6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 18/01/2019
Term 3 Maths - Integers Important Questions
6ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
P, Q, R மற்றும் S ஆகியன ஓர் எண்கோட்டில் உள்ள நான்கு வெவ்வேறு முழுக்களைக் குறிக்கும். பின்வரும் குறிப்புகளைப் பயன்படுத்தி இந்த முழுக்களைக் கண்டு, அவற்றை ஏறுவரிசையில் எழுதவும்.
i) S ஆனது கொடுக்கப்பட்ட முழுக்களில் மிகச் சிறியதாகும்.
ii) R ஆனது மிகச்சிறிய மிகை முழு ஆகும்.
iii) முழுக்கள் P மற்றும் S ஆனது 0 இலிருந்து சம தூரத்தில் உள்ளன.
iv) Q ஆனது முழு R இன் இடதுபுறம் 2 அலகுகள் தொலைவில் உள்ளது.
2.
செல்சியஸ் தெர்மோமீட்டரைப் பார்த்து, பின்வரும் வினாக்களுக்கு விடியளிக்கவும் .
i) வெப்பமானி காட்டும் வெப்ப நிலை அளவு என்ன ?
ii) வெப்பமானியில் 0oC இக்குக் கீழே 5oC ஐ எங்கு குறிப்பாய் ?
iii) வெப்பமானியில் உள்ள வெப்பநிலையை 10oC குறைத்தல் வெப்பமானி காட்டும் வெப்பநிலை என்ன ?
iv) வெப்பமானியில் 15oC இக்கு எதிரெண்ணைக் குறிக்கவும்.

3.
முழுக்கள் தொகுப்பில் மிகச்சிறிய எண் மற்றும் மிகப்பெரிய எண் உள்ளதா ? காரணம் கூறுக.
4.
பின்வரும் எண்களை எண்கோட்டில் குறிக்கவும்.
i) -7 ஐ விடப் பெரியதும் 7 ஐ விடக் குறைவானதுமான முழுக்கள்.
ii) 3 என்ற முழுவின் எதிரெண்.
iii) -1 இன் இடதுபுறம் 5 அலகுகள் தொலைவில் உள்ள ஓர் எண்.
5.
பின்வரும் முழுக்களை இறங்கு வரிசையில் எழுதுக.
i) 14, 27, 15, −14, −9, 0, 11, −17
ii) −99, −120, 65, −46, 78, 400, −600
iii) 111, −222, 333, −444, 555, −666, 7777, −888
6.
பின்வரும் முழுக்களை ஏறு வரிசையில் எழுதுக.
i) −11, 12, −13, 14, −15, 16, −17, 18, −19, −20
ii) −28, 6, −5, −40, 8, 0, 12, −1, 4, 22
iii) −100, 10, −1000, 100, 0, −1, 1000, 1, −10
7.
பெட்டியில், <, > அல்லது = எனப் பொருத்தமான குறியீட்டை இடுக.
i) −7\(\boxed\ \) 8
ii) −8 \(\boxed\ \) −7
iii) −999 \(\boxed\ \) −1000
iv) −111 \(\boxed\ \) −111
v) 0 \(\boxed\ \) −200
8.
கொடுக்கப்பட்ட எண்களுக்கு இடையே உள்ள அனைத்து முழுக்களையும் எழுதுக.
i) 7 மற்றும் 10
ii) -5 மற்றும் 4
iii) -3 மற்றும் 3
iv) -5 மற்றும் 0
9.
பின்வரும் முழுக்களை ஏறுவரிசையில் எழுதுக.
−15, 0, −7, 12, 3, −5, 1, −20, 25, 18
10.
-14 மற்றும் -11 ஐ ஒப்பிடுக.
11.
ஓர் எண்கோட்டில், 0 மற்றும் -8 ஆகிய எண்களின் முன்னி மற்றும் தொடரியைக் காண்க.
12.
-2 இக்கு எதிரெதிர் திசைகளில் 3 அலகுகள் தொலைவிலுள்ள எண்களை எண்கோட்டில் காண்க.
13.
எண் கோட்டினைப் பயன்படுத்தி -6 ஐ விட 5 அலகுகள் கூடுதலான முழுவை எழுதுக.
14.
பின்வரும் சூழல்களை முழுக்களாகக் குறிப்பிடுக.
1) ரூ.1000 இலாபம்
2) 0o இக்குக் கீழ் 20o C
3) கி.மு. (பொ.ஆ.மு) 1990
4) ரூ. 15,847 வைப்புத்தொகை
5) இயல்பான எடையை விட 10 கி.கி குறைவு
15.
ஓர் எண்கோட்டை வரைந்து, அதன் மீது 6,-5, -1, 4 மற்றும் -7 ஆகிய முழுக்களைக் குறிக்கவும்.
16.
_________ ஆனது ,மிகை முழுவும் அல்ல, குறை மிகை முழுவும் அல்ல.
17.
-5 முதல் +5 வரையிலான (இரு எண்களையும் உள்ளடக்கி) முழுக்களின் எண்ணிக்கை ___________.
18.
எண்கோட்டில், -46 என்பது -35 இக்கு ________ அமையும்.
19.
ஒரு நீச்சல், நீச்சல் குளத்தில் தரைமட்டத்திலிருந்து 7அடி ஆழத்திற்குக் குதிக்கிறார். இதனைக் குறிக்கும் முழு _________அடி ஆகும்.
20.
அருந்தக்கூடிய தண்ணீரானது தரைமட்டத்திலிருந்து 100 மீட்டருக்கு கீழே கிடைக்கிறது. இதனை _______ மீ எனக் குறிப்பிடலாம்.
21.
எல்லா முழு எண்களும் முழுக்களே.
22.
எல்லாக் குறை எண்களும் பூச்சியத்தை விடப் பெரிதானவை.
23.
-10 மற்றும் 10 ஆகியவை 1 இலிருந்து சம தொலைவில் உள்ளன.
24.
-1 ஆனது 0 இக்கு வலது புறம் அமையும்.
25.
−18, 6, −12, 0 ஆகிய முழுக்கள் ஒவ்வொன்றும் -20 ஐ விடப் பெரியது.
26.
எண்கோட்டில் 0 இன் இடதுபுறம் 4 அலகுகளும், -3 இன் வலதுபுறம் 2 அலகுகளும் உள்ள முழுக்களைக் காண்க.
27.
G ஆனது எண் 3 ஐயும், C ஆனது எண் -1 ஐயும் குறிக்கும் எனில், பின்வரும் எண்கோட்டில் A மற்றும் K ஆனது எந்த முழுக்களைக் குறிக்கும் ?

28.
-6 இலிருந்து, 8 அலகுகள் தொலைவில் இருக்கும் முழுக்களை அடையாளம் கண்டு, எண்கோட்டில் குறிக்கவும்.
29.
தரைமட்டத்திலிருந்து 10 அடி ஆழத்தையும் அதன் எதிரெண்ணையும் குறிக்குமாறு ஓர் எண் கோட்டிணை வரைக.
30.
-3 என்ற முழுவைக் குறிப்பிடும் இருவேறு அன்றாடச் சூழல்களை எழுதுக.
31.
பின்வரும் எண்கோடுகளில், எவை சரியாகவும், எவை தவறாகவும் குறிப்பிட்டுள்ளன என்பதைக் காரணத்துடன் கூறுக.

32.
i) +15 கி.மீ என்பது ஓர் இடத்திலிருந்து 15 கி.மீ கிழக்கைக் குறிக்கும் எனில், அந்த இடத்திலிருந்து 15 கி.மீ மேற்கை எவ்வாறு குறிக்கலாம் ?
33.
பின்வரும் எண்களுக்கு எதிரெண் காண்க.
i) 44
ii) -19
iii) 0
iv) -312
v) 789
34.
எண்கோட்டில்
i) -7 என்ற எண்ணிற்கு 4 அலகுகள் தொலைவில் வலதுபுறத்தில் இருக்கும் எண் என்ன ?
ii) 3 என்ற எண்ணிற்கு 5 அலகுகள் தொலைவில் இடதுபுறத்தில் இருக்கும் எண் என்ன ?
35.
ஓர் எண்கோட்டை வரைந்து, 4, -3, 6, -1 மற்றும் -5 ஆகிய முழுக்களை அதன் மீது குறிக்கவும்.
36.
எந்த ஓர் எண்ணின் நிலையும் அதன் எதிரெண்ணையும் தீர்மானிக்கும் எண்.
-1
-
0
10
37.
1 இன் இடதுபுறம் 3 அலகு தொலைவில் உள்ள எண்
-4
-3
-2
3
38.
-7 இன் வலதுபுறம் 1 அலகு தொலைவில் உள்ள எண்
+1
-8
-7
-6
39.
பூஜ்யத்திற்கு இடது புறம் 20 அலகுகள் தொலைவில் உள்ள எண்ணின் எதிரெண்
20
0
-20
40
40.
-5 முதல் 6 வரையிலான எண்களில் _______ மிகை முழுக்கள் உள்ளன.
5
6
7
11
41.
கீழே உள்ள பட்டை வரைபடமானது, ஒரு சிறு வர்த்தக நிறுவனத்தின் 2011 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையிலான இலாபம் (+) மற்றும் நட்டத்தை (-) விளக்குகிறது.

i) 2014 ஆம் ஆண்டில் நிறுவனத்திற்கு இலாபம, நட்டமா என்பதைக் குறிக்கும் முழுவினை எழுதுக.
ii) 2016 ஆம் ஆண்டில் நிறுவனத்திற்கு இலாபம, நட்டமா என்பதைக் குறிக்கும் முழுவினை எழுதுக.
iii) 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டில் நிறுவனத்திற்கு ஏற்பட்ட நட்டத்தை முழுக்களால் எழுதுக.
iv) 2012 ஆம் ஆண்டில் நிறுவனத்தின் நட்டம் மிகக் குறைவாக உள்ளது. இக்கூற்று சரியா ? தவறா ?
v) நிரப்புக : 2011 ஆம் ஆண்டில் உள்ள நட்டமும், 2013 ஆம் ஆண்டில் உள்ள இலாபமும் _______.
42.
பின்வரும் குறிப்புகளைக் கொண்டு அட்டவணையை நிறைவு செய்க.
C1 : முதல் குறையற்ற முழு எண்.
C3 : இரண்டாம் குறை எண்ணின் எதிரெண்.
C5 : முழு எண்களின் கூட்டல் சமனி
C6 : C2 இல் உள்ள முழுவின் தொடரி.
C8 : C7 இல் உள்ள முழுவின் முன்னி.
C9 : C5 இல் உள்ள முழுவின் எதிரெண்.

43.
வீடு (0) என்பதனைத் தொடக்கப் புள்ளியாகக் கொண்டு, பின்வரும் இடங்களை எண்கோட்டில் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளின்படி குறித்து, அதற்குரிய முழுக்களை எழுதுக.

இடங்கள் : வீடு, பள்ளி, நூலகம், விளையாட்டுத் திடல், பூங்கா, பல்பொருள் அங்காடி, பேருந்து நிறுத்தம், தொடர்வண்டி நிலையம், அஞ்சலகம், மின்சார அலுவலகம்.
குறிப்புகள்:
i) பேருந்து நிறுத்தம், வீட்டிற்கு வலதுபுறம் 3 அலகுகள் தொலைவில் உள்ளது.
ii) நூலகம், வீட்டிற்கு இடதுபுறம் 2 அலகுகள் தொலைவில் உள்ளது.
iii) பல்பொருள் அங்காடி, வீட்டிலிருந்து இடதுபுறமாக 6 அலகுகள் தொலைவில் உள்ளது.
iv) அஞ்சலகம், நூலகத்தின் வலது புறம் ஓர் அலகு தொலைவில் உள்ளது.
v) பூங்கா, பல்பொருள் அங்காடிக்கு வலதுபுறம் 1 அலகு தொலைவில் உள்ளது.
vi) தொடர்வண்டி நிலையம், அஞ்சலகத்தின் இடதுபுறம் 3 அலகுகள் தொலைவில் உள்ளது.
vii) பேருந்து நிறுத்தம், தொடர்வண்டி நிலையத்திலிருந்து வலதுபுறம் 8 அலகுகள் தொலைவில் உள்ளது.
viii) பள்ளியானது, பேருந்து நிறுத்தத்தை அடுத்து வலதுபுறத்தில் உள்ளது.
ix) விளையாட்டுத் திடலும், நூலகமும் ஒன்றுக்கொன்று எதிரெதிரே உள்ளன.
x) மின்சார அலுவலகமும், பல்பொருள் அங்காடியும் வீட்டிலிருந்து சம தொலைவில் அமைந்துள்ளன.
44.
கீழேயுள்ள எண்கோட்டிலிருந்து, பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.

i) எது பெரிய முழு : G அல்லது K ? ஏன் ?
ii) C ஐக் குறிக்கும் முழு எது ?
iii) G மற்றும் H இக்கு இடையே எத்தனை முழுக்கள் உள்ளன ?
iv) எதிரெண் முழுக்களுடைய சோடி எழுத்துக்களைக் காண்க.
v) D இன் இடதுபுறம் 6 அலகுகளில் உள்ள எண் -6. சரியா ? தவறா ?
1.

ஏறுவரிசை : S < Q < 0 < R < P
2.
i) வெப்பமானி. காட்டும் வெப்பநிலை அளவு -10°.
ii) வெப்பமானியில் 0°C இக்குக் கீழே 5°C ஐ −5°C என குறிக்கலாம்.
iii) வெப்பமானியில் உள்ள வெப்பநிலையை 10°C குறைத்தால் வெப்பநிலை -20°C ஆக இருக்கும்.
iv) வெப்பமானியில் 15°C இக்கு எதிரெண் -15°C.
3.
இல்லை, எண் கோட்டினை இருபுறம் முடிவின்றி விரிவாக்கம் செய்யலாம். எனவே மிகச்சிறிய எண்ணையும் மிகப் பெரிய எண்ணையும் காண இயலாது.
4.
(i)

-7 ஐ விடப் பெரியதும் 7 ஐ விடக் குறைவானதுமான முழுக்கள் -6, -5, -4, -3, -2, -1, 0, 1, 2, 3, 4, 5, 6
(ii)

3 என்ற முழுவின் எதிரெண் -3
(iii)

-1 இன் இடதுபுறம் 5 அலகுகள் தொலைவில் உள்ள எண் -6.
5.
i) இறங்கு வரிசை : 27, 15, 14, 11, 0, −9, −14, −17
ii) இறங்கு வரிசை : 400, 78, 65, −46, −99, −120, −600
iii) இறங்கு வரிசை : 777, 555, 333, 111, −222,−444, −666, −888
6.
i) ஏறு வரிசை : −20, −19,−17, −15, −13, −11, 12, 14, 16, 18
ii) ஏறு வரிசை : −40, −28, −5, −1, 0, 4, 6, 8, 12, 22
iii) ஏறு வரிசை : −1000, −100, −10, −1, 0, 1, 10, 100, 1000
7.
i) −7 < 8
ii) −8 < −7
iii) −999 > −1000
iv) −111 = −111
v) 0 > −200
8.
i) 7 மற்றும் 10 க்கு இடையே உள்ள முழுக்கள் = 8, 9
ii) -5 மற்றும் 4 க்கு இடையே உள்ள முழுக்கள் = −4, −3, −2, −1, 0, 1, 2, 3
iii) -3 மற்றும் 3 க்கு இடையே உள்ள முழுக்கள் = -2, -1, 0, 1, 2
iv) -5 மற்றும் 0 க்கு இடையே உள்ள முழுக்கள் = −4, −3, −2, −1
9.
படி 1: முதலில், மிகை முழுக்களை 12, 3, 1, 25, 18 மற்றும் 18 எனவும், குறை முழுக்களை −15, −7, −5, −20 எனவும் பகுக்க வேண்டும்.
படி 2: மிகை முழுக்களை 1, 3, 12, 18, 25 என எளிதில் ஏறுவரிசையில் எழுதலாம். குறை முழுக்களை −20, −15, −7, −5 என ஏறுவரிசையில் எழுதலாம்.
படி 3; 0 என்பது மிகையும் அல்ல குறையும் அல்ல என்பதால் மிகை மற்றும் குறை முழுக்களை -20,-15,-7, -5,0, 1, 3, 12, 18, 25 என்பது கொடுக்கப்பட்ட முழுக்களின் ஏறுவரிசை ஆகும்.
10.
எண்கோட்டை வரைந்து -14 மற்றும் -11 ஐக் குறிக்கவும். -11ஐ வைத்துப் பார்க்கும்போது நாம் அறிவது யாதெனில் -14 ஆனது -11 க்கு இடதுபுறமாக அமைகிறது ஆகவே, -14 ஆனது -11 ஐ விடக் குறைவாகும். அதாவது, -14 < -11.

11.
கொடுக்கப்பட்ட எண்களை எண்கோட்டின் மீது குறித்து, அவற்றின் முன்னும் பின்னும் 1 அலகு நகர்வதால் அந்த எண்களின் முன்னி மற்றும் தொடரியைப் பெறலாம்.

இங்கு, 0இன் தொடரி +1 எனவும், 0இன் முன்னி -1 எனவும் காண்கிறோம். மேலும்,-8 இன் தொடரி -7 எனவும் -8 இன் முன்னி -9 எனவும் கருதுகிறோம்.
12.
-2 இலிருந்து, நாம் இடதுபுறமாகவும் வலதுபுறமாகவும் 3 அலகுகள் தொலைவைப் படத்தில் உள்ளவாறு நகர வேண்டும். எனவே, -2 இன் வலதுபுறம் 3 அலகுகள் தொலைவில் 1 உம், -2இன் இடதுபுறம் 3 அலகுகள் தொலைவில் -5 உம் கிடைக்கின்றன.

13.
-6 இலிருந்து நாம் அதன் வலதுபுறம் 5 அலகுகள் நகர்ந்து படத்தில் உள்ளவாறு -1 ஐ அடையலாம்.

14.
1) இலாபம் என்பது மிகையாதலால், ரூ. 1000 என்பதை ரூ.+1000 எனக் குறிப்பிடலாம்.
2) 0o C இக்குக் கீழ் 20o C என்பது -20o C எனக் குறிப்பிடலாம்.
3) கி.மு (பொ.ஆ.மு -பொது ஆண்டுக்குப் முன்) உள்ள ஓர் ஆண்டைக் குறை எண்ணாகவும், கி.பி (பொ.ஆ.பி பொது ஆண்டுக்குப் பின்) உள்ள ஓர் ஆண்டை மிகை எண்ணாகவும் கருதுகிறோம். ஆகவே கி.மு. (பொ.ஆ.மு) 1990 என்பதை -1990 எனக் குறிப்பிடலாம்.
4) ரூ. 15,847 வைப்புத்தொகை என்பது ரூ. +15,847 எனக் குறிப்பிடலாம்.
5) இயல்பான எடையை விட 10 கி.கி. குறைவு என்பதை -10கி.கி எனக் குறிப்பிடலாம்.
15.

16.
( )
0
17.
( )
11
18.
( )
இடது புறம்
19.
( )
-7
20.
( )
-100
21.
(a)
22.
(b)
23.
(b)
24.
(b)
25.
(a)
26.

எண்கோட்டில் 0 இன் இடதுபுறம் 4 அலகுகள் உள்ள எண் -4.
27.
G இன் மதிப்பு = 3
C இன் மதிப்பு = -1

A இன் மதிப்பு = -3
K இன் மதிப்பு = 7
28.

-6 லிருந்து, 8 அலகுகள் தொலைவில் இருக்கும் முழுக்கள் -14, 2.
29.

தரைமட்டத்திலிருந்து 10 அடி ஆழம் -10 மற்றும் அதன் எதிரெண் + 10.
30.
i) 3 மீ ஆழத்தில் மரக்கன்று நடப்பட்டுள்ளது.
ii) 3 மீ ஆழமுள்ள ஒரு பள்ளம்.
31.
i) தவறு, முழுக்கள் தொடர்ச்சியாக குறிப்பிடவில்லை.
ii) சரி, முழுக்கள் சரியாக குறிப்பிடப்பட்டுள்ளது
iii) தவறு, -2 தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது
iv) சரி, முழுக்கள் சம தொலைவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
v) தவறு, குறை முழுக்கள் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது.
32.
ஓர் இடத்திலிருந்து 15 கி.மீ கிழக்கை +15 கி.மீ என குறிக்கலாம் எனில், 15 கி.மீ மேற்கை -15 கி.மீ எனக் குறிக்கலாம்.
33.
i) 44 ன் எதிரெண் -44
ii) -19 ன் எதிரெண் +19 அல்லது 19
iii) 0 ன் எதிரெண் 0
iv) -312 ன் எதிரெண் +312 அல்லது 312
v) 789 ன் எதிரெண் -789
34.
(i)

-7 என்ற எண்ணிற்கு 4 அலகுகள் தொலைவில் வலதுபுறம் இருக்கும் எண் -3
(ii)

3 என்ற எண்ணிற்கு 5 அலகுகள் தொலைவில் இடதுபுறத்தில் இருக்கும் எண் -2.
35.

36.
(c)
0
37.
(c)
-2
38.
(d)
-6
39.
(a)
20
40.
(c)
7
41.
i) 2014 ஆம் ஆண்டில் இலாபம் + 45
ii) 2016 ஆம் ஆண்டில் நட்டம் 0
iii) 2011 ஆம் ஆண்டில் நட்டம் −10
2012 ஆம் ஆண்டில் நட்டம் − 20
iv) 2012 ஆம் ஆண்டில் நட்டம் மிகக் குறைவாக உள்ளது என்ற கூற்று தவறு
v) சமம்
42.

43.

i) பேருந்து நிறுத்தம் = 3 அலகுகள்
ii) நூலகம் = 2 அலகுகள்
iii) பல்பொருள் அங்காடி = 6 அலகுகள்
iv) அஞ்சலகம் = - 1 அலகுகள்
v) பூங்கா = - 5 அலகுகள்
vi) தொடர்வண்டி நிலையம் = -4 அலகுகள்
vii) பேருந்து நிறுத்தம் = 3 அலகுகள்
viii) பள்ளி = 4 அலகுகள்
ix) விளையாட்டு திடல் = 2 அலகுகள்
x) மின்சார அலுவலகம் = 6 அலகுகள்
44.
i) G யின் மதிப்பு = -3, K யின் மதிப்பு = -1 எண்கோட்டில் K என்ற எண் G க்கு வலதுபுறம் உள்ளது. எனவே G பெரியது.
ii) C ஐக் குறிக்கும் முழு -4.
iii) G க்கும் H க்கும் இடையில் 6 முழுக்கள் உள்ளன. அவை -2, -1, 0, 1, 2, 3
iv) எதிரெண் முழுக்களுடைய 2 சோடி எழுத்துக்கள் C, H மற்றும் E, J.
v) D இன் இடதுபுறம் 6 அலகுகளில் உள்ள எண் -6 என்பது தவறு. சரியான எண் 0.
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards