6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 26/11/2019
கணிதம்
6ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
ஒரு விற்பனை நிலையம் ஒரு டசன் பேனாக்களை ரூ.216 க்கு வாங்கியது.மேலும் சில்லறை செலவாக ரூ.50 செலவு செய்தது. பின்பு ஒரு பேனாவிற்கு ரூ.2 குறைத்து விற்பனை செய்ததில் இலாபம் ரூ.50 கிடைத்தது எனில் அவருடைய இலாபம் அல்லது நட்டம் காண்க.
2.
ஒருவர் 400 மீட்டர் நீளமுள்ள துணியை ரூ.60,000க்கு வோங்கி, ஒரு மீட்டர் ரூ.400 வீதம் விற்பனை செய்தார் எனில் அவருடைய இலாபம் அல்லது நட்டம் காண்க.
3.
ஒருவர் ஒரு நாற்காலியை ரூ.1500 க்கு வாங்கினார். தள்ளுபடி ரூ.100 அளித்த பின் ரூ.250 இலாபம் பெறுமாறு விற்பனை செய்ய விரும்பினார் எனில் நாற்காலியின் குறித்த விலை எவ்வளவு ?
4.
2020 ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசு தினத்திற்கும், கல்வி வளர்ச்சி நாளுக்கும் இடையில் உள்ள நாள்களைக் கணக்கிடுக.
5.
சென்னை எழும்பூரிலிருந்து மதுரை வரைச் செல்லும் வைகை அதிவிரைவு தொடர்வண்டி (எண் 12635)-இன் புறப்படும் நேரம் மற்றும் வந்து சேரும் நேரம் கொடுக்கப்பட்டுள்ளன. கீழ்க்கண்ட தகவல்களைப் படித்துப் பதிலளிக்கவும்.
| நிலையம் | வந்து சேரும் நேரம் | புறப்படும் நேரம் |
| சென்னை எழும்பூர் | - | 13:40 |
| தாம்பரம் | 14:08 | 14:10 |
| செங்கல்பட்டு | 14:38 | 14:40 |
| விழுப்புரம் | 15:50 | 15:55 |
| விருத்தாசலம் | 16:28 | 16:30 |
| அரியலூர் | 17 :04 | 17 :05 |
| திருச்சி | 18:30 | 18:35 |
| திண்டுக்கல் | 20:03 | 20:05 |
| சோழவந்தான் | 20:34 | 20:35 |
| மதுரை | 21:20 | - |
i) வைகை அதிவிரைவு வண்டி எத்தனை மணிக்குச் சென்னையிலிருந்து புறப்பட்டு மதுரைக்கு வந்து சேருகிறது ?
ii) சென்னை மற்றும் மதுரைக்கு இடையில் எத்தனை நிறுத்தங்கள் உள்ளன ?
iii) விழுப்புரம் நிலையத்தில் எவ்வளவு நேரம் நிற்கிறது ?
iv) சோழவந்தனுக்கு வந்து சேரும் நேரம் என்ன ?
v) சென்னை எழும்பூரில் இருந்து மதுரை வந்து சேர ஆகும் மொத்த பயண நேரத்தைக் காண்க.
6.
தமிழகத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 998 மி.மீ இதனைச் சென்டி மீட்டரில் மாற்றுக.
7.
1 இலிருந்து 9 வரையிலான அனைத்து எண்களாலும் வகுபடும் மிகச்சிறிய எண்ணைக் காண்க.
8.
n = 2 முதல் 8 வரை உள்ள எந்த எண்களுக்கு, 2n - 1 ஆனது, ஒரு பகா எண் ஆகும்?
9.
பின்வருவனவற்றில் எது சரியான கூற்று? ஏன்?
அ) ஒவ்வொரு சமபக்க முக்கோணமும் ஒர் இருசமபக்க முக்கோணம் ஆகும்.
ஆ) ஒவ்வொரு இருசமபக்க முக்கோணமும் ஒரு சமபக்க முக்கோணம் ஆகும்.
10.
கோணங்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட முக்கோணங்களைக் குறுங்கோண அல்லது செங்கோண அல்லது விரிகோண முக்கோணம் என வகைப்படுத்துக.
11.
பக்கங்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட முக்கோணங்களை அசமபக்க அல்லது இருசமபக்க அல்லது சமபக்க முக்கோணம் என வகைப்படுத்துக.
12.
42 மற்றும் 100 ஆகிய எண்களை அடுத்தடுத்த இரு பகா எண்களின் கூடுதலாக எழுதுக.
13.
ஒரு செங்கோண முக்கோணத்தில் இரு பக்கங்கள் சமம் எனில் அது _______
14.
250 மி.லி + 1/2 லி = ______ லி
15.
26, 39 மற்றும் 52 ஆகிய எண்களின் மீ.சி.ம ______ ஆகும்
16.
3 மற்றும் 9 ஆகிய எண்களின் மீ.சி.ம 9 எனில், அவற்றில் மீ.பெ.கா _______ ஆகும்.
17.
இரு சமபக்க முக்கோணத்தில்_____________ கோணங்கள் சமம்.
18.
04.15
19.
11.50
20.
மூன்று பக்கங்களும் சமம்
21.
எவையேனும் இரு பக்கங்கள் சமம்
22.
ஏதேனும் ஒரு கோணம் செங்கோணம்
23.
காயத்ரி 1 கி.கி எடையுள்ள பிறந்தநாள் கேக்கை வாங்கினாள்.அந்தக் கேக்கில் 450 கி தன் நண்பர்களுக்கு பகிர்ந்தளிக்கிறாள் எனில் மீதம் உள்ள கேக்கின் எடை 650 கி.
24.
கார்குழலியின் பையின் எடை 1 கி.கி 250 கி, பூங்கொடியின் பையின் எடை 2 கி.கி 750 கி. அந்தப் பைகளின் ,மொத்த எடை 4 கி.கி.
25.
மீனா 250 மி.லி மோர் வாங்கினாள். அது 2.50 லி-க்குச் சமம்.
26.
இரு சார்பகா எண்களின் மீ.சி.ம, அவ்வெண்களின் கூடுதலுக்குச் சமம்.
27.
எந்த எண்ணிக்கையிலான ஒற்றை எண்களைக் கூட்டினாலும் ஓர் இரட்டை எண் கிடைக்கும்.
28.
தள்ளுபடி = குறித்த விலை-_______________.
இலாபம்
விற்பனை விலை
நட்டம்
அடக்க விலை
29.
இலாபமும் இல்லை, நட்டமும் இல்லை எனில்
அடக்க விலை = விற்பனை விலை
அடக்க விலை > விற்பனை விலை
அடக்க விலை < விற்பனை விலை
குறித்த விலை = தள்ளுபடி
30.
'கூடுதல் செலவுகள்' எப்போதும் __________ல் அடங்கியுள்ளது.
விற்பனை விலை
அடக்க விலை
இலாபம்
நட்டம்
31.
2 1/2 ஆண்டுகள் என்பது ________ மாதங்கள்
25
30
24
5
32.
2 நாள்கள் = ________ மணி
38
48
28
40
33.
ஒரு தோட்டத்தில் ஒவ்வொரு நாளும் 150 லி தண்ணீர் தெளிக்கப்படுகிறது எனில் ஒரு வாரத்த்தில் தெளிக்கப்பட்ட தண்ணீரின் அளவு
700 லி
1000 லி
950 லி
1050 லி
34.
பின்வரும் இணைகளில், எவை சார்பகா எண்கள் ஆகும் ?
51, 63
52, 91
71, 81
81, 99
35.
பின்வருவனவற்றில் பொருத்தமில்லாதது எது ?
இருசமபக்க விரிகோண முக்கோணம்
இருசமபக்கக் குறுங்கோண முக்கோணம்
சமபக்க விரிகோண முக்கோணம்
சமபக்கக் குறுங்கோண முக்கோணம்
36.
சமபக்க முக்கோணம் ஆனது ஒரு ______________ ஆகும்.
விரிகோண முக்கோணம்
செங்கோண முக்கோணம்
குறுங்கோண முக்கோணம்
அசமபக்க முக்கோணம்
37.
இரு அடுத்தடுத்த ஒற்றை எண்களின் வேறுபாடு
1
2
3
0
38.
பின்வரும் அட்டவணையில் பொருத்தமானவற்றைக் கொண்டு நிரப்புக.
| வ.எண் | அடக்க விலை (ரூ.இல்) |
குறித்த விலை (ரூ.இல்) |
விற்பனை விலை (ரூ.இல்) | தள்ளுபடி (ரூ.இல்) |
இலாபம் (ரூ.இல்) |
நட்டம் (ரூ.இல்) |
| i | 110 | 130 | இல்லை | |||
| ii | 110 | 130 | 10 | |||
| iii | 110 | 130 | 30 | |||
| iv | 100 | 120 | இல்லை | 10 | ||
| v | 120 | 10 | 20 | இல்லை |
39.
a இன் 6 மடங்கிலிருந்து 7 குறைவு. இதனை மரவுரு வரைபடமாக மாற்றுக.
40.
கீதா 2 லி 250 மி.லி கொள்ளவு கொண்ட தண்ணீர்க் குடுவையைக் கொண்டு வந்தாள். அதிலிருந்து அவளுடைய நண்பர்கள் 300 மி.லி தண்ணீர் குடித்து விட்டனர். குடுவையில் உள்ள மீதித் தண்ணீரின் அளவு எவ்வளவு ?
41.
7.8 செ.மீ அளவில் ஒரு கோட்டுத்துண்டு வரைக. கோட்டுத்துண்டிற்கு மேலே 5 செ.மீ தூரத்தில் B என்ற புள்ளியைக் குறிக்க. B வழியே கோட்டுத்துண்டிற்கு இணைகொடு வரைக.
42.
வகுத்தல் முறையில் 40 மற்றும் 56 ஆகிய எண்களுக்கு மீ.பெ.கா. காண்க.
43.
கோயம்பத்தூரிலுள்ள ஆவின் விற்பனை நிலையத்தில் 25.06.2018 அன்று வாங்கப்பட்ட பின்வரும் பொருள்களுக்கு 160 எண்ணுள்ள பட்டியல் தயார் செய்க.
(i) ஒன்று ரூ.40 விதம் 100 கி பால்கோவா பாக்கெட்டுகள் 5
(ii) ஒன்று ரூ.8 விதம் மோர் பாக்கெட்டுகள் 5
(iii) ஒன்று ரூ.25 விதம் 500 மி.லி பால் பாக்கெட்டுகள் 6
(iv) ஒன்று ரூ.40 விதம் 100 கி நெய் பாக்கெட்டுகள் 5
44.
10 ஐ விடையாகத் தரக்கூடிய எண்கோவையை எழுதுக. அதனை மரவுரு வரைபடமாக மாற்றுக.
45.
18,24 மற்றும் 30 ஆகிய எண்களின் மீ.பெ.கா.காண்க.
1.
12 பேனாக்களின் அடக்க விலை = ரூ.216
சில்லறை செலவு = ரூ.58
மொத்த அடக்க விலை = ரூ. 216 + ரூ 58
= ரூ 274
தள்ளுபடி = 2 x ரூ 12 = ரூ 24
குறித்த விலை = அடக்க விலை + தள்ளுபடி + இலாபம்
= ரூ 274 + ரூ 24 + ரூ 52 = ரூ 348
ஒரு பேனாவின் குறித்த விலை = \(\frac{ 348}{12}\)= ரூ 29.
ஒரு பேனாவின் குறித்த விலை = ரூ 29.
2.
400 மீ துணியின் அடக்க விலை = ரூ.60,000
1 மீ துணியின் விற்பனை விலை = ரூ.400
400 மீ துணியின் விற்பனை விலை = ரூ.400 x 400
= ரூ.1,60,000
இலாபம் = விற்பனை விலை - அடக்க விலை
= ரூ.1,60,000 - ரூ.60,000
= ரூ.1,00,000
இலாபம் = ரூ 1,00,000
3.
நாற்காலியின் அடக்க விலை = ரூ.1500
தள்ளுபடி = ரூ.100
இலாபம் = ரூ.250
குறித்த விலை = அடக்க விலை + தள்ளுபடி + இலாபம்
= ரூ 1500 + ரூ 100 + ரூ 250
= ரூ 1850
நாற்காலியின் குறித்த விலை = ரூ 1850
4.
குடியரசு தினம் = ஜனவரி 26
கல்வி வளர்ச்சி நாள் = ஜுலை 5
| மாதங்கள் | நாட்கள் |
| ஜனவரி (31 - 25) | 6(31 - 25) |
| பிப்ரவரி | 29 (2020 லீப் ஆண்டு) |
| மார்ச் | 31 |
| ஏப்ரல் | 30 |
| மே | 31 |
| ஜுன் | 30 |
| ஜுலை | 15 |
| மொத்த நாட்கள் | 172 |
இந்திய குடியரசு தினத்திற்கும் கல்வி வளர்ச்சி நாளுக்கும் இடையில் உள்ள நாள்கள் = 172.
5.
(i) சென்னையிலிருந்து தொடர்வண்டி புறப்படும் நேரம் = 13.40 மணி
மதுரைக்கு தொடர்வண்டி வந்து சேரும் நேரம் = 21.20 மணி
(ii) சென்னை மற்றும் மதுரைக்கு இடையில் 8 நிறுத்தங்கள் உள்ளன.
(iii) விழுப்புரம் நிலையத்தில் தொடர்வண்டி 5 நிமிடங்கள் நிற்கிறது.
(iv) தொடர்வண்டி சோழவந்தானுக்கு வந்து சேரும் நேரம் 20.34 மணி
(v) மதுரைக்கு வந்து சேரும் நேரம் = 21.20 மணி
சென்னையிலிருந்து புறப்படும் நேரம் = 13.40 மணி
மொத்த பயண நேரம் = 07.40 மணி
6.
தமிழகத்தின் ஆண்டு சராசரி மழை அளவு = 998 மி.மீ

7.
1 முதல் 9 வரையிலான எண்களின் மீ.சி.ம

மீ.சி.ம = 2 x 2 x 2 x 3 x 3 x 5 x 7 = 2520
1 லிருந்து 9 வரையிலான அனைத்து எண்களாலும் வகுபடும் மிகச் சிறிய எண் = 2520.
8.
n = 2, 3, 4, 5, 6, 7, 8
n = 2, எனில்
2n -1 = (2 x 2) - 1 = 4 - 1 = 3, பாக எண்
n = 3, எனில்
2n -1 = (2 x 3) - 1 = 6 - 1 = 5, பாக எண்
n = 4, எனில்
2n -1 = (2 x 4) - 1 = 8 - 1 = 7, பாக எண்
n = 5, எனில்
2n -1 = (2 x 5) - 1 = 10 - 1 = 9 பாக எண் அல்ல
n = 6, எனில்
2n -1 = (2 x 6) - 1 = 12 - 1 = 11 பாக எண்
n = 7, எனில்
2n -1 = (2 x 7) - 1 = 14 - 1 = 13 பாக எண்
n = 8,
2n -1 = (2 x 8) - 1 = 16 - 1 = 15 பகு எண் அல்ல
n = 2, 3, 4, 6 , 7 ஆகிய எண்களுக்கு
2n -1 பகா எண்.
9.
"அ" கூற்று சரியானது,
''ஒவ்வொரு சமபக்க முக்கோணமும் ஓர் இருசமபக்க முக்கோணமாகும்'' என்ற கூற்று சரி. ஏனெனில் இருசமபக்க முக்கோணத்தில் மூன்று பக்கங்கள் சமமாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
10.
i) குறுங்கோண முக்கோணம்
ii) செங்கோண முக்கோணம்
iii) விரிகோண முக்கோணம்
iv) குறுங்கோண முக்கோணம்
11.
i) சமபக்க முக்கோணம்
ii) அசமபக்க முக்கோணம்
iii) இருசமபக்க முக்கோணம்
iv) அசமபக்க முக்கோணம்
12.
42 = 19 + 23
100 = 47 + 53
13.
( )
இருசமபக்க செங்கோண முக்கோணம்
14.
( )
3/4 லி
15.
( )
156
16.
( )
3
17.
( )
இரண்டு
18.
4 மணி கடந்து 15 நிமிடங்கள்
19.
12 மணிக்கு 10 நிமிடங்கள்
20.
சமபக்க முக்கோணம்
21.
இரு சமபக்க முக்கோணம்
22.
செங்கோண முக்கோணம்
23.
(b)
24.
(a)
25.
(b)
26.
(b)
27.
(b)
28.
(b)
விற்பனை விலை
29.
(a)
அடக்க விலை = விற்பனை விலை
30.
(b)
அடக்க விலை
31.
(b)
30
32.
(b)
48
33.
(d)
1050 லி
34.
(c)
71, 81
35.
(c)
சமபக்க விரிகோண முக்கோணம்
36.
(c)
குறுங்கோண முக்கோணம்
37.
(b)
2
38.
i) விற்பனை விலை = ரூ 130, இலாபம் = ரூ 20
ii) விற்பனை விலை = ரூ 120, இலாபம் = ரூ 10
iii) விற்பனை விலை = ரூ 100, இலாபம் = ரூ 10
iv) விற்பனை விலை = ரூ 90, தள்ளுபடி = ரூ 30
v) விற்பனை விலை = ரூ 90, விற்பனை விலை = ரூ 110
39.
இயற்கணிதக் கோவை 6a − 7
40.

41.

படி 1: xy = 7.8 செ.மீ அளவுள்ள ஒரு கோட்டுத்துண்டு வரைக. கோட்டின் மேல் A என்ற புள்ளியைக் குறிக்க.
படி 2 : XY க்கு மேல் முலைமட்டத்தைப் பொருத்துக. XY க்கு மேலே 5 செ.மீ தூரத்தில் B என்ற புள்ளியைக் குறிக்க.
படி 3 : அளவுகோல் மற்றும் முலைமட்டத்தைப் பயன்படுத்தி B வழியாக BC என்ற கோடு வரைக.
படி 4 : BC ஆனது XY க்கு இணைகோடாகும். அதாவது BC || XY.
42.


40 மற்றும் 56 ஆகிய எண்களின் பொதுக் காரணிகளின் பெருக்கற்பலன் = 2 x 2 x 2 = 8. ஆகவே, மீ.பெ.கா. (40, 56) = 8.
43.
1. பால்கோவா \(\Rightarrow \) 5 x ரூ.40 = ரூ.200
2. மோர் \(\Rightarrow \) 5 x ரூ. 8 = ரூ. 40
3. பால் \(\Rightarrow \) 6 x ரூ.25 = ரூ.150
4. நெய் \(\Rightarrow \) 5 x ரூ.40 = ரூ.200
________
மொத்தம் ரூ.590
________
| ரொக்கப் பட்டியல் ஆவின் விற்பனை நிலையம் , கோயம்பத்தூர் |
||||
| பட்டியல் எண்:160 நாள் : 25.06.2018 | ||||
| வ.எண் | பொருள்கள் | விலை(ரூ.இல்) | அளவு | தொகை(ரூ.இல்) |
| 1. 2. 3. 4. |
பால்கோவா மோர் பால் நெய் |
40 /பாக்கெட்டு 8/பாக்கெட்டு 25/பாக்கெட்டு 40 /பாக்கெட்டு |
5 5 6 5 |
200 40 150 200 |
| மொத்தம் | 590 | |||
44.
கொடுக்கப்பட்ட கணக்கிற்கு பல்வேறு வகைகளில் தீர்வு காணலாம்
10 ஐ விடையாகத் தரக்கூடிய எண் கோவைகள்
= 8 + 2 அல்லது 20 - 10 அல்லது 5 x 2 அல்லது 40 / 4 மேலும் பல.

45.

6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards