6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 10/10/2019
Term 3 முழுக்கள்
6ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
P, Q, R மற்றும் S ஆகியன ஓர் எண்கோட்டில் உள்ள நான்கு வெவ்வேறு முழுக்களைக் குறிக்கும். பின்வரும் குறிப்புகளைப் பயன்படுத்தி இந்த முழுக்களைக் கண்டு, அவற்றை ஏறுவரிசையில் எழுதவும்.
i) S ஆனது கொடுக்கப்பட்ட முழுக்களில் மிகச் சிறியதாகும்.
ii) R ஆனது மிகச்சிறிய மிகை முழு ஆகும்.
iii) முழுக்கள் P மற்றும் S ஆனது 0 இலிருந்து சம தூரத்தில் உள்ளன.
iv) Q ஆனது முழு R இன் இடதுபுறம் 2 அலகுகள் தொலைவில் உள்ளது.
2.
முழுக்கள் தொகுப்பில் மிகச்சிறிய எண் மற்றும் மிகப்பெரிய எண் உள்ளதா ? காரணம் கூறுக.
3.
பின்வரும் முழுக்களை இறங்கு வரிசையில் எழுதுக.
i) 14, 27, 15, −14, −9, 0, 11, −17
ii) −99, −120, 65, −46, 78, 400, −600
iii) 111, −222, 333, −444, 555, −666, 7777, −888
4.
-14 மற்றும் -11 ஐ ஒப்பிடுக.
5.
ஓர் எண்கோட்டில், 0 மற்றும் -8 ஆகிய எண்களின் முன்னி மற்றும் தொடரியைக் காண்க.
6.
பின்வரும் சூழல்களை முழுக்களாகக் குறிப்பிடுக.
1) ரூ.1000 இலாபம்
2) 0o இக்குக் கீழ் 20o C
3) கி.மு. (பொ.ஆ.மு) 1990
4) ரூ. 15,847 வைப்புத்தொகை
5) இயல்பான எடையை விட 10 கி.கி குறைவு
7.
ஓர் எண்கோட்டை வரைந்து, அதன் மீது 6,-5, -1, 4 மற்றும் -7 ஆகிய முழுக்களைக் குறிக்கவும்.
8.
கீழே உள்ள பட்டை வரைபடமானது, ஒரு சிறு வர்த்தக நிறுவனத்தின் 2011 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையிலான இலாபம் (+) மற்றும் நட்டத்தை (-) விளக்குகிறது.

i) 2014 ஆம் ஆண்டில் நிறுவனத்திற்கு இலாபம, நட்டமா என்பதைக் குறிக்கும் முழுவினை எழுதுக.
ii) 2016 ஆம் ஆண்டில் நிறுவனத்திற்கு இலாபம, நட்டமா என்பதைக் குறிக்கும் முழுவினை எழுதுக.
iii) 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டில் நிறுவனத்திற்கு ஏற்பட்ட நட்டத்தை முழுக்களால் எழுதுக.
iv) 2012 ஆம் ஆண்டில் நிறுவனத்தின் நட்டம் மிகக் குறைவாக உள்ளது. இக்கூற்று சரியா ? தவறா ?
v) நிரப்புக : 2011 ஆம் ஆண்டில் உள்ள நட்டமும், 2013 ஆம் ஆண்டில் உள்ள இலாபமும் _______.
9.
பின்வரும் குறிப்புகளைக் கொண்டு அட்டவணையை நிறைவு செய்க.
C1 : முதல் குறையற்ற முழு எண்.
C3 : இரண்டாம் குறை எண்ணின் எதிரெண்.
C5 : முழு எண்களின் கூட்டல் சமனி
C6 : C2 இல் உள்ள முழுவின் தொடரி.
C8 : C7 இல் உள்ள முழுவின் முன்னி.
C9 : C5 இல் உள்ள முழுவின் எதிரெண்.

10.
வீடு (0) என்பதனைத் தொடக்கப் புள்ளியாகக் கொண்டு, பின்வரும் இடங்களை எண்கோட்டில் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளின்படி குறித்து, அதற்குரிய முழுக்களை எழுதுக.

இடங்கள் : வீடு, பள்ளி, நூலகம், விளையாட்டுத் திடல், பூங்கா, பல்பொருள் அங்காடி, பேருந்து நிறுத்தம், தொடர்வண்டி நிலையம், அஞ்சலகம், மின்சார அலுவலகம்.
குறிப்புகள்:
i) பேருந்து நிறுத்தம், வீட்டிற்கு வலதுபுறம் 3 அலகுகள் தொலைவில் உள்ளது.
ii) நூலகம், வீட்டிற்கு இடதுபுறம் 2 அலகுகள் தொலைவில் உள்ளது.
iii) பல்பொருள் அங்காடி, வீட்டிலிருந்து இடதுபுறமாக 6 அலகுகள் தொலைவில் உள்ளது.
iv) அஞ்சலகம், நூலகத்தின் வலது புறம் ஓர் அலகு தொலைவில் உள்ளது.
v) பூங்கா, பல்பொருள் அங்காடிக்கு வலதுபுறம் 1 அலகு தொலைவில் உள்ளது.
vi) தொடர்வண்டி நிலையம், அஞ்சலகத்தின் இடதுபுறம் 3 அலகுகள் தொலைவில் உள்ளது.
vii) பேருந்து நிறுத்தம், தொடர்வண்டி நிலையத்திலிருந்து வலதுபுறம் 8 அலகுகள் தொலைவில் உள்ளது.
viii) பள்ளியானது, பேருந்து நிறுத்தத்தை அடுத்து வலதுபுறத்தில் உள்ளது.
ix) விளையாட்டுத் திடலும், நூலகமும் ஒன்றுக்கொன்று எதிரெதிரே உள்ளன.
x) மின்சார அலுவலகமும், பல்பொருள் அங்காடியும் வீட்டிலிருந்து சம தொலைவில் அமைந்துள்ளன.
11.
கீழேயுள்ள எண்கோட்டிலிருந்து, பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.

i) எது பெரிய முழு : G அல்லது K ? ஏன் ?
ii) C ஐக் குறிக்கும் முழு எது ?
iii) G மற்றும் H இக்கு இடையே எத்தனை முழுக்கள் உள்ளன ?
iv) எதிரெண் முழுக்களுடைய சோடி எழுத்துக்களைக் காண்க.
v) D இன் இடதுபுறம் 6 அலகுகளில் உள்ள எண் -6. சரியா ? தவறா ?
1.

ஏறுவரிசை : S < Q < 0 < R < P
2.
இல்லை, எண் கோட்டினை இருபுறம் முடிவின்றி விரிவாக்கம் செய்யலாம். எனவே மிகச்சிறிய எண்ணையும் மிகப் பெரிய எண்ணையும் காண இயலாது.
3.
i) இறங்கு வரிசை : 27, 15, 14, 11, 0, −9, −14, −17
ii) இறங்கு வரிசை : 400, 78, 65, −46, −99, −120, −600
iii) இறங்கு வரிசை : 777, 555, 333, 111, −222,−444, −666, −888
4.
எண்கோட்டை வரைந்து -14 மற்றும் -11 ஐக் குறிக்கவும். -11ஐ வைத்துப் பார்க்கும்போது நாம் அறிவது யாதெனில் -14 ஆனது -11 க்கு இடதுபுறமாக அமைகிறது ஆகவே, -14 ஆனது -11 ஐ விடக் குறைவாகும். அதாவது, -14 < -11.

5.
கொடுக்கப்பட்ட எண்களை எண்கோட்டின் மீது குறித்து, அவற்றின் முன்னும் பின்னும் 1 அலகு நகர்வதால் அந்த எண்களின் முன்னி மற்றும் தொடரியைப் பெறலாம்.

இங்கு, 0இன் தொடரி +1 எனவும், 0இன் முன்னி -1 எனவும் காண்கிறோம். மேலும்,-8 இன் தொடரி -7 எனவும் -8 இன் முன்னி -9 எனவும் கருதுகிறோம்.
6.
1) இலாபம் என்பது மிகையாதலால், ரூ. 1000 என்பதை ரூ.+1000 எனக் குறிப்பிடலாம்.
2) 0o C இக்குக் கீழ் 20o C என்பது -20o C எனக் குறிப்பிடலாம்.
3) கி.மு (பொ.ஆ.மு -பொது ஆண்டுக்குப் முன்) உள்ள ஓர் ஆண்டைக் குறை எண்ணாகவும், கி.பி (பொ.ஆ.பி பொது ஆண்டுக்குப் பின்) உள்ள ஓர் ஆண்டை மிகை எண்ணாகவும் கருதுகிறோம். ஆகவே கி.மு. (பொ.ஆ.மு) 1990 என்பதை -1990 எனக் குறிப்பிடலாம்.
4) ரூ. 15,847 வைப்புத்தொகை என்பது ரூ. +15,847 எனக் குறிப்பிடலாம்.
5) இயல்பான எடையை விட 10 கி.கி. குறைவு என்பதை -10கி.கி எனக் குறிப்பிடலாம்.
7.

8.
i) 2014 ஆம் ஆண்டில் இலாபம் + 45
ii) 2016 ஆம் ஆண்டில் நட்டம் 0
iii) 2011 ஆம் ஆண்டில் நட்டம் −10
2012 ஆம் ஆண்டில் நட்டம் − 20
iv) 2012 ஆம் ஆண்டில் நட்டம் மிகக் குறைவாக உள்ளது என்ற கூற்று தவறு
v) சமம்
9.

10.

i) பேருந்து நிறுத்தம் = 3 அலகுகள்
ii) நூலகம் = 2 அலகுகள்
iii) பல்பொருள் அங்காடி = 6 அலகுகள்
iv) அஞ்சலகம் = - 1 அலகுகள்
v) பூங்கா = - 5 அலகுகள்
vi) தொடர்வண்டி நிலையம் = -4 அலகுகள்
vii) பேருந்து நிறுத்தம் = 3 அலகுகள்
viii) பள்ளி = 4 அலகுகள்
ix) விளையாட்டு திடல் = 2 அலகுகள்
x) மின்சார அலுவலகம் = 6 அலகுகள்
11.
i) G யின் மதிப்பு = -3, K யின் மதிப்பு = -1 எண்கோட்டில் K என்ற எண் G க்கு வலதுபுறம் உள்ளது. எனவே G பெரியது.
ii) C ஐக் குறிக்கும் முழு -4.
iii) G க்கும் H க்கும் இடையில் 6 முழுக்கள் உள்ளன. அவை -2, -1, 0, 1, 2, 3
iv) எதிரெண் முழுக்களுடைய 2 சோடி எழுத்துக்கள் C, H மற்றும் E, J.
v) D இன் இடதுபுறம் 6 அலகுகளில் உள்ள எண் -6 என்பது தவறு. சரியான எண் 0.
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards