6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 24/10/2025
6ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
உனது மாவட்டத்தில் நடைபெறும் முக்கிய முதல்நிலைத் தொழில்களைப் பட்டியலிடுக.
2.
நீ செய்ய விரும்பும் கடமைகளைப் பட்டியலிடுக.
3.
வளத்திட்டமிடல் என்றால் என்ன? அதன் அவசியம் என்ன?
4.
உலகளாவிய வளங்கள் மற்றும் உள்ளூர் வளங்களை வேறுபடுத்துக?
5.
மகதத்தின் எழுச்சிக்கான காரணங்களில் ஏதாவது மூன்றினை எழுதுக.
6.
சங்ககாலத்தில் பெளத்தமும் சமணமும் செழித்தோங்கின. ஒவ்வொன்றுக்கும் ஏதாவது இரண்டு சான்றுகளைத் தருக.
7.
பெளத்தத்தின் நன்கு பேருண்மைகளை எடுத்துரைக்கவும் :
8.
குருகுலக் கல்வி முறைக்கும் நவீன கல்விமுறைக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?
9.
கொடுமணலிலுள்ள தொல்லியல் ஆய்விடம் குறித்து சுருக்கமாய் எழுதுக.
10.
மெளரியர்களைப் பற்றிக் குறிப்பிடுகின்ற ஒரு தமிழ் நூல் கூறுக?
11.
நகரங்களை மையமாகக் கொண்டு இயங்கும் தொழில்கள் எவை?
12.
நீர்நிலைகளுக்கு அருகில் குடியிருப்புகள் வளர்ச்சியடைதற்கான கரணம் என்ன?
13.
சேமிப்பு என்றால் என்ன ?
14.
தேசிய இலச்சினை எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது ?
15.
உயிரற்ற வளங்களை வரையறு.
16.
கண்டறியப்பட்ட வளங்கள் என்றால் என்ன?
17.
தனிநபர் வளம்.
18.
இஃது அடிப்படை உரிமை அன்று _________
சுதந்திர உரிமை
சமத்துவ உரிமை
ஒட்டுரிமை
கல்வி பெறும் உரிமை
19.
அரசமைப்புச் சட்டத்தில் இதுவரை _________ சட்டத்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
101
100
78
46
20.
விடுதலை நாளின்போது டெல்லியில் கொடியேற்றுபவர் _________
பிரதம அமைச்சர்
குடியரசுத்தலைவர்
துணைக்கூடியரசுத் தலைவர்
அரசியல் தலைவர் எவரேனும்
21.
தேசியக் கீதத்தை இயற்றியவர் _________
தேவேந்திரநாத் தாகூர்
பாரதியார்
ரவீந்திரநாத் தாகூர்
பாலகங்காதர திலகர்
22.
செல்யூகஸ் நிகேட்டரின் தூதுவர் _________
டாலமி
கௌடில்யர்
ஜெர்சக்ஸ்
மெகஸ்தனிஸ்
23.
கீழ்க்காண்பனவற்றில் எது மௌரியர் காலத்திற்கான சான்றுகளாகும்?
அர்த்த சாஸ்திரம்
இண்டிகா
முத்ராராட்சஷம்
இவை அனைத்தும்
24.
புத்தர் தனது முதல் போதனை உரையை எங்கு நிகழ்த்தினார் ?
லும்பினி
சாரநாத்
தட்சசீலம்
புத்தகயா
25.
சமணத்தின் முதல் தீர்த்தங்கரர் யார் ?
ரிஷிபா
பார்சவ
வர்தமான
புத்தர்
26.
நம் நாட்டின் தேசிய குறிக்கோள் "வாய்மையே வெல்லும்" _________ லிருந்து எடுக்கப்பட்டது.
பிராமணா
ஆரண்யகா
வேதம்
உபநிடதம்
27.
ஆரியர்கள் முதலில் _________ பகுதியில் குடியமர்ந்தனர்.
பஞ்சாப்
கங்கைச் சமவெளியின் மத்தியப் பகுதி
காஷ்மீர்
வடகிழக்கு
28.
வாக்கியம்: வெப்பப் மண்டலப் பகுதிகளில் அனல் மின்னாற்றலுக்கு பதிலாக சூரிய ஒளி ஆற்றல் ஒரு சிறந்த மாற்று ஆகும்.
புரிதல் 1: நிலக்கரியும் பெட்ரோலியமும் குறைந்து கொண்டே வருகிறது.
புரிதல் 2 : சூரிய ஆற்றல் என்றும் குறையாது.
சரியான விடையைத் தேர்ந்தெடு
அ. புரிதல் 1 மட்டும் சரி.
ஆ. புரிதல் 2 மட்டும் சரி
இ. புரிதல் 1 மற்றும் 2 தவறு
ஈ. புரிதல் 1 மற்றும் 2 சரி
29.
கீழ்காண்பவற்றை காலக்கோட்டின் படி வரிசைப்படுத்தவும்.
அ) நந்தா சிசுநாக ஹரியங்கா மௌரியா
ஆ) நந்தா சிசுநாக மௌரியாஹரியங்கா
இ) ஹரியங்கா சிசுநாக நந்தா மௌரியா
ஈ) சிசுநாக மௌரியா நந்தா ஹரியங்கா
30.
சமணமும் பௌத்தமும் உருவாவதற்கு கீழ்கண்ட கூற்றுகளை காரணமாக கருதலாமா?
1. வேள்விச்சடங்குகள் பெருஞ்செலவு மிக்கதாக இருந்தன.
2. மூடநம்பிக்கைகளும் பழக்கவழக்கங்களும் சாதாரண மனிதர்களை குழப்பமுற செய்தன.
மேற்சொல்லப்பட்ட கூற்றில்/கூற்றுகளில், எது/எவை சரியானது/சரியானவை
அ) 1 மட்டும்
ஆ) 2 மட்டும்
இ) 1 மற்றும் 2
ஈ) 1 மற்றும் 2ம் இல்லை
31.
கீழ்க்கண்டவற்றில் எந்த ஏறுவரிசை ரிக்வேத சமூகத்தை பொறுத்தமட்டில் சரியானது?
அ) கிராமா < குலா < விஷ் < ராஸ்டிரா < ஜனா
ஆ) குலா < கிராமா < விஷ் < ஜனா < ராஸ்டிரா
இ) ராஸ்டிரா < ஜனா < கிராமா < குலா < விஷ்
ஈ) ஜனா < கிராமா < குலா < விஷ் < ராஸ்டிரா
1.
முதல்நிலைத் தொழில்கள்
(i) வேளாண்மை
(ii) கால்நடை வளர்த்தல்
(iii) மீன்பிடித்தல்
(iv) களிமங்கள், நாதுப்பொருட்கள் போன்ற மூலப்பொருட்களைச் சேகரித்தல்
(v) கணிகள் கொட்டைகள், தேன், மூலிகைகள் ரப்பர். பிசின் போன்றவற்றைச் சேகரித்தல்.
(vi) மரம் வெட்டுதல்
2.
(i) தேசியக் கொடியையும், தேசிய கீதத்தையும் மதித்து நடப்பது
(ii) எல்லா குடிமக்களும் அரசியல் சட்டத்தை மதித்து பேணுவது
(iii) கதந்திரத்திற்காகப் போராடிய நமது தலைவர்களைப் பின்பற்றி நடப்பது.
(iv) நாட்டைப் பாதுகாப்பது நாட்டுக்காகத் தேவைப்படும் போது சேவை செய்ய தயாராக இருப்பது
(v) சாதி, மத, மொழி, இன, எல்லை கடந்து அனைவரும் சகோதா மனப்பான்மையுடன் இருப்பது.
(vi) நமது பழம் பெருமை மிக்க பாரம்பரியத்தை காப்பது நாடுகள், நதிகள், எரிவள் உள்ளிட்ட இயற்கையையும் வள விலங்குகளையும் பாதுகாப்பது:
(vii) அறிவியல் மனிதாபிமானம், சீர்திருத்த உணர்வுகளை வார்ப்பது
(viii) வன்முறைகளைத் தவிர்த்து அரசு சொத்துக்களை பாதுகாப்பது
(ix) குழந்தைகளின் பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ தமது குழந்தைகளுக்குக் கல்வி வாய்ப்புகளை 6-14 வயதுக்கு தருவது ஆகியவற்றை செய்வது நமது கடமைகளாகும்.
3.
வளத்திட்டமிடுதல் என்பது வளங்களை சரியாக பயன்படுத்தும் திறன் ஆகும். வளத்தினைத் திட்டமிடுதல் என்பது அவசியமான ஒன்றாகும். ஏனெனில்,
(அ) வளங்கள் மிகவும் குறைவாக உள்ளன. வளத்திட்டமிடுதல் தற்போது வளங்களைச் சரியாகப் பயன்படுத்தவும். வருங்காலத் தலைமுறைக்குச் சேமித்து வைக்கவும் உதவி புரிகிறது.
(ஆ) வளங்கள் மிகக்குறைவாக இருப்பன மட்டுமன்று. அவை புவியின் மீது ஒழுங்கற்ற பரவலுடன் காணப்படுகின்றன.
(இ) வளங்களை அதிகச் சுரண்டலில் இருந்து தடுத்துப் பாதுகாக்க வளதிட்டமிடுதல் அவசியமாகும்.
4.
| உலகளாவிய வளங்கள் | உள்ளூர் வளங்கள் |
| சில வளங்கள் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் காணப்படுகின்றன. அவ்வாறுகாணபடும் உலகளாவிய வளங்கள் என்று அழைக்கப்படுகின்றன. |
ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே காணப்படும் வளங்கள் |
|
(எ.கா) சூரிய ஒளி மற்றும் காற்று |
(எ.கா) கனிமங்கள் |
5.
மகதம் கங்கைச் சமவெளியின் கீழ்ப்பகுதியில் அமைந்து இருந்தது. வளம் மிகுந்த இந்தச் சமவெளி வேளான் விளைச்சலை அளித்தது.
அடர்ந்த காடுகள் கட்டுமானங்களுக்குத் தேவையான யானைகளையும் வழங்கின.
அதிக அளவிலான இயற்கை வளங்கள் குறிப்பாக இரும்பு, ஆயுதங்கள் செய்யவும் மேம்படுத்திக் கொள்ளவும் அவர்களுக்கு உதவியது.
6.
(i) மதுரைக்கருகில் 15 கி.மீ தொலைவில் கீழக்குயில்குடி கிராமத்தில் சமணர் மலை என்ற பெயரில் ஒரு குன்று உள்ளது. சமணத்துறவிகளால் உருவாக்கப்பட்ட தீர்ந்தங்கரர்களின் உருவங்கள் இம்மலையில் காணப்படுகின்றன. இது தொல்லியல் ஆய்வுத் துறையால் பாதுகாக்கப்படும் நினைவு சின்னமாக உள்ளது.
(ii) அறவோர் பள்ளி என்பது சமணத் துறவிகள் வாழ்ந்த இடங்கள் என மணிமேகலையில் குறிப்பு உள்ளது.
தமிழகத்தின் பௌணத்தத்தின் செல்வாக்குக்கான சான்று
(i) சங்க காலத்திற்குப் பின்னர் இயற்றப்பட்ட இராடைக் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை பௌத்த இலக்கியமாகும்.
(ii) காஞ்சிபுரம் புகழ்பெற்ற ஒரு பொௗத்த மையமாகும். பேௗத்த தாக்கவியல் அறிஞரான தினைகர் மற்றும் நாளந்தா பல்கலைக் கழகத்தின் மிகப்பெரும் அறிஞர் தாமபாலர் போன்றோர் இங்கு வாழ்ந்தார்கள்.
7.
புத்தரின் நான்கு பேருண்மைகள்
1. வாழ்க்கை துன்பங்கள், துயரங்கள், நிறைத்தது.
2. ஆசையே துன்பங்களுக்கான காரணம்.
3. ஆசையைத் துறந்துவிட்டால் துன்ப துயரங்களைப் போக்கி விடலாம்.
4. சரியான பாதையைப் பின்பற்றாமல் (எண்வகை வழிகள்) ஆசைகளை வென்றுவிடலாம்.
8.
| குருகுலக் கல்வி முறை | நவீன கல்விமுறை |
|
மாணவர்கள் குருவுடன் தங்கியிருந்து, அவருக்கு சேவை செய்து கல்வி சுற்று அறிவை வளர்த்தனர் |
மாணவர்கள் வீட்டிலிருந்து பள்ளிக் கூடங்களுக்குச் சென்று ஆசிரியர் உதவியுடன் கல்வி கற்று அறிவை வளர்க்கின்றனர். |
|
வாய்மொழி வாயிலாக பாடங்களை மனப்பாடம் செய்து கற்றனர். |
மாணவர்கள் புத்தகங்கள் மூலம் பாடங்களை செயல்வழிக் கற்றல் முறைப்படி கல்வி கற்கின்றனர் |
|
வேதங்கள் புராணங்கள் போன்ற பாடங்கள் முக்கியமான பாடங்களாகக் கற்றுக் கொடுக்கப்பட்டன |
அறிவியல், கணிதம், கணினி மற்றும் மொழி சார்ந்த கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. |
|
ஒழுக்கமான வாழ்க்கையை மேற்கொள்வதற்கான பயிற்சி வழங்கப்பட்டது. |
வேலைவாய்ப்பை முதன்மைப்படுத்தி பயிற்சிகள் வழங்கப்படுகிறது. |
|
இருபிறப்பாளர்களுக்கு மட்டுமே கல்வி அளிக்கப் பட்டது. பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது |
அனைவருக்கும் தரமான ஒரேவிதமான கல்வி வழங்கப்படுகிறது. |
9.
தொல்லியல் ஆய்மிடம் கொடுமணல் :
(i) பதிற்றுப்பத்து என்னும் சங்ககால இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள கொடுமணல் என்ற ஊர் இதுவென அடையாளப் படுத்தப்படுகிறது.
(ii) இங்கு தமிழ்பிராமி எழுத்துகளைக்கொண்ட முன்னூற்றுக்கும் அதிகமான மண்பாண்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
(iii) மேலும், நூல் சுற்றிவைக்கப்பயன்படும் சுழல் அச்சுகள், சுருள்கள். துணிகளின் சிறிய நுண்டுகள். கருவிகள், ஆயுதங்கள். அணிகலன்கள். மணிகள் முக்கியமாக சிவப்புநிற மணிக்கற்கள் ஆகியவற்றையும் தொல்லியல் ஆய்வு அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.
(iv) புதைஞழி மேட்டிற்கு அருகே காணப்பட்ட நினைவுகள் பெருங்கற்காலத்தைச் சேர்ந்தது என்று கணிக்கப்பட்டுள்ளது.
10.
மாமூலனாரின் அகநானுற்றுப் பாடல்.
11.
உற்பத்தி தொழிலும், சேவைத் தொழிலும் நகரங்களை மையமாகக் கொண்டு இயங்கும் தொழில்கள் ஆகும்.
12.
(i) பழங்காலத்தில் வேட்டையாடிகாக, உணவுசேகரிப்பாளர்கள் வாழ்ந்து வந்த மக்கள். படிப்படியாக வோண்மை செய்யக் கற்றுக்கொண்டனர்.
(ii) வேளாண்மை செய்வதற்கு வசதியாக நீர் நிலைகள் அருகே குடியிருப்புகளை அமைத்துக் கொண்டு அங்கேயே நிரந்தரமாகக் குடியேறினர்.
(iii) இல்லாறு குடியேறிய இடங்களே கிராமம் ஊர் என்று வளர்ச்சியடைந்தன.
13.
சேமிப்பு என்பது கையில் கிடைக்கும் வருமானத்தில் நுகர்வுக்குச் செலவு செய்துபோக எதிர்காலத் தேவைக்காக ஒதுக்கப்படும் ஒரு தொகையாகும்.
14.
தேசிய இலட்சினை இந்திய அரசின் அலுவல் முறை கடித முகப்புகளிலும் இந்திய நாணயங்களிலும் கடவுச் சீட்டுகளிலும் பயன்படுகிறது.
15.
(i) உயிரில்லாத அனைத்து வாங்களும் உயிரற்ற வாங்கள் எனப்படும்
(ii) உதாரணம் - நிலம், நீர், காற்று மற்றும் கனிமங்கள்.
16.
கண்டறியப்பட்ட வளங்கள் தற்போறு பயன்படுத்தப்படுவதும் அதன் இருப்பின் அளவும் அறியப்பட்டிருக்கிறது.
எ.கா நெய்வேலி பழப்பு நிலக்கரிச் சுரங்கம்,
17.
தனிநபர் வளங்கள் என்பது, ஒரு தனி நபருக்கு மட்டுமே சொந்தமானவையாகும். (எ.கா) அடுக்குமாடிக் கட்டடங்கள்.
18.
(c)
ஒட்டுரிமை
19.
(a)
101
20.
(a)
பிரதம அமைச்சர்
21.
(c)
ரவீந்திரநாத் தாகூர்
22.
(d)
மெகஸ்தனிஸ்
23.
(d)
இவை அனைத்தும்
24.
(b)
சாரநாத்
25.
(a)
ரிஷிபா
26.
(d)
உபநிடதம்
27.
(b)
கங்கைச் சமவெளியின் மத்தியப் பகுதி
28.
புரிதல் 1 மற்றும் 2 சரி
29.
ஹரியங்கா சிசுநாக நந்தா மௌரியா
30.
1 மற்றும் 2
31.
குலா < கிராமா < விஷ் < ஜனா < ராஸ்டிரா
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards