7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set C

Published on: 12/07/2019
7ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
நியூக்ளியான்கள் என்பது _____ குறிக்கும்.
புரோட்டான்கள் மற்றும் எலக்ட்ரான்களைக்
நியூட்ரான்கள் மற்றும் எலக்ட்ரான்களைக்
புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களைக்
நியூட்ரான்கள் மற்றும் பாஸிட்ரான்களைக்
2.
ஓர் அணுவின் அணு எண் என்பது அதிலுள்ள _____ ஆகும்.
நியூட்ரான்களின் எண்ணிக்கை
புரோட்டான்களின் எண்ணிக்கை
புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் மொத்த எண்ணிக்கை
அணுக்களின் எண்ணிக்கை
3.
_____ நேர்மின் சுமையுடையது.
புரோட்டான்
எலக்ட்ரான்
மூலக்கூறு
நியூட்ரான்
4.
அணுக்கருவைச் சுற்றி வரும் அடிப்படை அணுத்துகள் _____ ஆகும்.
அணு
நியூட்ரான்
எலக்ட்ரான்
புரோட்டான்
5.
பருப்பொருளின் அடிப்படை அலகு _____ ஆகும்.
தனிமம்
அணு
மூலக்கூறு
எலக்ட்ரான்
6.
மெக்னீசியம் அணுவின் வெளிவட்டப் பாதையானது இரண்டு எலக்ட்ரான்களைக் கொண்டிருக்கிறது எனில், மெக்னீசியம் அணுவின் இணைதிறன் ______
7.
கார்பனின் இணைதிறன் 4 மற்றும் ஹைட்ரஜனின் இணைதிறன் 1 ஆக உள்ளது எனில், மீத்தேனின் மூலக்கூறு வாய்ப்பாடு _____
8.
அணுவின் உட்கருவை _____ சுற்றி வரும்.
9.
அணுவின் உட்கருவில் ______ மற்றும் _____ இருக்கும்.
10.
ஒரு அணுவில் காணப்படும் மிகச்சிறிய துகள் _____
11.
அணுவின் உட்கருவைச் சுற்றி புரோட்டான்கள் காணப்படுகின்றது.
12.
ஓர் அணு மின்சுமையற்ற நடுநிலைத் தன்மையைக் கொண்டது
13.
எலக்ட்ரான்கள் நேர்மின்சுமை கொண்டவை.
14.
ஒரு தனிமத்தின் அடிப்படை அலகு மூலக்கூறு ஆகும்.
15.
புரோட்டான்களின் பண்புகள் யாவை?
16.
அணு எண் என்றால் என்ன?
17.
அணுவின் அடிப்படைத் துகள்களைக் குறிப்பிடவும்.
18.
அணு - வரையறு.
19.
ஒரு தனிமத்தின் அணுவில் எலக்ட்ரான் இல்லை எனில் அந்த அணுவிற்கு நிறை உண்டா இல்லையா? ஒரு அணு எலக்ட்ரான் இன்றி இருக்குமா? அவ்வாறு இருந்தால், எடுத்துக்காட்டு தருக.
20.
நிறை எண், அணு எண் - வேறுபடுத்துக.
21.
ஐசோடோன்கள் என்றால் என்ன? ஓர் உதாரணம் தருக.
22.
இணைதிறன் வரையறு. அணு எண் 8 கொண்ட ஒரு தனிமத்தின் இணைதிறன் மதிப்பு என்ன? அத்தனிமம் ஹைட்ரஜனுடன் இணைந்து உருவாக்கும் சேர்மம் யாது?
23.
நியூக்ளியான்கள் என்றால் என்ன? அவை ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது? நியூக்ளியான்களின் பண்புகளை எழுதவும்.
24.
அணு அமைப்பின் படம் வரைந்து அதன் அடிப்படைத் துகள்களின் நிலையினை விளக்குக.
1.
(c)
புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களைக்
2.
(b)
புரோட்டான்களின் எண்ணிக்கை
3.
(a)
புரோட்டான்
4.
(c)
எலக்ட்ரான்
5.
(b)
அணு
6.
( )
2
7.
( )
CH4
8.
( )
எலக்ட்ரான்கள்
9.
( )
புரோட்டான்கள், நியூட்ரான்கள்
10.
( )
அடிப்படைத் துகள்கள்
11.
தவறு - அணுவின் உட்கருவைச் சுற்றி எலக்ட்ரான்கள் காணப்படுகின்றன.
12.
சரி
13.
தவறு - எலக்ட்ரான்கள் எதிர்மின்சுமை கொண்டவை.
14.
தவறு - ஒரு தனிமத்தின் அடிப்படை அலகு அணு ஆகும்.
15.
1. அணுக்கருவினுள் காணப்படும் நியூக்ளியான்களுள் ஒன்று.
2. நேர்மின்னூட்டம் மதிப்பு கொண்டது (+1).
3. புரோட்டானின் நிறை 1.6726 x 10-27 Kg
16.
ஒரு அணுவில் காணப்படும் எலக்ட்ரான்கள் (அல்லது) புரோட்டான்களின் மொத்த எண்ணிக்கையே அந்த அணுவின் அணு எண் (Z) ஆகும்.
17.
புரோட்டான்கள், நியூட்ரான்கள் மற்றும் எலக்ட்ரான்கள்.
18.
ஒரு தனிமத்தின் வேதிப் பண்புகளைத் தக்க வைத்துக் கொள்ளத்தக்க மிகச்சிறிய துகளே 'அணு' ஆகும்.
19.
ஒரு தனிமத்தின் அணுவில் எலக்ட்ரான் இல்லை என்றபோதிலும், அந்த அணுவிற்கு நிறை உண்டு. (அணு நிறை என்பது அணுக்கருவில் உள்ள மொத்த புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கையைப் பொறுத்தது. எலக்ட்ரான்களின் எண்ணிக்கையைச் சார்ந்ததல்ல) ஒரு அணு எலக்ட்ரான் இன்றி இருக்கலாம் எனில், அந்த அணு நேர்மின் அயனியாக இருக்கும்.
உதாரணம் : H அணுவில் (Z=1) ஒரேயொரு எலக்ட்ரான் உள்ளது. இந்த ஒரு எலக்ட்ரானை இழந்து, H+ அயனியாக மாறுகிறது.
H → H+ + 1e-
(அணு) (அயனி)
20.
| நிறை எண் | அணு எண் |
| அணுக்கருவினுள் உள்ள மொத்த புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கையின் கூடுதலுக்குச் சமமாகும். | ஒரு அணுவில் காணப்படும் எலக்ட்ரான்கள் அல்லது புரோட்டான்களின் மொத்த எண்ணிக்கையே அந்த அணுவின் அணு எண் ஆகும். |
| A என்ற எழுத்தால் குறிக்கப்படுகிறது. | Z என்ற எழுத்தால் குறிக்கப்படுகிறது. |
| A = p + n | Z = p (அல்லது) e |
21.
1. ஒரே எண்ணிக்கையுள்ள நியூட்ரான்களைக் கொண்டுள்ள வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் 'ஐசோடோன்கள்' எனப்படுகின்றன.
2. உதாரணம்: 20Ca40 19K39
3. இவற்றிலுள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை = A - Z = 20
22.
1. ஒரு அணு பிற அணுவுடன் இணையக்கூடிய திறனிற்கு இணைதிறன் என்று பெயர்.
2. அணு எண் 8 கொண்ட தனிமமான ஆக்ஸிஜனின் (26) இணைதிறன் = 2
3. இத்தனிமம், ஹைட்ரஜனுடன் இணைந்து உருவாகும் சேர்மம் நீர் ஆகும்.
O2 + 2H2 ⇾ 2H2O
23.
1. அணுக்கருகவினுள், புரோட்டான்கள், நியூட்ரான்கள் எனப்படும் இரண்டு வகையான துகள்கள் காணப்படுகின்றன.
2. அவை நியூக்ளியஸ் (Nucleus) எனப்படும் உட்கருவினுள் காணப்படுவதால் 'நியூக்ளியான்கள்' எனப்படுகின்றன.
பண்புகள்:
1. அணுவின் நிறையானது, நியூக்ளியான்களின் நிறையை மட்டுமே சார்ந்திருக்கும்.
2. இவற்றின் மின்சுமை காரணமாக, அணுக்கள் மின் நடுநிலைமையுடன் காணப்படுகின்றன.
3. (புரோட்டான்கள் - நேர்மின்சுமை, நியூட்ரான்கள் - மின்சுமையற்றவை)
4. மின்சுமை தவிர பிற பண்புகளில் (உதாரணம் - நிறை) நியூக்ளியான்கள் ஒத்த பண்புகளைப் பெற்றுள்ளன.
24.
அடிப்படை அணுத்துகள்கள்:
புரோட்டான்கள் (p)
புரோட்டான்கள் என்பவை அணுக்கருவினுள் அமைந்துள்ள நேர்மின்னூட்டம் பெற்ற துகள்கள் ஆகும்.
நியூட்ரான்கள் (n)
இவை அணுக்கருவினுள் அமைந்துள்ளன. நியூட்ரான்கள் எவ்வித மின்சுமையும் கொண்டிருக்கவில்லை.
ஹைட்ரஜன் (புரோடியம்) தவிர அனைத்து அணுக்கருக்களும் நியூட்ரான்களைக் கொண்டுள்ளன.
எலக்ட்ரான்கள் (e)
எலக்ட்ரான்கள் எதிர் மின்னூட்டம் பெற்ற துகள்கள் ஆகும். இவை ஒரு குறிப்பிட்ட வட்டபாதைகளில் அணுக்கருவினைச் சுற்றி வருகின்றன.
7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards