6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 16/03/2020
6ஆம் வகுப்பு கணிதம் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (6th Standard Mathematics All Chapter Three Marks Important Questions 2020 )
6ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
கீழே கொடுக்கப்பட்ட அமைப்புகளை நிரப்புக
i) 1 + 2 + 3 + 4 = 10
2 + 3 + 4 + 5 = 14
__ + 4 + 5 + 6 =__
4 + 5 + 6 +__=__
ii) 1 + 3 + 5 + 7 = 16
__ + 5 + 7 + 9 = 24
5 + 7 + 9 +__=__
7 + 9 +__+ 13 =__
iii) AB, DEF, HIJK, __, STUVWX
iv) 20, 19, 17, ___, 10, 5
2.
16 மற்றும் 28 என்ற இரு எண்களின் மீ.பொ.கா காண்க
3.
செல்சியஸ் தெர்மோமீட்டரைப் பார்த்து, பின்வரும் வினாக்களுக்கு விடியளிக்கவும் .
i) வெப்பமானி காட்டும் வெப்ப நிலை அளவு என்ன ?
ii) வெப்பமானியில் 0oC இக்குக் கீழே 5oC ஐ எங்கு குறிப்பாய் ?
iii) வெப்பமானியில் உள்ள வெப்பநிலையை 10oC குறைத்தல் வெப்பமானி காட்டும் வெப்பநிலை என்ன ?
iv) வெப்பமானியில் 15oC இக்கு எதிரெண்ணைக் குறிக்கவும்.

4.
கொடுக்கப்பட்ட கோலங்களில் எந்த அமைப்பு (pattern) இடப்பெயர்வு அடைகிறது?

5.
கொடுக்கப்பட்ட படத்தில் உள்ள வண்ணப் பகுதியை முதலில் l என்ற கோட்டைப் பொருத்தும் எதிரொளிப்பு செய்க.

6.
ஓர் எண்கோட்டில், 0 மற்றும் -8 ஆகிய எண்களின் முன்னி மற்றும் தொடரியைக் காண்க.
7.
ஒரு துண்டுக் கம்பியின் நீளம் 36செ.மீ அக்கம்பியைக் கீழ்காணும் வடிவங்களாக உருவாக்கினால் ஒவ்வொரு பக்கத்தின் நீளம் என்னவாக இருக்கும் ?
i) ஒரு சதுரம் ii) ஒரு சமபக்க முக்கோணம்
8.
எண்ணெய் தகரப் பெட்டியில் 7\(\frac {1}{2}\) லிட்டர் எண்ணெய் இருக்கிறது. அதை 2\(\frac {1}{2}\) லிட்டர் அளவுடைய புட்டியில் ஊற்றினால், 7\(\frac {1}{2}\) லிட்டர் எண்ணெயை நிரப்ப எத்தனை புட்டிகள் தேவைப்படும் ?
9.
சரவணனுடைய தந்தை வாங்கிய துணியின் அளவுகள் \(2\frac { 3 }{ 4 } \) மீ 2\(\frac {1}{2}\) மீ மற்றும் 1\(\frac{1}{4}\) மீ எனில் அவர் வாங்க வேண்டிய துணியின் மொத்த நீளம் காண்க ?
10.
15 செ.மீ பக்க அளவுள்ள ஒரு சதுரத்தின் பரப்பளவு காண்க.
11.
பின்வரும் அட்டவணையில் பொருத்தமானவற்றைக் கொண்டு நிரப்புக.
| வ.எண் | அடக்க விலை (ரூ.இல்) |
விற்பனை விலை (ரூ.இல்) | இலாபம் (ரூ.இல்) |
நட்டம் (ரூ.இல்) |
| i | 100 | 120 | ||
| ii | 110 | 120 | ||
| iii | 120 | 20 | ||
| iv | 100 | 90 | ||
| v | 120 | 25 |
12.
பாரதன் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு சட்டையின் விலையில் ரூ.50 தள்ளுபடி செய்த பிறகும் ஒரு சட்டைக்கு ரூ.100 இலாபம் பெறுகிறார். குறித்த விலை ரூ.800 எனில் ஒரு சட்டையின் அடக்க விலை என்ன ?
13.
20 + [8 x 2 + {(6 x 3) − (10 ÷ 5)}] ஐ மரவுரு வரைபடமாக மாற்றுக.
14.
கீழ்கண்டவற்றைக் 24 மணி நேர அமைப்புக்கு மாற்றுக
(i) 3 : 15 மு.ப
(ii) 12 : 35 பி.ப
(iii) 12 : 00 நண்பகல்
(iv) 12 : 00 நள்ளிரவு
15.
2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் தேதி புதன்கிழமை எனில் 2018ஆம் ஆண்டு சூன் மாதம் 8ஆம் தேதி என்ன கிழமை?
16.
7 செ.மீ, 7 செ.மீ மற்றும் 7 செ.மீ ஆகிய பக்க அளவுகளைக் கொண்டு ஒரு முக்கோணம் அமைக்க இயலுமா ?
17.
564872 என்ற எண்ணானது 88 ஆல் வகுபடுமா என ஆராய்க. (8 மற்றும் 11 இன் வகுபடுந்தன்மை விதி்களைப் பயன்படுதத்லாம்)
18.
கீழக்காணும் கூற்றுகளுக்கு ஏற்ப A இன் மதிபபைக் காண்க
(i) 2 ஆல் வகுபடும் மிகப்பெரிய ஈரிலக்க எண் 9A ஆகும்.
(ii) 3 ஆல் வகுபடும் மிகச்சிறிய எண் 567A ஆகும்.
(iii) 6 ஆல் வகுபடும் மிகப்பெரிய மூன்றிலக்க எண் 9A6 ஆகும்.
(iv) 4 மற்றும் 9 ஆல் வகுபடும் எண் AO8 ஆகும்.
(v) 11 ஆல் வகுபடும் எண் 225A85 ஆகும்.
19.
கொடுக்கப்பட்ட மரவுரு வரைபடத்தில் விடுபட்ட எண்களை எழுதுக.
20.
7.8 செ.மீ அளவில் ஒரு கோட்டுத்துண்டு வரைக. கோட்டுத்துண்டிற்கு மேலே 5 செ.மீ தூரத்தில் B என்ற புள்ளியைக் குறிக்க. B வழியே கோட்டுத்துண்டிற்கு இணைகொடு வரைக.
21.
பின்வரும் கோணங்களைப் கோணமானியைப் பயன்படுத்தி வரைக. 38°
22.
சித்ரா லட்டுகள் வாங்கிக் கீழ்கக் கண்டவாறு வகுப்பு வாரியாகத் தன் நண்பர்களுக்கு வழங்குகிறாள்.
| வகுப்பு | VI | VII | VIII | IX | X |
| இனிப்புகளின் எண்ணிக்கை | 70 | 60 | 45 | 80 | 55 |
இந்தத் தரவுகளுக்குப் பட்டை வரை படம் வரைக.
23.
பின்வரும் கோணங்களை வரைந்து பெயரிடுக.
(i) \(\angle NAS \)
(ii) \(\angle BIG \)
(iii) \(\angle SMC \)
24.
கொடுக்கப்பட்ட தரவுகளுக்குப் பட விளக்கப்படம் வரைக.
உனக்கு ஏற்றாற்போல் அளவுத் திட்டத்தை எடுத்துக்கொள்க.
| மாதம் | ஜூன் | ஜூலை | ஆகஸ்டு | செப்டம்பர் |
| விற்பனையான கணினிகளின் எண்ணிக்கை | 300 | 450 | 600 | 550 |
25.
பின்வரும் படத்தில் 10 ஆவது அமைப்பில் எத்தனை புள்ளிகள் இருக்கும் எனக் காண்க.

26.
பின்வரும் படத்தில் எத்தனை முக்கோணங்கள் உள்ளன?

27.
ஒரு பள்ளியில் 1500 மாணவர்கள், 50 ஆசிரியர்கள் மற்றும் 5 நிர்வாகிகள் என உள்ளனர்.பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை 1800 ஆக உயர்ந்தால், மேறற்கண்ட விகிதத்தில் எத்தனை ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் இருப்பர் எனக் காண்க.
28.
சோழன் சீரான வேகத்தில் நடந்து 6 கிமீ தொலைவை 1 மணி நேரத்தில் கடக்கிறார். அதே வேகத் தில் அவர் 20 நிமிடங்களில் நடந்து கடக்கும் தொலைவு எவ்வளவு ?
29.
ஓர் அரசுத் திட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுவில் உள்ள 500 பெண்களுக்கு ரூ 10,00,000 ஆனது சமமாகப் பிரித்துக் கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு பெண்ணுக்கும் கொடுக்கப்பட்ட தொகையைக் காண்க.
30.
பின்வரும் இயற்கணிதக் கூற்றுகளை வாய்மொழிக் கூற்றுகளாக மாற்றுக 11 + 10x
31.
அறிவழகன் அவரது தந்தையைவிட 30 வயது இளையவன். அறிவழகனின் வயதை அவரது தந்தையின் வயதைக் கொண்டு எழுதவும்.
32.
காற்புள்ளியைப் ப யன்படுத்திப் பின்வரும் எண்களைப் பன்னாட்டு முறையில் எழுதுக.
7345671
1.
i) 3, 18 ; 7, 22
i) 3 ; 11, 32 ; 11, 40
iii) MNOPQ
iv) 14
2.
16 மற்றும் 28 இன் மீ.பொ.கா (16, 28-16) இன் மீ.பொ.கா
16 = 2 x 2 x 2 x 2, 16 = 2 x 2 x 2 x 2
28 = 2 x 2 x 7, 12 = 2 x 2 x 3
(16, 28) இன் மீ.பொ.கா = 2 x 2 = 4(16, 12) இன் மீ.பொ.கா = 2 x 2 = 4
எனவே 16, 28 இன் மீ.பொ.கா = (16, 28 -16) இன் மீ.பொ.கா
a மற்றும் b, (இங்கு a > b) என்ற எண்களின் மீ.பொ.கா வானது, a மற்றும் a - b என்ற எண்களின் மீ.பொ.கா-வுக்குச் சமம்.
3.
i) வெப்பமானி. காட்டும் வெப்பநிலை அளவு -10°.
ii) வெப்பமானியில் 0°C இக்குக் கீழே 5°C ஐ −5°C என குறிக்கலாம்.
iii) வெப்பமானியில் உள்ள வெப்பநிலையை 10°C குறைத்தால் வெப்பநிலை -20°C ஆக இருக்கும்.
iv) வெப்பமானியில் 15°C இக்கு எதிரெண் -15°C.
4.

5.
![]() |
![]() |
| 'l' ஐப் பொருத்து எதிரொளிப்பு | 'm' ஐப் பொருத்து எதிரொளிப்பு |
6.
கொடுக்கப்பட்ட எண்களை எண்கோட்டின் மீது குறித்து, அவற்றின் முன்னும் பின்னும் 1 அலகு நகர்வதால் அந்த எண்களின் முன்னி மற்றும் தொடரியைப் பெறலாம்.

இங்கு, 0இன் தொடரி +1 எனவும், 0இன் முன்னி -1 எனவும் காண்கிறோம். மேலும்,-8 இன் தொடரி -7 எனவும் -8 இன் முன்னி -9 எனவும் கருதுகிறோம்.
7.
i) ஒரு துண்டுக் கம்பியின் நீளம் = 36 செ.மீ
சதுரத்தின் சுற்றளவு = 4 x S அலகுகள்
= 4 x S = 36
S = \(\frac { 36 }{ 4 } \)
= 9 செ.மீ
சதுரத்தின் பக்கம் = 9 செ.மீ
ii) சம்பக்க முக்கோணத்தின் சுற்றளவு = (3 x பக்கம் ) அலகுகள்
3 x S = 36
S = \(\frac { 36 }{ 3 } \)
= 12 செ.மீ
சம்பக்க முக்கோணத்தின் பக்கம் = 12 செ.மீ.
8.
தேவைப்படும் புட்டிகளின் எண்ணிக்கை = 7\(\frac {1}{2}\)\(\div \) 2\(\frac {1}{2}\)
\({15\over 2}\div{5\over2}={15\over2}\times{2\over5}\) (\(\frac {5}{2}\)இன் தலைகீழி\(\frac {2}{5}\))
= 3 புட்டிகள்
9.
துணியின் மொத்த நீளம் =\(\left( 2\frac { 3 }{ 4 } +2\frac { 1 }{ 2 } +1\frac { 1 }{ 4 } \right) \)மீ
முதலில் முழு எண்களைக் கூட்டுக : 2 + 2 + 1 = 5 மீ
பிறகு பின்னங்களைக் கூட்டுக
\(\left( \frac { 3 }{ 4 } +\frac { 1 }{ 2 } +\frac { 1 }{ 4 } \right) =\frac { 3+2+1 }{ 4 } =\frac { 6 }{ 4 } \)\(=\frac { 3\times ̷2̷ }{ 2\times ̷2̷ } =\frac { 3 }{ 2 } =1\) மீ
எனவே வாங்கப்பட்ட துணியின் ,மொத்த நீளம் = 5 + 1\(\frac { 1 }{ 2 } \) = 6\(\frac { 1 }{ 2 } \) மீ
10.
சதுரத்தின் பக்கம், s = 15 செ.மீ
சதுரத்தின் பரப்பளவு, A = s x s சதுர அலகுகள்
= 15 x 15
= 225 சதுர செ.மீ (அல்லது) 225 செ.மீ2
11.
i) அடக்க விலை = ரூ 100
விற்பனை விலை = ரூ 120
அடக்க விலை < விற்பனை விலை
இலாபம் = விற்பனை விலை - அடக்க விலை
= ரூ 120 - ரூ 100
= ரூ 20
(ii) அடக்க விலை = ரூ 110
விற்பனை விலை = ரூ 120
அடக்க விலை < விற்பனை விலை
இலாபம் = விற்பனை விலை - அடக்க விலை
= ரூ 120 - ரூ 110
= ரூ 10
(iii) அடக்க விலை = ரூ 120
இலாபம் = ரூ 20
விற்பனை விலை < அடக்க விலை
விற்பனை விலை = அடக்க விலை + இலாபம்
= ரூ 120 + ரூ 20
= ரூ 140
(iv) அடக்க விலை = ரூ 100
விற்பனை விலை = ரூ 90
அடக்க விலை > விற்பனை விலை
நட்டம் = அடக்கவிலை - விற்பனை விலை
= ரூ 100 - ரூ 90
= ரூ 10
(v) அடக்க விலை = ரூ 120
இலாபம் = ரூ 25
விற்பனை விலை < அடக்க விலை
விற்பனை விலை = அடக்க விலை + இலாபம்
= ரூ 120 + ரூ 25
= ரூ 145
12.
தள்ளுபடி = ரூ.50
இலாபம் = ரூ.100
குறித்த விலை = ரூ.800
விற்பனை விலை = குறித்த விலை - தள்ளுபடி
= ரூ.800 – ரூ.50
= ரூ.7 50
ரூ.இலாபம் = விற்பனை விலை – அடக்க விலை
ரூ. 100 = ரூ.7 50 – அடக்க விலை
அடக்க விலை = ரூ.750 – ரூ.100
= ரூ.650
13.
14.
i) 3 : 15 மு.ப = 03:15 மணி
ii) 12 : 35 பி.ப = 12:35 மணி
iii) 12 : 00 நண்பகல் = 12:00 மணி
iv) 12 : 00 நள்ளிரவு = 00:00 மணி அல்லது 24 : 00 மணி
15.
| மாதம் | நாள்கள் எண்ணிக்கை |
| டிசம்பர் | 12(31-19) |
| சனவரி | 31 |
| பிப்ரவரி | 28(2018 சாதாரண ஆண்டு) |
| மாரச் | 31 |
| ஏப்ரல் | 30 |
| மே | 31 |
| சூன் | 07 |
| மொத்தம் | 170 நாள்கள் |

17 0 நாள்கள் ÷ 7 (ஏன்? )
17 0 நாள்கள் = 24 வாரங்கள் + 2 நாள்கள்
தேவையான கிழமை புதன்கிழமைக்கு 2வது நாள். எனவே,சூன் மாதம் 8ஆம் தேதி வெள்ளிக்கிழமை.
16.
மூன்று பக்க அளவுகளும் சமமாக உள்ளன. எனவே முக்கோணச் சமனின்மைப் பண்பை இவை நிறைவு செய்யும் என்பதால் இவற்றைக் கொண்டு உறுதியாக முக்கோணம் அமைக்க இயலும்.
17.
கொடுக்கப்பட்ட எண் = 564872
8 ஆல் வகுபடுந்தன்மை விதி
ஓர் எண்ணின் கடைசி மூன்று இலக்கங்கள் 8 ஆல் வகுபடும் எனில், அந்த எண் 8 ஆல் வகுபடும்.
872 என்ற எண் 8 ஆல் வகுபடும்.
எனவே: 564872 என்ற எண் 8 ஆல் வகுபடும்.
11 ஆல் வகுபடுந்தன்மை விதி
ஒன்று விட்ட இலக்கங்களின் கூடுதல்
= (5 + 4 + 7) - (6 + 8 + 2) = 16 - 16 = 0
ஒன்று விட்ட இலக்கங்களின் கூடுதல் 0
எனவே 56482 என்ற எண் 11 ஆல் வகுபடும்.
56482 என்ற எண் 8,11 ஆல் வகுபடும்.
ஃ எனவே, 56482 என்ற எண் 88 ஆல் வகுபடும்.
18.
i) மிகப்பெரிய ஈரிலக்க எண் = 99
2 ஆல் வகுபடும் மிகப்பெரிய ஈரிலக்க எண் = 98
எனவே A இன் மதிப்பு = 8
ii) 567A.என்ற எண் 3 ஆல் வகுபடும்.
5 + 6 +7 + A, 3 ஆல் வகுபடும்.
18 + A, 3 ஆல் வகுபடும்.
A க்கு பதிலாக மிகச்சிறிய இயல் எண் பிரதியிட 18 + 0 = 18 என்ற எண் 3 ஆல் வகுபடும்.
எனவே A இன் மதிப்பு = 0
iii) 9A6 என்ற மிகப்பெரிய மூன்றிலக்க எண் 6 ஆல் வகுபடும்.
A க்கு பதிலாக மிகப்பெரிய எண் 9ஐ பிரதியிட 9 + 9 + 6 = 24 என்ற எண் 2 மற்றும் 3 ஆல் வகுபடும்.
ஃ 996 என்ற எண் 6 ஆல் வகுபடும்.
எனவே A இன் மதிப்பு = 9.
iv) A08 என்ற எண் 4 மற்றும் 9 ஆல் வகுபடும்
A08 இன் கடைசி இரண்டு இலக்கங்கள் 08 என்ற எண் 4 ஆல் வகுபடும்.
Aக்கு பதிலாக 1ஐ பிரதியிட
1 + 0 + 8 = 9 என்ற எண் 9 ஆல் வகுபடும்.
A இன் மதிப்பு = 1
v) 11 ஆல் வகுபடும் எண் 225AB85 ஆகும்.
ஒன்றுவிட்ட இலக்கங்களின் கூடுதலுக்கு இடையே உள்ள வேறுபாடு = 0
(2 + A + 5) - (2 + 5 + 8) = 0
7 + A = 15
A = 15 - 7 = 8
A இன் மதிப்பு = 8
19.
20.

படி 1: xy = 7.8 செ.மீ அளவுள்ள ஒரு கோட்டுத்துண்டு வரைக. கோட்டின் மேல் A என்ற புள்ளியைக் குறிக்க.
படி 2 : XY க்கு மேல் முலைமட்டத்தைப் பொருத்துக. XY க்கு மேலே 5 செ.மீ தூரத்தில் B என்ற புள்ளியைக் குறிக்க.
படி 3 : அளவுகோல் மற்றும் முலைமட்டத்தைப் பயன்படுத்தி B வழியாக BC என்ற கோடு வரைக.
படி 4 : BC ஆனது XY க்கு இணைகோடாகும். அதாவது BC || XY.
21.

வரையும் முறை:
1. அடிப்பக்கக் கதிர் \(\overrightarrow { AB } \) வரைக.
2. கோணமானியின் நடுப்புள்ளியை உச்சிப் புள்ளி A இல் வைக்கவும்.
3. 0° கோட்டோடு \(\overrightarrow { AB } \) கதிரைச் சேருமாறு சேர்க்கவும்.
4. உள் அளவுகோலில் 38° இல் ஒரு புள்ளியைக் குறித்து C எனப் பெயரிடுக.
(கடிகார எதிர்த்திசையில்)
5. கோணமானியை எடுத்துவிட்டு கோணத்தை அமைக்க கதிர் \(\overrightarrow { AC } \) வரைக.
6. இங்கு \(\angle \)A = \(\angle \)CAB = \(\angle \)BAC = 38°
22.
23.

24.
| மாதம் | விற்பனையான கணினிகளின் எண்ணிக்கை |
| ஜீன் | |
| ஜூலை | |
| ஆக்ஸ்டு | |
| செப்டம்பர் |
ஒரு கணினி 100 கணினிகளைக் குறிக்கும்.
ஒரு 50 கணினிகளைக் குறிக்கும்.
25.
55 புள்ளிகள்
ii) 100 புள்ளிகள்
26.
32 முக்கோணங்கள்.
27.
மாணவர்கள் = 1500
ஆசிரியர்கள் = 50
நிர்வாகிகள் = 5
மாணவர்களின் எண்ணிக்கை 1800 ஆக உயர்ந்தால்
ஆசிரியர்கள் விகிதம் \(=\frac{18 \not \varnothing \varnothing}{15 \not \varnothing \phi} \times 50=\frac{6}{\not \varnothing} \times \not \not \varnothing=60
\)
நிர்வாகிகள் விகிதம் \(=\frac{18 \not \phi}{15 \not \phi} \times 5=\frac{18}{3}=6
\)
28.
1 மணி = 60 நிமிடம்
சோழன் 60 நிமிடத்தில் கடந்த தொலைவு = 6 கி.மீ
1 நிமிடத்தில் கடந்த தொலைவு \(=\frac{6}{60}\)
20 நிமிடத்தில் கடக்கும் தொலைவு \(=\frac{6}{60}\) x 20 = 2 கி.மீ
29.
500 பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட தொகை = ரூ 10,00,000
ஒரு பெண்ணுக்குக் கொடுக்கப்பட்ட தொகை = 10,00,000 ÷ 500 = ரூ 2,000
ஒவ்வொரு பெண்ணுக்கும் கொடுக்கப்பட்ட தொகை = ரூ 2,000.
30.
x இன் 10 மடங்குடன் 11 ஐக் கூட்டுக.
31.
அறிவழகனின் தந்தையின் வயது = n
\(\Rightarrow\) அறிவழகனின் வயது = n - 30
32.
7,345,671 = ஏழு மில்லியன் முன்னூற்று நாற்பத்து ஐந்து ஆயிரத்து அறுநூற்று எழுபத்து ஒன்று.
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards