12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 13/05/2022
QB365 provides detailed and simple solution for every book back questions in class 12 Computer Applications subject.It will helps to get more idea about question pattern in every book back questions with solution.
latest Book back Questions12ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
சுட்டு எண்களை கொண்ட அணிகள் என்றால் என்ன?
2.
HTML ல் உள்ள Browse பொத்தானுக்கான கட்டளை அமைப்பினை எழுது
3.
PHP ல் படிவத்தை கையாள்வதை வரையறு.
4.
PHP மொழியினை ஆதரிக்கும் HTML உறுப்புகளை பட்டியலிடு.
5.
do while மடக்கின் கட்டளை அமைப்பை எழுதுக
6.
foreach மடக்கின் கட்டளை அமைப்பை எழுதுக
7.
மடக்கு அமைப்புகளை பட்டியலிடு
8.
for மடக்கை வரையறு.
9.
Switch கூற்றின் பயன் என்ன?
10.
if else கூற்றின் கட்டளை அமைப்பை எழுதுக
11.
நிபந்தனை கூற்றை வரையறு.
12.
PHP-ல் அணியின் கட்டளை அமைப்பை எழுதுக.
13.
PHP-ல் அணிகளின் வகைகளைப் பட்டியலிடுக.
14.
PHP-ல் அணிகளை வரையறுக்கவும்.
15.
முன் வரையறுக்கப்பட்ட செயற்கூறுகள் ஏதேனும் இரண்டை கூறு.
16.
பயனர் வரையறுத்த செயற்கூறுகளை வரையறுக்கவும்.
17.
கிளைன்ட் மற்றும் சேவையகம் வேறுபடுத்துக
18.
வலை சேவையகம் என்றால் என்ன?
19.
SQL மற்றும் MYSQL க்கு இடையே உள்ள வேறுபாடுகளை எழுதுக
20.
எந்த கட்டளை பயன்படுத்தி நிரந்தர மாற்றத்தை பரிவர்த்தனையில் உருவாக்க பயன்படுகிறது?
21.
ஏதேனும் இரண்டு DDL மற்றும் DML கட்டளைகளை அதன் கட்டளை அமைப்புடன் பட்டியலிடுக.
22.
கோப்பு செயலாக்க முறையின் (File Processing System) சில குறைபாடுகளை பட்டியலிடுக.
23.
பல்லூடகத்தில் நிழற்பட கூறினை வகைப்படுத்துக.
24.
பல்லூடக கூறுகளைப் பட்டியலிடுக.
25.
ஒளிக்காட்சி கோப்பு வடிவங்களைப் பட்டியலிடுக.
1.
தரவு தொகுப்பில் உள்ள மாறியின் ஒவ்வொரு உறுப்புக்கும் சுட்டெண் மதிப்பிடப்படுகிறது. 'array' என்ற சிறப்புச்சொல்லை பயன்படுத்தி வரையறுக்கப்பட்ட மாறி. நேரியல் அணியில் உள்ள மாறியின் ஒவ்வொரு உறுப்புக்கும் 0-ல் தொடங்கி n-1 ல் முடியும் சுட்டெண் மதிப்பிடப்படுகிறது. பயனர் அணியின் பெயரை தொடர்ந்து அதன் சுட்டெண்ணையும் பயன்படுத்தி அணியின் உறுப்புகளை அணுக முடியும்.
2.
Browse பொத்தானிற்கான கட்டளை அமைப்பு:
< input type ="file"name ="name" id ="id1" >
3.
கோப்புகளைக் கையாளுதல் என்பது வலைப்பயன்பாடுகளை மேம்படுத்துவதில் உள்ள முக்கியமான செயலாகும். ஒரு கோப்பினை பல்வேறு பணிகளுக்காக திறக்க (அ) செயல்படுத்த வேண்டியிருக்கும்.
4.
1. உரைப்பெட்டி (Text box)
2. தேர்வுப்பெட்டி (Check box)
3. கோப்பு தேர்ந்தெடுத்தல் (File select)
4. பொத்தான்கள் (Buttons)
5. ரேடியோ பொத்தான் (Radio button)
6. படிவ ஒட்டு (Form tag)
5.
do {
code to be executed;
} while (condition is true);
6.
foreach ($array as $value) {
code to be executed;
}
7.
1. for மடக்கு
2. foreach மடக்கு
3. while மடக்கு
4. do while மடக்கு
8.
1. for மடக்கு என்பது முக்கியமான மடக்கு அமைப்பு ஆகும். இது பன்முறை செயல்பாட்டிற்கு பயன்படுகிறது.
2. நிரலர் முன்னதாகவே எத்தனை முறை மடக்கினை செயல்படுத்தப்பட வேண்டும் என்பதை அறிந்திருந்தால் for மடக்கினைப் பயன்படுத்தலாம்.
9.
Switch கூற்று பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் பல்வேறு செயல்களைச் செய்யப் பயன்படுகிறது.
10.
if(condition)
{
Execute statement (s) if condition is true;
}
else
{
Execute statement(s) if condition is false;
}
11.
நிபந்தனைக் கூற்றுகள் என்பன நிரலாக்க மொழியில் பல்வேறு முடிவுகளுக்கு ஏற்ப பல்வேறு மொழியில் பல்வேறு முடிவுகளுக்கு ஏற்ப பல்வேறு செயல்பாடுகளைச் செய்யப் பயன்படும் கூற்றுகள் ஆகும்.
12.
அணியானது array( ) என்ற சிறப்புச் சொல்லுடன் வரையறுக்கப்படுகிறது.

தொடர்புருத்த அணி கட்டளை அமைப்பு:
array(key => value, key=>value, etc.);
key = Specifies the key (numeric or string)
value = Specifies the value
13.
1. சுட்டு எண்கள் கொண்ட அணிகள்
2. தொடர்புருத்த அணிகள்
3. பல பரிமாண அணிகள்
14.
அணி என்பது ஒரே தரவு வகையைச் சார்ந்த (ஒரே மாதிரியான) ஒன்றுக்கு மேற்பட்ட மதிப்புகளை ஒரு அணியின் மாறியில் தேக்கி வைப்பதாகும்.
15.
1. PHP String function
2. PHP array function
16.
பயனர் வரையறுத்த செயற்கூறுகள் :
ஏற்கனவே உள்ள நிரலின் தொகுதிக்குள் பயனர் சொந்தமாக ஒரு குறிப்பிட்ட செயல்பாடுகளைச் செய்ய ஒரு குறிப்பிட்ட செயல்பாடுகளை எழுதும் வசதியை அளிக்கிறது.
17.
| கிளைன்ட் | சேவையகம் |
|---|---|
| 1. வலையமைப்பில் சேவையகத்தோடு இணைக்கப்பட்ட தனிக் கணிப்பொறி | உயர்செயல்திறன் கொண்ட கணிப்பொறி ஆகும். |
| 2. கோரிக்கையை அனுப்பி சேவையகத்தில் இருந்து பதிலை பெறுகின்றது. | கோரிக்கையைப் பெற்று பதிலை கிளைன்ட் கணிப்பொறிக்கு அனுப்புகின்றது. |
| 3. சேவையை பெறுபவர் என அழைக்கப்படுகிறது. | சேவை வழங்குபவர் என அழைக்கப்படுகிறது. |
18.
வலை சேவையகம் என்பது பயனர்களுக்கு வலை பக்கங்களை உருவாக்கும் கோப்புகளை வழங்கப் பயன்படுத்தும் ஒரு மென்பொருள் ஆகும்.
19.
| SQL | MySQL |
|---|---|
| 1. SQL என்பது வினவல் மொழியாகும். | MySQL என்பது தரவுதள மென் பொருளாகும். |
| 2. இது வினவல்களுக்கும் தரவு தளத்தை இயக்கவும் பயன்படுகிறது. | இது தரவைக் கையாளவும், சேமிக்கவும், மாற்றம் செய்யவும், நீக்கவும் உதவுகிறது. |
20.
பரிவர்த்தனை கட்டுப்பாட்டு மொழியில் உள்ள SQL கட்டளைகள் தரவுத்தளத்தில் உள்ள பரிவர்த்தனைகளை நிர்வகிக்கிறது. மேலும் அது மாற்றங்களை நிரந்தரமாக தரவுத்தளத்தில் சேமிக்க உதவுகிறது. COMMIT, ROLLBACK, SET TRANSACTION மற்றும் SAVEPOINT ஆகிய கட்டளைகள் இந்த வகையைச் சார்ந்ததாகும்.
21.
DDL கட்டளைப் பட்டியல்:
| கட்டளைகள் | விளக்கம் |
| 1. CREATE | அட்டவணைகள் அல்லது தரவுத்தளங்களை உருவாக்கப் பயன்படுகின்றது. |
| 2. ALTER | ஏற்கனவே இருக்கும் தரவுத்தள அல்லது அட்டவணைக் கட்டமைப்பை மாற்றி அமைக்கிறது. |
DMI கட்டளைப் பட்டியல்:
| கட்டளைகள் | விளக்கம் |
| 1. INSERT | தரவுத்தள அட்டவணையில் புதிய வரிசைகளை சேர்க்கிறது. |
| 2. DELETE | அட்டவணையிலிருந்து பதிவுகளை நீக்குகிறது. |
22.
1. தரவு நகல்கள் : ஒரே தரவானது, செயலாக்கத்திற்கான பல வளங்களால் பயன்படுத்தப்பட்டது. இது ஒரே தரவின் பல நகல்களை உருவாக்கி இடங்களை வீணாக்கியது.
2. அதிக பராமரிப்பு : அணுகல் கட்டுப்பாட்டு மற்றும் நிலைத்தன்மையைச் சரிபார்க்க அதிக பராமரிப்புத் தொகை தேவைப்பட்டது.
3. பாதுகாப்பு : தரவுக்கு குறைந்த பாதுகாப்பே வழங்கபட்டது.எனவே, கோப்பு அமைப்பின் மேற்கூறிய வரம்புகளை சமாளிக்க தரவுதள அமைப்புகள் பிரபலமானது.
23.
1. பிட் மேப் (அ) செவ்வக படம்.
2. வெக்டர் படங்கள்
24.
பல்லூடகம் என்பது உரை, நிழற்படம், அசைவுப் படம், ஒலி, ஒளிக்காட்சிகள் ஆகிய ஐந்து முக்கியக் கூறுகளைக் கொண்டுள்ளது.
25.
1. AVI (Audio Video Interleave)
2. MPEG (Moving Pictures Experts Group)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards