7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set C

Published on: 12/07/2019
7ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
எப்பொழுதுமே பளபளப்பான, வளையக்கூடிய, ஒளிரும் தன்மையுள்ள தனிமம் எது?
அலோகம்
உலோகம்
உலோகப்போலிகள்
வாயுக்கள்
2.
அறைவெப்பநிலையில் திரவமாக உள்ள உலோகம் எது?
குளோரின்
சல்பர்
பாதரசம்
வெள்ளி
3.
கீழ்க்கண்டவற்றுள் ஒரு தனிமம் மற்றும் சேர்மத்தின் மூலக்கூறைக் குறிக்க க்கூடிய எளிய மற்றும் அறிவியல் பூர்வமான முறை எது?
கணித வாய்ப்பாடு
வேதியியல் வாய்ப்பாடு
கணிதக் குறியீடு
வேதியியல் குறியீடு
4.
ஆக்சிஜன், ஹைட்ரஜன் மற்றும் சல்பர் ஆகியவை கீழ்க்கண்டவற்றுள் எதற்கு உதாரணம்?
உலோகம்
அலோகம்
உலோகப்போலிகள்
மந்த வாயுக்கள்
5.
கீழ்க்கண்டவற்றுள் உலோகம் எது?
இரும்பு
ஆக்சிஜன்
ஹீலியம்
தண்ணீர்
6.
____ வளிமண்டலத்தில் அதிகளவு காணப்படும் வாயு.
7.
மூன்றுக்கும் மேற்பட்ட அணுக்களை க் கொண்ட மூலக்கூறுகளை ______ மூலக்கூறுகள் என்று அழைக்கலாம்.
8.
தனிமங்கள் தூய பொருட்களின் _____ வடிவம்.
9.
_____ மின்சாரத்தைக் க கடத்தும் ஒரே அலோகம்.
10.
ஒரு பருப்பொருளின் தனித்துக் காணப்படக்கூடிய மிகச் சிறிய துகள் _____
11.
ஆர்கான் வாயு ஓரணு வாயுவாகும்.
12.
NaCl என்ப து ஒரு சோடியம் குளோரைடு மூலக்கூறை க் குறிக்கிறது.
13.
அணுக்க ள் தனித்து இருக்க முடியாது. அவை மூலக்கூறுகள் எனப்படும் குழுக்களாகவே உள்ளன.
14.
தனிமங்கள் மற்றும் சேர்மங்கள் தூய பொருளாகும்.
15.
இரண்டு வேறுபட்ட தனிமங்களில் ஒரே விதமான அணுக்களைக் கொண்டிருக்கலாம்.
16.
கந்தக அமிலத்தின் (H2SO4) அணுக்கட்டு எண்ணைக் கணக்கிடுக.
17.
தனிமங்கள் என்றால் என்ன? அவை எவற்றால் ஆனவை ? இரண்டு உதாரணம் தருக.
18.
கீழ்க்காண்பவற்றை தனிமங்கள் மற்றும் சேர்மங்கள் என வகைப்படுத்துக. தண்ணீர், சாதாரண உப்பு, சர்க்கரை, கார்பன்டை ஆக்சைடு, அயோடின் மற்றும் அலுமினியம்.
19.
கீழ்க்காணும் தனிமங்களை உலோகம், அலோகம் மற்றும் உலோகப் போலிகள் என வகைப்படுத்துக.
சோடியம், பிஸ்மத் , வெள்ளி, நைட்ரஜன், சிலிக்கான், கார்பன், குளோரின், இரும்பு மற்றும் தாமிரம்.
20.
ஒரு சேர்மத்தின் வேதியியல் வாய்ப்பாடு என்றால் என்ன ? இதன் முக்கியத்துவம் என்ன ?
21.
உலோகம் மற்றும் அலோகத்தின் பண்புகளை ஒப்பிட்டு ஒவ்வொன்றிற்கும் மூன்று உதாரணங்களைக் கொடுக்கவும்.
22.
தனிமங்களின் குறியீடுகளை எழுதக்கூடிய பல்வேறு விதமான வழிமுறைகளை விவரி. பொருத்தமான உதாரணம் தருக.
23.
உலோகங்கள் மற்றும் அலோகங்கள் வேறுபடுத்துக.
24.
வெப்பப்படுத்தும் போது துகள்களில் என்ன வகையான இயக்க மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதை விவரிக்கவும்.
1.
(b)
உலோகம்
2.
(c)
பாதரசம்
3.
(b)
வேதியியல் வாய்ப்பாடு
4.
(b)
அலோகம்
5.
(a)
இரும்பு
6.
( )
நைட்ரஜன்
7.
( )
பல அணு
8.
( )
எளிமையான
9.
( )
கிராஃபைட்
10.
( )
அணு
11.
சரி
12.
தவறு
1 மோல் சோடியம் மூலக்கூறு மட்டுமே உள்ளது.
13.
தவறு
அணுக்கள் தன்னிச்சையாகவோ குழுவாகவோ இருக்கும் ; அதற்கு மூலக்கூறுகள் என்று பெயர்.
14.
சரி
15.
தவறு
இரண்டு வேறுபட்ட தனிமங்களில் வெவ்வேறு விதமான அணுக்களைக் கொண்டிருக்கலாம்.
16.
H2SO4 மூலக்கூறில் 2 H அணுக்கள், 1 S அணு மற்றும் 4 O அணுக்கள் உள்ளன.
எனவே அணுக்கட்டு எண் = 2+1+4=7
17.
1. தனிமங்கள் தூய பொருளின் எளிய வடிவங்களாகும்.
2. தனிமங்கள் அணுக்களால் ஆனவை.
3. உதாரணம் : ஹைட்ரஜன், ஆக்ஸிஜன்
18.
1. தனிமங்கள் : அயோடின் மற்றும் அலுமினியம்
2. சேர்மங்கள் : தண்ணீர், சாதாரண உப்பு, சர்க்கரை, கார்பன் டை ஆக்ஸைடு
19.
1. உலோகங்கள் : சோடியம், பிஸ்மத், வெள்ளி, இரும்பு, தாமிரம்
2. அலோகங்கள் : நைட்ரஜன், கார்பன், குளோரின்
3. உலோகப்போலிகள் : சிலிக்கான்
20.
1. வேதியியல் வாய்ப்பாடு என்பது ஒரு தனிமம் அல்லது சேர்மத்தினைக் குறிக்கக்கூடிய குறியீட்டு முறையாகும்.
2. இது ஒரு தனிமத்திலுள்ள மூலக்கூறுகள் மற்றும் அணுக்களின் எண்ணிக்கை பற்றிய தகவல்களைத் தருகிறது.
முக்கியத்துவம்:
வேதியியல் வாய்ப்பாட்டின் மூலம் மூலக்கூறிலுள்ள அணுக்களின் வகைகள் மற்றும் அணுக்களின் எண்ணிக்கையை அறியலாம்.
21.
i) கடினத்தன்மை:
பொதுவாக சோடியம் தவிர பிற உலோகங்கள் கடினமானவை மற்றும் பளபளப்பானவை.
உதாரணம்: கோல்டு
வைரம் தவிர பிற அலோகங்கள் பளபளப்புத் தன்மையற்றவை மற்றும் மிருதுவானவை.
உதாரணம்: சல்ஃபர்.
ii) இயற்பியல் நிலைமை:
பாதரசம் தவிர பிற உலோகங்கள் அனைத்தும் அறை வெப்பநிலையில் திண்ம நிலையில் உள்ளன.
அலோகங்கள் திண்மம், நீர்மம் மற்றும் வாயு நிலைகளில் காணப்படுகின்றன.
உதாரணம்: H2, O2,Cl2 - வாயுக்கள்
I2,S8,P4 - திண்மங்கள்
Br2 : நீர்மம்
iii) வளையும் தன்மை:
உலோகங்களின் வளையும் தன்மை காரணமாக அவற்றைத் தகடாக அடிக்கலாம், கம்பிகளாக நீட்டலாம்.
உதாரணம்: இரும்பு, கோல்டு
அலோகங்களைத் தகடாக அடிக்கவோ, கம்பிகளாக நீட்டவோ இயலாது.
iv) கடத்துதிறன்:
உலோகங்கள் மின்சாரத்தையும், வெப்பத்தையும் நன்கு கடத்தக்கூடியவை.
உதாரணம்: காப்பர், நிக்கல்
அலோகங்கள் மின்சாரத்தையும், வெப்பத்தையும் அரிதிற்கடத்தும் தன்மையுடையவை (கிராஃபைட் நீங்கலாக).
22.
1. தனிமங்களின் குறியீட்டில் ஒன்று அல்லது இரண்டு எழுத்துக்கள் மட்டுமே இடம்பெற வேண்டும்.
பெரும்பாலான தனிமங்களின் குறியீடுகள் அவற்றின் ஆங்கிலப் பெயரின் முதல் எழுத்தைக் கொண்டு குறிக்கப்படுகிறது.
உதாரணம் : ஆக்ஸிஜனின் குறியீடு O, ஹைட்ரஜனின் குறியீடு H
2. ஒன்றுக்கு மேற்பட்ட தனிமங்கள் ஒரே எழுத்தில் ஆரம்பிக்கும் போது, அத்தனிமத்தின் முதல் இரண்டு எழுத்துக்களை குறியீடாகக் கருத வேண்டும். (முதல் எழுத்து பெரிய எழுத்து)
உதாரணம்: ஹீலியத்தின் குறியீடு He, கால்சியத்தின் குறியீடு Ca
3. சில தனிமங்களின் குறியீடுகள் அவற்றின் இலத்தீன் பெயர்களிலிருந்து பெறப்பட்டவை.
உதாரணம் : இரும்பின் குறியீடு Fe என்பது ஃபெர்ரம், சோடியத்தின் குறியீடு Na என்பது நாட்ரியம்
23.
| வ.எண் | உலோகங்கள் | அலோகங்கள் |
| 1. | பளபளப்பான மேற்பரப்பு கொண்டவை. | பளபளப்பான தன்மையற்றவை. |
| 2. | பொதுவாக கடினமானவை. | பொதுவாக மிருதுவானவை. |
| 3. | தகடாகவும், கம்பியாகவும் நீட்டலாம். | தகடாகவும், கம்பியாகவும் நீட்ட இயலாது. |
| 4. | வெப்பத்தையும், மின்சாரத்தையும் நன்கு கடத்தக்கூடியவை | வெப்பத்தையும், மின்சாரத்தையும் அரிதிற் கடத்திகள் |
| 5. | தட்டும்போது ஒலியெழுப்பும் தன்மையுடையன. | தட்டும்போது ஒலியெழுப்பும் தன்மையற்றவை. |
24.
1. திண்மத்தை வெப்பப்படுத்தும் போது, அதன் துகள்கள் ஆற்றலைப் பெற்று தீவிரமாக அதிர்வுறுகின்றன.
2. இதனால், துகள்கள் ஒன்றையொன்று சற்றுப் பிரிந்து செல்கின்றன.
3. துகள்களின் இடைவெளியில் மாற்றம் ஏற்படுவதால், பருமன் அதிகரிக்கின்றது. ஆனால், துகள்களின் அளவு மற்றும் எண்ணிக்கையில் எவ்வித மாற்றமும் நிகழ்வதில்லை.
7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards