6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 24/10/2025
6ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test

1.
எந்த விலங்கு செவுள்கள் எனப்படும் சுவாச உறுப்பைப் பெற்றுள்ளது?
மண்புழு
தவளை
மீன்
குள்ளநரி
2.
பல்லிகள் எதன் மூலம் சுவாசிக்கின்றன?
தோல்
செவுள்கள்
நுரையீரல்
சுவாச நுண்குழல்
3.
பொருத்தமில்லாததைக் குறிப்பிடுக.
கணிப்பான்
அபாகஸ்
மின் அட்டை
மடிக்கணினி
4.
வேகத்தின் அலகு _______________
மீ
விநாடி
கிலோகிராம்
மீ/வி
5.
பாக்டீரியா, ஒரு சிறிய _________ நுண்ணுயிரி
புரோகேரியோட்டிக்
யூகேரியோட்டிக்
புரோட்டோசோவா
செல்களற்ற
6.
_______ என்பது பருப்பொருளால் ஆனதல்ல.
தங்க மோதிரம்
இரும்பு ஆணி
ஒளி
எண்ணெய்த் துளி
7.
கணினி, கணக்கீடுகளை மிகவும் விரைவாகச் செய்யும்.
8.
தாவரங்களின் மூன்று பாகங்கள் - வேர், தண்டு, இலைகள்
9.
அதிர்வு இயக்கமும், சுழற்சி இயக்கமும் கால ஒழுங்கு இயக்கமாகும்.
10.
பாரமீசியம் ஒரு பல செல் உயிரி.
11.
காற்று ஒரு தூய பொருளாகும்
12.
முழம் என்பது நீளத்தை அளவிடப் பயன்படுத்தப்படும் நம்பகமான முறை ஆகும்.
13.
குறியீட்டு எண்களைப் பயன்படுத்திக் கணக்கிடும் கருவி________
14.
தரவு என்பது ______ விவரங்கள் ஆகும்.
15.
மண்பாண்டம் செய்பவரின் சக்கரத்தின் இயக்கம் ________ இயக்கமாகும்.
16.
டைபாய்டு நோய்,_________ மற்றும் நீர் மாசுறுதலால் பரவுகிறது.
17.
'உப்புமா' வில் _______ முறையில் மிளகாயினை நீக்கலாம்.
18.
அமீபா _________ உதவியுடன் இடப்பெயர்ச்சி செய்கிறது.
19.
ஏதேனும் நான்கு உள்ளீட்டுக் கருவிகளைக் கூறுக.
20.
சுழற்சி இயக்கம், வளைவுப்பாதை இயக்கம் - வேறுபடுத்துக.
21.
விசை - வரையறு
22.
நுண்ணுயிரிகளின் முக்கியப் பண்புகள் யாவை?
23.
அளவீடு - வரையறு.
24.
அமீபாவின் இடப்பெயர்ச்சி உறுப்பு எது?
25.
பின்வரும் அலகினை ஏறு வரிசையில் எழுதுக.
1 மீட்டர், 1 சென்டி மீட்டர், 1 கிலோ மீட்டர் மற்றும் 1 மில்லிமீட்டர்.
26.
கோடை கால உறக்கம் என்றால் என்ன?
27.
கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பார்த்து அதில் பின்பற்றப்படும் பிரித்தல் முறையினை விவரிக்கவும்.

28.
பறவைகள் காற்றில் பறப்பதற்கு உதவியாக உள்ள சிறப்பம்சம் எது?
29.
காலரா : பாக்டீரியா :: சின்னம்மை :_________
30.
இரும்பு - கந்தகம் கலவை : ____ :: உளுத்தம் பருப்பு - கடுகு கலவை : உருட்டுதல்
31.
கணினியின் பயன்பாடுகளை விரிவாகக் கூறுக.
32.
பல்வேறு இயக்கங்களை உதாரணத்துடன் வகைப்படுத்துக.
33.
வைட்டமின் D
34.
வைட்டமின் B
35.

36.
கிலோ
37.
வலை அட்டவணையை பூர்த்தி செய்க.

1.
(c)
மீன்
2.
(c)
நுரையீரல்
3.
(c)
மின் அட்டை
4.
(d)
மீ/வி
5.
(a)
புரோகேரியோட்டிக்
6.
(c)
ஒளி
7.
(a)
8.
(b)
9.
(a)
10.
(b)
11.
(b)
12.
(b)
13.
( )
கணினி
14.
( )
முறைப்படுத்தப்பட வேண்டிய விவரங்கள்
15.
( )
தற்சுழற்சி
16.
( )
உணவு
17.
( )
கைகளால் தெரிந்தெடுத்தல்
18.
( )
போலிக்கால்கள்
19.
1. விசைப்பலகை
2. சுட்டி
3. ஸ்கேனர்
4. ஜாய்ஸ்டிக்
20.
| சுழற்சி இயக்கம் | வளைவுப்பாதை இயக்கம் |
| ஒரு பொருள் அதன் அச்சினை மையமாகக் கொண்டு இயங்கும் இயக்கம் சுழற்சி இயக்கமாகும். | பொருளானது முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கும் தனது பாதையில் தனது திசையை தொடர்ந்து மாற்றிக் கொண்டால் அது வளைவுப்பாதை இயக்கமாகும். |
| பொருளின் நிலையில் மாற்றம் இருக்காது. | பொருளின் நிலை இயக்கத்தைப் பொருத்து மாறுபடும். |
| எ.கா - பானை வனையும் சக்கரத்தின் இயக்கம். | எ.கா - வளைவுப்பாதையில் செல்லும் காரின் இயக்கம் |
21.
பொருட்களின் மீது உயிருள்ள அல்லது உயிரற்ற காரணிகளால் செயல்படுத்தப்படும் தள்ளுதல் அல்லது இழுத்தல் செயல்களே விசை எனப்படும்.
22.
1. நுண்ணுயிர்கள் இயற்கையில் மிகப் பரவலாகப் பரவும் தன்மையுடையது.
2. நுண்ணுயிரிகள் பூமியில் மிகச்சிறிய உயிரினங்களாகும்.
3. பெரும்பாலான நுண்ணுயிரிகள் நோய்களை உருவாக்கும் தன்மையுடையவை.
23.
தெரிந்த ஒரு அளவைக் கொண்டு தெரியாத அளவை ஒப்பிடுவது "அளவீடு" எனப்படும்.
24.
அமீபாவின் இடப்பெயர்ச்சி உறுப்பு அதன் போலிக்கால்கள்.
25.
1 மில்லிமீட்டர், 1 சென்டி மீட்டர், 1 மீட்டர் மற்றும் 1 கிலோ மீட்டர்
26.
சில விலங்குகள் அதிகப்படியான வெப்பத்தை தவிர்க்க, அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்திவிட்டு உறக்கத்தில் ஈடுபடுகின்றன. இந்நிலைக்கு கோடை கால உறக்கம் என்று பெயர்.(எ.கா.) நத்தை.
27.
1. கொடுக்கப்பட்டுள்ள படத்தில் பின்பற்றப்படும் பிரித்தல் முறை சலித்தல் ஆகும்.
2. வெவ்வேறு அளவுடைய திடப்பொருள்களை வடிகட்டி போன்ற அமைப்புடைய பிரித்தெடுக்கும் முறை சலித்தல் எனப்படும்.
எடுத்துக்காட்டு : மாவில் இருந்து தவிடு நீக்குதல்.
28.
பறவைகளின் இறகுகளால் மூடப்பட்ட படகு போன்ற உடலமைப்பு அவற்றின் இறக்கைகள், உள்ளீடற்ற இலகுவான எலும்புகளைப் பெற்றிருப்பதும், அவை காற்றில் பறக்க உதவி செய்கிறது.
29.
வைரஸ்
30.
காந்தப் பிரிப்பு முறை.
31.
1. கணினி பலதுறைகளில் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது.
2. துணிக்கடையில் பில் போட பயன்படுகிறது.
3. பெரிய மற்றும் சிறிய இயந்திரங்களை மனிதர் துணையின்றி கட்டுப்படுத்த பயன்படுகிறது.
4. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கல்விப்பெறுவதற்கு பெருமளவு கணினியைப் பயன்படுத்துகிறார்கள்.
5. ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு எடுப்பதற்கும் பிற விவரங்களுக்கும் கணினி பயன்படுத்தப்படுகிறது.
6. வங்கி, எ.டி.எம், அஞ்சலகம் ஆகியவற்றிலும் கணினி பல செயல்பாடுகளுக்கு பயன்படுகிறது.
7. கணினியில் நமக்குத் தேவையான தரவுகளை சேமித்து வைக்கலாம். இத்தரவுகளை நாம் தேவைக்கு ஏற்றவாறு தகவல்களாக மாற்றி எடுத்துக்கொள்ளலாம்.
32.
இயக்கங்களின் வகைகள்:
அ) இயங்கும் பாதையின் அடிப்படையில்:
1. நேர்க்கோட்டு இயக்கம் - நேர்க்கோட்டுப் பாதையில் நடந்து சென்று கொண்டிருக்கும் மனிதன்
2. வளைவுப்பாதை இயக்கம் - வீசி ஏறியப்பட்ட பந்து
3. வட்டப்பாதை இயக்கம் - கயிற்றின் ஒரு முனையில் கல்லினைக் கட்டி சுற்றுதல்
4. தற்சுழற்சி இயக்கம் - பம்பரத்தின் இயக்கம்
5. அலைவு இயக்கம் - ஊசல் கடிகாரம்
6. ஒழுங்கற்ற இயக்கம் - அறையில் இயங்கும் 'ஈ' யின் இயக்கம்
ஆ) கால இடைவெளி அடிப்படையில்:
1. கால ஒழுங்கு இயக்கம் - கடிகார முட்களின் இயக்கம்
2. கால ஒழுங்கற்ற இயக்கம் - காற்றில் ஆடும் கொடியின் இயக்கம்
இ) சீரான வேகத்தின் அடிப்படையில்:
1. சீரான இயக்கம் - சீரான வேகத்தில் செல்லும் தொடர்வண்டி
2. சீரற்ற இயக்கம் - மாறுபட்ட வேகத்தில் செல்லும் வாகனம்
33.
ரிக்கெட்ஸ்
34.
பெரி பெரி
35.
வட்ட இயக்கம்
36.
103
37.

6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards