12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 13/05/2022
QB365 provides detailed and simple solution for every
Book back Questions in class 12 Commerce Subject. It will helps to get more idea about question pattern in every Book back questions with solution.
12ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
ஐ.நா. அவையின் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த நோக்கங்கள் யாவை?
2.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986ன் சிறப்பியல்புகள் யாவை?
3.
ஏதேனும் ஐந்து நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களை எழுதுக.
4.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986ன் நோக்கங்கள் யாவை? (ஏதேனும் 5)
5.
நுகர்வோர் பாதுகாப்பில் நுகர்வோரின் பங்கினை விளக்குக.
1.
1. நுகர்வோருக்கு போதிய பாதுகாப்பு வழங்குவதில் உறுப்பு நாடுகளுக்கு உதவுவது.
2. நுகர்வோரின் தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப உற்பத்தி மற்றும் விநியோக முறைகளை எளிதாக்குவது.
3. நுகர்வோர் பொருட்கள் மற்றும் சேவைகளை உற்பத்தி செய்பவர்கள் மற்றும் விநியோகிப்பவர்களுக்கு உயர்ந்த நன்னெறி சார்ந்த நடத்தைகளை ஊக்குவிப்பது.
4. நுகர்வோர் நலனை மோசமாகப் பாதிக்கும் வகையில் செயல்படும் தவறான வர்த்தக நடைமுறைகளை செயல்படுத்தும் வணிக நிறுவனங்களை எதிர்ப்பதில் உள்நாட்டளவிலும் பன்னாட்டளவிலும் உறுப்பு நாடுகளுக்கு உதவி புரிதல்.
5. சுதந்திரமான நுகர்வோர் குழுக்களை மேம்படுத்த முடியும்.
6. நுகர்வோர் பாதுகாப்பில் சர்வதேச கூட்டுறவினை செயல்படுத்துதல்.
7. நுகர்வோர்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை பெரிய அளவில் தேர்ந்தெடுத்து வாங்கும் வகையில் சந்தைகளை ஊக்குவித்தல்.
2.
1. நுகர்வோரின் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு எதிராக நுகர்வோரை பாதுகாத்தல்.
2. உற்பத்தியாளர்கள்/விற்பனையாளர்களின் ஒப்பந்த மீறுகையிலிருந்து நுகர்வோரை பாதுகாத்தல்.
3. சிறந்த தரத்தில் நுகர்வோருக்கு பொருட்கள் கிடைத்தலை உறுதி செய்தல்.
4. பொய்யான மற்றும் தவறான வழிகாட்டும் செய்திகளை வெளியிடும் விளம்பரங்களிலிருந்து நுகர்வோரை பாதுகாத்தல்.
5. நுகர்வோர் வாங்கும் பொருளுக்கு சரியான விலை நிர்ணயம் செய்வதை உறுதி செய்தல்.
6. தங்கு தடையற்ற பொருட்கள் விநியோகத்தை உறுதி செய்தல்.
7. பொருட்கள் சரியான தரத்தில் சரியான அளவைகளில் கிடைப்பதை உறுதி செய்தல்.
8. நேர்மையற்ற வணிகர்களின் நியாயமற்ற வணிக நடைமுறையிலிருந்து நுகர்வோரை பாதுகாத்தல்.
9. பல்வேறு வகையான மாசுக்களிலிருந்து நுகர்வோரை பாதுகாத்தல்.
10. வணிகப் போட்டிகளினால் விளையும் தீய விளைவுகளில் இருந்து நுகர்வோரைப் பாதுகாத்தல்.
3.
1. அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955 :
அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் செயற்கையாக விலையேற்றம் செய்யும் நோக்குடன் பொருட்களை பதுக்கி வைத்தல், செயற்கை பற்றாக்குறையை உருவாக்குதல், கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்தல் போன்றவற்றை தடைசெய்ய உருவாக்கப்பட்டது.
2. வேளாண் பொருட்கள் தரப்படுத்தல் மற்றும் விற்பனை சட்டம் 1937:
வேளாண்மை உற்பத்தி பொருட்களை நல்ல தரத்துடன் வழங்குவதாக உறுதி செய்கிறது.
3. உணவுப் பொருட்கள் கலப்பட தடைச்சட்டம் 1954 :
உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வதை பரிசோதித்து தரமான உணவுப் பொருட்களை வழங்குவதன் மூலம் நுகர்வோர் உடல்நலத்தை பாதுகாக்கிறது.
4. எடை மற்றும் அளவுகள் சட்டம் 1958:
(i) எடை குறைவு மற்றும் அளவு குறைபாடுகளை போக்கி நுகர்வோரை பாதுகாக்கிறது.
(ii) இச்சட்டம் அளவியல் சட்டம் 2009 ஆக திருத்தியமைக்கப்பட்டது.
5. இந்திய தர நிறுவனச் சட்டம் 1952:
உற்பத்தி பொருட்கள் பெற்றிருக்க வேண்டிய குறைந்தபட்ச தரநிலைகளை பூர்த்தி செய்வதை உறுதி செய்து நுகர்வோருக்கு தரமான பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்கிறது.
4.
பின்வருபவை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் நோக்கங்கள் ஆகும்
1. நுகர்வோரின் உயிருக்கும் உடமைக்கும் ஊறு விளைவிக்கும் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு எதிராக நுகர்வோரைப் பாதுகாத்தல்.
2. நுகர்வோர் வாங்கும் பொருட்களின் தரம், அளவு, சுத்தத்தன்மை, விலை மற்றும் தரநிலை குறித்த உண்மையான மற்றும் முழுமையான தகவல்களை நுகர்வோருக்கு அளித்தல்.
3. வணிகர்களின் நியாயமற்ற வணிக நடைமுறைகளிலிருந்து நுகர்வோரைப் பாதுகாத்தல்.
4. சுரண்டல் நடைமுறைகளுக்கு எதிராக தீர்வுகளை தேட நுகர்வோருக்கு அதிகாரமளித்தல்.
5. நுகர்வோர்களின் உரிமைகள் மற்றும் கடமைகளை அறிந்து கொள்ளச் செய்தல்.
6. நல்ல தரமான பொருட்களை சரியான விலைகளில் கிடைக்கச் செய்வதன் மூலம் அவர்களின் சிறந்த வாழ்க்கைத் தரத்தை உறுதிப்படுத்துதல்.
7. நுகர்வோர் தங்களது உரிமைகளை நிலைநாட்ட நுகர்வோர் குழுக்கள் மற்றும் பிற அதிகார அமைப்புகளை ஏற்படுத்துதல்.
5.
1. நுகர்வோருக்கு எதிரான நேர்மையற்ற வணிக நடைமுறைகளுக்கு நுகர்வோரால் மட்டுமே இறுதியாக முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
2. அரசாங்கம் சட்டங்களை ஏட்டளவில் வைத்துக்கொண்டு இல்லாமல் விதி மீறும் வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து நுகர்வோர் நலனை பாதுகாக்க வேண்டும்.
3. நுகர்வோர்கள் விழிப்புணர்வுடனும் நுகர்வோரை ஒன்றிணைத்து நுகர்வோர் இயக்கமாக செயல்பட்டு நுகர்வோர் நலனை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
4. அப்பாவி நுகர்வோர்களிடம் நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள் பற்றி எடுத்துக்கூறி அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
நுகர்வோர் நடவடிக்கை குழுக்கள் செயல்படுத்துதல் :
1. கிராம அளவில் நுகர்வோர் நடவடிக்கை குழுக்களை உருவாக்குதல் - நுகர்வோர் உரிமைகள் குறித்து கல்வி புகட்டுதல் வேண்டும்.
2. நுகர்வோர் குறைகள் மற்றும் புகார்கள் மீது உரிய விசாரணை செய்ய மற்றும் அவற்றிற்கு தீர்வு காண நுகர்வோர் பாதுகாப்பு முகமைகள் மூலம் அமைப்பை உருவாக்குதல் வேண்டும்.
3. வணிக நிறுவனங்களை தொழில்துறை விதிகளின்படி ஒழுங்குபடுத்த வேண்டும்.
4. தன்னார்வ நுகர்வோர் குழுக்கள் நுகர்வோர் சட்டங்கள் குறித்த தகவல்களை ஊடகங்கள் வாயிலாக நுகர்வோருக்கு வழங்கி அவர்களுக்கு ஏற்படும். பாதிப்புகளுக்கு எதிரான கல்வியறிவு புகட்ட வேண்டும்.
5. வணிகர்களின் தவறான வணிக நடவடிக்கைகளுக்கு எதிராக நுகர்வோர் இயக்கங்களை ஏற்படுத்துதல்.
6. நுகர்வோர் கூட்டுறவுகளைப் பலப்படுத்துதல்.
7. பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை நுகர்வோர் குழுக்கள் அணுகி நுகர்வோரின் பிரச்சனைகளை பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பேசி அரசின் கவனத்தை ஈர்க்கச் செய்தல்.
8. பொருட்களின் தரத்தை பரிசோதிக்க பரிசோதனைக் கூடங்களை மாவட்டம் தோறும் உருவாக்குதல்.
9. தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் ஊடகங்கள் மூலம் உற்பத்தியாளர் மற்றும் வணிகர் எடுக்கச் செய்தலின் தவறுகளை சுட்டிக்காட்ட செய்தல்.
10. நுகர்வோர் சட்டத்தை மீறிச் செயல்படுவோர் குறித்த புகார்களை சம்பந்தப்பட்ட சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கைகளை எடுக்கச் செய்தல்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards