6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 16/03/2020
6ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 6th Standard Social Science All Chapter Five Marks Important Questions 2020 )
6ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
பிளவுபட்ட கடற்கரை என்றால் என்ன? துறைமுகங்களை எவ்வாறு அது மோசமான காலநிலையில் இருந்து பாதுகாக்கின்றது?
2.
ஆசியாவில் காணப்படும் முக்கிய தாதுக்களைப் பற்றி விவரி.
3.
| தோரமானர் என்பது யார்? | குப்தப் பேரரசின் முக்கிய அரசு |
| அஸ்வமேத யாகம் நடத்திய குப்த அரசர்களின் பெயர்களைக் குறிப்பிடுக. |
சந்திர, சூரிய கிரகணங்கள் குறித்து விளக்கிய புத்தகத்தின் பெயர் என்ன? |
| நாணயங்களில் இடம் பெற்ற முதல் குப்த அரசரின் பெயர் என்ன? |
சமுத்திரகுப்தரின் ஆட்சி குறித்து அறிந்த கொள்ள உதவும் மிக முக்கியமான சான்று எது? |
| தொடக்கத்தில் ஹர்ஷர் _______ வழிபட்டார். |
ஹர்ஷரின் காலத்தில் _________ பல்கலைக்கழகம் அதனுடைய புகழின் உச்சத்தை எட்டியது. |
4.
இந்தியாவின் திட்டநேரத்தைப் பற்றி விளக்குக
5.
புவி மாதிரியின் பயன்கள் யாவை?
6.
வெள்ளம் என்றால் என்ன? வெள்ளத்தின் போது செய்யக்கூடியவை எவை?, செய்யக்கூடாதவை எவை?
7.
கல்யாணி மேலைச் சாளுக்கியர் குறித்து எழுதுக.
8.
எலிபெண்டா தீவு, எல்லோராவிலுள்ள கைலாசநாதர் கோவில் ஆகியவை பற்றி சிறுகுறிப்பு வரைக.
9.
கோண்டோபரித் அரச வம்சத்தைப் பற்றி நீங்கள் அறிந்ததென்ன?
10.
புஷ்யமித்ர சுங்கரின் வெற்றி பற்றி எழுதுக.
11.
களப்பிரர்களின் காலம் இருண்ட காலம் அல்ல. காரணங்கள் தருக
12.
சங்க காலத்தில் பெண்களின் நிலை குறித்து விவாதிக்கவும்
13.
கிராம மற்றும் நகர மேம்பாட்டிற்கு உள்ளாட்சி அமைப்புகள் முக்கிய பங்காற்றுகின்றன. எவ்வாறு?
14.
நேரடி மக்களாட்சி, பிரதிநிதித்துவ மக்களாட்சி – ஒப்பீடு செய்து, வேறுபாடுகளை அறியவும்
15.
படத்தைப் பார்த்து பதிலளி :

i) படத்தில் உள்ள கோளின் பெயர் என்ன?
ii) கோளின் நிறம் என்ன?
iii) இந்நிறத்திற்கான காரணம் என்ன?
16.
மூலப்பொருள் பயன்பாட்டின் அடிப்படையில் எவ்வாறு தொழிற்சாலைகள் வகைப்படுத்தப்படுகின்றன ?
17.
உனது மாவட்டத்தில் உள்ள உற்பத்தித் தொழிற்சாலைகளைக் குறிப்பிடுக.
18.
வளங்களைப் பாதுகாப்பது எப்படி?
19.
வளப்பாதுகாப்பைப் பற்றி காந்தியடிகளின் சிந்தனை என்ன?
20.
நீ அசோகரைப் போன்ற ஒரு அரசராக இருந்தால் மேற்கொள்ளும் ஏதேனும் ஐந்து நலத் திட்டங்களை எழுதுக.
21.
கலிங்கப்போர் அசோகரது வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது எவ்வாறு?
22.
கர்மா - ஒரு மனிதனின் செயல்கள். ஏதாவது 10 நல்ல செயல்களைக் குறிப்பிடுக.
23.
பெளத்தத்தின் நன்கு பேருண்மைகளை எடுத்துரைக்கவும் :
24.
குருகுலக் கல்வி முறைக்கும் நவீன கல்விமுறைக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?
25.
கொடுமணலிலுள்ள தொல்லியல் ஆய்விடம் குறித்து சுருக்கமாய் எழுதுக.
26.
காஞ்சிபுரம் கல்வியில் தலை சிறந்து விளங்கியதுஎன்பதை நிரூபி.
27.
பூம்புகாரின் வணிகம் பற்றி ஒரு பத்தியளவில் எழுதுக.
28.
இந்தியா "வேற்றுமையில் ஒற்றுமை" என்ற நாடாக இருப்பினும் நாம் அனைவரும் ஒன்றுபட்டுளோம் - கலந்துரையாடுக.
29.
மொழிசார் பன்முகத்தன்மை மற்றும் பண்பாட்டு பன்முகத்தன்மையினை விவரி.
30.
இந்திய சமுதாயத்தில் சமத்துவமின்மை மற்றும் பாகுபாட்டை நீக்குவதற்கான தீர்வுகளை விவரி
31.
பாரபட்சத்திற்கான காரணங்களைக் கூறுக.
32.
பெருங்கடலின் முக்கியத்துவத்தை விளக்குக.
33.
நிலத்தோற்றத்தின் வகைகளை விளக்கி எழுதுக.
34.
உட்புற மற்றும் வெளிப்புறக்கோள்கள் - வேறுபடுத்துக.
35.
வரையறு: இறையாண்மை.
36.
அடிப்படை உரிமைகள் என்றால் என்ன?
37.
தேசிய இலச்சினையின் அடிப்பாகத்தில் இடம் பெற்றுள்ள விலங்குகள் எவை?
38.
தேசிய இலச்சினையின் பாகங்கள் எவை?
1.
ஃபியார்ட் (fjord) (பிளவுபட்ட கடற்கரை) செங்குத்தான பாறைகளுக்கினிடையே (பணியாற்றுச் செயல்பாடுகளின் காரணமாக) உள்ள குறுகிய, ஆழமான கடற்கரை பிளவுபட்ட கடற்கரை எனப்படும்.
பின்வரும் வழிகளில் பயன்படுகிறது.
1. இவை காற்று எத்திசையிலிருந்து வீசினாலும் அதன் வேகத்தைக் குறைகின்றன.
2. கடல் அலைகளின் வேகத்தையும் இவை கட்டுக்குள் வைக்கின்றன. எனவே, இப்பிளவுபட்ட கடற்கரையானது இயற்கை துறைமுகங்கள் அமைவதற்கு ஏற்றதாக உள்ளது.
2.
ஆசியா பல்வகையான கனிம வளங்களைக் கொண்டுள்ளது. இரும்பு, நிலக்கரி, மாங்கனீசு, பாக்ஸைட், துத்தநாகம், டங்ஸ்டன், பெட்ரோலியம், தகரம் ஆகியவற்றின் உற்பத்தியில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. எண்ணெய் மற்றும் இயற்கை வாயு மேற்காசிய நாடுகளில் காணப்படுகின்றன.
உலகிலேயே மிக அதிகமான இரும்புத்தாது வளத்தை ஆசியா கொண்டுள்ளது. சீனா மற்றும் இந்தியா அதிக இரும்புத்தாது இருப்புள்ள நாடுகளாகும். துருக்கி, பிலிப்பைன்ஸ், மலேசியா, தாய்லாந்து, மியான்மர் மற்றும் பல நாடுகளும் இரும்புத்தாது வளத்தைக் கொண்டுள்ளன.
நிலக்கரி: நிலக்கரி ஒரு படிம எரிபொருள் ஆகும். உலகிலேயே ஆசியாவில்தான் அதிக நிலக்கரி இருப்பு உள்ளது. ஆசியாவில் சீன மற்றும் இந்தியா அதிகமாக நிலக்கரி உற்பத்தி செய்யும் நாடுகளாகத் திகழ்கின்றன.
பெட்ரோலியம்: பெட்ரோலியம் ஒரு கனிம எண்ணெய் வளமாகும். தென்மேற்கு ஆசியாவில்தான் அதிக அளவில் பெட்ரோலிய இருப்புகள் காணப்படுகின்றன. சௌதி அரேபியா, குவைத், ஈரான், பஹ்ரைன், கத்தார் மற்றும் ஐக்கிய அரேபிய குடியரசு போன்றவை பெட்ரோலிய உற்பத்தி செய்யும் மேற்காசியா நாடுகளாகும். தெற்கு சீனா, மலேசியா, புரூனே, இந்தோனேசியா, இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகள் பெட்ரோலியம் உற்பத்தி செய்யும் மற்ற நாடுகளாகும்.
பாக்ஸைட், இந்தியா மற்றும் இந்தோனேசியா நாடுகளில் காணப்படுகின்றது. இந்தியா உலகிலேயே அதிக அளவில் மைக்காவினை உற்பத்தி செய்கின்றது. மியான்மர், தாய்லாந்து, மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் தகரம் காணப்படுகின்றது.
3.
| ஹூணர்களின் தலைவர். மத்திய இந்தியாவில் அரசராக முடிசூட்டிக் கொண்டவர். |
தண்ட நாயகர், மகா தண்டநாயகர் |
| சமுத்திர குப்தர், முதலாம் சமுத்திர குப்தர். |
சூரிய சித்தாந்தம் |
| முதலாம் சந்திர குப்தர் | அலகாபாத் தூண் கல்வெட்டு |
| சிவபெருமானை | நாளந்தா |
4.
இந்தியாவின் தீர்க்கக் கோடுகளின் பரவல் 680 7' கிழக்கு முதல் 970 25' கிழக்கு வரை உள்ளது. இதனடிப்படையில், சுமார் 29 தீர்க்கக்கோடுகள் இந்தியாவின் வழியே செல்கின்றன. ஆகவே, இந்தியாவிற்கு 29 திட்டநேரங்கள் கணக்கிடுவது நடைமுறைக்கு சாத்தியமற்றது. எனவே, இந்தியாவின் மையத்தில் செல்லும் 82 \(\frac { 1 }{ 2 }\)0 கிழக்கு தீர்க்கக்கோட்டினை ஆதாரமாகக் கொண்டு இந்திய திட்டநேரம் IST (Indian standard time) கணக்கிடப்படுகிறது.

5.
புவி மாதிரியின் பயன்கள்: உலகிலுள்ள கண்டங்களைப் பற்றி அறிய பயன்படுகிறது. இடங்கள், கடல் வழிகள், வான் வழிகள் பற்றி அறிய உதவுகிறது. கண்டங்கள், கடல்கள், நாடுகள், ஆறுகள் மற்றும் நகரங்கள் பற்றி அறிய உதவுகிறது.
6.
அளவுக்கு அதிகாமாக வழிந்தோடும் நீரையே வெள்ளப்பெருக்கு என்கிறோம். இஃது அவற்றின் கறைகளை அல்லது சிற்றாறுகளின் கறைகளைக் கடந்து வழிந்தோடிப் பள்ளமான பகுதிகளை மூழ்கடிக்கின்றது.
வெள்ளத்தின் போது செய்யக் கூடாதவை
1. துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை உடனே இணைத்தல்க் கூடாது.
2. வண்டிகளை இயக்குதல் கூடாது.
3. வெள்ளத்தில் நீந்த முயற்சித்தல் கூடாது.
4. வெள்ளப் பெருக்கு காலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளக் கூடாது.
5. வெள்ளப் பெருக்கு எச்சரிக்கையை அலட்சியப்படுத்துதல் கூடாது.
வெள்ளப் பெருக்கின் போது செய்ய வேண்டியவை
1. மின்சாரம் மற்றும் சமையல் எரிவாயு இணைப்பினைத் துண்டிக்க வேண்டும்.
2. கழிப்பிடத் துளை மீதும், கழிவுநீர் வெளியேறும் துளை மீதும் மணல் மூட்டைகளை வைக்க வேண்டும்.
3. பரிந்துரைக்கப்பட்ட அல்லது நன்கு தெரிந்த பாதையில் உடனடியாக வெளியேற வேண்டும்.
4. குடிநீரைக் காய்ச்சிக் குடித்தல் வேண்டும்.
5. பிளிச்சீங் பவுடர் கொண்டு சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
6. எரிவாயுக் கசிவு ஏதும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே, தீக்குச்சி மற்றும் மெழுகுவர்த்தியைப் பயன்படுத்த வேண்டும்.
7. வயிற்றுப் போக்கு இருந்தால் அதிக அளவில் உணவு உண்ணக் கூடாது.
7.
கல்யாணி மேலைச் சாளுக்கியர்கள் வாதாபிச் சாளுக்கியரின் வழித்தோன்றல்கள் ஆவர். கல்யாணியைத் (தற்போதைய பசவ கல்யாண்) தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தனர். இரண்டாம் தைலப்பர் என்பவர் ராஷ்டிரகூடர்களின் சிற்றரசராக பிஜப்பூர் பகுதியை ஆண்டு வந்தார் இவர் கி.பி. 973இல் மாளவ அரசர் பராமரரைத் தோற்கடித்து கல்யாணியைக் கைப்பற்றினார். இவருடைய வம்சம் முதலாம் சோமேஸ்வரனின் ஆட்சியின் போது பேரரசாக வேகமாக வளர்ச்சி பெற்றது. முதலாம் சோமேஸ்வரர் தலைநகரை மன்யகேட்டாவிலிருந்து கல்யாணிக்கு மாற்றினார்.
8.
எல்லோரா: எல்லோராவின் குன்றுப்பகுதியில் அமைந்துள்ள முப்பது குடைவரைக் கோவில்களில் கைலாசநாதர் கோவிலும் ஒன்று. முதலாம் கிருஷ்ணருடைய ஆட்சிக் காலத்தில் இக்கோவில் உருவாக்கப்பட்டது. இக்கோவில் அதன் கட்டடக்கலை பிரமாண்டத்திற்கும் சிற்பங்களின் அற்புதங்களுக்கும் பெயர் பெற்றதாகும். இக்கோவில் 60,000 சதுர அடிகள் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதனுடைய விமானத்தின் (கோபுரம்) உயரம் 90 அடிகளாகும். இக்கோவில் மாமல்லபுரம் கடற்கரைக் கோவிலின் சாயலைப் பெற்றுள்ளது. கைலாசநாதர் கோவில் திராவிடக் கட்டடக்கலைக் கூறுகளைக் கொண்டுள்ளது.
எலிபெண்டா தீவு: இத்தீவின் இயற்பெயர் ஸ்ரீபுரி. உள்ளூர் மக்களால் காரபூரி என்று அழைக்கப்படுகிறது. எலிபெண்டா மும்பைக்கு அருகிலுள்ள ஒரு தீவு ஆகும். இத்தீவிலுள்ள பெரிய யானையின் உருவத்தைக் கண்ணுற்ற போர்த்துக்கீசியர்கள். இத்தீவுக்கு எலிபெண்டா தீவு எனப் பெயரிட்டனர். எலிபெண்டா குகையிலுள்ள திரிமூர்த்தி (மூன்று முகங்கள் கொண்ட) சிவன் சிலையின் வனப்பு ஈடு இணையற்றதாகும். கோவிலின் நுழைவாயிலில் காணப்படும் துவாரபாலகர்களின் சிலைகள் நமது கண்ணையும் கருத்தையும் கவர்பவை.
9.
இந்தோ -பார்த்திய அரசு அல்லது கோண்டோபரித் வம்சம் கோண்டோ பெர்னஸால் நிறுவப்பட்டது. இந்தோ -பார்த்தியார் ஆட்சி செய்த பகுதி காபூல், காந்தாரா ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். கோண்டோ பெர்னெஸ் எனும் பெயர் கிருஸ்துவ உபதேசியார் புனித தாமஸிடம் தொடர்புடையதாகும். கிருஸ்துவ மரபின்படி, புனித தாமஸ், கோண்டோ பெர்னெஸின் அரசவைக்கு வந்து கிருத்துவத்திற்கு அவரை மதம் மாற்றினார்.
10.
பாக்டீரியாவின் அரசன் மினான்டரின் படையைப் புஷ்யமித்ரர் வெற்றிகரமாக முறியடித்தார். மேலும் விதர்பாவையும் அவர் கைப்பற்றினார்.
11.
களப்பிரர்கள் தமிழகத்தைக் கைப்பற்றி இரண்டரை நூற்றாண்டுகள் ஆட்சி செய்தனர். களப்பிரர்களைப் பற்றி அறிய நமக்கு குறைவான குறிப்புகளே கிடைத்து உள்ளன. அவர்கள் விட்டுச் சென்ற நினைவுச் சின்னங்கள், தொல்கலைப் பொருட்கள் என எதுவுமில்லை. ஆனால் அவர்களின் ஆட்சி குறித்து இலக்கியங்களில் சான்றுகள் உள்ளன. இலக்கியச் சான்றுகள், தமிழ் நாவலர் சரிதை, யாப்பெருங்கலம், பெரியபுராணம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். சீவக சிந்தாமணி, குண்டலகேசி ஆகிய இரண்டும் இக்காலத்தில் எழுதப்பட்டவைகளாகும். தமிழகத்தில் பௌத்தமும், சமணமும் முக்கியத்துவம் பெற்ற காலம் அது. சமஸ்கிரதம், பிராகிருதம் ஆகிய மொழிகளின் அறிமுகத்தால் வட்டெழுத்து என்னும் புதிய எழுத்துமுறை உருவானது. பதினெண்கீழ்கணக்கைச் சேர்ந்த பல நூல்கள் இயற்றப்பட்டன. இக்காலத்தில் வணிகமும் வர்த்தகமும் தொடர்ந்து செழித்தோங்கின. எனவே களப்பிரர் காலமானது பொதுவாகச் சித்திரிக்கப்பட்டதைப் போன்று இருந்த காலம் அல்ல.
12.
சமூக வாழ்வில் பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் இல்லை. கற்றறிந்த, அறிவுக் கூர்மையுடைய பெண்கள் இருந்தனர். நாற்பது பெண் புலவர்கள் வாழ்வது அறிய நூல்களை கொடுத்துச் சென்றுள்ளனர். திருமணம் சொந்த விருப்பத்தை சார்ந்து அமைந்திருந்தது. இருந்தபோதிலும் 'கற்பு' பெண்களின் மிகச் சிறந்த ஒழுக்கமாகக் கருதப்பட்டது. பெற்றோரின் சொத்துக்களில் மகனும், மகளும் சமமான பங்கைப் பெற்றுத்தனர்.
13.
கிராம மற்றும் நகர மேம்பாட்டிற்கு உள்ளாட்சி அமைப்புகள் முக்கியப் பங்காற்றுகின்றன. எப்படியெனில், மக்களுக்காக பல்வேறு சேவைகளை உள்ளாட்சி அமைப்புகளே வழங்குகின்றன. எ.கா - குடிநீர் வசதி, தெருவிளக்கு, கழிவுநீர்க் கால்வாய் அமைத்தல், சாலைகள் அமைத்துப் பராமரித்தல், பொதுப்பூங்காக்களை அமைத்தல் மற்றும் விளையாட்டு மைதானம் ஏற்படுத்துதல் போன்றவையும், பொதுமக்களுக்கு மத்திய, மாநில அரசின் திட்டங்களையும் கொண்டுபோய் சேர்ப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன.
14.
| நேரடி மக்களாட்சி | பிரதிநிதித்துவ மக்களாட்சி |
|
நேரடி மக்களாட்சியில் மக்களே சட்டங்களை |
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சட்டங்களை |
|
அனைத்து சட்டதிருத்தங்களையும் மக்களே |
பிரதிநிதிகள் அடங்கிய மன்றங்கள் கூடி சட்டதிருத்தங்களை ஏற்படுத்துவர். |
|
நாடாளுமன்ற செயல் முறைகளின் படி ஆட்சி |
நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கள் மூலம் ஆட்சி நடைபெறும். |
15.
i) யுரேனஸ்
2) பச்சை
3) மீத்தேன் வாயு இருப்பதால்.
16.
வேளாண் அடிப்படைத் தொழிற்சாலைகள் :
(i) பருத்தி தொழிற்சாலை
(ii) சர்க்கரை தொழிற்சாலை
(iii) உணவு பதப்படுத்துதல் தொழிற்சாலை
காடுசார்ந்த தொழிற்சாலைகள் :
(i) காரிதத் தொழிற்சாலை
(ii) மரச்சாமான்கள் தயாரிக்கும் தொழிற்சாலை
(iii) கட்டுமானப்பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை
கனிமத் தொழிற்சாலைகள் :
(i) சிமெண்ட்
(ii) இரும்பு
(iii) அலுமினியம் போன்ற தொழிற்சாலைகள்
கடல்சார் தொழிற்சாலைகள் :
கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள்.
17.
(i) சர்க்கரை தொழிற்சாலை
(ii) சிமெண்ட் தொழிற்சாலை
(iii) உரத் தொழிற்சாலை
(iv) உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை
(v) காகிதம் உற்பத்தித் தொழிற்சாலை
(vi) பருத்தி தொழிற்சாலைகள்
(vii) உணவு உற்பத்தி தொழிற்சாலைகள்
(viii) நெசவுத் தொழிற்சாலை
(ix) மரச்சாமான்கள் உற்பத்தி தொழிற்சாலைகள்
(x) மின்னணுப் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை
(xi) இரும்பு தொழிற்சாலைகள்:
(xii) இரயில்பெட்டி உற்பத்தி தொழிற்சாலை
18.
(i) வளங்கள் குறைந்து கொண்டு வருவதற்கான காரணங்களை அறிதல்.
(ii) வீராக்குதலையும், அதிகப்படியான பயன்பாட்டினையும் தடுத்தல்
(iii) மறுபயன்பாடுள்ள வளங்களை மறுசுழற்சி செய்தல்.
(iv) மாசைக் கட்டுப்படுத்துதல்.
(v) சற்றுச் கழலைப்பாதுகாத்தல்
(vi) இயற்கைத் தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல்
(vii) மாற்று வளங்களைப் பயன்படுத்துதல்.
19.
(i) வளங்கள் மனிதனின் பேராசைக்கு அன்று, அவனது தேவைக்கு மட்டுமே என்று மகாத்மாகாந்தி அவர்கள் கூறுகிறார். (ii) உலகில் வளங்கள் குறைவதற்கு மனித இனமே காரணம் எனவும் கூறுகிறார்.
20.
நான் அசோகரப் போல் ஒரு அரசராக இருந்தால் மருத்துவமனைகளை அமைத்து ஏழைகளுக்கு இலவச மருத்துவம் அளிப்பேன். கால்நடைகள், விலங்குகளுக்கு தனி மருத்துவமனை அமைப்பேன். பின்தங்கிய மக்களுக்கு இலவச உணவு, உடை வழங்குவேன். ஆதரவற்றவர்களுக்கும், முதியவர்களுக்கும் காப்பகம் அமைப்பேன். கால்வாய்கள், கண்மாய்களைச் சீர்திருத்தி விவசாயத்திற்கு உதவி செய்வேன்.
21.
கலிங்க போரின் பயங்கரத்தைக் கண்ட அசோகர் மன வருத்தம் அடைந்தார். அவரிடம் மனமாற்றம் ஏற்பட்டு, இனி போர் புரிவதில்லை என உறுதியெடுத்துக்குக் கொண்டார். சந்த அசோகர் என்றும் தீய அசோகர் நீதிமான் அசோகராக மாறினார். அசோகர் பௌத்தராக மாறி தர்மத்தின் கொள்கையைப் பரப்பினார்.
22.
(i) உயிர்களைக் கொல்லாமை
(ii) எந்த சூழ்நிலையிலும் திருபாமை
(iii) தவறான இச்சையின்மை.
(iv) நல்ல வாழ்க்கை
(v) நல்ல பேச்சு மற்றும் கருத்துக்கள்
(vi) நல்ல நம்பிக்கை
(vii) நல்ல முயற்சி.
(viii) நல்லறிவு.
(ix) பேராசையின்மை
(x) சினமின்மை.
23.
புத்தரின் நான்கு பேருண்மைகள்
1. வாழ்க்கை துன்பங்கள், துயரங்கள், நிறைத்தது.
2. ஆசையே துன்பங்களுக்கான காரணம்.
3. ஆசையைத் துறந்துவிட்டால் துன்ப துயரங்களைப் போக்கி விடலாம்.
4. சரியான பாதையைப் பின்பற்றாமல் (எண்வகை வழிகள்) ஆசைகளை வென்றுவிடலாம்.
24.
| குருகுலக் கல்வி முறை | நவீன கல்விமுறை |
|
மாணவர்கள் குருவுடன் தங்கியிருந்து, அவருக்கு சேவை செய்து கல்வி சுற்று அறிவை வளர்த்தனர் |
மாணவர்கள் வீட்டிலிருந்து பள்ளிக் கூடங்களுக்குச் சென்று ஆசிரியர் உதவியுடன் கல்வி கற்று அறிவை வளர்க்கின்றனர். |
|
வாய்மொழி வாயிலாக பாடங்களை மனப்பாடம் செய்து கற்றனர். |
மாணவர்கள் புத்தகங்கள் மூலம் பாடங்களை செயல்வழிக் கற்றல் முறைப்படி கல்வி கற்கின்றனர் |
|
வேதங்கள் புராணங்கள் போன்ற பாடங்கள் முக்கியமான பாடங்களாகக் கற்றுக் கொடுக்கப்பட்டன |
அறிவியல், கணிதம், கணினி மற்றும் மொழி சார்ந்த கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. |
|
ஒழுக்கமான வாழ்க்கையை மேற்கொள்வதற்கான பயிற்சி வழங்கப்பட்டது. |
வேலைவாய்ப்பை முதன்மைப்படுத்தி பயிற்சிகள் வழங்கப்படுகிறது. |
|
இருபிறப்பாளர்களுக்கு மட்டுமே கல்வி அளிக்கப் பட்டது. பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது |
அனைவருக்கும் தரமான ஒரேவிதமான கல்வி வழங்கப்படுகிறது. |
25.
தொல்லியல் ஆய்மிடம் கொடுமணல் :
(i) பதிற்றுப்பத்து என்னும் சங்ககால இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள கொடுமணல் என்ற ஊர் இதுவென அடையாளப் படுத்தப்படுகிறது.
(ii) இங்கு தமிழ்பிராமி எழுத்துகளைக்கொண்ட முன்னூற்றுக்கும் அதிகமான மண்பாண்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
(iii) மேலும், நூல் சுற்றிவைக்கப்பயன்படும் சுழல் அச்சுகள், சுருள்கள். துணிகளின் சிறிய நுண்டுகள். கருவிகள், ஆயுதங்கள். அணிகலன்கள். மணிகள் முக்கியமாக சிவப்புநிற மணிக்கற்கள் ஆகியவற்றையும் தொல்லியல் ஆய்வு அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.
(iv) புதைஞழி மேட்டிற்கு அருகே காணப்பட்ட நினைவுகள் பெருங்கற்காலத்தைச் சேர்ந்தது என்று கணிக்கப்பட்டுள்ளது.
26.
(i) கல்வி கற்பதற்கான இடத்தினை பள்ளி என்றழைக்கிறோம்
(ii) இப்பள்ளிகள் காஞ்சி நகரில் தான் முதன் முதலில் ஏராளமாக அமைக்கப்பட்டன
(iii) சமணர் அமைத்த பள்ளிகளில் சமண மாணவர்களும், புத்த விகாரங்களில் புத்த மாணவர்களும் பயின்றனர்
(iv) நாளந்தப் பல்கலைக் கழகத்தில் பயின்ற சீன வரலாற்ற்றாசிரியர் யுவான் சுவாங் கூடுதல் படிப்புக்காக காஞ்சியிலிருந்த கடிகைக்கு வந்திருக்கிறார்
(v) ''நகரங்களில் சிறந்தது காஞ்சி '' என்று கவிஞர் காளிதாசர் கூறுகிறார்
(vi) ''கல்வியில் கரையிலாத காஞ்சி'' என்று நாயன்மார்களுள் முதன்மையானவரான திருநாவுக்கரசர் காஞ்சி நகரைப் புகழ்ந்துள்ளார்.
(vii) மேலே கூறியுள்ளவற்றிலிருந்து காஞ்சிபுரம் கல்வியில் தலைசிறந்து விளங்கிய தென்பதை நிரூபிக்கலாம்
27.
(i) பூம்புகார் துறைமுகத்தில் சீரும், சிறப்புமாக நடந்த வணிகம் குறித்து சங்க இலக்கிய நூலான பட்டினப் பாலையிலிருந்தும், இரட்டை காப்பிய நூல்களான சிலப்பதிகாரம், மணிமேகலையிலிருந்தும் அறிந்து கொள்ளலாம்
(ii) இங்கு வணிகம் செய்ய கிரேக்கம், நேரம் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்த்த வணிகர்கள் வந்த வண்ணம் இருந்துள்ளனர்.
(iii) கடல் வழியாகக் குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டன.
(iv) கருமிளகு தரைவழித் தடங்கள் வழியே இறக்குமதி செய்யப்பட்டது
(v) வடமலையிலிருந்து தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது
(vi) மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து சந்தனமும் , தென்கடல் பகுதியிலிருந்து முத்தும், கிழக்குப் பகுதியிலிருந்து பவளமும், ஈழத்தில் இருந்து உணவுப் பொருள்களும் இறக்குமதி ஆயின
28.
(i) இந்தியாவில் நில அமைப்பு. காலநிலை, இயற்கைத் தாவரம் மற்றும் மண் வகைகளில் வேறுபாடுகள் காணப்படுகின்றன.
(ii) மேலும் மொழி, இனம், மதம், சாதி, கலாச்சாரம் ஆகியவற்றிலும் இடத்திற்கு இடம் வேறுபாடுகள்
காணப்படுகின்றன.
(iii) நம்முடைய கலாச்சாரங்கள், கலை மற்றும் கட்டிடக்கலைகள், விழாக்கள் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களிலும் பல்வேறு வேறுபாடுகள் காணப்படுகிறது.
(iv) ஆனாலும் இந்திய மக்கள் யாவரும் பல்வேறு வேறுபாடுகளை உடையவர்களாக இருந்தாலும் தங்களை முதலில் இந்தியர்கள் என்று கூறுவதில் பெருமிதம் அடைகிறார்கள்.
(v) இத்தகைய உணர்வு எல்லா வேற்றுமைகளையும் களைந்து ஒற்றுமையுடன் வாழ வழி செய்கின்றது. இந்த சிறப்பம்சமே இந்தியா "வேற்றுமையில் ஒற்றுமை" காணும் நாடு என அழைக்கப்பட காரணமாகிறது.
29.
மொழிசார் பன்ழகத்தன்மை:
(i) இந்தியாவின் 2001ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியா 122 முக்கிய மொழிகளையும், 1599 பிற மொழிகளையும் கொண்டுள்ளது.
(ii) இந்தோ-ஆரியன், திராவிடன், ஆஸ்ட்ரோ ஆஸ்டிக், சீன திபெத்தியன் ஆகிய நான்கும் முக்கிய மொழி குடும்பமாகும்.
(iii) தமிழ் மொழியானது பழமையான திராவிட மொழி ஆகும்.
(iv) இந்தியாவில் ஆங்கிலம் ஒரு முக்கிய மொழியாக ஆங்கிலம் பள்ளிகள், கல்லூரிகளில் பயிற்று மொழியாகவும், அலுவலக மொழியாகவும் மற்றும் அன்றாட வாழ்விலும் ஆங்கிலம் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.
பன்பாட்டு பன்முகத்தன்மை :
(i) பண்பாடு என்ற சொல்லானது, மக்களின் மொழி. உடை, உணவு முறை, மதம், சமூகப் பழக்க வழக்கங்கள். இசை, கலை மற்றும் கட்டிடக்கலைகளின் பாரம்பரியத்தை குறிக்கிறது.
(ii) ஒரு குறிப்பிட்ட மக்களின் பண்பாடு அவர்களின் சமூக நடத்தையிலும் மற்றும் சமூக தொடர்புகளிலும் வெளிப்படுகிறது.
(iii) கலை மற்றும் கட்டிடக்கலை என்பது ஒவ்வொரு சமுதாயத்தின் ஒருங்கிணைந்த அங்கம் ஆகும்.
(iv) இந்தியாவில் 29 மாநிலங்களும், 7 யூனியன் பிரதேசங்களும் உள்ளன. ஒவ்வொரு மாநிலமும் அவற்றிற்கான உயர்ந்த மரபு மற்றும் நுண்ணிய கலை வெளிப்பாட்டு வடிவங்களை பெற்றிருக்கின்றன.
30.
சமத்துவமின்மை மற்றும் பாகுபாட்டை நீக்குவதற்கான தீர்வுகள்:
(i) அனைருக்கும் தரமான உடல்நலம் மற்றும் கல்வியினை கிடைக்கச் செய்தல்,
(ii) தற்போதைய பாலின் பாரபட்சத்தைப் பற்றி தெரிந்து கொள்ளுதல்
(iii) பாலின ஏற்றத் தாழ்வுகளை அகற்றுவதற்காக பொது வாழ்வில் மற்றும் நிறுவனத்தில் பெண்களின் திறன்களை வெளிப்படுத்துதல்.
(iv) மற்ற மதங்களை பற்றி தெரிந்து கொள்ளும் வெளிப்படையான மனநிலை வார்ந்தல்.
(v) வகுப்பறையில் குழுவாக சாப்பிடுவதை ஊக்குவித்தல் மூலம் சாதி, மதம், பாலினம் ஆகியவற்றின் எந்த வித பாரபட்சமின்றி: மாணவர்களை ஒன்றாக இணைக்கச் செய்தல்.
(vi) பலதரப்பட்ட மக்களிடம் பேசுதல்.
(vii) சட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்துதல்.
31.
(i) சமூக மயமாக்கல்
(ii) நர்ணயிக்கப்பட்ட நடத்தை
(iii) பொருளாதார பயன்கள்
(iv) சர்வாதிகார ஆளுமை,
(v) இமையக் கொள்கை
(vi) கட்டுப்பான குழு அமைப்பு
(vii) முரண்பாடுகள்.
32.
(i) புவியின் மேற்பரப்பில் சுமார் 70% நீரம்பிக் காணப்படுவது பெருங்கடல்கள் ஆகும்.
(ii) புவியின் மிகப்பெரிய பல்லுயிர் பெருக்கம் மேலும் 50% மேல் முதல்துறை பொருட்கள் கிடைக்கும் இடமாகும் விளங்குகிறது.
(iii) வளிமண்டலத்தில் உள்ள கார்பனின் அளவைக் கட்டுப்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கிறது.
(iv) வானிலை மற்றும் காலநிலையை ஒழுங்குபடுத்துகிறது.
(v) கடல்வழி வாணிபத்திற்கு மிகவும் முக்கிய பங்காற்றுகிறது.
(vi) பெருங்கடல் நீரோட்டங்கள் கடலோரக் காலநிலையை கட்டுப்படுத்துவதில் பெரும்பங்காற்றுகின்றன.
33.
நிலத்தோற்றத்தின் வகைகள் :
முதல் நிலை ;
கண்டங்கள் - மிகப்பெரும் நிலப்பரப்பு ஆகும்.
பெருங்கடல்கள் - பெரும் நீர்ப்பரப்பு ஆகும்.
இரண்டாம் நிலை :
(i) மலைகள் - சுற்றுப் புற நிலப் பகுதியை விட 600 மீக்கு மேல் உயர்ந்து காணப்படும் நிலத்தோற்றம் மலைகளாகும்
(ii) பீப்பூமிகள் - சமமான மேற்பரப்பைக் கொண்ட உயர்த்தப்பட்ட நிலப்பரப்பு பீடபூமி ஆகும்.
(iii) சமவெளிகள் - சமமான மற்றும் தாழ்நிலத் தோற்றம் சமவெளி ஆகும்.
மூன்றாம் நிலை :
(i) ஆறுகள், பனியாறுகள், காற்று மற்றும் கடல் அலைகள் போன்றவற்றின் முக்கியச் செயல்கள் அரித்தல் மற்றும் படியவைத்தல் ஆகும்.
(ii) இச்செயல்களால் மலைகள், பீடபூமிகள் மற்றும் சமவெளிகளில் தோற்றுவிக்கப்படும் நிலத்தோற்றங்கள் மூன்றாம் நிலை நிலத்தோற்றங்கள் ஆகும்.
34.
|
உட்புறக் கோள்கள் |
வெளிப்புறக் கோள்கள் |
|
சூரியனுக்கு அருகிலுள்ள நான்கு கோள்களான • சூரியக் புதன், புவி, வெள்ளி மற்றும் செவ்வாய் 'உட்புறக் | கோள்கள்' அல்லது 'புவிநிகர் கோள்கள்' என்று அழைக்கப்படுகின்றன. |
சூரிய குடும்பத்திலுள்ள கடைசி நான்கு கோள்களான வியாழன், சனி, யுனேரஸ் மற்றும் நெப்டியூன் ஆகியன வெளிப்புறக்கோள்கள்' அல்லது 'வியாழன் நிகர் கோள்கள்' என்று அழைக்கப்படுகின்றன. |
|
பாறைகளால் ஆன இக்கோள்கள் அளவில் சிறியன. |
இக்கோள்கள் வாயுக்களால் நிரம்பிக் காணப்படுவதால் 'வளிமக் கோள்கள்' எனவும் அழைக்கப்படுகின்றன. |
|
இக்கோள்களின் மேற்பரப்பில் மலைகள், எரிமலைகள் மற்றும் தரைக்குழிவுப் பள்ளங்கள் |
செவ்வாய், வியாழன் கோள்களுக்கு இடையே 'சிறு கோள் மண்டலம்' காணப்படுகிறது. |
35.
இறையாண்மை
(i) அரசமைப்புச் சட்டம் இந்திய மக்களுக்கு முழு அதிகாரத்தை வழங்கியுள்ளது.
(ii) நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
(iii) அவர்களிடம் நிறைவேற்று அதிகாரம் இருக்கிறது.
(iv) இப்படியாக ஒரு நாட்டின் உச்சநிலை அதிகாரத்தையே இறையாண்மை என்கிறோம்.
36.
ஒவ்வொரு குடிமகனுக்கும் மிகத்தேவையான உரிமைகளே அடிப்படை உரிமைகள் என்று அழைக்கப்படுகின்றன.
37.
யானை,
குதிரை,
காளை,
சிங்கம்
38.
(i) மேல்பகுதியில் நான்கு உருவங்கள் ஒன்றுக்கொன்று பின்பக்கமாக பொருந்தியாமாறு உள்ளது.
(ii) அடிப்பகுதியில் யானை, குதிரை, காளை, சிங்கம் ஆகிய உருவங்களும், அவற்றிற்கு இடையே தாமசக்கரமும் அமைந்துள்ளது.
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards