6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 28/02/2020
6 ஆம் வகுப்பு கணிதம் அனைத்து பாட முக்கிய வினா விடைகள்- 2020 (6th Standard Mathematics Tamil Medium Important Question All Chapter 2020)
6ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
வளர்மதி தன்னுடைய முத்து மாலையை ரூ.30,000 க்கு விற்பனை செய்து, அதனால் இலாபம் ரூ.5000 பெறுகிறார் எனில் முத்து மாலையின் விலையைக் காண்க.
2.
2லி கொள்ளவுள்ள சாடியில் தண்ணீர் நிரப்பக் கீழ்கண்ட கொள்ளவுகளில் உள்ள குவளையில் எத்தனை முறை தண்ணீர் உற்ற வேண்டும்?
(i) 100 மி.லி
(ii) 50 மி.லி
(iii) 500 மி.லி
(iv) 1 லி
(v) 250 மி.லி
3.
மேலின அலகாக மாற்றுக:
(i) 13000 மி.மீ (கி.மீ, மீ, செ.மீ)
(ii) 8257 மி.லி (கி.லி, லி)
4.
7 செ.மீ, 10 செ.மீ மற்றும் 5 செ.மீ ஆகிய பக்க அளவுகளைக் கொண்டு ஒரு முக்கோணம் அமைக்க இயலுமா ?
5.
72 மற்றும் 108 ஆகிய எண்களால் சரியாக வகுபடக்கூடிய மிகச்சிறிய 5 இலக்க எண் என்ன?
6.
254 மற்றும் 508 ஆகிய எண்களால் வகுக்கும் போது மீதியாக 4-ஐத் தரும் மிகச்சிறிய எண்ணைக் காண்க.
7.
பின்வரும் கோணங்களளைப் கோணமானியைப் பயன்படுத்தி வரைக. 135°
8.
மே மாதத்தில், சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்ட இடங்கள் குறித்துக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.இதற்குப் பட விளக்கப்படம் ஒன்று வரைக.(உனக்குத் தகுந்தாற்போல் அளவுத் திட்டத்தை எடுத்துக்கொள்க).
| இடம் | மகாபலிபுரம் | வேடந்தாங்கல் | ஓகேனக்கல் | ஊட்டி |
| பயணிகளின் எண்ணிக்கை | 20,000 | 15,000 | 40,000 | 35,000 |
9.
பின்வரும் படத்தில் எத்தனை முக்கோணங்கள் உள்ளன?

10.
முழு எண்களின் பண்புகளைப் பயன்படுத்திச் சுருக்குக
4 \(\times\) 132 \(\times\) 25
11.
கீழ்க்காணும் விகிதங்களில் எது பெரிய விகிதம்?
3 : 4 அல்லது 7 : 8
12.
அடுத்த இரண்டு அமைப்புகளை வரையவும் மற்றும் அட்டவணையை நிரப்பவும்.

| வடிவங்கள் | முதலாம் அமைப்பு | இரண்டாம் அமைப்பு | மூன்றாம் அமைப்பு | நான்காம் அமைப்பு | ஐந்தாம் அமைப்பு |
|---|---|---|---|---|---|
| சதுரங்கள் | 1 | 2 |
3 |
||
| வட்டங்கள் | 1 | 2 | 3 | ||
| முக்கோணங்கள் | 2 | 4 | 6 |
13.
பின்வரும் அட்டவணையில் பொருத்தமான விவரங்களை நிரப்புக.
| அடக்க விலை | விற்பனை விலை | இலாபம் | நட்டம் | |
| (i) | ரூ.50 | ரூ.60 | ||
| (ii) | ரூ.70 | ரூ.60 | ||
| (iii) | ரூ.100 | ரூ.20 | ||
| (iv) | ரூ.80 | ரூ.15 | ||
| (v) | ரூ.70 | ரூ.25 | ||
| (vi) | ரூ.100 | ரூ.30 |
14.
ஒரு கைத்தறி நெசவாளர் இரண்டு பட்டுப்புடவைகளை நெய்தற்கு 6 மணி 20 நிமிடங்கள் 30 வினாடிகள் மற்றும் 5 மணி 50 நிமிடங்கள் 45 வினாடிகள் எடுத்துக்கொள்கிறார் எனில் அந்த இரண்டு பட்டுப்புடவைகளை உருவாக்க எடுத்துக் கொண்ட சமாதத மொத்த நேரம் எவ்வளவு ?
15.
ஒரு வீட்டில் நான்கு அலைபேசிகள் உள்ளன. காலை 5 மணிக்கு, எல்லா அலைபேசிகளும் ஒன்றாக ஒலிக்கும். அதன் பின், முதல் அலைபேசியானது ஒவ்வொரு 15 நிமிடங்களிலும் இண்டாவது அலைபேசியானது ஒவ்வொரு 20 நிமிடங்களிலும் மூன்றாவது அலைபேசியானது ஒவ்வொரு 25 நிமிடங்களிலும் மற்றும் நான்காவது அலைபேசியானது ஒவ்வொரு 30 நிமிடங்களிலும் ஒலிக்கின்றன எனில், அவை மீண்டும் எப்போது ஒன்றாக ஒலிக்கும் ?
16.
ஒரு முக்கோணத்தின் இரு கோணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மூன்றாவது கோணம் காண்க.
(i) 80°, 60°
(ii) 75°, 35°
(iii) 52°, 68°
(iv) 50°, 90°
(v) 120°, 30°
(vi) 55°, 85°
17.
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு படத்தில் உள்ள கோணத்திற்கும் பல வழிமுறைகளில் பெயரிடுக.


18.
ஒரு கோழிப்பண்ணையிலிருந்து 15472 முட்டைகளை, ஓர் அடுக்கு அட்டையில் 30 முட்டைகள் வீதம் அடுக்கினால், மொத்தம் எத்தனை அடுக்கு அட்டைகள் தேவைப்படும்?
19.
1 இலிருந்து 12 வரை எண்களைப் பயன்படுத்தி 12 வட்டங்களில் நிரப்ப வேண்டும். ஓர் எண்ணை ஒரே ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும் 6 பக்கங்களிலும் தனித்தனியாகக் கூடுதல் 26 என வருமாறு எத்தனை வழிகளில் அமைக்கலாம்?

20.
20 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட கணித வகுப்புத் தேர்வில் 30 மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் பின்வருமாறு.
11 12 13 12 12 15 16 17 18 12
20 13 13 14 14 14 15 15 15 15
16 16 16 15 14 13 12 11 19 17
நேர்க்கோட்டுக் குறி அட்டவணை அமைக்கவும்.
21.
1 : 2 என்ற விகிதத்தில் 63 செமீ நீளமுள்ள ஒரு கோட் டுத்துண்டு இரண்டாகப் பிரிக்கப்பட்டால் கோட்டுத் துண்டுகளின் நீளங்களைக் காண்க.
22.
ஒரு தட்டில் சில முட்டைகள் உள்ளன. தட்டிலிருந்து 6 முட்டைகளை எடுத்து விட்டால் மீதம் 10 முட்டைகள் உள்ளன எனில் மொத்தம் எத்தனை முட்டைகள் தட்டில் இருந்திருக்கும்?
23.
கொடுக்கப்பட்ட பெட்டிகளில் >,< அல்லது = பயன்படுத்தி எழுதுக.
\(\frac { 5 }{ 8 } \)\(\Box\)\(\frac { 1 }{ 10 } \)
24.
ஒரு பல்பொருள் அங்காடி விற்பனையாளர் ரூ.750 க்கு ஒரு கணிப்பானை வாங்கினார்.அதனுள் ரூ.100 மதிப்புள்ள மின்கலம் பொருத்தினார். அதன் வெளி உறைக்காக ரூ.50 செலவிட்டார். அதை ரூ.850 க்கு அவரால் விற்பனை செய்ய முடிந்தது எனில் அவருடைய இலாபம் அல்லது நட்டம் காண்க.
25.
ஒரு பழ வணிகர் ஒரு கூடைப் பழங்களை ரூ.500க்கு வாங்கினார். எடுத்து வரும்போது சில பழங்ள் நசுங்கிவிட்டன. மீதம் உள்ள பழங்களை ரூ.480க்கு அவரால் விற்பனை செய்ய முடிந்தது எனில் அவருடைய இலாபம் அல்லது நட்டம் காண்க.
26.
சுகன் ஒரு ஜீன்ஸ் கால் சட்டையை ரூ 750 க்கு வாங்கினார். அது அவருக்குப் பொருந்தவில்லை. அதை அவருடைய நண்பருக்கு ரூ 710 க்கு விற்பனை செய்தார் எனில் சுகனுக்கு இலாபம் அல்லது நட்டம் காண்க.
27.
2018 ஆம் ஆண்டு சனவரி மாதம் 11ஆம் தேதி வியாழக்கிழமை எனில் அதே ஆண்டு சூலை 20 ஆம் தேதி என்ன கிழமை ?
28.
சென்னை எழும்பூரிலிருந்து மதுரை வரைச் செல்லும் வைகை அதிவிரைவு தொடர்வண்டி (எண் 12635)-இன் புறப்படும் நேரம் மற்றும் வந்து சேரும் நேரம் கொடுக்கப்பட்டுள்ளன. கீழ்க்கண்ட தகவல்களைப் படித்துப் பதிலளிக்கவும்.
| நிலையம் | வந்து சேரும் நேரம் | புறப்படும் நேரம் |
| சென்னை எழும்பூர் | - | 13:40 |
| தாம்பரம் | 14:08 | 14:10 |
| செங்கல்பட்டு | 14:38 | 14:40 |
| விழுப்புரம் | 15:50 | 15:55 |
| விருத்தாசலம் | 16:28 | 16:30 |
| அரியலூர் | 17 :04 | 17 :05 |
| திருச்சி | 18:30 | 18:35 |
| திண்டுக்கல் | 20:03 | 20:05 |
| சோழவந்தான் | 20:34 | 20:35 |
| மதுரை | 21:20 | - |
i) வைகை அதிவிரைவு வண்டி எத்தனை மணிக்குச் சென்னையிலிருந்து புறப்பட்டு மதுரைக்கு வந்து சேருகிறது ?
ii) சென்னை மற்றும் மதுரைக்கு இடையில் எத்தனை நிறுத்தங்கள் உள்ளன ?
iii) விழுப்புரம் நிலையத்தில் எவ்வளவு நேரம் நிற்கிறது ?
iv) சோழவந்தனுக்கு வந்து சேரும் நேரம் என்ன ?
v) சென்னை எழும்பூரில் இருந்து மதுரை வந்து சேர ஆகும் மொத்த பயண நேரத்தைக் காண்க.
29.
இரு எண்களின் மீ.சி.ம ஆனது மீ.பெ.கா-வின் 6 மடங்காகும். மீ.பெ.கா 12 மற்றும் ஓர் எண் 36 எனில், மற்றோர் எண்ணைக் காண்க.
30.
இரு எண்களின் மீ.சி.ம 210 மற்றும் மீ.பெ.கா 14 என்றுள்ளவாறு எத்தனை எண்சோடிகள் சாத்தியமாகும் ?
31.
கீழக்காணும் எண்களுக்குப் பகாக் காரணிப்படுத்துதல் முறையில் மீ.பெ.கா காண்க.
(i) 18,24
(ii) 51,85
(iii) 61,76
(iv) 84,120
(v) 27,45,81
(vi) 45,55,95
32.
பின்வருவனவற்றில் எது சரியான கூற்று? ஏன்?
அ) ஒவ்வொரு சமபக்க முக்கோணமும் ஒர் இருசமபக்க முக்கோணம் ஆகும்.
ஆ) ஒவ்வொரு இருசமபக்க முக்கோணமும் ஒரு சமபக்க முக்கோணம் ஆகும்.
33.
நான், மூன்று கோணங்களும் 60o ஆகக் கொண்ட ஒரு மூடிய உருவம் ஆவேன். நான் யார் ?
34.
ஒரு பள்ளியில் 1000 மாணவர்கள் உள்ளனர். இம்மாணவர்கள் பள்ளிக்கு வரும் விதம் பற்றிய தரவுகள் பின்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளன. இத்தரவுக்குப்பட விளக்கப்படம் வரைக .
| பள்ளிக்கு வரும் விதம் | நடைப் பயணம் | மிதிவண்டி | ஈருளி | பேருந்து | மகிழுந்து |
| மாணவர்கள் எண்ணிக்கை | 350 | 300 | 150 | 100 | 100 |
35.
படத்திலிருந்து, பின்வருவனவற்றைக் கண்டறிக.

(i) அனைத்துச் சோடி இணைகோடுகள்
(ii) அனைத்துச் சோடி வெட்டும் கோடுகள்.
(iii) V-ஐ வெட்டும் புள்ளியாகக் கொண்ட கோடுகள்
(iv) கோடுகள் 'I2' மற்றும் 'I3' இன் வெட்டும் புள்ளி
(v) கோடுகள் 'I1' மற்றும் 'I5' இன் வெட்டும் புள்ளி
36.
கீழ்காணும் வினாக்களில் பெறும் பண்பு யாது?
50 \(\times\) 42 = 50 \(\times\) 40 + 50 \(\times\) 2
37.
உன்னிடம் இரண்டு சிவப்பு மற்றும் இரண்டு நீல வண்ணங்களில் கட்டைகள் உள்ளன. அக்கட்டைகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி எத்தனை நான்கு தளக் கட்டடம் அமைக்கலாம்? அவற்றை வரிசைப்படுத்துக.
38.
பின்வரும் வாய்மொழிக் கூற்றுகளை இயற்கணிதக் கூற்றுகளாக மாற்றுக.'y' இன் 9 மடங்கிலிருந்து 4 ஐக் குறைக்க.
39.
தள்ளுபடியானது ______________ லிருந்து கழிக்கப்பட்டு விற்பனை விலை பெறப்படுகிறது.
குறித்த விலை
அடக்க விலை
நட்டம்
இலாபம்
40.
அடுத்தடுத்த இரண்டு லீப் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட சாதாரண ஆண்டுகளின் எண்ணிக்கை
4 ஆண்டுகள்
2 ஆண்டுகள்
1 ஆண்டு
3 ஆண்டுகள்
41.
பின்வருவனவற்றில் எவை இருசமபக்க முக்கோணத்தின் பக்கங்களாக அமையும்?
6 செ.மீ, 3 செ.மீ, 3 செ.மீ
5 செ.மீ, 2 செ.மீ, 2 செ.மீ
6 செ.மீ, 3 செ.மீ, 7 செ.மீ
4 செ.மீ, 4 செ.மீ, 8 செ.மீ
42.
87846 என்ற எண்ணானது ________ வகுபடும்
2 ஆல் மட்டும்
3 ஆல் மட்டும்
11 ஆல் மட்டும்
இவை அனைத்தாலும்
43.
இல் உள்ள கோட்டுத் துண்டுகளின் எண்ணிக்கை.
1
2
3
4
44.
என்ற நேர்க்கோட்டுக்குறி குறிக்கும் எண்மதிப்பு என்ன?
5
8
9
10
45.
167826 மற்றும் 2765 ஆகியவற்றின் கழித்தல் அருகிலுள்ள ஆயிரங்களுக்கு முழுமையாக்கக் கிடைக்கும் உத்தேச மதிப்பு
180000
165000
140000
155000
46.
'n' இலிருந்து 6 ஐக் கழிக்க 8 கிடைக்கிறது என்பதைக் குறிக்கும் கூற்று
n - 6 = 8
6 - n = 8
8 - n = 6
n - 8 = 6
47.
ரூ. 1600 ஐ A மற்றும் B என்ற இரு நபர்களுக்கு 3 : 5 என்ற விகிதத்தில் பிரித்துக்கொடுத்தால், B இக்குக் கிடைக்கும் தொகை என்ன?
ரூ. 480
ரூ. 800
ரூ. 1000
ரூ. 200
1.
முத்து மாலையின் விற்பனை விலை = ரூ 30,000
இலாபம் = ரூ.5,000
அடக்க விலை = விற்பனை விலை - இலாபம்
= ரூ.30,000 - ரூ.5,000
= ரூ 25,000
முத்து மாலையின் அடக்க விலை = ரூ 25,000
2.
சாடியின் கொள்ளளவு
= 2 லி = 2 x 1000 மி.லி = 2000 மி.லி
(i) குவளைகளின் எண்ணிக்கை = 2000 மி.லி / 100 மி.லி = 20
(ii) குவளைகளின் எண்ணிக்கை = 2000 மி.லி / 50 மி.லி = 40
(iii) குவளைகளின் எண்ணிக்கை = 2000 மி.லி / 500 மி.லி = 4
(iv) குவளைகளின் எண்ணிக்கை = 2 லி / 1 லி = 2
(v) குவளைகளின் எண்ணிக்கை = 2000 மி.லி / 250 மி.லி = 8
3.
(i) 1 மி.மீ = 1 / 1000000 கி.மீ
13000 மி.மீ = \(=13000 \times \frac{1}{1000000}
\) கி.மீ
\(=\frac{13000}{1000000}=0.013
\) மீ
1 மி.மீ = 1 / 1000 மீ
13000 மி.மீ = 13000 x 1/1000 மீ = 13 மீ
1 மி.மீ = 1 / 10 செ.மீ
13000 மி.மீ = 13000 x 1/10 செ.மீ = 1300 செ.மீ
(ii) 1 மி.லி = 1 / 1000000 கி.லி
8257 மி.லி = 8257 x 1/1000000 = 0.008257 கி.லி
1 மி.லி = 1 / 1000 லி
8257 மி.லி = 8257 x 1/1000 லி = 8.257 லி
4.
முக்கோணச் சமனின்மை விதியை அனைத்துப் பக்கங்களுக்கும் சரிபார்ப்பதற்குப் பதிலாக, இரு சிறிய பக்க அளவுகளைக் கொண்டு சரிபார்க்க இயலும்.
இரு சிறிய பக்க அளவுகளின் கூடுதல் = 7 + 5 = 12 செ.மீ > 10 செ.மீ, மூன்றாவது பக்கம்.
இரு சிறிய பக்கங்களின் கூடுதல் மூன்றாவது பக்கத்தைவிட அதிகமாக உள்ளது.
எனவே, கொடுக்கப்பட்ட பக்க அளவுகளைக் கொண்டு ஒரு முக்கோணம் அமைக்க வேண்டும்.
5.
முதலில், நாம் வகுத்தல் முறையில் 72 மற்றும் 108 ஆகிய எண்களின் மீ.சி.ம-வைக் காண்போம்.
72 மற்றும் 108 இன் மீ.சி.ம = 2 x 2 x 2 x 3 x 3 x 3 = 216
இப்பொழுது, 216 இன் எ ல்லா மடங்குகளும் 72 மற்றும் 108 ஆகிய எண்களால் சரியாக வகுபடும்.
மிகச்சிறிய ஐந்தி்லக்க எண் = 10000 ஆகும்.
10000-ஐ 216ஆல் வகுததால் ஈவு 46 மற்றும் மீதி 164. எனசவ, 216 இன் அடுதத மடங்கான, 216 x 47 = 10152 என்பது 72 மற்றும் 108 ஆல் சரியாக வகுபடக் கூடிய மிகச்சிறிய 5 இலக்க எண் ஆகும்.
6.

254 மற்றும் 508 இன் எல்லாப் பொது மடங்குகளும் இவ்விரு எண்களால் வகுபடும்.
நாம், வகுத்தல் முறையில் 254 மற்றும் 508 ஆகிய எண்களின் மீ.சி.ம-வைக் காணலாம்.
254 மற்றும் 508 இன் மீ.சி.ம = 2 x 2 x 127 = 508
ஆகவே, 508 ஆனது, 254 மற்றும் 508 ஆகிய எண்களால் வகுபடும் மிகச்சிறிய பொது மடங்கு ஆகும்.
இப்பொழுது, 254 மற்றும் 508 ஆல் வகுக்கும் பொது நமக்கு மீதி 4 தேவை என்பதால், தேவையான எண் மீ.சி.ம வைக் காட்டிலும் 4 அதி்கம். ஆகவே, தேவையான எண் 508 + 4 = 512 ஆகும்.
7.

வரையும் முறை:
1. அடிப்பக்கக் கதிர் \(\overrightarrow { AB } \) வரைக.
2. கோணமானியின் நடுப்புள்ளியை உச்சிப் புள்ளி A இல் வைக்கவும்.
3. 0° கோட்டோடு \(\overrightarrow { AB } \) கதிரைச் சேருமாறு சேர்க்கவும்.
4. உள் அளவுகோலில் 135° இல் ஒரு புள்ளியைக் குறித்து C எனப் பெயரிடுக. (கடிகார எதிர்த்திசையில்)
5. கோணமானியை எடுத்துவிட்டு கோணத்தை அமைக்க கதிர் \(\overrightarrow { AC } \) வரைக.
6. இங்கு \(\angle \)A = \(\angle \)CAB = \(\angle \)BAC = 135°
8.
| இடம் | பயணிகளின் எண்ணிக்கை |
| மகாபலிபுரம் | |
| வேடந்தாங்கல் | |
| ஒகேனக்கல் | |
| ஊட்டி |
ஒரு 2500 பயணிகளைக் குறிக்கும்.
9.
32 முக்கோணங்கள்.
10.
4 x 132 x 25 = 132 x (25 x 4)
= 132 x 100
= 13200
11.
3 : 4 ன் சமான விகிதம்
\(=\frac{3}{4} \times \frac{2}{2}=\frac{6}{8}=6: 8
\)
\(=\frac{6}{8}<\frac{7}{8}
\)
\(=\frac{3}{4}<\frac{7}{8}
\)
7 : 8 பெரியது.
12.

| வடிவங்கள் | முதலாம் அமைப்பு | இரண்டாம் அமைப்பு | மூன்றாம் அமைப்பு | நான்காம் அமைப்பு | ஐந்தாம் அமைப்பு |
|---|---|---|---|---|---|
| சதுரங்கள் | 1 | 2 |
3 |
4 | 5 |
| வட்டங்கள் | 1 | 2 | 3 | 4 | 5 |
| முக்கோணங்கள் | 2 | 4 | 6 | 8 | 10 |
13.
(i) அடக்க விலை < விற்பனை விலை
இலாபம் = விற்பனை விலை – அடக்க விலை
= ரூ.60 – ரூ.50
= ரூ.10
(ii) அடக்க விலை > விற்பனை விலை
நட்டம் = அடக்க விலை -விற்பனை விலை
= ரூ.7 0 – ரூ.60
= ரூ.10
(iii) இலாபம் = விற்பனை விலை – அடக்க விலை
ரூ.20 = விற்பனை விலை – ரூ.100
விற்பனை விலை = ரூ.20 + ரூ.100
= ரூ.120
(iv) நட்டம் = அடக்க விலை – விற்பனை விலை
ரூ.15 = ரூ.80 – விற்பனை விலை
விற்பனை விலை = ரூ.80 – ரூ.15 = ரூ.65
(v) இலாபம் = விற்பனை விலை – அடக்க விலை
ரூ.25 = ரூ.7 0 – அடக்க விலை
அடக்க விலை = ரூ.7 0 – ரூ.25 = ரூ.45
(vi) நட்டம் = அடக்க விலை – விற்பனை விலை
ரூ.30 = அடக்க விலை – ரூ.100
அடக்க விலை = ரூ.30 + ரூ.100
= ரூ.130
14.

15.
இது மீ.சி.ம தொடர்பான கணக்கு ஆகும். ஆகவே, நாம் 15, 20, 25 மற்றும் 30 ஆகிய எண்களின் மீ.சி.ம-வைக் காண வேண்டும்.
15, 20, 25 மற்றும் 30 இன் மீ.சி.ம = 2 x 2 x 3 x 5 x 5
= 300 நிமிடங்கள்
= 5 x 60 நிமிடங்கள்
= 5 x 1 மணி நேரம்
= 5 மணி நேரம்
எனவே, நான்கு அலைபேசிகளும் மீண்டும் காலை 10 மணிக்கு ஒன்றாக ஒலிக்கும்.
16.
(i) ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூடுதல் = 180o
இறண்டு கோணங்களின் கூடுதல் = 80° + 60o = 140°
மூன்றாவது கோணம் = 180o - 140° = 40o
(ii) ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூடுதல் = 180o
இரண்டு கோவாங்களின் கூடுதல் = 75⁰ + 35o = 110o
மூன்றாவது கோணம் = 180o - 110o = 70o
(iii) ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூதேல் = 180o
இரண்டு கோணங்களின் கூபிதல் = 52° + 68o = 120o
மூன்றாவது கோணம் = 180° - 120o = 60o
(iv) ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூடுதல் = 180o
இரண்டு கோணங்களின் கூடுதல் = 50° + 90° = 140°
மூன்றாவது கோணம் = 180° - 140o = 40°
(v) ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூடுதல் = 180o
இரண்டு கோணங்களின் கூடுதல் = 120° + 30° = 150o
மூன்றாவது கோணம் = 180o - 150o = 30o
(vi) ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூடுதல் = 180o
இரண்டு கோணங்களின் கூடுதல் = 55o + 85o = 140o
மூன்றாவது கோணம் = 180° - 140o = 40°
17.
(i) \(\angle LMN,\angle NML, \angle M\)
(ii) \(\angle PQR, \angle RQP, \angle Q\)
(iii) \(\angle MNO, \angle ONM, \angle N\)
(iv) \(\angle TAS,\angle SAT,\angle A\)
(v) \(\angle XYZ, \angle ZYX,\angle Y\)
(vi) \(\angle ADB, \angle BDA, \angle D\)
18.
ஒரு கோழிப்பண்ணையிலுள்ள முட்டைகள் = 15472
ஒரு அடுக்கு அட்டையில் அடுக்கிய முட்டைகள் = 30
தேவைப்படும் அடுக்கு அட்டைகள் = \(\frac{15472}{30}=515 \frac{22}{30}\)
= 515 + 1 = 516
516 அடுக்கு அட்டைகள் தேவைப்படும்.
19.
பல வழிகள் உண்டு.

20.

21.
கோட்டுத்துண்டின் மொத்த நீளம் = 63 செ.மீ
பிரிக்கப்பட்ட கோட்டுத் துண்டுகளின் விகிதம் = 3 : 4
மொத்த விகிதம் = 3 + 4 = 7
(i) முதல் கோட்டுத்துண்டின் நீளம்
\(=\frac{3}{7} \times 63=27\) செ.மீ
(ii) இரண்டாம் கோட்டுத்துண்டின் நீளம்
\(=\frac{4}{7} \times 63=36\) செ.மீ
22.
கொடுக்கப்பட்ட கூற்றிலிருந்து,

இதனை, 'x - 6 ' என எழுதலாம். இங்கு 'x' என்பது தெரியாத எண் ஆகும்.
அடுத்ததாக, x இல் எம்மதிப்பை பிரதியிட்டால், 'x - 6' ஆனது 10 ஐத் தரும் எனக் கண்டறிவோம்.
| 'x' ன் மதிப்பு | x-6 | முடிவு | முடிவு 10 ஆக உள்ளதா ? ஆம்/இல்லை |
| 7 | 7 - 6 | 1 | இல்லை |
| 10 | 10 - 6 | 4 | இல்லை |
| 12 | 12 - 6 | 6 | இல்லை |
| 15 | 15 - 6 | 9 | இல்லை |
| 16 | 16 - 6 | 10 | ஆம் |
| 18 | 18 - 6 | 12 | இல்லை |
எனவே, 'x' இன் தெரியாத எண் (மாறி) 16 ஆகும்.
23.
>
24.
கணிப்பானின் அடக்க விலை = ரூ.750
மின்கலத்தின் விலை = ரூ.100
வெளி உரையின் விலை = ரூ.50
மொத்த அடக்க விலை = ரூ 750 + ரூ 100 + ரூ 50
= ரூ 900
கணிப்பானின் விற்பனை விலை = ரூ 850
அடக்க விலை > விற்பனை விலை
நட்டம் = அடக்க விலை - விற்பனை விலை
= ரூ.900 - ரூ.850
= ரூ.50.
விற்பனையாளருக்கு ஏற்பட்ட நட்டம் = ரூ 50
25.
அடக்க விலை = ரூ. 500
விற்பனை விலை = ரூ.480
இங்கு, அடக்க விலை > விற்பனை விலை
நட்டம்= அடக்க விலை - விற்பனை விலை
= ரூ.500 – ரூ.480
= ரூ. 20
26.
ஜீன்ஸ் கால் சட்டையின் அடக்க விலை = ரூ.750
ஜீன்ஸ் கால் சட்டையின் விற்பனை விலை = ரூ.710
அடக்க விலை > விற்பனை விலை
நட்டம் = அடக்க விலை - விற்பனை விலை
= ரூ 750 - ரூ.710
= ரூ.40
சுகனுக்கு ஏற்பட்ட நட்டம் = ரூ.40
27.
| மாதங்கள் | நாட்கள் |
| ஜனவரி (31 - 10) | 21(31 - 10) |
| பிப்ரவரி | 28 (2018 சாதாரண ஆண்டு) |
| மார்ச் | 31 |
| ஏப்ரல் | 30 |
| மே | 31 |
| ஜுன் | 30 |
| ஜுலை | 19 |
| மொத்த நாட்கள் | 190 |
190 நாள்கள் = 27 வாரங்கள் + 1 நாள் தேவையான கிழமை வியாழக்கிழமைக்குப் பிறத முதல் நாள்.
2018 ஆம் ஆண்டு ஜுலை 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை.
28.
(i) சென்னையிலிருந்து தொடர்வண்டி புறப்படும் நேரம் = 13.40 மணி
மதுரைக்கு தொடர்வண்டி வந்து சேரும் நேரம் = 21.20 மணி
(ii) சென்னை மற்றும் மதுரைக்கு இடையில் 8 நிறுத்தங்கள் உள்ளன.
(iii) விழுப்புரம் நிலையத்தில் தொடர்வண்டி 5 நிமிடங்கள் நிற்கிறது.
(iv) தொடர்வண்டி சோழவந்தானுக்கு வந்து சேரும் நேரம் 20.34 மணி
(v) மதுரைக்கு வந்து சேரும் நேரம் = 21.20 மணி
சென்னையிலிருந்து புறப்படும் நேரம் = 13.40 மணி
மொத்த பயண நேரம் = 07.40 மணி
29.
இரு எண்களின் மீ.பெ.கா = 12
இரு எண்களின் மீ.சி.ம = 6 x மீ.பெ.கா = 6 x 12 = 72
ஓர் எண் = 36
மற்றொரு எண் = மீ.சி.ம x மீ.பெ.கா / ஓர் எண்
\(=\frac{72 \times 12}{36}=24\)
மற்றோர் எண் = 24
30.
இரு எண்களின் மீ.சி.ம = 210
இரு எண்களின் மீ.பெ.கா = 14
தேவையான எண்கள் = (14, 210), (42, 70)
இரண்டு எண் சோடிகள் சாத்தியமாகும்.
31.
(i) 18,24


மீ.பெ.கா = 2 x 3 x = 6
(ii) 51, 85


மீ.பெ.கா = 17
(iii) 61, 76
61, 76 சார்பாக எண்கள்
மீ.பெ.கா = 1
(iv) 84, 120


மீ.பெ.கா = 2 x 2 x 3 = 12
(v) 27, 45, 81


மீ.பெ.கா = 3 x 3 = 9
(vi) 45, 55, 95


மீ.பெ.கா = 5.
32.
"அ" கூற்று சரியானது,
''ஒவ்வொரு சமபக்க முக்கோணமும் ஓர் இருசமபக்க முக்கோணமாகும்'' என்ற கூற்று சரி. ஏனெனில் இருசமபக்க முக்கோணத்தில் மூன்று பக்கங்கள் சமமாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
33.
ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்கள் 60o , 60o, 60o . இது ஒரு குறுங்கோண முக்கோணம்
34.
| பள்ளிக்கு வரும் விதம் | மாணவர்களின் எண்ணிக்கை |
| நடைப்பயணம் | |
| மிதிவண்டி | |
| ஈருளி | |
| பேருந்து | |
| மகிழுந்து |
ஒரு 100 மாணவர்களைக் குறிக்கும்.
ஓரு 50 மாணவர்களைக் குறிக்கும்.
35.
(i) I3 மற்றும் I4, I4 மற்றும் I5, I3 மற்றும் I5
(ii) l1 மற்றும் l2, l1 மற்றும் l3 , l1 மற்றும் l4 , l1 மற்றும் l5 ,l2 மற்றும் l3 , l2 மற்றும் l4 , l2 மற்றும் l5
(iii) I1 மற்றும் I2
(iv) Q
(v) U
36.
கூட்டல் மீதான பெருக்கலின் பங்கீட்டுப் பண்பு
37.
கட்டைகளின் எண்ணிக்கை= 4(2 சிவப்பு, 2 நீலம்)
சிவப்பு - நீலம் - சிவப்பு - நீலம்
நீலம் - சிவப்பு - நீலம் - சிவப்பு
சிவப்பு - சிவப்பு - நீலம் - நீலம்
நீலம் - நீலம் -சிவப்பு - சிவப்பு
சிவப்பு - நீலம் -நீலம் -சிவப்பு
நீலம் - சிவப்பு - சிவப்பு - நீலம்
\(\therefore\)ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி 6 வழிகளில் நான்கு தளக் கட்டடம் அமைக்கலாம்.
38.
9y - 4
39.
(a)
குறித்த விலை
40.
(d)
3 ஆண்டுகள்
41.
(c)
6 செ.மீ, 3 செ.மீ, 7 செ.மீ
42.
(d)
இவை அனைத்தாலும்
43.
(c)
3
44.
(c)
9
45.
(b)
165000
46.
(a)
n - 6 = 8
47.
(c)
ரூ. 1000
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards