12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 13/05/2022
QB365 provides detailed and simple solution for every book back questions in class 12 Biology subject.It will helps to get more idea about question pattern in every book back questions with solution.
latest Book back Questions12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
முதன் முதலாக உருவான மரபுப்பொருள் ஆர்.என்.ஏ தான் என நிரூபிக்கப்பட்டுள்ளது - காரணங்களுடன் நிரூபிக்க.
2.
நியூக்ளியோசோம் உருவாகும் முறையை விவரி.
3.
ஹெர்ஷே மற்றும் சேஸ் ஆகியோர், கதிரியக்க முறையில் குறியிடப்பட்ட பாஸ்பரஸ் மற்றும் கந்தகத்தை ஏன் பயன்படுத்தினர்? அவர்கள் கார்பன் மற்றும் நைட்ரஜனை பயன்படுத்தினால் அதே முடிவுகளைப் பெறமுடியுமா?
4.
இரண்டு படிநிலை புரதச்சேர்க்கை நிகழ்ச்சியின் அனுகூலங்கள் யாவை?
5.
அ) கீழ்க்கண்ட வரைபடத்தைக் கண்டறிக
ஆ) இவ்வரைபடத்தை ‘இரட்டிப்பாதல் பிளவாகக்‘ கொண்டு வரைக. அதன் பாகங்களைக் குறிக்கவும்.
இ) டி.என்.ஏ இரட்டிப்பாதல் முறைக்குத் தேவைப்படும் ஆற்றலின் மூலம் யாது? இந்நிகழ்ச்சியில் ஈடுபடும் நொதிகள் யாவை?
ஈ) இரண்டு வார்ப்புருவ இழைகளின் துருவத் தன்மை அடிப்படையில் புரதச் சேர்க்கையில் ஏற்படும் மாற்றங்களைக் குறிப்பிடுக
1.
அளவு: ஒரு மாதிரி செல் ஒன்றுக்குள் DNA வை விட பத்து மடங்கு அதிக அளவில் RNA உள்ளது.
பணிகள்: பரந்துப்பட்ட பல பணிகளை மேற்கொள்கிறது. (வளர்சிதை மாற்றம் மொழியாக்கம், பிளவுறுதல் போன்ற இன்னபிற)
சான்றுகள்:
1. ஃபிரன்கெல் - கான்ராட் & சிங்கர் (1957) ஆகியோர் (TMV) புகையிலை மொசைக் வைரஸில் RNA மரபணுவாக உள்ளது என்று முதன்முதலாக கூறினார்.
2. TMV - விலிருந்து RNA வைப் பிரித்தெடுத்தார்.
3. லெஸ்லி ஆர்ஜெல், பிரான்சிஸ் பிரிக் மற்றும் கார்ல் வோயஸ் (மூன்று மூலக்கூறு அறிவியலாளர்கள்) பரிணாமத்தின் முதல் நிலையாக RNA உலகம் என அறிமுகப்படுத்தினார்கள்.
4. வால்டர் கில்பெர்ட் (1986) RNA உலகம் என்ற சொல்லை பயன்படுத்தினார்.
5.
என இரண்டாகவும் செயலாற்றக்கூடிய திறன் கொண்டதாக உள்ளது. வினையூக்கி RNA - ரிபோசைம் எனப்படும். வினையூக்கி என்பதால் RNA வின் நிலைப்புத் தன்மை குறைவு. எனவே முதல் மரபணுப்பொருள் என்பதும் DNA - RNA விலிருந்து பல மாற்றங்களுடன் பின் பரிணாம அடைந்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.
2.
1. குரோமோசோம் - குரோமேட்டினால் ஆனவை
2. குரோமேட்டின் ⟶ தொடர்ச்சியான மீள் தோன்று அலகுகளான நியூக்ளியோசோம்களால் உருவானது. கோர்ன்பெர்க் - நியூக்ளியோசோம் மாதிரி
3. இதில் H2A, H2B, H3 & H4 எனும் நான்கு ஹிஸ்டோன் புரதங்களின் இரண்டு மூலக்கூறுகள் வரிசையாக அமைந்து எட்டு மூலக்கூறுகளை உடைய அலகை உருவாக்குகின்றன. இதற்கு ஹிஸ்டோன் எண்மம் என்று பெயர்.
4. நேர்மின்தன்மை கொண்ட ஹிஸ்டோன் எண்மத்தை சுற்றி, எதிர்மறை தன்மை கொண்ட DNA உறையாக அமைந்து நியூக்ளியோசோமை உருவாக்குகிறது.
5. மாதிரி நியூக்ளியோசோம் ஒன்றில் - 200 கார இணைகள் உள்ளன
6. அடுத்தடுத்துள்ள நியூக்ளியோசோம்களை, நொதிகளின் உதவியுடன் இணைப்பு DNA க்கள் இணைக்கின்றன.
7. ஹிஸ்டோன் எண்மத்தை சுற்றி DNA இரு முழுமையான திருகுகளை உருவாக்கியுள்ளன.
8. இந்த திருகுகளை மூலக்கூறு H1 (இணைப்பு மூலக்கூறு) மூடுகிறது.
9. H1 இல்லாத நிலையில் குரோமேட்டின் மணிகோர்த்த மாலை போல் தெரிகிறது.
10. இவ்வமைப்பின் எந்த இடத்திலும் DNA உட்செல்லவும் நியூக்ளியோசோமை விட்டு வெளியேறவும் முடியும்.
11. நியூக்ளியோசோமின் மடிப்பிலிருந்து தோன்றும் நீளமுள்ள இழை - ஒரு சுற்றுக்கு ஆறு நியூக்ளியோசோமை கொண்ட வரிச்சுருளமைப்பை (Solenoid) உருவாக்குகிறது.
12. இது மேலும் மடிப்புற்று - குரோமேடின் இழைகளையும், குரோமேடின் இழை மேலும் மடிப்புற்று குரோமேடிடுகளையும், குரோமேடிடுகள் ⟶ குரோமோசோம்களாகின்றன.
13. உயர்நிலை குரோமேடின் பொதிவுக்கு ஹிஸ்டோனல்லாத குரோமோசோம் புரதங்கள் தேவைப்படுகின்றன.
| யூகுரோமேட்டின் | ஹெட்ரோகுரோமேட்டின் | |
| 1. | தளர்வாக பொதியப்பட்டுள்ளது | நெருக்கமாக பொதியப்பட்டுள்ளது |
| 2. | சாயமேற்காது | சாயமேற்கும் |
| 3. | படியெடுத்தலில் தீவிரமாக பங்கேற்கும் | படியெடுத்தலில் பங்கேற்காது |
3.
I. கதிரியக்க முறையில் குறியிடப்பட்ட கார்பன்:
ஹெர்ஷே மற்றும் சேஸ் - கதிரியக்க முறையில் குறியிடப்பட்ட கார்பனை பயன்படுத்தியிருந்தால், - அது பாக்டீரியாவின் எல்லா செல்களிலும் காணப்பட்டிருக்கும்.(கார்பன் எல்லா கரிம மூலக்கூறுகளிலும் உள்ளது)
II. கதிரியக்க முறையில் குறியிடப்பட்ட நைட்ரஜன்:
1. அவர்கள் கதிரியக்க முறையில் குறியிடப்பட்ட நைட்ரஜனை பயன்படுத்தியிருந்தால், நியூக்ளியோலஸ், செல்சவ்வு மற்றும் முழுவதும், கூடவே பாக்டீரியோபேஜின் பிரிதலுற்ற பொருட்கள் குறிப்பிடப்பட்டிருக்கும்.
2. நைட்ரஜன் - புரதத்தில், DNA விலும் அமைப்புக் கூறாக உள்ளது.
3. எனவே கதிரியக்க ஐசோடோப்புகள் பாஸ்பரஸ் நியூக்ளிக் அமிலங்களில், கதிரியக்க கந்தகம் புரதங்களில் மட்டும் காணப்பட்டது.
4. இவர்கள் மரபுப்பொருள் DNA - RNA யா (அ) புரதமா உறுதிசெய்யவே இவ்வாறு பயன்படுத்தினர்.
4.
I - படியெடுத்தல்:
டி.என்.ஏவில் காணப்படும் செய்திகள் நகலெடுக்கப்படும் செயல்முறை:
DNA வின் ஒரு இழையில் காணப்படும் புரதத்திற்கான தகவல்களை குறியீடாக செல்லுக்கு கொண்டுசெல்வது தூது RNA (அ) mRNA
II - மொழிபெயர்த்தல்:
1. தூதுவிலுள்ள தகவல் குறியீடுகள் செல்லின் உட்கருவிலிருந்து சைட்டோபிளாசத்தை அடைகிறது.
2. இங்கு ரிபோசோம் RNA, கடத்தி RNA மற்றும் தூது RNA இவற்றுடன் பல்வேறு நொதிகளும் ஒரு அமைப்பாக சேர்ந்து மொழி பெயர்த்தல் படி நிலை நடைபெறும்.
3. இவ்வாறு ஒரு படிநிலைகளும் செல்லில் உட்கரு மற்றும் சைட்டோபிளாசம் நடைபெறுகிறது.
4. எனவே புரதச் சேர்க்கை இரண்டு படிநிலைகளில் நடைபெறுவதன் அனுகூலமாகும்.
5.
அ) இரட்டிப்பாதல் - இரட்டிப்பாதல் பிளவு காணப்படும்.
ஆ)
A - வார்ப்புரு இழை
B - இரட்டிப்பாதல் பிளவு
C - வழிகாட்டு இழை
D - பின்தங்கு இழை
இ) டி - ஆக்ஸி நியூக்ளியோடைடு டிரைபாஸ்பேட் பாலிமெரைசேஷன் நிகழ்வுக்கான ஆற்றலைத் தருவதோடு அந்த வினைக்கான தளப்பொருளாகவும் உள்ளது.
ஈ) DNA - இரு இழைகளாலானது. ஒன்றுக்கொன்று ஒத்த தன்மை கொண்ட எதிரெதிர் திசை அமைப்பைக் கொண்டால்
அ) ஒன்று 5' ⟶ 3' என்றும் மற்றது 3' ⟶ 5' திசை நோக்கி காணப்படும்.
ஆ) இதனாலே புரதம் தயாரித்தலின் படியெடுத்தலில் இரு இழைகளும் பங்கு பெற இயலவில்லை அதற்கு இரு காரணங்கள் உள்ளன.
1. இரு இழைகளுமே வார்ப்புரு செயலாற்றுமேயானால், RNA விற்கான குறியீடு இரண்டிலும் வெவ்வேறு வரிசையில் இருக்கும்.
இதனால் புரதத்தின் அமினோ அமில வரிசையிலும் பாதிப்பு ஏற்படும் - இதனால் DNA வின் ஒரு பகுதியிலிருந்து இரு வேறு புரதங்கள் உற்பத்தியாகி மரபுத்தகவல் பரிமாற்ற நிகழ் முறையில் சிக்கல் ஏற்படும்.
2. இரு வித RNA மூலக்கூறுகள் ஒரே நேரத்தில் உற்பத்தியாகுமேயானால் RNA வின் இரு இழைகளும் ஒன்றுக்கொன்று நிகரொத்ததாக இருக்கும். இது RNA ⟶ புரதமாக மொழிபெயர்க்கப்படுவதைத் தடுக்கிறது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards