6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 24/10/2025
6ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test

1.
நாளமில்லா சுரப்பிகளால் சுரக்கப்படுகின்ற வேதிப்பொருள்களுக்கு _____என்று பெயர்.
2.
செல் என்ற வார்த்தையை உருவாக்கியவர் _______
3.
இருண்ட அறையினுள் வரும் சூரிய ஒளிக்கற்றையில் ______ காண முடியும்.
4.
தாவரங்கள் கரியமில வாயு மற்றும் நீரைச் சேர்த்து ஸ்டார்ச்சை உருவாக்குவது (இயற்கையான/மனிதனால் நிகழ்த்தப்பட்ட மாற்றம்)ஆகும்.
5.
வெப்பநிலையின் SI அலகு ______
6.
மூவகையான இரத்தக் குழாய்களின் பெயர்களை எழுதுக.
7.
எபிகிளாட்டிஸ் என்றால் என்ன?
8.
யூகேரியாட்டிக் செல்லிற்கு மூன்று எடுத்துக்காட்டுகள் தருக.
9.
நம் உடலில் உள்ள செல்கள் எந்த வகையைச் சார்ந்தவை?
10.
ஒருவரின் ஆடையில் ஏதிர்பாராத விதமாக தீப்பற்றினால், என்ன செய்ய வேண்டும்? ஏன்?
11.
கரைசல் என்றால் என்ன?
12.
உங்களிடம் சிறிது மெழுகு தரப்பட்டால் அதை வைத்து உங்களால் மெழுகு பொம்மை செய்ய முடியுமா? அவ்வாறு செய்ய முடியுமெனில் எவ்வகை மாற்றம் எனக் குறிப்பிடுக.
13.
எலும்மிச்சம் பழத்தில் இருந்து மின்னோட்டத்தை உருவாக்க முடியுமா?
14.
வெப்ப விரிவு என்றால் என்ன?
15.
வெப்பநிலை என்றால் என்ன?
16.
பொருந்தாததை வட்டமிடுக. அதற்கான காரணம் தருக.
சாவி, மின்விளக்கு, மின்கல அடுக்கு, மின்னியற்றி.
17.
கோடைகாலத்தில் வியர்வை அதிகமாக சுரப்பது ஏன்?
18.
கீழ்கண்ட மனித கழிவு நீக்க மண்டலத்தில் முக்கியமான நான்கு பாகங்களை எழுதுக.கீழ்கண்ட வினாக்களுக்கு விடையளி.

அ.மேற்கண்ட கழிவு நீக்க மண்டலத்தில் எந்த பக்கம் இரத்தத்திலுள்ள அதிக உப்பு மற்றும் நீரை நீக்குகிறது.
ஆ.சிறுநீர் எங்கு சேமிக்கப்படுகிறது?
இ.மனித உடலில் இருந்து சிறுநீர் எந்தக் குழல் வழியாக வெளியேற்றப்படுகிறது?
ஈ.சிறுநீரகத்திலுள்ள சிறுநீரை எந்தக் குழல் சிறுநீர்பைக்கு கொண்டு செல்கிறது?
19.
புரோகேரியாட்டிக் செல்லின் படம் வரைந்து பாகங்களைக் குறி
20.
பூமியில் உயிரினங்கள் வாழ வளிமண்டலம் ஏன் தேவைப்படுகிறது?
21.
ராகுல் ஒரு மின்சுற்றை அமைக்க விரும்பினான். அவனிடம் ஒரு மின்விளக்கு, குண்டூசி, ஒரு இணைப்புக்கு கம்பிகள் மற்றும் ஒரு தாமிரக் கம்பி ஆகியவை மட்டுமே உள்ளன. அவனிடம் மின்கலனோ, மின்கல அடுக்கோ இல்லை.எனினும் திடீரென்று அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.எலும்மிச்சம்பழத்தைப் பயன்படுத்தி மீன்களை அடுக்கினை உருவாக்கினால் என்ன என்று ஒரு யோசனை தோன்றியது.அந்த மின்விளக்கு ஒளிருமா?
22.
ஒரு வேளை நமது உடல் வெப்பநிலை தனது இயல்பான வெப்பநிலையை விடக் குறைந்து விடுவதாகக் கருதுவோம். அப்பொழுது நமது உடலானது சுற்றுச் சூழலை முன்பிருந்ததை விட எவ்வாறு உணரும்?
23.
உன்னைச் சுற்றி நடக்கும் மாற்றங்களிருந்து கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு மாற்றத்திற்கும் தகுந்த எடுத்துக்காட்டு தருக்க.
அ. மெதுவான/வேகமான மாற்றம்
ஆ. மீள்/மீளா மாற்றம்
இ. இயற்பியல்/வேதியல் மாற்றம்
ஈ. இயற்கையான/செயற்கையான அல்லது மனிதனால் நிகழ்த்தப்பட்ட மாற்றம்.
உ. விரும்பத்தக்க/விரும்பத்தகாத மாற்றம்.
24.
பல்வேறு இணைப்புவடங்களைக் கூறி, எவையேனும் மூன்றினை விளக்குக.
25.
விரலி ஒரு _________ ஆக பயன்படுகிறது.
வெளியீட்டுக்கருவி
உள்ளீட்டுக்கருவி
சேமிப்புக்கருவி
இணைப்புக்கம்பி
26.
கீழ்வருவனவற்றுள் உள்ளீட்டுக்கருவி எது?
ஒலிபெருக்கி
சுட்டி
திரையகம்
அச்சுப்பொறி
27.
மனிதனின் இரத்த ஓட்ட மண்டலம் கடத்தும் பொருள்கள் _________
ஆக்சிஜன்
சத்துப் பொருள்கள்
ஹார்மோன்கள்
இவை அனைத்தும்
28.
நுண்ணோக்கியில், பிரியா செல்லைப் பார்க்கும் போது அச்செல்லில் செல்சுவரும் நியூக்ளிசும் இருக்கிறது.பிரியா பார்த்த செல்.
தாவர செல்
விலங்கு செல்
நரம்பு செல்
மீட்டர்
29.
செல்லின் அளவைக் குறிக்கும் குறியீடு
சென்டி மீட்டர்
மில்லி மீட்டர்
மைக்ரோ மீட்டர்
மீட்டர்
30.
தாவரங்களில் வாயுப் பரிமாற்றம் நடைபெறும் இடம் _________ ஆகும்.
இலைத்துளை
பச்சையம்
இலைகள்
மலர்கள்
31.
பால் தயிராக மாறுவது ஒரு _________ ஆகும்.
மீள் மாற்றம்
வேகமான மாற்றம்
மீளா மாற்றம்
விரும்பத்தகாத மாற்றம்
32.
ஈரத்துணி காற்றில் உலரும் போது ஏற்படும் மாற்றம் ________ ஆகும்.
வேதியியல் மாற்றம்
விரும்பத்தகாத மாற்றம்
மீளா மாற்றம்
இயற்பியல் மாற்றம்
33.
கீழ்க்கண்ட மின்சுற்றுகளில் எதில் மின்விளக்கு ஒளிரும்?




34.
ஒரு பொருளை வெப்பப்படுத்தும்பொழுது, அதிலுள்ள மூலக்கூறுகள்
வேகமாக நகரத் தொடங்கும்
ஆற்றலை இழக்கும்
கடினமாக மாறும்
லேசாக மாறும்
35.
மீன்காட்சியகத்தில் தொட்டியில் உள்ள தாவரங்களை நீக்கினால் என்னவாகும்?
1.
( )
ஹார்மோன்கள்
2.
( )
ராபர்ட் ஹீக்
3.
( )
தூசுப்பொருட்கள்
4.
( )
இயற்கையான மாற்றம்
5.
( )
கெல்வின்
6.
தமனிகள், சிரைகள் மற்றும் தந்துகிகள் ஆகியன இரத்தக் குழாய்களாகும்.
7.
சுவாசப் பாதைக்குள் உணவு செல்வதைத் தடுக்கும் தட்டையான குரல்வளை மூடி எபிகிளாட்டிஸ் எனப்படுகிறது.
8.
தாவர செல், விலங்கு செல், மற்றும் பெரும்பாலான பூஞ்சைகள்.
9.
நம்மிடம் உள்ள செல்கள் யூகேரியாட் வகையைச் சார்ந்த செல்கள்.
10.
i) அவரை அந்த இடத்திலேயே நிறுத்த வேண்டும்.
ii) நின்று கொண்டிருந்தால் அவரை அந்த இடத்திலேயே படுக்க செய்ய வேண்டும்.
iii) பின்பு, தரைத் தளத்திலேயே உருளச் செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்வதனால் தீ மேலும் பரவாமல் தடுப்பதுடன், பெரிய பாதிப்பின்றி அவரைக் காப்பாற்றலாம்.
11.
ஒரு கரைப்பானில், கரைபொருள் கரைந்து உருவாகும் கலவையே கரைசல் எனப்படும்.
12.
ஆம், மெழுகு பொம்மை செய்யமுடியும். ஏனெனில் இது ஒரு இயற்பியல் மாற்றம்.
13.
எலுமிச்சம் பழச்சாறு மின்பகுளியாக செயல்பட்டு மின்னோட்டத்தை உருவாக்கும்.
14.
ஒரு பொருளை வெப்பப்படுத்தும் பொழுது அது விரிவடைவதை அப்பொருளின் வெப்ப விரிவடைதல் என்கிறோம்.
15.
ஒரு பொருள் எந்த அளவு வெப்பமாக அல்லது குளிர்ச்சியாக உள்ளது என்பதனை அளவிடும் அளவுக்கு வெப்பநிலை என்று பெயர். வெப்பநிலையின் SI அலகு கெல்வின் ஆகும்.
16.
சாவி, மின்விளக்கு, மின்கல அடுக்கு, மின்னியற்றி
மின்னியற்றி மட்டும் மின் மூலம் ஆகும் மற்றவை மின்சுற்றின் பாகங்கள்.
17.
கோடைக்காலத்தில் வெப்பத்தால் தோலில் உள்ள வியர்வைத் துளைகள் விரிவடைகின்றன. எனவே இந்த வியர்வைத் துளைகளின் வழியே அதிக வியர்வை வெளியேறுகிறது. இதனால் தோல் அதிக வெப்பமடைந்து விடாமல் குளிர்ச்சியாக உள்ளது.
18.
அ) நெப்ரான்கள்
ஆ) சிறுநீர்ப் பையில்
இ) சிறுநீர்ப் புறவழி
ஈ) சிறுநீர் நாளம்
19.

20.
1. பூமியைச் சுற்றிலும் காற்றினால் மூடப்பட்டுள்ள ஒரு பெரிய மேலுறையே வளிமண்டலம் எனப்படுகிறது.
2. இம்மேலுறையானது புவிக்கு அருகில் மிக அதிகமாகக் காணப்படுகிறது.
3. உயரே செல்லச் செல்ல காற்றின் அடர்த்தியும், அளவும் குறைகிறது.
4. காற்றின் இயக்கமும், மேகங்களை உருவாக்கும் நீராவியும் அடிவளிமண்டலத்தில் உள்ளன.
5. இந்த அடி வளிமண்டலமே, நாம் அனுபவிக்கும் வானிலைக்குக் காரணமாக உள்ளது.
6. இவ்வடுக்கிற்கு மேலே வளிமண்டலத்தில் காணப்படும் ஓசோன் படலம், சூரியனிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்களை (UV) தடுத்து உயிர்களை பாதுகாக்கிறது.
21.
மின்விளக்கு ஒளிரும்:
எலுமிச்சைப் பழச்சாறு மின்பகுபொருளாகவும், தாமிரக்கம்பி, குண்டூசி மின்வாய்களாகவும் செயல்பட்டு மிகக் குறைவான மின்னோட்டத்தை உருவாக்கும். இதேபோல் மூன்று அல்லது நான்கு மின்கலங்களை ஒன்றாக இணைத்து சிறிய மின்விளக்கை (LED) ஒளிரச் செய்யலாம்.
22.
நமது உடல் சுற்றுச் சூழலை முன்பிருந்ததை விட வெப்பமாக உணரும். ஏனென்றால் வெப்ப ஆற்றலானது உயர் வெப்பநிலையிலிருந்து தாழ் வெப்பநிலைக்கு கடத்தப்படுகிறது.
23.
அ) மெதுவான மாற்றம் - பருவநிலை மாற்றம்
வேகமான மாற்றம் - பட்டாசு வெடித்தல்
ஆ) மீள் மாற்றம் - இரப்பர் வளையம் நீளுதல்
மீளா மாற்றம் - உணவு செரித்தல்
இ) இயற்பியல் மாற்றம் - பனிக்கட்டி உருகுதல்
வேதியியல் மாற்றம் - இரும்பு துருப்பிடித்தல்
ஈ) இயற்கையான மாற்றம் - புவியின் சுழற்சி
செயற்கையான மாற்றம் - சமைத்தல்
உ) விரும்பத்தக்க மாற்றம் - பால் தயிராதல்
விரும்பத்தகாத மாற்றம் - காடுகள் அழிதல்
24.
1. விஜிஏ
2. எச்டிஎம்ஐ
3. யுஎஸ்பி
4. தரவுக்கம்பி
5. ஒலிவடம்
6. மின் இணைப்புக் கம்பி
7. ஒலி வாங்கி இணைப்புக் கம்பி
8. ஈதர் நெட் இணைப்புக் கம்பி
விஜிஏ: (Video Graphics Array)
கணினியின் மையச்செயலகத்தைத் திரையுடன் இணைக்கப் பயன்படுகிறது.
யுஎஸ்பி: (Universal Serial Bus)
அச்சுப்பொறி, வருடி, விரலி, சுட்டி, விசைப்பலகை, இணையப்படக்கருவி, திறன் பேசி போன்றவற்றைக் கணினியுடன் இணைக்கப் பயன்படுகிறது.
தரவுக்கம்பி: (Data Cable)
கணினியின் மையச் செயலகத்துடன் கைப்பேசி, கையடக்கக் கணினி ஆகியவற்றை இணைக்கப் பயன்படுகிறது.
25.
(c)
சேமிப்புக்கருவி
26.
(b)
சுட்டி
27.
(d)
இவை அனைத்தும்
28.
(a)
தாவர செல்
29.
(c)
மைக்ரோ மீட்டர்
30.
(a)
இலைத்துளை
31.
(c)
மீளா மாற்றம்
32.
(d)
இயற்பியல் மாற்றம்
33.
(d)

34.
(a)
வேகமாக நகரத் தொடங்கும்
35.
i) நீர்வாழ் உயிரினங்கள் வெளியிடும் எல்லா வகையான கழிவுகள், அதிகப்படியான உணவு மற்றும் சிதைவடையும் பொருள்களின் அளவு நீரில் அதிகரிக்கும்.
ii) நீரில் கரைந்துள்ள ஆக்ஸிஜனின் அளவு குறைகிறது.
iii) அதிக தாதுக்கள் மற்றும் ஒளியினால் பாசிகளின் வளர்ச்சி அதிகரிக்கிறது.
iv) சிலநேரங்களில், இலையின் அடியில் மீன்கள் மறைவதும், முட்டையிடுவதும் நிகழ வாய்ப்பில்லாமற் போய்விடுகிறது.
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards