6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 16/03/2020
6ஆம் வகுப்பு அறிவியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 6th Standard Science All Chapter Five Marks Important Questions 2020 )
6ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
பறவைகளின் தகவமைப்பை விளக்குக.
2.
விலங்கு-தாவர இடைவினையின் முக்கியத்துவத்தை பற்றி எழுதுக.
3.
மரக்கட்டை தரும் தாவரங்கள் பற்றி குறிப்பு வரைக.
4.
ஒலி மாசுபாடு பற்றி குறிப்பு தருக.
5.
உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவுகளையும், உயிரினச் சிதைவிற்கு உள்ளாகாத கழிவுகளையும் வேறுபடுத்துக.
6.
சோப்பு எவ்வாறு தயாரிக்கப்படுகின்றது?
7.
வலுவூட்டப்பட்ட சிமெண்ட் காரை மற்றும் அதன் பயன்பாடுகளைப் பற்றி விவரிக்கவும்.
8.
இந்தியாவின் நீர் மனிதன் யார்? இணையத்தின் உதவியுடன் அவர் உருவாக்கிய நீர் மேலாண்மைத் திட்டங்கள் பற்றியும், அவர் பெற்ற விருதுகள் பற்றியும் ஒரு குறிப்பினை எழுதவும்.
9.
குடிநீர் என்பது யாது? அதன் பண்புகளைப் பட்டியலிடவும்.
10.
மின்காந்த தொடர்வண்டி எவ்வாறு இயங்குகிறது?
11.
உன்னிடம் ஓர் இரும்பு ஊசி தரப்படுகிறது. அதனை நீ எவ்வாறு காந்தமாக்குவாய்?
12.
கோடைகாலத்தில் வியர்வை அதிகமாக சுரப்பது ஏன்?
13.
இதயத்தின் இரு பாகங்கள் தடித்த தசைச்சுவரால் பிரிக்கப்பட்டுள்ளன.ஏன்?
14.
புரோகேரியாட்டிக் செல்லின் படம் வரைந்து பாகங்களைக் குறி
15.
எவையேனும் ஐந்து செல் நுண்ணுறுப்புகளையும், அதன் பணிகளையும் அட்டவணைப்படுத்துக்க.
16.
தீயணைப்பானிலிருந்து தீயை அணைப்பதற்கு ஏன் நார்பன்-டை-ஆக்சைடு வெளியிடப்படுகிறது என உங்களால் யூகிக்க முடிகிறதா?
17.
பூமியில் உயிரினங்கள் வாழ வளிமண்டலம் ஏன் தேவைப்படுகிறது?
18.
ராகுல் ஒரு மின்சுற்றை அமைக்க விரும்பினான். அவனிடம் ஒரு மின்விளக்கு, குண்டூசி, ஒரு இணைப்புக்கு கம்பிகள் மற்றும் ஒரு தாமிரக் கம்பி ஆகியவை மட்டுமே உள்ளன. அவனிடம் மின்கலனோ, மின்கல அடுக்கோ இல்லை.எனினும் திடீரென்று அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.எலும்மிச்சம்பழத்தைப் பயன்படுத்தி மீன்களை அடுக்கினை உருவாக்கினால் என்ன என்று ஒரு யோசனை தோன்றியது.அந்த மின்விளக்கு ஒளிருமா?
19.
ஒரு வேளை நமது உடல் வெப்பநிலை தனது இயல்பான வெப்பநிலையை விடக் குறைந்து விடுவதாகக் கருதுவோம். அப்பொழுது நமது உடலானது சுற்றுச் சூழலை முன்பிருந்ததை விட எவ்வாறு உணரும்?
20.
குளிர்கால இரவில் நீ உனது படுக்கை அறையில் படுத்துள்ளாய். அப்போது அறையின் ஜன்னல் கதவு தற்செயலாக திறந்துவிட்டால் குளிரினால் நீ உறக்கம் கலைந்து சீரமமாக உணர்கிறாய்.இதற்கு என்ன கரணம்? அறையில் உள்ள வெப்பம் வெளியே கடத்தப்படுவதால். இரண்டில் உனது விடைக்கான காரணத்தினைத் தருக.
21.
ஒரு மெழுகுவர்த்தி எரியும் போது கீழ்க்காணும் மாற்றங்களைக் காண முடியும்.
அ) மெழுகு உருகுதல்.
ஆ) மெழுகுவர்த்தி தொடர்ந்து எரிதல்
இ) மெழுகுவர்த்தியின் அளவு குறைதல்
ஈ) உருகிய மெழுக தீண்மமாக மாறுதல்
மேற்கண்டவற்றில் எவற்றை எல்லாம் மீள் மாற்றமாக்கலாம்? உமது பதிலை நியாயப்படுத்துக.
22.
உன்னைச் சுற்றி நடக்கும் மாற்றங்களிருந்து கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு மாற்றத்திற்கும் தகுந்த எடுத்துக்காட்டு தருக்க.
அ. மெதுவான/வேகமான மாற்றம்
ஆ. மீள்/மீளா மாற்றம்
இ. இயற்பியல்/வேதியல் மாற்றம்
ஈ. இயற்கையான/செயற்கையான அல்லது மனிதனால் நிகழ்த்தப்பட்ட மாற்றம்.
உ. விரும்பத்தக்க/விரும்பத்தகாத மாற்றம்.
23.
மின்கடத்திகள் மற்றும் அரிதிற்கடத்திகள் குறித்து சிறு குறிப்பு வரைக.
24.
கணினியின் பயன்பாடுகளை விரிவாகக் கூறுக.
25.
இயக்கம் என்றால் என்ன?
26.
கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படத்தில் அதன் தொடர்ச்சி கருத்துகளை விடுபட்ட இடங்களில் பூர்த்தி செய்க.

27.
வேர் மற்றும் தண்டு ஆகியவற்றின் பணிகளைப் பட்டியலிடும்.
28.
வைட்டமின்களையும் அவற்றின் குறைபாட்டால் ஏற்படும் நோய்களையும் அட்டவணைப்படுத்துக.
29.
சுண்ணாம்புத் தூள், கடுகு எண்ணெய். நீர் மற்றும் நாணயங்கள் கொண்ட கலவையை உனது ஆய்வகத்தில் உள்ள தகுந்த உபகரணங்களைப் பயன்படுத்தி எவ்வாறு பிரிப்பாய்?
30.
மூன்று நிலைமைகளில் உள்ள பருப்பொருள் மூலக்கூறுகளின் அமைப்பை விவரி. உனது விடைகாண படங்களை வரைக.
31.
கீழ்க்கண்ட அட்டவணையை நிரப்புக.
| பண்புகள் | வரையறை | அடிப்படை அலகு | அளக்கப் பயன்படும் கருவி |
|---|---|---|---|
| நீளம் | |||
| நிறை | |||
| பருமன் | |||
| காலம் |
32.
வளைகோடுகளின் நீளத்தை அளக்க நீ பயன்படுத்தும் இரண்டு முறைகளை விளக்குக.
33.
பாலைவனங்களில் வாழ்வதற்கேற்ப ஒட்டகங்களில் காணப்படும் தகவமைப்புகளை விவரி.
34.
எடுத்துக்காட்டுகளைக் கொண்டு பூர்த்தி செய்க.

1.
1. பறவைகள் இறகுகளால் மூடப்பட்ட, படகு போன்ற உடல் அமைப்பைப் பெற்றிருக்கின்றன. படகு போன்ற உடல் அமைப்பு குறைந்த பட்ச எடையுடன் காற்றில் பறக்க பயன்படுகின்றது.
2. பறவைகளுக்கு வாய்க்கு பதிலாக அலகுகள் உள்ளன.
3.அவை நுரையீரல்கள் சுவாசிக்கின்றன.
4. பறவையின் முன்னங்கால்கள் இறக்கைகளாக மாறுபாடு அடைந்துள்ளன.
5. உள்ளீடற்ற அல்லது வெற்றிடத்தினால் ஆன இலகுவான எலும்புகளைப் பெற்று இருக்கின்றன்.
6. பறவைகள் பறக்கும் தன்மை பெற்றிருப்பினும் அவற்றால் நிலத்தில் நடக்கவும், ஓடவும், குதிக்கவும் முடியும். பறவைகளின் கால்கள் உள்ள கூர்நகங்கள் மரங்களின் கிளைகளை நன்கு பற்றிக் கொண்டு அமர உதவுகின்றன.
7. பறவையின் வால் பறக்கும் திசையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. பறத்தலின் போது ஏற்படும் அழுத்தத்தினைத் தங்குவதற்கு வலிமை மிக்க மார்புத் தசையினைத் தாங்குவதற்கு வலிமை மிக்க மார்புத் தசையினைப் பெற்றுள்ளன.
8. ஒரே சமயத்தில் இரு கண்கள் மூலம் இரு வெவ்வேறு பொருட்களை பறவைகளால் காண முடியும். இதற்கு பார்வை என்று பெயர்.
2.
1. மனிதர்கள் தங்களின் தேவைக்காக தாவரங்களைச் சார்ந்திருப்பது போல விலங்குகளும் தாவரங்களைச் சார்ந்துள்ளன.
2. பட்டுப் புழுக்கள் மல்பெரி இலைகளை உணவாக எடுத்துக்கொண்டு பட்டு உற்பத்திக்கு உதவுகிறது, தாவரங்களின் அயல் மகரந்தச் சேர்க்கைக்கு விலங்குகள், பூச்சிகள் மற்றும் பறவைகளின் பங்கு மிக அவசியமாகும்.
3. மலர்களிலிருந்து தேனீக்கள் தேனை எடுக்க செல்லும்போது மகரந்தச் சேர்க்கைக்கு உதவுவதோடு தேனை சேகரிக்கிறது. இதனால் விளைச்சல் அதிகரிக்கிறது.
4. வன்கட்டைகள் உயர்தர மரச்சாமான்கள் மற்றும் பல பொருள்கள் தயாரிக்கப் பயன்படுகின்றன.
5. மென்கட்டைகள் நடுத்தரமான அடர்த்தி கொண்ட பலகைகள் மற்றும் தாள்கள் தயாரிக்கப் பயன்படுகின்றன.
6. கடலில் பவளப்பாறைகளில் வாழும் பாசிகளும் தாவரங்களும் பெரும்பான்மையான மீன்களின் உணவாக இருப்பதால் அப்பகுதிகளில் மீன்பிடித்தொழில் சிறப்பாக நடைபெறுகிறது.
7. பல்வேறு தாவரங்களின் விதைகள் பரவவும், முளைக்கவும் விலங்குகளும், பறவைகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
3.
1. வீடுகட்டுவதற்கும் மரப்பொருள்கள் தயாரிப்பதற்குமான மரக்கட்டைகள் தாவரங்களில் இருந்து பெறப்படுகின்றன.
2. மரக்கட்டைகளின் நீடித்தத் தன்மை, அழகு மற்றும் வெப்பத்தினைத் தாங்கும் திறன் ஆகியவற்றின் காரணமாக பல்வேறு பயன்பாடுகளுக்கு நாம் மரக்கட்டைகளைப் பயன்படுத்துகிறோம்.
3. வணிகரீதியாகப் பயன்படும் மரக்கட்டைகள் அதன் வலிமை மற்றும் அடர்த்தியின் அடிப்படையில் வன்கட்டைகள் மற்றும் மென்கட்டைகள் என இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகின்றன.
4.
1. அதிகமான ஒலி அல்லது சத்தமான ஒலி இரைச்சலை ஏற்படுத்துகின்றது. இத்தகைய இரைச்சலையே ஒலி மாசுபாடு என்கிறோம்.
2. சத்தமான இசை, மோட்டார் வாகனங்களில் வெளிவரும் இரைச்சல், பட்டாசு வெடிக்கும் போது உருவாகும் இரைச்சல், இயந்திரங்களின் ஓசை போன்றவை இரைச்சலை உருவாக்குகின்றன.
3. இதனால் தூக்கம் கெடுகிறது. படிக்க முடிவதில்லை மன அழுத்தம் ஏற்படுவதோடு செவிகள் பாதிப்படைகிறது
4. நம்மைச் சுற்றியுள்ள விலங்குகளும், பறவைகளும், கடலுக்கடியில் திமிங்கலங்களும் பாதிக்கப்படுகின்றன.
குறைக்கும் வழிமுறைகள்
1. தொலைக்காட்சி மற்றும் மின்னணுக் கருவிகளின் ஒலி அளவைக் குறைத்து வைத்து கேட்கலாம்.
2. ஓட்டுநர்கள் வாகனங்களின் ஒலிப்பான்களைத் தேவை ஏற்படும் போது மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
3. பட்டாசு வெடிப்பதையும், சத்தமாக பேசுவதையும் தவிர்க்கவும்.
5.
| உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவுகள் | உயிரினச் சிதைவிற்கு உள்ளாகாத கழிவுகள் |
| இயற்கை காரணிகளான நீர் ஆக்ஸிஜன்,சூரியனின் புற ஊதாக்கதீர்கள் மற்றும் நுண்ணுயிரிகளால் சிதைவுறும் கழிவுகள் உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவுகள் எனப்படும். | நுண்ணுயிரிகள் மற்றும் இயற்கைக் காரணிகளால் எளிய மூலக்கூறுகளாக சிதைவுற முடியாத பொருள்கள் உயிரினச் சிதைவிற்கு உள்ளாகாத கழிவுகள் எனப்படும். |
| இக்கழிவுகள் மண்ணிற்கு வளமளிக்கின்றன. (எ.கா) காய்கறி மற்றும் பழக்கழிவுகள்,தோட்டக்கழிவுகள்,உணவுக் கழிவுகள் |
இக்கழிவுகளால் மண்ணின் வளம் கெடுகிறது. (எ.கா) நெகிழிப் பொருள்கள், உலோகங்கள்,அலுமினியக் கேன்கள் மற்றும் கண்ணாடிப் பாட்டில்கள் |
6.
செயல் - சோப்பு தயாரித்தல்.
தேவையான பொருள்கள்:
i) 35 மி.லி நீர்
ii) 10 மி.லி நீர் NaOH
iii) 60 மி.லி தேங்காய் எண்ணெய்
செயல்முறை:
1. சோப்பு தயாரிக்கக் கூடிய இடத்தில் பழைய செய்தித்தாளை விரித்துக்கொள்ளவும்.
2. கண்ணாடி குவளையில் நீர் நிரப்ப வேண்டும்.
3. அதனுடன் 10 கி NaOH சேர்த்து குளிர வைக்க வேண்டும்.
4. பின் 60 மிலி தேங்காய் எண்ணையை சிறிது சிறிதாகச் சேர்த்து, கலக்கி கொண்டே இருந்தால் கரைசல் கூழ்மமாகி கெட்டித்தன்மை பெறும்.
5. நன்கு உலரவைக்கும் போது, சோப்பு படிகமாகிறது.
7.
இரும்புக்கம்பிகள் (அல்லது) எஃகு வலைகளை கற்காரையுடன் சேர்த்துப் பெறப்படுவதே வலுவூட்டப்பட்ட காரை' எனப்படும்.
1. இது வலுவானது மற்றும் உறுதியானது.
2. அணைக்கட்டுகள், பாலங்கள், வீட்டின் மேல் தளம் மற்றும் தூண்கள் கட்டுவதற்கும் குடிநீர்த் தொட்டிகள், குழாய்கள் மற்றும் கழிவுநீர் வாய்க்கால்கள் அமைப்பதற்கும். இது பயன்படுகிறது.
8.
1. இந்தியாவின் நீர் மனிதர் இராஜேந்திர சிங் ஆவார்.
2. இவர் மழைநீர் சேமிப்பு திட்டத்தின் கீழ் இந்தியாவின் 850 கிராமங்களில் 4500 தடுப்பணைகளையும், குளங்களையும் கட்டினார்.
3. இத்திட்டத்தின் மூலம் இறந்து கொண்டிருந்த பல ஆறுகளுக்கு புத்துயிர் தந்தவர்.
4. 2001 ம் ஆண்டு ராமன் மகசேசே விருதையும். 2005ம் ஆண்டு ஜம்னா லால் பஜாஜ் விருதையும் பெற்றார்.
5. இவர் இந்தியாவின் 'ஜல் புருஷ்' (தண்ணீர் மனிதர்) என அழைக்கப்படுகிறார்.
9.
1. குடிநீர் என்பது மனிதன் குடிப்பதற்கும் உணவு சமைப்பதற்கும் பாதுகாப்பான நீராகும்.
2. உணவு செரிக்கவும், கழிவுப் பொருளை வெளியேற்றவும் நீர் அவசியம்.
3. மனித உடல் உறுப்புகளின் சீரான செயல்பாட்டிற்கும் தினமும் சராசரியாக 2 - 3 லிட்டர் குடிநீர் தேவை.
4. குடிநீரில் இயற்கையான கனிமங்கள் உள்ளதாக இருக்க வேண்டும்.
5. குடிநீர் என்பது சுத்தமானதாகவும் அபாயகரமான மாசுக்கள் மற்றும் கிருமிகள் இல்லாததாக இருக்க வேண்டும்.
6. தூய்மையான குடிநீரில் அமிலத்தன்மை இல்லாமல் pH அளவு சரியாக இருக்க வேண்டும்.
7. குடிநீர் இயற்கையான சுவையுடன் இருக்க வேண்டும்.
10.
மின்காந்தத் தொடர்வண்டியில் மின்காந்தங்கள் பயன்படுகின்றன. இவற்றின் வழியே மின்சாரம் பாயும்போது மட்டுமே காந்தத்தன்மை பெறுகின்றன. மின்சாரத்தின் திசை மாறும்போது இதன் துருவங்களும் மாறுகின்றன. தொடர்வண்டியின் அடியிலும், தண்டவாளத்திலும் உள்ள காந்தங்களின் ஒத்த துருவங்கள் ஒன்றையொன்று விலக்குவதன் காரணமாக இத்தொடர்வண்டிகள் தண்டவாளத்திலிருந்து 10 செ.மீ உயரத்தில் அந்தரத்தில் நிறுத்தப்படுகின்றன. காந்தத்தின் விலக்கு விசை மற்றும் ஈர்ப்பு விசையை பயன்படுத்தி தொடர்வண்டி முன்னோக்கி செலுத்தப்படுகிறது. மின்னோட்டத்தின் மூலம் இக்காந்தங்களை நம்மால் கட்டுப்படுத்த முடியும். இத்தொடர்வண்டியில் உராய்வு விசை கிடையாது. அதனால் மணிக்கு 300 கி.மீ வேகத்திற்கு மேல் எளிதாகச் செல்லலாம்.
11.
1. ஒரு சட்டக காந்தத்தை எடுத்து அதன் ஒரு முனையை இரும்பு ஊசியின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை தேய்க்க வேண்டும்.
2. காந்த முனையை மாற்றக் கூடாது.
3. இரும்பு ஊசியின் எந்த முனையில் இருந்து ஆரம்பித்தோமோ அதே முனையில் இருந்தே மீண்டும் மீண்டும் தேய்க்க வேண்டும்.
4. இதே போல் 30- 40 முறை தேய்க்க வேண்டும்.
5. இப்போது இரும்பு ஊசி காந்தத்தன்மையை பெற்றுள்ளதா என பார்க்க குண்டூசி அல்லது இரும்பு துகள்களை ஈர்க்கிறதா என பார்க்க வேண்டும். அது ஈர்க்கும்
6. இல்லையெனில் இதே முறையை பின்பற்றி மீண்டும் சில முறை தேய்த்தால் இரும்பு ஊசி காந்தத் தன்மையை பெறும்.
12.
கோடைக்காலத்தில் வெப்பத்தால் தோலில் உள்ள வியர்வைத் துளைகள் விரிவடைகின்றன. எனவே இந்த வியர்வைத் துளைகளின் வழியே அதிக வியர்வை வெளியேறுகிறது. இதனால் தோல் அதிக வெப்பமடைந்து விடாமல் குளிர்ச்சியாக உள்ளது.
13.
இதயத்தில் ஒரு பாகத்தில் உள்ள சுத்த ரத்தம் மறுபக்கத்தில் உள்ள அசுத்த ரத்தத்துடன் கலந்து விடாமல் இருப்பதற்காக இதயத்தின் இரு பாகங்களும் தடித்த தசைச் சுவரால் பிரிக்கப்பட்டுள்ளன.
14.

15.
| வ.எண் | செல்லின் பாகம் | முக்கிய பணிகள் |
| 1. | செல்சுவர் | செல்லைச் சுற்றியுள்ளதோடு பாதுகாப்பளிக்கிறது. செல்லிற்கு உறுதி மற்றும் வலிமையைத் தருகிறது. |
| 2. | செல்சவ்வு | செல்லிற்குப் பாதுகாப்பு தருகிறது.செல்லின் போக்குவரத்திற்கு உதவுகிறது. |
| 3. | சைட்டோபிளாசம் | நீர் அல்லது ஜெல்லி போன்ற, செல்லில் உள்ள நகரும் பொருள் |
| 4. | மைட்டோகாண்டிரியா | செல்லிற்குத் தேவையான சக்தியை உருவாக்கித் தருகிறது. |
| 5. | பசுங்கணிகம் | இதிலுள்ள பச்சையத்தை பயன்படுத்தி சூரிய ஒளியை ஈர்த்து ஒளிச்சேர்க்கையின் மூலம் உணவு தயாரிக்கிறது. |
16.
1. CO2 வாயு தீயை அணைப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது.
2. அவ்வாறு பயன்படுத்தும்போது இவ்வாறு எரிதலுக்கு தேவையான ஆக்ஸிஜன் வழங்கப்படுவதை முழுமையாகத் தடுக்கிறது.
3. இதனால் நெருப்பு அணைந்து கட்டுப்படுத்தப்படுகிறது.
17.
1. பூமியைச் சுற்றிலும் காற்றினால் மூடப்பட்டுள்ள ஒரு பெரிய மேலுறையே வளிமண்டலம் எனப்படுகிறது.
2. இம்மேலுறையானது புவிக்கு அருகில் மிக அதிகமாகக் காணப்படுகிறது.
3. உயரே செல்லச் செல்ல காற்றின் அடர்த்தியும், அளவும் குறைகிறது.
4. காற்றின் இயக்கமும், மேகங்களை உருவாக்கும் நீராவியும் அடிவளிமண்டலத்தில் உள்ளன.
5. இந்த அடி வளிமண்டலமே, நாம் அனுபவிக்கும் வானிலைக்குக் காரணமாக உள்ளது.
6. இவ்வடுக்கிற்கு மேலே வளிமண்டலத்தில் காணப்படும் ஓசோன் படலம், சூரியனிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்களை (UV) தடுத்து உயிர்களை பாதுகாக்கிறது.
18.
மின்விளக்கு ஒளிரும்:
எலுமிச்சைப் பழச்சாறு மின்பகுபொருளாகவும், தாமிரக்கம்பி, குண்டூசி மின்வாய்களாகவும் செயல்பட்டு மிகக் குறைவான மின்னோட்டத்தை உருவாக்கும். இதேபோல் மூன்று அல்லது நான்கு மின்கலங்களை ஒன்றாக இணைத்து சிறிய மின்விளக்கை (LED) ஒளிரச் செய்யலாம்.
19.
நமது உடல் சுற்றுச் சூழலை முன்பிருந்ததை விட வெப்பமாக உணரும். ஏனென்றால் வெப்ப ஆற்றலானது உயர் வெப்பநிலையிலிருந்து தாழ் வெப்பநிலைக்கு கடத்தப்படுகிறது.
20.
அறையில் உள்ள வெப்பம் வெளியே கடத்தப்படும். ஏனென்றால் வெப்ப ஆற்றலானது உயர்ந்த வெப்பநிலையில் உள்ள பொருளிலிருந்து குறைந்த வெப்பநிலையில் உள்ள பொருளுக்கு கடத்தப்படுகிறது.
21.
அ) மெழுகுவர்த்தி உருகுதல்
ஆ) உருகிய மெழுகை மீண்டும் திண்மமாக மாற்றுதல் மெழுகுவர்த்தியில் எரிதல் என்பது ஒரு இயற்பியல்/ மீளக்கூடிய செயல்முறை ஆகும்.
22.
அ) மெதுவான மாற்றம் - பருவநிலை மாற்றம்
வேகமான மாற்றம் - பட்டாசு வெடித்தல்
ஆ) மீள் மாற்றம் - இரப்பர் வளையம் நீளுதல்
மீளா மாற்றம் - உணவு செரித்தல்
இ) இயற்பியல் மாற்றம் - பனிக்கட்டி உருகுதல்
வேதியியல் மாற்றம் - இரும்பு துருப்பிடித்தல்
ஈ) இயற்கையான மாற்றம் - புவியின் சுழற்சி
செயற்கையான மாற்றம் - சமைத்தல்
உ) விரும்பத்தக்க மாற்றம் - பால் தயிராதல்
விரும்பத்தகாத மாற்றம் - காடுகள் அழிதல்
23.
அ) மின்கடத்திகள் :
கடத்தியில் மின்னூட்டங்கள் பாயும் விதமே மின்னோட்டம் எனப்படும். அவ்வாறு எந்தெந்த பொருள்கள் தன் வழியே மின்னுட்டங்களைச் செல்ல அனுமதிக்கின்றனவோ அவற்றை நாம் மின் கடத்திகள் என்கிறோம்.
எ.கா. உலோகங்களான தாமிரம், இரும்பு. அலுமினியம் மற்றும் மாசுபட்ட நீர், புவி போன்றவை.
ஆ) அரிதிற் கடத்திகள் (மின் கடத்தாப் பொருள்கள்) :
எந்தெந்த பொருள்கள் தன் வழியே மின்னூட்டங்களை செல்ல அனுமதிக்கவில்லையோ அவற்றை நாம் அரிதிற்கடத்திகள் (அ) மின்கடத்தாப் பொருள்கள் என்கிறோம்.
எ.கா. பிளாஸ்டிக், கண்ணாடி, மரம், ரப்பர், பீங்கான், எபோனைட் போன்றவை.
24.
1. கணினி பலதுறைகளில் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது.
2. துணிக்கடையில் பில் போட பயன்படுகிறது.
3. பெரிய மற்றும் சிறிய இயந்திரங்களை மனிதர் துணையின்றி கட்டுப்படுத்த பயன்படுகிறது.
4. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கல்விப்பெறுவதற்கு பெருமளவு கணினியைப் பயன்படுத்துகிறார்கள்.
5. ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு எடுப்பதற்கும் பிற விவரங்களுக்கும் கணினி பயன்படுத்தப்படுகிறது.
6. வங்கி, எ.டி.எம், அஞ்சலகம் ஆகியவற்றிலும் கணினி பல செயல்பாடுகளுக்கு பயன்படுகிறது.
7. கணினியில் நமக்குத் தேவையான தரவுகளை சேமித்து வைக்கலாம். இத்தரவுகளை நாம் தேவைக்கு ஏற்றவாறு தகவல்களாக மாற்றி எடுத்துக்கொள்ளலாம்.
25.
இயக்கம்: காலத்தைப் பொறுத்து ஒரு பொருள் தனது நிலையை மாற்றிக் கொள்வதை இயக்கம் என்கிறோம்.
26.
27.
வேரின் பணிகள் :
1. வேர்கள் தாவரத்தை பூமியில் நிலைநிறுத்துகின்றன. மண்ணை இறுக பற்றிக் கொள்ள உதவுகிறது.
2. மண்ணில் உள்ள நீரையும், கனிமச் சத்துக்களையும் உறிஞ்சி தாவரத்தின் பிற பாகங்களுக்கு அனுப்புகின்றன.
3. சில தாவரங்கள் தான் தயாரித்த உணவைத் தங்களின் வேர்களில் சேமிக்கின்றன.
எடுத்துக்காட்டு: கேரட், பீட்ரூட்.
தண்டின் பணிகள் :
1. தண்டானது கிளைகள், இலைகள், மலர்கள் மற்றும் கனிகள் ஆகியவற்றைத் தாங்குகின்றது.
2. வேரினால் உறிஞ்சப்பட்ட நீர் மற்றும் தனிமங்கள் தண்டின் வழியாக தாவரத்தின் மற்ற பாகங்களுக்குக் கடத்தப்படுகின்றன.
3. சில தாவரங்கள் உணவைச் சேமித்து வைக்கின்றன. எ.கா கரும்பு.
28.
| உயிர்ச் சத்து வைட்டமின் | குறைப்பாட்டு நோய்கள் |
| வைட்டமின் A | மாலைக்கண் நோய் |
| வைட்டமின் B | பெரி பெரி |
| வைட்டமின் C | ஸ்கர்வி |
| வைட்டமின் D | ரிக்கெட்ஸ் |
| வைட்டமின் E | நரம்பு, பலவீனம், மங்கலான கண்பார்வை, மலட்டுத்தன்மை |
| வைட்டமின் K | பலவீனமான எலும்புகள், பற்கள் மற்றும் இரத்தம் உறையாமை போன்றவை |
29.
1. கொடுக்கப்பட்ட கலவையில் கடுகு எண்ணெயின் அடர்த்தி நீரின் அடர்த்தியைவிட குறைவாக இருப்பதால் கலவையின் மேற்பகுதியில் கடுகு எண்ணெய் நீரின் மேல் மிதக்கும். இதை மற்றொரு முகவையில் கவனமாக மாற்றவேண்டும்.
2. எஞ்சி இருக்கும் கலவையில் சுண்ணாம்புத் தூளும் நாணயங்களும் நீரில் கரையாமல் இருக்கும்.
3. இக்கரைசலை வடிதாள் மற்றும் புனல் வழியே வடிகட்ட வேண்டும். தெளிந்த நீர் புனல் வழியே கீழேயுள்ள கலனில் சேகரிக்கப்படும்.
4. வடிதாளில் தங்கியிருந்த சுண்ணாம்புத் தூள், நாணயங்கள் கலவையிலிருந்து கைகளால் தெரிந்தெடுத்தல் முறையில் நாணயங்கள் பிரித்தெடுக்கப்படுகிறது.
30.
| வ.எண் | திண்ம நிலை | திரவ நிலை | வாயு நிலை |
| 1 | குறிப்பிட்ட வடிவம் பருமனளவு கொண்டது. | குறிப்பிட்ட வடிவம் கிடையாது திரவம் உள்ள கொள்கலனின் வடிவத்தைப் பெறுகிறது. |
குறிப்பிட்ட வடிவமோ பருமனோ கிடையாது. |
| 2 | அழுத்தத்திற்கு உட்படாது | சிறிதளவு அழுத்தத்திற்கு உட்படும். | அதிக அளவு அழுத்தத்திற்கு உட்படும் |
| 3 | துகள்களுக்கு இடையே உள்ள இடைவெளி மிகவும் குறைவு. | துகள்களுக்கு இடையே உள்ள இடைவெளி அதிகம். | துகள்களுக்கு இடையே உள்ள இடைவெளி மிக அதிகம். |
| 4 | துகள்கள் ஒன்றையொன்று அதிக அளவில் ஈர்க்கிறது. | திரவத்தின் துகள்களுக்கு இடையே உள்ள ஈர்ப்பு விசை திண்மப் பொருளைவிட குறைவு. | வாயுவின் துகள்களுக்கு இடையே உள்ள ஈர்ப்பு விசை மிகவும் குறைவு. |
| 5 | திண்மத்தின் துகள்கள் எளிதில் நகராது. | திரவத்தின் துகள்கள் எளிதில் நகரும். | வாயுவின் துகள்கள் தொடர்ந்து அங்கும் இங்கும் இயங்கும். |
31.
| பண்புகள் | வரையறை | அடிப்படை அலகு | அளக்கப் பயன்படும் கருவி |
|---|---|---|---|
| நீளம் | ஏதேனும் இரு புள்ளிகளுக்கு இடையே உள்ள தொலைவு | மீட்டர் | அளவு நாடா , அளவுகோல். |
| நிறை | ஒரு பொருளின் உள்ள பருப்பொருளின் அளவு | கிலோ - கிராம் | பொதுத்தராசு , மின்னனு தராசு |
| பருமன் | ஒரு பருப்பொருள் அடைத்துக் கொள்ளும் இடத்தின் அளவு | லிட்டர் (அல்லது) கனமீட்டர் | அளவு சாடி, பீக்கர் , பிப்பெட் , பியூரெட் |
| காலம் | இரண்டு நிகழ்வுகளுக்கிடையேயான கால இடைவெளி | வினாடி | கடிகாரங்கள் |
32.
முறை 1:
1. ஒரு தாளில் AB என்ற ஒரு வளைகோடு வரைய வேண்டும்.
2. அந்த வளைகோட்டின் மீது ஒரு கம்பியை வைக்க வேண்டும்.
3. கம்பியானது வளைகோட்டின் எல்லாப் பகுதியையும் தொடுவதை உறுதி செய்ய வேண்டும்.
4. வளைகோட்டின் தொடக்கப் புள்ளியையும், முடிவுப் புள்ளியையும் கம்பியின் மீது குறிக்கவேண்டும்.
5. இப்பொழுது கம்பியை நேராக நீட்டி குறிக்கப்பட்ட தொடக்கப் புள்ளிக்கும் முடிவுப் புள்ளிக்கும் இடையிலான தொலைவை அளவுகோல் கொண்டு அளவிட வேண்டும்.
6. இதுவே வளைகோட்டின் நீளமாகும்.
முறை 2:
1. ஒரு தாளின் மீது AB என்ற வளைகோட்டினை வரைய வேண்டும்.
2. கவையின் இரு முனைகளை 0.5 செ.மீ அல்லது 1 செ.மீ இடைவெளி உள்ளவாறு பிரிக்க வேண்டும்.
3. வளைகோட்டின் ஒரு முனையிலிருந்து கவையை வைத்து மறுமுனை வரை அளந்து குறிக்கவேண்டும்.
4. வளைகோட்டின் மேல் சமஅளவு பாகங்களாகப் பிரிக்க வேண்டும்.
5. குறைவாக உள்ள கடைசிப் பாகத்தை அளவுகோல் கொண்டு அளவிட வேண்டும்.
6. வளைகோட்டின் நீளம் (பாகங்களின் எண்ணிக்கை × ஒரு பாகத்தின் நீளம்) + மீதம் உள்ள கடைசி பாகத்தின் நீளம்.
33.
1. ஒட்டகத்தின் நீண்ட கால்கள் பாலைவனத்தில் உள்ள சூடான மணலில் இருந்து உடலைப் பாதுகாக்கின்றன.
2. இவை அதிக அளவு நீரை அருந்தி, தன் உடலில் தேக்கி வைத்துக் கொள்கின்றன.
3. ஒட்டகம் தம் உடலில் இருந்து குறைந்த அளவு நீரையே வெளியேற்றுகிறது.
4. ஒட்டகம் திமில் பகுதியில் கொழுப்பை சேமித்து வைக்கிறது. சக்தி தேவைப்படும் காலங்களில் இந்த கொழுப்பை சிதைத்து ஊட்டம் பெறுகின்றது.
5. ஒட்டகம் பெரிய, தட்டையான திண்டு கால்கள் மூலம் மிருதுவான மணலில் நன்றாக நடக்கும் தன்மையைப் பெற்றுள்ளன.
6. ஒட்டகங்களின் நீண்ட கண் இமைகள் மற்றும் தோல், அதன் கண், காதுகளை புழுதிப் புயலில் இருந்து பாதுகாக்கிறது.
7. நாசித் துவாரங்கள் தூசிகள் உள்ளே செல்வதை தடுப்பதற்காக மூடிய நிலையில் காணப்படும்.
34.
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards