக்குறிக்குள் உள்ள வினவல் இயக்கப்படும். அதன் விடையாக EMPID 101 மற்றும் 103 மீட்டெடுக்கப்படும்.
(vi) இப்பொழுது வெளியே உள்ள வினவல் இயக்கப்படும். இப்பொழுது வினவல் பின்வருமாறு : SELECT* from Employee where EmpID IN (101, 102)
(vii) இதன் வெளியீடு பின்வரும் அட்டவணையில் உள்ளது.பின்வரும் வினவலில் SELCT கூற்றில் துணை வினவல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
| EMPID | NAME | Age | Salary |
| 101 | Ram | 35 | 15000 |
| 103 | Priya | 32 | 13000 |
(viii) இதைப்போல துணை வினவல்களானது INSERT, UPDATE மற்றும் DELETE உடன் பயன்படுத்தப்படுகிறது.
19.
| கருவியின் பெயர் | கருவிப் பெட்டி | சுட்டுக் குறி | பயன் |
| பாயின்டர் டூல் | உரை மற்றும் வரைகலைப் படங்களைத் தேர்ந்தெடுக்க நகர்த்த அளவை மாற்ற | ||
| டெக்ஸ்ட் டூல் | உரையை உள்ளிட தேர்ந்தெடுக்க பதிப்பிக்க | ||
| ரொடேட்டிங் டூல் | பொருட்களைத் தேர்ந்தெடுக்க மற்றும் சுழற்ற | ||
| க்ராப்பிங் டூல் | வரைகலைகளை ஒழுங்கமைக்க | ||
| லைன் டூல் | ![]() |
நேர்கோடு வரைய | |
| கன்ஸ்ட்ரெய்ன்டு டூல் | ![]() |
கிடைமட்டமாகவும் செங்குத்தாகவும் கோடுகள் வரைய | |
| ரெக்டாங்கல் டூல் | ![]() |
சதுரம் மற்றும் செவ்வகம் வரைய | |
| ரெக்டாங்கல் ஃபிரேம் டூல் | ![]() |
உரை மற்றும் வரைகலைகளை வைப்பதற்கான செவ்வகங்களை வரைய | |
| எலிப்ஸ் டூல் | ![]() |
வட்டம் மற்றும் நீள்வட்டம் வரைய | |
| எலிப்ஸ் ஃபிரேம் டூல் | ![]() |
உரை மற்றும் வரைகலைகளை வைப்பதற்கான நீள்வட்டங்களை வரைய. | |
| பாலிகான் டூல் | ![]() |
பல கோணங்கள் வரைய | |
| பாலிகான் ஃபிரேம் டூல் | ![]() |
உரை மற்றும் வரைகலைகளை வைப்பதற்கான பல கோணங்களை வரைய | |
| ஹேண்ட் டூல் | பக்கத்தை திரை உருளல் செய்ய | ||
| ஜூம் டூல் | ![]() |
![]() |
பக்கத்தின் அளவை பெரிதாக்கியும் சிறிதாக்கியும் பார்க்க. |
20.
பல்லூடகத்தை உருவாக்கத்திற்கு போதுமான நேரம் மற்றும் திறமையான திட்டமிடல் ஆகியவை தேவைப்படுகின்றன மற்றும் திறமையான திட்டமிடல் ஆகியவை தேவைப்படுகின்றன. இது திட்டப்பணி சுமுகமாக தொடரவும் மற்றும் தகவல் இலக்கு பார்வையாளர்களைச் சென்றடையவும் உறுதி செய்கிறது. சிக்கலான பல்லூடகத் திட்டங்களை உருவாக்குவதற்கான படிநிலைகள்.
1. கருத்துரு பகுப்பாய்வு மற்றும் திட்டமிடல் :
கருத்துரு பகுப்பாய்வு பொருத்தமான கருப்பொருள். வரவு-செலவு திட்டம் மற்றும் தேர்வு செய்த கருப்பொருளின் பொருளடக்கத்தின் இருப்பு ஆகியவற்றை அடையாளம் காண்கின்றது. கூடுதலாக பதிப்புரிமை பிரச்சனைகளையும் இந்த படிநிலையில் கருத்தில் கொள்ளப்படுகிறது.
2. திட்ட வடிவமைப்பு :
ஒருமுறை கருப்பொருளை இறுதி செய்தபிறகு, பல்லூடகத்தின் திட்டத்திற்கான நோக்கங்கள், குறிக்கோள்கள் மற்றும் செயல்பாடுகள் ஆகியவை வடிவமைக்கப்படுகின்றன. நோக்கத்தை செயல்படுத்துவதற்குத் தொடர்ச்சியான செயல்களை நிகழ்த்துவதைச் செயல்பாடுகள் என்கிறோம். இந்த செயல்பாடுகள், திட்ட வடிவமைப்பு படிநிலைக்கு பங்களிப்பை வழங்குகிறது.
3. முன்-உருவாக்குதல் :
திட்டமிடல் மற்றும் வடிவமைத்தலின் அடிப்படையில் திட்டத்தை உருவாக்குவது தேவையானது ஆகும்.
முன் உருவாக்குதலின் படிநிலைகள் பின்வருமாறு:
1. வரவு-செலவு திட்டமிடல் :
ஆலோசகர்கள், வன்பொருள், மென்பொருள், பயணம், தகவல் தொடர்பு மற்றும் பிரசுரித்தல் போன்ற ஒவ்வொரு நிலையிலும் அனைத்து பல்லூடக திட்டங்களுக்கும் வரவு - செலவு திட்டம் தோராயமாகக் கணக்கிடப்படுகிறது.
2. பல்லூடகத்தை உருவாக்கும் குழு :
உயர்ந்த பல்லூடகத் திட்டத்தை உருவாக்கும் குழுவிற்கு அந்த குழுவின் ஒட்டு மொத்த முயற்சி தேவை. இந்த குழுவானது ஸ்கிரிப்ட் எழுத்தாளர், தயாரிப்பு மேலாளர், பதிப்பாசிரியர், வரைகலை வடிவமைப்பாளர் மற்றும் வரை வல்லுநர் போன்ற பல்வேறு பதவிகளையும் மற்றும் பொறுப்புகளையும் செய்யும் உறுப்பினர்களைக் கொண்டது.
3. வன்பொருள்/மென்பொருள் தேர்ந்தெடுத்தல் :
பயன்பாட்டினை உருவாக்குவதற்கும் அதனை மீண்டும் செயல்படுத்துவதற்கும் பொருத்தமான கருவிகள் அனைத்து பல்லூடக பயன்பாடுகளுக்கும் தேவை. வன்பொருளானது தேர்ந்தெடுத்த வேகமான மையச் செயலகம் மற்றும் பெரிய திரையகம் பதிவுகளைச் சேமிக்கத் தேவையான வட்டுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. பொருத்தமான மென்பொருள் மற்றும் கோப்பு வடிவங்களைத் தேர்ந்தெடுத்தல் என்பது உருவாக்கப்படும் திட்டப் பணிக்கு கிடைக்கும் நிதியைப் பொறுத்ததாகும்.
4. பொருளடக்கத்தை வரையறுத்தல் :
பொருளடக்கம் என்பது பொருளடக்க வல்லுநரால் பல்லூடக வடிவமைப்பாளருக்கு வழங்கப்படும் தகவல்கள் ஆகும். இந்த தகவல்களைக் கொண்டு உருவாக்கிய பயன்பாட்டில் பல்லூடக வடிவமைப்பாளர் விவரித்தல், புல்லட்கள், வரைபடங்கள் மற்றும் அட்டவணைகள் போன்றவற்றைத் தயார் செய்கிறார்.
5. கட்டமைப்பை தயார் செய்தல் :
விரிவான கட்டமைப்பில் அனைத்து படிநிலைகளும் அடுத்தடுத்து வரும் செயல்பாட்டிற்கான நேர அளவு பற்றிய தகவல்களைக் கண்டிப்பாக கொண்டிருக்க வேண்டும். இந்த கட்டமைப்புச் செயல்பாடுகள் ஒவ்வொரு செயல்பாட்டிற்கான பொறுப்பாளர் மற்றும் ஒவ்வொரு செயல்பாட்டிற்கானத் தொடக்க/முடிவு நேரம் ஆகியவற்றை வரையறுக்கிறது. பல்லூடகப் பயன்பாட்டில் முன்-உருவாக்குதல் செயல்பாட்டிற்குப் பிறகு இந்தப் படிநிலை தொடங்குகிறது.
6. உருவாக்குதல் :
இது பின்னணி இசையைத் தேர்ந்தெடுத்தல், ஒலிப்பதிவு போன்ற செயல்பாடுகளை உள்ளடக்கியது. OCR மென்பொருளைக் கொண்டு உரையானது இணைக்கப்படுகிறது. படங்கள் இலக்கக் கேமராவைக் கொண்டு படம் பிடிக்கப்படுகிறது. ஒளிக்காட்சியினை பதிவு செய்து, தொகுத்து மற்றும் குறுக்கப்படுகிறது. இப்பொழுது மாதிரி திட்டம் தயார் நிலையில் உள்ளது.
7. சோதித்தல் :
திட்டத்தை பிரம்மாண்டமான உருவாக்கத்திற்கு முன், மாதிரி திட்டத்தை முழுவதுமாக சோதித்தல் வேண்டும். இவை அனைத்தும் சரியான இடத்தில் உள்ளதா என்பதை உறுதி செய்வதன் மூலம் வெளியீட்டிற்கு பிறகு நேரக்கூடிய தோல்வியைத் தவிர்க்க முடியும். Internet Explorer சோதனை செயல்பாடுகள் முடிந்த பிறகு, திட்டமானது சரியாக பரிந்துரைக்கப்பட்டுள்ள மாற்றங்களோடு இணைக்கப்படுகிறது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards