6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 24/10/2025
6ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test

1.
ஒட்டகங்கள் தங்கள் திமில்களில் _________ சேமிக்கின்றன.
2.
கால்களில் உள்ள வளை நகங்களின் மூலம் பல்லிகள் தரைகளில் ________
3.
மழைக்காடுகள், புல்வெளிகள் மற்றும் பாலைவனங்களை ________ என்று அழைக்கிறோம்.
4.
பறவைகளின் வால் திசை திருப்புக் கட்டையாக செயல்பட்டு ________ க்கு உதவுகிறது.
5.
நீர் நிலைகள், பாலைவனங்கள் மற்றும் மலைகள் ஆகியவற்றை _________ என்று அழைக்கலாம்.
6.
பாரமீசியம் ஒரு பல செல் உயிரி.
7.
பறவைகளால் ஒரு நேரத்தில் ஒரு பொருளை மட்டுமே பார்க்க முடியும்.
8.
புவியியல் அமைப்பு மற்றும் சுற்றுப்புறச் சூழல் ஆகியவை புவியின் அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கும்.
9.
ஓர் உயிரி வாழக்கூடிய அல்லது வசிக்கக் கூடிய இடம் வாழிடம் எனப்படும்.
10.
கங்காரு எலி பற்றிச் சிறு குறிப்பு எழுதுக.
11.
தகவமைத்தல் என்றால் என்ன?
12.
ஒரு செல் உயிரி எது? எ.கா. தருக?
13.
உயிரினங்களின் பல்லுயிர் தன்மை வரையறுக.
14.
பறவைகள் காற்றில் பறக்கும் பொழுது எந்த உடலமைப்பைப் பயன்படுத்தி பறக்கும் திசையை மாற்றிக் கொள்கின்றன?
15.
அமீபாவின் இடப்பெயர்ச்சி உறுப்பு எது?
16.
இந்தியாவில் ஒட்டகங்களை நாம் எங்கு காண முடியும்?
17.
பறவைகள் தங்கள் இரைகளை எவ்வாறு பிடிக்கின்றன?
18.
குளிர்கால உறக்கம் என்றால் என்ன?
19.
முதுகெலும்புள்ள விலங்குகளின் பல்வேறு தகவமைப்புகளைக் கூறுக.
20.
பறவைகள் காற்றில் பறப்பதற்கு உதவியாக உள்ள சிறப்பம்சம் எது?
21.
ஒரு செல் உயிரிகளை பல செல் உயிரிகளிடமிருந்து வேறுபடுத்துக.
22.
பாலைவனங்களில் வாழ்வதற்கேற்ப ஒட்டகங்களில் காணப்படும் தகவமைப்புகளை விவரி.
23.
'பாலைவனக் கப்பல்' என அழைக்கப்படுவது எது?
எருது
ஒட்டகம்
கழுதை
குதிரை
24.
கீழ்க்கண்ட எந்த விலங்கு கோடை கால உறக்கத்திற்கு உட்படும்.
ஒட்டகம்
திமிங்கலம்
பல்லி
டால்பின்
25.
மீன்கள் செவுள் மூலம் சுவாசிக்கிறது. செவுள்கள் இரத்த நாளங்களோடு தொடர்புடையது. செவுள்கள் மீன்களுக்கு,
காற்றிலிருந்து உயர்வளி எடுக்கப் பயன்படுகிறது.
நீரில் கரைந்துள்ள உயிர்வளியை எடுக்கப் பயன்படுகிறது.
நீரில் கரைந்துள்ள உயிர்வளியை எடுக்கப் பயன்படுகிறது.
கழிவுகளை நீரில் வெளியேற்ற பயன்படுகிறது.
26.
கங்காரு எலி வசிப்பது
நீர் வாழிடம்
பாலைவன வாழிடம்
புல்வெளி வாழிடம்
மலைப்பிரதேச வாழிடம்
27.
கீழ்கண்ட வற்றுள் எதை வாழிடமாகக் கூற முடியாது?
ஒட்டகங்களுடன் கூடிய பாலைவனம்
மீன்கள் மற்றும் நத்தைகளுடன் கூடிய குளம்
மேயும் கால்நடைகளுடன் கூடிய பண்படுத்தப்பட்ட நிலம்
காட்டு விலங்குகளுடன் கூடிய காடு
28.
எந்த விலங்கு செவுள்கள் எனப்படும் சுவாச உறுப்பைப் பெற்றுள்ளது?
மண்புழு
தவளை
மீன்
குள்ளநரி
29.
பல்லிகள் எதன் மூலம் சுவாசிக்கின்றன?
தோல்
செவுள்கள்
நுரையீரல்
சுவாச நுண்குழல்
30.
உயிருள்ள பொருள்கள் அல்லது உயிரினங்களைப் பற்றி படிப்பது
உளவியல்
உயிரியல்
விலங்கியல்
தாவரவியல்
1.
( )
கொழுப்பு
2.
( )
நடக்கின்றன
3.
( )
வாழிடம்
4.
( )
கட்டுப்படுத்துவதற்கு
5.
( )
வாழிடம்
6.
(b)
7.
(b)
8.
(b)
9.
(a)
10.
எப்பொழுதும் கங்காரு எலி நீர் அருந்துவதில்லை. அது உண்ணும் உணவில் இருந்து உடலுக்கு தேவையான நீரை உருவாக்கிக் கொள்கிறது.
11.
தாவரங்கள் மற்றும் விலங்குகள் ஒரு குறிப்பிட்ட வாழிடத்தில் வாழ்வதற்குகேற்பத் தங்கள் உடலில் பெற்றுள்ள சிறப்பு அமைப்புகள் தகவமைப்புகள் என்ற அழைக்கப்படுகிறது.
12.
ஒரே செல்லால் ஆன உயிரினங்கள் ஒரு செல் உயிரினங்கள் ஆகும் (எ.கா.) அமீபா, பாரமீசியம் மாற்றும் யூக்ளினா.
13.
பல்வகைத் தன்மை என்பது, உயிரினங்கள் வாழும் பல்வேறு வாழிடங்கள் மற்றும் அவை பெற்றுள்ள பல்வேறு மாறுபாடுகளையும் குறிப்பிடுவதாகும்.
14.
பறவைகள் காற்றில் பறக்கும் பொழுது தனது வால் பகுதியை பயன்படுத்தி பறக்கும் திசையை மாற்றிக்கொள்கின்றன.
15.
அமீபாவின் இடப்பெயர்ச்சி உறுப்பு அதன் போலிக்கால்கள்.
16.
இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தார் பாலைவனத்தில் ஒட்டகத்தை நம்மால் காணமுடியும்.
17.
பறவைகள் தங்கள் இரைகளை, அவற்றின் அலகு மற்றும் கூர் நகங்கள் கொண்ட கால்கள் மூலம் பிடிக்கின்றன.
18.
சில விலங்குகள் அதிகப்படியான குளிரை தவிர்க்க, அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்திவிட்டு உறக்கத்தில் ஈடுபடுகின்றன. இந்நிலைக்கு குளிர்கால உறக்கம் என்று பெயர். (எ.கா.) ஆமை.
19.
| வ.எண் | விலங்குகளின் பெயர் | வாழிடம் | தகவமைப்புகள் |
| 1. | மீன் | ஏரி, குளம் | படகு போன்ற உடலமைப்பு, துடுப்பு, செவுள்கள் |
| 2. | ஓணான் | நிலம் | அசைக்கக் கூடிய கண்ணிமைகள், செதில்களால் ஆன தோல் |
| 3. | பறவைகள் | நிலம் | இறக்கை, உறுதியான மார்பு தசை, எடை குறைவான எலும்பு |
| 4. | ஒட்டகம் | பாலைவனம் | நீண்ட கண் இமை, திமில், தடித்த தோல், அதிக அளவு நீர் சேமித்தல் தட்டையான பாதம்.வியர்வை சுரப்பிகள் இல்லை. |
| 5. | துருவ கரடி | துருவ பகுதி | பாதுகாப்பிற்கான தடினமான தோல், வெண்மையான உரோமங்கள் |
| 6. | பென் குயின் | துருவ பகுதி | நீந்துவதற்கான துடுப்புகள், நடப்பதற்கான இரண்டு கால்கள் |
| 7. | வரையாடு | மலைப்பகுதி | ஓடுவதற்கான வலுவான குளம்புகள், குளிரில் இருந்து பாதுகாக்க நீளமான உரோமங்கள் |
| 8. | சிங்கம் | காடு | வலுவான மற்றும் வேகமாக ஓடக் கூடிய தன்மை, இரையை பிடிப்பதற்கான கூர்மையான நகங்கள் |
20.
பறவைகளின் இறகுகளால் மூடப்பட்ட படகு போன்ற உடலமைப்பு அவற்றின் இறக்கைகள், உள்ளீடற்ற இலகுவான எலும்புகளைப் பெற்றிருப்பதும், அவை காற்றில் பறக்க உதவி செய்கிறது.
21.
| ஒரு செல் உயிர்கள் | பல செல் உயிர்கள் |
| ஒரு செல்லால் ஆனவை | பல செல்களால் ஆனவை |
| பொதுவாக இவை அளவில் மிகச் சிறியவை நுண்ணோக்கியால் மட்டுமே பார்க்க இயலும். | பொதுவாக இவை அளவில் பெரியவை கண்களால் பார்க்க இயலும். |
| இவற்றில் திசுக்கள், உறுப்புகள் மற்றும் உறுப்பு மண்டலங்கள் கிடையாது. | இவற்றில் திசுக்கள், உறுப்புகள் மற்றும் உறுப்பு மண்டலங்கள் உள்ளன. |
22.
1. ஒட்டகத்தின் நீண்ட கால்கள் பாலைவனத்தில் உள்ள சூடான மணலில் இருந்து உடலைப் பாதுகாக்கின்றன.
2. இவை அதிக அளவு நீரை அருந்தி, தன் உடலில் தேக்கி வைத்துக் கொள்கின்றன.
3. ஒட்டகம் தம் உடலில் இருந்து குறைந்த அளவு நீரையே வெளியேற்றுகிறது.
4. ஒட்டகம் திமில் பகுதியில் கொழுப்பை சேமித்து வைக்கிறது. சக்தி தேவைப்படும் காலங்களில் இந்த கொழுப்பை சிதைத்து ஊட்டம் பெறுகின்றது.
5. ஒட்டகம் பெரிய, தட்டையான திண்டு கால்கள் மூலம் மிருதுவான மணலில் நன்றாக நடக்கும் தன்மையைப் பெற்றுள்ளன.
6. ஒட்டகங்களின் நீண்ட கண் இமைகள் மற்றும் தோல், அதன் கண், காதுகளை புழுதிப் புயலில் இருந்து பாதுகாக்கிறது.
7. நாசித் துவாரங்கள் தூசிகள் உள்ளே செல்வதை தடுப்பதற்காக மூடிய நிலையில் காணப்படும்.
23.
(b)
ஒட்டகம்
24.
(c)
பல்லி
25.
(b)
நீரில் கரைந்துள்ள உயிர்வளியை எடுக்கப் பயன்படுகிறது.
26.
(b)
பாலைவன வாழிடம்
27.
(c)
மேயும் கால்நடைகளுடன் கூடிய பண்படுத்தப்பட்ட நிலம்
28.
(c)
மீன்
29.
(c)
நுரையீரல்
30.
(b)
உயிரியல்
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards