12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 13/05/2022
QB365 provides detailed and simple solution for every
Book back Questions in class 12 Commerce Subject. It will helps to get more idea about question pattern in every Book back questions with solution.
12ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
மனித வள மேலாண்மையின் செயல் பணிகளை விவரி.
2.
மனித வள மேலாண்மையிலிருந்து மனித வளத்தை வேறுபடுத்திக் காட்டுக.
3.
மனித வள மேலாண்மையின் முக்கியத்துவத்தை விளக்குக. (ஏதேனும் 5)
4.
மனித வள மேலாண்மையின் மேலாண்மைப் பணிகளை விவரி.
5.
மனித வளத்தின் தனிப்பட்ட அம்சங்களை விளக்குக.
1.
செயல்பணிகள்:
திரட்டுதல்:
வேலை பகுப்பாய்வு, மனித வள திட்டமிடல், ஆட்சேர்ப்பு, தேர்வு, வேலைவாய்ப்பு, பணிமாற்றம் மற்றும் பதவி உயர்வு ஆகியவற்றின் மூலம் மனித வளத்தை ஈர்க்கும் செயலை குறிக்கிறது.
(ii) வளர்ச்சி :
செயல்திறன் மதிப்பிடுதல், பயிற்சி, செயலதிகாரி வளர்ச்சி, தொழில் திட்டமிடல் மற்றும் வளர்ச்சி, நிறுவன வளர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கியது அபிவிருத்தியாகும்.
(iii) ஊதியம் :
இது வேலைமதிப்பீடு, ஊதியம் மற்றும் சம்பள நிர்வாகம், ஊக்கத்தொகை, மேலூதியம், விளிம்பு நலன்கள் மற்றும் சமூக பாதுகாப்புத் திட்டங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
(iv) ஊழியர்களை தக்கவைத்துக் கொள்ளுதல் :
சுகாதார மற்றும் பாதுகாப்பு நலன், சமூக பாதுகாப்பு, வேலை திருப்தி மற்றும் வேலையினால் ஏற்படும் வாழ்க்கைத் தரத்தின் மூலம் இது சாத்தியமாகிறது.
(v) ஒருங்கிணைத்தல் :
தனிப்பட்ட விருப்பிற்கும், நிறுவன விருப்பிற்கும், இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் உள்ள செயல்பாடுகளை இச்சொல் குறிக்கிறது.
(vi) பராமரிப்பு :
பணியாளர் திருப்தியுடன் பணியாற்ற, பணியாளர் வேலையை விட்டு செல்வதை குறைத்தல், மனித வளத்தை கணக்கில் கொள்ளல், தணிக்கை மற்றும் ஆராய்ச்சி மேற்கொள்வதன் மூலம் பணியாளர்களை பராமரிப்பதை இச்சொல் குறிக்கிறது.
2.
| வஎண் | மனித வளம் | மனித வள மேலாண்மை | |
|---|---|---|---|
| 1. | பொருள் | தனிப்பட்ட மற்றும் நிறுவனக் குறிக்கோள்களை அடைவதற்கு எவர் ஒருவர் திறமை, தனித்திறன், அறிவு, தகுதிகள், போட்டித் திறன் மற்றும் சொல் திறன் பெற்றிருக்கிறாரோ அவரே மனித வளமாக கருதப்படுகிறார். | மனித வளத்தை நிர்வகிக்கும் மேலாண்மையின் கிளையே மனித வள மேலாண்மை என அழைக்கப்படுகிறது. |
| 2. | காரணி | உற்பத்தி செய்யும் ஒரே காரணியாக இது திகழ்கிறது. | திறன்மிக்க மேலாண்மை எங்கு இருக்கிறதோ அங்கெல்லாம் இது இருக்கிறது. |
| 3. | வெளிப்படுத்துதல் | இது கண்டுபிடிப்பு மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. | இது பணியாளர்களிடையே வேலைப்பகிர்வினை வெளிப்படுத்துகிறது. |
| 4. | தன்மை | இது நகரும் தன்மை கொண்டது | இது நிறுவனத்துடன் தொடர்புடையது |
| 5. | காணப்படும் இடம் | மனித வளம் எங்கு இருக்கிறதோ அங்கெல்லாம் மனித வள மேலாண்மை இருக்கிறது. | திறன் மிக்க மேலாண்மை எங்கு இருக்கிறதோ அங்கெல்லாம் மனித வளம் இருக்கிறது. |
| 6. | மதிப்பு மற்றும் காலம் | மனித வளங்களால் உண்டாகும் மதிப்பு மற்றும் பாராட்டுகள், நீண்ட காலத்திற்கு கிடைக்கிறது. | ஒரு நிறுவனம் நீண்ட காலம் இயங்கிக் கொண்டிருந்தால் அந்நிறுவனத்தில் மனித வளம் நிர்வகிப்பது தொடர்பான செயல்பாடுகளும் தொடர்ந்து நீடிக்க நிலையில் இருக்கும். |
3.
மனித வள மேலாண்மையின் முக்கியத்துவத்தின் பல்வேறு காரணிகள் பின்வருமாறு:
(i) மனித சக்தி தேவைகளை அடையாளம் காணுதல்:
ஒரு நிறுவனத்தில் மனிதவள தேவைகளைத் தீர்மானிப்பது என்பது மிகவும் முக்கியமான ஒரு முதலீட்டு முறையாகும். செலவுகளை மேம்படுத்த, நிறுவனத்திற்கு தேவைப்படும் நபர்களின் எண்ணிக்கையை துல்லியமாக அடையாளம் காணப்பட வேண்டும்.
(ii) மாற்றங்களை இணைத்துக் கொள்ளல்:
மாற்றம் என்பது எந்த அமைப்பிலும் நிலையானது மற்றும் இந்த மாற்றத்தை நிறுவனத்தில் திறன்பட அறிமுகப்படுத்த மனித வள மேலாண்மை ஒரு முகவராக செயல்பட வேண்டும்.
(iii) மனித சக்தியின் சரியான தேவையை உறுதி செய்தல்:
மனித வள மேலாண்மையின் மூலமாக நிறுவனத்தில் எந்த நேரத்திலும் பணியாளர்கள் பற்றாக்குறை அல்லது உபரி ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
(iv) சரியான வேலைக்கு சரியான நபரை தேர்ந்தெடுத்தல்:
சரியான வேலைக்கு சரியான தகுதியுடைய நபர்களை மனிதவள மேலாண்மை உறுதிப்படுத்துவதால், நிறுவனத்தில் குறைதகுதி அல்லது மிகைதகுதி உடைய பணியாளர்கள் இல்லாத நிலை ஏற்படுகிறது.
(v) திறன் மற்றும் அறிவை மேம்படுத்துதல்:
பணியாளர் திறன் மற்றும் அறிவு மேம்பாடு செயல்பாடுகளை நிர்வகிப்பதில் மனிதவள மேலாண்மையின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதோடு மட்டுமில்லாமல் பயிற்சி மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் மூலம் இன்று வரை இருக்கும் தொழில் சார்ந்த அறிவை பணியாளர்களுக்கு வழங்குகிறது.
4.
1. மனித சக்தி தேவையான அடையாளம் காணுதல்
ஒரு நிறுவனத்தில் மனித வள தேவைகளைத் தீர்மானிப்பது என்பது மிகவும் முக்கியமான ஒரே முதலீட்டு முறையாகும்.
2. மாற்றங்களை இணைத்துக் கொள்ளல்.
மாற்றம் என்பது நிலையானது,மாற்றத்தை நிறுவனத்தில் திறன்பட அறிமுகப்படுத்த மனித வள மேலாண்மை ஒரு முகவராக செயல்பட வேண்டும்.
3.மனித சக்தியின் சரியான தேவையை உறுதி செய்தல் :
மனித வள மேலாண்மையின் மூலமாக நிறுவனத்தில் திறன்பட அறிமுகப்படுத்தப்பட்ட மனித வள மேலாண்மை ஒரு முகவராக செயல்பட வேண்டும்.
4. சரியான வேலைக்கு சரியான நபரைத் தேர்ந்தெடுத்தல் :
(i) சரியான வேலைக்கு சரியான தகுதியுடைய நபர்களை மனித வள மேலாண்மை உறுதிப்படுத்துகிறது.
(ii) இதனால் நிறுவனத்தில் குறை தகுதி அல்லது மிகை தகுதி உடைய பணியாளர்கள் இல்லாத நிலை ஏற்படுகிறது.
5. திறன் மற்றும் அறிவை மேம்படுத்துதல் :
(i) பணியாளர்கள் திறன் மற்றும் அறிவு மேம்பாடு செயல்பாடுகளை நிர்வகிப்பதில் மனித வள மேலாண்மை முக்கியமாக செயல்படுகிறது.
(ii) பயிற்சி மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் மூலம் தொழில் சார்ந்த அறிவை பணியாளர்களுக்கு வழங்குகிறது.
6. பணியாளர்களின் செயல்திறனை மதிப்பிடுதல் :
(i) மனித வள மேலாண்மை நடவடிக்கைகள் மூலம் பணியாளர்களின் செயல்திறன்களை மதிப்பீடு செய்ய முடிகிறது.
(ii) இதனால் பணிபுரிவோரின் திறனை அதிகரிக்கவும், ஊக்கமளிக்கவும், பணியாளர்களின் செயல்திறனை அறியவும் முடிகிறது.
7. போட்டி நன்மைகளை மேம்படுத்துதல் :
நிறுவனங்கள் தகுதி வாய்ந்த மற்றும் போட்டிச் சூழலை எதிர்கொள்ளும் பணியாளர்களைக் கொண்டிருந்தால் மட்டுமே உலகளாவிய போட்டிச் சந்தையின் நன்மையைப் பெற முடியும்.
8. பணியாளர் அர்ப்பணிப்பைத் தீர்மானித்தல் :
(i) மனித வள மேலாண்மை நேர்காணல் அல்லது வினாத் தொகுப்பு வாயிலாக பணியாளர்களுக்கு அவர்களின் பணி அர்ப்பணிப்பு நிலையைத் தீர்மானிக்கிறது.
9. சமூகமயமாக்க வலியுறுத்தல் :
மனிதர்கள் சமூக விலங்குகளாக இருக்கிறார்கள். நிறுவனத்தில் அதிகபட்சமாக பங்களிப்பு செய்வதற்கு ஒத்த வயதுடையோர், துணை நிலையில் உள்ளோர் மற்றும் மேலாளர்களுடன் நல்ல உறவு வைத்திருப்பது உறுதி செய்ய வேண்டும்.
10. சாதகமான பணியாளர் மனப்பான்மையை வளர்ப்பதற்கு:
(i) மேலாண்மையைப் பற்றி பணியாளர்களின் மனப்பான்மை சாதகமாக இருக்கும் வகையில் நிறுவனங்கள் ஒரு நல்ல பணிச் சூழலை உருவாக்க விரும்புகிறது.
(ii) நிறுவனங்களில் ஆலோசனை மையம்,குறை தீர்க்கும் மையம் போன்றவற்றை ஏற்படுத்துவதன் மூலமாக இச்சூழலை அடையலாம்.
5.
1. உற்பத்தி செய்யும் ஒரே காரணியாக மனித வளம் திகழ்கிறது.
2. பிற அனைத்து வளங்களையும் மனித வளம் ஊக்குவிக்கிறது.
3. பணியமர்த்தப்பட்ட பணியாளர்களைக் கொண்டதே தவிர மனித வளம் என்பது பணியாளர் அல்ல.
4. மனித வளமானது கண்டுபிடிப்பு மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது.
5. மனித வளங்கள் உணர்ச்சிபூர்வமானவை.
6. மனித வளங்களின் நடத்தைகளை ஊகிக்க முடியாது.
7. மனித வளங்கள் நகரும் தன்மை கொண்டது.
8. மனித வளமானது ஒரு குழுவாக செயல்படலாம்.
9. மனித வளங்கள் தனியாக சிந்திக்கவும், செயல்படவும், பகுப்பாய்வு செய்யவும் மற்றும் விளக்கவும் முடியும்.
10. மனித வளங்களால் உண்டாகும் மதிப்பு மற்றும் பாராட்டுக்கள் நீண்ட காலத்திற்கு கிடைக்கிறது.
11. நிதியுடன் அல்லது நிதியில்லாமலும் மனித வளங்கள் ஊக்குவிக்கப்படலாம்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards