6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 24/10/2025
6ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
படத்தை பார்த்து விடையளிக்கவும்
i) சூரியனுக்கு அருகாமையில் உள்ள கோள் எது?
ii) பெரியதான கோள் எது?
iii) சூரியனிடமிருந்து தொலைவில் உள்ள கோள் எது?
iv) செந்நிறக் கோள் எது?
2.
காஞ்சிபுரம் கல்வியில் தலை சிறந்து விளங்கியதுஎன்பதை நிரூபி.
3.
பூம்புகாரின் வணிகம் பற்றி ஒரு பத்தியளவில் எழுதுக.
4.
இந்தியா "வேற்றுமையில் ஒற்றுமை" என்ற நாடாக இருப்பினும் நாம் அனைவரும் ஒன்றுபட்டுளோம் - கலந்துரையாடுக.
5.
பாகுபாட்டிற்கான ஏதேனும் இரண்டு வகைகளை எழுதுக.
6.
பெருங்கடலின் முக்கியத்துவத்தை விளக்குக.
7.
சமவெளி மக்கள் நெருக்கம் மிகுந்ததாகக் காணப்படுகிறது. காரணம் கூறு.
8.
உட்புற மற்றும் வெளிப்புறக்கோள்கள் - வேறுபடுத்துக.
9.
கொடுக்கப்பட்டுள்ள உலக வரைப்படத்தில் கண்டங்களையும் மலைத்தொடர்களையும் குறிக்கவும்.
1.
i) புதன்
ii) வியாழன்
iii) நெப்டியூன்
iv) செவ்வாய்
2.
(i) கல்வி கற்பதற்கான இடத்தினை பள்ளி என்றழைக்கிறோம்
(ii) இப்பள்ளிகள் காஞ்சி நகரில் தான் முதன் முதலில் ஏராளமாக அமைக்கப்பட்டன
(iii) சமணர் அமைத்த பள்ளிகளில் சமண மாணவர்களும், புத்த விகாரங்களில் புத்த மாணவர்களும் பயின்றனர்
(iv) நாளந்தப் பல்கலைக் கழகத்தில் பயின்ற சீன வரலாற்ற்றாசிரியர் யுவான் சுவாங் கூடுதல் படிப்புக்காக காஞ்சியிலிருந்த கடிகைக்கு வந்திருக்கிறார்
(v) ''நகரங்களில் சிறந்தது காஞ்சி '' என்று கவிஞர் காளிதாசர் கூறுகிறார்
(vi) ''கல்வியில் கரையிலாத காஞ்சி'' என்று நாயன்மார்களுள் முதன்மையானவரான திருநாவுக்கரசர் காஞ்சி நகரைப் புகழ்ந்துள்ளார்.
(vii) மேலே கூறியுள்ளவற்றிலிருந்து காஞ்சிபுரம் கல்வியில் தலைசிறந்து விளங்கிய தென்பதை நிரூபிக்கலாம்
3.
(i) பூம்புகார் துறைமுகத்தில் சீரும், சிறப்புமாக நடந்த வணிகம் குறித்து சங்க இலக்கிய நூலான பட்டினப் பாலையிலிருந்தும், இரட்டை காப்பிய நூல்களான சிலப்பதிகாரம், மணிமேகலையிலிருந்தும் அறிந்து கொள்ளலாம்
(ii) இங்கு வணிகம் செய்ய கிரேக்கம், நேரம் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்த்த வணிகர்கள் வந்த வண்ணம் இருந்துள்ளனர்.
(iii) கடல் வழியாகக் குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டன.
(iv) கருமிளகு தரைவழித் தடங்கள் வழியே இறக்குமதி செய்யப்பட்டது
(v) வடமலையிலிருந்து தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது
(vi) மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து சந்தனமும் , தென்கடல் பகுதியிலிருந்து முத்தும், கிழக்குப் பகுதியிலிருந்து பவளமும், ஈழத்தில் இருந்து உணவுப் பொருள்களும் இறக்குமதி ஆயின
4.
(i) இந்தியாவில் நில அமைப்பு. காலநிலை, இயற்கைத் தாவரம் மற்றும் மண் வகைகளில் வேறுபாடுகள் காணப்படுகின்றன.
(ii) மேலும் மொழி, இனம், மதம், சாதி, கலாச்சாரம் ஆகியவற்றிலும் இடத்திற்கு இடம் வேறுபாடுகள்
காணப்படுகின்றன.
(iii) நம்முடைய கலாச்சாரங்கள், கலை மற்றும் கட்டிடக்கலைகள், விழாக்கள் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களிலும் பல்வேறு வேறுபாடுகள் காணப்படுகிறது.
(iv) ஆனாலும் இந்திய மக்கள் யாவரும் பல்வேறு வேறுபாடுகளை உடையவர்களாக இருந்தாலும் தங்களை முதலில் இந்தியர்கள் என்று கூறுவதில் பெருமிதம் அடைகிறார்கள்.
(v) இத்தகைய உணர்வு எல்லா வேற்றுமைகளையும் களைந்து ஒற்றுமையுடன் வாழ வழி செய்கின்றது. இந்த சிறப்பம்சமே இந்தியா "வேற்றுமையில் ஒற்றுமை" காணும் நாடு என அழைக்கப்பட காரணமாகிறது.
5.
சாதி பாகுபாடு
பாலினப் பாகுபாடும்
மத பாகுபாடு
சாதி பாறுபாது:
(i) இந்தியாவில் சமத்துவமின்மை மற்றும் பாகுபாட்டிற்கான மிக முக்கிய காரணம் சாறிமுறை ஆகும்.
(ii) இந்தியாவில் சாதி ஒடுக்கு முறைக்கெதிராக பலரும் போராடி வருகின்றனர்.
(iii) இவர்களுக்குமுன்னோடியாக திகழ்ந்தவர் டாக்டர். பி.ஆர்.அம்பேத்கர் ஆனார்.
(iv) இவர் இந்திய மக்களிடையே சமத்துவம் நிலவ பெரிதும் பாடுபட்டார்.
பாலினப் பாதயாறும் :
(i) பாலினப் பாகுபாடு என்பது இந்தியாவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையே நிலவும் உடல் நலம்.
கல்வி, பொருளாதாரம் மற்றும் அரசியல் சமத்துவமின்மை போன்றவற்றைக் குறிக்கிறது.
(ii) எடுத்துக்காட்டாக ஒரு பெண் பள்ளிப் படிப்பை முத்தடியின் கல்லூரிக்கு செல்ல அனுமதி இல்லை.
(iii) இன்னும் ஒரு சில குடும்பங்களில் பெண் பிள்ளைகள் நவீன ஆடைகளை அணிந்தி. அனுமதிக்கப்படுவதில்லை.
ஆனால் அக்குடும்பத்தின் ஆண்பிள்ளையன் நவீன ஆடைகளை அணித்தி அனுமதிக்கப்படுகின்றனர். இதுவே பாகுபாடு ஆகும்.
6.
(i) புவியின் மேற்பரப்பில் சுமார் 70% நீரம்பிக் காணப்படுவது பெருங்கடல்கள் ஆகும்.
(ii) புவியின் மிகப்பெரிய பல்லுயிர் பெருக்கம் மேலும் 50% மேல் முதல்துறை பொருட்கள் கிடைக்கும் இடமாகும் விளங்குகிறது.
(iii) வளிமண்டலத்தில் உள்ள கார்பனின் அளவைக் கட்டுப்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கிறது.
(iv) வானிலை மற்றும் காலநிலையை ஒழுங்குபடுத்துகிறது.
(v) கடல்வழி வாணிபத்திற்கு மிகவும் முக்கிய பங்காற்றுகிறது.
(vi) பெருங்கடல் நீரோட்டங்கள் கடலோரக் காலநிலையை கட்டுப்படுத்துவதில் பெரும்பங்காற்றுகின்றன.
7.
சமஜெனி மக்கன் நெருக்கம் பிறந்ததாகக் காணப்படுகிறது. இதற்கு காரணம்:
(i) சமவெளி சமமான மற்றும் தாழ்நிலத் தோற்றமாகும்.
(ii) இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 200 மீ-க்கும் குறைவான உயரம் கொண்ட நிலத்தோற்றம் ஆகும்.
(iii) பெரும்பாலும் சமவெளிகள், ஆறுகள் அதன் துணை ஆறுகள் மற்றும் கிளை ஆறுகளால் உருவாக்கப்படுகின்றன.
(iv) இங்கு வளமான மண்ணும் நீர்ப்பாசனமுமிருப்பதால் வேளாண்மை தழைத்தோங்குகிறது
(v) மக்கள் வாழ்வதற்கு சமவெளிகள் ஏற்றதாய் உள்ளன.
(vi) எனவே அவை உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட பிரதேசங்களாக விளங்குகின்றன.
(vii) வட இந்தியாவிலுள்ள கங்கைச் சமவெளி உலகின் பெரிய சமவெளிகளில் ஒன்றாகும்.
(viii) தமிழ்நாட்டிலுள்ள முக்கிய சமவெளிகள் காவேரி மற்றும் வைகை ஆறுகளால் உருவாக்கப்பட்டவை ஆகும்.
8.
|
உட்புறக் கோள்கள் |
வெளிப்புறக் கோள்கள் |
|
சூரியனுக்கு அருகிலுள்ள நான்கு கோள்களான • சூரியக் புதன், புவி, வெள்ளி மற்றும் செவ்வாய் 'உட்புறக் | கோள்கள்' அல்லது 'புவிநிகர் கோள்கள்' என்று அழைக்கப்படுகின்றன. |
சூரிய குடும்பத்திலுள்ள கடைசி நான்கு கோள்களான வியாழன், சனி, யுனேரஸ் மற்றும் நெப்டியூன் ஆகியன வெளிப்புறக்கோள்கள்' அல்லது 'வியாழன் நிகர் கோள்கள்' என்று அழைக்கப்படுகின்றன. |
|
பாறைகளால் ஆன இக்கோள்கள் அளவில் சிறியன. |
இக்கோள்கள் வாயுக்களால் நிரம்பிக் காணப்படுவதால் 'வளிமக் கோள்கள்' எனவும் அழைக்கப்படுகின்றன. |
|
இக்கோள்களின் மேற்பரப்பில் மலைகள், எரிமலைகள் மற்றும் தரைக்குழிவுப் பள்ளங்கள் |
செவ்வாய், வியாழன் கோள்களுக்கு இடையே 'சிறு கோள் மண்டலம்' காணப்படுகிறது. |
9.
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards