12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 24/02/2020
12 ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்து பாட முக்கிய வினா விடைகள் ( 12th Standard Tamil Medium Computer Technology Important Question )
12ஆம் வகுப்பு Computer Technology / கணினி தொழில்நுட்பம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Technology / கணினி தொழில்நுட்பம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Technology Test

1.
கட்டங்களை (grid) காண்பிக்கவும், மறைக்கவும் (ON or OFF) விசைப்பலகையில் எந்த செயல்பாட்டு விசையை அழுத்த வேண்டும்?
F1
F2
F3
F7
2.
UCS என்பது எதன் குறுக்கம்?
User Coordinate System
User Currency System
User Control System
User Computer System
3.
கட்டளைச் சாளரம் தோன்றவில்லையெனில் எந்த விசைப்பலகை குறுக்குவழிகளைப் பயன்படுத்த வேண்டும்?
Ctrl + 1
Ctrl + 9
Ctrl + 8
Ctrl + 7
4.
சிவப்பு நிற “A” பொத்தானைக் கிளிக் செய்தால் தோன்றும் பட்டி _______.
Application
Edit
Layout
Window
5.
எந்த கருவி ஒரு வரைபடத்தின் குறிப்பிட்ட பகுதியை பெரிதாக்கி காட்டும்.
The Free Transform Tool
The Rectangle tool
The Zoom tool
The Selection tool
6.
Flash கோப்பின் கொடாநிலை விரிவாக்கம் _____ .
.shw
.doc
.xls
.fla
7.
கவனத்தை ஈர்க்கும் வகையிலான பதாகைகளை (Banner) _____ மூலம் உருவாக்கலாம்.
Access
Word
Flash
Excel
8.
Flash கோப்புகள் _____ எனவும் அழைக்கப்படுகிறது.
Flash Guides
Flash Movies
Flash Rulers
Flash Timeline
9.
ஒரு புதிய Flash ஆவணத்தை எவ்வாறு உருவாக்குவாய்?
Insert → New
Ctrl+W
File → New
Ctrl+D
10.
Flash பணியிட மையத்தின் நடுவில் உள்ள பெரிய வெள்ளை செவ்வக வடிவம் ____
மேடை
காலக்கோடு
திரை
பண்புகள்
11.
RTF கோப்பு வடிவத்தை அறிமுகப்படுத்தியது _______.
TCS
Microsoft
Apple
IBM
12.
_________ என்பது அசையா நிழற்படங்களை தொடர்ச்சியான இயக்கமாக காட்சிப்படுத்தும் செயல்.
உரை வடிவம்
ஒலி
MP3
அசைவூட்டல்
13.
பின்வருவனவற்றில் பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடிக்கவும்.
TIFF
BMP
RTF
JPEG
14.
பல்லூடகத்தை உருவாக்க நமக்கு தேவையானவை: வன்பொருள், மென்பொருள் மற்றும் ______.
வலையமைப்பு
CD இயக்கி
நல்ல யோசனை
நிரலாக்க திறன்
15.
______ என்பது ஒன்றிற்கு மேற்பட்ட ஊடக வகையான உரை, தரைகலை, ஒளிக்காட்சி, அசைவூட்டல் மற்றும் ஒலி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு வகைப் பயன்பாட்டைக் குறிக்கும்.
நிறைவேற்றப்படும் கோப்பு
கணினி பதிப்பகம்
பல்லூடகம்
மீவுரை
16.
______ சாவி ஒரு பொருளை தேர்வு செய்ததை நீக்க உதவுகின்றது.
ESC
Ctrl
Shift
Delete
17.
______ சாவியானது Freehand கருவியினை தேர்வு செய்ய உதவுகின்றது.
F2
F3
F4
F5
18.
எத்தனை வகை சுருள்கள் உள்ளன?
5
3
2
7
19.
எந்த கருவி ஒரு பொருளினை தேர்வு செய்ய உதவுகின்றது?
shape கருவி
zoom கருவி
Pick கருவி
Crop கருவி
20.
செந்தர கருவிப்பட்டைக்கு (Standard toolbar) அடுத்திருப்பது _________.
பண்பு பட்டை
தலைப்பு பட்டை
பட்டி பட்டை
நிலைமை பட்டை
21.
_________ னை பயன்படுத்தி நீங்கள் வெக்டார் வரைகலையினை உருவாக்க முடியும்.
PageMaker
Photoshop
Corel Draw
MS-Word
22.
வெக்டார் வரைகலையானது _________ கொண்டு உருவாக்கப்படுகின்றது
கோடுகள் மற்றும் வளைவுகள்
கோடுகள் மட்டும்
படப்புள்ளி
இவையேதுமில்லை
23.
ஒரு பொருளின் வெளிப்புறக் கோட்டில் இடப்படும் வண்ணம் ………
எல்லை (stroke)
நிரப்பு (fill)
out – color
paint
24.
ஒரு பொருளின் உள்ளே இடப்படும் வண்ணம் ………
நிரப்பு (fill)
எல்லை (stroke)
paint
In – color
25.
………….. என்று Adobe Photoshop போன்ற நிரல் மூலம் உருவாக்கப்படும் படப்புள்ளிகளைக் (pixels) கொண்ட நிழற்படங்கள்.
பிட்மேப்
JPEG
PNG
இவை அனைத்தும்
26.
பக்கத்தின் இரண்டு நெடுவரிசைகளுக்கு () அடைப்பட்ட பகுதி ………….
Gutter
வெற்றிடம்
வெற்றுப்பரப்பு
உடுகள் (interstellar)
27.
………என்பது InDesign னுள்ள அனைத்து கருவிகளையும் கொண்டுள்ள பெட்டியாகும்.
கருவி பலகம்
காட்டுப்பாட்டுப் பலகம்
கொள்கலன்
இல்லை
28.
In Design -னுள்ள ஒவ்வொரு உரையின் துண்டுப் பகுதியும் ………
உரைச் சட்டம் (text frame)
வடிவம் (shape)
பிடிபலகை (clipboard)
ஏதுமில்லை
29.
உரையை பதிப்பிக்க பயன்படும் கருவி எது?
Text tool
Type tool
Crop tool
Hand tool
30.
Place கட்டளை _________ பட்டியில் இடம்பெற்றிருக்கும்.
File
Edit
Layout
Window
31.
பெட்டிகள் வரைவதற்குப் பயன்படும் கருவி _________
Line
Ellipse
Rectangle
Text
32.
_________ கருவி ஆவணத்தின் ஒரு பகுதியைப் பெரிதாக்கிப் பார்க்கப் பயன்படுகிறது.
Text tool
Line tool
Zoom tool
Hand tool
33.
Page Maker சன்னல் திரையில் கருப்பு நிற எல்லைக் கோட்டிற்கு வெளியில் இருக்கும் பகுதி _________ என அழைக்கப்படும்.
page
pasteboard
blackboard
dashboard
34.
_________ என்பது ஒரு DTP மென்பொருளாகும்.
Lotus 1-2-3
PageMaker
Maya
Flash
35.
சாதாரண அழிப்பான் போன்று பொருட்களை அழிப்பதற்கு ______ உதவுகிறது.
36.
நீங்கள் _____ கருவி மூலம் சதுரம் வரைய முடியும்.
37.
பணித்தளத்தில் _____ கருவியை பயன்படுத்தி ஒரு நேர்கோட்டை வரையலாம்.
38.
______ பட்டியைக் கிளிக் செய்து Insert Pages விருப்பத்தைப் பெறலாம்.
39.
_________ கருவி வட்டம் வரைவதற்குப் பயன்படுகிறது.
40.
ஆவணத்தை மேலும் கீழுமாகவும், இடது மற்றும் வலது புறமாகவும் நகர்த்துவதை _________ என்கிறோம்.
41.
Fit page in window
42.
Zoom out
43.
Zoom in
44.
Undo
45.
Copy
46.
Bold, Italic, Portrait, Underline.
47.
Pointer Tool, Line Tool, Hide Tool, Hand Tool
48.
File, Edit, Layout, Type, Zip
49.
Adobe PageMaker, QuarkXPress, Adobe InDesign, Audacity
50.
அ) DTP என்பதன் விரிவாக்கம் Desktop publishing.
ஆ) DTP என்பதன் விரிவாக்கம் Desktop publication.
51.
அ) சுட்டியின் மூலம் மட்டுமே உரையைத் தேர்ந்தெடுக்க முடியும்.
ஆ) சுட்டி மற்றும் விசைப்பலகையின் மூலம் உரையைத் தேர்ந்தெடுக்க முடியும்.
52.
கீழ்க்கண்டவற்றில் சரியான இணையை தேர்ந்தெடு.
a ) Edit Cut
b ) Edit New
c ) Undo Copy
d ) Undo Redo
53.
ஆட்டோகேடிலிருந்து எவ்வாறு வெளியேறலாம்?
54.
லைன் கட்டளை மற்றும் ரெக்டாங்கல் கட்டளையைப் பயன்படுத்தி செவ்வகம் வரையும் போது ஏற்படும் நடைமுறை சிக்கல்களைக் கூறு. ஏன் ஒன்றை விட்டு மற்றொன்றைப் பயன்படுத்த வேண்டும்?
55.
லைன் (LINE) கட்டளையைப் பயன்படுத்தும் போது பல கோணத்தை முடிக்கப் பயன்படும் விரைவான வழிமுறையைக் கூறு.
56.
OSNAPஐ ON மற்றும் OFF செய்வதற்கு எந்த செயல்பாட்டு விசையைப் பயன்படுத்த வேண்டும்?
57.
ரிப்பனில் உள்ள ஒரு பொத்தான் மீது சுட்டுக்குறியை நிறுத்தும் போது என்ன தோன்றும்?
58.
ரிப்பனில் உள்ள அனைத்துப் பொத்தான்களையும் எப்படி மறைப்பாய்?
59.
காலக்கோட்டின் (Timeline) ன் தேவை என்ன?
60.
Adobe Professional Flash CS6ஐ தொடங்க தேவையான படிநிலைகளை எழுதுக.
61.
Flash என்பது என்ன?
62.
பல்லூடக உருவாக்க குழு உறுப்பினர்களை பட்டியலிடுக.
63.
வரையறு – பல்லூடக உருவாக்கம்.
64.
ஒலி கோப்பு வடிவங்களைப் பட்டியலிடுக.
65.
66.
வரையறு – பல்லூடகம் மற்றும் அதன் சிறப்பம்சம்.
67.
பொருட்களை குழுவாக்க படிநிலைகளை எழுதுக.
68.
Corel Draw வில் கலைத்திறனுள்ள ஊடக கருவி (Artistic Media tool) ஏன் பயன்படுத்தப்படுகின்றது?
69.
Corel Draw வில் ரூலர் (Ruler) ஏன் பயன்படுத்தப்படுகின்றது.
70.
Corel Draw வில் பண்பு பட்டை (Property Bar) என்றால் என்ன?
71.
Corel Draw வில் ஒரு பொருள் என்றால் என்ன?
72.
Zooming என்பது என்ன?
73.
Page tool –ன் பயன் என்ன?
74.
Tooltip எப்போது தோன்றும்?
75.
InDesign ஆவண சன்னல் திரையில் எது அவசியமானது?
76.
Adobe InDesign என்ன மென்பொருள்?
77.
பேஜ்மேக்கரில் புதிய பக்கங்களை எவ்வாறு செருகலாம்?
78.
தொடர்புள்ள உரைத்தொகுதி என்றால் என்ன?
79.
உரை பதிப்பித்தல் என்றால் என்ன?
80.
எலிப்ஸ் டூல் மற்றும் எலிப்ஸ் ஃபிரேம் டூல் வேறுபடுத்துக.
81.
பேஜ்மேக்கரில் உள்ள பட்டிப்பட்டை பற்றி குறிப்பு எழுதுக.
82.
DTP மென்பொருள்களுக்கு எடுத்துக்காட்டுகள் தருக.
83.
வட்டங்களை உருவாக்கும் பின்வரும் முறைகளை சுருக்கமாக விவரி.
அ. Centre and radius
ஆ. Centre and diameter
84.
LINE கட்டளையில் உள்ள Undo தேர்வின் பயன்களை எழுதுக.
85.
விசைப்பலகை மூலம் LINE, CIRCLE மற்றும் ERASE போன்ற கட்டளைகளை எவ்வாறு விரைவாக உள்ளிடலாம்?
86.
பொருள்களை உருவாக்குவதற்கான ஏதேனும் மூன்று கட்டளைகளைக் கூறு.
87.
Zoom கருவி மற்றும் Hand கருவி வேறுபாடுகளைக் கூறுக.
88.
கீழ்கண்ட செயல்களை செய்ய உதவும் கருவிகளை கூறுக.
அ. கோடு வரைதல்
ஆ. தற்போக்கு உருவம் வரைதல்
இ. நீங்கள் வரைந்தவற்றை அழித்தல்
89.
பல்லூடகத்தில் உள்ள பல்வேறு கோப்பு வடிவங்கள் பற்றி விவரிக்கவும்.
90.
உருவாக்க குழு உறுப்பினர்களின் பணிகள் மற்றும் பொறுப்புகளைப் பற்றி எழுதுக.
91.
அசைவூட்டலின் சிறப்பம்சங்கள் மற்றும் தொழில் நுட்பங்களை விவரிக்கவும்.
92.
பல்லூடக கூறுகளை சுருக்கமாக விவரி.
93.
பொருட்களின் பிரதி மற்றும் பொருட்களின் நகலியினை எவ்வாறு உருவாக்குவாய்? இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை எழுதவும்.
94.
ஒரு பொருளுக்கு நிரப்பு வண்ணத்தையும் மற்றும் எல்லைகோட்டின் வண்ணத்தையும் எவ்வாறு குறிப்பிடுவாய்?
95.
Corel Draw வில் பிழைகளை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்? அதனை செய்வதற்கான விசைப்பலகை குறுக்கு வழி என்ன?
96.
Flyout னுடைய எந்த கருவியானது நட்சத்திர கருவியினை கொண்டிருக்கும்?
97.
வெக்டார் வரைகலைக்கும் பிட்மேப்ஸ் (Bitmaps) க்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?
98.
கருவி பலகத்திலுள்ள வரைபட சட்டங்கள் எத்தனை? அவை யாவை?
99.
ஒரு பொருளை எப்படி உருவாக்குவாய் என விரிவாக விவரி?
100.
எழுத்துக்களை மேலொட்டு அல்லது கீழோட்டு என எவ்வாறு மாற்றுவாய்?
101.
பெரிதாக்குதலுடன் (Zooming) தொடர்புடைய சார்புகளுக்கான அனைத்து விசைப்பலகை குறுக்குவழிகளை பற்றி எழுதுக
102.
InDesign -ல் உள்ள View கட்டளைகள் யாவை?
103.
கருவி பலகத்தில் (Tools panel) உள்ள ஏதேனும் 3 கருவிகளை பற்றி எழுதுக
104.
கருவி பலகத்தை ( Tools panel ) பற்றி விரிவாக விளக்கவும்
105.
மாஸ்டர் பக்கத்தில் பக்க எண்களை எவ்வாறு சேர்ப்பாய்?
106.
107.
உரை உள்ள சட்டங்களை எவ்வாறு இணைப்பாய்?
108.
பிரிக்கப்பட்ட உரைத்தொகுதியை எவ்வாறு சேர்ப்பாய்?
109.
பேஜ்மேக்கரில் உள்ள ஏதேனும் மூன்று கருவிகளின் குறும்படங்களையும், அதன் பயன்களையும் கூறு.
110.
பேஜ்மேக்கரில் உள்ள ஏதேனும் மூன்று கருவிகளையும் அதன் விசைப்பலகை குறுக்கு வழிகளையும் கூறு.
111.
பேஜ்மேக்கர் என்றால் என்ன? அதன் பயன்களை கூறு.
112.
ரெக்டாங்கல் பொருளைப் பற்றி எழுதுக. ஆட்டோகேடில் செவ்வகம் வரைவதற்கான வழிமுறைகளைக் கூறு.
113.
கட்டளைச் சாளரம் பற்றி விவரி.
114.
ஆட்டோகேட் இடைமுகத்தைப் பற்றி விவரி.
115.
Tools பலகத்தில் காணப்படும் கருவிகள் சிலவற்றை விவரி.
116.
Flash சன்னல் திரையில் பயன்படுத்தும் கூறுகளை விவரி.
117.
பல்லூடக கோப்பில் உள்ள வெவ்வேறு கோப்பு வடிவங்களை விவரிக்கவும்.
118.
அசைவூட்டல் நுட்பங்கள் பற்றி விரிவாக விளக்கவும்.
119.
பல்லூடக செயல்கள் பற்றி விரிவாக விளக்கவும்.
120.
Corel Draw வில் எவ்வாறு ஒரு நட்சத்திரத்தை உருவாக்குவாய்?
121.
பலகோணங்களை (Polygon) யை படிநிலைகளை எழுதுக.
122.
சுருளினை (Spiral) வரைய படிநிலைகளை எழுதுக.
123.
பாதையில் ஒரு வகையினை உருவாக்க படிநிலைகளை எழுதுக
124.
சிறு குறிப்பு எழுதுக
(i) பயன்பாட்டு பட்டை (Application bar)
(ii) ஆவண தொகுதி (Document Tab)
(iii) கருவி பலகம் (Tools panel)
125.
InDesign-ல் புதிய ஆவணத்தை உருவாக்குவதற்கான படிநிலைகளை எழுதுக
126.
பாலிகான் டூலைப் பயன்படுத்தி ஒரு நட்சத்திரம் வரைவதற்கான வழிமுறைகளைக் கூறு.
127.
பேஜ்மேக்கர் கருவிப்பெட்டியிலுள்ள கருவிகளைப் பற்றி விவரி.
1.
(d)
F7
2.
(a)
User Coordinate System
3.
(b)
Ctrl + 9
4.
(a)
Application
5.
(c)
The Zoom tool
6.
(d)
.fla
7.
(c)
Flash
8.
(b)
Flash Movies
9.
(c)
File → New
10.
(a)
மேடை
11.
(b)
Microsoft
12.
(d)
அசைவூட்டல்
13.
(c)
RTF
14.
(c)
நல்ல யோசனை
15.
(c)
பல்லூடகம்
16.
(c)
Shift
17.
(d)
F5
18.
(c)
2
19.
(c)
Pick கருவி
20.
(a)
பண்பு பட்டை
21.
(c)
Corel Draw
22.
(a)
கோடுகள் மற்றும் வளைவுகள்
23.
(a)
எல்லை (stroke)
24.
(a)
நிரப்பு (fill)
25.
(d)
இவை அனைத்தும்
26.
(a)
Gutter
27.
(a)
கருவி பலகம்
28.
(a)
உரைச் சட்டம் (text frame)
29.
(a)
Text tool
30.
(a)
File
31.
(c)
Rectangle
32.
(c)
Zoom tool
33.
(b)
pasteboard
34.
(b)
PageMaker
35.
( )
(Eraser)
36.
( )
(Rectangle)
37.
( )
(Line)
38.
( )
Layout
39.
( )
எலிப்ஸ்
40.
( )
திரைஉருளல்
41.
சாளரத்தின் அளவை, திரையின் அளவிற்கு பொருத்துவதற்காக அளவிடுதல்.
42.
முந்தைய முன் வடிவமைக்கப்பட்ட சதவிதத்தை குறைத்தல் மற்றும் திரும்பப்பெறல்
43.
அடுத்த முன்வடிவமைக்கப்பட்ட சதவிதத்திற்கு உருப்பெருக்க செய்ய
44.
Ctrl+Z
45.
Ctrl+C
46.
Portrait
47.
Hide Tool
48.
Zip
49.
Audacity
50.
DTP என்பதன் விரிவாக்கம் Desktop publishing.
51.
சுட்டி மற்றும் விசைப்பலகையின் மூலம் உரையைத் தேர்ந்தெடுக்க முடியும்.
52.
Edit Cut
53.
1. மூடு (X) பொத்தானைச் கிளிக் செய்ய வேண்டும்.
2. ஆட்டோகேட் வரைபடத்தை சேமிக்க வேண்டுமா என வினா எழுப்பும். உங்கள் வரைபடத்தை சேமிக்காமல் மூடுவதற்கு No பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும். ஆட்டோகேட் உங்கள்
வேலையை வட்டில் பதிவு செய்யாமல் வெளியேறும்.
54.
1. Line கட்டளையைப் பயன்படுத்தி செவ்வகம் வரைய முடியும்.
2. ஆனால் அதில் கோண அளவுகள் 90 டிகிரி உள்ளனவா என சரிபார்க்க வேண்டும்.
3. மேலும் ஒவ்வொரு கோடும் தனித்தனி பொருளாக இருக்கும்.
4. ஒரு கோட்டின் மீது கிளிக் செய்தால் அந்தக் கோடு மட்டுமே தேர்வு செய்யப்படும். * மற்ற கோடுகள் தேர்வு செய்யப்படாது.
5. ஆகையால் ஆட்டோகேட் 2016 இல் உள்ள RECTANGLE கட்டளை, சரியான கோண அளவுகளுடன் ஒரு செவ்வகத்தை ஓரே பொருளாக வரைய வழி வகுக்கிறது.
55.
1. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தொடர்ச்சியான கோடுகளை வரையும் போது, Close விருப்பமானது முதல் கோட்டின் தொடக்கப்புள்ளியையும், கடைசி கோட்டின் முடிவுப்புள்ளியையும் இணைக்கப் பயன்படுகிறது.
2. முடிவுப் புள்ளியை சுட்டியைக் கிளிக் செய்து குறிப்பிட்டால், வரைபடத்தை முடிக்க கட்டளை வரியில் C எனத் தட்டச்சு செய்து நுழைவு விசையை அழுத்த வேண்டும்
56.
F3 விசை
57.
1. ஒரு பொத்தானின் மீது சுட்டியை வைக்கும் போது, சிறிய உதவித் திரை தோன்றும்.
2. ஒரு பொத்தானின் மீது சுட்டியை நீண்ட நேரம் வைத்திருக்கும் போது, ஆட்டோகேட் அந்தப் பொத்தானைப் பற்றிய விரிவான உதவித் திரையை காண்பிக்கும்.
58.
ரிப்பனின் மேல்பகுதியில் உள்ள சிறிதாக்குப் பொத்தானை மூன்று முறை கிளிக் செய்யும் போது, ரிப்பனில் உள்ள அனைத்துப் பொத்தான்களும் மறைந்து பேனல் தொகுதிகளாக மாறும்.
59.
(i) காலக்கோடு என்பது சலனப்படத்தை உருவாக்கும் ஒவ்வொரு சட்டகம், அடுக்கு மற்றும் காட்சியின் பதிவு ஆகும்.
(ii) இது அடுக்குகள் மற்றும் சட்டகங்களை பயன்படுத்தி சலனப்படத்தின் உள்ளடக்கத்தை கட்டுப்படுத்தி ஒருங்கிணைக்கிறது.
(iii) ஒவ்வொரு உறுப்பின் தோற்றத்தையும் அசைவூட்டத்தையும் தெளிவாகக் காட்டப் பயன்படுகிறது.
60.
Start > All programs > Adobe Flash Professional CS6 ஐத் தேர்வு செய்யவும்
61.
(i) Flash என்பது அசைவூட்டங்களை உருவாக்கப் பயன்படும் ஒரு மென்பொருள் ஆகும்.
(ii) இது அடிப்படைப் பொருள்களை வரையவும், காட்சிகளை உருவாக்கவும் பல்வேறு கருவிகளைக் கொண்டுள்ளது.
62.
1. தயாரிப்பு மேலாளர்
2. உரை பதிப்பாளர்
3. பொருளடக்க வல்லுநர்
4. ஸ்கிரிப்ட் எழுத்தாளர்
5. பல்லூடக வடிவமைப்பாளர்
6. கணினி வரைகலைக் கலைஞர்
7. ஒலி மற்றும் ஒளிக்காட்சி வல்லுநர்
8. கணினி நிரலர்
9. வலை வல்லுநர்.
63.
பல்லூடக உருவாக்கம் :
திட்டப் பணியானது சுமூகமாகத் தொடரவும் மற்றும் தகவல், இலக்குப் பார்வையாளர்களைச் சென்றடைவதை உறுதி செய்யக்கூடியத் திறமையான திட்டமிடல்.
64.
WAV (Waveform Audio File format)
MP3 (MPEG Layer-3 format)
OGG
AIFF(Audio Interchange File Format)
WMA (WindowsMediaAudio)
RA (RealAudio Format).
65.
66.
பல்லூடகம் : உரை, வரைகலை, நிழற் படம், ஒலி, அசைவூட்டல் மற்றும் ஒளி ஆகிய பல வகை ஊடகங்களை ஒரே ஊடகத்தில் ஒரே தகவல் தொகுப்பில் ஒன்றிணைப்பதாகும்.
சிறப்பம்சம் :
1. தகவல் துறையில் பல்லூடகம் சமீபத்திய செறிவூட்டும் அனுபவமாக மாறி வருகிறது.
2. கடந்த பத்து ஆண்டுகளில் பல்லூடகத் தொழில் நுட்பத்தின் வேகமான வளர்ச்சியானது கணக்கீடு பொழுதுபோக்கு மற்றும் கல்வி ஆகியவற்றின் மீது பெரும் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
67.
1. Pick கருவி கொண்டு பொருள்களைத் தேர்வு செய்யவும். பல பொருள்களைத் தேர்வு செய்ய Shift சாவியினை அழுத்தியவாறு தேர்வு செய்யவும்.
2. Object > Group > Group objects தேர்வு செய்யவும் (அ) Ctrl + G யைத் அழுத்தவும்.
68.
Corel DRAW-ல் கலைத்திறனுள்ள ஊடகக் கருவி. ஆவணத்தில் கலை தூரிகை, தெளிப்பு மற்றும் calligraphic விளைவுகளைச் சேர்ப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றது.
69.
ரூலர்கள் ஒரு ஆவணத்தில் பொருட்களின் அளவு மற்றும் நிலையைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
70.
இயக்கத்தில் உள்ள கருவி அல்லது பொருள் தொடர்பான கட்டளைகளுடன் ஒரு நீக்கக்கூடிய பட்டையாகும்.
எ கா : செவ்வக கருவி தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தால், செவ்வகத்தை உருவாக்கும் மற்றும் செவ்வகத்தைத் திருத்தும் கட்டளைகளைக் காட்டும்.
71.
பொருள் என்பது படம், வடிவம், கோடு, உரை, வளைவு, சின்னம், அல்லது அடுக்கு போன்ற வரைபடத்தின் ஒரு உறுப்பு. கருவிகளைக் கொண்டு உருவாக்கும் வரைபடங்கள் பொருட்கள் எனப்படும்.
72.
பெரிதாக்கல் (Zooming ) :
InDesign-ல் உள்ள சில பணிகளுக்கு, ஒரு பொருளை அல்லது பொருளின் ஒரு பகுதியை உயர் உருப்பெருக்கம் அல்லது பெரிதாக்குதல் மூலம் பார்வையிடுதல் தேவைப்படுகிறது.
ஒரு ஆவணத்தில் உள்ள ஒரு பொருளை பெரிதாக்கி (Zoom in) உற்று நோக்க பெரிதாக்குதல் அனுமதிக்கிறது. அந்தப் பொருளை (Zoom out) சிறியதாக்கி விலகிச் சென்று பார்க்க சிறிதாக்குதல் பயன்படுகிறது.
ஆவணத்திலுள்ள எந்த பொருளையும் விரைவாக பெரிதாக்கல் ( அ ) பொருளை மிக அருகில் கொண்டு வருதல்.
73.
ஒரு ஆவணத்தின் உள்ளே பல்வேறு பக்க அளவுகளை உருவாக்க Page tool பயன்படுகிறது .
வெவ்வேறு பக்க அளவுகளை உருவாக்க :
1.Shift + P யை அழுத்தி பக்க கருவிகளைத் தேர்ந்தெடுக்க கிளிக் செய்யவும் .
2.இப்பொழுது கட்டுப்பாட்டுப் பலகத்தில் ( Control Page )உள்ள தேர்வைப் பயன்படுத்தி பக்க அமைவை மாற்றவும் .
74.
கருவிப்பலகத்தில் கிளிக் செய்யாமல் ஏதேனும் ஒரு கருவியின் மீது செருகும் புள்ளியை வைக்கும் பொழுது Tooltip தோன்றும்.
75.
(i) முதல் முறையாக InDesign ஐ - தொடங்கும் போது தானமைவாக இடம் பெறும் பணித்தளம் " Essentials " எனப்படும்
(ii) இது மேலே கட்டுப்பாட்டுப் பலகம் , இடப்புறம் கருவிப்பலகம் ஆகியவற்றுடன் InDesign சன்னல் திரையில் தோன்றும் .
76.
(i) InDesign என்பது பக்க வடிவ அமைவு மென்பொருள் நிரலாகும்.
(ii) ஆவணப் பக்கங்களில் உரை மற்றும் வரைகலையின் நிலைப்பாட்டை எளியதாக்க அனுமதிக்கும் கருவிகளை பக்க அமைவு மென்பொருள் கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக, InDesign-ஐப் பயன்படுத்தி, ஒவ்வொரு பக்கத்திலும் கட்டுரைகள் (articles) மற்றும் படங்களை உள்ளடக்கிய செய்திமடலை (Newsletter) நீ உருவாக்கலாம்.
(iii) வடிவமைப்பிற்கும் மற்றும் வலையில் அச்சிடுவதற்கு ( அ ) பயன்படுத்துவதற்கான ஆவணங்களை உருவாக்குவதற்கும் பயன்படுகிறது.
77.
1. சேர்க்க வேண்டிய பக்கத்திற்கு முதல் பக்கத்தில் கிளிக் செய்யவும்.
2. பட்டிப்பட்டையில் Layout > Insert Pages என்பதைக் கிளிக் செய்யவும்.
3. Insert Page உரையாடல் பெட்டி தோன்றும்.
4. Insert உரைப்பெட்டியில் சேர்க்க வேண்டிய பக்கங்களின் எண்ணிக்கைகளை உள்ளிடவும்.
5. தற்போதைய பக்கத்திற்கு பின்பு புதிய பக்கத்தைச் சேர்க்க page(s) கீழிறங்கு பட்டியில் 'after' என்பதைக் கிளிக் செய்யவும்.
6. Insert பொத்தானை அழுத்தவும்.
7. இப்பொழுது புதிய பக்கங்கள் சேர்க்கப்பட்டிருக்கும்.
78.
ஒரு உரைத்தொகுதியிலுள்ள உரையானது மற்றொரு உரைத்தொகுதிக்குள் செல்லுமாறு, ஒரு உரைத்தொகுதியை மற்றொரு உரைத்தொகுதியுடன் இணைக்கவோ அல்லது தொடர்புபடுத்தவோ முடியும். இவ்வாறு தொடர்புபடுத்தப்பட்டிருக்கும் உரைத்தொகுதிகளுக்கு தொடர்புள்ள உரைத்தொகுதிகள் (Threading text blocks) என்று பெயர்.
79.
உரைபதிப்பித்தல் : ஆவணத்தில் உள்ள உரையில் மாற்றங்கள் செய்வது உரை பதிப்பித்தல் (Text Editing) எனப்படும். உரையை சேர்த்தல், நீக்குதல், பிழை திருத்துதல், நகர்த்துதல் மற்றும் நகலெடுத்தல் போன்ற செயல்கள் அடங்கும்.
80.
| எலிப்ஸ் டூல் | எலிப்ஸ் ஃபிரேம் டூல் |
| வட்டம் மற்றும் நீள் வட்டம் வரையப் பயன்படுகிறது. |
உரை மற்றும் வரைகலைகளை வைப்பதற்கான நீள் வட்டங்களை வரையப் பயன்படுகிறது. |
81.
பட்டிப்பட்டை :
(i) இந்தப் பட்டை File, Edit, Layout, Type, Element, Utilities, View, Window, Help போன்ற பட்டிகளைக் கொண்டுள்ளது.
(ii) ஒரு பட்டியில் கிளிக் செய்தால் பல கட்டளைகள் மற்றும் துணைப்பட்டிகளுடன் கூடிய கீழ்விரி பட்டியல் தோன்றும்.
82.
i). அடோப் பேஜ்மேக்கர் (Adobe PageMaker)
ii). அடோப் இன்டிசைன் (Adobe InDesign)
iii). குவார்க் எக்ஸ்பிரஸ் (Quark XPress)
83.
a) Center and radius மூலம் வட்டம் வரைதல் :
1. ரிப்பனில் Home > Draw > Circle > Center, Radius என்ற வரிசையில் கிளிக் செய்யவும்.
2. மையப்புள்ளியைக் குறிப்பிட வரைகலை சன்னல் திரையில் ஆர்பிட்டரி பாய்ன்ட்டை
3. தேர்ந்தெடுக்கவும். ஆரத்தின் அளவை உள்ளிட்டு நுழைவு விசையை அழுத்தவும்.
b) Center and diameter மூலம் வட்டம் வரைதல் :
1. ரிப்பனில் Home > Draw > Circle > Center, Diameter என்ற வரிசையில் கிளிக் செய்யவும். (அ) கட்டளை வரியில் CIRCLE அல்லது C எனத் தட்டச்சு செய்யவும்.
2. கட்டளை வரியில் கீழ்க்கண்ட செய்திகள் தோன்றும்.
Specify center point for circle or [3P/2P/Trr (tan tan radius) :
திரையில் ஏதேனும் ஒரு புள்ளியில் சுட்டியின் இடது பொத்தானைக் கிளிக் செய்யவும் (அ) மதிப்பை உள்ளிடவும்.
Specify radius of circle or (Diameter) :
விட்டத்தை உள்ளிட D எனத் தட்டச்சு செய்யவும்.
Specify diameter of circle:
விட்டத்தின் அளவை தட்டச்சு செய்யவும்.
84.
1. ஒரு கோடு வரையும் போது முடிவுப் புள்ளியைத் தவறாகக் குறிப்பிட்டுவிட்டால், Undo கட்டளை மூலம் கடைசியாகக் குறிப்பிட்ட புள்ளியை நீக்கிவிட்டு, முந்தைய கட்டத்திற்குச் செல்லலாம்.
2. இந்தக் கட்டளையை பலமுறை பயன்படுத்த, கட்டளை வரியில் இந்த விருப்பத்தைப் பயன்படுத்த முடியும்.
3. Specify next point (or) [Undo] கட்டளை வரியில் Undo அல்லது U எனத் தட்டச்சு செய்ய வேண்டும்.
4. சுட்டியை வலது கிளிக் செய்து தோன்றும் பட்டியலில் உள்ள Undo விருப்பத்தைத் தேர்ந்தெடுத்தும் இதைச் செய்யலாம்.
85.
| கட்டளை | குறுக்குவழி |
| LINE | L |
| CIRCLE | C |
| ERASE | E |
86.
LINE கட்டளை
CIRCLE கட்டளை
RECTANGLE கட்டளை
ARC கட்டளை
87.
| Zoom கருவி | Hand கருவி |
| 1. மேடையின் எந்த பகுதியையும் பெரிதாக்குவதற்கு மற்றும் சிறிதாக்குவதற்குப் பயன்படுகிறது. | மேடையை நகர்த்தப் பயன்படுகிறது. |
| 2.பொருளின் காட்சி அளவை மாற்றுகிறது. | உருப்பெருக்க அளவை மாற்றியமைக்காமல் பொருள்களைப் பார்க்க உதவுகிறது. |
| 3. பொருட்களை பெரிதாக்க (அ) சிறிதாக்க விருப்பத் தேர்வுகள் பகுதியில் உள்ள Enlarge (அ) Reduce modifiers உதவுகிறது. | மேடையில் பொருளின் ஒரு பகுதியை மட்டும் நெருக்கமாய் பார்க்க உதவுகிறது. |
88.
அ) Line கருவி.
ஆ) Pencil கருவி.
இ) Eraser கருவி.
89.
RTF ( Rich Text Format) : மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் 1987 ஆம் ஆண்டு குறுக்கு பணித்தள ஆவணங்களின் பரிமாற்றங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட முதன்மைக் கோப்பு வடிவம். Plain Text : Notepad, Gedit, போன்ற உரை பதிப்பான்களில் இக்கோப்புகளைத் திறக்கலாம். படிக்கலாம் மற்றும் பதிப்பாய்வு செய்யலாம்.
நிழற்பட வடிவங்கள் :
TIFF(Tagged Image File Format):
கணிப்பொறி பதிப்பக உலகில் பொதுவான வடிவம் மற்றும் கணினிகளுக்கிடையே பெரிய கோப்புகளை அனுப்புவதற்கு வசதியான வடிவமாகும்.
BMP(Bitmap) : மிகவும் பெரியது மற்றும் குறுக்கமற்றது. எனவே அதிக தெளிவுத்திறன் (அ) பெரிய நிழற்படங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.
DIB (Device Independent Format) :
கோப்புகளை பல்வேறு சாதனங்களில் காண்பிக்க அனுமதிக்கிறது.
GIF(Graphics Interchange Format) :
குறுக்கப்பட்ட நிழற்பட வடிவம் மற்றும் குறைந்த அளவு வண்ணங்களைப் பயன்படுத்தும் வரைகலைக்கு மிகச் சிறந்த பொருத்தமான வடிவம்.
JPEG(Joint Photographic Experts Group):
அதிகபட்ச நிழற்பட குறுக்கத்தை அடைவதற்கான வடிவம் ஆகும். புகைப்படம், இயற்கை கலை வேலைப்பாடு மற்றும் அதைப் போன்றவற்றுடன் நன்றாக வேலை செய்யும்.
TGA (Targa) : அதிகத் தெளிவுத்திறன் நிழற்படங்களுக்கான முதல் பிரபலமான வடிவமாகும். பெரும்பான்மையான ஒளிக்காட்சி பிடிப்புப் பலகைகள் இதை ஆதரிக்கின்றன.
PNG(Portable Network Graphics) :
குறைந்த இழப்பு, சிறியது மற்றும் நன்கு குறுக்கப்பட்ட செவ்வக நிழற்படங்களாகச் சேமிக்கப்படும், சிறந்த திரையிடும் தேர்வுகளுடன் முழுவதுமாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
இலக்க ஒலிக் கோப்பு வடிவங்கள் :
WAV(Waveform Audio File Format) : விண்டோஸில் குறுக்கப்படாத ஒலிக் கோப்புகளைச் சேமிக்கும் பிரபலமான வடிவம்.
MP3 (MPEG Layer-3 Format) : இசையை சேமிக்கவும், பதிவிறக்கம் செய்யவும் மிகவும் பிரபலமான வடிவம்.
OGG : சிறந்த ஓட்டத்தினை அடைவதற்காக வடிவமைக்கப்பட்ட இலவச திறந்த மூல கொள்கலன் வடிவம்.
AIFF (Audio Interchange File Format) : Apple நிறுவனம் பயன்படுத்தும் தரமான ஒலி வடிவம்.
WMA (Windows Media Audio) :
பதிப்புரிமை பாதுகாப்பிற்காக DRM (Digital Right Management) திறன்களோடு மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட வடிவம்.
RA (Real Audio Format) : இணையத்தில் ஒலியின் ஓட்டத்திற்காக வடிவமைப்பட்ட வடிவம்.
இலக்க ஒளிக்காட்சிக் கோப்பு வடிவங்கள் :
AVI(Audio Video Interleave) :
விண்டோஸிற்கான ஒளிக்காட்சிக் வடிவமாகும். ஒலி மற்றும் படத்தின் கூறுகளைக் கோப்பில் மாற்று நெடுவரிசைத் தொகுப்பில் சேமிக்கப்படுகிறது.
MPEG ( Moving Picture Experts Group) : இலக்க ஒளிக்காட்சி மற்றும் ஒலிக் குறுக்கத்தை ISO குழுவினரால் உருவாக்கப்படும் ஒரு தர நிலை ஆகும்.
90.
1. தயாரிப்பு மேலாளர்: பல்லூடக உருவாக்குதலில் குறித்த நேரத்தில் முழு தரத்துடன் பல்லூடகத் திட்ட உருவாக்கத்தை வரையறுப்பது மற்றும் ஒருங்கிணைப்பது.
2. பொருளடக்க வல்லுநர் : ஏற்கனவே திட்டமிட்ட பயன்பாட்டின் பொருளடக்கத்தைப் பற்றி அனைத்து ஆராய்ச்சி செயல்பாடுகளையும் செய்வதற்கு பொறுப்பானவர்.
3. ஸ்கிரிப்ட் எழுத்தாளர் : கருத்துருக்களை முப்பரிமாண சூழல்களில் காட்சிப்படுத்துகிறார், தேவை ஏற்படின் நிரல் மீது மெய்நிகர் உண்மை ஒருங்கிணைப்பைப் பயன்படுத்தலாம்.
4. உரை பதிப்பாளர் : உரை எப்பொழுதும் கட்டமைப்பாகவும் சரியான இலக்கணத்தோடும் இருக்க வேண்டும் என்பதற்கு பொறுப்பானவர்.
5. பல்லூடக வடிவமைப்பாளர் : பல்லூடகத்தின் அனைத்து அடிப்படைத் தொகுதிகளைப் படைப்பாக்க மென்பொருளைப் பயன்படுத்தி அசைவூட்டல் போன்றவற்றை ஒருங்கிணைப்பவர்.
6. கணினி வரைகலை கலைஞர் : நிரலின் வரைகலைக் கூறுகளான பின்னணி, புல்லட்கள், பொத்தான்கள், பாடப்பதிப்பாய்வு, 3D பொருள்கள், அசைவூட்டல் மற்றும் சின்னங்கள் ஆகியவற்றைக் கையாளும் பங்கினை வகிப்பவர்.
7. ஒலி மற்றும் ஒளிக்காட்சி வல்லுநர்: பதிவு செய்தல். ஒலி விளைவுகளைப் பதிப்பாய்வு செய்தல் மற்றும் இலக்கமாக்கல் ஆகியவற்றுக்கு பொறுப்பானவர்.
8. கணினி நிரலர் : பொருத்தமான மொழியில் குறிமுறை (அ) ஸ்கிரிப்ட் வரிகளை எழுதுபவர்.
9. வலை வல்லுநர் : ஒரு இணைய வலைப் பக்கத்தை உருவாக்க, அதை பராமரிப்பது மற்றும் இணைய சேவைகள் பரவலான சமூக அணுகுதலை வழங்குதல்.
91.
சிறப்பம்சங்கள் :
அசைவூட்டலில், திரை பொருள் என்பது ஒரு வெக்டர் படமாகும்.
1. எண் மாற்றத்தைப் பயன்படுத்தி ஒருங்கிணைப்புகளை வரையறுக்க படத்துடன் அதன் பாதையின் இயக்கம் கணக்கிடப்படும்.
2. குறைந்தபட்ச சட்டக விகிதம் விநாடிக்கு 16 சட்டங்கள் என இருந்தால் மென்மையான தோற்றத்தைக் கொடுக்கும்.
3. இயற்கை தோற்றத்திற்கு குறைந்தபட்சம் விநாடிக்கு 25 சட்டகங்களாக இருத்தல் வேண்டும்.
தொழில்நுட்பம் :
1.அசைவூட்டல் இரு (அ) முப்பரிமாணங்களைக் கொண்டது.
2. திரையில் X மற்றும் Y அச்சுகளுக்கு இடையேயான பரப்பில் இரு பரிமாண அசைவூட்டல் நிழற்படத்தை உயிரோட்டமாகக் கொண்டு வருகிறது.
3. முப்பரிமாண அசைவூட்டத்தில் X, Y மற்றும் Z ஆகிய மூன்று அச்சுகளுக்கிடையே உயிரோட்டம் நடைபெறுகிறது.
4. அசைவூட்டல் கருவிகள் மிகவும் சக்தி வாய்ந்தவை மற்றும் திறமை வாய்ந்தவை ஆகும், இரண்டு வகையான அசைவூட்டல்களாவன :
1. பாதை அசைவூட்டல்
2. சட்டக அசைவூட்டல்
1.பாதை அசைவூட்டல் : மாறாத பின்னணியைக் கொண்ட திரையில் ஒரு பொருளை நகர்த்துவதை உள்ளடக்கியது.
2. சட்டக் அசைவூட்டல் : பல பொருட்கள் ஒரே சமயத்தில் நகர்வதற்கு அனுமதிக்கிறது மற்றும் பின்னணி (அ) பொருள்களும் மாறுகிறது.
92.
பல்லூடகம் 5 முக்கியக் கூறுகளைக் கொண்டுள்ளது. அவை
1. உரை
2. நிழற்படம்
3. ஒலி
4. ஒளிக்காட்சி
5. அசைவூட்டல்
உரை : பல்லூடகத்தின் அடிப்படை கூறு. இது தொடர்பிற்கான மிகவும் பொதுவான வழி ஆகும்.
நிழற்படம் : பல்லூடகத்தின் முக்கியக் கூறாகச் செயல்படுகிறது.
ஒலி : எந்த மொழியிலும் உள்ள அர்த்தமுள்ள பேச்சு ஆகும், இசையின் இன்பம், சிறப்பு விளைவுகள் போன்றவற்றை வழங்கும் மிகவும் முக்கியமானக் கூறு.
ஒளிக்காட்சி : பல்லூடகப் பயன்பாடுகளில் தகவலைத் தெரிவிக்க, சக்தி வாய்ந்த வழி ஆகும். இது பதிவு செய்யப்பட்ட நிகழ்வு, காட்சி போன்றவற்றைப் காண்பித்தல் ஆகும்.
அசைவூட்டல் : அசையா நிழற்படங்களை மிக விரைவாகக் காட்சிப்படுத்தும் செயலாகும்.
93.
1. தேர்வு செய்யப்பட்ட பொருளை நகல் எடுக்க, பட்டிப் பட்டையிலிருந்து Edit > Duplicate என்பதைத் தேர்வு செய்யவும் (அ) விசைப் பலகையில் Ctrl+D என்பதை அழுத்தவும்.
2. தேர்வு செய்யப்பட்ட பொருளின் நகலி (Clone) யை உருவாக்க Edit > Clone என்பதைப் பட்டிப் பட்டியிலிருந்து தேர்வு செய்யவும்.
3. நகலி செய்தல் மற்றும் பிரதி எடுத்தலுக்குள்ள வேறுபாடு: அசல் பொருளின் மீது செய்யப்படும் அனைத்து மாற்றங்களும் நகலி மீதும் தானாகவே செயற்படுத்தப்படும்.
94.
1. Pick கருவியைப் பயன்படுத்தி பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.
2. வண்ணத்தட்டில் ஏதாவது ஒரு வண்ணத்தைக் கிளிக் செய்யவும்.
3. தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளுக்கு வண்ணங்கள் சேர்ந்திருக்கும்.
4. வண்ணத்தட்டில் உள்ள ஏதாவது ஒரு வண்ணத்தில் வைத்து வலது பொத்தானைக் கிளிக் செய்யவும்.
5. தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளின் ஓர வண்ணம் (அ) எல்லைக்கோட்டின் வண்ணம் மாறியிருக்கும்.
95.
1. Corel DRAW வில் பிழைகளைச் சரிசெய்ய மிக சமீபத்தில் செய்த செயலில் ஆரம்பித்து Undo வரையும் பொழுது செய்த செயல்களை எல்லாம் Undo செய்ய முடியும். (அல்லது)
2. ஒரு வரைபடத்தின் கடைசியாக சேமிக்கப்பட்ட நிலைக்கு பின் செல்லலாம்.
3. Undo செய்வதற்கான விசைப்பலகைக் குறுக்குவழி Ctrl+Z.
96.
1. Polygon கருவியின் Flyout நட்சத்திரக் கருவியினைக் கொண்டிருக்கும்.
2. Polygon கருவிக்கான விசைப்பலகைக் குறுக்குவழி Y.
97.
| நெறிய (அ) வெக்டார் வரைகலை | பிட்மேப் |
| 1.கோடுகள் மற்றும் வளைவுகளால் உருவாக்கப்படுகின்றன. |
பிக்சல்கள் எனப்படும் சிறிய சதுரங்களால் ஆனவை. |
| தெளிவுத்திறன் சார் பற்றி வரைகலை. |
தெளிவுத்திறன் சார்ந்த படங்கள். |
| லோகோக்கள் மற்றும் illustrations -க்கு மிகவும் ஏற்றது. |
புகைப் படங்கள் மற்றும் எண்முறை ஓவியங்களுக்கு மிகவும் ஏற்றது. |
98.
வரைகலை சட்டங்களை வரைவதற்கு கருவிகள் பலகம் மூன்று கருவிகளை கொண்டுள்ளது .
1.Ellipse சட்டகம் - நீள்வட்ட மற்றும் வட்ட சட்டங்களை உருவாக்கலாம்.
2.Rectangle சட்டகம் - செவ்வக மற்றும் சதுர சட்டங்களை உருவாக்கலாம் .
3.Polygon சட்டகம் - சமபக்க பலகோண சட்டங்களை உருவாக்கலாம் .
99.
1. சில நேரங்களில், நமது பதிப்பிற்கு தேவைப்படும் ஒரே வகை பொருள் எளிய வடிவங்களாகும்
2. வடிவங்களை உருவாக்கும் Rectangle , Ellipse , Polygon போன்ற கருவியைத் தேர்ந்தெடுக்க , கருவிகள் பலகத்தில் Rectangle கருவி மீது கிளிக் செய்து சுட்டெலி பொத்தானை அழுத்தி பிடித்தவாறே , நாம் பயன்படுத்த விரும்பும் வடிவக் கருவியைத் தேர்ந்தெடுக்கலாம் .
3.வடிவ கருவி தேர்ந்தெடுக்கப்பட்ட பின் ஆவணத்தில் அதை கைமுறையாக இழுப்பதன் மூலம் வடிவத்தை உருவாக்கலாம் ( அ ) ஆவணத்தில் கிளிக் செய்து Shapes உரையாடல் பெட்டியைத் திறந்து அதன் அமைப்பை வரையறுக்கலாம் .
100.
1. கீழொட்டு அல்லது மேலோட்டாக மாற்றப்படவேண்டிய எழுத்தை தேர்ந்தெடுக்கவும் .
2.கட்டுப்பாட்டுத் தட்டில் உள்ள ஏதேனும் ஒரு பொத்தானை கிளிக் செய்யவும்
மேலோட்டு
கீழொட்டு
3. தேர்வு செய்யப்பட்ட எழுத்து தேவைப்படும் படி மாறும்.
101.
● Ctrl + = அழுத்தவும் - பெரிதாக்குதல்
● Ctrl + - அழுத்தவும் - சிறிதாக்குதல்
● Ctrl + 1 பக்கத்தை அதன் சரியான அளவில் காணுதல்
● Ctrl + 2 பக்கத்தை 200% அளவில் காணுதல்
● Ctrl + 0 ஆவண சன்னலில் முழு பக்கத்தையும் பொருத்துதல்
● Alt + Ctrl + ஆவண சன்னலில் முழு பரவலையும் பொருத்துதல்
● Ctrl + Spacebar (or)
● Ctrl + Alt + Spacebar தற்காலிகமாக Zoom கருவியை அணுகுதல் (பெரிதாக்க அல்லது சிறிதாக்க)
102.
1. பெரிதாக்குதல் (Zoom in)
2. சிறிதாக்குதல் (Zoom Out)
3. Actual Size
4. Fill page in window
5. Fit spread in window
6. Entire pasteboard
103.
1. தேர்ந்தெடுப்புக் கருவி :
இது பொருட்களை அல்லது பொருட்களின் தொகுதியை தேர்ந்தெடுக்க பயன்படுகிறது. V என்ற பொத்தானை அழுத்தி இந்தக் கருவியை தேர்ந்தெடுக்கலாம்.
2. நேரடி தேர்வு கருவி( Direct selection tool ) :
இது ஒரு குழுவில் இருந்து ஒரே ஒரு பொருளை தேர்ந்தெடுக்க உதவுகிறது . (A வை அழுத்தவும்) உதவுகிறது.
(Group கட்டளை மூலம் பல்வேறு தனித்தனி பொருள்கள் குழுவாக சேர்ந்துள்ளன). அல்லது ஒரு பொருளின் பாதையில் ஒன்று அல்லது பல புள்ளிகளைத் தேர்ந்தெடுக்கிறது
3. இடைவெளி கருவி (Gap tool ) :
இந்த இடைவெளிக்கருவி (Gap tool) பொருள்களுக்கு இடையே உள்ள இடைவெளியை சரிசெய்யப் பயன்படுகிறது. இந்தக் கருவியைத் தேர்ந்தெடுக்க U என்ற பொத்தானை அழுத்தவும்.
104.
InDesign-ல் இருக்கும் அனைத்து கருவிகளும் இந்த கருவிகள் பலகத்தில் இருக்கின்றன. பொருளை உருவாக்கும் கருவிகள் (Rectangle கருவி) பொருளை உருமாற்றும் (Transforming) கருவிகள் (Rotate கருவி), பக்க காட்சியை மாற்றுதல் மற்றும் பணித்தளத்திற்கு செல்லுதல் கருவிகள் (Zoom கருவி மற்றும் Hand கருவி) ஆகிய கருவிகள் உள்ளன. சில கருவிகளின் கீழ் வலது மூலையில் ஒரு சிறிய முக்கோணம் இருக்கும். மேலும் கூடுதலான கருவிகள் அந்த கருவியின் கீழ் உள்ளன. என்பதை இந்த முக்கோணம் குறிக்கும். கிளிக் செய்து அழுத்தி பிடிப்பதன் மூலம் மறைந்திருக்கும் கருவிகளைக் காணலாம்.
கருவிப்பலகமானது.
1. தேர்ந்தெடுப்புக் கருவிகள்
2. அடிப்படை வடிவங்களை வரைவதற்கான கருவிகள்
3. வரைதல் மற்றும் புதுப்பித்தல் கருவிகள்
4. பரிமாற்றம் கருவிகள்
5. உரை பதிப்பித்தல் கருவிகள்
6. நகர்தல் கருவிகள்
7. பொருள் வடிவமைப்பு கருவிகள் , போன்றவற்றை கொண்டுள்ளது தானமைவாகக் கருவிப்பலகம் , கட்டுப்பாடுப் பலகத்திற்கு கீழே உள்ளது .ஆவண சன்னலின் இடது புறம் உள்ள கருவி பலகத்தில் அனைத்து கருவிகளும் காணப்படும் .
105.
1. Master Pages பணிக்குறியில் கிளிக் செய்ய வேண்டும்.
2. இப்பொழுது டெக்ஸ்ட் டூலைக் கிளிக் செய்தால் செருகும் புள்ளி I-beam ஆக மாறும்.
3. பக்க எண் இட வேண்டிய இடது மாஸ்டர் பக்கத்தைக் கிளிக் செய்ய வேண்டும்.
4. Ctrl+Alt+P என்பதை அழுத்த வேண்டும்.
5. இடது மாஸ்டர் பக்கத்தில் பக்க எண் 'LM' எனத் தோன்றும்.
6. இதே போன்று பக்க எண் இட வேண்டிய வலது மாஸ்டர் பக்கத்தைக் கிளிக் செய்ய வேண்டும்.
7. Ctrl+Alt+P என்பதை அழுத்த வேண்டும்.
8. வலது மாஸ்டர் பக்கத்தில் பக்க எண் 'RM' எனத் தோன்றும். மற்ற பக்கங்களில் சரியான பக்க எண்கள் தெரியும்.
106.
107.
1. சட்டத்திற்கான கருவியைப் பயன்படுத்தி இரண்டாவது சட்டம் வரைய வேண்டும்.
2. முதல் சட்டத்தை கிளிக் செய்து தேர்ந்தெடுக்க வேண்டும்.
3. கீழ்ப்பக்க கைப்பிடியிலுள்ள சிவப்பு முக்கோணத்தைக் கிளிக் செய்ய வேண்டும்.
4. பின்னர் இரண்டாவது சட்டத்தைக் கிளிக் செய்ய வேண்டும். உரை இரண்டாவது சட்டத்தில் விரியும்.
108.
1. செருகும் புள்ளியை இரண்டாவது உரைத் தொகுதியின் கீழ்ப்பக்க கைப்பிடியில் கிளிக் செய்து அதன் மேல்பகுதி வரை இழுக்கவும்.
2. பிறகு செருகும் புள்ளியை முதல் உரைத் தொகுதியின் கீழ்ப்பக்க கைப்பிடியில் கிளிக் செய்து கீழ்நோக்கி தேவையான அளவிற்கு இழுக்கவும். இப்பொழுது பிரிக்கப்பட்ட இரண்டு உரைத் தொகுதிகளும் ஒன்றாக இணைக்கப்பட்டுவிடும்.
109.
| கருவியின் பெயர் |
கருவிப் பெட்டியிலுள்ள பணிக்குறி |
சுட்டுக்குறி | பயன் |
| பாயின்டர் டூல் |
உரை மற்றும் வரைகலைப் படங்களைத் தேர்ந்தெடுக்க நகர்த்த, அளவை மாற்ற. |
||
| டெக்ஸ்ட் டூல் |
உரையை உள்ளிட, தேர்ந்தெடுக்க பதிப்பிக்க. |
||
| ரொடேடிங் டூல் |
பொருள்களை தேர்ந்தெடுக்க மற்றும் சுழற்ற. |
110.
| கருவிகள் | விசைப்பலகை குறுக்கு வழி |
| 1. பாயின்டர் டூல் | F9 |
| 2. ரொட்டேடிங் டூல் | Shift+F2 |
| 3. லைன் டூல் | Shift +F3 |
111.
(i) அடோப் பேஜ்மேக்கர் என்பது ஒரு பக்க வடிவமைப்பு மென்பொருளாகும். இது அச்சிடுவதற்கு ஏற்ற வகையில் ஆவணங்களை வடிவமைக்கப் பயன்படுகிறது.
(ii) இதைப் பயன்படுத்தி சிறிய வணிக அட்டை முதல் பெரிய புத்தகம் வரை அனைத்தையும் வடிவமைக்கலாம்.
(iii) பக்க வடிவமைப்பு மென்பொருளில் உள்ள கருவிகள், ஆவணத்தில் எளிதாக உரை மற்றும் வரைகலை வடிவங்களைச் சேர்க்க உதவுகின்றன.
(iv) உதாரணமாக, பேஜ்மேக்கரைப் பயன்படுத்தி, ஒவ்வொரு பக்கத்திலும் கட்டுரைகள் மற்றும் படங்களை வைத்து ஒரு செய்தி மடலை உருவாக்க முடியும்.
112.
வடிவமைப்பாளர் பயன்படுத்தும் அடிப்படை வடிவங்களில் ஒன்று செவ்வகம் ஆகும்.
ஆட்டோகேட் 2016 இல் உள்ள RECTANGLE கட்டளை, சரியான கோண அளவுகளுடன் ஒரு செவ்வகத்தை ஒரேப் பொருளாக வரைய வழி வகுக்கிறது.
1. Command - RECTANGLE (அல்லது) REC (நுழைவு விசையை அழுத்தவும்).
2. கட்டளை வரியில் செய்தி தோன்றும்.
RECTANGLE
Specify first corner point or [Chamfer/Elevation/Fillet/Thickness/Width]:
செவ்வகத்தின் முதல் முனை (P1) வரைய வேண்டிய இடத்திற்கு சுட்டுக்குறியை நகர்த்தி சுட்டியின் இடது பொத்தானைக் கிளிக் செய்யவும்.
3. கட்டளை வரியில் செய்தி தோன்றும், Specify other corner point or [Area / Dimensions / Rotation]: செவ்வகத்தின் முதல்முனையிலிருந்து சுட்டியை மூலைவிட்டம் வழியாக நகர்த்தி, மறுமுனையில் (P2) சுட்டியின் பொத்தானைக் கிளிக் செய்யவும்.
இப்பொழுது செவ்வகம் வரையப்பட்டிருக்கும்.
எ.கா:
மூலைவிட்ட புள்ளிகள் (20,30) மற்றும் (150. 160) கொண்ட ஒரு செவ்வகம் வரைதல் Command: RECTANGLE↲
Specify first corner point or [chamfer/Elevation! Fillet Thickness/Width] :20,30↲ .
Specify other corner point of [Area/Dimcnsions/ Rotation]: 150,160↲
113.
(i) பயன்பாட்டு சாளரத்தின் அடிப்பகுதியில், நிலைமைப் பட்டைக்கு மேலாக கட்டளை சாளரம் அமைந்திருக்கும்.
(ii) இந்தச் சாளரத்தில் பொதுவாக மூன்று உரை வரிகள் காணப்படும்.
(iii) முதல் இரண்டு வரிகள், இதற்கு முன் பயன்படுத்திய கட்டளைகளைக் காட்டும். கடைசி வரியானது கட்டளை வரி ஆகும். கட்டளைச் சாளரம் தோன்றாவிட்டால் என Ctrl + 9 விசைகளை அழுத்தி தோன்றச் செய்யலாம்.
(iv) கட்டளை வரியில் செருகும் புள்ளி உள்ள இடத்தில் கட்டளைகளை உள்ளிட முடியும். இது Command: Prompt என அழைக்கப்படும்.
(v) கட்டளையின் முதல் எழுத்தை தட்டச்சு செய்தவுடன், அந்த எழுத்தில் தொடங்கும் அனைத்துக் கட்டளைகளின் பட்டியல் தோன்றும்.
(vi) கட்டளை வரியில் மதிப்புகளை உள்ளிட்டவுடன் நுழைவு விசையை அழுத்த வேண்டும்.
(vii) இந்தச் சாளரத்தை கிளிக் செய்து இழுத்து திரையில் எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம்.
(viii) அளவையும் மாற்றலாம். கட்டளையை உள்ளிடும் போது சிறிய எழுத்திலோ, இரண்டும் கலந்தோ கொடுக்க முடியும்.
(ix) ஒரு செயல் செயல்பாட்டில் இருக்கும் பொழுது ESC விசையை அழுத்தினால், அது அக்கட்டளையை முடிவுக்குக் கொண்டு வரும்.
(x) ஆட்டோகேடில் முன்னதாகப் பயன்படுத்திய கட்டளையைத் திரும்பவும் பயன்படுத்த வேண்டுமெனில், Command: Prompt இல் நுழைவு விசை (அ) இடைவெளி விசையை அழுத்த வேண்டும்.
114.
ஆட்டோகேட் 2016 இன் இடைமுகமானது ரிப்பன்களையும், பயன்பாட்டுப் பட்டிகளையும் அடிப்படையாகக் கொண்டது.
இந்த இடைமுகத்தின் முக்கியமான அம்சம் வரைகலைப் பகுதியின் அளவு பெரியதாக இருக்கும்.
1. பயன்பாட்டுப் பட்டி :
(i) சிவப்பு நிறத்தில் உள்ள பயன்பாட்டுப் பொத்தானைக் (A) கிளிக் செய்தால், பயன்பாட்டுப் பட்டி தோன்றும்.
(ii) இந்த பட்டியில் உள்ள கோப்புத் தொடர்புடையக் கட்டளைகள் :
* புதிய கோப்பை உருவாக்குதல்,
* ஏற்கனவே உள்ள கோப்பை திறத்தல்,
* நடப்பு கோப்பை சேமித்தல்,
* நடப்புக் கோப்பை வேறொரு பெயரில்,
* வேறு கோப்புறையில் சேமித்தல்,
* வேறு கோப்பு வடிவத்தில் சேமித்தல்,
* நடப்புக் கோப்பை அச்சிடுதல்.
(iii) பயன்பாட்டுப் பட்டியின் மேல் பகுதியில் தேடல் பட்டை இடம்பெற்றிருக்கும்.
(iv) இந்தப் பட்டை கட்டளைகளைத் தேடுவதற்குப் பயன்படுகிறது. இதில் ஏதேனும் ஒரு முக்கியச் சொல்லை தட்டச்சு செய்தால், தொடர்புடைய கட்டளைகளின் பட்டியலைக் காட்டும்.
(v) பயன்பாட்டுப் பட்டியில் சமீபத்தில் நாம் பயன்படுத்திய கோப்புகள் இருக்கும்.
2. ரிப்பன் :
ஆட்டோகேட் 2016 சன்னல் திரையின் மேல் பகுதியிலுள்ள தலைப்புப் பட்டைக்கு கீழே உள்ள பகுதி ரிப்பன் ஆகும். இந்த ரிப்பன் இரண்டு பகுதிகளை உடையது.
1. ரிப்பன் தொகுதி
2. ரிப்பன் பேனல்
(i) ரிப்பனின் Home தொகுதியில் Draw. Modify, Annotation, Layers போன்ற பேனல்கள் இருக்கும்.
(ii) Draw, Modify போன்ற சில பேனல்கள் திரையில் காண்பிப்பதை விட அதிக பொத்தான்களைக் கொண்டிருக்கும்.
(iii) மேலும் பல கருவிகளைக் காண்பிக்கும் வகையில் இந்தப் பேனல்களை விரிவாக்க முடியும்.
(iv) பேனல் தலைப்பின் வலது புறத்தில் உள்ள அம்புக்குறியை க்ளிக் செய்து பேனலை விரிவாக்க முடியும்.
(v) இது கூடுதல் கருவிகளையும் கட்டுப்பாடுகளையும் கொண்டிருக்கும்.
(vi) ஒரு செயல் செயல்பாட்டில் இருக்கும் பொழுது ESC விசையை அழுத்தினால், அது அக்கட்டளையை முடிவுக்குக் கொண்டு வரும்.
(vii) ஆட்டோகேடில் முன்னதாகப் பயன்படுத்திய கட்டளையைத் திரும்பவும் பயன்படுத்த வேண்டுமெனில், Command: Prompt இல் நுழைவு விசை (அ) இடைவெளி விசையை அழுத்த வேண்டும்
115.
1. Selection கருவி (V): ஒரு பொருள் (அ) ஒரு பொருளின் பகுதியாகிய வெளிக்கோடு மற்றும் உட்பரப்பு ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கப் பயன்படுகிறது.
2. Sub Selection கருவி ( A) : ஒரு பொருளை தேர்ந்தெடுக்க. இழுக்க, மீள் வடிவமைக்க பயன்படுகிறது.
3. Free Transform sal (F): பொருள்களை சுழற்ற, அளவிட, வளைக்க மற்றும் உருக்குலைக்கப் பயன்படுகிறது.
4. 3D Rotation கருவி (W) : மேடையில் முப்பரிமாண வெளியில் சலனப் படத்துண்டுகளை சுழற்றுவதன் மூலம் முப்பரிமாண விளைவுகளை உருவாக்க பயன்படுகிறது.
5. Lasso கருவி (L) : ஒரு பொருளைச் சுற்றி வரைவதன் மூலம், இது பொருள்களை தேர்ந்தெடுப்பதற்கு (அ) ஒரு பொருளின் பகுதியைத் தேர்ந்தெடுப்பதற்குப் பயன்படுகிறது.
6. Pen கருவி (P) : நங்கூரப் புள்ளிகள் எனப்படும். தொடர் புள்ளிகளை உருவாக்குவதன் மூலம் கோடுகள் மற்றும் வளைகோடுகளை வரைவதற்கு பயன்படுகிறது.
7. Text கருவி (T) : உரையை உருவாக்க மற்றும் பதிப்பிக்கப் பயன்படுகிறது.
8. Line கருவி (N) : நேர்கோடுகளை வரைவதற்கு பயன்படுகிறது. செங்குத்து, கிடைமட்ட மற்றும் 45° மூலைவிட்ட கோடுகளை வரைவதற்கு Shift விசையை அழுத்திப் பிடிக்க வேண்டும்.
9. Rectangle கருவி (R) : செவ்வகம் வரையப் பயன்படுகிறது. Shift விசையை அழுத்திப் பிடிப்பதன் மூலம் சதுரம் வரையலாம்.
10. Oval கருவி (O) : நீள்வட்ட வடிவங்களை வரைவதற்குப் பயன்படுகிறது. Shift விசையைப் பயன்படுத்தி வட்டம் வரையலாம்.
116.
ஃப்ளாஷ் சன்னல் திரை நான்கு பகுதிகளாகப் (அ) கூறுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை
1. பணித்தளம் மற்றும் ஒட்டுப்பலகை (Stage and Pasteboard) )
2.காலக்கோடு (Timeline)
3. கருவிகள் பலகம் (Tools Panel)
4. Property Inspector
1. பணித்தளம் மற்றும் ஒட்டுப்பலகை (பணிப்பகுதி) .
(i) பணித்தளத்தின் நடுவில் உள்ள செவ்வக வெள்ளைப் பகுதி மேடை (Stage) என அழைக்கப்படுகிறது.
(ii) அசைவுப்படத்திற்கான அசைவூட்டங்கள். பொருட்கள் மற்றும் காட்சிகள் ஆகியவற்றை உருவாக்க, பதிப்பிக்க இருத்திவைக்க மற்றும் இயக்க இந்த மேடை உதவுகிறது.
(iii) ஃப்ளாஷ் மேடையானது சலனப் படத்தை (Movie) காட்டுகிறது.
(iv) ஃப்ளாஷ்-ல் பணித்தளத்தை சுற்றியுள்ள சாம்பல் நிற பகுதி ஒட்டுப்பலகை (Pasteboard) எனப்படும். இந்த ஒட்டு பலகையில் பொருள்களை உருவாக்கவும், பதிப்பிக்கவும் முடியும்.
2. காலக்கோடு (Time Line):
(i) ஃப்ளாஷ்-ன் மிக முக்கியமான கூறுகளில் ஒன்றாகும்.
(ii) இது பணித்தளப் பகுதியின் அமைந்துள்ளது. காலக்கோடு ஒவ்வொரு உறுப்பின் தோற்றத்தையும் அசைவூட்டத்தையும் தெளிவாகக் காட்டப் பயன்படுகிறது.
(iii) காலக்கோடு என்பது சலனப்படத்தை உருவாக்கும் ஒவ்வொரு சட்டகம், அடுக்கு மற்றும் காட்சியின் பதிவு ஆகும். அடுக்குகள் மற்றும் சட்டகங்களைப் பயன்படுத்தி சலனப்படத்தின் உள்ளடக்கத்தை கட்டுப்படுத்தி ஒருங்கிணைக்கிறது.
3. ஃப்ளாஷ் கருவிகள் பலகம் (The Flash Tools Panel) :
(i) இது மேடையில் வரைகலையை உருவாக்க, தேர்ந்தெடுக்க (அ) பதிப்பிக்கத் தேவையான கருவிகளைக் கொண்டுள்ளது.
(ii ) கருவிகள் பலகத்தின் மேல் இருக்கும் இரட்டை அம்புக்குறியானது பலகத்தைப் பிரித்து பணிக்குறிகளை மட்டும் பார்வையிட (அ) பலகத்தை விரிவாக்கம் செய்து எல்லா கருவிகளையும் பார்வையிடப் பயன்படுகிறது.
(iii ) கொடாநிலையாக கருவிப்பட்டையானது திரையின் வலது புறத்தில் இருக்கும்.
(iv ) அடைப்புக்குறிகளுக்குள் இருக்கும் ஒற்றை பெரிய எழுத்து இந்த கருவிகளை தேர்ந்தெடுப்பதற்கான விசைப்பலகை குறுக்கு வழி ஆகும்.
4. பண்பு சோதிப்பான் (Property inspector) :
(i ) இது கொடாநிலையாக Flash பணியிடத்தின் வலது பக்கத்தில் தோன்றும்.
(ii ) இது நூலகப்பலகத்துடன் இணைக்கப் பட்டிருக்கும்.
(iii) இது தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளின் பண்புகள் மற்றும் விருப்பங்களைக் காட்டுவதோடு அவற்றை மாற்றவும் அனுமதிக்கிறது.
(iv) பொருள் (object) என்பது உரையாகவோ, படமாகவோ, கோடாகவோ (அ) வேறு வடிவமாகவோ இருக்கலாம்.
117.
RTF ( Rich Text Format) : மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் 1987 ஆம் ஆண்டு குறுக்கு பணித்தள ஆவணங்களின் பரிமாற்றங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட முதன்மைக் கோப்பு வடிவம்.
Plain Text : Notepad, Gedit, போன்ற உரை பதிப்பான்களில் இக்கோப்புகளைத் திறக்கலாம். படிக்கலாம் மற்றும் பதிப்பாய்வு செய்யலாம்.
நிழற்பட வடிவங்கள் :
TIFF(Tagged Image File Format):
கணிப்பொறி பதிப்பக உலகில் பொதுவான வடிவம் மற்றும் கணினிகளுக்கிடையே பெரிய கோப்புகளை அனுப்புவதற்கு வசதியான வடிவமாகும்.
BMP(Bitmap) : மிகவும் பெரியது மற்றும் குறுக்கமற்றது. எனவே அதிக தெளிவுத்திறன் (அ) பெரிய நிழற்படங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.
DIB (Device Independent Format) :
கோப்புகளை பல்வேறு சாதனங்களில் காண்பிக்க அனுமதிக்கிறது.
GIF(Graphics Interchange Format) :
குறுக்கப்பட்ட நிழற்பட வடிவம் மற்றும் குறைந்த அளவு வண்ணங்களைப் பயன்படுத்தும் வரைகலைக்கு மிகச் சிறந்த பொருத்தமான வடிவம்.
JPEG(Joint Photographic Experts Group):
அதிகபட்ச நிழற்பட குறுக்கத்தை அடைவதற்கான வடிவம் ஆகும். புகைப்படம், இயற்கை கலை வேலைப்பாடு மற்றும் அதைப் போன்றவற்றுடன் நன்றாக வேலை செய்யும்.
TGA (Targa) : அதிகத் தெளிவுத்திறன் நிழற்படங்களுக்கான முதல் பிரபலமான வடிவமாகும். பெரும்பான்மையான ஒளிக்காட்சி பிடிப்புப் பலகைகள் இதை ஆதரிக்கின்றன.
PNG(Portable Network Graphics) :
குறைந்த இழப்பு, சிறியது மற்றும் நன்கு குறுக்கப்பட்ட செவ்வக நிழற்படங்களாகச் சேமிக்கப்படும், சிறந்த திரையிடும் தேர்வுகளுடன் முழுவதுமாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
இலக்க ஒலிக் கோப்பு வடிவங்கள் :
WAV(Waveform Audio File Format) : விண்டோஸில் குறுக்கப்படாத ஒலிக் கோப்புகளைச் சேமிக்கும் பிரபலமான வடிவம்.
MP3 (MPEG Layer-3 Format) : இசையை சேமிக்கவும், பதிவிறக்கம் செய்யவும் மிகவும் பிரபலமான வடிவம்.
OGG : சிறந்த ஓட்டத்தினை அடைவதற்காக வடிவமைக்கப்பட்ட இலவச திறந்த மூல கொள்கலன் வடிவம்.
AIFF (Audio Interchange File Format) : Apple நிறுவனம் பயன்படுத்தும் தரமான ஒலி வடிவம்.
WMA (Windows Media Audio) :
பதிப்புரிமை பாதுகாப்பிற்காக DRM (Digital Right Management) திறன்களோடு மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட வடிவம்.
RA (Real Audio Format) : இணையத்தில் ஒலியின் ஓட்டத்திற்காக வடிவமைப்பட்ட வடிவம்.
இலக்க ஒளிக்காட்சிக் கோப்பு வடிவங்கள் :
AVI(Audio Video Interleave) : விண்டோஸிற்கான ஒளிக்காட்சிக் வடிவமாகும். ஒலி மற்றும் படத்தின் கூறுகளைக் கோப்பில் மாற்று நெடுவரிசைத் தொகுப்பில் சேமிக்கப்படுகிறது.
MPEG ( Moving Picture Experts Group) : இலக்க ஒளிக்காட்சி மற்றும் ஒலிக் குறுக்கத்தை ISO குழுவினரால் உருவாக்கப்படும் ஒரு தர நிலை ஆகும்.
118.
அசைவூட்டல் : அசையா படங்களை மிக விரைவாக காண்பிப்பதன் மூலம் அவற்றைத் தொடர்ச்சியான அசைவு போன்ற உணர்வை கொடுக்கும் செயல். அசைவூட்டலில், திரை பொருள் என்பது ஒரு வெக்டர் படமாகும்.
சிறப்பம்சங்கள் :
அசைவூட்டலில், திரை பொருள் என்பது ஒரு வெக்டர் படமாகும்.
1. எண் மாற்றத்தைப் பயன்படுத்தி ஒருங்கிணைப்புகளை வரையறுக்க படத்துடன் அதன் பாதையின் இயக்கம் கணக்கிடப்படும்.
2. குறைந்தபட்ச சட்டக விகிதம் விநாடிக்கு 16 சட்டங்கள் என இருந்தால் மென்மையான தோற்றத்தைக் கொடுக்கும்.
3. இயற்கை தோற்றத்திற்கு குறைந்தபட்சம் விநாடிக்கு 25 சட்டகங்களாக இருத்தல் வேண்டும்.
தொழில்நுட்பம் :
1.அசைவூட்டல் இரு (அ) முப்பரிமாணங்களைக் கொண்டது.
2. திரையில் X மற்றும் Y அச்சுகளுக்கு இடையேயான பரப்பில் இரு பரிமாண அசைவூட்டல் நிழற்படத்தை உயிரோட்டமாகக் கொண்டு வருகிறது.
3. முப்பரிமாண அசைவூட்டத்தில் X, Y மற்றும் Z ஆகிய மூன்று அச்சுகளுக்கிடையே உயிரோட்டம் நடைபெறுகிறது.
4. அசைவூட்டல் கருவிகள் மிகவும் சக்தி வாய்ந்தவை மற்றும் திறமை வாய்ந்தவை ஆகும், இரண்டு வகையான அசைவூட்டல்களாவன :
1. பாதை அசைவூட்டல்
2. சட்டக அசைவூட்டல்
1.பாதை அசைவூட்டல் : மாறாத பின்னணியைக் கொண்ட திரையில் ஒரு பொருளை நகர்த்துவதை உள்ளடக்கியது.
2. சட்டக் அசைவூட்டல் : பல பொருட்கள் ஒரே சமயத்தில் நகர்வதற்கு அனுமதிக்கிறது மற்றும் பின்னணி (அ) பொருள்களும் மாறுகிறது.
119.
பல்லூடகத்தை உருவாக்குவதற்கு போதுமான நேரம் மற்றும் திறமையான திட்டமிடல் ஆகியவை தேவைப்படுகின்றன. இது திட்டப்பணி சுமூகமாக தொடரவும் மற்றும் தகவல் இலக்கு பார்வையாளர்களைச் சென்றடையவும் உறுதி செய்கிறது. சிக்கலான பல்லூடகத் திட்டங்களை உருவாக்குவதற்கான படிநிலைகள் 1. கருத்துரு பகுப்பாய்வு மற்றும் திட்டமிடல் :
கருத்துரு பகுப்பாய்வு பொருத்தமான கருப்பொருள், வரவு-செலவு திட்டம் மற்றும் தேர்வு செய்த கருப்பொருளின் பொருளடக்கத்தின் இருப்பு ஆகியவற்றை அடையாளம் காண்கின்றது. கூடுதலாக. பதிப்புரிமை பிரச்சனைகளையும் இந்த படிநிலையில் கருத்தில் கொள்ளப்படுகிறது.
2. திட்ட வடிவமைப்பு : ஒருமுறை கருப்பொருளை இறுதி செய்த பிறகு, பல்லூடகத்தின் திட்டத்திற்கான நோக்கங்கள், குறிக்கோள்கள் மற்றும் செயல்பாடுகள் ஆகியவை வடிவமைக்கப்படுகின்றன. நோக்கத்தை செயல்படுத்துவதற்குத் தொடர்ச்சியான செயல்களை நிகழ்த்துவதைச் செயல்பாடுகள் என்கிறோம். இந்த செயல்பாடுகள், திட்ட வடிவமைப்பு படிநிலைக்கு பங்களிப்பை வழங்குகிறது.
3. முன் - உருவாக்குதல் : திட்டமிடல் மற்றும் வடிவமைத்தலின் அடிப்படையில் திட்டத்தை உருவாக்குவது தேவையானது ஆகும்.
முன்உருவாக்குதலின் படிநிலைகள் பின்வருமாறு :
1. வரவு - செலவு திட்டமிடல் : ஆலோசகர்கள், வன்பொருள், மென்பொருள், பயணம், தகவல் தொடர்பு மற்றும் பிரசுரித்தல் போன்ற ஒவ்வொரு நிலையிலும் அனைத்து பல்லூடக திட்டங்களுக்கும் வரவு செலவு திட்டம் தோராயமாகக் கணக்கிடப்படுகிறது.
2. பல்லூடகத்தை உருவாக்கும் குழு : உயர்ந்த பல்லூடகத் திட்டத்தை உருவாக்கும் குழுவிற்கு அந்த குழுவின் ஒட்டு மொத்த முயற்சி தேவை. குழுவானது ஸ்கிரிப்ட் எழுத்தாளர். தயாரிப்பு மேலாளர், பதிப்பாசிரியர், வரைகலை வடிவமைப்பாளர். பல்லூடக வடிவமைப்பாளர் மற்றும் வரை வல்லுநர் போன்ற பல்வேறு பதவிகளையும் மற்றும் பொறுப்புகளையும் செய்யும் உறுப்பினர்களைக் கொண்டது.
3. வன்பொருள் / மென்பொருள் தேர்ந்தெடுத்தல் :
பயன்பாட்டினை உருவாக்குவதற்கும், அதனை மீண்டும் செயல்படுத்துவதற்கும் பொருத்தமான கருவிகள் அனைத்து பல்லூடக பயன்பாடுகளுக்கும் தேவை. வன்பொருளானது தேர்ந்தெடுத்த வேகமான மையச் செயலகம், மற்றும் பெரிய திரையகம், பதிவுகளைச் சேமிக்கத் தேவையான வட்டுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. பொருத்தமான மென்பொருள் மற்றும் கோப்பு வடிவங்களைத் தேர்ந்தெடுத்தல் என்பது உருவாக்கப்படும் திட்டப் பணிக்கு கிடைக்கும் நிதியைப் பொறுத்தாகும்.
4. பொருளடக்கத்தை வரையறுத்தல் :
பொருளடக்கம் என்பது பொருளடக்க வல்லுநரால் பல்லூடக வடிவமைப்பாளருக்கு வழங்கப்படும் தகவல்கள் ஆகும். இந்த தகவல்களைக் கொண்டு உருவாக்கிய பயன்பாட்டில் பல்லூடக வடிவமைப்பாளர் விவரித்தல், புல்லட்கள், வரைபடங்கள் மற்றும் அட்டவணைகள் போன்றவற்றைத் தயார் செய்கிறார்.
5. கட்டமைப்பை தயார் செய்தல் : விரிவான கட்டமைப்பில் அனைத்து படிநிலைகளும் அடுத்தடுத்து வரும் செயல்பாட்டிற்கான நேர அளவு பற்றிய தகவல்களைக் கண்டிப்பாக கொண்டிருக்க வேண்டும், இந்த கட்டமைப்புச் செயல்பாடுகள், ஒவ்வொரு செயல்பாட்டிற்குமான பொறுப்பாளர் மற்றும் ஒவ்வொரு செயல்பாட்டிற்குமானத் தொடக்க / முடிவு நேரம் ஆகியவற்றை வரையறுக்கிறது. பல்லூடகப் பயன்பாட்டில் முன் உருவாக்குதல் செயல்பாட்டிற்குப் பிறகு, இந்தபடி நிலை தொடங்குகிறது.
6. உருவாக்குதல் : இது பின்னணி இசையைத் தேர்ந்தெடுத்தல், ஒலிப்பதிவு போன்ற செயல்பாடுகளை உள்ளடக்கியது. OCR மென்பொருளைக் கொண்டு உரையானது இணைக்கப்படுகிறது. படங்கள் இலக்கக் கேமராவைக் கொண்டு படம் பிடிக்கப்படுகிறது. ஒளிக்காட்சியினை பதிவு செய்து. தொகுத்து மற்றும் குறுக்கப்படுகிறது. இப்பொழுது, மாதிரி திட்டம் தயார் நிலையில் உள்ளது.
7.சோதித்தல் : திட்டத்தை பிரமாண்டமாக உருவாக்குவதற்கு முன், மாதிரி திட்டத்தை முழுவதுமாக சோதித்தல் வேண்டும். இவை அனைத்தும் சரியான இடத்தில் உள்ளதா என்பதை உறுதி செய்வதன் மூலம் வெளியீட்டிற்கு பிறகு நேரக்கூடிய தோல்வியைத் தவிர்க்க முடியும். Internet Explorer சோதனை செயல்பாடுகள் முடிந்த திட்டமான சரியாக பரிந்துரைக்கப்பட்டுள்ள மாற்றங்களோடு இணைக்கப்படுகிறது.
120.
1. பலகோண (Polygon) கருவியின் மீது அழுத்திக் கொண்டே இருந்தால் flyout பட்டி தோன்றி மேலும் பல கருவிகளைக் காட்டும்.
2. flyout பட்டியில் உள்ள நட்சத்திரக் கருவியைக் கிளிக் செய்யவும்.
3. வரையும் பகுதியில் எங்கு நட்சத்திரம் வர வேண்டுமோ அங்கு சுட்டியின் இடது பொத்தனை அழுத்திப்பிடித்தவாறு இழுத்து நகர்த்தவும்.
4. நட்சத்திர உருவம் உருவானவுடன் சுட்டியின் பொத்தானை அழுத்துவதை விட்டு விடவும்.
121.
1. பலகோண உருவம் வரைய polygon கருவியைக் கருவிப்பட்டையிலிருந்து தேர்ந்தெடுக்கவும். சுட்டியின் வடிவம் Crosshair குறியுடன் கீழ்ப்பகுதியில் பலகோணம் கொண்ட குறியாக இருக்கும்.
2. இப்போது வரையும் பகுதியில் எங்கு ஐங்கோணம் வரைய வேண்டுமோ அங்கு சுட்டியின் இடது பொத்தனை அழுத்தி பிடித்தவாறு நகர்த்த வேண்டும்.
3. விரும்பும் வடிவமுடைய பலகோணம் உருவானவுடன் சுட்டியின் பொத்தானை அழுத்துவதை விட்டு விடவும்.
4. வரைந்த பலகோணத்தின் பக்கங்களை அதிகரிக்க வரைந்த பலகோணத்தை Pick கருவி மூலம் தேர்ந்தெடுக்கவும்.
5. சுட்டியை பண்பு பட்டையில் உள்ள Number of Points on Polygon உரைப்பெட்டியில் கிளிக் செய்து தேவையான பக்கங்களின் எண்ணிக்கையைக் கொடுக்கவும்.
122.
1. பலகோண (Polygon) கருவியின் மீது அழுத்திப் பிடித்தவாறே இருந்தால் flyout பட்டி தோன்றி மேலும் பல கருவிகளைக் காட்டும்.
2. flyout பட்டியில் உள்ள சுருள் (Spiral) கருவியைக் கிளிக் செய்யவும்.
3. நீங்கள் பண்பு பட்டையில் உள்ள சுருள் சுழற்சி, பெட்டியில் எண்ணிக்கையைக் கொடுப்பதன் மூலம் தேவையான வட்டம் உடைய புதிய சுருள் அமைப்பை உருவாக்க முடியும்.
4. பின் பண்பு பட்டையில் கீழ்கண்ட ஏதேனும் ஒரு பொத்தானை கிளிக் செய்யவும்.
i) சமசீர் சுருள் (Symmetrical spiral)
ii). மடக்கை சுருள் (Logarithmic spiral)
5. சுழற்சியை வெளிப் புறமாக நகர்த்தும் போது சுருள் விரிவாக்க அளவுகளை விரும்பினால் spiral expansion slider ஐ நகர்த்தவும்.
6. வரையும் சன்னல் திரையில் நமக்கு வேண்டிய அளவு உள்ள சுருள் வரும் வரை சுட்டியை கிடைமட்டமாக இழுக்கவும்.
123.
1. கருவிப் பலகத்தில் பாதைக் கருவியில் உள்ள தட்டச்சை தேர்வு செய்யவும்.
2. தட்டச்சை சேர்க்க பாதையின் விளிம்பில் கிளிக் செய்யவும். (திறந்து அல்லது மூடி) உரைச் சட்டகத்தில் ஒரு ஒளிரும் செருகும் புள்ளி தோன்றும். பொருளில் எல்லை நீக்கப்படும்.
3. ஏதேனும் ஒரு உரையைத் தட்டச்சு செய்யவும். உரை தானாகவே மடிந்து உரைச் சட்டகத்திற்கு ஏற்றவாறு அமையும்.
4. பொருளின் விளிம்பில் தட்டச்சு தோன்றும். எல்லைகளை நீக்கிவிட்டு அதன் வடிவத்தில் உறுதியாக அமைகிறது.
5. Overflow குறியீடு தோன்றினால் உரைச் சட்டகத்தின் தேர்வை நீக்கி, தேர்வுக் கருவியை கருவிப் பலகத்தில் இருந்து தேர்வு செய்து உரைச் சட்டகத்தில் ஒரு மூலையில் இழுக்கவும்.
6. தேர்வுக்கருவியை தேர்வு செய்யவும் (அ) தட்டச்சு கருவியை மீண்டும் தேர்வு செய்யவும்.
124.
i) பயன்பாடு பட்டை :
1. இது பணித்தளத்திற்கு மேல் உள்ளது .இதில் பல படிகள் உள்ளன .
2. பட்டியை திறக்க , பயன்பாட்டு பட்டையில் உள்ள பட்டியின் பெயரை கிளிக் செய்யவும் .
3. ஒவ்வொரு பட்டியும் பட்டி வகையோடு தொடர்புடைய கட்டளையை பட்டியலிடும்.
ii) ஆவண தத்தல் :
1. கிடைமட்ட ரூலர்க்கு மேல்பகுதியில் உள்ளது .
2. ஆவணத்தின் பெயர் , உருப்பெருக்கத்தின் நிலை மற்றும் மூடு பொத்தான் ஆகியவற்றைக் கொண்டுள்ளது
3. ஒன்றிற்கு மேற்பட்ட ஆவணங்கள் திறந்திருந்தால் , ஒவ்வொரு ஆவணத்திற்கும் ஒரு தத்தல் தோன்றும் மற்றும் ஆவண தத்தல்கள் கிடைமட்ட வரிசையில் தோன்றும்
4.ஆவண தத்தலை கிளிக் செய்து , அந்த ஆவணத்தைச் சன்னல் திரையில் காணலாம்
iii) கருவிகள் பலகம் :
1.InDesign - ல் இருக்கும் அனைத்து கருவிகளும் கருவிகள் பலகத்தில் இருக்கின்றன .
2.பொருளை உருவாக்கும் கருவிகள் , பொருளை உருமாற்றும் கருவிகள் , பக்கக் காட்சியை மாற்றுதல் மற்றும் பணித்தளத்திற்கு செல்லுதல் கருவிகள் ஆகிய கருவிகள் உள்ளன .
125.
1.Start - > All programs - > Adobe InDesign CC 2019 என்பதை தேர்வு செய்யவும் . ( அ ) InDesign திரைமுகப்பில் உள்ள குறுக்கு வழியைத் தேர்வு செய்யவும் .
2."Welcome to InDesign " என்ற சன்னல் திரை திறக்கப்படும் .இப்பொழுது Create New பொத்தானைக் கிளிக் செய்யவும் .
3.இப்பொழுது New Document window புதிய ஆவண சன்னல் திறக்கப்படும் .
4.புதிய ஆவணத்தில் அடிப்படை தேர்வுகளை பொருத்துவதற்கு New Document உரையாடல் பெட்டியில்
Category தத்தலில் உள்ள Print , Web (அ) Mobile - ஐ தேர்வு செய்யவும் .
5.Width and Height , orientation , Pages , Start , Columns போன்ற தேர்வுகளை ஏற்கனவே தேர்வுசெய்யப்பட்ட தொகுதியில் குறிப்பிடவும்.
6.முன்பே இருத்தப்பட்ட அமைப்புகளோடு ஆவணத்தை திறக்க Create பொத்தானைக் கிளிக் செய்யவும்.
126.
1. கருவிப் பெட்டியிலிருந்து பாலிகான் டூலை தேர்ந்தெடுக்க வேண்டும் சுட்டுக்குறியானது crosshair ஆக மாறும்.
2. திரையில் தேவையான இடத்தில் கிளிக் செய்து இழுக்க வேண்டும்.
3. சுட்டியை அழுத்துவதை விட்டவுடன். ஒரு பலகோணம் வரையப்பட்டிருக்கும்.
4. பட்டிப்பட்டையில் Element>Polygon settings என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
5. இப்பொழுது Polygon Settings உரையாடல் பெட்டி தோன்றும்.
6. அதிலுள்ள Number of sides உரைப்பெட்டியில் 5 என உள்ளிடவும்.
7. Star inset உரைப்பெட்டியில் 50% என உள்ளிடவும்.
8. பிறகு OK பொத்தானை அழுத்தவும். இப்பொழுது திரையில் ஒரு நட்சத்திரம் தெரியும்.
127.
| கருவியின் பெயர் |
கருவிப் பெட்டியிலுள்ள பணிக்குறி |
சுட்டுக்குறி | பயன் |
| பாயின்டர் டூல் |
உரை மற்றும் வரைகலைப் படங்களைத் தேர்ந்தெடுக்க நகர்த்த, அளவை மாற்ற. |
||
| டெக்ஸ்ட் டூல் |
உரையை உள்ளிட, தேர்ந்தெடுக்க பதிப்பிக்க. |
||
| ரொடேடிங் டூல் |
பொருள்களை |
||
| கிராப்பிங் டூல் | வரைகலைகளை ஒழுங்கமைக்க. | ||
| லைன் டூல் |
நேர்கோடு வரைய. |
||
| கன்ஸ் ரெய்ன்டு டூல் |
கிடைமட்டமாகவும் செங்குத்தாகவும் கோடுகள் வரைய |
||
| ரெக்டாங் கல் டூல் |
சதுரம் மற்றும் செவ்வகம் வரைய |
||
| ரெக்டாங் கல் ஃபிரேம் டூல் |
உரை மற்றும |
||
| எலிப்ஸ் டூல் |
வட்டம் மற்றும் நீள்வட்டம் வரைய |
||
| எலிப்ஸ் ஃபிரேம் டூல் |
உரை மற்றும் வரைகலைகளை வைப்பதற்கான நீள்வட்டங்களை வரைய |
||
பாலிகான் டூல் |
பல கோணங்கள் வரைய |
||
பாலிகான் ஃபிரேம் டூல் |
உரை மற்றும் வரைகலைகளை வைப்பதற்கான பல கோணங்களை வரைய |
||
| ஹேண்ட் டூல் |
பக்கத்தை திரை உருளல் செய்ய |
||
| ஜூம் டூல் | பக்கத்தின் அளவை பெரிதாக்கியும் சிறிதாக்கியும் பார்க்க |
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards