10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 11/07/2019
10ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
பின்வரும் தொடர்வரிசைகளில் எவை பெருக்குத் தொடர் வரிசையாகும்?
5, 25, 50, 75,...
2.
பின்வரும் தொடர்வரிசைகளின் பொது உறுப்பு காண்க.
5, -25, 125, ....
3.
0.6666... என்ற எண்ணின் விகிதமுறு வடிவம் காண்க.
4.
1 + 4 + 16+... என்ற தொடரின் எத்தனை உறுப்புகளைக் கூட்டினால் கூடுதல் 1365 கிடைக்கும்?
5.
-11, -15, -19...., என்ற கூட்டுத் தொடர்வரிசையின் 19-வது உறுப்பைக் காண்க.
6.
3x ≡ 1 (மட்டு 15) என்ற சமன்பாட்டிற்கு எத்தனை முழு எண் தீர்வுகள் உள்ளன எனக் காண்க.
7.
15 ≡ 3 (மட்டு d) என்றவாறு அமையும் d -யின் மதிப்பைத் தீர்மானிக்க.
8.
எந்த இரு அடுத்தடுத்த மிகை முழுவும் சார்பகா எண்கள் என நிறுவுக.
9.
ஒற்றை முழுக்களின் வர்க்கமானது 4q + 1, (இங்கு q ஆனது முழுக்கள்) என்ற வடிவில் அமையும் எனக் காட்டுக.
10.
5 + 55 + 555+... என்ற தொடர்வரிசையின் முதல் n உறுப்புகளின் கூடுதல் காண்க.
11.
S1, S2 மற்றும் S3 என்பன முறையே ஒரு கூட்டுத் தொடர்வரிசையின் முதல் n, 2n மற்றும் 3n உறுப்புகளின் கூடுதல் ஆகும். S3 = 3(S2 - S1) என நிறுவுக.
12.
பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னையிலிருந்து லண்டன் செல்லப் பயணநேரம் தோராயமாக 11 மணிநேரம் விமானம் தனது பயணத்தை ஞாயிற்றுக்கிழமை 23.30 மணிக்குத் தொடங்கியது. சென்னையிலிருந்து திட்ட நேரமானது லண்டனின் திட்ட நேரத்தைவிட 4.30 மணி நேரம் முன்னதாக இருக்குமெனில், விமானம் லண்டனில் தரையிறங்கும் நேரத்தைக் காண்க.
13.
ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் அடுத்தடுத்த நான்கு உறுப்புகளின் கூடுதல் 28 மற்றும் அவற்றின் வர்க்கங்களின் கூடுதல் 276. அந்த நான்கு எண்களைக் காண்க.
14.
செங்கற்களினால் கட்டப்பட்ட ஒரு படிக்கட்டில் மொத்தம் 30 படிக்கட்டுகள் உள்ளன. கீழ்ப் படிக்கட்டை அமைப்பதற்கு 100 செங்கற்கள் தேவைப்படுகிறது. அடுத்தடுத்த படிக்கட்டுகள் அமைப்பதற்கு முந்தைய படிக்கட்டை விட இரண்டு செங்கற்கள் குறைவாகத் தேவைப்படுகிறது.
(i) உச்சியிலுள்ள படிக்கட்டை அமைப்பதற்கு எத்தனை செங்கற்கள் தேவை?
(ii) படிக்கட்டுகள் முழுவதும் அமைப்பதற்கு எத்தனை செங்கற்கள் தேவை?
15.
ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் 31 உறுப்புகள் உள்ளன. அதன் 16-வது உறுப்பு m எனில் அந்தக் கூட்டுத் தொடர்வரிசையில் உள்ள எல்லா உறுப்புகளின் கூடுதல் ______.
16 m
62 m
31 m
\(\frac{31}{2}\) m
16.
17.
74k ☰ _____ (மட்டு 100)
1
2
3
4
18.
19.
A = 265 மற்றும் B=264+263+262+ ...+ 20 எனக் கொடுக்கப்பட்டுள்ளது. பின்வருவனவற்றில் எது உண்மை?
B ஆனது A ஐ விட 264 அதிகம்
A மற்றும் B சமம்
B ஆனது A-ஐ விட 1 அதிகம்
A ஆனது B–ஐ விட 1 அதிகம்
1.
5, 25, 50, 75,...
\(\frac { { t }_{ 2 } }{ t_{ 1 } } =\frac { 25 }{ 5 } =5;\frac { { t }_{ 3 } }{ { t }_{ 2 } } =\frac { 50 }{ 25 } =2;\frac { { t }_{ 4 } }{ { t }_{ 3 } } =\frac { 75 }{ 50 } =\frac { 3 }{ 2 } \)
அடுத்தடுத்த உறுப்புகளின் விகிதங்கள் சமமாக இல்லாததால் 5, 25, 50, 75,.... என்ற தொடர்வரிசை ஒரு பெருக்குத் தொடர்வரிசையல்ல.
2.
5, -25, 125, ....
இங்குத் தொடர்வரிசையின் அடுத்தடுத்த உறுப்புகளில் + மற்றும் – எனக் குறிகள் மாறி மாறி வந்துள்ளன. மேலும் உறுப்புகள் 5-ன் அடுக்குகளாகவும் அமைந்துள்ளன. எனவே பொது உறுப்பு an = (-1)n+15n, n \(\in \) N.
3.
0.6666... என்ற எண்ணைப் பின்வருமாறு எழுதலாம்.
0.6666... = 0.6 + 0.06 + 0.006 + 0.0006+....
0.6,0.06,0.006 என்ற எண்கள் ஒரு பெருக்குத் தொடர்வரிசையை அமைக்கின்றன.
முதல் உறுப்பு a = 0.6 பொது விகிதம் r = \(\frac { 0.06 }{ 0.6 } \)= 0.1 மேலும் -1 < r = 0.1 < 1
பெருக்குத் தொடர்வரிசையின் முடிவுறா உறுப்புகள் வரை கூடுதல் காணும் சூத்திரத்தைப் பயன்படுத்த நாம் பெறுவது,
0.6666... = 0.6 + 0.06 + 0.006 + 0.0006+... = \(\frac { 0.6 }{ 1-0.1 } =\frac { 0.6 }{ 0.9 } =\frac { 2 }{ 3 } \)
ஆகவே 0.6666 ... என்ற எண்ணின் விகிதமுறு வடிவம் \(\frac { 2 }{ 3 } \) ஆகும்.
4.
கூடுதல் 1365 கிடைக்க கூட்ட வேண்டிய உறுப்புகளின் எண்ணிக்கை n என்க.
a = 1, r = \(\frac { 4 }{ 1 } \) = 4 > 1
Sn = 1365 ⇒ \(\frac { a({ r }^{ n }-1) }{ r-1 } \)= 1365
\(\frac { 1({ 4 }^{ n }-1) }{ 4-1 } \)= 1365 எனவே, (4n-1) = 4095
4n = 4095 ⇒ 4n = 46
n = 6
5.
-11, -15, -19,.... என்பது தரப்பட்ட கூட்டுத்தொடர் வரிசை
இங்கு முதல் உறுப்பு a = -11
பொது வித்தியாசம் \(\mathrm{d}=\mathrm{t}_2-\mathrm{t}_1=-15-(-11)\)
= -15 + 11 = -4
∴ n-ஆவது உறுப்பு \(\mathrm{t}_{\mathrm{n}} =\mathrm{a}+(\mathrm{n}-1) \mathrm{d} \)
∴ 19- ஆவது உறுப்பு \(\left(\mathrm{t}_{19}\right) =-11+(19-1)(-4) \)
= -11 +18(-4)
= -11 + (-72) = -83
∴ -11,-15,-19,......-இன் 19 ஆவது உறுப்பு - 83.
6.
3x ≡ 1 (மட்டு 15) என்பதை
3x - 1 = 15k, k என்பது ஏதேனும் ஒரு முழு என எழுதலாம்.
3x = 15k + 1
x = \(\frac { 15k+1 }{ 3 } \)
x = \(5k+\frac { 1 }{ 3 } \)
5k என்பது ஒரு முழு எண் என்பதால், \(5k+\frac { 1 }{ 3 } \) என்பது ஒரு முழு எண் அல்ல. எனவே இச்சமன்பாட்டிற்கு முழு எண் தீர்வே இல்லை.
7.
15 ≡ 3 (மட்டு d) என்பதன் பொருள் 15 - 3 = kd, இங்கு k என்பது ஏதேனும் ஒரு முழு.
12 = kd
d ஆனது 12 ஐ வகுக்கும்.
12 -யின் வகுத்திகளாவன 1,2,3,4,6,12
d ஆனது 3 ஐ விட அதிகமாக இருக்க வேண்டும், ஏனெனில் மீதி 3 வந்துள்ளது. எனவே, d- க்கு சாதகமான மதிப்புகள் 4,6,12 ஆகும்.
8.
n மற்றும் n + 1 என்பன இரு அடுத்தடுத்த மிகை முழுக்கள் என்க. இங்கு n + 1 > n யூக்ளிடின் வகுத்தல் வழிமுறைப்படி n + 1 = n \(\times\) q + 1, q ஒரு முழு.
மீதி = 1 .
\(\therefore\) யூக்ளிடின் வகுத்தல் வழிமுறைப்படி n =1 x (n) + 0
இங்கு மீதி = 0
\(\therefore\) மீ.பொ.வ = 1
\(\therefore\) n, n + 1 இன் மீ.பொ.வ = 1
இரு அடுத்தடுத்த மிகை முழுக்களின் மீ.பொ.வ = 1
\(\therefore\) இரு அடுத்தடுத்த மிகை முழுக்கள் சார்பகா எண்களாகும்.
9.
x என்பது ஓர் ஒற்றை முழுக்கள் என்க. எந்தவொரு ஒற்றை முழுக்களுக்கும் ஏதேனும் ஓர் இரட்டை முழுக்களை விட ஒன்று அதிகமாக இருக்கும் என்பதால், x = 2k + 1, இங்கு k என்பது ஏதேனும் ஒரு முழுக்கள்.
x2 = (2k + 1)2
= 4k2 + 4k + 1
= 4k(k + 1) + 1
= 4q + 1. இங்கு, q = k(k + 1) என்பது ஒரு முழுக்கள்.
10.
5 + 55 + 555+.... என்பது ஒரு கூட்டுத் தொடர்வரிசையும் அல்ல, பெருக்குத் தொடர்வரிசையும் அல்ல. எனவே, இந்தத் தொடரை இரு தொடர்களாகப் பிரித்துக் கூடுதல் காண்போம்.
5 + 55 + 555+... n உறுப்புகள் வரை = 5[1 + 11 + 111+.... n உறுப்புகள் வரை]
= \(\frac { 5 }{ 9 } \)[9 + 99 + 999+...n உறுப்புகள் வரை]
=\(\frac { 5 }{ 9 } \)[(10-1) + (100-1) + (1000-1) + ... n உறுப்புகள் வரை]
= \(\frac { 5 }{ 9 } \)[(10 + 100 + 1000+... n உறுப்புகள் வரை) - n]
= \(\frac { 5 }{ 9 } \left[ \frac { 10(10^{ n }-1) }{ (10-1) } -n \right] =\frac { 50(10^{ n }-1) }{ 81 } -\frac { 5n }{ 9 } \)
11.
S1, S2 மற்றும் S3 என்பன முறையே ஒரு கூட்டுத் தொடர்வரிசையின் முதல் n, 2n மற்றும் 3n உறுப்புகளின் கூட்டல் எனில்,
\(S_1=\frac{n}{2}[2 a+(n-1) d], \ S_2=\frac{2 n}{2}[2 a+(2 n-1) d], S_3=\frac{3 n}{2}[2 a+(3 n-1) d]\)
தற்போது, S2 - S1 =\(\frac { 2n }{ 2 } \) [2a + (2n - 1)d] -\(\frac { n }{ 2 } \)[2a + (n - 1)d
=\(\frac { n }{ 2 } \)[4a + 2(2n - 1)d - [2a + (n - 1)d]]
S2 - S1 = \(\frac { n }{ 2 } \) x [2a + (3n - 1)d]
3(S2 - S1) = \(\frac { 3n }{ 2 } \)[2a + (3n - 1)d]
3(S2 - S1) = S3
12.
விமானம் சென்னையிலிருந்து புறப்பட்ட நேரம் = 23.30 ஞாயிற்றுக்கிழமை
இலண்டன் செல்ல பயண நேரம் = 11 மணி
இங்கு நாம் மட்டு 24 ஐப் பயன்படுத்துவோம்.
\(\therefore\) இலண்டன் சேரும் நேரம்
☰ 23.30 + 11 (மட்டு 24)
☰ 34.30 (மட்டு 24)
☰ 10.30 (மட்டு 24)
\(10.30 = 0 \times 24 \quad + 10.30 \\ \downarrow \quad \quad \quad \quad \quad \quad \quad\downarrow \)
ஞாயிறு , திங்கள்
விமானம் திங்கட்கிழமை 10.30 மணிக்கு இலண்டன் சென்றடையும்.
சென்னையின் திட்ட நேரம் = 4.30 மணி + இலண்டன் திட்ட நேரம் இலண்டன் திட்ட நேரம் = சென்னை திட்ட நேரம் - 4.30 மணி
= 10.30 - 4.30 = 6 மணி
\(\therefore\) விமானம் இலண்டன் விமான நிலையத்தில் திங்கட்கிழமை 6 மணிக்குத் தரையிறங்கும்.
13.
கூட்டுத் தொடர்வரிசையில் அமைந்த அடுத்தடுத்த நான்கு எண்களை (a - 3d), (a - d), (a + d) மற்றும் (a + 3d) என எடுத்துக்கொள்வோம்.
நான்கு உறுப்புகளின் கூடுதல் 28 என்பதால்
a - 3d + a - d + a + d + a + 3d =28
4a = 28 ⇒ a = 7
இதுபோலவே, அவற்றின் வர்க்கங்களின் கூடுதல் 276 என்பதால்,
(a - 3d)2 + (a - d)2 + (a + d)2 + (a + 3d)2 = 276
a2 - 6ad + 9d2 + a2 - 2ad + d2 + a2 + 2ad + d2 + a2 + 6ad + 9d2 = 276
4a2 + 20d2 = 276 ⇒ 4(7)2 + 20d2 = 276
d2 = 4 ⇒ \(d=\pm \sqrt{4}\) எனில் d = ±2
a = 7, d = 2 எனில், தேவையான நான்கு எண்கள் 7 - 3(2), 7 - 2, 7 + 2 மற்றும் 7 + 3(2) அதாவது, 1,5,9 மற்றும் 13.
a = 7, d = -2 எனில், தேவையான நான்கு எண்கள் 13, 9, 5 மற்றும் 1.
எனவே, கூட்டுத் தொடர்வரிசையில் அமைந்த நான்கு எண்கள் 1, 5, 9 மற்றும் 13.
14.
மொத்த படிக்கட்டுகளின் எண்ணிக்கை n = 30.
கீழ்ப்படிக்கட்டு அமைக்க தேவைப்படும் செங்கற்கள் a = 100
ஒவ்வொரு அடுத்தடுத்த படிக்கட்டிற்கும் 2 கற்கள் குறைவாகத் தேவைப்படும். ஒவ்வொரு படிக்கட்டிற்கும் தேவைப்படும் கற்கள் ஒரு கூட்டுத் தொடரை அமைக்கும்.
100, 98, 96,.... 30 உறுப்புகள் வரை
a = 100, d = -2, n = 30
(i) உச்சி படிக்கட்டை அமைக்க தேவையான கற்கள் l என்க.
\(l =\mathrm{a}+(\mathrm{n}-1) \mathrm{d} \)
= 100 + (30 - 1)(-2)
= 100 + 29(-2)
= 100 - 58 = 42
∴ உச்சி படிக்கட்டை அமைக்க 42 செங்கற்கள் தேவை.
(ii) முழு படிக்கட்டிற்கும் தேவைப்படும் கற்களின் எண்ணிக்கை
\(\mathrm{S}_{\mathrm{n}} =\frac{n}{2}(l+a)=\frac{30}{2}(100+42) \)
= 15 x 142 = 2130
மொத்தம் தேவைப்படும் செங்கற்கள் = 2130
15.
\( \mathrm{n}=31, \mathrm{t}_{16}=\mathrm{m} \) \(\Rightarrow\) \(\mathrm{a} +15 \mathrm{~d}=\mathrm{m} \)
\(\mathrm{s}_{31} =\frac{n}{2}[2 a+(n-1) d] \) \(=\frac{31}{2}[2a+30 d]\)
\( =\frac{31}{2}[2(a+15d)] \) \(=\frac{31}{2}[2 m]=31 \mathrm{~m}\)
16.
(a)
17.
(a)
1
18.
(c)
19.
\(A=2^{65} \)
\(B=2^{64}+2^{63}+2^{62}+\ldots+2^0\)
இங்கு \(a=2^{64} ; r=\frac{2^{63}}{2^{64}}=\frac{1}{2} ; n=65\)
\(\mathrm{S}_{\mathrm{n}}=\frac{a\left(r^n-1\right)}{r-1} \)
\(\mathrm{B}=\frac{2^{64}\left(\left(\frac{1}{2}\right)^{65}-1\right)}{-\frac{1}{2}}=2^{65}\left(\frac{1}{2^{65}}-1\right)(-1) \)
\(=\left(1-2^{65}\right)(-1) \) \(=2^{65}-1\)
\(\therefore B=\mathrm{A}-\mathrm{I} \) (\(\because\) \(\mathrm{A}=2^{65}\))
\(\mathrm{A}=\mathrm{B}+1\)
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards